Tuesday, July 10, 2012

வா.மு.கோமு -பஞ்சும் நெருப்பும்! - சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYwh17HP8U6uZqK4kP2JHlPZoeIkdxQg5Xu04QwiqMr7-aKWyJx-o9AQJRBO2iDqY5zlVMaLrfpqm7eluyRcHd9pR4YDonXhjxp7G16zFQLK7rukbplNqaK0j_2T6KRcKt791SfL-rk6M/s1600/Santha.jpg 

பஞ்சும் நெருப்பும்!

வா.மு.கோமு

திருப்பூர் சங்கீதா திரையரங்கில் அவர்கள் 3 படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் செல்வியும், ரமேஷும்தான். அட, அப்படியானால் அவர்கள் இளம் ஜோடிப் புறாக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நொடியில் யூகித்திருப்பீர்கள். பின்னே இந்தக் காலத்தில் எங்கே அண்ணனும் தங்கையும் இணைந்து வந்து படம் பார்க்கிறார்கள்?
தனுஷைபோடா போடாஎன்று வீட்டுக்குத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தாள் காதலி! ‘ஒரு நிமிஷம்என்று தனுஷ் அவள் கையைப் பிடித்துக் கொண்டே நின்றான். எங்கே அந்தப் பெண்ணின் அப்பா வீட்டின் மாடி வந்து தனுஷின் கன்னத்தில் நாலு அப்பு அப்பி விடுவாரோ! என்ற பதைபதைப்பில் பார்வையாளர்கள் திரையிலேயே கவனமாய் இருந்தார்கள். இறுதியில் காதலி, தனுஷின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடியதும் பார்வையாளர்கள் நிம்மதியானார்கள்.
தனுஷுக்கு இந்த மாதிரி கேரக்டர் பண்றது அல்வா சாப்பிடற மாதிரி. நீங்க ஒரு வாட்டி என் கையைப் பிடிச்சுட்டுப் போகவே மாட்டேன்னு நின்னுட்டு இருந்தீங்க ரமேஷ்... ஞாபகம் இருக்கா?" என்றாள் செல்வி. ரமேஷோ வேறு சிந்தனையில் இருந்தான். அவன் படத்தில் கவனமே செலுத்தாமல் வெறுமனே திரையை வெறித்துக் கொண்டிருந்தான்.
ரமேஷின் சிந்தனை முழுதும் மாலையில் நான்கு மணியைப் போல ஊத்துக்குளி ஆர்.எஸ்.போகவேண்டுமே! அம்மா அப்பாவின் கட்டளை ஆயிற்றே! என்றே யோசித்தபடி இருந்தான். அம்மா, அப்பா பேச்சை ஒரு நாள் கூட மீறியவன் இல்லை ரமேஷ். டிகிரி படிக்கையில் அரியர்ஸ் வைப்பதைப் பார்த்தவர், போதும்டா படிப்பு உனக்கு. என்னோட கடைக்கு வா! என்றதும்சரிப்பாஎன்று சொல்லி விட்டான். ரமேஷின் அப்பா ஜீவாபாய் ஸ்கூல் அருகே நோட்புக், ஜெராக்ஸ் என்று கூடிய கடை வைத்திருந்தார் பத்து வருடங்களாக! ஒரு வருடம் அந்தக் கடையில் பொறுப்பாய் அமர்ந்திருந்தவனுக்கு மண்ணரையில் அதேபோல் கடை ஒன்றைப் போட்டு அமர வைத்து விட்டார். கூடவே பல மாடல்களில் செல்ஃபோன்களை இறக்கி விற்பனைக் கடையாக மாற்றி ஒரு பெண்ணை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். அவள் தான் செல்வி!
பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால்? அது தான் பற்றிவிட்டது என்கிறீர்களா? ஹயர் செகண்டரியோடு செல்வி படிப்பை முடித்துக் கொண்டவள்; மண்ணரை தான் சொந்த ஊரும். இவள் வீட்டுக்கும் ரமேஷின் வீட்டுக்கும் இரண்டே இரண்டு திருப்பங்கள் தான். செல்வியை வேலைக்கு வைத்தது இவன் ஏற்பாடல்ல! அப்பாவின் ஏற்பாடுதான். அப்பா என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று முனகுகிறீர்கள்! கடையும் வைத்துக் கொடுத்து, கடையில் ஒரு கண்மணியையும் போட்டு... அடடா! அடேங் கொன்னினானா! இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தவன் ரமேஷுக்கு லேமினேசனே போட்டு பத்திரப்படுத்தி விட்டான்.
சரி, யார் வலையை முதலில் விரித்து வீசியது? யார் போய் விழுந்து சிக்கியது என்கிறீர்களா? இருவருமே வலையைக் கையில் எடுத்து வீசிக் கொள்ளவேயில்லை! வாடிக்கையாளர்களின் முகம் கோணாமல் நடந்து கொள்ள செல்வி ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டாள். ரமேஷின் மிடுக்கான தோரணையும், அளவாய்ப் பேசும் குணத்தையும் கண்ட செல்வி உள்ளுக்குள் அவனை விரும்பத் தொடங்கினாள். ராக்காலக் கனவுகளில் ரமேஷ் கிச்சுக்கிச்சு மூட்டாமல், அடிக்கணக்கில் தள்ளி நின்றே காதலித்தான் கனவிலும் கூட. சே! கருப்பு வெள்ளையில் ஏன் பழைய படம் போல கனவு வருது? என்றே சலிப்படைந்தாள் செல்வி! ரமேஷிடம் இது பற்றிச் சொல்கையில் அவனுக்கும் அப்படித்தானாம். ஆக வலையை இருவருமே வீசி இருவருமே சிக்கிக் கொண்டார்கள்.
காதலனும் காதலியும் தினமும் பத்து மணி நேரம் பூங்கா, தியேட்டர் என்று எப்போதாவது சந்திக்காமல் எப்போதும் அருகில் இருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி கொடுத்து வைத்த காதலர்களாக ஒரு வருடத்தை ஓட்டி விட்டார்கள் இருவரும்! ஞாயிறு கடை விடுமுறை என்றாலும் தியேட்டர்கள் தான் திருப்பூரில் வீதிக்கு இரண்டு இருக்கிறதே! இதோ இன்றும் கூட தியேட்டரில் தான் இருக்கிறார்கள்.
ரமேஷ் தன்னுடைய பிரச்னையை, தியேட்டரினுள் சீட் தேடி அமர்ந்ததும் செல்வியிடம் சொல்லிவிட்டான். அவளுக்கு அது பிரச்னையாகவே படவில்லை. நம்பிக்கை நார் அவள் கையில் இருக்க உதிர்ந்த பூக்கள் வரிசையாய் வந்து ஒட்டிக் கொள்ளும் என்ற தைரியத்தில் சினிமாவில் ஆழ்ந்திருந்தாள். உனக்குப் பெண் பார்க்கப் போகிறோம். இன்று நான்கு மணிக்கு. அங்கே இங்கே என்று ஊர் சுற்ற போய் விடாதே!" காலையில் இவன் அப்பா நவீன ரக குண்டை இவனுக்கு எரிந்தார்.
சரிப்பா."
வேறு என்ன பேசப் போகிறான் அப்பாவை எதிர்த்து?

