Thursday, September 06, 2012

காதலை மீட்ட சுந்தரபாண்டியன்! - எம் சசிகுமார் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZKe8vSnGj8XBY5pg9c_plJzlaDRlbLeR2Ozx4zpQzHwbZtnoahFTJac2ShuBKsB_xVNBqNRWdoq_w7Tmhk5U2Le5VeE6O5O5tdtciuyHZcjBkS_k7Jf0z5KPvr5NL81ZmeR16Wq4cZ98/s640/Sundarapandian_movie_new-stills+(7).jpgசசிகுமார் பேட்டி

காதலை மீட்ட சுந்தரபாண்டியன்!

ராகவ் குமார்
சசிகுமாரைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றால் லேப்டாப்பில் மும்முரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். ‘சுந்தரபாண்டியன்ஸ்டில்ஸாக இருக்கும் என்று எட்டிப் பார்த்தால், ‘கரங்கள்வெப்சைட்.

சில மாதங்களுக்கு முன்னால் கும்பகோணம் அன்னை கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தேன். அக்கல்லூரியில் மாணவர்கள் உண்டியல் மூலம், மற்ற மாணவர்களிடமிருந்து பணம் வசூல் செய்து, மாணவர்களைப் படிக்க வைக்கிறார்கள். இந்த விஷயம் என்னை மிகக் கவர்ந்து விட்டது.




 இனிமேல் ஏதாவது கல்லூரி விழாவுக்குச் சென்றால் இதுபோன்ற ஆக்கபூர்வமான விஷயத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொண்டேன். எனக்கு விழாவில் தரப்படும் தொகையையும் அக்கல்லூரியின் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்காகத் தந்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். மாணவர்களுக்கும், உதவி செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கும் இணைப்புப் பாலம் வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் என்னோடகரங்கள்வெப்சைட்.

இது இயக்கமோ, டிரஸ்டோ அல்ல. இந்தக் கல்வியாண்டில் இதன் மூலமாக நூறு பேர் பயனடைந்துள்ளனர். நானும் என்னால் முடிந்த உதவி செய்கிறேன். கவுன்சிலிங்கில் சீட் கிடைத்து ஃபீஸ் கட்டிய பிறகு, ‘மெஸ் ஃபீஸ் கட்ட முடியலை, ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட முடியலை...’ என்று தகவல்கள் வரும். சாப்பாடும், தங்குமிடமும் கல்வி கற்றலின் அடிப்படை. இதற்கு உதவி செய்கிறோம். ஆனால், உதவி பெற்றவர்கள் என்ற வார்த்தையைக்கூட இந்த வெப்சைட்டில் பார்க்க முடியாது. ‘என் குடும்பம்என்றுதான் இருக்கும்."

 http://www.nakkheeran.in/AllImages/Gallerys/29894_1.jpg
பொதுவான விஷயங்களில் ஆர்வம் செலுத்துறீங்க? அடுத்தது அரசியல்தானே?
இதில் அரசியல் எண்ணம் துளியும் கிடையாது. அரசியல், மதம், இனம், மொழி இவையனைத்தையும் விட கல்விதான் ஒருவனுக்கு முக்கியம். கல்வி என்ற அடிப்படைத் தேவையைப் பெறச் செய்யும் சிறு முயற்சிதான்கரங்கள்’."


சுந்தரபாண்டியன்?

என்னிடம் அசிஸ்டென்ட்டாக இருப்பவர்கள் தனியாக படம் செய்ய என்னிடமே வாய்ப்புக் கேட்கக் கூடாது என்பது என் பாலிஸி. காரணம், என் அசோசியேட்ஸ் வெளியில் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புக் கேட்டு வெற்றிபெற்றால்தான் எனக்குப் பெருமை. எனது அசோசியேட் பிரபாகரன் ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் ஒரு கதையைச் சொல்லி .கே. ஆனது.



 சந்தர்ப்பச் சூழ்நிலையால் அந்தக் கதையைப் படமாக எடுக்க முடியவில்லை. பிரபாகரனின் இந்த முயற்சியும் தேடலும், என்னிடமே வந்து தயாரிக்கச் சொல்லி வற்புறுத்தாத தன்மையும் என்னைக் கவர்ந்தது. பிரபாகரனை அழைத்து எனக்காக ஒரு கதை சொல் என்றேன். சொன்னார்


 கதை பிடித்துப் போனது. எனது தயாரிப்பில், பிரபாகரன் இயக்கத்தில்சுந்தர பாண்டியன்வருகிறான். உசிலம்பட்டி, தேனி பக்கத்தில் கதைக்களம். காதலையும், காதலர்களையும் சேர்த்து வைக்கிற அனைவருக்கும் பிடிச்ச பையன் சுந்தரபாண்டியன். காதலுக்கு கும்கி ஹீரோயின் லக்ஷ்மிமேனன் இருக்காங்க."

 http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/08/sundarapandian-audio-launch.jpg
மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போல உங்க சுந்தரபாண்டியன் எதை மீட்கப் போறாரு?

வேற எதை? தம் காதலியையும், காதலையும்தான்."

உங்க தாடியையும், காதல் கான்செப்ட்டையும் விடவே மாட்டீங்களா?

எதிர்காலத்தில் வேற வேற கேரக்டர்கள் பண்ணும்போது தாடி இருக்காது. காதலை விடறது கஷ்டம்தான். சுந்தரபாண்டியன் ஷூட்டிங்கில் கல்லூரி மாணவர்கள் பட்டாளம் என்னிடம் பேச வந்தார்கள்.

சார் எங்க ஃப்ரெண்ட் ஒருத்தன் ஒரு பொண்ணை லவ் பண்றான். அவங்க வீட்ல ஏத்துக்க மாட்டேன்றாங்க. நாங்க ரெண்டு பேரையும் வீட்டை எதிர்த்துச் சேர்த்து வைக்கப் போறோம்னாங்க. ‘இப்படியெல்லாம் செய்யக் கூடாது தம்பிகளா. வீட்ல பெரியவங்ககிட்ட பேசுங்கஎன்று சொல்லி அனுப்பி வைத்தேன். ‘என்ன சார் நாடோடிகள் படத்தில் நண்பர்கள் லவ்வை சேர்த்து வெச்சீங்க. நீங்களா இப்படிப் பேசறதுன்னு கேட்டாங்க



தம்பி லவ்வைச் சேர்த்து வைச்சதுதான் உங்க கண்ணுக்குத் தெரியுதா? அதே படத்தில் லவ்வுக்காக நண்பர்கள் கால் இழந்து, காது செவிடாகிப் போனதெல்லாம் கவனிக்கலையா? இதெல்லாம் ரிஸ்க்என்றேன். ‘நீங்க இப்படிச் சொல்லக் கூடாது. நீங்க காதலைச் சேர்த்து வைக்கணும்ன்னு சொன்னாங்க. நானே வேணாம்ன்னு நினைச்சாலும் என் ஆடியன்ஸ் காதலை எதிர்பார்க்கிறாங்களே? என்ன செய்ய?"

