Monday, June 18, 2012

நித்யானந்தா மதுரை ஆதீனம் ஆகிவிட்டதால் ஒரு அபாய அறிவிப்பு ( ஜோக்ஸ்))

பெருமாளும் நாயுடு பெரியாரும் நாயுடு....அடடா...
1.ஆட்சியரை விடுக்க மாவோயிஸ்ட்டுகளுக்கு வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும் - பூஷன் # அதானே, விடுவிச்சா பத்ம பூஷன் அவார்டு தர்றதாவா சொல்ல முடியும்?


--------------------------

2.குமுதம்னா என்ன?னு தெரியாதவங்களைக்கூட மன்னிச்சிடலாம். குமுதா யார்னு தெரியலைன்னா அவங்களூக்கு மன்னிப்போ இன்செண்ட்டிவ்வோ கிடையாது :)


--------------------------

3  விடியவிடியவல்லவன் படம் பார்த்துட்டு விடிஞ்சதும் சிம்பு நயன் தாரா 2 பேரும்ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ்தானா?ன்னு கேட்டமாதிரி இருக்கு..


---------------------------

4. ரியாஸ் -ஒரு பொண்ணு டிப்பன் பாக்ஸ்ல கொள்ளு கொண்டு வந்து சாப்டுட்டு இருந்துச்சு. # அடியே ”கொள்ளு”றே...  உடம்பை குறைக்கறே?


-----------------------------------


5. பெண்கள் யாராவது கேள்வி கேட்டா உடனே பதில் சொல்லிடக்கூடாது, வெட்டாஃபீஸ்னு கண்டு பிடிச்சுடுவாங்க, 10 நிமிஷம் கழிச்சுத்தான் சொல்லனும்


--------------------------------------



அக்ஷயத்ருதி "ஸ்பெசல் நெக்லஸ்"... ஹஹஹா
6. சில ஃபிகர்களின் ஓவர் மேக்கப்பை பார்த்தால் எதுக்கு இந்த கூப்பாடு?ன்னு தோணுது

--------------------------

7. ஜோடிக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சா? இல்லையா?ன்னு கேட்டா தமிழன் டக்னு சொல்லிடுவான், கெமிஸ்ட்ரி எக்ஸாம்ல மட்டும் ஜஸ்ட் பாஸ்தான் அவ்வ்

--------------------------------

8. எங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் லிப்ஸ்டிக் பைத்தியம், அது கலைஞ்சிடக்கூடாதுன்னு நோ லஞ்ச், ஆனா 3 லிட்டர்  ஜக்குல ஆப்பிள் ஜூஸ் குடிக்கும்


---------------------------

9.மழையும் சம்சாரமும் 1... குளு குளுன்னு இருக்கும்னு நினைப்போம், ஆனா இடியுடன் சத்தம் வரும்


-----------------------------------

10. டாக்டர், சுக்கு கஷாயம் குடிச்சா காய்ச்சல் சரி ஆகிடுமா?


அஸ்கு புஸ்கு நான் சொல்ல மாட்டேன், அப்புறம் மாத்திரை வாங்க மாட்டீங்க


-------------------------------


ஹரி மேனனின் கிளிக்கில்


11.தனது பல தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சில பெண்கள் காதலிக்கிறார்கள், தனது ஒரே தேவையை நிறைவேற்றிக்கொள்ள ஆண்கள் உதவுவது போல் நடிக்கிறார்கள்


-------------------------------------


12. நிருபர் - உங்க தலையாய பிரச்சனை என்ன?

கலைஞர் - என் தலை சாய்வதற்குள் என் வாரிசுகள் மூவரும்  ஒரு முறை சி எம் ஆகனும்


---------------------------------

13. ஒரு உலக மகா அயோக்கியனை பார்க்க வேண்டுமென்றால், ஒரு பையனை  ஒரு இளம்பெண் அறையில் தனிமையில் தங்க வைக்கவேண்டும்.! # எ கீ


------------------------------

14. புதுக்கோட்டை இடைத்தேர்தல் திமுக முடிவெடுக்கவில்லை-ஸ்டாலின் # அழையா விருந்தாளி வீட்டு விசேஷத்துக்குப்போய் அவமானப்படாமல் இருப்பதே நல்லது


---------------------------------

15. உலகின் படு போரான விஷயம்  2 பெண்கள் பேசிக் கொள்வதாக தான் இருக்கும். # இன்னைக்கு என்ன குழம்பு? ஐ இந்த  சேலை எங்கே எடுத்தே? ETC


--------------------------



16. பெண்கள் "மாடர்ன்" ஆணை சைட் அடிக்கிறாங்க, "மட ஆணை  ( மடையனை)கல்யாணம் பன்றாங்க!! # எ கீ


------------------------------

17.விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை.WIT  அடிப்பவர்கள் துட்டு சம்பாதிப்பதில்லை # பத்திரிக்கை ஜோக்ஸ்க்கு சன்மானமே அனுப்பறதில்லை, அவ்வ்


-----------------------------

18. பெண்ணுக்கு குஷி ஏற்படுத்துபவை

1. இன்னைக்கு சமைக்காதே, ஹோட்டல் போலாம்

2. 50 % டிஸ்கவுண்ட் இருக்கு எங்க கடைல

3 .  ஐ லவ் யூ 


--------------------------------------

19. அப்பட்டமாக உண்மை பேசுபவர்களை விட அரிதாரம் பூசி பொய் பேசுபவர்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள், நம்புகிறார்கள்


-----------------------------

20. நீ அருகில் இருக்கும்போது மட்டும் தான் என்னால் புன்னகைக்க முடிகிறது, நீ அந்தப்பக்கம் போனதும் உன்னை நினச்சு சிரிப்பா சிரிப்பேன் ஹி ஹி 


-------------------------------







Sunday, June 17, 2012

Piranha 3DD (2012) - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 +

http://www.joblo.com/images_arrow_reviews/piranha3dd-review.jpg 

பிரணா அப்டினு ஒரு மீன் இனம்.. நம்ம ஊரு கெளுத்தி மீன் சைஸ்ல தான் இருக்கு.. ஆனா சுறா மீன் மாதிரி கோரைப்பற்கள்.. மனிதனை உயிர் போகும் வரை கடித்துக்கொல்லும் வலிமை படைத்தவை.. இந்த மீன் வகை ஒரு ஏரில இருக்கு...  அங்கே செத்துப்போன ஒரு எருமையை  மாமிசத்துக்கு ஆசைப்பட்டு 2 பேரு ஏரில இறங்கி அதை அபேஸ் பண்ணப்பார்க்கும்போது அந்த மீன்கள் அவங்க 2 பேரையும் தாக்கி கொன்னுடுது.. இதுதான் படத்தோட ஓப்பனிங்க் ஷாட்.. 


அப்புறம் 2 லவ் ஜோடிங்க.. ஒரு லவ் ஜோடி  சுற்று வட்டாரத்துல யாருமே இல்லைங்கற தைரியத்துல பூனம் பாண்டே போஸ்ல குளிக்கறாங்க.. இன்னும் 10 நிமிஷம் ஆகி இருந்தா சீன் பார்த்திருக்கலாம். அதுக்குள்ள இந்த மீன்க்கு பொறுக்கலை.. கடிச்சிடுது.. சீன் கட்.,ஆள் அவுட்.. 


 இன்னொரு லவ் ஜோடி  கடல்ல இறங்கறாங்க.... அவங்களுக்கும் இதே அனுபவம். ஆனா ஹீரோயின் எப்படியோ எஸ் ஆகி ஓடி வந்துடறா,...இந்த மீன்கள் இருக்கற ஏரிக்குப்பக்கத்துல  ஒரு வாட்டர் தீம் பார்க் இருக்கு.. பார்க்ல அடுத்த நாள் ஷோ நடக்கப்போகுது... அந்த தீம் பர்க்குக்கு தண்ணீர் அந்த ஏரில இருந்துதான் எடுக்கனும்.. 

 ஹீரோயின் போய் தீம் பார்க் ஓனர்ட்ட எச்சரிக்கை பண்றா.. அவன் கேட்கலை.. கோடிக்கணக்குல செலவு பண்ணி இருக்கேன்.. இதை எல்லாம் நம்ப மாட்டேன்.. எப்பவும் போல் திட்டமிட்டபடி ஷோ நடக்கும்கறான்..


அடுத்த நாள் ஷோ நடக்குது.. மீன் எல்லாம் வந்து கடிக்குது.. ஒரே ரனகளம்.. எல்லாம் அங்கே இங்கே ஓடறாங்க..  எத்தனை பேரு சாகறாங்க? யார் எல்லாம் எஸ் ஆகறாங்க..  மீன் எல்லாம் என்ன ஆச்சு? என்பதே மீதி கதை..

 மொத்தப்படமே 83 நிமிஷம் தான்.. படம் பூரா கேர்ள்ஸ் எல்லாம் பே வாட்ச் ல வர்ற மாதிரி டூ பீஸ்.. கண்ணுக்கு குளிர்ச்சி.. மத்தபடி படத்துல சொல்லிக்க பெருசா எதுவும் இல்லை.. 


http://wa3.cdn.3news.co.nz/3news/AM/2012/3/6/245377/piranha3DD.jpg?width=460


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஏய்.. உனக்கு எப்படி இவ்ளவ் பணம் கிடைச்சது?

 எல்லாம் உன் பாக்கெட் மணி தான்



2. என்னடி? பசங்களோட பழகனும்னாலே பால் குடிக்கத்தெரியாத பூனை போல் பம்மறாளே?


3. யோவ்.. இங்கே தான் யாருமே இல்லையே.. நாம நம்ம டிரஸ்சை கழட்டிப்போட்டுட்டு குளிக்கலாமா?

யா யா கரும்பு தின்னக்கூலியா?நான் ரெடி.. நீ ரெடியா?