இது ஒரு பிரச்னையா? பெண்ணைப் பார்த்துட்டு பஜ்ஜி, சுவீட் சாப்பிட்டுட்டு காஃபி குடிச்சுட்டு வாங்க... பெண்ணைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாப் போச்சு!"
அது பாவம் செல்வி, பொண்ணா இருந்துட்டு இப்படிச் சொல்றியே! எல்லாம் இந்த அப்பாவால வந்தது! எனக்குக் கல்யாணம் பண்ணிவையுங்கன்னு நான் கேட்டேனா? தக்காளிப் பழமாட்டம் என் கடையில ஒரு பொண்ணைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டவரு யோசிக்க வேண்டாம்... தக்காளியை பையன் கொத்திக்குவான்னு!"
நான் வேணா நேரா உங்க வீடு வந்து உங்க அப்பாகிட்ட ரமேஷ் என்னோடு பாய்னு சொல்லவா?" என்றவளை பொய்யாய்க் கோபித்து, நானே பார்த்துக்கறேன் என்று சொல்லி வந்து விட்டான் ரமேஷ்.
இதோ -
பெண் வீட்டார் குடும்பம் கும்பிடு போட்டபடி வாங்க வாங்க" என்று அவர்கள் வீட்டு வாசலில் நின்று வரவேற்றது இவர்களை! ரமேஷின் மாமாவும், சித்தப்பா, சித்தியும் கூட வந்திருந்தார்கள். சொன்னால் சொன்ன மாதிரி டான்னு நாலு மணிக்கே வந்துட்டீங்க. வாங்க உட்காருங்க" பெரிதாய் மீசை வைத்திருந்தவர் ஹாலில் இருந்த நாற்காலிகளைக் கைகாட்டி இவர்களை அமர வைத்தார். பெண்ணுக்கு தாய் மாமாவாம்! மீசை வைத்த பொன்னம்பலம் போல இருந்தார். அவரே சகல விஷயங்களையும் சரளமாய்ப் பேசிக் கொண்டே இருந்தார். பெண்ணின் அப்பா அவர் பேசுவதற்கெல்லாம் பொம்மை போல தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
புரோக்கரு சொல்லி இருப்பாருங்களே... எங்க பொண்ணு ஊத்துக்குளி ஸ்கூல்ல டென்த் வரைக்கும்தான் படிச்சுதுங்க. அப்புறம் நம்ம மளிகைக்கடையை மூணு வருஷமாய் அதே ஏவாரம் பார்த்துக்குதுங்க! இதுக்கு அக்காவை சேலத்துல கட்டிக் குடுத்து பொண்ணு ஒண்ணு பையன் ஒண்ணுங்க! இன்னிக்குப் பொண்ணு பார்க்க வர்ற தகவலைச் சொன்னதும் நானும் வர்றேன்னு புடியாய் புடிச்சுதுங்க. அவ்ளோ தூரத்துல இருந்து ஏஞ்சாமி இதுக்குன்னு.... எல்லா காரியம் நல்லபடி நடந்தா மண்ணரை ஒரு எட்டு மறுபடி நாம ஒருக்கா சேர்ந்து போயிட்டு வருவோம்னு சொன்னேனுங்க..." என்று பேசியபடி இருந்தார்.
எடுத்துச் சாப்பிடுங்க" என்று சொல்லி பெண்ணின் அம்மா ஸ்வீட், மிக்சர் கொண்டு வந்து வைத்தார். நம்ம ஊரு தானே! கூச்சப்படாம எடுத்துச் சாப்புடுங்க மாப்பிள்ளை" என்று மீசைக்கார மாமா சொன்னதும், இவனும் கூச்சம் துறந்து ஸ்வீட் எடுத்துச் சாப்பிட்டான். காஃபி தம்ளர்களைத் தட்டில் தாங்கிக் கொண்டு பெண் வந்து ஒவ்வொருவர் முன்பாகவும் தட்டை நீட்ட, ஆளுக்கொரு தம்ளரை எடுத்துக் கொண்டார்கள். பொண்ணுப் பிள்ளை முகத்தில் ஏதாவது வெட்கம் தட்டுப்படுகிறதா என்று பார்த்தான். அப்படி இல்லாமல் சாதாரணமாய் இருந்தாள் அவள். அழகிலும் எந்தக் குறையும் இல்லை! இந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்பவன் கண்ணைத் தின்று விட்டு வந்தவனாகத்தான் இருப்பான்!
என் பையன் நான் சொல்றதைத்தான் கேட்பானுங்க. காலம் வேற மாறிப்போச்சு. எதுக்கும் தனியா ரெண்டு பேரும் பேசி அவங்க சம்மதத்தைச் சொல்லட்டுமே!" என்றார் இவன் அப்பா! அதற்கு யாரும் மறுப்பே சொல்லாததால் வீட்டு படிக்கட்டுகள் ஏறி மாடிக்கு இருவரும் வந்தார்கள். எண்ணி இரண்டு வார்த்தைகள்தான் அவர்கள் பேசினார்கள்!
என்னைப் பிடிக்கலைன்னு எங்கப்பாகிட்ட சொல்லிடுங்க" என்றான் ரமேஷ்.
ஏன் அப்படிச் சொல்லணும்? எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கே!" என்றாள் அவள்.
நான் ஒரு வருஷமாய் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அதுக்குள்ள திடீர்னு என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க! பேச முடியலை!"
சரி நடங்க" இருவரும் கீழே வந்து விட்டார்கள்! பெண்ணின் மாமாவுக்கு ஆச்சர்யம்! அதுக்குள்ள போன சுடியில பேசிட்டு வந்துட்டாங்களே!
சொல்லும்மா... என்ன ரெண்டு பேருக்கும் சம்மதம்தானே!" என்றார் மீசைக்கார மாமா!
எனக்கு வேண்டாம் மாமா இவரு.அவருக்கு ஒரு காதலி இருக்காளாம் திருப்பூர்ல. அதை அவரு அப்பா, அம்மா கிட்டகூடச் சொல்றதுக்கு தைரியம் இல்லாதவரைக் கட்டிக்கிட்டு நான் காலம்பூராவும் சிரமப்படணும்..." சொல்லிவிட்டு பொண்ணுப்பிள்ளை வீட்டுக்குள் போய்விட்டது!.
இன்று மண்ணரை பக்கம் யாரேனும் போனால் செல்ஃபோன் மாடல்களை வாடிக்கையாளர்களுக்குக் காட்டிக் கொண்டும், விளக்கிக் கொண்டும் நிற்கும் ரமேஷை பார்க்கலாம். கூடவே கல்லாவின் முன் சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி காதில் வாக்மேன் செருகிப் பாடலை ரசித்தபடி அமர்ந்திருக்கும் செல்வியையும் பார்க்கலாம்!