சமுத்திரக்கனி இந்தப் படத்தில் இல்லையே?

கனியும், நானும் சேர்ந்து பண்ணா ஏன் இரண்டு பேரும் சேர்ந்தே பண்றீங்க, தனியா பண்ண மாட்டீங்களான்னு கேட்டீங்க. இப்ப சேர்ந்து ஏன் பண்ணலைன்னு கேட்கறீங்க. எங்களுக்குள்ள பிரச்னைன்னு சிலர் சொல்றாங்க. இதெல்லாம் எதுவும் இல்லை. எங்களின் நட்பு அப்படியே இருக்கு. ‘போராளிபடம் செய்யும்போதே இன்னும் இரண்டு படங்களுக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து வொர்க் செய்ய வேண்டாம் எனப் பேசி வைத்துக்கொண்டோம்."

வாரிசு நடிகர்கள் அதிகளவில் கோடம்பாக்கத்தில் வருகிறார்கள். சினிமா பின்னணி இல்லாத புதுமுகங்கள் நிலைதான் என்ன?
சுப்பிரமணியபுரத்தில் நானும் புது முகம்தான். எனது படங்களில் ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள்தான். புதுமுகங்களை ஏற்றுக் கொள்வதும், அங்கீகரிப்பதும் ஆடியன்ஸ் கையில் உள்ளது. வாரிசு நடிகர்களுக்கு என்ட்ரி மட்டும்தான் சுலபம். தக்கவைக்கக்கூடிய போராட்டங்கள் இருவருக்கும் ஒன்றுதான். அஜித், விக்ரம் வாரிசு நடிகர்கள் இல்லையே. ஒரு இயக்குனராக நடிகர்களை அறிமுகம் மட்டும்தான் செய்ய முடியும். தொடர்ந்து தக்கவைப்பது தேர்ந்தெடுக்கும் கதைகளில்தான் உள்ளது."

பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்க ஆசையில்லையா?

ஆசை இருக்கு. அதற்கான ஸ்கிரிப்ட்டும், சூழலும் அமையட்டும்."

நன்றி - கல்கி, புலவர் தருமி

 http://www.tutyonline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/Sundarapandian.jpg

உயிரோவியம்! -சிறு கதை: -தீபா ஸ்ரீ

உயிரோவியம்!


கதை: தீபா ஸ்ரீ


ஓவியம்: மாருதி


மங்கையர் மலர் மாத இதழில் சிறுகதைப்போட்டி வைத்திருந்தாங்க. அதுல 2 ஆம் பரிசு ரூ 10,000 பெற்ற கதை இது.

திரிந்துபோன பாலைக் கொட்டிக் கவிழ்த்ததுபோல, வானத்தில் மேகங்கள் உதிரியாகத் திரிந்துக் கொண்டிருந்தன. நான் சூடாக டீயைத் தயாரித்துக்கொண்டு, பால்கனியில் வந்து அமர்ந்தேன். டீ-பாயில் கிடந்த சஞ்சரிகைகளை இலேசாகப் புரட்டினேன். ‘வேளச்சேரி டைம்ஸ்’ - என்ற உள்ளூர் நாளிதழை அசுவாரசியமாகப் புரட்டியபோது கண்களில் சட்டென்று பட்டது அந்த விளம்பரம்.



எங்களிடம் பழைமையான தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் விற்பனைக்கு உள்ளன. தொடர்பு கொள்வும்’ என்று ஒரு பெட்டி விளம்பரம். அதன் அருகிலேயே கையில் வெண்ணெயுடன் காட்சி அளிக்கும் நவநீத கிருஷ்ணனின் அழகு சித்திரம். அதன் கீழே... ‘மினாட்சி’ என்றொரு கையெழுத்து. அது எனக்கு நன்குப் பரிட்சையமான கையெழுத்து!



அப்போது நாங்கள் கும்பகோணத்தில் வசித்தோம். எதிர்வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்தவள்தான் இந்த மீனாட்சி மாமி!



நல்ல பவுன் நிறம்; கொஞ்சம் பூசிய உடல்வாகு, சிரிக்கும் கண்கள் என நல்ல அழகானத் தோற்றம். நீண்ட பின்னலை, பின்னங்கழுத்தில் கைமுறுக்கு போல வட்டமாகச் சுற்றிக் கொண்டையிட்டிருப்பாள்.



அந்த வயசுக்கு அது எனக்கு புதுமையான ஹேர் ஸ்டைலாகத் தெரிந்தது.



நான் அப்போது பத்தாங்கிளாஸ் முடிச்சுருந்தேன்னு நினைக்கிறேன். மீனாட்சி மாமி வீட்டுக் கொல்லையில் மருதாணி, புதர் போல செழித்து வளர்ந்திருக்கும்.



குத்துச் செடி மருதாணி... குந்து மணியாட்டம் சிவக்கும்டி! மாமி வீட்டு மருதாணியை பறிச்சுத்தாடி!" என்று ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் தொந்தரவு செய்வார்கள். நானும் அவர்களது அன்பு நச்சரிப்பைத் தட்ட முடியாமல் அடிக்கடி மீனா மாமி வீட்டுக்குப் போவேன்.



நான் போகும்போதெல்லாம் மாமி, பின் பக்கத்து திண்ணையில் உட்கார்ந்து, பெரிய அட்டையில் எதையாவது வரைந்து கொண்டிருப்பாள். அவளைச் சுற்றி, சிறிதும் பெரிதுமான ப்ரஷ்கள், பென்சில், ஸ்கெச் பேனாக்கள் சிதறிக் கிடக்கும். அது தவிர, ஒரு தகரப் பெட்டியில் சின்னச் சின்ன தகடுகள், சிறிதும் பெரிதுமான கத்திரிகள், பித்தளைக் கிண்ணங்களில் கலர் மணிகள், ரேக்குகள், வர்ணக் குப்பிகள் என பார்க்கவே ஆசையாக இருக்கும்.



ஓ! நீங்க ஆர்டிஸ்டா மாமி? ட்ராயிங் எல்லாம் வரைவீங்களா?"