 ஆனா தேவை இல்லாத வேலை எதுவும்  பண்னக்கூடாது.. ஓக்கேவா.. 

 டீல்.. எல்லாமே தேவையான வேலைகள் தான் ஹி ஹி 


4. பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே.. மேரேஜ்க்கு முன்னால தப்பு பண்றது எவ்ளவ் பெரிய தப்புன்னு எங்களுக்கும் தெரியும்..ப்ளீஸ் மன்னிச்சுடு ஹி ஹி .. வா  வா தப்பு பண்ணலாம்..


5. ஏய்.. தண்ணிக்குள்ளேகுதின்னா ஏன் பம்மறே? பயமா?


 பயம் எல்லாம் இல்லை.. எனக்கு நீச்சல் தெரியாது/. 


6.  நாம பேசித்தீர்க்க வேண்டிய விஷயம் இன்னும் நிறையா இருக்கு.. வா ஹி ஹி 

7. எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. சினிமால தான் நான் ஹீரோ.. நிஜ வாழ்க்கைல நான் ஜீரோ எதுவும் சாகசம் எல்லாம் பண்ண முடியாது.. ( பயணம் படத்துல இதே டயலாக்கை நாங்க கேட்டாச்சு )


8. தண்ணில இருக்கறவங்க எல்லாரும் வெளீல வந்துட்டா அந்த மீனுங்க எல்லாம் எதுவும் செய்ய முடியாது.. 


 ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா? இவ்லவ் கூட்டத்தை எப்படி 5 நிமிஷத்துல வெளீயேத்த முடியும்?


9.  என்ன , எனக்கு இப்படி மூச்சு வாங்குது? வயசாகிடுச்சோ?

http://www.thehindu.com/multimedia/dynamic/01115/10CP_PIRANHA_3DD_1115814f.jpg


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1. பாத்டப்பில் லேடி தண்ணீரில் உடம்பை ஊறபோட்டு கண்ணை மூடிப்படுத்திருக்கும்போது.. பைப் வழியாக மீன்கள் வந்து ஒவ்வொண்ணா விழுந்து கடிக்கும் சீன்.. அதெப்பிடி பைப்ல இருந்து மீன் வர முடியும்?னு லாஜிக் கேள்வி கேட்கலாம்னு பார்த்தா அது கனவு சீன்.. ஆஹா.. பல்பு


2.  படத்துல ரெண்டு மூணு லவ் ஜோடிங்க ஜாலியா இருக்கற மாதிரி சீனுக்கான லீடு வருது.. ஆனா சீன் இல்லை.. எஸ் ஜே சூர்யா பாணில சொன்னா இருக்கு ஆனா இல்லை.. ஆனா செம கிளு கிளு


3. காரில் சீண்டல்களில் இருக்கும் ஜோடி அப்படியே காரோடு ஏரியில் முழுகுவதும் அதைத்தொடர்ந்து மீனிடம் மாட்டிக்கொள்ளும் சீனும் பர பர  என பற்றிக்கொள்ளும் சீன்கள்


4. கடைசி 20 நிமிடங்களில்  அடல்ட்ஸ் POOL  -ல் ( ஸ்விம்மிங்க் பூலில் அடல்ட்ஸ் மட்டும் ஜோடியாக குளிக்க இடம் பிரிச்சு வைப்பது தான் அடல்ட் பூல் )எல்லா கேர்ள்ச்சையும் டூ பீஸ் டிரஸ்சில் ஓட விடுவது.. 


5. பிரணா ரக மீனின் சுபாவத்தை காட்ட ஒரே தொட்டியில் ரெண்டு அறைகள்  உருவாக்கி ஒரு அறையில் மீனுக்கு இரையாக ஒரு தவளையை விட்டு, இன்னொரு அறையில் மீனை விட்டு வேடிக்கை பார்க்க  மீன் ஆக்ரோஷத்துடன் இரும்பு தகடை கிழித்து வரும் காட்சி.. பின்னணி இசை மிரட்டல் 

http://www.slashingthrough.com/images/news/piranha-3dd.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயினுக்கு பிரணா ரக மீன்களின் அபாயம் பற்றி தெரிய வந்ததும் ஏன் போலீஸ்ல சொல்லலை? அதுக்கான முயற்சியும் பண்ணலை?


2. தீம்ஸ் பார்க்கின் ஓனர் பிரணா ரக மீன் பற்றி நம்பலை.. ஹீரோயின் அவனுக்கு நம்பிக்கை ஏற்படுத்த மீனை காடி இருக்கலாமே? அட்லீஸ்ட் ஏதாவது ஒரு தீனியை தண்ணீல எறிஞ்சா அது சாப்பிட வரும்.. காட்டி இருக்கலாம்.. 


3. அவ்ளவ் சின்ன மீன் பல ஆட்களை கடிச்சுக்குதறி எலும்புக்கூடு ஆக்குவதெல்லாம் நம்பவே முடியலை.. சுறா மீனால் செய்யக்கூடியவை, எரா மீன் சைஸில் இருக்கறது செய்யுதே?அதுவும் குறுகிய கால அவகாசத்தில் 


4. இந்தப்படம் ஒரு திகில் படம்.. ஆனா ரன களத்துலயும் ஒரு கிளுகிளுப்பு வேண்டி இருக்கு..  கவர்ச்சிக்காட்சிகள் வலிய திணிக்கப்பட்ட்டவை.. பெரிசா ரசிக்க முடியல... 


5. க்ளைமாக்ஸ்ல  ஒரே ஒரு  பாம் போட்டு எல்லா மீனையும் அழிப்பது டுபாக்கூர் ஐடியா.. மக்களும் இருக்காங்க.. அவங்க பாதுகாப்பு பற்றி கவலைபட வேணாமா?

6. பொதுவா மீன்கள் சூடு தாங்காது.. தீம் பார்க்கில் உள்ள தண்ணீரை ஹீட்டரின் உதவியோடு சூடாக்கினால் மக்களும் சூடு தாங்காம டக்னு வெளியேறி இருப்பாங்க.. மீன்களும்  செத்திருக்கும்.. 


7. படம் முடியறப்போ ஒரு திருப்தியே வர்லை... க்ளைமாக்ஸை இன்னும் பிரம்மாண்டமா பண்ணி இருந்திருக்கலாம்


http://sim.in.com/8f64dfb6812c020c903bcadfd27348b7.jpg?p=0



 சி.பி கமெண்ட் -  படத்தை ஈரோடு தேவி அபிராமில பார்த்தேன்.TO C FULL MOVIEW http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9zd3wxyoByY


டிஸ்கி  - தியேட்டர்ல படம் பார்க்காதீங்க.. ஒரு சீன் கூட இல்லை.. இந்த லிங்க்ல பாருங்க  , ஏகப்பட்ட சீன்ஸ் இருக்கு.. நண்பர் பெத்துசாமிக்கு நன்றி!

கலைஞர் சாடல் -கலாம் - கலகம்..... கழகம் - கிரகம் - கலைஞர் சாடல்

1.ஆன்லைன் ஆப்பு என்பது டைம் லைனில் நாம் கடலை போடும்போது வாழ்க்கைத்துணையிடம் மாட்டிக்கொள்வதே!


---------------------------------


2. சினேகா - பிரசன்னா மேரேஜை விஜய் டிவில பார்க்கறப்போ சினேகாவின் சிரிப்பில் கூடவே எங்கோ இருக்கும் நாக் ரவியின் சிரிப்பும் என் கண்ணுக்கு...



-------------------------------------


3. கோபத்துல அமலா பால் பொங்குறப்போ அவர் முகத்துல தண்ணீர் தெளிச்சா அடங்கிடுவாரா?



------------------------------


4. விஸ்வரூபம் ட்ரெய்லரை பார்த்தாலே கதி கலங்குது, போட்ட காசு திரும்ப வருமா? - தயாரிப்பாளர், டிஸ்ட்டிபியூட்டர்ஸ்



-----------------------------------------


5. சகுனி ட்ரெய்லர் எனக்குக்கற்றுக்கொடுத்த பாடம் ஹீரோ படத்துல நல்ல முடிச்சவுக்கியா வர்றார்



-------------------------------

6. விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடிச்சிட்டு இருந்த காலம் போய் அடுத்த வாரம் கார்த்தி, அஜித் ரசிகர்கள்.........



------------------------------


7. அஜித்தை கிண்டல் பண்ணுனா அவர்  மாதிரி நடந்து காட்டுன்னு சொல்றாங்க, நல்ல வேளை பூனம் பாண்டேவை கிண்டல் பண்ணலை ;-)



-------------------------------


8. ஜட்ஜ் - ஜெயில்ல ஏதாவது வசதிக்குறைவு இருந்தா சொல்லலாம், 


 நித்தி - லேடி வார்டனை கண்ல காட்ட மாடேன்றாங்க 


----------------------------------

9. பில்லா 2 ரிலீஸ் அப்போ தல ரிலாக்ஸா இருப்பார்.. படம் ஹிட் ஆகிடுமோன்னு விஜய் தான் டென்ஷனா இருப்பார் # அவதானிப்பு 



-----------------------

10. கமல் - வெற்றி, தோல்வியைப்பற்றி நான் என்றும் கவலைப்பட்டதே இல்லை # முதல் போடறவன் தானே கவலைப்படனும்,உங்களுக்கென்ன? 



-----------------------


எந்திரிங்க அய்யா ஊரு வந்துருச்சு.... நீங்கதான் இந்த நாட்டின் சனாதிபதியாம்.... வேடிக்கையா இருக்குல... உங்களைப் பார்த்த சிரிப்பு சிரிப்பா வருது.....:-)


இப்படித்தான் இந்தியாவின் நிலையுமோ.....


