Wednesday, February 08, 2012

ரஜினியை கலாய்த்த சாரு நிவேதிதா,சாருவை கலாய்த்த ரஜினி ரசிகன்

http://www.tamilcnn.com/upload-files/feb_2012/hot/kochadaiyaan.jpg

சாரு -எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது பற்றி நான் விமர்சித்துப் பேசியதைப் பலரும் பலவாறு புரிந்து கொண்டுள்ளனர்.  அது பற்றிய என் விளக்கமும், ரஜினியிடம் நான் கேட்ட சில கேள்விகளும் இங்கே:


சி.பி - என்னது? உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களா? பேடு பாய்ஸ்.. சரியா புரிய வெச்சிடலாம் 

1.இலக்கிய விழாவில் சினிமா கலைஞர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை.  அப்படிச் சொல்வதற்கு நான் யார்?  இது ஒரு ஜனநாயக நாடு.  எந்த விழாவிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  ஆனால் அப்படிக் கலந்து கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?  துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார்.  எப்படி?  பார்வையாளர்களில் ஒருவராக.  ஆனால் எஸ்.ரா. விழாவில் ரஜினி கலந்து கொண்டது எப்படி?  அது பற்றியே என்னுடைய கேள்விகள்.



சி.பி - விழாவில்  கலந்து கொள்வது எல்லாம் அவங்கவங்க விருப்பம்.. அதுல எல்லாம் நொட்டு சொல்லிட்டு இருந்தா எப்படி?


அழைப்பிதழிலேயே தகராறு.  ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு, எஸ்.ரா. படத்தைச் சிறிதாகப் போட்டிருந்தார்கள்.  இப்படிச் செய்வது எழுத்தாளனை செருப்பால் அடிப்பதற்குச் சமம் என்று எழுதியிருந்தார் ஞாநி.  நடந்து முடிந்த பாராட்டு விழா எஸ்.ரா.வுக்கா? ரஜினிக்கா?


சி.பி - யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கோ அவங்க ஃபோட்டோவை, பேரை பெருசா போஸ்டர்ல போட்டா இன்னா தப்பு?போஸ்டரை பார்க்கற ஜனங்களுக்கு ரஜினி வர்றது தெரிஞ்சா போதும், விழாவுக்கு வந்து பார்த்து எழுத்தாளரை தெரிஞ்சுட்டுப்போறாங்க.. 

தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த பெயர் ரஜினி.  அடியேனுக்கும் அவருக்கும் ஓரிரு ஒற்றுமைகள் உண்டு. 

சி.பி - பாவம், ரஜினி , ஆளாளுக்கு அவரை ஒப்புமைப்படுத்தறாங்க அவ்வ்வ் இன்னும் கொஞ்ச நாள் போனா வி சாரதி டேச்சு ஆனந்த விகடன்ல எழுதுன கடி ஜோக் போல ஆகிடும்

நானும் ரஜினியும் ஒரே இலைல தான் சாப்பிட்டோம்

அடடே.. அவ்ளவ் நெருக்கமா?

ச்சே. ச்சே.. அவரும் வாழை இலைல தான் சாப்பிட்டார், நானும் வாழை இலைல தான் சாப்பிட்டேன்.

என்னைப் போலவே அவரும் வெள்ளந்தியான மனிதர்.  மஹா அவ்தார் பாபாவைத் தொழுபவர்.  மற்றும் இமயமலைப் பயணம்.  அவரிடம் நான் வியந்து பாராட்டும் பண்பு அவரது எளிமை. மற்றும் போலித்தனமோ பாசாங்கோ இல்லாத தன்மை.  பத்திரிகை நிருபர் வருகிறார் என்றதும் லேண்ட்மார்க்கில் granta தொகுப்புகளை வாங்கி மேஜையின் மீது வைத்து விட்டு பத்திரிகையாளரிடம் பேச்சுக்குப் பேச்சு “க்ராண்டாவெல்லாம் படிக்கிறோம்… இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் புரியவில்லையே” என்றெல்லாம் பாசாங்கு செய்ய மாட்டார் ரஜினி. 

சி.பி - சாரு ரஜினியை பாராட்ற ,மாதிரி ஏதோ ஒரு எழுத்தாளரை தாக்கறாரு.. இதான்யா தமிழன் பண்பாடு.. அடுத்தவனை தாக்காம ,மாற்றான் தோட்டத்து மல்லிகையை  நோக்காம தமிழனால இருந்துட முடியாதே?


அவர் நடிப்பது திரையில் மட்டுமே.  ரஜினியின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும்.  அபூர்வ ராகங்களிலிருந்து பதினாறு வயதினிலே, தளபதி வரை பல படங்களில் அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன்.


