Wednesday, May 09, 2012

WISHMASTER 3 - Beyond the Gates of Hell - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

ரோஸ்மில்க் தான் சின்ன வயசுல இருந்தே குடிச்சுதோன்னு கேட் விண்ஸ்லேட்டே பொறாமைப்படற மாதிரி  ஒரு ரோஸ் கலர் ஃபிகரு.. பாப்பாவுக்கு  அம்மா, அப்பா யாரும் இல்லை.. ஒரே ஒரு பாய் ஃபிரண்ட் மட்டும் தான்.. இதுல என்ன ஆச்சரியம்கறீங்களா? இந்தக்காலத்துல செல் ஃபோனும் சரி, லவ்வரும் சரி ஒண்ணு மட்டும் வெச்சிருக்கற ஃபிகரை பார்ப்பதே அரிது.. அதுவும் ஃபாரீன் ஃபிகர் வேற.. 

அப்பேர்ப்பட்ட ஃபிகர் காலேஜ்ல படிக்குது.. அந்த காலேஜ்ல நம்ம ட்விட்டர் அங்க்கிள் ஃபிரியா  யார் கிடச்சாலும் விடாதேங்கற கொள்கை கொண்ட , தினமும் 18 மணீ நேரம் டைம் லைன்ல கடலை  போடும் மாமாவை குருவாகக்கொண்ட ஒரு காலேஜ் புரொஃபசர். இவர் என்ன மாதிரி கேரக்டர்னா காலேஜ்ல கேர்ள்ஸ் தனியா சிக்குனா  பிராக்டிகல் கிளாஸ் ஃபிரீயா எடுத்து கத்துக்கொடுத்து கழட்டி விட்டுடுவார்..

 அவர் கிட்டே ஹீரோயின் மாட்டற சூழல்.. புரொஃபசர் வீட்ல ஏதோ ரத்தினக்கல் மாதிரி ஒரு மாந்திரீக கல் சிக்குது.. அதுல இருந்து அலாவுதீன் பூதம் மாதிரி கேவலமா ஒரு  சாத்தான் வெளி வருது.. அந்த சாத்தான் அந்த புரொஃபசரை போட்டுத்தள்ளிட்டு அவர் ரூபத்துல ஹீரோயின் கிட்டே பம்புது.. 

 நிற்க! இந்த இடத்துல நான் அந்த சாத்தானா இருந்தா ஃபிகரோட காதலன் வடிவம் எடுத்து மேட்டரை முடிச்சிருப்பேன்.. ராமாயணம் புராணத்துல கூட ராவணன் ராமன் அவதாரம் தானே எடுத்தாரு? இந்த இடத்துல ராமாயணத்துலயே ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கு.. அது இன்னான்னா  ராமன் அவதாரம் எடுத்ததும் ராவணன்க்கு அடுத்தவன் சம்சாரத்தை பார்க்கக்கூடாதுங்கற நல்ல எண்ணம் வந்துட்டதா வால்மீகி சொல்றாரு,.. என் டவுட் என்னான்னா  ராவணன் ராமன் அவதாரம் எடுத்ததும் ராமனோட எண்ணங்கள் ஆக்ரமிச்சதுங்கறதுதானே பாயிண்ட்.. அப்போ சீதை ராமனுக்கு மனைவிதானே.. ஏன் கையை வைக்கலை? ஹி ஹி 


http://ajcook.fan-sites.org/gallery/albums/userpics/10464/normal_wishmaster3.jpg


கம் டூ த பாயிண்ட்.. ஏகப்பட்ட சக்தி  படைச்சும் அந்த பாழாப்போன சாத்தான் ஹீரோயினையும் எதும் பண்ண முடியாம, லட்டு மாதிரி இருக்கற அவ தோழியையும் எதும் பண்ணாம எப்படி தோத்துப்போகுதுங்கற கேவலமான கதை தான் மிச்ச மீதி கதை.. 

 Jason Connery  - அப்டிங்கற நடிகர் தான்  Professor Joel Barash. ஆகவும் அவர் ரூபத்துல வர்ற சாத்தானாகவும் படம் முழுக்க வர்றார்.. கிட்டத்தட்ட ஆண்ட்டி ஹீரோ மாதிரி.. நடிப்பெல்லாம் ஓக்கே.. ஆனா தானும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேங்கற மாதிரி.. இவரும் ஹீரோயினை ஒண்ணும் பண்ணலை.. ஹீரோவையும் ஒண்ணும் பண்ண விடலை ./ போய்யாங்க்.. 

 A.J. Cook  - இதுதான் ஹீரோயின் பேரு.. நேத்துத்தான் குத்த வெச்ச அத்தை பொண்ணு மாதிரி செம ஃபிரெஷ்ஷா தான் பாப்பா இருக்கு.. படத்துல கேரக்டர் நேம்  Diana Collins - நல்ல உடல் வாகு.. நடிப்பும் ஓக்கே..  ( ஃபிகர் நல்லாருந்தா நல்லா நடிக்கலைன்னாக்கூட நம்ம கண்ணுக்கு அதெல்லாம் குறையாத்தெரியாது... 

John Novak -  இவர் தான் ஹீரோ.. டம்மி ஹீரோ நம்ம ஓ பி எஸ் மாதிரி.. கேரக்டர் பேரு The Djinn.. ஆள் இளவட்டமா இருந்தாலும் எப்பவும் வாட்டமாவே இருக்கார்.. ஹூம்.. 


http://pictat.com/i/2011/8/16/301571682455.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. நான் இருக்கற வரை எதுக்கும் நீ கவலைப்படாதே..  ( ஹீரோயின் மைண்ட் வாய்ஸ் _ டேய் நாயே , உன்னால தான் கவலையே.. )

2.  எது வரை நாங்க எல்லாம் உயிரோட இருப்போம்னு தெரியலையே?


3.  ஒரே ஃபிகர் பின்னால காலம் பூரா சுத்த நான் என்ன முட்டாளா?

 அப்போ நீ அதுக்கு வேற ஆள் பாரு.. நான் அந்த மாதிரி ஆள் இல்லை 


4.  நான் தான் நீ வணங்கற கடவுள்.. நீ என்னை வணங்கனும்.. ஆராய்ச்சி எல்லாம் பண்ணக்கூடாது.. 


5. ரொம்ப டயர்டா இருக்குடி.. 

 அப்போ சொல்றதுக்கு நிறைய மேட்டர் இருக்கா? சொல்லுடி உன் காதலனுடனான கில்மாக்கதையை

6.  நான் அவன் கிட்டே ஐ லவ் யூ சொல்லனும்னு அவசியம் இல்லை..  ஏன்னா அவன் என் ஆளே இல்லை.. டெயிலி ஒருத்தி கூட சுத்திட்டு இருக்கான்

http://images2.fanpop.com/images/photos/6000000/-The-House-Next-Door-aj-cook-6000500-852-480.jpg



7.  டொக் டொக் டொக்


 டோண்ட் கம்


 ஏம் ஐ டிஸ்ட்ரப் யூ?

 உனக்கு ஒரு தடவை சொன்னாப்புரியாதா? உள்ளே வராதேன்னு சொன்னேன்.. 

8.. ஏம்மா , சப்ஜெக்ட்ல டவுட்னே.. அது பற்றி விளக்கலாம்னு பார்த்தா ஓடறியே.. எப்படி? உனக்கு எல்லாம் க்ளியர் ஆகும்?


9. Professor: “I wish for the two women I find most attractive to be here with me right at this moment”


10. “The Sword of justice will be yours when you are ready,” 


http://www.southfilms.com/images/cache/screen_image_95660.jpg 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. கசமுச கசமுச என கேரக்டர்கள் அதிகம் இல்லாமல் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என 3 கேரக்டர்களே பெரும்பாலான படத்தை ஆக்ரமித்து இருப்பது போல் திரைக்கதை அமைத்தது.. எவனும் படமே புரியலைன்னு சொல்ல வழி இல்லை

2. சாத்தான்  வில்லன் புரொஃபசரை மடக்கும் சீன்கள் ரசிக்க வைப்பவை.. குறிப்பா  புரொஃபசரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற அவரது குரல்.. அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் 2லும் மிமிக்ரி செஞ்சு சம்பவம் நடந்ததை குறிப்பால் உணர்த்துதல் கலக்கல்


3. ஒண்ணுமே இல்லாத சாதா கதையை  90 நிமிடங்கள் போர் அடிக்காமல் எடுத்துச்சென்ற விதம் 


http://static.tvfanatic.com/images/gallery/aj-cook-on-criminal-minds.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பொதுவா அந்த ஜ்வல் பாக்சை யார் ஓப்பன் பண்றாங்களோ அவங்க தான் எஜமானன்.. பூதம் அவங்களூக்கு அடிமை..  ஆனா அதை ஓப்பன் பண்ணும் ஹீரோயினை சாத்தான் முதலாளியம்மாவாக பார்க்காமல் மேட்டர் பண்ண துடிப்பது ஏன்?