11 . ஹாலிவுட் ஸ்பைடர் மேன் கூட  பில்லா 2 மோதுது ,தல ரசிகர்கள் ஜம்பமா சொல்லிக்கலாம் “ எங்க ரேஞ்சே வேற “



--------------------------------


12. அகத்தின் அழகு முக நூலில்  தெரியும்



----------------------------------


13. அஜித் ரசிகர்கள் பேச்சிலர்சா இருந்தாலும் தைரியமா வீடு கொடுக்கலாம்,யாரும் பெண்ணைக்கூட்டிட்டு “ஓடிப்” போக மாட்டாங்க ,நடந்துதான் போவாங்க 



-------------------------

14. பேசாம ஜேம்ஸ்பாண்ட் டை ஜனாதிபதி ஆக்கிடலாம், உலகத்தை சுத்திட்டே இருப்பார் 



----------------------------


15. விஜய் நடிக்கும் படத்தை செகண்ட் பார்ட்டா எடுக்க முடியாது, ஏன்னா அவர் நடிக்கற படமே ரீமேக் -செகண்ட்ஸ்தானே?



------------------------------



16. சின்ன வயசுல எனக்கு கிலாக்காய்னா பிடிக்கும், மிளகாய்ப்பொடி தொட்டு சாப்பிட்டா. அடடா., எப்போ மானாட மயிலாட கலாக்கா வந்தாங்களோ....உவ்வே


-----------------------------

17. ஸ்கூட்டி, பைக் ஓட்டறதுல லேடீஸ் கில்லாடியா இருக்கலாம், ஆனா லேடீஸையே கலாய்ச்சு ஓட்டறதுல நாங்கதான்யா  கேடீஸ்.. ;-)



-----------------------------


18.சென்னையில் 40 பெண்களை திருமண மோசடி செய்தவர் கைது # நாற்பதும் நமதேன்னு அந்த வெண்ணை நினைச்சிக்கிச்சு போல



--------------------------------


19. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை,ஆண்டுக்கு 30முறை விரதம் இருக்கிறேன் -சானாகான் # ஓஹோ, அப்போ மீதி 335 நாட்கள்ல என்ன செய்வீங்க?


-------------------------------


20. கலாம் என்றாலே கலகம் தான் - கலைஞர் #  கழகம் என்றாலே கிரகம் தான்,எங்களுக்கும் எதுகை மோனை வரும்



-----------------------------


Ilaya Raaja shared தமிழச்சி (Tamizachi)'s photo.
இந்தியாவின் 'பண வீக்கம்', 'பணப் பெருக்கம்'




Saturday, June 16, 2012

மறுபடியும் ஒரு காதல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitAUSb_bg4OW3XrH9_1ea7fNbQIOnxjOikUJrgTktnDTMjnA8saMxfFLHT4BggXPz__wBB2Vr8wTtUOk6ll4qCY3WbH-XsNgdxCvkiIyZZdR3x3fVO9H5J8ARWdgAckNOhp3-6Nk5xh1T_/s1600/marupadiyum-oru-kadhal-movie-posters-01.jpg

ஹீரோ இந்தியாவுல டாக்டர், ஹீரோயின் லண்டன்ல டாக்டர்.. 2 டாக்டர்ஸும் பேஷண்ட்டை கவனிக்காம ரேடியோ மிர்ச்சில, எஃப் எம் ல பாட்டுக்கேட்கறாங்க.. அதுல கேட்கற கேள்விக்கு பதிலை விமர்சனம் மாதிரி எழுதி அனுப்பறாங்க.. என்ன  ஒரு மெடிக்கல் மிராக்கிள் பாருங்க. 2 பேரும் முதல் பரிசுக்கு செலக்ட் ஆகறாங்க.. ஆனானப்பட்ட சன் டி வி யே ஏதாவது போட்டி வெச்சா 500 ரூபா செலவுல கிஷ்கிந்தா கூட்டிட்டு போறாங்க.. ஆனா இவங்க 2 பேரையும் லண்டன்ல ஒரு விழாவுக்கு கூப்பிடறாங்க..

2 பேரும் காதலர் தினம் படத்துல வர்ற மாதிரி மெயில் சேட்டிங்க்ல ஃபிரண்ட்ஸ் ஆகறாங்க.. காதல் கோட்டை மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டது இல்லை.. ஹீரோயின் அப்பா இந்தியா போகச்சொல்றாரு.. இந்த கேன ஹீரோயின் என்ன பண்ணுது.. ஹீரோ அனுப்பின கிரீட்டிங்க்ஸ், லெட்டர்ஸ்ட் எல்லாத்தையும் கிழிச்சுப்போட்டுட்டு அவனைப்பற்றின தகவல் அடங்கின பென் டிரைவை மட்டும் எடுத்துட்டு இந்தியா போகுது..

பில்லா படத்துல வர்ற மாதிரி அந்த பென் டிரைவை ஹீரோயின் தொலைச்சுடுது.. 2 பேரும் சந்திக்க முடியாத சூழல்.. எதேச்சையா ஹீரோ,ஹீரோயின் குடும்பம் 2ம் கோயில்ல சந்திச்சு நட்பாகறாங்க.. சம்பந்தம் பேசி முடிக்கறாங்க.. பெற்றோர்கள் வற்புறுத்தலால் 2 பேரும் மேரேஜ் பண்ணிக்கறாங்க.. ஆனா மற்றபடி கில்மா ஏதும் நடக்கலை.. 2 பேர் மனசிலயும் தங்கள் காதல் பற்றின ஏக்கம்,.,. பரஸ்பரம் காதலிச்ச நபரைத்தான் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்னு 2 பேருக்கும் தெரியலை.. இதுக்கு மேல என்ன ஆகுது என்பதுதான் மிச்ச சொச்ச கதை..

அகத்தியனின் காதல் கோட்டை, காதல் தேவதை, கதிரின் காதலர் தினம் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு கதையை டைரக்டர் ரெடி பண்ணி இருக்காரு.. காதலர்கள் பார்க்கற அளவு இருக்கு .

ஹீரோ அனிருத் ஆள் டீசண்ட்டா தான் இருக்கார்.. இவர் சாதாரணமா இருந்தா காலேஜ் ஸ்டூடண்ட், ஒரு பவர் கிளாஸ் போட்டா டாக்டர், ஒரு சரக்கு கிளாஸ்ட் அடிச்சா லவ் ஃபெயிலியர் ராமானுஜம்.. அவ்லவ் தான்.. ரொம்ப ஈஸி.. எதிர் காலம் உண்டு

ஹீரோயின் ஜோஸ்னா.. பேரே ஏதோ நாய்குட்டி மாதிரி இருந்தாலும் பாப்பா குதிரைக்குட்டி மாதிரி ஜைஜாண்டிக்கா இருக்கு.. பூப்போட்ட பாவாடையை மிடி மாதிரி போட்டுக்கிட்டு வெள்ளைக்கலர் பனியன் போட்டுக்கிட்டு அது ஸ்லோமோஷன்ல ஓடி வர்றப்போ அடடா.. துள்ளுவதோ இளமை.... பாட்டு மட்டும் தான் போடலை.. அழுகைக்காட்சிகள், காதல் காட்சிகளில் கன கச்சிதம் .. மாடர்ன் டிரஸ்ஸில் அசத்தும் அவர் சுமங்கலி பூஜை அன்று அக்மார்க் தமிழ்ப்பொண்ணாக பட்டுச்சேலையில் அசத்துவது அழகு.. கண்ணுக்குள் நிக்குது.

சுமன் இதுல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.. ஹீரோயின் அப்பாவாக அடக்கி வாசித்து இருக்கிறார்.. படத்தில் தனி காமெடி டிராக்காக வடிவேல் காமெடி ஓடுது.. ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் வந்த 17 ஜோக்ஸ்களை எடுத்து கொஞ்சம் பட்டி டிங்கரிங்க் பண்ணுனா காமெடி டிராக் ரெடி.. சில சிரிக்க வைக்குது.. பல கடுப்படிக்குது.. 

 http://kollywoodz.com/wp-content/uploads/2012/06/Marupadiyum-Oru-Kadhal-Movie-Stills04.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ, ஹீரோயின் செல்கஷன் கன கச்சிதம் அவர்களிடம் வேலை வாங்கியது எல்லாம் ரைட்.. ஒரு புது முக ஹீரோயினை எந்த அளவுக்கு எக்ஸ்போஸ் பண்ண வேண்டுமோ அந்த அளவு எக்ஸ்போஸ் பண்ணி யூஸ் பண்ணிக்கிட்டது சபாஷ்.. .

2. சலக்கு சலக்கு சிங்காரி குத்தாட்ட பாட்டு இசை, நடன அமைப்பு செம.. சி செண்ட்டர் ரசிகர்களை எழுந்து ஆடவைக்கும்..

3. படத்தில் வடிவேல் காமெடி ஒட்டாமல் இருந்தாலும் போஸ்டர்களில் , விளம்பரங்களில் மார்க்கெட்டிங்க்கு ரொம்ப யூஸ் ஆகுது..
http://haihoi.com/Channels/cine_gallery/marupadiyum_oru_kadhal_movie_latest_stills_13779_S_170.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1. ஹீரோ மருத்துவத்துறைல சாதனை செஞ்சதுக்கான பாராட்டு விழாவுல ஒரு நாட்டின் ஜனாதிபதி அப்படித்தான் டிராமா ஆர்ட்டிஸ்ட் மாதிரி கையை ஆட்டி ஆட்டி உணர்ச்சிவசப்படு பேசுவாரா?

2. கைதட்டும் ஆடியன்ஸ் ஏன் தலைக்கு மேலே கையை தூக்கி கைதட்டறாங்க? சினிமாவில் மட்டும் தான் அப்படி கிளாப்ஸ் பண்றாங்க.. எல்லா விழாக்கள்லயும் இயல்பா கையை மடுல வெச்சுத்தான் தட்றாங்க..