பொதுவாழ்விலும் தன் சொந்த வாழ்விலும் அற இயல்பை (ethics) வெளிப்படுத்தும் ரஜினி எஸ்.ரா. விழாவில் தனக்கு நடந்த ஜால்ரா புகழ்ச்சியைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? ”இது எனக்கு நடக்கும் பாராட்டு விழாவா? எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவா?” என்று கேட்டிருக்க வேண்டாமா?  எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் என் புகைப்படத்தை ஏன் பெரிதாகப் போட்டீர்கள் என்று கண்டித்திருக்க வேண்டாமா?  அழைப்பிதழில் என் படமே வந்திருக்கக் கூடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா?


சி.பி - சரி ஒரு வாதத்துக்காக கேட்கறேன், உங்க புத்தக வெளீயீட்டு விழாவுல ரஜினி பேச ஒத்துக்கறார், இப்போ சொன்ன அதே கண்டிஷன்ஸை நீங்க ரஜினிக்குப்போடுவீங்களா? அல்லது அவர் வந்தாலே போதும்னு நினைப்பீங்களா? விழாவுக்கு அவரைப்போல் வி ஐ பிங்களை அழைப்பதன் நோக்கம் மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுக்கத்தானே, அதுல என்ன தப்பு இருக்கு?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8AAvKaSncrIfslOXuIwYPRzkZBTDEhMKZfAHMsdr0VZu42BwcZrmZHNm5bBA71b-pBuku7saQZd5V-5VEjw-8ke-8a4LRoTWB52T_pA0AztD55Qw2N19n1P1LVvZW_Ox4_YggWTmvayg/s1600/Balu-mahendra-010808.jpg
எஸ்.ரா.வுக்கு நடந்த பாராட்டு விழாவில் எஸ்.ரா.தானே கடைசியில் பேச வேண்டும்?  அதுதானே நடைமுறை?  அதை விட்டு விட்டு ரஜினியைக் கடைசியில் பேச அழைத்தது ஏன்? 

சி.பி - சார்.. உலக நடப்பு தெரியாம, தமிழனை பற்றி சரியா புரியாம பேசக்கூடாது.. ரஜினி பேசிட்டா எல்லாரும் கிளம்பிடுவாங்க.. கூட்டமே  இல்லாத கடைல யாருக்காக டீ ஆத்துவீங்க? 




சாருவும் சினிமா கலைஞர்களை விழாவுக்கு அழைக்கிறார் என்று கூறுபவர்களையும் ரஜினிக்குப் பாராட்டு விழா நடத்தியவர்களையும் கேட்கிறேன்.  இன்னொரு முறை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்தி, அதில் ரஜினிக்குப் பிறகு எஸ்.ரா.வைப் பேச அழைக்க முடியுமா?  உங்களிடம் அந்தத் துணிச்சல் இருக்கிறதா?  இதை ஒரு சவாலாக உங்கள் முன் வைக்கிறேன். கருணாநிதியைப் போல் வார்த்தைகளில் பதில் சொல்லி விளையாடாமல் செய்து காட்டுங்கள்.  அல்லது, ரஜினியை ஏன் கடைசியாகப் பேச அழைத்தீர்கள் என்று நேரடியாக பதில் சொல்லுங்கள்.  ஏன் என்றால், எஸ்.ரா.வுக்கு முன்னால் ரஜினியைப் பேச அழைத்தால் அரங்கம் காலியாகி விடும்.  அந்தக் கூட்டம் எஸ்.ரா.வுக்காக வந்தது அல்ல; ரஜினிக்காக வந்தது.


சி.பி - அட, நீங்களும் அதுதான் சொல்றீங்களா?  சரி.. அதுல என்ன தப்பு  இருக்கு? 

இதையும் ரஜினி மேடையில் கண்டித்திருக்க வேண்டும்.  கண்டிக்கவில்லையானாலும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.  எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் எஸ்.ரா.தான் கடைசியில் பேச வேண்டும் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும்.   ஏன் அவர் இதைச் சொல்லவில்லை?  துக்ளக் விழாவில் ரஜினியா கடைசியில் பேசுகிறார்?  அங்கே அவர் வெறுமனே பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்.  அப்படியானால் இலக்கியம் என்றால் அவ்வளவு மட்டமாகப் போய் விட்டதா?  எல்லோரையும் புத்தகம் படிக்கச் சொல்லி அறிவுரை சொன்ன ரஜினியே இலக்கியவாதிகளை அவமதிப்பது போல் நடந்து கொள்ளலாமா?



சி.பி - இந்த மாதிரி வம்புகள் வரும்னு தான் அஜித் மாதிரி சிலர் பொது நிகழ்ச்சிகளுக்கு வர்றதையே அவாய்டு பண்றாங்க போல.. எது செஞ்சாலும் அதுல ஒரு குத்தம் கண்டு பிடிச்சுட்டு.. 