http://www.uyirmmai.com/Images/AuthorImages/va.mu.komu.jpg


 நன்றி - கல்கி , வா மு கோமு, புலவர் தருமி

DERAILED - 18 + ஹாலிவுட் க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 http://swesub.tv/uploads/images/83290.jpg

படத்தோட கதைக்கு போறதுக்கு முன்னால கதைக்கு சம்பந்தமான பிரபுதேவா பேட்டியில் ஒரு லைன் - நான் எனது மகனின் மறைவில் இருந்த துக்கத்தில் ஒரு ஆறுதலாக நயன் தாரா வந்தார், அதனால் தான் நெருக்கம் ஆச்சு..” நான் கேட்கிறேன், அதே சோகம் தானே ரம்லத்க்கும் இருந்திருக்கும்? அவரும் சோகத்தை பகிர்ந்துக்க ஒரு மடி தேடி இருந்தா நீங்க ஒத்துக்கிவீங்களா?சபலத்தால் வேலி தாண்டிட்டு அதுக்கு ஒரு வியாக்கியானம் வேற. இது செல்வராகவன் உட்பட எல்லாருக்கும் பொருந்தும்.. 


அட்வர்ட்டைசிங்க் கம்பெனில ஹீரோ ஒரு எக்ஸிகியூட்டிவ். மிடில் கிளாஸ் ஃபேமிலி.. மனைவி ஹவுஸ் ஒயிஃப்.. இவங்களுக்கு டீன் ஏஜ்ல ஒரு பொண்ணு.. சின்ன வயசுலயே சர்க்கரை நோயால பாதிக்கப்பட்டதால  அந்த பொண்ணு மேல கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல்.. ஏகப்பட்ட செலவு அவங்க பொண்ணோட மருத்துவத்துக்கு ஆகுது,.. 

ஹீரோவோட மனைவிக்கு எப்பவும் தன் பெண்ணைப்பற்றியே சிந்தனை.. ஹீரோவுக்கும்.. ஆனா ஹீரோ நைட் ஆனா  சி எம் ஆன கலைஞர் ஊழல் பண்றதுக்கு டக்னு ரெடி ஆகற மாதிரி கில்மாவுக்கு ட்ரை பண்றாரு.. மனைவிக்கு அது பிடிக்கலை.. தவிர்க்கறா..


இனித்தான் கதைல கிளு கிளு போர்ஷன்.. ஹீரோன்னா வழக்கமா கார்லயோ, பைக்லயோதானே சுத்தனும்? ஆனா இந்தக்கதைக்கு அந்த மாதிரி ஹீரோ தேவை இல்லை.. அதனால ஹீரோ ட்ரெயின்ல தான் போறார்.. ஆஃபீசை விட்டு வீட்டுக்கு வரும்போதும் ரயில் தான்/.. அங்கே தான்  இன்னொரு  ஜிகிடியை மீட் பண்றாரு.. பாப்பா ரொம்ப பாந்தமாத்தான் இருக்கு..தனியார் கம்ப்பெனில  ஃபைனான்ஸியல் அட்வைஸரா ஒர்க் பண்ணுது.. 

 எப்பவாவது ஒரு நல்ல ஃபிகரை பார்த்தாலே நம்மாளு விடமாட்டாங்க.. டெயிலி ரெகுலரா பார்த்தா சும்மா விடுவானா? 2 பேரும் பேசி பழகறாங்க. அடுத்த கட்டம்./. அதாவது ரொம்ப டீப்பாஆஆஆஆஅ பேசி பழகலாம்னு ஒரு ஹோட்டல்ல ரூம் போடறாங்க.. 


http://cdn102.iofferphoto.com/img/item/141/463/119/0ntdHefnaUpsFM1.jpg


 ரூமை மட்டும் தான் போடறாங்க.. மேட்டர் எதும்  நடக்கலை.. அதுக்குள்ள சிவ பூஜைல கரடி மாதிரி வில்லன் வந்துடறான்.. வந்தவன் ஹீரோவை கட்டிப்போட்டுட்டு ஹீரோயினை கதறக்கதற ரேப்பிடறான் ( நன்றி - தினத்தந்தி)

அவங்க 2 பேரும் புருஷன் பொண்டாட்டிதான், ஆனா அவனோட பொண்டாட்டி வேற, இவளோட புருஷன் வேற என்பதை வில்லன் தெரிஞ்சுக்கறான். கரும்பு தின்னுட்டு கூலி வாங்கற மாதிரி வில்லன் மேட்டரையும் முடிச்சுட்டு ஹீரோ கிட்டே 20,000 டாலர் பணம் கேட்கறான்.. 


ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் அவங்கவங்க வாழ்க்கைத்துணைக்கு இந்த மேட்டர் வெளில தெரிஞ்சுடக்கூடாதுன்னு அதுக்கு ஓக்கே சொல்லிடறாங்க , ஹீரோ பணத்தை ரெடி பண்ணி வில்லனுக்கு குடுத்துடறான்.. 

 கொஞ்ச நாள் கழிச்சு வில்லன் மறுபடி பணம் கேட்கறான்.. இந்த தடவை 100,,000  டாலர்.. அவ்ளவ் பணத்துக்கு எங்கே போக? ஹீரோ தன் மகளின் ட்ரீட்மெண்ட்டுக்காக வைத்திருக்கும் சேமிப்புப்பணத்தை எடுத்து தர்றான்.