3. படத்தோட மெயின் KNOT ஹீரோயின் ஹீரோ பற்றின தகவல்களை மறப்பது, அந்த பென் டிரைவை தொலைப்பது.. நான் கேட்கறேன் உணத்தியா 2 பேரும் சேட் பண்ணாங்களே . அந்த மெயில் ஐடிக்கு மெயில் பண்ணி கேட்கலாமே?

4. ஒரு சீன்ல ஹீரோயின் ஃபிரண்ட்ஸ் கிட்டே தன் மெயில் பாஸ்வோர்டை மறந்துட்டதா ரொம்ப வருத்தப்பட்டு சொல்லுது.. ஏன்? பாஸ்வோர்டை மறந்துட்டா அதை ரெக்கவர் பண்ண ஒரு ஆப்ஷன் இருக்கே? அதை க்ளிக் பண்ணி மாத்திக்கலாமே?

5. ரேடியோவுல கேள்வி கேட்டதுக்கு 2 பேரும் வாசகர் கடிதம் மாதிரி எழுதறாங்க.. விமர்சனம்னும் சொல்லலாம்.. ஆனா அதை உங்க கவிதை சூப்பர்னு தொகுப்பாளர் அடிக்கடி சொல்றார். அது என்ன கவிதைப்போட்டியா?

6. ரேடியோ  ஆஃபீஸ்க்கு ஃபோன் போட்டு ஹீரோ அட்ரஸ் கேட்டா கொடுத்துட்டு போறாங்க.. ஏன் பாப்பா பம்முது?

7. காதலிக்கறவங்க கடைசி வரை காதலன் கொடுத்த க்ரீட்டிங்க் கார்டை சண்டை வந்தா தவிர மற்ர படி கிழிச்சு எல்லாம் போட மாட்டாங்க.. அந்த லூஸ் ஹீரோயின் ஏன் கிழிக்கனும்?

8. ஹீரோ ஹீரோயின் ஃபோட்டோவை ஆல்ரெடி பார்த்து இருக்கார்.. ஆனா கண்ணை மட்டும் மறைச்ச வாக்கு போஸ்ல.. ஹீரோயினை நேர்ல சந்திக்கறப்போ “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?”ன்னு கேட்கறார்.. அதுவே “நீங்க ரேடியோ புரோகிராம்ல வந்த கவிதாயினியா?”ன்னு கேட்டிருந்தா அப்பவே படம் முடிஞ்சிருக்கும்.. . 


http://www.cinepicks.com/tamil/gallery/marupadiyum-oru-kadhal/marupadiyum-oru-kadhal-3113.jpg


9.ஒரு சீன்ல ஹீரோயின் தோழிகள் அட்வைஸ்படி ஹீரோ பேர் உள்ல 182 பேரை ஃபில்டர் பண்ணி நெட் மூலம் ஒரே க்ளிக்ல எஸ் எம் எஸ் அனுப்பற மாதிரி சீன் வருது.... ஆனா வே டூ எஸ் எம் எஸ் உட்பட எல்லா எஸ் எம் எஸ் சேனல்லயும் குரூப் மெசேஜ் ஒரு டைம்ல 25 பேருக்குத்தான் அனுப்ப முடியும்.. அப்புரம் 25 பேருக்கு அனுப்பலாம்.. ஒரே க்ளிக்ல 182 பேருக்கெல்லாம் அனுப்பவே முடியாது

10. ரேடியோ புரோகிராமர்க்கு ஒரு டைம் ஹீரோயின் ஹீரோ பற்றி தகவல் கேட்க 8 டைம் ஃபோன் பண்றாரு.. அவர் எடுக்கலை.. ஓக்கே , என்ன மேட்டர்னு ஒரு எஸ் எம் எஸ் பண்ணி இருக்கலமே?

11. ஹீரோ ஒரு டாக்டர் என்பது ஓக்கே.. ஆனா அவர் ஜனாதிபதிக்கு, அவர் குழந்தைக்கு சிகிச்சை அளிச்சு காப்பாத்தறது, அவர் அவார்டு வாங்கறது மட்டும் படத்துல 3 ரீல் சாப்பிடுது.. காதல் கதைல இந்த ஹீரோ பில்டப் எதுக்கு? அப்படி அவசியம்னா 1 ரீல்ல அதை சுருக்கி இருக்கலாம்..

12.  இந்தக்காலத்துல 5 வருஷம் லவ் பண்ணி அட்டாச்மெண்ட்டா இருக்கறவங்களே ஈசியா பிரியறாங்க.. ஆனா முன்னே பின்னே பார்க்காத ஜஸ்ட் 3 நாள் சேட்டிங்க்ல ஃபிரண்ட்ஸ் ஆகற பெண்ணுக்காக ஹீரோ சரக்கு அடிச்சு நடு ரோட்டில் தேவதாஸ் ஆவது எல்லாம் ஓவரோ ஓவர்.. அதுவும் ஒரு டாக்டர்......

13.. வடிவேல் காமெடி ரிலாக்ஸ்க்காக இருந்தாலும் படத்தோட சீரியஸ்சை அது பாதிக்குது.. உதாரணமா ஹீரோ ஹீரோயின் லவ் எபிசோடு சுவராஸ்யமா போறப்போ டக்னு வடிவேல் காமெடி வருது.. அடுத்த ஷாட்ல லவ்.. ஆடியன்ஸ் பேலன்ஸ் பண்ண ரொம்ப சிரமப்படுவாங்க..

14. ஹீரோ மேல ஒரு தலைக்காதல் வெச்சு போதைல அவன் பேரை சொல்லிக்கிட்டே வேற ஒருத்தனை கிஸ் பண்ற அந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் பாப்பா படத்துக்கு எதுக்கு சமப்ந்தமே இல்லாம..ஹீரோ ராமர்னு காட்டி பில்டப் ஏத்தவா?

15. திருமணத்துக்கு முன் பால் உறவு பற்றி அந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் கேர்ள் கருத்து கேட்பது, பின் அவரே அதே மெடிக்கல் காலேஜ்ல சேருவது இதெல்லாமே  கதைக்கு தேவை இல்லாத காட்சிகள்

http://nikhilscinema.com/wp-content/uploads/2012/06/Marupadiyum-Oru-Kadhal-Movie-Press-Meet-Photos-10.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஏமாத்துற பொண்ணுங்க இருக்கற வரைக்கும்  எல்லா டாஸ்மாக்கும் எப்பவும் ஃபுல்லாத்தான் இருக்கும்..

2. ப்ரீ மேரிட்டல் செக்ஸ் பற்றி உங்க கருத்து என்ன? 


 அது தப்பே இல்லைங்க.. 

 இது உங்க சொந்தக்கருத்தா? 

 ம்ஹூம், குஷ்பூ சொன்னது .. ( குஷ்பூ  என்ற லைன் சென்சார் கட் )


3. விபச்சாரத்தை தொழிலா அங்கீகரிச்ச நாட்டை விட கற்பு , கலாச்சாரம்னு பேசிட்டு இருக்கற நம்ம நாட்ல தான் எய்ட்ஸ் அதிகமா பரவி இருக்கு..  ஏன்னா அது பற்றிய விழிப்புணர்வு நம்ம கிட்டே இல்லை.. 

4. பிஸ்னெஸ்ல புலியா இருக்கறவங்க கூட செண்ட்டிமெண்ட்ஸ்ல குழந்தையா இருப்பாங்க.. 


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/marupadiyum-oru-kadhal-02/wmarks/marupadiyum-oru-kadhal-0244.jpg


வடிவேல் காமெடி வசனங்கள்


1. டாக்டர். எனக்கு ட்ரீட்மெண்ட் தர்றப்ப ராவா சாப்பிடக்கூடாதுன்னு நீங்க தானே சொன்னீங்க.. அதனால தான் தண்ணி மிக்ஸ் பண்ணி சாப்பிடறேன்.. 

 சண்டாளப்பயலே... ஹாஸ்பிடலை கணநேரத்துல ஒயின்ஷாப் ஆக்கிட்டு பேச்சைப்பாரு.. 


2.. டாக்டர் டாக்டர்.. என் பொண்ணை பாம்பு போட்டுடுச்சு


 அடப்பாவி.. மாப்ளை என்ன பண்ணிட்டு இருந்தார்?


அவ்வ்வ்வ்வ் 


3. டாக்டர். உங்க ட்ரீட்மெண்ட் செம டேஸ்ட்..

 அடிப்பாவி.. பாம்பு உன் உதட்டுல கொத்துனதால உன் உதட்டை உறிஞ்சுனேன்.. அது உனக்கு டேஸ்ட்டா?


4. ஒவ்வொரு கேசையும் டீல் பண்றப்போ எல்லாம்  ஒரு சிக்கல்ல மாட்டிக்கறேனே?


5. மாமா.. பூ வாங்கிக்குடுங்க

 முன்னே பின்னே மேரேஜ் ஆகி இருந்தா இந்த டெக்னிக்கெல்லாம் தெரிஞ்சுருக்கும்.. எனக்கு ஏதாவது கப்பி ஃபிகர் மாட்டும்னு நினைச்சேன்.. ஆனா பப்பி ஃபிகர் மாட்டும்னு எதிர்பார்க்கலை


6. உங்க பர்ஃபார்மென்ஸ் ரொம்ப ஓவர்.. பிணத்தை படுக்க வெச்சு பிச்சை எடுக்கற மாதிரியே இருக்கு


7. யோவ் டாக்டரு.. மரியாதையா என் பொணத்தை திருப்பிக்கொடுத்துடுய்யா././ 


 சொன்னா நம்புங்க மேடம்.. பொணம் எந்திரிச்சு ஓடிடுச்சு


8. டாக்டர்.. பல் பிடுங்க எவ்ளவ்?


 50 ரூபான்னு நினைக்கிறேன்

என்னது? நினைக்கிறீங்களா?


9. அந்த பெனாயிலை எடு..

 என்னது?

 சாரி டெட்டாலை எடு.. 

 அம்மா.. 