ஏதோ... சுமாரா வரைவேன்!"



இல்ல மாமி! சூப்பரா வரையறீங்க!"



தாங்க்ஸ்டி உமா! மருதாணியைப் பறிச்சுக்கிட்டுப் போகும்போது, எனக்குக் கொஞ்சம் தண்ணி குடுத்துட்டுப் போ!" என்பாள் மீனா மாமி!



எனக்குத் தெரிந்த எங்க வீதிப் பெண்கள் யாரும் மீனா மாமி அளவுக்கு சித்திரக்காரர்களாக இருந்ததில்லை. பாரதி தெரு பாட்டி ஒருவர், கோயில் விசேஷங்களில் படிக் கோலம் போட்டு அசத்துவார். கண்ணா சித்தியின் பெண் ஒருத்தி, சுவரில் அழகாக வரலக்ஷ்மி அம்மன் முகம் வரைவாள்; பார்த்திருக்கிறேன். ஆனால், மீனா மாமி ஒரு ஆர்ட் கேலரியே வைத்திருந்ததைப் பிறிதொரு நாளில் பார்த்தபோது அசந்தே போனேன்.



மாமி, இந்த மாசம் ‘ராணி முத்து’ல சிவசங்கரி நாவல் வந்திருக்கு. படிக்கறீங்களா?" என்றபடி நான் வீட்டுக்குள் போனபோது, மீனா மாமி பூஜையறையில் இருந்தார்.



ஆத்தாளை... எங்கள் அபிராம வல்லியை..." என்று அழகாகப் பாடியபடி, கற்பூர ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் மாமி.



அடேயப்பா! பூஜை அறையா அது? தெய்விகக் கலைக்கூடம் போல இருந்தது. கண்ணாடி ஃப்ரேம் போட்ட திரு உருவச்சித்திரங்கள். செந்தாமரை மலர் மீது அமர்ந்த மகாலக்ஷ்மி, ஸ்ரீராஜ ராஜேஸ்வரி, ராதை - கண்ணன், வெங்கடேசப் பெருமாள் என எல்லாமே வெள்ளி - தங்க ரேக்குகள் மின்னிப் பளபளத்தன. தெய்வத்தின் முகங்களில் அப்படியொரு வாத்ஸல்யம்.



ஒவ்வொரு சுவாமிப் படத்தின் வலது கீழ் மூலையிலும் ‘மினாட்சி’ என்று பெயர் இருந்தது.



மாமி, மீனாட்சின்னு ஏன் சுழிக்கல? மினாட்சின்னு இருக்கே?"



நான் என்னிக்காவது கோபப்பட்டு முகம் சுளிச்சுப் பார்த்திருக்கியா? அதுதான் என் கையெழுத்தும் சுளிக்கலை!" என்றாள் சிரித்துக்கொண்டே.



ஆடி வெள்ளி, தேடி வந்திருக்க... இந்தா பால் பாயசம்!" என்று அன்புடன் கொடுத்து அனுப்பினாள்.

அம்மா, மீனா மாமி வீட்டுல ஒரு ரூம் முழுக்க, சுவாமிப் படங்கள். எல்லாமே அவங்க வரைஞ்ச பெயின்டிங்ஸ்; சூப்பராய் இருக்கும்மா!" என்று நான் சொன்னதும், அந்தத் தெருவே போய் பார்த்து வந்து சிலாகித்து மகிழ்ந்தது. அன்றைக்கு இரவு சாப்பிடும்போது, எதிர்வீட்டுல என்ன பொம்பளைங்க கூட்டம்?" என்று கேட்டார் அப்பா.



அதுவா? அந்த மீனா மாமி, அழகழகாய் சாமிப்படம் வரைஞ்சு மாட்டி வெச்சுருக்காங்க. அதைப் பார்க்கப் போனோம். நல்ல கைவேலையெல்லாம் செய்றா. லவ் மேரேஜ் போல இருக்கு. புருஷன் வெளியூர்ல இருக்கார். எப்பவோ வர்றார் - போறார்! குழந்தை குட்டியும் ஏதுமில்ல. ஒண்டியா என்னதான் செய்வா? பொழுது போகறதுக்காக எதையாவது வரையறா போலிருக்கு!" என்றாள் அம்மா.



ஒருமுறை, மீனா மாமிக்கு என்ன பணமுடைவோ என்னவோ, எங்க வீட்டுக்கு வந்து, நூறு ரூபாய் கடன் கேட்டார். இரண்டு மாதமாக வாடகை தரலை என்று வீட்டுக்கு சொந்தக்காரர் சத்தம் போட்டுவிட்டுப் போனதையும் பார்த்தோம்.



ஏன், உங்க வீட்டுக்காரர் பணம் அனுப்புறதில்லையா? ஊருக்கு வந்தே இரண்டு மூணு மாசம் இருக்கும் போலிருக்கே!" என்றாள் அம்மா நைஸாக.



ஆமாம், அவர் வேலை செய்யற கம்பெனியை மூடிட்டாங்களாம். வேற வேலைக்கு முயற்சி பண்றதாய் சொன்னாரு. பணம் வந்ததும் திருப்பித் தந்துடறேன்!" என்றாள் மெல்லிய குரலில்.



அதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா, தப்பா நினைச்சுக்காதீங்க மாமி! நீங்க ரொம்ப நல்லா பெயின்டிங் பண்றீங்களாம். அதுவும் சுவாமிப் படங்கள் பார்க்கவே தெய்விகமாய் இருக்காம். அதை வித்தா நல்ல காசு வருமே... டவுன்ல ‘வாசவி ஆர்ட்ஸ்னு..."



அப்பா சொல்லி முடிக்கிறதுக்குள்ள மீனா மாமி, சுவரில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழுதுவிட்டாள்.



அண்ணா, அதெல்லாம் வெறும் பெயின்டிங்னா நினைக்கறீங்க... அதெல்லாம் என்னோட குழந்தைகள். பத்து மாசம் சுமந்து பெக்கற மாதிரி, நான் கண்ணுலயும் நெஞ்சுலயும் சுமந்து வளர்த்த பிள்ளைகள். அதை வித்து என் வயிற்றைக் கழுவுற நிலமை வந்துச்சுன்னா, இதோ... இந்தக் கட்டை விரலை வெட்டிக்குவேன்!" என்றாள் ஆவேசமாக!



சரிம்மா! அழாதே! இந்தா நூறு ரூபாய். உனக்கு எப்போ முடியுமோ அப்ப குடு!" என்று சொல்லிவிட்டு அப்பா உள்ளே போய்விட்டார்.