 ஒரு கட்டத்துல ஹீரோ தன் மனைவி கிட்டே மேட்டரை எல்லாம் சொல்லிடறான்.. 

எல்லா களேபரமும் முடிஞ்ச பின் ஒரு டைம் ஹீரோ எதேச்சையா தன்னோட ரயிலில் வந்த மயிலை பார்க்கறான்.. அடங்கோ.. அவளும் அவளை ரேப் பண்ணானே வில்லன் அவங்க 2 பேரும் ஆல்ரெடி தம்பதிகள் போல.. எல்லாம் நாடகம்..

அவங்க பார்ட் டைம் ஜாப்பே இதான்.. அதாவது இந்த மாதிரி ஒரு இ வா ஆளை பிடிக்க வேண்டியது.. அவனுக்கு வலை வீச வேண்டியது.. பணம் பிடுங்குவது..
 இந்த மேட்டர் ஹீரோவுக்கு தெரிய வந்ததும் தான் விட்ட பணத்தை மீட்க நினைக்கறான்.. அவங்களை ஃபாலோ பண்றான்.. அதுக்குப்பிறகு
 நடக்கும் சில அதிரடி சம்பவங்கள் தான் படத்தோட பர பர நிமிஷங்கள்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcHuZVA6uK8LHfvCvBadQyJZTFhud0v30IUDpEUBylgUDD_UM1ICOP6qk9J70oAbf0F4kN1aVwoLaxW_6i3N9d2uwc4cPHgDO7ZPxI5o8MC4vsIjNztgZEbCC66xF0yNYjg1EjrujJG2Q/s1600/derailed~0.jpg


 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. கெட்டவங்களுக்குத்தான் கெடுதல் எல்லாம் வரும், நல்லவங்களுக்கு எதுவும் வராதுன்னு எங்காவது எழுதி வெச்சிருக்கா?



2. டெயிலி ஒரே டைம்ல ஆஃபீஸ்க்கு போறது, ரொட்டீன் ஒர்க் பண்றது இதெல்லாம் போர் அடிக்கலை?

 ஆமா.. ஆமா .. நான் கூட அதைப்பற்றி திங்க் பண்றது உண்டு.. வாழ்க்கைன்னா விறுவிறுப்பா இருக்கனும்,..




3.  கில்மா லேடி - வழக்கமா நான் யார் கிட்டேயும் பேச மாட்டேன்.. ஆனா உங்க கிட்டே பேசனும்னு தோணுச்சு


4. வேற ஒரு ஆள் கூட நான் இப்படி எல்லாம் பேசறேன்னு தெரிஞ்சா என் கணவர் என்னை கொன்னே போட்டுடுவார்.. 


 அப்போ ஏன் பேசறீங்க?

ம் ம் 


5. உங்க மனைவி சோ க்யூட்.. நீங்க ரொம்ப லக்கி.. நீங்க லக்கியா? அவங்க லக்கியா?  ( 2ம் இல்லைம்மா, யுவகிருஷ்ணா தான் ரொம்ப வருஷமா லக்கி )


6. உங்க  கண்ல ஒரு மென் சோகம் எப்பவும் இருந்துட்டே இருக்கேன்னு நான் யோசிச்சேன்.. இப்போத்தான் புரியுது.. 



7. ஆம்பளைங்கன்னாலே பொதுவா முரட்டுக்குணம் தான், அப்பா, அண்ணன், கணவன்,. இப்படி. ஆனா நீங்க பேசுனாக்கூட கேட்க மாட்டேங்குது.. அவ்ளவ் சாஃப்ட்டா இருக்கீங்க.. 


8.  ஹாய்.. எப்படி இருக்கீங்க?


 மீட் பண்ணி ஒன் ஹவர் தான் ஆகுது,, அதுக்குள்ளே ஃபோன் போட்டு நலம் விசாரிக்கறீங்களே.. 


 ஈவ்னிங்க் மீட் பண்ணலாமா? 


ட்ரெயின்ல தானே?


 ம்ஹூம், வெளீல எங்காவது.. 

 லேட் ஆகிடாது?

 நான் சமாளிச்சுக்குவேன்.. நீங்க?


9.  வீட்ல என்ன சொன்னீங்க? 

 அழகான பொண்ணோட வெளில போய்ட்டு வர்றேன்னு.. 


 நானும் அதே தான் சொன்னேன்.. ஆனா என் கணவர் அதை ஏத்துக்கிட்டார். உங்க மனைவி நிஜமா அதை ஏத்துக்கிட்டாங்களா?


ஹி ஹி ஹி 


 10. நம்ம 2 பேருக்குள்ளே என்ன நடக்குது?

நத்திங்க்.. 2 பேரும் ஹோட்டல் போய் சாப்பிடறோம்.. 

 தென்?

  காஃபி ஆர் டீ குடிக்கறோம்.. 

 அப்புறம்?


------


http://www.hotflick.net/flicks/2005_Derailed/fhd005DRL_Jennifer_Aniston_025.jpg


11.. ஹீரோ - இப்போ வேணாம்.. 

 கில்மா லேடி - ஆனா எனக்கு நீங்க வேணும்.. எப்பவும் வேணும்னு கேட்க மாட்டேன்..  ஆனா நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீங்க வேணும்.. 


12. எனக்கு இனிமே நீங்க தான் ஹீரோ.. இனிமே சில்வஸ்டர் ஸ்டோலன் படம் எல்லாம் பார்க்க மாட்டேன்.. 


13. நாளைக்கு நாம 2 பேரும் வருத்தப்படற மாதிரி இன்னைக்கு ஏதும் செய்ய வேண்டாம். 


14.. ஹலோ.. டாக்ஸி வருமா? 

 இங்கே லொக்கேஷன் பிராப்ளம்.. நீங்க வேற வண்டி பாருங்க.. 



15. உங்க மனசு வேற, என் மனசு வேற .. உங்களை அளவுக்கதிகமாவே காதலிச்சுட்டேன்.. 


16.  மேரேஜ்க்கு முன்னாடியே உங்க கிட்டே சொல்லி இருக்கேன். வேற ஒரு பொண்ணு கூட நீங்க நெருக்கமா இருந்தா ஐ வில் லீவ் யூன்னு.. 

17. என் பர்சனல் லைஃப்ல உங்களை ஓவரா நம்பிட்டேன்..  உங்களுக்கு சந்தோஷம் தானே..?