2. சாதாரண ஃபிகரை மடக்க சாதா மனிதன் மயக்க மருந்து , தூக்க மாத்திரை, போதை  மாத்திரை என ஏகப்பட்ட வழி இருந்தும் ஏகப்பட்ட மந்திர சக்தி வைத்திருந்தும் அந்த சாத்தான் ஃபிகரை மடிக்க முடியலை என்பது அவமானம் ச்சே ச்சே.. 

3. புரொஃபசரை தனியா பார்க்க ஹீரோயின் கிளம்பறப்ப ஹீரோ இரு நானும் வர்றேங்கறான்.. ஹீரோயின் யோக்கிய சிகாமணி தானே.. அதாவது நல்லவ தானே ஏன் கூட கூட்டிட்டு போகாம நீ இரு நான் தனியாப்போய்க்கறேன்னு சொல்றா? இத்தனைக்கும் புரொஃபசர் ஒரு முடிச்சவுக்கி, மொள்ல மாரின்னு தெரிஞ்சும் ஏன் நைட் டைம்ல அவன் பங்களாவுக்கு தனியா போறா.. ?

4. தன் பேச்சை கேட்காம காதலி வில்லன் பங்களாவுக்கு போய்ட்டு வந்த பின் ஹீரோ கோவிச்சுக்கவே இல்லையே? ஏன் அப்படி பம்பறான்? நானா இருந்தா பளார்னு 2 அறை விட்டு இருப்பேன் .. சாரி இலக்கணப்பிழை.. பளார் பளார்னு 2 அறை விட்டிருப்பேன்


5. சாத்தான் புரொஃபசரை கொலை பண்றதுன்னு முடிவு பண்ணிடுச்சு.. எதுக்கு அவன் கிட்டே கண்ட ராமாயணம் எல்லாம் பேசிட்டு ஜவ்வு இழுப்பு இழுக்குது.. பட்டுன்னு முடிக்கறதுக்கென்ன நோக்காடு?


சி.பி கமெண்ட் - முதல் 2 பாகம் பார்க்கற அளவு இருந்துச்சு.. இது மகா மட்டம்.. குப்பை.. போயிடாதீங்க.. 

 இதை ஈரோடு வி எஸ் பில பார்க்கலை, கலைஞர் டி வில  போன வாரம் வெள்ளிக்கிழமை நைட் 10 மணிக்கு பார்த்தேன் ஹி ஹி . 2001 ல ரிலீஸ் ஆன படம் போல 


http://www.clickceleb.com/pictures/10000/1770/30727.jpg

மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது
.
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>

ஜூவி சர்வே - ஜெவின் ஓர் ஆண்டு கால ஆட்சி எப்படி? - ஊஊஊஊ

ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா? பெயிலா?

கடந்த சட்டசபைத் தேர்தலில் சுனாமி​யாக எழுந்த மக்களின் எதிர்ப்பு அலை, கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்​படுத்தியது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்... அமோகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டார் ஜெயலலிதா. மே 16-ம் தேதியோடு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்ய இருக்கிறார், ஜெய​லலிதா. இந்த ஒரு வருடத்தில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.


ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தாரா ஜெயலலிதா? அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டதா? இந்த ஒருவருட ஆட்சியின் மீது மக்களின் மதிப்பீடு என்ன? என்று கேள்விகள் எழவே, கருத்துக் கணிப்பு நடத்த முடிவு எடுத்தோம். ஓர் ஆட்சி தன்னுடைய சிந்தனை​களை ஓரளவாவது அமல்படுத்த இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்றாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய பாதையில் இவரது ஆட்சி செல்கிறதா என்பதே இந்தக் கருத்துக் கணிப்பின் நோக்கம்.


ஜெயலலிதாவின் ஆட்சி முறை, முதல்வராக அவரது செயல்பாடு, அமைச்சர்களின் பங்கேற்பு, மின்வெட்டு, கட்டண உயர்வுகள், சட்டம் - ஒழுங்கு, இலவசத் திட்டங்கள், சசிகலா விவகாரம் என்று 18 கேள்விகளை சர்வேயில் முன்வைத்தோம். விகடன் படை  களம் இறங்கியது.

கிராமம், நகரம், மாநகரம் என  எல்லாம் புகுந்து புறப்பட்டு மக்களைச் சந்தித்து வந்தது ஜூ.வி. டீம். ஏப்ரல் 26 தொடங்கி மே 2-ம் தேதி வரை எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் 3,659 பேரிடம் வினாக்களைக் கொடுத்து விடைகளை வாங்கினோம். இதில் பெண்கள் எண்ணிக்கை மட்டும் 1,445.


சர்வே எடுக்கச் சென்ற ஜூ.வி. டீமுக்கு நிறையவே புதுமையான அனுபவங்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கேட்டது, 'ஏங்க... இந்த கரன்ட் பிரச்னை எப்போங்க தீரும்?’


'எங்களுக்கு வேற எதுவுமே வேணாம். கரன்ட் மட்டும் கொடுத்தாப் போதுங்க...’ என்று, மக்கள் கெஞ்சு​கிறார்கள்.


 மின்சாரத்தை அடுத்து, பால், பஸ் மற்றும் மின்கட்டண உயர்வை மிகவும் கடுமையாகச் சாடினார்கள். காரசாரமான விமர்சனங்களை ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் வைத்தார்கள். ஒரு வருடத்துக்கு முன், சிம்மாசனத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மக்கள், இப்போது ஜெயலலிதா மீது அதிக ஆத்திரத்தில் இருப்பதை உணர முடிந்தது.  'இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப் எல்லாம் எங்களுக்கு இன்னும் கிடைக்கலை. எப்போ கொடுப்பாங்க?’ என்று ஒரு சிலரே கேட்டார்​கள். மற்ற அனைவருக்கும் மின்சாரம்தான் முதல் முக்கியத் தேவையாக இருக்கிறது.


ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி என்ற கேள்விக்கு, 'சுமார்’ என்று பதில் சொன்னவர்களே அதிகம். மின்வெட்டுப் பிரச்னையைப் பொறுத்த வரை, 'மோசம்’ என்று சொன்னவர்கள் 47.31 சதவிகிதம் பேர். 'தி.மு.க. ஆட்சியைவிட மோசம்’ என்று சொன்னவர்கள் 37.66 சதவிகிதம். மின்வெட்டுப் பிரச்னைக்கு மட்டும் 84.97 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் 'மின்’ வெப்பத்தில் இருக்கிறார்கள். மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசின் செயல்பாடு எப்படி? என்கிற கேள்விக்கு 'அரசு உரிய அக்கறை காட்டவில்லை’ என்பதே அதிக மக்களின் கருத்து.



புதிய சட்டசபை, அண்ணா நூலகத்தை ஜெய​லலிதா முடக்கியது தொடர்பான கேள்விகளுக்கு, 'தவறு’ என்று அதிகபட்சமாக 50.23 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். பால், பஸ், மின் கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கு 'படிப்படியாக உயர்த்தி இருக்கலாம்’ என்று கருத்து சொன்னவர்கள்தான் அதிகம்.



ஜெயலலிதா ஆட்சிக்கு சாதகமாக ஒரே விஷயம்... நில அபகரிப்புப் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான். தி.மு.க பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட அபகரிப்புப் புகார்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் 'நியாயமானது’ என்று வரவேற்கிறது தமிழகம். ஜெயலலிதா கொண்டுவந்த இலவசங்கள் ஏனோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் போன்ற இலவசத் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, 'மக்கள் வரிப் பணம்தான் வீண் ஆகிறது’ என்று 63.41 சதவிகிதம் பேர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.


இப்படி சர்வே முடிவுகள் நிறையவே ஆச்சர்யங்​களையும் அதிர்ச்சிகளையும் உண்டாக்கி இருக்​கிறது.
(ஜெயலிதாவின் செயல்பாடுகள், சட்டமன்ற நடவடிக்கைகள், சசிகலாவோடு ஜெயலலிதாவுக்கு இருந்த உரசல், அ.தி.மு.க. ஆட்சியின் டாப் 3 பிரச்னை​கள், ஜெயலலிதாவுக்கு மக்கள் போட்ட மார்க் போன்ற சர்வே முடிவுகள் அடுத்த இதழில்...)


ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி பொதுமக்கள் சொன்ன கருத்துகளில் சில இங்கே...


சூர்யகலா, ஆரணி: ''ஒரு பெண்ணை முதல்வர் ஆக்கினால் எங்களைப் போன்ற சாதாரண மக்களின் குறை​களைத் தீர்ப்பாங்கன்னு​தான் ஓட்டுப் போட்டோம். ஆனா, அந்தம்மா ஒரேடியா கரன்ட் கட், பால் விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வுன்னு எல்லாத்தையும் ஏத்திக்கிட்டே போறாங்க. நினைக்கவே வேதனையா இருக்குங்க.''