தன் பேச்சில் தாமஸ் ஆல்வா எடிஸன் பைபிள் படித்தது பற்றிக் குறிப்பிட்டார் ரஜினி.  அவர் பைபிள் படித்ததில் ஆச்சரியம் என்ன?  அவர் பகவத் கீதை படித்திருந்தால்தானே ஆச்சரியம்?  மேலும், படிப்பு என்பது ஆன்மீகப் புத்தகங்களைப் படிப்பதா?  ஊருக்கு ஒன்பது பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  அங்கே பயிலும் மாணவர்களும் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?  அதுவும் இலக்கியமும் ஒன்றா? தமிழர்கள் பல துறைகளில் படிப்பாளிகளாக இருந்தாலும் இலக்கிய வாசிப்பு அவர்களிடம் அறவே இல்லை என்பதுதானே நூறு வருடங்களாக இங்கே இருக்கும் நிலைமை?


சி.பி - இலக்கிய வாசிப்பு தமிழனிடம் குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க, அறவே இல்லைன்னு சொல்லாதீங்க.. வருடா வருடம் புத்தகத்திருவிழாவில் புக்ஸ் விக்குதே?


புத்தக விழாக்களில் மக்கள் கை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறார்கள்.  ஆனால் அதெல்லாம் சமையல், ஆன்மீகம், டிக்‌ஷனரி, பாடப் புத்தகங்கள் போன்றவையாக இருக்கின்றனவே?  மற்ற மாநிலங்களில் இப்படியா நடக்கிறது?  சரி, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.  கன்னடத்துக்கு மட்டும் எப்படி எட்டு பாரதீய ஞான பீடப் பரிசும் தமிழுக்கு இரண்டும் கிடைத்தது?  தமிழர்கள் இலக்கியம் படிப்பதில்லை; தமிழர்களுக்கு சினிமா தான் எல்லாம் என்பதைத்தானே இது காட்டுகிறது?  இப்படிப்பட்ட நிலையில் நீங்களும் ஆன்மீகம் படிப்பதுதான் படிப்பு என்றே புரிந்து கொண்டு எப்படி ஒரு இலக்கிய விழாவில் பேசுகிறீர்கள்?

 சி.பி - ரஜினி ஒண்ணும் ஆன்மீகம் மட்டும் படிங்கன்னு மேடைல சொல்லலையே? அவருக்குத்தெரிஞ்சதை அவர் சொன்னார்.. அதுல என்ன தப்பு? நீங்க எழுதுன ஃபேன்சி பனியன் நாவல்ல கில்மா எதுக்கு? தவிர்க்கவும்னா நீங்க கேப்பீங்களா? அவங்கவங்க எதுல டேலண்ட்டோ அதுல பேச்சு, பழக்க வழக்கம் வெளிப்படறது  சகஜம் தானே?

http://www.kollytalk.com/wp-content/gallery/rajini-at-s-ramakrishnan-felicitated-event/rajini-at-s-ramakrishnan-felicitated-event-27.jpg

மதிப்புக்குரிய ரஜினியிடம் இன்னொரு கேள்வி:  இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா?  கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா?  இப்படி ஒரு எழுத்தாளரிடம் ஏமாந்து போனதால் தான் உங்களை வெள்ளந்தியான மனிதர் என்கிறேன்.  இப்போதாவது அந்த விருதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள்.  என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாக சொல்லிக் கொள்ளலாமா?  சமீபத்தில் கூட சிங்கப்பூரில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் முஸ்தஃபா கடையிலிருந்து எனக்கு ஒரு சிங்கப்பூர் பனியன் கொண்டு வந்து கொடுத்தார்.  உடனே நான் சர்வதேச பனியன் கிடைத்து விட்டது என்று சொல்லி ஒரு விழா வைத்தால் அதற்கு நீங்கள் வருவீர்களா?

சி.பி - மேடை நாகரிகம் கருதி ஏதோ பேசிட்டார்.. அதுல போய் குறை சொல்றீங்களே? சக எழுத்தாளர் மேல அப்படி என்ன வயிற்றெரிச்சல் உங்களுக்கு? 


நோபல் பரிசு, மேன் புக்கர் பரிசு போன்ற விருதுகளைத்தான் நாம் சர்வதேச விருதுகள் என்று சொல்ல முடியும்.  உதாரணமாக, புக்கர் பரிசு எப்படிக் கொடுக்கப்படுகிறது என்றால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் வெளியாகியுள்ள பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களையும் பரிசீலித்து அவற்றில் சிறப்பானவற்றை long list செய்கிறார்கள்; பிறகு அதிலிருந்து ஒரு short list வருகிறது.  பிறகு அந்த குறும்பட்டியலிலிருந்துதான் ஒரே ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப் படுகிறது.  இதேபோல்தான் ஏஷியன் மேன் புக்கர் விருதும்.  ஆசியாவிலிருந்து வெளிவந்த நாவல்களிலிருந்து  (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை) ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  முதலில் long list… பிறகு short list.  கடைசியில் ஒரே ஒரு நாவல்.  அதற்குப் பெயர் கூட சர்வதேச விருது அல்ல; Asian Man Booker…  அது ஒரு ஆசிய விருது.  அவ்வளவுதான்.  எனவே இயல் விருது என்பது நம்முடைய கலைமாமணி விருதுக்கு சமமான ஒரு விருது என்பதே உண்மை.