 18. ஒரு பிரச்சனைன்னு வர்றப்போ உயிரைக்குடுப்பேன்னியே?இதானா?


19. நீ ஆம்பளை.. அதான் அவ பின்னாடியே போய்ட்டே,.. பைத்தியமா உன் மேல இருக்காளா? அப்டினு சொன்னாளா? நான் எத்தனை டைம் சொன்னேன்.. ஐ மேட் ஆன் யூ.. என.. 

 நான் மனசறிஞ்சு செஞ்ச தப்புக்கு மன்னிப்பு  இல்லை.. கேட்கவும் மாட்டேன்.. 


20. உங்க கூட இருந்த வாழ்க்கை ரொம்ப நல்லா இருந்ததுன்னு 40 வருஷம் கழிச்சும் நீ சொல்வே.. அந்த மாதிரி ஒரு லைஃபை நான் வாழ்ந்து காட்டறேன்.. 


21.. ஹூம். ஒரு நரகத்துல இருந்து இன்னொரு நரகம்.. 


 http://i124.photobucket.com/albums/p26/tortured_clown/melissa_george_4.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. 20,000 டாலர் பணத்தை கேட்டாலும், ஒரு லட்சம் டாலர் கேட்டாலும் தர தயாரா இருக்கற ஹீரோ ஏன் எலக்ட்ரிக் ட்ரெயின்ல ஆஃபீஸ் போறான்?


2. ஹீரோயின் எங்கே ஒர்க் பண்றான்னு ஒரு டைம்  கூட செக் பண்ண ஹீரோ முயற்சிக்கவே இல்லையே?


3. பொதுவா இந்த மாதிரி சீட்டிங்க்கையே தொழிலா இருக்கறவங்க அப்பப்ப இடம் மாறிடுவாங்க.. உதாரணமா எங்க ஊரு நித்யானந்தாவை எடுத்துக்குங்க, பெங்களூர், மதுரைன்னு ரவுண்ட்ஸ்ல இருப்பார்.. ஆனா படத்தோட வில்லனும், வில்லியும் அது பற்றி கவலை இல்லாம எனமோ கவர்மெண்ட் ஜாப்ல இருக்கற மாதிரி அசால்ட்டா இருக்காங்க.. ஆல்ரெடி அவங்களால ஏமாற்றப்பட்டவங்க அவங்களை பார்க்க வேண்டி வரும்னு தெரியாதா?


4. வில்லன் ஹீரோ முன்னால ஹீரோயினை ஏன் ரேப் பண்ணனும்? அதனால என்ன யூஸ்? ஹீரோ வில்லியை கில்மா போஸ்ல பார்த்ததை தவிர? வில்லனோட நோக்கம் ஹீரோ கிட்டே பணம் பிடுங்குவதுதான்.. அதுக்கு தன் மனைவியை ஏன் அடுத்தவங்க முன்னால ரேப்பனும்? ( அப்பத்தான் நாடகத்துல நம்பகத்தன்மை வருமோ?)


5. ஹீரோ வில்லியை ஃபாலோ பண்ணி மறுபடி அந்த ஹோட்டலுக்கு போறப்ப  பலியாடா மாட்டிக்கிட்ட அந்த புது ஆளை ரிவால்வரை காட்டி போடான்னா போயிடரான்.. அவன் கிட்டே எதுக்கு இல்லாத ராமாயணம் எல்லாம் பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கனும்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKYFkcLtCefHIbz8JDd1yUSFHaTE_bDUuIFLA2U9rjpKmKfzoY54NebBePSuq3XvjdT4z2637oFRushp0dYPS7kWIA03QitFmN_uZR02O3hrtWbR6aMBif4Wiq4NYefv9K4sfJgI6NLv8/s320/pachii.jpg



இதே படத்தை அழகாக சுட்டு பச்சைக்கிளி முத்துச்சரம் ஆக்கிய கவுதமிடம் சில கேள்விகள்


1. குமுதம் பேட்டில “ எனக்கு ஒரு புது நாட் கிடைச்சிருக்கு,, என் கேரியர்ல வித்தியாசமான படமா அது அமையும்னு புரூடா விட்டீங்களே..  ஹாலிவுட் படத்தோட இன்ஸ்பிரேஷன்னு சொன்னா குடும்ப கவுரவம் குறைஞ்சுடுமா?


2. படத்தோட டைட்டில்ல வசனம்-உங்க பேரு போட்டா போதாதா? கதை திரைக்கதைன்னு அநியாயமா உங்க பேரை போட்டிருக்கீங்களே?


3. சேரன் அல்லது பிரசன்னா மாதிரி சாஃப்ட் ஹீரோ பண்ணி இருந்தா  நல்லா எடுபட்டிருக்கும் கதையில் சரத்குமார் மாதிரி ஆக்‌ஷன் கம் பாடி பில்டரை போட்டதால அவர் வில்லன் கிட்டே அடி வாங்கற சீன்ல எல்லாம் ஆடியன்ஸ் கத்தறாங்களே..


http://www.thedipaar.com/pictures/resize_20110531182346.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. உருப்படியா தமிழ் இயக்குநர் செஞ்ச ஒரே விஷயம் அட்டகாசமான மெலோடி சாங்க் ரெடி பண்ணுனதுதான்.. உன் சிரிப்பினில்..  பாட்டு கலக்கல் ஹிட்டு..


2. ஆண்ட்ரியாவின் அமைதியான நடிப்பும், ஜோதிகாவின் மாறுபட்ட இரு வேறு கோணங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் அவர் காட்டும் முக பாவனைகள் மொழி, சந்திரமுகி வரிசையில் சேர்க்கும்.
 சி.பி கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம்..
படத்தோட திரைக்கதை ஆசிரியர்கள் - Stuart Beattie (screenplay), James Siegel (novel)
டைரக்டர்- Mikael Håfström
நடிப்பு - Clive Owen, Jennifer Aniston and Vincent Cassel  

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள்- விமர்சனம் (8.7..2012)


நாளைய இயக்குநர் நிகழ்ச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் படைப்பளிகளை ஊக்குவிக்கும் ஒரு தரமான நிகழ்ச்சி.. காதலில் சொதப்புவது எப்படி? குறும்படம் பெரும்படம் ஆகி வசூல் தரும் படம் ஆன பிறகு இந்த நிகழ்ச்சிக்கான மதிப்பு உயர்கிறது . வாரா வாரம் ஞாயிறு காலை 10.30  டூ 11.30 கலைஞர் டி வியில் காணலாம்.. 