செந்தில்குமார், சேலம்: ''நிர்வாகச் சீர்திருத்தத்துக்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்காங்க. அது  பாராட்டுக்​குரிய விஷயம். ஆனா, மக்களை நேரடியாகப் பாதிக்கும் பால், கரன்ட், பஸ் கட்டணங்களை ஒரேய​டியாக உயர்த்தினது, மன்னிக்க முடியாத கொடுமைங்க!''



சீனிவாசன், வேலூர்: ''பாலில் இருந்து எல்லா விலைவாசியும் அநியாயத்துக்கு ஏறிப்போச்சு தம்பி. நாங்க ரொம்பக் கஷ்டப்​படுறோம். உண்மையைச் சொல்லணும்னா, ஏன்டா ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டோம்னு வருத்தமா இருக்கு. எல்லாம் எங்க தலையெழுத்து!''


வேல்குமார், காரைக்கால்: ''மாற்றம் வேண்டும்னு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப் போட்டதற்கு, இவ்வளவு கடுமையான ஏமாற்றத்​தைத் தந்திருக்க வேண்டாம். மக்களுக்கு எது தேவை... எது தேவை இல்லை? எது நல்லது.. எது பாதிப்பு? என்று யோசித்து திட்டங்கள் தீட்டி இருக்க வேண்டும். நரேந்திர மோடி மாதிரி வர வேண்டும் என்று ஆசைப்படலாம். எப்படி ஆவது என்று திட்ட​மிட வேண்டும். இப்படிப் போட்டு மக்களைக் கஷ்டப்​படுத்தக் கூடாது.''



நந்தகுமார், கும்பகோணம்: ''தனிப்பட்ட விருப்பு, வெறுப்புல இவங்க கவனம் செலுத்துறதுதான் அதிகமா இருக்குது. தேர்தல் அறிக்கையில் நிறையத் தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிச்​சாங்க. அதெல்லாம் என்ன ஆச்சுன்னே தெரியலை''



லெட்சுமணன், தூத்துக்குடி: ''கடந்த ஆட்சியில் நடந்த ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் ஜெயலலிதாவின் ஆட்சியில் இல்லை என்பது ஆறுதல். சசிகலாவை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்கிட்டதும், ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கை சுத்தமாப் போயிடுச்சு.''


சாந்தி, மதுரை: 'நடு ராத்திரியில கரன்ட் கட் ஆகுதுங்க. தூக்கமே இல்லை. குழந்தைகளை வச்சுக்கிட்டு ரொம்பவும் கஷ்டமா இருக்கு. இதை எல்லாம் நினைக்கும்போது, தி.மு.க. ஆட்சி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுது. எதிர்க் ​கட்சியா விஜயகாந்த் என்ன பண்ணிட்டு இருக்காருன்னே தெரியலை...''



முருகவேல், ஆண்டிபட்டி: ''கடந்த தி.மு.க ஆட்சியை அகற்ற என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அந்தக் குறைகளை மட்டும் உடனடியாக ஜெயலலிதா சரிசெய்திருந்தாலே நல்ல ஆட்சி என்று பெயர் எடுத்திருக்கலாம். அது எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. இலவசங்கள் கொடுத்துவிட்டாலே மக்கள் அமைதியாகி விடுவார்கள் என்று அவர் தப்புக் கணக்கு போட்டு​விட்டார்.''



ரஞ்சித்குமார், திருச்சி: ''மின்சாரமே இல்லாமல் மிக்ஸி, கிரைண்டர், ஃபேனை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு சொல்​லுங்க. இது எதுவும் இல்லாமல்கூட இருந்துடுவேங்க.. ஆனா கரன்ட்டை மட்டுமாவது கொடுக்கச் சொல்லுங்க. மத்த விஷயத்​தைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்.''



கார்த்திக்,ஆற்காடு: ''ஒரு வருஷத்துல அ.தி.மு.க ஆட்சி ரொம்பப் பாடாய்ப்படுத்தி விட்டது. நிம்மதியா இருக்க முடியலை. குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கவே ஆளைக் காணோம். அது எப்ப​டிங்க சசிகலா விஷயத்துல ஜெயலலிதா அவ்வளவு சூப்பரா நாடகம் போடுறாங்க...''



காமராஜ், தர்மபுரி: ''இடைத்தேர்தலில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்னையிலும் ஜெயலலிதா அரசு காட்டி இருந்தால், தமிழகம் சுபிட்சமா மாறியிருக்கும். 'கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்’னு எங்க ஊருப் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அப்படித்தான் இருக்கு இந்தம்மாவோட ஆட்சி.''



சதீஷ்குமார், சென்னை: ''தேர்தல் அறிக்கையில் சொன்ன விஷயங்களை ஓரளவுக்கு நிறைவேற்றி இருக்கிறார்கள். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதும், ஜெயலலிதா மீது எல்லோருக்குமே நம்பிக்கை வந்தது. ஆனால், மீண்டும் அவரை தன்னோடு சேர்த்துக்கொண்டதும், அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது.''



வின்சென்ட் செல்வா, சென்னை: ''நில அபகரிப்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. பஸ் கட்டண உயர்வைத் தவிர்த்து இருக்கலாம். சாதாரண மக்களைத்தான் அந்த விஷயம் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதை ஏன் ஜெயலலிதா உணராமல் போனார்?''
பாகம் 2 
மக்கள் போட்ட மார்க்!

ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்து ஒரு வருடம் முடிந்ததை அடுத்து, 'ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா ஃபெயிலா? அதிர வைக்கும் ரிசல்ட்!’ என்று, கடந்த ஜூ.வி. இதழில் மெகா சர்வே வெளியிட்டோம். ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து மக்களின் மதிப்பீடு என்ன என்பதை அறிவதற்காக, 18 கேள்விகளை உள்ளடக்கிய சர்வே நடத்தினோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகரம், கிராமம் எனப் புகுந்து 3,659 நபர்களைச் சந்தித்தது ஜூ.வி. டீம். இதில் பெண்கள் மட்டும் 1,445 பேர்.   


அதில் 10 கேள்விகள் கடந்த இதழில் வெளியான நிலையில், அடுத்த 8 கேள்விகள் இந்த இதழில்... 'முதல்வராக ஜெயலலிதாவின் செயல்பாடுகள்?’ என்ற கேள்விக்கு, 'ஜெயலலிதா மாறவில்லை’ என்பதைத்தான் அதிகம் பேர் 'டிக்’ அடித்தனர். 'முந்தைய முதல்வர் கருணாநிதியின் செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது ஜெயலலிதாவின் செயல்பாடு...’ என்ற அடுத்த கேள்விக்கு, 'பெரிய வித்தியாசம் இல்லை’ என்றவர்கள் அதிகம்.


சசிகலாவுடன் ஏற்பட்ட பிரிவு, மீண்டும் உறவு காட்சிகளையும் சர்வேயில் கேள்விகளாகச் கேட்டு இருந்தோம். 'சசிகலாவுடனான உரசல்... பிறகு, மீண்டும் இணைந்தது?’ தொடர்பான கேள்விக்கு, 'அவர்களின் தனிப்பட்ட விஷயம்’ என்று சொன்னவர்கள் 41.46 சதவிகிதம். 'சுயநலத்தால் அரங்கேறிய நாடகம்’ என்று சொன்னவர்கள் 40.67 சதவிகிதம். இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் வெறும் 0.79 சதவிகிதம்தான்.


'சசிகலா குடும்பத்தினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்​தியது...?’ என்ற கேள்விக்கு, 'ஜெயலலிதாவுக்குத் தெரியும்’ என்று அதிகம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.


'சசிகலா நீக்கம், சேர்ப்பு விவகாரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் இமேஜ்?’ என்ற கேள்விக்கு 'பாதிப்பு எதுவும் இல்லை’ என்கிறார்கள்.  'சசிகலாவை விட்டு ஜெய லலிதா எப்போதும் பிரிய மாட்டார்’, 'சசிகலா விவகாரத்தில் ஜெயலலிதா எடுக்கும் நடவடிக்கைகள் எப்போதுமே நாடகமாகத்​தான் இருக்கும்’ -


  சர்வே எடுக்கச் சென்ற இடங்களில் எல்லாம், மக்கள் மிகத் தெளிவாகக் இப்படிக் கருத்துச் சொன்னார்கள். ஓர் ஆண்டு ஆட்சியில் நடந்த முக்கிய விஷயங்களை எல்லாம் பட்டியல் போட்டு இதில் எது உங்களை அதிகம் பாதித்தது என்ற கேள்விக்கு அதிகபட்சமாக மின்வெட்டுப் பிரச்னையைக் குறிப்பிடுகிறார்கள்.


'ஜெயலலிதாவின் ஓர் ஆண்டு ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?’ என்ற, மிக முக்கியமான கேள்விக்கு, 'ஜஸ்ட் பாஸ்’ என்று சொன்னவர்கள்தான் அதிகம்.  