அதற்குப் பின், அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றலாகிவிட்டது. மீனா மாமி, பத்தும் ஐந்துமாக நூறு ரூபாயைத் திருப்பித் தந்ததாகப் பின்னாளில் அம்மா ஒருதரம் சொன்னாள். அதற்குப் பின் மீனா மாமி என் நினைவில் வெளிறிப் போனாள். இன்றைக்கு இருபது வருஷங்களுக்குப் பிறகு ‘மினாட்சி’ என்ற கையெழுத்தைப் பார்க்கிறேன். உடனே என் கணவருக்கு விவரம் சொல்லிவிட்டு, தொடர்பு எண்ணுக்கு ஃபோன் போட்டேன்.



எங்க பெரியம்மாதான் அவங்க. வேளச்சேரி சிவன் கோயில் தெருவுல இருக்கு வீடு!" என்று ஓர் இளைஞன் பேசினான். உடனே, என் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வேளச்சேரி நோக்கிப் பறந்தேன்.



குருநானக் கல்லூரி தாண்டி, பிரதான சாலையில் இருந்தது சிவன் கோயில். அதை ஒட்டிய குறுக்குச் சந்தில் இருந்தது அந்தப் பழைய வீடு!



வாங்க... நீங்கதான் ஃபோன் செஞ்சீங்களா?" என்று கேட்டபடியே உள்ளே அழைத்துப் போனான்.



ஹாலின் சுவர் முழுக்கவும், மர பெஞ்சுகள் மீதும் மீனா மாமியின் ஓவியங்கள் தேக்குமர ஃபிரேமில் மினு மினுத்தன.



மாமி எங்க?"


மாடில!"


‘எஸ்’ போன்ற வளைந்த படிக்கட்டுகளில் ஏறி மேலே போனபோது, பழைய பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் மீனா மாமி.



அவர்தான்... அவரேதான்!



ஆளே உருக்குலைந்து, தலைமுடி எல்லாம் கொட்டிப் போயிருந்தது. ஆனால், அந்தக் கண்கள் மட்டும் அதே உயிர்ப்புடன் இருப்பதாகத் தோன்றியது.



மாமி, ஞாபகமிருக்கா? நான் உமா. கும்பகோணத்துல எதிர்வீட்டுல இருந்தோமே! மருதாணி பறிச்சுக்க வருவேனே!"



ஓ! சங்கரி பொண்ணா? நல்லா இருக்கியாம்மா... அப்பா - அம்மா சௌக்கியமா?"



எல்லாரும் நல்ல சௌக்கியம் மாமி! நீங்க எப்போ சென்னை வந்தீங்க...? உங்க வீட்டுக்காரர்..."



அவர் போயி பத்து வருஷமாச்சு!"



த்சொ...த்சொ! இந்தப் பையன்?"



இவன் என் மகன்தான். என் கணவரோட இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன். அவர் பெங்களூருல வேலையாய் இருந்தப்ப, அங்க ஏற்பட்ட சிநேகிதத்துல பிறந்த பிள்ளை. வேற வழியில்லாமல், அவங்க உறவை ஏத்துக்கிட்டேன். ஒரு முறை இரண்டு பேரும் பைக்ல போகும் போது, ஆக்ஸிடென்ட் ஆகி, ஸ்தலத்துலியே போயிட்டாங்க. அப்ப இவன் இரண்டாம் கிளாஸ் படிச்சுட்டிருந்தான். ஏதோ கொஞ்சம் இன்ஷ்யூரன்ஸ் பணம் வந்தது. கம்பெனியிலும் கொஞ்சம் கொடுத்தாங்க. அதை வெச்சு காலேஜ் வரைக்கும் வளர்த்துட்டேன். கைல இருந்த காசெல்லாம் கரைஞ்சுடுச்சு. அதான் என்னோட பெயின்டிங்ஸை விற்கலாம்னு!" முகத்தைத் துடைத்துக் கொண்டு கண்ணீரை மறைத்தார்.



மாமி கவலைப்படாதீங்க. என் ஹஸ்பென்ட் கிஃப்ட் ஷாப் வெச்சுருக்காரு. என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஆர்ட் கேலரி வெச்சிருக்கா. நானே உங்க ஓவியங்களை நல்ல விலைக்கு வித்துத் தர்றேன்!"



ரொம்ப தாங்க்ஸ்டி உமா!"



அது மட்டுமில்லை. உங்களுக்கு போர்ட், கலர்ஸ் எல்லாமே வாங்கித் தர்றேன். நீங்க மறுபடியும் வரையலாம்."



மறுபடி வரையறதா? ஸாரி உமா... அது என்னால இனி முடியாது!"



ஏன் மாமி?"



இதோ பார்!" சால்வைக்குள் இருந்த வலது கையை எடுத்துக் காட்டினார்.



வலது கையில் கட்டை விரல் இருக்கவில்லை!



ஷுகர் எக்கச்சக்கமா ஆயிடுச்சு. வெட்டி எடுத்துட்டாங்க!" சொல்லும் போதே கண்ணீர் வழிந்தது.



‘என்னோட ஓவியங்களை வித்து சாப்பிடற நிலைமை வந்ததுன்னா, நான் என்னோட கட்டை விரலை வெட்டிக்குவேன்!’



எப்போதோ மீனா மாமி சொன்னது, நினைவுக்கு வந்து நெஞ்சைப் பிசைந்தது!



நன்றி - கல்கி, புலவர் தருமி

வளையல் வியாபாரியா இருந்தா ஒரு கிளுகிளுப்பான பயன் என்னான்னா....

வாவிசி :) லெட்டர்னா இப்படி தான் எழுதனும்... என்ன ஒரு அறிவாளித்தனம்... 
1.மேல் அதிகாரிகள் கெடுபிடியால் 10,000 வீரர்கள் இந்திய ராணுவத்தை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். # ஃபீமேல் அதிகாரியை நியமிக்க 



-------------------------


2.சூடா இருக்கும் அயர்ன் பாக்ஸ், தோசைக்கல்,காதலியின் முகம் மேல் தண்ணீர் அடிச்சு விளையாண்டால் அது வாட்டர்கேம்ஸில் வருமா? # ரீ மிக்ஸ்



லொள் டேவிட் - நல்ல வேளை, நான் வாட்டர் கோம்ஸ்னு படிச்சுட்டேன் 



---------------------



3. கிரிக்கெட் விளையாட நான் சிபாரிசு செய்யும் நடிகைகள் - சிம்ரன்,கிரண்,# ஓடி ஓடி ரன் எடுப்பாங்க 



----------------------


4. பெரும்பாலும் பெண்கள் பெயர் "ஆ"காரத்திலேயே முடிகிறது,ரம்யா,திவ்யா,ப்ரியா,தீபா,அகிலா,சுகன்யா,காதலர்கள் வாழ்வு சேதாரத்தில் 



---------------------------



5. பெண்கள் சிக்கன் ஸ்லீப் ( கோழித்தூக்கம்) தூங்கி விடுவதால் ஆண்கள் சேவலாக மாறி எழுப்ப வேண்டி இருக்கிறது ;-0 



-----------------------

Manachatchi Manasu shared Veeran Vetri Veeran's photo.