 இருக்காங்களா?

 இல்லை..

 அப்புறம் ஏன் அவங்களை கூப்பிடறே.. ?


10. டாக்டர்.. என் நல்ல பல்லை ஏன் பிடுங்குனிங்க?


 சொத்தைப்பல்லை பிடுங்குனதுக்கு நீ கொடுத்த ஃபீஸ்க்கு மீதி சில்லறை இல்லை.. ஹி ஹி 


11.  டேய் டாக்டர்.. 


ஒண்ணு டாக்டர்னு கூப்பிடு, அல்லது டேய்னு கூப்பிடு.. ரெண்டையும் மிக்ஸ் பண்ணி கூப்பிட்டா கன்ஃபியூஸ் ஆகுதில்லை?


12. அல்சர்னு வந்த பேஷண்ட்டை படுக்க வெச்சு ஹல்மேட்டை வயிற்றில் வெச்சு தெச்சுட்டீங்க.. இப்போ நான் என்ன செய்ய?


 ஓஹோ , அதான் தையல் போடறப்போ பிரிஞ்சு பிரிஞ்சு வந்ததா?


13. டேய்.. நான் பேஷண்ட்டை பார்க்க வந்தவன்.. என்னை படுக்க வெச்சு உடம்பு பூரா கீறல் போட்டு எல்லா டெஸ்ட்டையும் எடுத்து உடம்பையே ரணகளம் ஆக்கிட்டீங்களெடா.. 

http://1.bp.blogspot.com/-8pJ_41qrbq0/T8aN2eMmprI/AAAAAAAABIE/AQYsCn3tO9A/s1600/Josna+Latest+Stills+(4).jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி.பி கமெண்ட் - வடிவேல் காமெடி க்ளிப்பிங்ஸ்ஸை சிரிப்பொலியிலும், படத்தை சன் டி வில போடும்போதும் பார்த்துக்கலாம்..


 ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்



http://2.bp.blogspot.com/-FcujuHtYUTo/T8aN3RgYtMI/AAAAAAAABIM/jsPkss9fjZk/s1600/Josna+Latest+Stills+(5).jpg

டிஸ்கி -

முரட்டுக்காளை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/06/blog-post_2487.html

இனிமையான தாம்பத்யத்தின் தாத்பர்யம் என்ன?

தமிழ் நாடுல பவரே இல்லை பல்ப்பு மட்டும் எதுக்கு .. நீ தொடசும் செஞ்சு மாடிக என் ராசாத்தி அப்படியே ஜெய அம்மாக்கும் ஒண்டு அனுப்பி விடு என் செல்லம்

1.உனக்காக எதுவுமே செய்யாதவருக்காக நீ என்ன செய்தாய் என்பதை வைத்துத்தான் உன் குணம் தீர்மானிக்கப்படுகிறது


---------------------

2. உலகில் உள்ள அனைத்துப்பெண்களுக்கும் உற்ற தோழன் தலையணை மட்டுமே,அவர்கள் கண்ணீரை ஏற்றுக்கொள்வதால்

------------------------

3. ஒரு பையனைப்பழி வாங்க சிறந்த வழி சூப்பர் ஃபிகர்ஸ் ஃபோன் நெம்பர் 10 குடுத்துட்டு அவனை நெட் ஒர்க் கவ்ரேஜ் இல்லாத ஏரியாவில் அடைத்து விடுவதே

-----------------------

4. ஒரு பெண்ணைப்பழி வாங்க சிறந்த வழி ஆடை ,அணிகலன்கள்,நகைகள் எல்லாம் வாங்கிக்கொடுத்து அவளை கண்ணாடி இல்லாத அறையில் அடைத்து வைப்பதே

--------------------------------

5. காயப்பட்ட இதயத்தை நேசிக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் அட்லீஸ்ட் நேசித்த இதயத்தையாவது காயப்படுத்தாமல் இருக்கலாம்

----------------------




6. நினைத்தவுடன் கவிதை எழுத வந்தால் நீ பிறவிக்கவிஞன், மனம் கனத்தவுடன் கவிதை எழுத வந்தால் நீ மக்களின் கலைஞன்

------------------------

7. ஹலோ!ஏன் சரியா பேச மாட்டேங்கறே?

பக்கத்துல ஃபாதர்!

அடிப்பாவி, நீ ஹிந்துன்னு தானே சொன்னே? ஏன் சர்ச்சுக்கு போனே? # கலாட்டா கடலை

----------------------

8. வெற்றி என்பது அழகிய காதலி போல, எந்த நேரத்திலும் அது நம்மை விட்டு விலகி விடலாம்.

------------------------

9. எடுப்பார், கொடுப்பார் இன்றி இருவருமே பெறுபவராக இருப்பதுதான் இனிமையான தாம்பத்யத்தின் தாத்பர்யம்

-------------------------

10. நம்பி காத்திருந்தால் ஆசைப்பட்டது மட்டும் கிடைக்கும், நம்பிக்கையுடன் கஷ்டப்பட்டால் ( உழைத்தால் ) நினைத்தது எல்லாமே கிடைக்கும்

-----------------------------





11. கீ போர்டின் ஷார்ட் கட்ஸ் அறிந்தவன் மவுஸ் யூஸ் பண்ணுபவனை விட 10 மடங்கு அதிக வேகத்துடன் கணிணியில் வேலை செய்வான்

----------------------

12. அணுகுண்டு வெடிக்கும்போது எந்த சத்தமும் வராது ( கேட்காது) கண்ணைக்கூசும் அளவு வெளிச்சம் மட்டுமே வரும்

------------------------

13. 12 தேனீக்கள் வாழ்நாள் முழுதும் உழைத்தால் தான் ஒரு டீ ஸ்பூன் அளவு தேன் கிடைக்கும்

-------------------------

14.  ஐ லவ் யூ சொன்னேன், அவள் கண்கள் முதலில் சிவந்தன, என் கன்னம் அதன்பின் சிவந்தது # GUESS 1. பளார்?  2  ஃபிகரு லிப்ஸ்டிக் போட்டிருக்காடோய்!

----------------------

15. காதல் என்பது மிக மதிப்பு மிக்கது, ரொம்ப சீப்பான ஆள் கிட்டே அதை பிச்சையா கேட்காதீங்க!!!

----------------------



16.  மனைவி கூட செம ஃபைட், கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சுட்டு வந்துட்டேன்.

மனைவியையா?

  ம்ஹூம், சைக்கிளை

----------------------------

17. காதலி கிஸ் தரும்போது வரும் சந்தோஷத்தை விட நண்பன் அவனோட கேர்ள் ஃபிரண்ட் நெம்பர் தரும்போது வரும் சந்தோஷம் அதிகம் # மச்சி, ஃபிகர் நெம்பர் குடு

-----------------------------

18. மகிழ்ச்சி என்பது புரியாத புதிர்க்கணக்கு, நீ மற்றவர்களுடன் அதைப்பகிர்ந்து கொண்டால்  அது பன் மடங்காகப்பெருகிவிடும்

------------------

19. எந்த பிரச்சனையையும் சந்திக்காம ஒருத்தன் ஜெயிச்சா அது சாதா வெற்றி, பல பிரச்சனைகளையும் சந்திச்சு ஒருத்தன் ஜெயிச்சா அது  சரித்திர வெற்றி

------------------------

20. வாழ்க்கை என்பது மோசமான டீச்சர் போல, முதல்ல நமக்கு பரீட்சை வெச்சுடுது, அதுக்குப்பிறகுதான் பாடமே கத்து தருது

-----------------------


சுமோ என்கிற சுண்டுமோதிரம் பெயர் இணைக்கப்பட்டது.

Friday, June 15, 2012

முரட்டுக்காளை - சினிமா விமர்சனம்

http://lh6.ggpht.com/_OMHy_G6FX48/TJGVMqRSEKI/AAAAAAAAEzs/uW2a8cVHlLY/Murattukkaalai-Poster-2.jpgகாளையன் எனும் ஆண்மைத்தனம் மிளிரும் கேரக்டரில் நடித்த ரஜினியின் முரட்டுக்காளை ரீமேக்கிற்கு மிராசுதார் ஃஆஃப் த மிக்சர் பார்ட்டி , பிஞ்சு மூஞ்சி மிஸ்டர் சுந்தர் சி யை தேர்வு செய்ததற்காக சக ஊர்க்காரர் என்ற உரிமையில் இயக்குநர் செல்வபாரதிக்கு என் வன்மையான கண்டனங்களை பதிவு செய்து விமர்சனத்தை தொடங்குறேன்..

ஹீரோவுக்கு  4 தம்பி,, வில்லனுக்கு ஒரு தங்கச்சி.. ஹீரோ ரேக்ளா ரேஸ்ல ஜெயிச்சதைப்பார்த்ததும் ஹீரோயினுக்கு லவ் வந்துடுது.. ( ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் ஏரியாவில் சீனின்னு என் ஃபிரண்டு பைக் ரேஸ்ல முதல்ல வந்தான், ஆனா அவன் லவ்வர் டாட்டா, பிர்லா, அம்பானி காட்டிட்டு போய்ட்டா).. ஹீரோ கிட்டே இருக்கற நிலத்துக்கு ஆசைப்பட்டு வில்லன் பேக்கரி உனக்கு, என் தங்கச்சி உனக்குன்னு டீல் பேச ஐ மீன் நிச்சயதார்த்தம் பேச விழா நடக்குது.. 

அந்த நிச்சயதார்த்தத்துல ஹீரோவுக்கு தன் தம்பிகளை தன் கிட்டே இருந்து பிரிச்சுடுவா-னு தெரிஞ்சு கேன்சல் பண்றாரு.. இடைவேளை.. 