ஜெயலலிதாவின் ஆட்சி, அவருடைய செயல்பாடு​கள், மின்வெட்டுப் பிரச்னை, பஸ், பால், மின் கட்டண உயர்வு, புதிய தலைமைச் செயலகத்தை முடக்கியது என்று அரசுக்கு எதிராக கடுமையான கருத்தை சர்வேயில் வெளிப்படுத்திய மக்கள், ஜெயலலி​தாவுக்கு ஜஸ்ட் பாஸ் என்று போட்டிருப்பது ஏன்? சர்வே ஃபாரங்களை நீட்டியதும் எல்லாவற்றுக்கும் தயங்காமல் நம் முன்பே டிக் அடித்தவர்கள், 'ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?’ என்ற கேள்விக்கு, நீண்ட யோசனைக்குப் பிறகே பலரும் மதிப்பெண் போட்டார்கள்.


ஒரு சிலரின் கருத்துக்கள் இங்கே....


கண்ணன், சேலம்: ''கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிர​மிப்புன்னு தி.மு.க. ஆட்சியில் அனுபவிச்ச கொடுமைகளுக்கு அளவே இல்லை. இப்போது சட்டம் ஒழுங்கு சரியா இருக்கு. கட்டப்பஞ்சாயத்தும் நில ஆக்கிரமிப்பும் இல்லை. மக்கள் பயம் இல்லாம நிம்மதியா இருக்காங்க. இதுவே நல்ல விஷயம்தானே!''


குமார், கரூர்: ''சமச்சீர்க் கல்வி விவகாரத்தில் ஜெயலலிதா செய்த குளறுபடிகளை மறக்கவே முடியாது. மாணவர்கள் அனுபவிச்ச கொடுமை​யும் அதிகம். பஸ் கட்டணத்தை நினைச்சாலே, அடிவயிறு பத்திக்கிட்டு எரியுது. இதே மாதிரி ஆட்சி செஞ்சா, ஜெயலலிதா அடுத்த எலெக்ஷன்ல டெபாசிட் வாங்க முடியாது.''



ஆறுமுகம், திருவண்ணாமலை: ''தி.மு.க. ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தா, இந்த அரசு ஏதோ பரவாயில்லைன்னு சொல்லும் அளவுக்கு இருக்கு. நடுராத்திரியில கரன்ட் கட் ஆகி, தூங்க முடியாம வீதியில வந்து உட்காரும் நேரத்தில்தான், ஜெயலலிதா மீது கோபம் கோபமா வருது.''



ஜெயஸ்ரீ, திருச்சி:  ''தி.மு.க. ஆட்சியில் என்னென்ன குளறுபடிகள் செய்திருக்​கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே முதல்வருக்கு ஒரு வருஷம் போதாது. அதை எல்லாம் சரிசெய்த பிறகுதானே, மக்கள் நலனில் அக்கறை காட்ட முடியும்? அடுத்த முறை ஆட்சிக்கு வருவதற்குள் நிச்சயம் அனைத்தையும் முதல்வர் சரிசெய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. விலைவாசி உயர்வு என்பது காலத்தின் கட்டாயம்.''


தீபக், வேலூர்: ''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராப் பக்கம் ஓடிவிட்டதாகச் சொன்னார். இப்போது நடக்கும் கொலைகளையும் கொள்ளைகளையும் பார்த்தால், வெளி மாநிலங்​களில் இருக்கும் ஒட்டுமொத்த ரவுடிக் கும்பலும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதைப் போல இருக்கிறது. ஒண்ணும் சரியில்லீங்க...''



சொக்கலிங்கம், மதுரை: ''காவல் நிலையங்களில் அரசியல் தலையீடு இல்லை என்பது, நான் கண்கூடாகப் பார்த்த உண்மை. தமிழ், தமிழ் என்று சொன்னவர்கள் எல்லாம் செய்யாத விஷயங்களை, ஜெயலலிதா ஆக்கப்பூர்வமாகச் செய்து முடித்திருக்​கிறார். மின் வெட்டுப் பிரச்னை உள்ளிட்ட கஷ்டங்களையும் சொல்லி ஆகணும். வேப்பம்பூ பச்சடி போல இனிப்பும் கசப்பும் கலந்த ஆட்சி இது.''


சரவணன், காரைக்குடி:  ''எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஏமாற்றம்தான் அதிகம். நிலஅபகரிப்பு வழக்குகளில் அதிரடிக் கைதுகள் நடந்ததைப் பார்க்கும்போது, நியாயமான நடவடிக்கை என்று நினைத்தோம்.. ஆனால், உள்ளே போனவர்கள் எல்லாம் அதே வேகத்தில் திரும்பி வந்ததைப் பார்த்தால், அரசின் நடவடிக்கை மீதே சந்தேகம்தான் வருகிறது.''



கண்பத் மோகன், சென்னை: ''சட்டம் ஒழுங்கு பிரமாதமா இருக்கிறதுன்னு முதல்வர் சொல்றாங்க. ஆனால், பட்டப் பகலில் கோடம்பாக்கம் ஏரியாவுல பொண்ணுங்க கழுத்தில் இருந்து சங்கிலியை அறுத்துட்டுப் போறாங்க. இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது? முதல்வர் கையில் இருக்கும் காவல்துறை என்னதான் செய்யுதுன்னே புரியலை?''


 மக்கள் கருத்து  இன் ஜூ வி ஆன் லைன்


1.Sulaiman - Saudia2 Hours ago

 
சும்மா சொல்லக்கூடாது, கடைசியில் பிட் அடிக்க வைத்து பாஸ் மார்க் போட்டு தப்பித்துக்கொண்டீர். சந்தோஷமான விசியமே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் கூட்டம் 5% அளவுக்கு குறைந்து இருப்பது தான். உங்க சர்வே எதிர்கட்சிக்கு வேணுமாலும் சந்தோஷத்தை கொடுக்கலாம், ஆனால் அந்த அம்மாவுக்கு ஒரு இம்மி அளவுக்கும் மன மாற்றத்தை ஏற்படுத்தாது.
 வேணுமானல் ஒரு எதிர்மறையான விளவை ஏற்படுத்தி உம்முடைய அலுவலகத்தில் ரைடு நடக்கலாம். ஆட்சியாளர்கள் விமர்சனங்களை எதிர்க்கொண்டு தன்னை திருத்திக் கொள்ளவேண்டும் என்ற லாஜிக் இந்த அம்மாவிடம் எதிர்பார்க முடியாது. வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்டாச்சு மக்களே இன்னும் ஒரு நாலுவருசத்திற்க்கு இப்படி புலம்பி தீர்கவேண்டியதுதான்.ஒரே ஒரு சின்ன நப்பாசை, அந்த பெங்களூரு தீர்ப்பு சீக்கிரம் வராதா தலைவா!!
2. Appan.
 
திமுக ஆட்சியிள் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. இப்படி நாடு இருந்தால் முன்னேற்றம் இருக்கும். ஆனால் என்ன திமுக அதிகாரத்தை எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் துஸ்பிரயோகம் செய்து விட்டார்கள். இதனால் முன்னெற்றம் இல்லாமல் பகல் கொள்ளையை திமுக செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஜெஜெ ஆட்சியில் அதிகாரம் ஜெஜெவிடமே உள்ளது. இதனால் எந்த முன்னேற்றமும், புதிய புராஜுட்டுகளும்வராது. இப்படி அதிகாரம் குவிக்கப்பட்டால் முடிவு துய்ரமே. சரிதிரத்தில் இப்படி அதிகாரம் குவிக்கப்பட்டு ஆட்சிசெய்தவர்கள் சமூகத்தில் மறக்க முடியாத வடுவை ஏர்படுத்தி உள்ளார்கள். இந்திரா காந்தி இப்படித்தான் செயள் பட்டார். இந்திய சரித்திரத்தில் ஒரு இருண்ட காலம் எமெர்ஜென்சி. அதோடு இந்திரா காலத்தில் இந்தியா மிகவும் பின் தங்கிய நாடாகிவிட்டது. தமிழகம் முன்னேற ஆயிரம் ஆயிரம் ஜெஜெக்கள் தேவை. ஒரு ஜெஜெவால் ஒன்னும் செய்ய முடியாடு. செங்கோடையன், பன்னீர்செல்வம் .. போன்றவர்கலால் காலிள்தான் விழமுடியும். நாட்டிர்க்கு என்ன வேண்டும் என்று சுயமாக சிந்தித்து செயல் பட முடியாது. 
சென்னை மேயர் சைதை துறை சென்னையஒ ஒரு உலகத்தரமான நகரம் ஆக்குவார் என எதிர்பார்த்தார்கள். கடைசியில் என்ன அயிற்று. திமுக சுபிரமணியெனே பரவாக இல்லை என்றாகிவிட்டது. ஐ.ஏ.எஸை உருவாக்கும் சைதை துறை ஏன் திறம்பட செயள்படமுடியவில்லை ?. ஏனென்றால் ஜேஜெ முதலிள் அந்தா ஆள் காலில் விழுவாரா என்று பார்ப்பார். காலிள்விழவிலை என்றால் ஒதுக்கப்படுவார். கலிள் விழும் அடிமை என்ன செய்ய முடியும் ? அவனையே காப்பாற்ற முடியவில்லை பின் நாட்டை பற்றி அவன் எப்படி நினைப்பான்.