6. என் வாழ்வா” தாரம்” நீ! தாங்கவொண்ணா துய”ரம்” நீ! 



------------------------


 7. சுமாரான அழகே! நான் மிஸ் பண்ண வாயாடி நீ தானே #அடடே...! # எ கீ




------------------

8. உடைந்தது நடன கலைஞர்கள் சங்கம்: படப்பிடிப்புகளை நிறுத்தும் நிர்வாகிகள் # கலா மாஸ்டர் வழுக்கி விழுந்துட்டாங்களா? அய்யகோ! ;-0



---------------------------


9. கோவை குற்றாலம் அருவி மூடல் # பெட்ஷீட் நனைஞ்சுடாது?



---------------------


10. கள்ளச்சாராயம் என்பது அவள் கடைக்கண்ணால் பார்ப்பது! நல்ல சாராயம் என்பது நேருக்கு நேர் அவள் பார்ப்பது # டாஸ்மாக்கானின் டைரிக்குறிப்பு



-------------------------





11. வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு கணவன், மாதாந்திர சம்பளம் வழங்குவதற்கான மசோதா தயார்-அமைச்சர் கிருஷ்ணா திராத் # வெளங்கிடும்


--------------------------


12. முகமூடியில் பாட்டுக்கு கத்தரி: பூஜா அப்செட் # பாட்டுக்கு கத்தரின்னா ஃபைட்டுக்கு தக்காளியா?



------------------------

13. நான் விளக்கெண்ணெய் குடிப்பதே இல்லை, ஏன்னா ஆல்ரெடி என் முகம் அதை குடிச்ச மாதிரி தான் இருக்கு  # எ கீ



---------------


14. விளையாட வந்த சிங்களவரை திருப்பி அனுப்பியது சரியல்ல-கருணாநிதி # தலைவா! அவங்க நம்ம வாழ்க்கைல விளையாடியவங்க, மைண்ட் இட்




-------------------


15. பரிவு காட்டும் காதலியை தெரிவு செய்வதில்  உன் அறிவு காட்ட வேண்டும்



------------------------


இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்)

*** ஒரு தமிழர் *** V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:



16. 12  ஜென் கதைகள் கொண்ட சிறுகதைத்தொகுப்பை ஒரு டெ”ஜென்” கதைகள் என சொல்லலாமா?




----------------


17. சம்சாரம்  கண்ணா பின்னான்னு திட்ட வருகையில் கண்ணான்னு  சொல்றப்ப பாதிலயே நிறுத்திட்டா நீ  புத்திசாலி # ச்



--------------------


18. காதலி - ஐ லவ் ஐஸ்க்ரீம் வெரி மச்.டெயிலி 4 சாப்பிடுவேன்



.காதலன் - அப்போ அது வெறி மச்



----------------------------



19. வளையல் வியாபாரியா இருந்தா ஒரு பெனிஃபிட் உண்டு, கிராமங்களில் பொண்ணுங்க கையை பிடிச்சு பார்த்துக்கலாம்




----------------------------


20. ஸ்க்ரூ ட்ரைவரை யூஸ் பண்றவங்க ஸ்க்ரூ கண்டக்டர்ஸ்?



--------------------------


Wednesday, September 05, 2012

கிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1

பவுர்ணமி ராத்திரியில்  ரதி தேவின்னு ஒரு மலையாள கில்மாபடம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன்னா அதுதான் நான் பார்த்த முதல் சாமி படம்.அதனால அந்த ஞாபகார்த்தமா  அஜால் குஜால் ஜோக்ஸ்க்கு டைட்டில் அப்டி வெச்சுட்டேன்.. ராத்திரியில்  ரதி தேவின்னா அப்போ பகல்ல மூதேவியா,? சாயங்காலம் ஸ்ரீதேவியா? அப்டினு எகனை மொகனையா கேட்கக்கூடாது, எல்லாம் சும்மா ஒரு கிளுகிளுப்புக்குத்தான்.  ரக்பி ஜோக்ஸ், ஹிலாரியஸ் ஜோக்ஸ், டர்ட்டி ஜோக்ஸ்னு பல ஆங்கிலப்புக்ஸ்ல படிச்சது, கேட்டது என இது எல்லாமே மற்றவர்கள் படைப்புத்தான். வசன மேற்பார்வை,  டைரக்‌ஷன் டச் மட்டும் நான்.. அதனால திட்டுபவர்கள் படைப்பாளியையும், பாராட்டுபவர்கள் என்னையும் மனதில் கொள்க 


1. டாக்டர் ரியாஸ் -  உங்களுக்கு 2 பேடு நியூஸ் ( BAD NEWS)  


பிரபல ட்வீட்டர் - சொல்லுங்க டாக்டர்


1. உங்களுக்கு எய்ட்ஸ் இருக்கு , 2.கஜினி சூர்யா மாதிரி வெரி ஷார்ட் டைம் மெம்மரி லாஸ் இருக்கு.. 


பிரபல ட்வீட்டர் - இவ்ளவ் தானா? நான் கூட எனக்கு எய்ட்ஸ் இருக்கோன்னு பயந்துட்டேன் 


2. சில வருடங்களுக்கு முன்னால எல்லாம் பொண்ணுங்க பசங்களைக்கவர  அவங்க கர்ச்சீப்பை  வேணும்னே கீழே போடுவாங்க . பசங்க அதை எடுத்துட்டு வந்து XQS மீ மிஸ் , இது உங்களுதா? பாருங்கன்னு பேச்சுக்குடுப்பாங்க..  - இதெல்லாம் 1990 ல


 இப்போ பொண்ணுங்க கர்சீஃப்க்கு பதிலா பிராவை கீழே போடறாங்களாம் ( ஃபாரீன்ல )  - பிரா மேலே தானே போடனும்? எதுக்கு கீழே போடறாங்க? என்று யாரும் மொக்கை போடக்கூடாது.. 