இன்னைக்கு ஆர்த்தி பெருசா பூப்போட்ட நைட்டி அணிஞ்சு வந்தாங்க.. ஜட்ஜஸ் 2 பேர் கிட்டேயும் கேள்வி கேட்டாங்க.. அதுக்கு அவங்க பதில்// 


ஆர்த்தி - சார், சமீபமா நீங்க என்ன படம் பண்ணிட்டு இருக்கிங்க? அது பற்றி சொல்லுங்க


 பிரபு சாலமன் -  நான் எடுத்து வரும் கும்கி படம் யானைகளை மையமா எடுத்து சொல்லப்படும்  டாக்குமெண்ட்ரி என நிறைய பேரு நினைக்கறாங்க, ஆனா அது உண்மை அல்ல,கதைக்கான பின்னணி யானை.. மற்றபடி ஒரு காதல் கதை,.. யானைப்பாகனின் கதைன்னும் சொல்லலாம்.. சிவாஜியின் பேரன்க்காக இந்த கதை எடுக்கறேன். 


விக்ரமன் - இளமை நாட்கள்னு ஒரு  படம்  பாதி எடுத்தாச்சு, இப்போ ஸ்டாப் பண்ணிட்டோம்.. புதுமுகங்களை வெச்சு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன்


1. குறும்பட இயக்குநர் பெயர் - குகன் , குறும்படத்தின் பெயர் - H2O ( தண்ணீர் )


இது அக்மார்க் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை.. 2050ல கதை நடக்குது..  ஒரு பாலைவனம்.. அதுல ஒரு ஆள் பயணம் பண்றாரு. நடராஜா சர்வீஸ் தான்.. இடுப்புல வாட்டர் கேன், முதுகுல ட்ராவலிங்க் பேக்.. போற வழில 3 பேர் செத்தோ, மயக்கமாவோ கிடக்கறாங்க.. அவங்களை குனிஞ்சு செக் பண்றப்போ 3 பேர்ல ஒருத்தன் அவன் கிட்டே இருக்கும் வாட்டர் கேனை பிடுங்க பார்க்கறான். சண்டைல ஹீரோ அவனை கொன்னே போட்டுடறான்.. தண்ணீருக்காக கேரளா,கர்நாடகா, தமிழ் நாடு அடிச்சுக்குதே அதுதான் குறியீடு போல.. எதிர்காலத்துல உலகப்போர் வந்தா அது தண்ணீருக்ககவோ, பெட்ரோலுக்காகவோதான் இருக்கும்னு யாரோ சொன்னாங்க. .


ஹீரோ கழுத்துல காயத்தோட தனது பயணத்தை தொடர்றான்..  சாகற நிலைமை.. தனது கடைசி மூச்சு விடறப்போ  ஒரு செடிக்கு அந்த தண்ணீரை ஊற்றிட்டு சாகறான்.. 


விக்ரமன் - என்வயரோமெண்ட்ல அக்கறை வேணும், பொல்யூஷன் வராம பார்த்துக்கனும்னு சொல்ல வந்திருக்கீங்க.. குட்.. ஓப்பனிங்க் ஷாட்ல 1000 ரூபாய் நோட்டால வியர்வையை துடைக்கற சீன் கிளாசிக்.. அவனுக்கு பணம் ஒரு பொருட்டல்ல.. ஆனா தண்ணீர் தான் அத்தியாவசியத்தேவைன்னு சொல்ல வந்தது நல்லா வந்திருக்கு.. பதியுது..  அந்த  இடத்துல இசை சூப்பர்.. ஒரே ஒரு கேரக்டரை வெச்சு தண்ணீர் பிரச்சனையை பேஸ் பண்ணி படம் பண்ணி இருக்கீங்க.. குட்..


பிரபு சாலமன் - ஹீரோவோட சிந்தனை பூரா  தண்ணீர்ல ஊறி கிடக்கு என்பதை அவன் சாகற சீரியஸ் நிலைல கூட ஸ்விம்மிங்க் பூல்ல விழுந்த நினைவை காட்டுவதுல இருந்து உணர்த்திடறீங்க.. . எதிர் காலத்துல இப்படித்தான் நடக்கப்போகுதுன்னு சொல்ல வந்திருக்கீங்க.  நல்லாருக்கு


சி.பி - முன்னுக்குப்பின் முரணான பாத்திரப்படைப்பா  ஹீரோவை காட்டறீங்க.. ஒரு 100 மிலி தண்ணீருக்காக கொலை செய்யும் அளவுக்கு வக்கிரமான , குணம் கொண்ட ஹீரோ தன் உயிர் போறப்பக்கூட தன் தாகத்துக்கு தண்ணீரை குடிக்காம செடிக்கு தண்ணீர் ஊற்றுவது சூட் ஆகலையே.. சக உயிரை ஆறறிவு மனிதனை காப்பாற்றாமல் செடிக்கு ஊற்றுவது ஏன்?இயற்கையை பாதுகாக்க என்றால் மனிதனும் இயற்கையின் படைப்பு தானே?

இந்தப்படம் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு..

மன்மோகன் ஆட்சியில் எவ்வளவு ஊழல் சாதனைகள் நடந்துருக்கு.. அதெல்லாம் சாதனை இல்லையா..


2. குறும்பட இயக்குநர் பெயர் - சந்ரு , குறும்படத்தின் பெயர் -ஆருயிரே

இந்தப்படத்தோட கதை , திரைக்கதை எல்லாம் நம்ம ஆளு அதிஷாவுடையது,, புதிய தலைமுறை உதவி ஆசிரியர்.. பிரபல ட்விட்டர்.. பிரபல பதிவர் என பன்முகம் கொண்டவர்..

சமீபத்தில் நடந்த  போலீசின் எண்கவுண்ட்டர் பற்றிய படம்..அதாவ்து  பேங்க் கொள்ளை நடந்தப்ப  இவங்க தான் பேங்க் கொள்ளையர்ஸ்னு வட மாநில ஆட்களை போட்டுத்தள்ளுச்சே போலீஸ் அதை கிண்டல் செய்யும் ப்டம்.. ஆனா காமெடி  கதை அல்ல. சீரியஸ்..