3.Sulaiman - Saudia

 
சசிகலா சேர்ப்பு- அவர்கள் தனிபட்ட விசியம்?? - அடப்பாவிங்களா, நாங்க என்ன சர்வேயில் பெட்ரூம் மேட்டரா கேட்டோம்? 

நூற்றுக்கு நூறு போட்ட அந்த 195 பேரின் விலாசம் கொடுங்க பாஸ்.. காலில் விழுந்து கும்பிடனும்...!! 
4.Sriram
போன ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் மக்கள் எந்த அளவுக்கு மனம் மாறி நல்லவர்களாக ஆகி இருக்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுத்து பிரசுரித்தால் நல்லது! மக்கள் கொஞ்சமாவது மாறினால்தானே அரசு மாறும்!
5.dsad
பஸ் கட்டணத்தை நினைச்சாலே, அடிவயிறு பத்திக்கிட்டு எரியுது. ... உங்களுக்கு சம்பளம் மட்டும் வருடா வருடம் கூட்டணும் ஆனா சேவைகளுக்கு அதிகமா விலை குடுக்க மாட்டிங்க.


DIsKI -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
 
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
 
"/>a>

சுஜாதா -வின் அம்மோனியம் பாஸ்பேட் - சிறுகதை ( 1970)

http://diary.typepad.com/.a/6a00e54fce1e91883401287639c376970c-500wi
நாஜி ஸல்யூட் போல நின்ற கான்கிரீட் கம்பங்கள், விண் என்று முடிச்சு முடிச்சாக முள் கம்பிகள், விரோதமாக மூடியிருக்கும் கேட், உள்ளே பசுமைப் பண்ணை,. காற்றில் பயிர்களின் பலவிதப் பச்சைகள். மஞ்சள் பச்சை, எமரால்ட் பச்சை, பாட்டில் பச்சை, கண்மட்டத்துக்கு உயர்ந்த கதிர்கள், ஃபர்லாங் பாதையின் S-Z ஓட்டம். 


அதோ வீடு. வீட்டின் நிழல், மரங்களின் நிழல், நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கும் டிராக்டர்கள். சங்கிலிக் கட்டுப்பாட்டை மீறி ஒருவித தற்கொலை இயக்கத்துடன் எம்பிக் குரைக்கும் ஆக்ரோஷ நாய்கள். ஒரு நாய், இரண்டு நாய். மற்றபடி அமைதி. மறுபடி வீடு. வீட்டினுள் வசதிகள். மத்தியில் அந்தப் பெரியவர். எதிரே நான்.


அவருக்கு வயது ஐம்பதுக்கு அருகில் இருக்கும். தலையின் நரை ஐம்பத்து ஐந்து என்றது. உடலின் வலிமை நாற்பத்து ஐந்து என்றது. ஹாலில் படங்கள் இருந்தன. அவைகளில் சில பக்தியைத் தெரிவித்தன. சில பெண்களைத் தெரிவித்தன.

‘இவ்வளவு பெரிய பண்ணையை நீங்க ஒரு ஆளா சமாளிக்கிறீங்க?’என்றேன் !....த்துடன்.

‘எனக்கு ஒத்தாசைக்கு இரண்டு பேர் இருக்காங்க. வெளியுலகத்துக்கும் எனக்கும் அவங்கதான் தொடர்பு. தபால் சேகரிப்பாங்க. விதை வாங்குவாங்க. உரம் வாங்குவாங்க. மற்றபடி நான்தான் எல்லாம். டிராக்டர் இருக்கவே இருக்கு. அதுக்கு உலகத்திலே உள்ள அட்டாச்மெண்ட் எல்லாம் இருக்கு. நானே உழறேன். 


நானே விதைக்கிறேன்; நானே பயிர் செய்கிறேன்; களைகிறேன்; சேர்க்கிறேன்; எல்லாத்துக்கும் டெக்னாலஜி கொடுத்த சாதனங்கள். மருந்து அடிக்கக் கோயமுத்தூர் ஏரோடிரோமிலிருந்து ப்ளேன் வரும். ஒர்ரே ஓட்டு….என்ன?’


‘நீங்க ஒரு வித்தியாசமான விவசாயி சார்!’


‘மேல் நாட்டிலே இதெல்லாம் சாதாரணம் இல்லையா?’


‘இருந்தாலும் நம் நாட்டிலே ரொம்பப் புதுசுங்க’

‘மிஷின் தம்பி. மிஷின்! மிஷின் இருக்கு; டீஸல் இருக்கு; பணம் இருக்கு. பத்திரிக்கை படிக்கிறதில்லை. பொய்யை எதுக்குப் பைசா கொடுத்துப் படிக்கணும்? ரேடியோவிலே நியூஸ் கேப்பேன். அவ்வளவு தான். லெட்டர் எழுதறதில்லை. இந்த முள் கம்பிக்கு உள்ளே நான்தான் கடவுள். மனித சகவாசம் கிடையாது!’


‘அப்ப எனக்கு அனுமதி கிடைச்சது ரொம்ப பெரிசுன்னு சொல்லுங்க!’


‘ஒரு விதத்துல சரி. நான் வெளியாட்கள் யாரையும் பார்க்கிறது கிடையாது. போனவருஷம் சித்திரை மாசம் ஒருவன் இன்ஸ்யூரன்ஸ் விக்க வந்தான். நாயை அவுத்து விட்டேன்.’


வெளியே ஒரு பெரிய ‘வள்’ கேட்டது.


‘என் மேல நாயை அவுத்து விடலியே?’

‘உரம் விக்க வந்தீங்க. எனக்கு உரம் தேவையாயிருக்கு. கந்தசாமிதான் வாங்கி வருவான். காச்சல்ல படுத்துட்டான். சமயத்துல வந்தீங்க; அதான்…’


‘அதான் உள்ள விட்டீங்களாக்கும். சரியான க்ரெமலின் சார், இந்த இடம்’


‘தம்பி எனக்கு மனுஷங்க வேண்டாம். மோர் சாப்பிடறீங்களா?’


‘வேண்டாம்’ என்றேன். ‘எங்க உரம் அம்மோனியம் பாஸ்ஃபேட் ஸார். தமிழ்நாடு பூரா இப்ப பரவலா உபயோகப்படுத்தறாங்க. நாளைக்கு எங்க வான் வரலாமா உள்ளே…தயங்காம….?’


‘தாராளமா’

‘முள் கம்பியைப் பார்த்தாலே பயமா இருந்தது ஸார். அந்த ஆள் காவல்காரன் என்ன பாஷை பேசறான் அவன்?’


‘அவன் ஒரு நேபாளி…விசுவாசம், பேச மாட்டான்.’


‘என்னவோ கேட்டான்…சரி, நீங்க ஒண்ணு யோசித்துப் பார்த்தீங்களா, ஸார்?’


‘என்ன?’


‘இந்த மாதிரி மெகானிகல் ஃபார்மிங்கினாலே ஒரு 500 ஆட்களுக்கு வேலை கிடைக்கிற வாய்ப்பு போய்விடறதே’

http://thamizhthirai.com/blog/wp-content/uploads/2012/02/347657402-791542.jpg


‘தம்பி, எனக்கு மனுசங்க மேலே நம்பிக்கை போய்டுத்து. மெஷின்ப்பா, மெஷின்! மெஷின் எதிர்த்துப் பேசாது. போட்ட டீஸலுக்கு உழைக்கும்.மெஷின் எப்படி வேலை செய்யறதுன்னு புரியும். மெஷின் விசுவாசம் உள்ளது. மெஷினுக்கு மனசு கிடையாது. சிவப்புக் கொடி கிடையாது. தொழிற்சங்கம் கிடையாது. மீட்டிங் கிடையாது. ரகளை கிடையாது. –எனக்கு மனுசங்க வேண்டாம்’



‘அவங்களுக்கு நீங்க வேணுமே. அதுவும் நம்ப தேசத்துலே அந்த மாதிரி மெஷின் ஆதிக்கம் சரிப்பட்டு வருமா? இந்த மாதிரி நீங்க சிங்கிளா நடத்தறதனாலே எவ்வளவு வேலைவாய்ப்புகள் வீணா போய்டுது…?’


‘தம்பி, ஆயிரம் பேர்க்கு வேலை கொடுத்து ராஜா மாதிரி பண்ணை நடத்திட்டிருந்தேன். இங்கே இல்லை. தஞ்சாவூர் பக்கம்’


‘எப்ப?’