3. என்னடி சொல்றே? மெடிக்கல்ஷாப்ல ஒர்க் பண்ற பையனைத்தான் லவ் பண்ணுவியா? அது ஏன்? 

 அவனுக்குத்தான் எப்போ செய்யனும்? எப்போ செய்யக்கூடாது? எல்லாம் தெரிஞ்சுருக்கும். பாதுகாப்புக்கும் பிரச்சனை இல்லை. 


( பாதுகாப்பா செய்யனும்னா செக்யூரிட்டி, வாட்ச்மேன் நாட் ஓக்கேவா? அவ்வ் )




4. செஸ்க்கும், செக்ஸ்க்கும் இன்னா ஒத்துமை?



 செஸ்னா 64 கட்டம் இருக்கும். அதுல எல்லா கட்டத்துலயும் காயை வெச்சு விளையாடுவோம். கில்மா ல ஆய கலைகள் 64 இருந்தாலும் ஒவ்வொண்ணாத்தான் விளையாட முடியும்.. 


5. நாய் டாக்டர் நாராயணா - இன்னும் உங்க கணவர் உங்களை கடிக்கறாரா? 



பொறுத்துப்போகும் பூமிகா - நோ டாக்டர், இப்போ கடிக்கறதில்லை


ஓஹோ! அந்த பழக்கத்தை விட்டுட்டாரா? வெரி குட்.. 

நோ டாக்டர்.. எல்லா பல்லும் கொட்டிடிச்சு.. சும்மா கவ்வுவார்.. அவ்ளவ் தான் 





6. ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா? ஒரு செக்ஸ் மேனியாக் எங்க வீட்ல புகுந்துட்டான்.. 

மேடம், பதட்டப்படாதீங்க  இப்பவே ஒரு ஆளை அனுப்பறோம்

அவசரம் இல்லை, காலைல அனுப்பினா போதும். 4 பேரை அனுப்பிடுங்க.. அவன் நடக்க முடியாம கிடப்பான், ஸ்ட்ரெச்சர்ல வந்து தூக்கிட்டு போங்க !



7. பதிவிரதை பத்மா - அத்தான், இன்னைக்கு நைட் ஏதாவது நைட் கிளப்க்கு ஜாலியா போலாமா? 


ஓக்கே, பந்தயம், 2 பேர்ல யார் முதல்ல வீடு திரும்பறாங்கன்னு பார்க்கலாம்..  நீ ஈ ஆர் சி கிளப் போ.. நாம் முக்காடு கிளப் போறேன் ( அங்கே எல்லாருமே முக்காட்டோட தான் சுத்தறாங்களாம் )



8.  இண்டர்வியூவில் லேடி - டைப்ல நீ லோயரா ? ஹையரா? 


 டைப்பிங்க்ல லோயர், ” மிஸ்” டேக் ( MISS TAKE - MISTAKE) பண்றதுல  ஹையர்.. ஹி ஹி



9.மேடம், உங்களை மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறேன். என்னையும் உங்க வெட்டிங்க் லிஸ்ட் ( WEDDING LIST) ல வைக்கனும்


 நடிகை - ஸாரி. ஆல்ரெடி எல்லாம் புக்டு.. வேணும்னா வெய்ட்டிங்க் லிஸ்ட்ல வேணா வைக்கறேன், ஓக்கேவா? 


10. இந்தக்காலத்துப்பொண்ணுங்க கழுத்துல பெரும்பாலும்  முருகன் டாலர் செயின் இருக்கும்.. ஏன் தெரியுமா? 

 தெரியலையே? முருகன் என்றால் அழகுன்னு அர்த்தம், அழகு இருக்கும் இடம்னு பேர் வரவா? 


 நோ, நோ. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்..  அதான்.. 


# குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்..(இது மட்டும் ட்விட்டர்ல படிச்சது)

THE 13TH FLOOR -ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://movies.maxupdates.tv/wp-contents/uploads/2010/01/The-Thirteenth-Floor.jpg 

ஒரு கணிணி விஞ்ஞானி தன் ஆராய்ச்சில புதுசா ஒண்ணு கண்டு பிடிக்கிறார்..அப்போ அவர் உதவியாளர் பக்கத்துல இல்லை.  தன்னோட கண்டு பிடிப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதறார்.. அப்போ யாரா தன்னை நோட் பண்றாங்க.. ஃபாலோ பண்றாங்க அப்டினு ஒரு உள் உணர்வு..உடனே நேரா தான் வழக்கமா போகும் ஒரு நைட் கிளப்க்கு போறார். அங்கே இருக்கும் பேரர் ஒருவர்ட்ட ஒரு கவரை கொடுத்து  தன் பேரை சொல்லி யாராவது இந்த கவரை கேட்டா கொடுத்துடுன்னு சொல்லிட்டு போறார்.. 


 முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஒரு ஆள் கிட்டே அந்த மாதிரி ஒரு ரகசியத்தை ஒப்படைக்கலாமா?ன்னு நானும் யோசிச்சேன்.. அதுக்கு காரணம் சஸ்பென்சான ட்விஸ்ட்டா பின்னால வருது.. அந்த கவரை நாம எதிர்பார்த்த மாதிரியே அந்த சர்வர் பிரிச்சு படிச்சுடறான்.. கம்ப்யூட்டர் சயிண்ட்டிஸ்ட்டோட பி ஏ தான் நம்ம ஹீரோ.. 


 மர்ம நபரால் அந்த சயிண்ட்டிஸ்ட் கொலை செய்யப்படறார்.. கொலை செய்யப்பட்ட  நபரோட கோட் பாக்கெட்ல ஹீரோவோட பேரும் அவர் விசிட்டிங்க் கார்டும் இருக்கு.. இன்னும் பல பாதகமான அம்சங்கள் அவருக்கு எதிரா சாட்சியா இருக்கு.. போலீஸ் ஹீரோவை கொலையாளின்னு சந்தேகப்படுது.. 