இப்போ இன்னொரு ஹீரோயின் ..அந்த ஊர்ல 1117 வீடுகள் இருந்தாலும் எதேச்சையா ஹீரோ வீட்ல வந்து தங்கி அவன் மனசுல இடம் பிடிச்சுடறா.. வில்லனுக்கு ஹீரோயின் மேல ஆசை.. மீதி என்ன நடக்குதுங்கறதை படு பயங்கர சஸ்பென்ஸோட படம் எடுத்திருக்காங்க.. 

சுந்தர் சி படம் பூரா சிரிச்ச முகத்தோட, ஆக்‌ஷன், ஃபைட் சீன்ல கூட திருநீறு, குங்குமம் கலையாம பொத்தி வெச்ச மல்லிகை மொட்டாட்டம் வந்துட்டுப்போறாரு.. கோபம் வர்ற மாதிரி சீன்ல உருமறார்.. பார்க்க காமெடியா இருக்கு..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIPKyzTsb3uamdoAFYDbydJJbKcQsWzGs8DlIz8MP0fPfV_vmOF9pmdupRgPRzxR1LhunOz5KRQlT6tM0G5PgGLsIbd0eJ2lwL8EboFL9_f5y0fLYv4nEEOIiTR20S2IX_JGV1Y4i1nBo/s1600/Sindhu+Tolani+in+saree+still.jpg


முதல் ஹீரோயின் சிந்து துலானி.. முடிஞ்ச வரை காட்டு காட்டுன்னு காட்டிட்டு போறார்.. ஹூம்.. ஆல்ரெடி மன்மதன்ல பார்த்ததுதானே?

2 வது ஹீரோயின்  சினேகா.. பிரசன்னாவை நினைச்சா பாவமா இருக்கு.. அவரோட கடைசி படம் ஐ மீன் மேரேஜ்க்கு முன்னே ஷூட் பண்ண  கடைசி படம் இப்படியா அமையனும்? செம சீன்.. 

வில்லனா சுமன்.. எடுபடலை.. சிவாஜில சிங்கம் மாதிரி இருந்தவரை இப்படி நரி மாதிரி ஆக்கிட்டாங்க பாவம்

 விவேக்  திருநங்கை கேரக்டர்ல காமெடி பண்றதா  நினைச்சுக்கிட்டு கேவலமா ஆபாசமா  வசனம் பேசிட்டு சி செண்ட்டர் ரசிகர்கள் கூட  ரசிக்க முடியாத வல்கர் கமெண்ட்ஸ் எல்லாம் அடிச்சு முடிஞ்சவரை தன் பேரை கெடுத்துட்டு போறார்.. சக போட்டியாளர் டாப் கீர்ல மணிக்கு 120 கிமீ வேகத்துல காமெடி டிராக்ல போய்ட்டிருக்கறப்போ இவர் ரிவர்ஸ்ல 140 கிமீ வேகத்துல போனா விளங்குமா?


http://mimg.sulekha.com/sneha/images/stills/sneha-stills-0580.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. விவேக்கின் நண்பரான செல் முருகன் காமெடி தான் படத்தில் ரசிக்கக்கூடிய முக்கிய அம்சம்.. 16 வயதினிலே பட மயில்  ஸ்ரீதேவியை கரெக்ட் பண்ண ட்ரை பண்ண டாக்டரின் மகனாக வந்தவர் விவேக்கை பெண் என நினைத்து செய்யும் கூத்துகள் கல கல காமெடி..


2. சினேகா வை அதிக பட்ச கிளாமர் காட்ட வைத்ததற்கு ஒரு சபாஷ்


3. பல காட்சிகளில் கவர்ச்சியை, கிளாமரை அள்ளித்தெளித்தும் இந்தப்படத்துக்கு யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியது.








இயக்குநரிடம் சில கேள்விகள்

1. பாடல் காட்சிகளில் சுந்தர் சி ஏன் கேப்டனை இமிடேட் பண்றார்? நானே ராஜா நானே மந்திரி பட பாடல் ஸ்டெப்போல் ட்ரை பண்றாரு,, முடியல 


2. சிந்து துலானி ஸ்கிப்பிங்க் ஆடற மாதிரி சீன்ல கேமரா ஆங்கிளை டாப்ல வெச்சு கலக்காம பூமில படுத்துக்கிட்டே லோ ஷாட்ட்டா வைப்பாங்க.. ஜி கே டெவலப் ப்ளீஸ்.. ஒரு வேளை பூமிகா ரசிகரா?


3. விவேக் பாத்ரூமில் குளிக்கும்போது அன்பே என் அன்பே உன் விழி பார்க்க பாடல் வரிகளை ஓட விட்டு அவர் பண்ணும் சேஷ்டைகள் ஆபாசம்


4. கெண்டைக்கால் அளவு ஓடும் தண்ணீரில் மீன் பிடிக்கும் சினேகா எதுக்கு பாவாடையை தொடை வரை தூக்கி கட்டனும்?


5. மழை பெஞ்சுட்டு இருக்கு, ராத்திரி மணி 9.. அந்த நேரங்கெட்ட நேரத்துல சினேகா லூஸ் மாதிரி வில்லன் வீட்டுக்கு போய் “ உன் அண்ணனை கட்ட எனக்கு இஷ்டம் இல்லை”ன்னு சொல்லுறதுக்குப்போய் வில்லன் கிட்டே மாட்டிக்கறதா சீன் இருக்கு.. அந்த டயலாக்கை காலைல, அல்லது மத்தியானம் போய் சொல்லக்கூடாதா? 

6. தனியா வந்த சிட்டை ரேப் பண்ணாம கெக்கே பிக்கேக்கேன்னு கோட்டை விட்டுட்டு கையாலாகாத வில்லன் வேடிக்கைபார்க்கறான்


7. கிராமத்துல ஒவ்வொரு கொலையையும் மாட்டின் ஒரு கொம்பை வெச்சு வில்லன் அண்ட் கோ செஞ்சுட்டு பழியை மாட்டு மேல போட்டுடறாங்க.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல ஒரே ஒரு கொம்பால தான் ஒவ்வொரு கொலையிலும் குத்தப்பட்டிருக்குன்னு போலீஸ் கண்டு பிடிக்க மாட்டாங்களா? மாட்டுக்கு 2 கொம்புன்னு தெரியாதா?


http://cinema.dinakaran.com/cinema/CineGallery/Kollywood/Movie/Murattu-kalai/01.jpg


8. ஒரு சீன்ல விவேக் என் இதயம்.. மயங்கவே....” பாட்டுக்கு மூவ்மெண்ட் தர்றாரு.. ஆனா லிப் மூவ்மெண்ட் வேற பாட்டுக்கு.. ( ஐ திங்க் ஷூட்டிங்க் டைம்ல வேற பாட்டு போட்டுட்டு அப்புறம் பாட்டை மாத்தி இருக்கலாம்.. )


9. படம் முழுக்க மொழு மொழு கன்னத்தோட வர்ற ஹீரோ ஒரு பாடல் காட்சியில், 2 சீனில் மட்டும் சம்பந்தமே இல்லாம தேவதாஸ் கெட்டப்ல தாடியோட சோகமா வர்றாரே? சம்பள பாக்கியா?

10. அண்ணன், அண்ணி குஜாலா ரொமான்ஸ் பண்றப்போ அண்ணியோட லோ கட் சீனை தம்பிகள் ரசிக்கற மாதிரி ஷாட் எதுக்கு?


11.க்ளைமாக்ஸ்ல எதுக்கு இன்ஸ்பெக்டரா வர்ற தியாகு வில்லனோட திட்டத்தை வாலண்ட்ரியா ஹீரோ கிட்டே சொல்லி மாட்டிக்கறாரு?


12. மலையூர் மம்பட்டியான்ல வர்ற மாதிரி ஹீரோ ஏதோ ஒரு காட்டுக்குள்ளே போய் தலை மறைவா இருக்காரு.. கொலை கேஸ்ல போலீஸ் தேடுதுன்னு.. ஆனா கரெக்ட்டா சிந்து துலானி அந்த இடத்தை எப்படி கண்டு பிடிக்கறாரு?


13. படம் போட்டதுல இருந்து ஹீரோ அவர் வீட்லயே தான் இருக்காரு.. அப்போ எல்லாம் விட்டுட்டு ஹீரோ தலைமறைவான 14 வது ரீல்ல வில்லன் பெரிய இவரு மாதிரி பழி வாங்க அலையறாரே? ஏன்?


http://actresspadam.com/wp-content/uploads/2012/06/South-Tamil-Movie-Murattu-Kaalai-2012-Online-Picture-Moments.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்



1. வேட்டியை இறக்குங்கடா..  ஆளாளுக்கு மனசுக்குள்ள ஆம்பளை ரம்பான்னு நினப்பு..


2. இது ஹைபிரிட் ஆரஞ்ச்..

 அப்படின்னா?


 கொட்டை எடுத்தது, அப்படியே சாப்பிடலாம்


3. என்னடி? உங்க வீட்டு கிரைண்டர் இப்படி ஆடுது?


4. பாம்பு கடிச்ச மாதிரி டிராமா போட;லாம்.. முள்ளை எங்கே குத்த? காலை காட்டுடி

 கால் வேணாம்டி.. இடுப்புல குத்து.. அதான் ரொமான்ஸ் ஏரியா..


5. பாம்பு ஏன் இடுப்புல கொத்துச்சு..? சினிமால எல்லாம் ஆம்லெட் போடற ஏரியா. முட்டை இருக்கும்னு பார்க்க வந்து ஏமாந்து போயிருக்கும்.. பொட்டுன்னு போட்டுடுச்சு


6. இப்படி எல்லாம் கிளாமரா டிரஸ் பண்ணீட்டு வந்து நல்ல பாம்பை ஏன் கெட்ட பாம்பு ஆக்கறீங்க?


7.  பாம்பு உங்களை எங்கே கடிச்சுது?

 இதோ இங்கே.. மார்க் இருக்கு பாருங்க..

 ஆமா.. பெரிய மார்க்.. 100க்கு எவ்ளவ்?