ஓப்பனிங்க் ஷாட்ல  லவ்வர்ஸ் ஜோடியை காட்ட்டறாங்க.. வழக்கம் போல ஊரை விட்டு ஓடி வந்தவங்க.. காதலன் தன் நண்பனை நம்பி வந்துடறான்.  ஆனா அவன் இவனை கண்டுக்கலை. செல் ஃபோன்ல நோ ரெஸ் பான்ஸ்.. கடைசில எப்படியோ கண்டு பிடிச்சு அந்த நண்பனோட ரூமுக்கு போறான்.. தனியாத்தான்.. காதலியை அவன் சாப்பிட்ட மெஸ்ல வெயிட் பண்ண வெச்சு இவன் மட்டும் போறான்.  ஆனா அந்த ரூம்ல அவனோட நண்பன் இல்லை.. சரின்னு அந்த ரூமை விட்டு வெளீல வர்றப்போ போலீஸ் கும்பல் அவனை , அந்த ரூம்ல இருக்கறவங்களை எந்த விசாரணையும் இல்லாம  போட்டுத்தள்ளிடுது..

 ஹீரோயின் அங்கே ஹீரோவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா.. அவ்லவ் தான் படம்



மனம் கவர்ந்த வசனங்கள்


1. போலீஸ் நம்மளை ட்ரேஸ் அவுட் பண்ணிட்டா என்ன பண்றதுனு செல் ஃபோனைக்கூட எடுத்துட்டு வராம வந்துட்டோம்..


2. எனக்கு பயமா இருக்கு.. நம்மை நிம்மதியா வாழ விட மாட்டாங்க..


3. ஃபிரண்ட் செல் நாட் ரீச்சபிள்.. அவனை நம்பி இங்கே வந்திருக்கக்கூடாதோ? எதுக்காக செல்லை ஆஃப் பண்ணிட்டான்னு தெரியலையே?


விக்ரமன் - காதல் பட இன்ஸ்பிரேஷன் அங்கங்கே தெரியுது,.,. ஹீரோ ஃபிரண்ட் கிட்டே பேசறப்போ காதல் சுகுமாறன் மாதிரியே என்னடா மச்சான் என்ரெல்லாம் கூப்பிடாம இருந்திருக்கலாம்.. காதலை நினைவு படுத்துது..



பிரபு சாலமன் -போலீஸ் ஸ்டோரிக்கான மூடு படத்துல மிச்சிங்க்.. அவங்க திடீர்னு வர்றாங்க, சுடறாங்க போயிடறாங்க.. படத்துல அவங்க வரப்போறாங்க என்பதற்கு ஒரு லீடு குடுத்திருக்கலாம்.. அது ஆடியன்ஸிடம் ஒரு டெம்ப்போ ஏத்தி இருக்கும்.. யூ ஸி.. சோகம் வேற , பாதிப்பு வேற.. வர்ற ஆடியன்சை சோகத்தோட அனுப்பக்கூடாது.. ஆனா நம்ம படம் அவங்க மனசை பாதிக்கனும்.. இதுதான் ஃபார்முலா..


சி.பி - போலீஸ் ஸ்டோரி கேட்டகிரில படம் எடுத்ததால கதையோட ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஸ்டார்ட் ஆகி இருந்தா நல்லார்ந்திருக்கும்.. ஹிட்சாக்கின் தியரிப்படி சஸ்பென்ஸ் என்பது திடீர்னு ஒரு எதிர்பாராத சம்பவத்தை காட்டி பார்வையாளனை திகைக்க வைப்பது அல்ல.. ஒரு வெடி குண்டு வெடிக்கப்போகுதுன்னு  ஆடியன்ஸ்க்கு சொல்லி அதை எப்போ எப்படி வெடிக்காம காப்பாத்தறாங்க என டெம்ப்போ ஏத்துவதே சஸ்பென்ஸ்க்கான இலக்கணம்.. போலீஸை ஓப்பனிங்க்லயே காட்டி இருந்தா இன்னும் கிராண்டா வந்திருக்கும்..

 படத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேர் நடிப்பும் எதார்த்தம்.. பெஸ்ட் ஆக்டிங்க் அவார்டு 2 பேருக்கும் சமமா பகிந்து கொடுத்தாங்க.. ( அதை எப்படி 2 பேரும் ஷேர் பண்ணிக்குவாங்க? ஆளுக்கு ஒரு வாரமா? )

இந்தப்படம் பற்றி ட்விட்டர்ல நடந்த கலந்துரையாடல்


கி.கோ - ஆருயிரே' குறும்படம் யாராச்சும் பார்த்தீங்களா? இந்த அளவுக்கா நம்மூர்ல படைப்பு சுதந்திரம் இருக்குது ~ நம்பவே முடியல!


சி பி - டி வி க்கு சென்சார் இல்லை, அதுவும் இல்லாம போலி என்கவுண்ட்டர் பற்றி படம் எடுத்து இப்படி போடுவாங்கன்னு ஜெ அரசு எதிர்பார்த்து இருக்காது


கி கோ -ஆமாங்க.. ஆனாலும்.. சந்துருவின் கற்பனை கொஞ்சம் அதிகமா படுது.. சாத்தியக் கூறுகளையும் மறுப்பதற்கில்லை தான்..






3. குறும்பட இயக்குநர் பெயர் - மித்ரன் , குறும்படத்தின் பெயர் -பொல்லா வினையோன்




ஊஞ்சல்ல ஒரு பொண்ணு உக்காந்து ஆடிட்டு இருக்கு.. பேப்பர்ல ஒரு பறக்கும் தட்டை வரைஞ்சு அதை பார்த்துட்டு இருக்கு.. திடீர்னு ஒரு பறக்கும் தட்டு வந்து இறங்கி அந்த பாப்பாவை கூட்டிட்டு போயிட பாக்குது..


பாப்பாவோட மம்மி ஷாப்பிங்க் போறப்போ அந்த வேற்றுக்கிரக வாசிகள் அவளை அப்ரோச் பண்றாங்க.. இந்த உலகத்தை அழிச்சுட்டு புதுசா ஒரு உலகத்தை உருவாக்கப்போறோம்கறாங்க. கடைசில அந்த லேடி தன் குழந்தையை அவங்களோட அனுப்பி வைக்குது..

 எந்த ஊர்ல அப்படி ஒரு அம்மா குழந்தையை அனுப்பி வைக்குமோ தெரியலை.. சாமார்த்தியமா கதைக்களன் நியூ ஜெர்சிலன்னு காட்டிடறாங்க.. ஆனா எந்த ஒரு தேசத்திலும் பெற்ற அம்மாவே தன் குழந்தையை அப்படி அனுப்பி வைக்க மாட்டாங்கன்னுதான் தோணுது..