பிரைவேட் டிடெக்டிவ் ஹீரோவை விசாரிக்கறார்.. அப்போ  ஒரு 70 மார்க் ஃபிகர் ஒண்ணு வருது.. கொலை செய்யப்பட்ட  சயிண்ட்டிஸ்ட்டோட பொண்ணுன்னு தன்னை சொல்லிக்குது.. ஆனா அந்த சயிண்ட்டிஸ்ட் கிட்டே பி ஏ வா பல வருஷம் வேலை பார்த்த ஹீரோவுக்கோ , மற்றவங்களுக்கோ அவளைப்பற்றித்தெரியல.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJuTpEex1xUXucF8OClJep65wXs4LMwo4GElV-Yf6YYul-klnw1VCAigsI5faQP9Sgyi9lvJqb6UKunGb2BdTZkz_RX1bBc8bTaSdUJ9wD1rpPZXXC0mLcVtfFpNxIoVbvdE3DEOGX9Q/s400/The+Thirteenth+Floor.jpg


சயிண்டிஸ்ட் கிட்டே கவரை வாங்கின பேரர் போலீஸ்ல சாட்சி சொல்றாரு.. அதாவது ஹீரோவும், சயிண்ட்டிஸ்ட்டும் சந்திச்சாங்க.. கொலை செய்யப்படறதுக்கு கொஞ்ச நேரம் முன்பு இருவரும் சந்திச்சாங்கன்னு சொல்லிடறார்.. இது போதாதா? போலீஸ்க்கு.. அவரை கைது பண்ணுது. 



இந்த இடத்துல அந்த சயிண்ட்டிஸ்ட் எந்த மாதிரி ஆராய்ச்சி செஞ்சார்னு பார்க்கலாம்..  ஆங்கிலத்துல சொன்னா virtual reality (VR) simulation.

நம்ம ஊர்ல அந்தக்காலத்துல முன்னோர்கள் சொல்வாங்களே கூடு விட்டு கூடு பாய்தல்.. அது மாதிரி.. இப்போ உதாரணத்துக்கு ராவணன் சீதையை அடைய ராமன் மாதிரி வேஷம் போட்டுட்டு அல்லது ராமர் உருவத்துல போனான். ராமர் உருவம் வந்ததும் அவர் மனசும் ராமர் மாதிரி அடுத்தவங்க மனைவியை மனதாலும் நினைக்காத தன்மை வந்துடுச்சுன்னு சொல்வாங்களே..  அதுக்கு நேர் எதிர்.. 


 அதாவது  இப்போ உங்களுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராயை கிஸ் பண்ண ஆசை.. ஆனா அபிஷேக் வந்தா மட்டும் தான் அவர் அதுக்கு ஓக்கே சொல்வார்.. நீங்க என்ன பண்றீங்க. வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலமா அபிஷேக் உருவத்துல போய் மேட்டரை முடிச்சுட்டு வந்துடறீங்க.. உருவம் தான் அவருது.. மனசு, எண்ணம், செயல்பாடுகள் எல்லாம் உங்களுது.. 


 இந்த ஆராய்ச்சில தான் அந்த சயிண்ட்டிஸ்ட் வின் பண்ணி இருக்கார்.. . 


இந்த கொலைக்கேஸ் விசாரணை நடந்துட்டு இருக்கும்போது அந்த சயிண்ட்டிஸ்ட்டோட மகள் ஒரு குண்டைத்தூக்கி போடறா.. அதாவது அவ மேரேஜ் ஆனவ்.. ஆனாலும் தன் அப்பாவின் பி ஏவான ஹீரோவை வை ஒன் சைடா லவ்வி இருக்கா.. மனசுக்குள்ளே.. அது அவ புருஷனுக்கு பிடிக்கல.. எந்த புருஷனுக்குத்தான் அது பிடிக்கும்..? 


அதனால அவ புருஷன் தான் ஹீரோவை   மாட்டி வைக்க கொலை செஞ்சிருப்பாரோ அப்டினு சந்தேகப்படறா.. 

என்ன நடக்குது? யார் தான் உண்மையான குற்றவாளி? என்பதெல்லாம் மிச்ச மீதிக்கதை.. க்ளைமேக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் உண்டு..  


 http://www.movie-roulette.com/photos_big/the-13th-floor-2-1.jpeg


 படம் ரிலீஸ் ஆன  கால கட்டம் 1999. கதை நடக்கும் கால கட்டம் 1990.. கொலை விசாரணை எல்லாம் முடிஞ்சு படம் முடியறப்போ 2024.. அது போக ஹீரோ பேக் டூ பாஸ்ட் ட்ராவல் பண்றது   1937

 அதனால படத்தோட முதல் ஹீரோ ஆர்ட் டைரக்டர் தான்.. அசால்ட்டா ஒர்க் பண்ணி கை தட்டல் வாங்கிக்கறார்..

Daniel F. Galouye.  என்னும் நாவல் ஆசிரியர்  எழுதிய நாவலான Simulacron-3 (1964) கதையை பேஸ் பண்ணி எழுதப்பட்ட திரைக்கதை,,. இயக்குநர் Josef Rusnak


 படத்தோட பெரும்பாலான சம்பவங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்ல, கலிஃபோர்னியாவுல நடக்குது,.,. நல்லா ரவுண்ட் அடிச்ச திருப்தி..


ஹீரோ ஆள் தோற்றத்தில் குறை களையப்பட்ட விஜய் ஆண்டனி மாதிரி இருக்கார்.. நல்ல நடிப்பு.. இவர் கமல் மாதிரி 3 கெட்டப்ல வர்றார்.. இந்தப்படம் தமிழ்ல ரீமேக் செஞ்சா அல்லது உல்டா செஞ்சா கமல் தான் பெஸ்ட் சாய்ஸ்.. ஆக்‌ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகளில் இவருக்கு சுறு சுறுப்பு கம்மி.. ஏன்னா பாப்பா பக்கத்துல வந்து வாகா நின்னும் கூட அண்ணன் கம்முன்னே இருக்கார். 


 ஹீரோயின் நல்ல அழகு.. டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டின் முகத்தை என்லார்ஜ் பண்ணி கொஞ்சம் பிரைட்னெஸை குறைச்சு, புன்னகையை கூட்டினா எப்படி இருக்கும்? அதான் இவர்..  குட் செலக்‌ஷன்;. 


 பல இடங்களில் நுணுக்கமான நடிப்பு.. குறிப்பா  ஹீரோ ரூபத்துல வந்திருப்பது தன் கணவன் தான் என அசால்ட்டா அடையாளம் காணும் இடங்கள், ஹீரோவிடம் ஆல்ரெடி தான் லவ்விய மேட்ட்ரை நாசூக்கா சொல்வது என  ஆங்காங்கே பளிச் பளிச்.. 