8./ என் இடுப்புல வாயை வெச்சு உறிஞ்சுனாருங்க..


 வாயையா?


 பின்னே? ஸ்ட்ரா வெச்சா உறிஞ்சுவாங்க?


9. அடிப்பாவி.. தென் காசி டூ மதுரை என் பேரை டேமேஜ் பண்ணிட்டியே.. எவனைப்பார்த்தாலும் இடுப்புல வாயை வெச்சு உறிஞ்சுனியா?ன்னு கேட்கறான்


10.  என்னடா பசங்களா அடிச்சுக்கறீங்க?


 என் ஆளை இவன் கரெக்ட் பண்னப்பார்க்கிறான்


இந்த சின்ன வயசுல என்ன பேச்சு இது? யார்டா உங்க 2 பேர் ஆள்?

 நீ தான்.. ஹி ஹி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9avekoHDQnomURSnphn_flYWs438-388bVNXIB7eJbyp7XijwgvyzDXHNmCrQN9ZktyuCsL1_n_AXiFfefwdr-iXTqRdguxh4kVrMhKUY4Se5PyLjyaLWIkskazOA9etiRPrk41r-N5I/s640/Sneha+in+Amala+Oil+Add+%25281%2529.jpg


11. அவ பேரென்னா?

 பூவன்னா


என்னது?

 புவனாங்கறதை நீட்டி முழக்கி சொன்னேன்..



12. ஆஹா.. புவனா.. சின்னதா , அழகா இருக்கு

 என்னது?

 பேரைசொன்னேன்


13. அண்ணே.. நீங்க பெரிய ஆள்.. மோகினிப்பிசாசே பார்த்து பயப்படற அள்வு என்னத்தை காட்டுனீங்க?



14.  ஏண்டப்பா ஒரே வண்டில 3 பேர் ஏறி வர்றீங்களே.. வண்டி தாங்குமா?



15. டூ வீலர் வெச்சிருக்கற உங்களுக்கே இவ்ளவ் தெனாவெட்டுன்னா அஞ்சு வீல் வெச்சிருக்கற எனக்கு எவ்ளவ் தெனாவெட்டு இருக்கும்./.



4 வீல் தானே?

 ஸ்டெப்னியை சேர்த்து சொன்னேன்



16. டெயிலி வெய்யில்ல உங்க மேனி பட்டும் எப்படி இவ்ளவ் வெள்ளையா இருக்கீங்க?

 ம் டெயிலி ஷேவ் பண்ணுவேன்


என்னது?



17. முயல்னா காதை பிடிச்சு தூக்கனும்.. கோழின்னா கழுத்தை பிடிச்சு தூக்கனும்..

 டேய்.. யானையை எதை பிடிச்சுத்தூக்குவே?


18/ ஆம்பளை கிட்டே பேசனும்னா அரை செகண்ட்ல பேசிடுவேன்./ பொம்பளை கிட்டே பேச ஒரு நாள் ஆகும்.. பழக்கம் இல்லை பாருங்க ஹி ஹி


19.. என்னடா.. அவ 2 காலும் சமீரா ரெட்டி மாதிரி இருக்கு.. ஆனா முடி மட்டும் ஜி கே ரெட்டி மாதிரி இருக்கு?


20. ம்க்கும்..இவன் தவ்வி தவ்வி போறதுக்குள்ளே அங்கே ஃபர்ஸ்ட் நைட்டே முடிஞ்சுடும்



http://lh3.ggpht.com/_UtKy-iLm-ck/St4UjqKqBUI/AAAAAAAABjk/oRpKH1upCes/actress-sindhu-tolani-stills-more-14.jpg




எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்



சி.பி கமெண்ட் -  சுந்தர் சி டைரக்‌ஷனை தொடர்வதே நல்லது.. என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக உணர்த்தும் படம்.. டி வி ல போட்டா இடைவேளை வரை பார்க்கலாம்..ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtH1bSnzj_MHLSTbGR-KgRqRqgmiRt2X3N77EoNzDJuIVFBqhdHv4fqW-L6w9IEsK-DtY9bARTUn8J9iwfU9nFKYslu4pJLuRtq2a0aSBfdYwxpUVc72Op5eOPwGE8lq9eMgS4LEEL_i4/s320/Sneha+pins+hope+on+Murattu+Kaalai.jpga


டிஸ்கி -

மறுபடியும் ஒரு காதல் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/06/blog-post_5873.html
 

ரத்த தானமும் , முத்த தானமும்

Photo: காலை வணக்கம் நண்பர்களே..
:-)
1.இன்று ரத்ததான நாள்.. மனதில் அன்பும்,உதட்டில் தெம்பும் இருப்போர்க்கு என்றென்றும் முத்த தினம் தான் ;-)


---------------------------------


2. அந்தக்காலத்திலும் சரி, இந்தக்காலத்திலும் சரி தாதாக்கள் கூட சகுனி என்றால் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது # ஜூன் 22 பில்லா 2 ரிலீஸ் நோ


-------------------------


3. உனக்காக உயிரையும் குடுப்பேன் என்பதன் உள் அர்த்தத்தை இதக்காலப்பெண்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்



-----------------------------


4. சாஃப்ட்வேர்ல நான் புலின்னு சொல்றவங்க எல்லாம் புலிமார்க் பனியன் போடற ஆளுங்களோ?


-------------------------


5. ரத்த தானம், முத்த தானம் இரண்டும் நிகழ்கையில் கிறுகிறுப்பாக இருக்கும்



---------------------


ஆஹா இடங்கள் - 2
Morning Glory !
kind of clouds observed in the Gulf of Carpentaria in northern Australia.
Photo: ஆஹா இடங்கள் - 2
Morning Glory !
kind of clouds observed in the Gulf of Carpentaria in northern Australia.

6. நான் சின்னப்பையனா இருந்தப்போ ( 2 வருஷம் முன்னால ) ரயில் போகும் திசையில் உள்ள சீட்டில் அமர்ந்தால் தான் சரியான இடத்துக்குப்போவோம்னு நினச்சிருந்தேன்



---------------------

7. முற்போக்குவாதிகள் கூட  மாமனார் வீட்டு சீதனத்தை விரும்புகிறார்கள், காரணம் அது கோயில் பிரசாதம் போல , கம்மியா இருந்தாலும் தனி ருசி


 ----------------------



8. திண்ணையில கிடக்கறவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆகுமாம்.-ரேணுகா # யார் வீட்டுத்திண்ணையிலே கிடக்கனும்?



---------------------------


9. மீந்துபோன பழைய சாதத்தை வெய்யில்ல காய வெச்சு வடகம் ஆக்கி தயிர் சாதத்துக்கு கடிச்சுக்கற தமிழன் தான் ரீ சைக்ளிங்கை உலகிற்கே அறிமுகப்படுத்தியவன்



----------------------------


10. தன் காதலியின் மேல் உதட்டின் மேல் மீசை வரைந்து அழகு பார்க்காத காதலன் நல்ல ரசிகனே அல்ல !




------------------------------

விளாவுக்கு எடுக்கலாம் விழா!

விளாங்காய் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு நல்ல மருந்து. தொண்டைப் புண், தொடர் விக்கல் மற்றும் ஈறு சம்பந்தமான பிரச்னைகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. விளாங்காய்ப் பச்சடி, வாய்ப் புண்ணைக் குணமாக்கும்.
Photo: விளாவுக்கு எடுக்கலாம் விழா!

விளாங்காய் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு நல்ல மருந்து. தொண்டைப் புண், தொடர் விக்கல் மற்றும் ஈறு சம்பந்தமான பிரச்னைகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. விளாங்காய்ப் பச்சடி, வாய்ப் புண்ணைக் குணமாக்கும்.


11. தன் தகுதிக்கு மீறிய சம்பளம் பெறும் அதிர்ஷ்டக்காரன் கணிணிவல்லுனன்,குறைந்த வருமானம் பெறும் துரதிர்ஷ்ட சாலி விவசாயி



---------------------------------


12. ரயில்கள் கிராமங்களைக்கடக்கையில் யாருக்கோ டாட்டா காட்டும் சிறுவர்களின் உற்சாகத்தை நான் வேறு எங்கும் கண்டதில்லை



-----------------------------------------


13. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு நாம் உதவி செய்யும்போது மகிழ்ச்சி தேவதை நம்மைப்பார்த்து நாசூக்காக சிரிப்பாள்



-------------------------


14, நரக வேதனை பற்றி நகர மனிதர்கள் அறிய முன் பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பில் ரயிலில் பிரயாணம் செய்க



---------------------------


15. ரயில் பிரயாணங்களில் பயண நேரம் 24 மணி நேரங்களைத்தாண்டும்போதுதான் வீட்டுச்சாப்பாட்டின் மகத்துவம் தெரிகிறது





--------------

ஆஹா இடங்கள் - 5
Lighthouse guard in Mare!
Lighthouse guard in Mare , France must be one of the most courageous people on the planet! Not everyone will have a smoke in such weather, and in such a place!
Photo: ஆஹா இடங்கள் - 5
Lighthouse guard in Mare!
Lighthouse guard in Mare , France must be one of the most courageous people on the planet! Not everyone will have a smoke in such weather, and in such a place!


16. திருப்பதியில் இருந்து திரும்பி வருபவர்கள் லட்டினை யாருக்கு முதலில் தருகிறார்கள் என்பதில் இனிப்பான கவிதை ஒளிந்திருக்கிறது



---------------------

17. கால எந்திரத்தில் பயணிப்பது சாத்தியம்  எனில் பெரும்பான்மையோரின் தேர்வு பள்ளிப்பருவ நாட்களே!