‘சில வருஷங்களுக்கு முன்னாடி’

‘அதை விட்டுட்டீங்களா?’

‘வித்துட்டேன்’

;ஸார் நான் ஒண்ணு கேக்கறேன். கோவிச்சுக்க மாட்டீங்களே?’

‘கேளு’


‘நீங்க இந்த இடத்துலே தனியா வந்து வெளிக் காத்து படாம இருக்கறதுக்கு வேற ஒரு காரணம் இருக்கலாம்னு படறது…’


‘மேலே சொல்லு’


‘ஏதோ ஒரு ஞாபகத்துலிருந்து விலகி நிற்க, மறக்க, நீங்க இங்கே வந்திருக்கலாம்னு எனக்குப் படறது. நீங்க இதுக்குப் பதில் சொல்ல விரும்பலேன்னா வேண்டாம்.’


‘பதில் சொல்றேன். நீ புத்திசாலிப் பையனா இருக்கிறே. எனக்கு புத்திசாலிகளைக் கண்டா பயம்…என்ன படிச்சிருக்கே?’



‘பி.எஸ்.ஸி அக்ரிகல்ச்சர்’-தயங்காமல் பொய் சொன்னேன்.



‘கல்யாணம் …ஆயிடுச்சா?’


‘இன்னும் இல்லே’


‘செய்யாதே. பெண்களை ஒதுக்கு. சினிமா போ. சீட்டாடு, சிதறு. பெண்கள் கிட்ட போகாதே’


‘இதுவரை சந்தர்ப்பம் எதுவும் வரவில்லை எனக்கு’


‘இனிமேலும் வேண்டாம். நான் சொல்றது ஒரு பட்டினத்தார் வெறுப்பினாலே இல்லை. பெண் எல்லாம் பிசாசு என்கிற ரீதியிலே இல்லை. பெண் வேண்டும். ‘செக்ஸ்’ வேண்டும். பெண் இல்லாம நீயும் நானும் அம்மோனியம் பாஸ்ஃபேட்டை இப்ப விலை பேசிக்கிட்டிருக்கமுடியாது. ஆனா வெக்க வேண்டிய இடத்திலே வைக்கணும். எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? ஆசையிருந்தா, அது என் நடைமுறை வாழ்க்கையிலே தொந்தரவு செஞ்சு குறுக்கிடறாப்பில அவ்வளவு தீவிரமா இருந்தா, கோயமுத்தூரிலிருந்து வரவழைப்பேன். அவ்வளவுதான். மறுநாள் காலை மண்ணுக்குத் திரும்பிடுவேன். என்ன பார்க்கிறே? டேஞ்சரான ஆசாமி இவன்னு யோசிக்கிறியா?’ சிரித்தார்.



‘இல்லைங்க. இதுவும் ஒருவித அபிப்ராயம்தான்’


‘நான் அனுபவப்பட்டுச் சொல்றேன். நான் வைத்திருந்தது ஐந்நூறு ஏக்கராப் பண்ணை. கரும்பு கதலி நெல்லுன்னு பசுமையிலே ஜொலிச்சிட்டிருந்த பண்ணைய ஒரு ராத்திரியிலே வித்து தொலைச்சது ஒரு பெண்ணாலே’


நான் பேசவில்லை. அவர் தொடரக் காத்திருந்தேன்.


‘நான் சொன்னேனே பண்ணை-எப்பேர்ப்பட்ட பண்ணை? நூறு மைல் வட்டாரத்துக்குப் பொறாமையால எரிஞ்சாங்க. தகதகன்னு, செழிப்பா, செல்வமா, பண்ணையா அது…! அதிலே என் குமாஸ்தா ஒருத்தன் இருந்தான். பேர் ஷண்முகம். பேரை மறக்க மாட்டேன். அவனுக்குப் பெண் ஒருத்தி இருந்தா, சரஸ்வதி. பேரை மறக்க மாட்டேன். ஷண்முகம் பரம்பரை பரம்பரையா எங்க குடும்பத்துக்கு உழைச்ச குடும்பத்திலே வந்தவன். அவன் என்னை எதுத்துக்கிட்டான். எங்க முப்பாட்டனார் பைசா பைசாவாக சேர்த்தபோது அவனுடைய முப்பாட்டன்தான் கணக்குப் பார்த்தான்.’


‘சரஸ்வதி?’

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXkU7p9U8AXehm8hZdDsi-i2vmjVphqUI-Irx85KQ5IuQ4NrzWzaERGyIo82E_6pMlXtfcujQ20h1a_vazfXPKjRqdO4gqa_5J60kUEW2vZhAg8YcV_emPND4ANfHBhaKsCM9bsHi-wFVV/s400/sujata.jpg


‘ஆமாம், சரஸ்வதி. மறக்கவே மாட்டேன் அவளை. சரியான உயரம். ஏறக்குறைய என் உயரம். என்னிக்கோ ஒருநாள் திடீர்னு அவளை வித்தியாசமா கவனிச்சேன். அவள் பிறந்தது என் பண்ணையிலே, வளர்ந்தது பாவாடை கட்டினது, தாவணி மாறினது, பள்ளிக்கூடம் போனது – எல்லாம் என் ஏரியாவிலேதான். கவனிச்சதே இல்லை.

கவனிக்க ஆரம்பித்தேன். அ! அவதான் என்கிட்டே வந்து கேட்டா, ஞாபகம் வருது. ‘முதலாளி! எங்க அப்பா என் படிப்பை நிறுத்திப்பிட்டாங்க. பத்தாவதுக்கப்புறம் படிக்க வெக்கலை. என்னைக் கட்டிக் கொடுக்க ஆசைப்படறாங்க. எனக்கு படிக்க ஆசை. எங்கப்பாகிட்டே நீங்கதான் சொல்லணும்னு’ ஒரு சாயங்காலம் நான் தனியா நடக்கப் போனபோது நிறுத்தி கேட்டா.

நான் அப்பதான் நிஜமா பார்த்தேன் அவளை.சரியான ஜடை, சரியான நடை. அந்த மாதிரி உடம்பெல்லாம் இப்ப அதிகம் தென்படறதில்லை. உடம்பான உடம்பு, பண்ணையில இருக்கிற இளம் பயல்களையெல்லாம் கரகம் ஆட வெக்கிற உடம்பு, பருத்தி உடுத்தினாலும் அப்படியே, அப்படியே…எனக்கு இதெல்லாம் சொல்ல வராது. நான் அப்ப தனியாள். தனி ஆள்னா பொண்டாட்டி இறந்து போய் வாரிசில்லாம துக்கம் மறைஞ்சு போன முதல் வருஷம்…

அந்தப் பெண்ணோட அப்பன்கிட்ட ‘பணம் தரேன், மேலே குழந்தையைப் படிக்க வை’ன்னு சொன்னேன். அவன் செய்தான். ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்திலே சேர்க்க வைச்சேன். படிச்சது. இரண்டு மூணு வருஷம் விட்டுப்போன படிப்பு, டவுனுக்குப் பஸ்ஸூக்கு என் ஜன்னல் எதிரேதான் நடந்து போவா. பள்ளி வாசனை,டவுன் வாசனை,டூரிங் தியேட்டர் சினிமா வாசனை, பத்திரிகை வாசனை-எல்லாம் சேர்ந்து அவ ஸ்டைல் மாறியது. நடக்கிற விதம் மாறியது. பாவனை மாறியது. எனக்கு முன்னாலே நாளுக்கு நாள் என் விருப்பத்தையும் வெறுப்பையும் தூண்டிக்கொண்டு போவா. விருப்பம் அவள் பெண்மையினாலே. வெறுப்பு என் வயசு வித்தியாசத்தினாலே…’



‘சாயங்கால வேளை தம்பி. செப்டம்பர் மாதம் 8ம் தேதி. மறக்கவே மாட்டேன். அவ வயக்காட்டுப் பக்கம் நடக்கிறா. தனியா நான் நடக்கிறேன். நான் எதிரே வந்ததும் ஒதுங்கறா. ‘இந்தா உன் பேர் என்னன்னு கேக்கறேன், தெரிந்துகொண்டே. ‘சரஸ்வதி’ங்கறா’


‘நல்லா படிக்கிறியா?’


‘நல்லா படிக்கிறேன். ‘சமூகத்திலே எண்பத்தெட்டு வாங்கினேன்’ங்கிறா’


‘சரஸ்வதி உனக்கு நிஜ முத்திலே மாலை போட்டுக்க ஆசையான்னு கேட்டேன். நிஜப் பட்டிலே சேலை கட்டிக்க ஆசையான்னு கேட்டேன். உனக்கு உடம்பு பூரா தங்கம் இழைச்சுக்க ஆசையான்னு கேட்டேன். எப்பவாவது நூறு ரூபாய் நோட்டைக் கண்ணாலே பாத்திருக்கியான்னு கேட்டேன்’



‘புரியலையே முதலாளின்னா, வயக்காட்டு மத்தியிலே ஆள் உயரம் பயிர்களுக்கு நடுவிலே அவளை வீழ்த்தினேன். என்ன பலம் அவள் பலம்! என் பலம் அதைவிட. இருட்டற வேளை. சத்தம் போட்டா கேக்கறதுக்கு சூரியன் கூட இல்லை. குடம் உருண்டுது. முள் குத்தித்து. பருத்தி கிழிஞ்சது. நான் வருத்தப்பட்டேன்.’