வில்லனாக வரும் சயிண்ட்டிஸ்ட்டின் மாப்ளையும், ஹீரோயினின் கணவர் இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்.. அவரை விட அந்த பார் பேரர் நடிப்பில் முந்துகிறார்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtszbVWx9ZlQs-SfSOAuJpJwnlxXZkVh26Amf5Wjuy_OnIVeWcsQXWZZePmVeGTytdFUAxJ7QVEZL3GNy0FzfqvzpVe_AstFkSCs1CNv_EYrvtSImWn4axGXz7u6iK3rtjDxRugfVpTynX/



மனம் கவர்ந்த வசனங்கள்



1.  உங்களுக்கு செல்வாக்கு ஜாஸ்தியா இருக்கு?


 ரெகுலரா ஒரே இடத்துலயோ, ஹோட்டல்லயோ  தங்குங்க, உங்களுக்கும் அந்த செல்வாக்கு வரும். 



2.  வெளி உலகத்தை பார்க்கவே மாட்டியா? எப்போ பாரு கம்ப்யூட்டரை கட்டிட்டு அழுதுட்டே இருக்கே? 



3. யார் யார் ராத்திரி எங்கெங்கே போறாங்கன்னு என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும்?



4. அவர் இங்கே வந்தா என்ன பண்ணுவார்?


 எல்லாரையும் போலத்தான்.. ஆடுவாரு, குடிப்பாரு. பொண்ணுங்க கூட கூத்தடிப்பாரு.. 


 பொண்ணுங்க கூடவா? ஆச்சரியமா இருக்கே?


 ஏன்? அவரை உங்களுக்கு நல்ல பழக்கம்னீங்க.. அவர் எப்படிப்பட்ட கேரக்டர்னு உங்களுக்குத்தெரியாதா? 

 தெரியும்.. ஆனா இந்த அளவு தெரியாது.




5. நாம ஆல்ரெடி பார்த்து பேசி பழகுன மாதிரி இருக்கே? 


 ஒரு வேளை முன் ஜென்மத்துல நமக்குன்னு இன்னும் ஒரு லைஃப் இருந்ததோ என்னவோ?


 இன்னொரு லைஃப்னா? புரியலை.. 


 போகப்போக புரியும்.. 



6. ஏய்.. மிஸ்டர்.. போலீஸ் விசாரணைல உனக்கு சிகரெட் பிடிக்கற பழக்கம் இல்லைன்னு சொன்னே... ஆனா  இப்போ தம் அடிக்கிறியே?


 அதுக்குப்பிறகு பழகிட்டேன்.. 



7. நீ நிழலை நிஜம்னு நம்பி இருக்கே.. நான் நிஜத்தை நிழல்னு நம்பி இருக்கேன்.. அதான் நமக்கிடையே உள்ள வித்தியாசம்



8. என் பொருளை இன்னொருத்தர் சொந்தமாக்கிக்க நான் விட மாட்டேன்.. விரும்பவும் மாட்டேன். 


 நீ என்ன மிருகமா? 


 ஆமா, அப்படி ஆக ஆசைப்படுறேன்.. 


http://www.brightlightsfilm.com/blog/wp-content/uploads/2010/08/13th-Floor.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்தோட டைட்டில் பார்த்தா என்னமோ  பேய்க்கதை மாதிரி இருக்கு. சயின்ஸ் ஃபிக்சன்  என்பதற்கோ, இன்வெஸ்டிகேஷன் ஆஃப் எ கர்டர் என்பதற்கோ எந்த விதமான க்ளூவோ , லீடோ டைட்டில்ல இல்லை.. என் சிபாரிசு - : THE SURPRISE MURDER"  OR  " LONG LONG AGO I WAS MURDERED"


2.  ஹீரோயின் தன் பர்சனாலிட்டி கணவனை விட்டுட்டு ஏன் ஹீரோ மேல மையல் கொள்கிறாள்? என்பதற்கு சரியான விளக்கம் இல்லை..  சம்பிராதயப்படி அவள் கணவனை கொடுமையானவனா காட்டி இருக்கலாம்.. அல்லது எதுக்கும் லாயக்கில்லாதவனா காட்டி இருக்கலாம்..


3. ஹீரோயினை அவள் கணவனா வர்ற வில்லன் பல டைம் டேஸ்ட் பார்த்தவன் தான். ஆனா காணாததைக்கண்டவன் போல் எதுக்கு ஹீரோ உருவத்துல வந்து ரொமான்ஸ் பண்றான்?


4. சயிண்ட்டிஸ்ட்டா வர்றவர் கில்மா மேட்டர்ல மன்னன் என்பதற்கும், கதைக்கும் என்ன சம்பந்தம்? கொலை செய்ததாக சந்தேகப்படும் லிஸ்ட்டில் எந்தப்பெண் பெயரும் வர்லை. பின் எதுக்கு அந்த தேவை இல்லாத  பல்லி வால் ?


5. கதைப்படி  வேற ஒரு காலத்துக்குப்போறவர் 2 மணி நேரம் தான் அங்கே இருக்க முடியும் என்ற கான்செப்ட் ஓக்கே.. அந்த 2 மணி நேரம் முடிஞ்சதும் ஹீரோ நிகழ்காலத்துக்கு வர்றார்.. அப்போ அங்கே ஏற்படும் குழப்பங்கள் என்ன? மறுபடி ஹீரோ அங்கே போகும்போது “ எங்கேப்பா ஆளையே காணோம்? திடீர்னு மாயமா மறைஞ்சுட்டே?ன்னு யாரும் கேட்கவே இல்லையே? 


http://www.tribute.ca/tribute_objects/images/movies/13th_Floor/07.JPG



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. திரைக்கதை உத்தி..  இந்தக்கதையை க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை முதல்லியே சொல்லி அல்லது அதை யூகிக்கும்  வாய்ப்பை ஆடியன்சுக்கு முன் கூட்டியே கொடுத்திருந்தா சப் என முடிந்திருக்கும் சாதா கதை தான்.. ஆனால் அதை சாமார்த்தியமாக மறைத்து கதை சொன்ன விதம் அழகு


2. ஹீரோ, ஹீரோயின் செலக்‌ஷன் கனகச்சிதம்.. இருவருக்கும் இடையே யான பாடி கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்  டச் எல்லாம் அருமை..


3. இசை, ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு மூன்றும் மூன்று வெவ்வேறு கால கட்டத்துக்கு போகும்போது அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றபடி மாறுவது அம்சம்..




சி.பி கமெண்ட் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் ஸ்டோரி ரசிகர்கள், பெண்கள் அனைவரும் பர்க்கலாம்.. கொஞ்சம் தூசு தட்னா தமிழில் ரீமேக்க நல்ல படம்..



http://13thflooroffice.files.wordpress.com/2011/06/bridesmaids_movie_poster.jpg%3Fw%3D500%26h%3D365