---------------------------


18. கொடூரமானவன் கூட தன் குழந்தையுடன் விளையாடும்போது தானும் ஒரு குழந்தை ஆகிறான்



----------------------------


19. தாங்கள் மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்கள் என்பதை பறை சாற்ற சில நவ நாகரீக யுவதிகள் புறமுதுகு காட்டி செல்கிறார்கள் # பேக் ஓப்பன் JKT



--------------------------------


20. சாகாவரம் வேண்டும் என்று நேரடியாக ஆசைப்படாமல் : சாவதற்குள் தமிழ் ஈழம் வேண்டும் “ என சுற்றி வளைத்து சொல்கிறார் கலைஞர் 




----------------------


வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே .தோல்வி அடைய கூடாது என்று போராடு..
உலகம் உன் கையில்.


- அ- சந்திரதன்.
Photo: வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே .தோல்வி அடைய கூடாது என்று போராடு..
உலகம் உன் கையில்.


-  அ- சந்திரதன்.

Thursday, June 14, 2012

சாருநிவேதிதாவும் ,அவர் மனம் கவர்ந்த சில்க் ஸ்மிதாவும்


பாலியல் தொழிலாளியாக இருந்து, பின்னர் எழுத்தாளராக மாறிய நளினி ஜமீலா ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். அவருடைய சுயசரிதை நூல் கேரளத்தில் பிரபலமான பிறகு அவருடைய நேர்காணல்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வெளிவரத் தொடங்கின.  அப்போது அவருக்கு தினமும் நூற்றுக்கணக்கான காதல் கடிதங்கள் வர ஆரம்பித்தனவாம்.  காதல் என்றால் எப்படிப்பட்ட காதல்?  “உங்களோடு ஒரே ஒருமுறை செக்ஸ் அனுபவிக்க வேண்டும்.”  இதைப் பற்றி சிரித்துக் கொண்டே குறிப்பிட்ட ஜமீலா, “அவர்கள் அனுபவிக்க நினைத்தது, ரத்தமும் சதையுமாக உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த ஜமீலாவுடன் அல்ல;  தொலைக்காட்சியில் தெரியும் ஜமீலாவின் நிழலுடன்” என்றார்.


எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஏனென்றால், ஜமீலா அனுபவரீதியாக உணர்ந்து கூறியதைத்தான்  ஃபிரான்ஸைச் சேர்ந்த பிரபலமான பின்நவீனத்துவ சிந்தனாவாதியான ஜான் பொத்ரியார் (Jean Baudrillard)  தன்னுடைய Simulacra and Simulation என்ற நூலில் Hyperreality என்ற கருத்தாக்கமாக முன்வைக்கிறார்.   சுருக்கமாகக் கூறினால், எதார்த்தத்துக்குப் பதிலாக, அதன் இடத்தை பிம்பங்கள் எடுத்துக் கொள்வதே ஹைப்பர் ரியாலிட்டி.

தமிழ்க் கலாச்சாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளில் பிரதானமாக இருப்பது சினிமா என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.  அந்த சினிமாதான் தமிழர்களுக்கான பிம்பங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பிம்பங்களில் மிக முக்கியமானவர் சில்க் ஸ்மிதா (1960-&96).  ஆந்திராவின் ஏழ்மையான குடும்பம் ஒன்றைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு பள்ளிக்குச் சென்று படிக்க வசதியில்லை. 


 அதனால் மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய, ஆந்திராவிலிருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்து, கோடம்பாக்கத்தின் சினிமா ஸ்டுடியோக்களில் எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் வயது 16. இதேபோல், கிராமத்தில் சிறுவயதில் திருமணம் செய்விக்கப்பட்டு, அது தோல்வியில் முடிந்து, பிறகு சினிமாவில் சேர்ந்து புகழ்பெற்ற நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.  உதாரணத்துக்கு ராக்கி, ஜெயா பாதுரி.  இதை இங்கே குறிப்பிடக் காரணம், அந்தக் காலகட்டத்தில் பல நடிகைகளின் கதையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.  

ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவின் எதிரே இருந்த மாவு மில்லில் வேலை செய்துகொண்டிருந்த விஜயா, நடிகர் வினு சக்ரவர்த்தியின் பார்வையில் பட  விஜயாவின் வாழ்க்கையில் அதிரடித் திருப்பம் ஏற்படுகிறது.  வண்டிச் சக்கரம் என்ற படத்தில் விஜயா சாராயம் விற்கும் பெண்.  பெயர் சிலுக்கு. பிறகு அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிடுகிறது. 

அதற்குப் பிறகு சில்க் ஸ்மிதா 450 படங்களில் நடித்தார்.  புகழின் உச்சத்தில் இருக்கும்போது தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று இன்றளவும் நம்புகிறவர்கள் உண்டு.  புகழின் உச்சாணியில் இருந்த சிலுக்குவின் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்தபோது அந்த சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்குக்கூட யாரும் இல்லை என்பது இன்னொரு துயரமான விசித்திரம். இதிலும் பல நடிகைகளின் கதை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.  பர்வீன் பாபி, இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த ஒரு நடிகை. பாலிவுட்டின் செக்ஸ் ஸிம்பலாகக் கருதப்பட்டவர். தத்துவ ஞானி யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியின் சிநேகிதி.  என்னுடைய எக்ஸிஸ் டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலுக்கு டெபொனேர் பத்திரிகையில் வெளிவந்த பர்வீன் பாபியின் ஒரு பேட்டிதான் அடிப்படையாக இருந்தது. அந்தப் பேட்டி வந்த ஆண்டு 1972.  அப்படிப்பட்ட பர்வீன் பாபி 2005-&ல் இறந்தபோது அவரது சடலமும் Unclaimed body (Token No. 62) -ஆகத்தான் கிடந்தது. மேலும், சிலுக்கு பிரபலமான பிறகு தன் சொந்த பந்தங்கள் யாரையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளவில்லை. அவருடைய மூத்த சகோதரர், சிலுக்கு சாகும்போதுகூட லாரி டிரைவராகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்க் ஸ்மிதா அளவுக்குப் பிரபலமாக இருந்த நடிகை தமிழ் சினிமாவில் இன்றளவுக்கும் வேறு யாரும் இல்லை. ஒருமுறை இந்திரா காந்தி “யார் இந்த சில்க்?” என்று சிரித்துக்கொண்டே கேட்கும் அளவுக்கு சில்க் ஸ்மிதாவின் பெயர் இந்தியா முழுவதும் பரவியிருந்தது.   பெண்களுக்கும் சிலுக்கைப் பிடித்திருந்தது.  இன்றைய கவர்ச்சி நடிகைகள் யாருமே சில்க்கின் நிழலைக்கூடத் தொட முடியவில்லை.  அன்றைய கதாநாயக நடிகர்கள்கூட பிரபலம் என்ற அளவில் சிலுக்குவுக்குப் பின்னால்தான் இருந்தார்கள். 17 ஆண்டுகள் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் பாலியல் கனவாக விளங்கினார் சில்க்.  இது எப்படி நிகழ்ந்தது என்பதை ஆய்வு செய்தால், தமிழ்ச் சமூகத்தை மிகச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள முடியும். 

ஆந்திரா பற்றித் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.  அங்கே முக்கால்வாசிப் பெண்கள் சில்க் ஸ்மிதாவைப் போல்தான் இருப்பார்கள்.  அவர்களில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு வந்து ஒரு மாநிலம் தனது கனவுக் கன்னியாக வைத்துக் கொண்டதற்குக் காரணம் என்ன?

உலகில் பாலியல் வறட்சி மிகுந்த பிரதேசங்களில் தமிழ்நாடு முன்னணியில் வரும் என்று நினைக்கிறேன். என் வாசகர் ஒருவர் இருந்தார். வயது 60. அவர் நீண்ட நாட்களாக யோசித்து, தயங்கி, பிறகு சற்றே துணிச்சல் பெற்று ஒருநாள் தன் மனைவி தனியாக இருக்கும்போது முத்தமிட்டார்.  உடனே அந்தப் பெண்மணியும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள்.  “உங்கள் புத்தகங்களைப் படித்ததால் எனக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்” என்று பிறகு அவர் என்னிடம் வருத்தப்பட்டார். 

அப்போதெல்லாம் கழிப்பறை வசதி கொண்ட கேரவன்கள் கிடையாது.  அதனால் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது நடிகைகள் பெரும் அவதிக்குள்ளாவது உண்டு.  அப்படி ஒரு சமயத்தில் ஒரு தனியான இடத்தைக் கண்டுபிடித்து சிறுநீர் கழித்திருக்கிறார் சில்க்.  முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் சுவரிலும், பக்கத்திலிருந்த மரக் கிளைகளிலும் பல ஆண் உருவங்கள்.  இதை சிலுக்கே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.  


அவர் இறந்த பிறகு அவரது பிரேதம் necrophilia செயலுக்கு ஆட்பட்டதாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒரு பேச்சு உண்டு.  ஒரு பிரபலமான நடிகை பல நாட்கள் கோமாவில் இருந்த போது, அந்த மருத்துவமனையின் வார்ட்பாயிலிருந்து மூத்த டாக்டர் வரை அந்த நடிகையின் ஜனனேந்திரியத்தைப் பார்த்து விட்டுச் சென்றார்கள் என்று அங்கே பணிபுரிந்த ஒரு பெண் மருத்துவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். 

ஹைப்பர்ரியாலிட்டி என்பது எதார்த்தம் அல்ல; ஆனால் எதார்த்தத்திலிருந்து முழுதும் அந்நியமானதும் அல்ல. அதே சமயம், அதில் எதார்த்தத்தின் சாயலும் உண்டு.  Hallucinatory resemblance என்கிறார் பொத்ரியார்.  தமிழ்நாட்டை சுமார் 20 ஆண்டுகள் இந்த மாயத்தன்மையினால் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவின் கதையை ஆராய்ந்தால் ஒருவேளை அது தமிழர்களின் கதையையே சொல்லக்கூடும்.


நன்றி - த சண்டே இந்தியன்