‘யாருக்கும் பிரியமில்லை.எனக்கும் பிரியமில்லை. அந்த ஒரு பலவந்தம் என் பாதையையே திருப்பிடுச்சி. என்ன என்னவோ சொன்னேன். பேசாம குடத்தை எடுத்துக்கிட்டா. முகத்தை துடைச்சுக் கிட்டா. நடந்தா. பத்தடிக்கப்புறம் ஓடினா’


‘அவ போய் அவ அப்பங்கிட்ட சொல்லியிருக்கா. அவன் வருஷம் வருஷமா எனக்கு அடிபணிஞ்சவன். என்னை எதிர்க்காதவன்.’


‘ராத்திரி எட்டு மணிக்கு வீட்டு வாசலுக்கு வந்து சத்தம் போட்டான். கூட ரெண்டு மூணு ஆளுங்க கம்பும் கழியுமா வந்து சுழட்டினாங்க. அதிலே ஒருத்தன் தமிழ்ப்புலவன். ‘ஒரு தமிழ்ப் பெண்ணின் கற்பை அழிச்சுட்டீங்களே!யாம். மறியல் பண்ணினாங்க. நான் பெரியசாமியைப் பின்பக்கமா அனுப்பிச்சு, போலீஸ்காரங்களை வரவழைச்சு அவங்களைக் கலைக்கச் சொன்னேன். குச்சியைச் சுழட்டினதும் போய்ட்டாங்க…தம்பி, போர் அடிக்குதா?’



‘இல்லை…இல்லை…தயவு செய்து தொடருங்க’ என்றேன்.


‘தம்பி, கற்பு,காதல்-இந்த மாதிரி வார்த்தைகளையெல்லாம் பத்தி நீ என்ன நினைக்கிறே?’


‘நீங்க என்ன நினைக்கிறீங்க?’



‘அந்த சண்முகம் பய பேசாம வந்து சமரசமா, ‘முதலாளி, நீங்க என் பெண்ணுக்கு இப்படி செஞ்சது நியாயமா?’ன்னு கேட்டிருந்தா, ஒரு வேளை அப்பவே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செஞ்சிருப்பேன். அப்ப அவ கற்பு ‘ஸேல்’ ஆயிடறது. அதாவது வயக்காட்டிலே நேராமல் மேளம் கொட்டி தேக்கு மரக் கட்டிலிலே நடந்தா கற்பு காப்பாத்தப்படுகிறது. இல்லேன்னா, அந்த செயலுக்கு வெறி,காமம்னு பேரு…அதே பெண் எம்.ஜி.ஆர், சிவாஜி படத்தைப் பார்த்துட்டு ஒத்த வயசு வாலிபனோட வயக்காட்டுப் பக்கம் ஒதுங்கினா காதல், அதைப் பத்திப் பாட்டு பாடலாம். ஒசத்தியா எழுதலாம். இல்லையா?’



‘அதுவும் ஒரு அபிப்ராயம்தாங்க’



‘மறியல் செஞ்சாங்க. ஒழிக ஒழிக சத்தம் போட்டாங்க. எனக்கு வெறுப்பு ஏறிப்போச்சு. இந்தச் சண்டை பெரிசாப் போச்சு. பண்ணை ஆளுங்க பல பேர் ஒரு கட்சியா கூடிக்கிட்டாங்க. அவங்களுக்கு அந்தச் சம்பவம் ஒரு சாக்கு. அவங்களைத் தூண்டிவிட்டவன் வேறு ஒருத்தன். என் பங்காளி, கோர்ட்டிலே தோத்துப்போனவன். இதாண்டா சமயம்னு சில்லறை ரௌடிப் பசங்க சில பேரையும் சேர்த்து அனுப்பி மறுநாள் ராத்திரி களத்துல தீ வச்சுட்டாங்க.

எவ்வளவோ பேர் சாப்பிடற நெல்லு…கருகிப் போச்சு. எனக்கு ரத்தத்திலே சூடேறிப்போச்சு. பார்த்தேன். அவங்களுக்கு சோதாப் பசங்க கிடைச்சா எனக்கும் கிடைக்க மாட்டாங்களா? அதுவும் பணம் என் பக்கத்திலே இருக்கு. ஆளுகளை விட்டு அந்த ஷண்முகத்தையும்-அதான் அந்த பொண்ணோட அப்பன், ஜெயராஜ்னு இன்னொருத்தன் அவனையும் ஒண்ணுலே ரெண்டு தீர்த்துட்டு வாங்கடான்னு சொல்லிட்டு, மெட்ராஸ் போய்ட்டேன். அந்தப் பசங்க குடுத்த காசுக்கு கொஞ்சம் அதிகமாகவே அடிச்சுப் பிட்டாங்க.



ஷண்முகம் ரத்த சேதம் ஜாஸ்தியாகி ஒரு வாரத்திலே ஆஸ்பத்திரியிலேயே காலமாய்ட்டான். செத்தே போய்ட்டான். பெரியசாமி ரயிலேறி வந்து என்கிட்டே சொல்றான். எனக்கு திக்குனு போச்சு. பண்ணை பூரா சூறையாடறாங்க. போலீஸ் கேஸ், அது இதுன்னு ரகளையாப் போச்சு…’


‘போலீஸ்லே கேஸ் பதிவாச்சு. ஷண்முகத்தை அடிச்சவனைப் பார்த்தவன் யாருமில்ல. நான் ஊரிலே இல்லை. ஜெயராஜ் காட்டிக் கொடுத்த ஆளைக் கைது செஞ்சாங்க. வக்கீல் பிச்சு உதறிப்பிட்டான். கேஸ் தள்ளுபடியாச்சு. ஒண்ணும் நடக்கலை. விரோதமும், நெருப்பும், அனாவசிய மரணமும்தான் மிச்சம். பார்த்தேன்.



இந்தப் பண்ணையை இனிமே நாம் ஒழுங்கா நடத்த முடியாதுன்னு ஒரே நாள்ல எல்லாத்தையும் சப்ஜாடா வித்தேன். அத்தனை ஏக்கராவையும் வித்தேன். ஊரையே விட்டுட்டேன். எங்கே போறேன்னு சொல்லலே. ஜில்லா மாறினேன். நடுநடுவே மெட்ராஸ் வந்து கொஞ்சம் பல்லாவரத்திலே ஜல்லி அடிச்சுப் பாத்தேன். சரிப்பட்டு வரலை. டயர் ரிட்ரெடிங் எடுத்தேன். அதுவும் தோல்வி. அப்புறம் லாரி வாங்கி ஓட்டினேன். ம்ஹூம்..எனக்கு ஏத்தது பூமிதான்னு வேற ஜில்லாவிலே-‘லாண்ட் ரிஃபார்ம்’ வந்துவிட்டது


-அதனாலே கொஞ்சமா நிலம் வாங்கி சொந்தமா தனியா மத்த ஜனங்க வாசனை இல்லாம நடத்தறேன். முதல்லே முள்கம்பி போட்டேன். கூர்க்காவை வச்சேன். நாயை வாங்கினேன். டிராக்டரை வாங்கினேன். ரொம்ப தனியா இருக்கேன். நிம்மதி. ஒரு பெண்ணை கட்டிட்டு வாழறதுக்கு பதிலா மண்ணை உழலாம்’ என்றார்.


சிரித்தேன். வெளியே பார்த்தேன். மிகத் தனியாகத்தான் இருந்தோம். வெகு தூரத்தில்-வெகு தூரத்தில் அந்த வேலியோரம் இருந்தது.



நான் கேட்டேன்.’அப்புறம் அந்தப் பெண் என்ன ஆனாள்?’



‘தெரியாது. அப்பன்தான் அடிபட்டு செத்தான் பைத்தியக்காரத்தனமா. அவனுக்கு அந்தப் பெண்ணும் ஒரு பையனும். பையன் பட்டணத்திலே படிச்சிட்டிருந்தான். அந்தப் பையன் நான் பார்த்ததில்லே. அவ தம்பிக்காரனோட பட்டணத்துக்குப் போயிட்டா. அவளுக்கு கல்யாணமே ஆகலே. வாத்யாராய் இருக்கான்னு கேள்விப்பட்டேன். எப்ப? அப்ப. அவ தம்பிக்காரன் ஒருத்தன் இருக்கானே, அவன் எனக்கு ஒரு லட்டர் எழுதினான். கன்னாபின்னான்னு ‘உன்னை ஜில்லா ஜில்லாவா துரத்தி வந்து பழிவாங்கப் போறேன்னு…எனக்காக காத்திரு’ அப்படி இப்படின்னு….அவன் பேர் கூட நாகராஜனோ என்னவோ…’


‘நடராஜன்’ என்றேன்.