 வழக்கமா உள்ளத்தை தொடும் சமூக கருத்தை சொல்லும் மித்ரன் இந்த டைம் சரியான திரைக்கதை அமைக்காம சொதப்பிட்டார்னு தோணுது.. .



பிரபு சாலமன்  - புது உலகத்தை உருவாக்க நினைப்பது ஓக்கே.. ஆனா அதுக்காக ஏன் பழசை அழிக்கனும்?கான்செப்ட் ஈஸ் நாட் ஓக்கே.



 விக்ரமன்  - SOME TIMES CREATIONS WILL FAIL ,BUT THE CREATORS NEVER FAIL - சில சமயம் சில படைப்புகள் தோல்வி அடையலாம், ஆனால் படைப்பளிகள் தோற்பதில்லை


சி.பி - இவரோட படைப்புகள் எல்லாமே ஹை கிளாஸ் ஆடியன்ஸுக்கானவை.. மணிரத்னம், கவுதம் மாதிரி,. இன்னும் எளிமையா சொல்லலாம்


 பெஸ்ட் சி ஜி ஒர்க்குக்கான விருது கிடைச்சுது..





சயின்ஸ் ஃபிக்ஸன் மாதிரி அனுஷ்கா ஃபிக்ஸன் ஸ்டோரி!!! ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ்)

1.நாம் பேசும் ஒவ்வொரு உண்மைக்கும் ஒரு முடி உதிர்கிறது,அதனால்தான் ஆண்கள் வழுக்கையுடன், பெண்கள் நீண்ட கூந்தலுடன் காட்சிஅளிக்கிறார்கள் # சும்மா



-------------------------------------



2. ஸார்,எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு,சம்பளத்தை உயர்த்துங்க. 
ஸாரி,கம்பெனிக்கு வெளியில் நடக்கும் விபத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்புஅல்ல. 
----------------------------


3. தமிழச்சி தங்கபாண்டியன் விழாக்களில் கலந்துகொள்கையில்18பற்கள் தெரிய சிரிக்கிறார்,24 வளையல்கள் குலுங்க கை அசைக்கிறார். 
-----------------------



4. வாக்கிங் போகும் டைமான அதிகாலை 4 மணிக்கு பில்லா2 பட ரசிகர் ஷோ,ஆஃபீஸ்க்கு கட் அடிக்க தேவைஇல்லை,சென்னைவாசிகளுக்கு 
----------------------------



5. நித்தி-மக்களிடம் விழிப்புணர்ச்சி வரபாடுபட்டேன்,எந்தலேடி ஆசிரமத்துக்கு வந்தாலும் தூங்க விடமாட்டேன் 
---------------------------------







6. நரகத்திலிருந்து மீட்டு சொர்க்கத்தை காட்டியவர் கீதாஞ்சலி! - செல்வராகவன்!! # இரண்டாவது சொர்க்கம் மீண்டும் நரகம் ஆகும், அப்போ 3வது?
---------------------------



7. சொர்க்கத்தை காட்டினார் கீதாஞ்சலி! - செல்வராகவன்!! # காங்கேயம் வந்தீங்கன்னா சொர்க்கம் தியேட்டரை நாங்க கூட காட்டி இருப்போம்
--------------------------



8. மும்பையில் ஸ்ரீதேவி வீட்டில் குடியேறுகிறார் பிரபுதேவா! # வாடகையை பணமா கொடுப்பாரா?
--------------------


9. மின் வாரியத்தில் ஃபீஸ் கட்டையை  பிடுங்குபவர்களை பார்த்து கேட்க முடியாத கேள்வி - நீ என்ன பெரிய புடுங்கியா?
-----------------------


10. செயல்படாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்: அமெரிக்க "டைம்' பத்திரிகை கணிப்பு! # மோதிரக்கையால குட்டு வாங்கறதுங்கறது இதானா?
---------------------





 11. கைல சொம்போட இருந்தா நாட்டாமை, ஏதாவது வம்போட இருந்தா ஜெமோ, எப்பவும் சிம்போட இருந்தா நயன் தாரா 




--------------------


12. ராமநாராயணன் - பாம்பு, பூரான், பல்லி, ஓணான் எல்லாம் வெச்சு படம் எடுத்தோம்,ஈயை மிஸ் பண்ணிட்டமே? # நான் ஈ



-------------------------


13. மேலாதிக்க விபரங்கள் = MALE  ஆதிக்க விபரங்கள்?



-----------------

14. தியேட்டர்ல ஈ ஓட்டிட்டு இருக்கோம்னு பெருமையா சொல்லிக்கற காலம் வந்துடுச்சு # நான் ஈ



--------------------------


15. பசங்களோட மனசு குஷ்பூஇட்லி மாதிரி, எல்லா பக்கமும் வெள்ளையா, சுத்தமா இருக்கும், பொண்ணுங்க மனசு ரவா ரோஸ்ட் போல,மறு பக்கம் கறுப்பா இருக்கும்


---------------------



16. நிருபர் - உங்க படத்துல ஹீரோவை 30வது நிமிஷத்துலயே கொலை பண்ணீட்டீங்களே, ஏன்? 
டைரக்டர் - படத்தோட கதையை கொலை பண்ணிடக்கூடாதுன்னுதான்



----------------------------

17. ஹார்ட் அட்டாக் ஆண்களைத்தான் அதிகம் பாதிக்குதாம், பொண்ணுங்களுக்குத்தான் ஹார்ட்டே இல்லையே?



------------------------


18. திமுக மீது வெறுப்பு ஏன் ?கம்யூனிஸ்ட்டுகளுக்கு கருனாநிதி கேள்வி !! # புனிதமான ரத்தச்சிவப்பு கலரை கறுப்புக்குப்பக்கத்துல வெச்சுட்டீங்களாம்


------------------------


19. மை நேம் ஈஸ் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட், என் பேரு பாட்ஷா, மாணிக் பாட்ஷா, பில்லா , டேவிட் பில்லா # பரிணாம வளர்ச்சி ஆஃப் பஞ்ச் டயலாக்ஸ்




------------------------------


20. அனுஷ்காவை படத்துல ஃபிக்ஸ் பண்ணிட்டு அப்புறம் கதை ரெடி பண்ணுனா அது அனுஷ்கா ஃபிக்ஸன் ஸ்டோரி ஆகிடுமா? 



-------------------------------------