‘ஆ! நடராஜன், நடராஜன்! உனக்கெப்படித் தெரியும்?’



‘நான்தான் நடராஜன்’என்றேன்.


நன்றி - மாயன் - அகமும் ,புறமும்  அண்ட் உயிர் மெய் பதிப்பகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtYQSE9DSbfbiFWu7N13Aj1Tl286LCLSFAwdPsahw38wAFh0V1NYInAGhEM4FHhVSmwA2P5c6CQnGZS829ZPomgd4VRCJ72AE8oBVDSWx8bjt4lom2a2ETBKGc6uvOISydlnxF82q3rUJB/s320/writer+sujatha+family+1.jpg A

டிஸ்கி -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது
.
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>

பப்ளிக்கா லிப் டூ லிப் கிஸ் அடிக்க ஏன் இந்தியக்காதலர்கள் தயங்கறாங்கன்னா......

Senthil Kumar was tagged in Str's photo.
1.அத்தான்,என்னால சமையலையும் பண்ணிட்டு, குழந்தையையும் கவனிக்க முடியாது..


ம்க்கும், டி வி சீரியல், ப வீ சண்டை  மட்டும் கவனிக்க முடியுதா?


------------------

2. சேலம், நாமக்கல்லில் தங்கம் இருக்கிறதா? கனிமவளத்துறை ஆய்வு  # நாமக்கல்லுல நாமம் தான்யா இருக்கும்


-----------------------------

3. பலநாள் காதலி ஒரு நாள் அகப்படுவாள் # ஹி ஹி ஹி


---------------------------

4. பாமக எதிர்ப்பு எதிரொலி: விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் # இடுப்புல ஆம்லெட், தோசை  சுடற சீனை எல்லாம் விட்டுடுவாங்க..


---------------


5. கலகலப்பு படத்தில்  சந்தானம் காமெடி வில்லனாம்! #  அப்போ ஓவியாவும், அஞ்சலியும் காம நெடி ஹீரோயின்ஸா?


----------------------------

ஃபேஸ்புக்கில் தற்போது பரவும் படம் - மூன்று நாடுகளை பிரிக்கும் ஆறு http://pic.twitter.com/BVzKQx1b- புரட்சிக்கனல்


6. கே -பப்ளீக்ல  பஸ்ல புருஷனோ காதலனோ உரசுனா தப்பில்லையா ?

  ப - இல்லை, அந்த ஃபிகரோட சொந்தப்புருஷன்னா தப்பில்லை ஹி ஹி


---------------------

7. டவுன் பஸ்ஸில் ஒரு மறத்தமிழன் - XQS  மீ மிஸ் உங்க பேரு தமிழச்சியா?



நோ நோ ஏன் கேட்கறீங்க?


 சும்மா ஒரு பாதுகாப்புக்குத்தான் # சரசு உரசு


-----------------------

8. நித்யானந்தரால் இந்துக்கள் தலைநிமிர்ந்து நடக்கின்றனர் : இந்து மகா சபா #  ஆமா, பெண்கள் கர்ப்பமா இருக்கறப்ப அப்டித்தான் நடப்பாங்க



--------------------------


9.ஒரு ஃபிகரை கரேக்ட் பண்ணுனா நீ சராசரி மனிதன், பல ஃபிகர்ஸை கரெக்ட் பண்ணுனா நீ ஆதீனம் # நீதி - சாமியார் ஆகு


---------------------------------

10. ஊரே பயப்படும் டான் (DON) கிட்டே சாவி குடுத்தா என்ன ஆகும்?  


DON + KEY = DONKEY - கழுதை ஆகிடுவாரு


-----------------------


11. இலக்கியக்கூட்டத்துல ஓ சி சோறு உண்டா? 


 நீ இலைக்கியவாதியா? ”இலை”க்கிய வாதியா?


------------------------------

12. மேடம், உங்களை படங்கள்ல பார்க்கவே முடியலையே?  


தமனா - ஹி ஹி, இந்தாங்க ஆல்பம், இதுல 800 படங்கள் இருக்கு


-----------------------------------

13. குருவே! டீன் ஏஜ்லயே நீங்க ஆன்மீக ஜோதில கலந்துட்டீங்களா?  


நித்தி - நோ நோ அது பரங்கிமலை ஜோதி தியேட்டர்.. ஹி ஹி

-----------------------

14.இயற்கை மரணம் என்பது நம் முதல் காதல் நம் கண் முன்னே நிராகரிக்கப்படும்போது நமக்குள் நிகழ்வது


------------------------------


15. அகத்தின் அழகை முகத்தில் காணலாம், முகத்தின் அழகை உதட்டின் புன்னகையில் காணலாம்


------------------------------


· ·

16.  சமையல்,கோலம் ,சீரியல்,அக்கம்பக்க வம்புகள் பற்றிப்பேசுவதும் சிலாகிப்பதும் பெண்ணுக்குப்பொழுதுபோக்கு, ஆணுக்கு சலிப்பு


-------------------------------

17. பப்ளிக்கா லிப் டூ லிப் கிஸ் அடிக்க ஏன் இந்தியக்காதலர்கள் தயங்கறாங்கன்னா இதழ்கள் பிரைவேட் பிராப்பர்ட்டி என்பதால்


------------------------


18. தீபிகாவுடன் எனக்கு நெருக்கமான காட்சிகள் வேண்டாமே - மகளுக்கு ரஜினி அட்வைஸ்! # 3 பட ஷூட்டிங்க்கை நல்லவேளை தலைவர் பார்க்கலை


-----------------------------

19. தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லைனு யாரும் கூற முடியாது-ஜெ #  கூப்பாடுக்கும்  வழி இல்லை மேடம், அதான் பார்வையிலேயே அடக்கிடறீங்களே


----------------------------

20. வடம் பிடிச்சு இழுத்தாத்தான் தேரு, அடம் பிடிச்சதையும் மடிச்சாத்தான் ஃபிகரு, உன்னால முடியலைன்னா நீ நகரு # கேனத்துவம்



----------------------------------



21.இங்கு இதம், அங்கு இதம், எங்கும் இதம் என சொல்லித்தருவதால் இங்கிதம் அறிந்ததே காதல்


--------------------------------------------------------------------------



22. பெண்களுக்கு மாமா பையனை பிடிப்பதில்லை, ஏன்னா தோழிகள் யார்டி இவன்? மாமாப்பையனா?ன்னு கிண்டல் பண்ணுவாங்களேன்னுதான்


-----------------------

23.விஜய் டி வியின் அடுத்த புரோகிராம் - உங்களில் யார் அடுத்த ஆதீனம்? போட்டிக்கு வருபவர்கள் மாற்று உடையுடன் வரவும் :)


--------------------------

24. மிஸ்.. ஆக்டிவா ஓட்டிப்பார்த்தீங்க ஓக்கே, ஆஃபீஸ்ல ஆக்டிவா ஒர்க் பண்ணுனிங்களா? # சும்மா 


------------------------

25.மனைவியா, துணைவியா??... புது பிரான்ஸ் அதிபருக்கு வந்த முதல் சோதனை! # தமிழ் இனத்தலைவா! வழி காட்டிடுக!


-------------------------

ட்



26. வரவேற்பு வளைவு வைத்து சாலைகளை தோண்டாத அரசு : ஜெ விளக்கம் #விளம்பரம் பண்ணிக்கறதில்லைன்னு அடிக்கடி விளம்பரம் பண்ணிக்கறீங்களே மேடம்?


---------------------

27. நெல், கோதுமை வீணாவது உண்மையே என அரசு ஒப்புதல் #வீணாப்போன அரசு


---------------------------

28. "கருணாநிதியால் நடுத்தெருவில் நிற்கிறோம்' : "மாஜி' புலம்பல் # ஓரமா நில்லுங்க, 108 வேகமா வந்துட்டு இருக்கு


--------------------------

29. நான் ஏன் கவர்ச்சியா நடிக்கறேன்னு யாரும் கேட்ட கூடாது- காஜல் அகர்வால் # ஓக்கே மேடம், அட்லீஸ்ட் அதை பார்க்கலாம்ங்களா?


-------------------

30.     என்னுடன் ஜோடியா நடிச்சா உடனே கல்யாணம்! - தமன்னா # ஆல்ரெடி  மேரேஜ்  ஆனவங்களுக்குமா? மேடம்?


---------------------------------


தலைவலி #fb source:nagarajanjayam
டிஸ்கி -

diski -

மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது 
.
http://www.hotlinksin.com
 திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன்  திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>