சி.பி- குஷ்பூ கூட கலைமாமணி தான், போற போக்கை பார்த்தா அங்காடித்தெரு அஞ்சலி,ஆடுகளம் டாப்ஸினு ஆளாளுக்கு கலைமாமணி விருது வாங்கிடுவாங்க போல 

இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், ”ரஜினி மிகப் பெரிய எழுத்தாளர்” என்று ராமகிருஷ்ணன் சொன்னதுதான்.  இதையாவது நீங்கள் கண்டித்திருக்க வேண்டாமா?  கண்டித்திருந்தால் உங்கள் மதிப்பு கூடுமே ஒழிய குறைந்திருக்காதே?  அரசியலில் இப்படிப்பட்ட வீண் முகஸ்துதிகளை நீங்களே விரும்பியதில்லையே?  அப்படியிருக்க, உங்களை ஒரு ஒருவர் “மிகப் பெரிய எழுத்தாளர்” என்று சொன்னபோது உங்களுக்குக் கூச்சமாக இல்லையா?  நல்லவேளை, நீங்கள் பதிலுக்கு எஸ். ராமகிருஷ்ணனை “மிகப் பெரிய நடிகர்” என்று புகழவில்லை.  அப்படிப் புகழ்ந்திருந்தால் அது புகழ்ச்சிக்குப் பதிலாக வேறு விதமாக அர்த்தமாகி இருக்கும்…


பாவம், தமிழ் எழுத்தாளர்கள் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போக வேண்டியதில்லை.

சி.பி - உங்களைக்கூட நிறைய பேரு நல்ல கண்ணியமான எழுத்தாளர்னு சொல்றாங்க.. அதை யாராவது தட்டிக்கேட்டாங்களா? சார்.. மேடைல கொஞ்சம் உயர்வு நவிற்சியா ஏதாவது சொல்றதுதான்.. அதை எல்லாம் லைட்டா எடுத்துக்கனும். மோர் சாப்பிடுங்க லைஃப் நல்லாருக்கும்..வயிறு எரியாது

சீன் படம் பார்த்த மினிஸ்டர் - கில்மா செமஸ்டர் - காமெடி கும்மி

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல்போனில், ஆபாச படம் பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த, பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் உற்சாகமாகப் பார்த்தார்.


சி.பி - யோவ், அது கர்நாடகா சட்டசபையா? ஈரோடு நடராசா தியேட்டரா? ந்கொய்யால.. மக்கள் வரிப்பணத்துல அங்கே போய் உக்காந்துட்டு பிட்டுப்படம் பார்த்துட்டு இருந்திருக்கானுங்க ராஸ்கல்ஸ்.. 

கர்நாடக சட்டசபை கூட்டத்தில், நேற்று மதியம்,எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். சித்தராமையா பேச்சை, முதல்வர் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, அமைச்சர் கோவிந்த் கார்ஜோல், "காங்கிரஸ் ஆட்சியின் போதும், தலித்துகள் தாக்கப்பட்டனர்,' என்று தெரிவித்தார்.


சி.பி - அண்ணன் நம்ம கலைஞர் மாதிரிதான், மின்வெட்டு அதிகமா இருக்குன்னா அதுக்கு பதில் தர மாட்டார்.. எங்கெங்கே எல்லாம் மின் வெட்டு இருக்குன்னு புள்ளி விபரம் குடுத்து சமாளிப்பார்.. 

இந்த விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்து, அதில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்துக் கொண்டிருந்தார். இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.


சி.பி - ம்க்கும், இந்த ஆள் தான் பெண்கள் நலத்துறை அமைச்சரா? வெளங்கிடும்.. நாடு.. 

முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிடுகையில், "அமைச்சர் ஆபாச படம் பார்த்த சம்பவம், சட்டசபை வரலாற்றில் கறுப்பு தினமாகும்.


சி.பி - கறுப்பு தினம் உங்களுக்கு.. நீல தினம் அவங்களுக்கு ஹி ஹி 

அமைச்சர் லட்சுமண் சவதி, அமைச்சராகத் தொடர அருகதையில்லை. இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு பா.ஜ., தலைவர்கள் என்ன சொல்லப்போகின்றனர். என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்' என்றார்.


சி.பி - என்ன நடவடிக்கை எடுத்திடப்போறாங்க? இனிமே இப்படி பப்ளிக்கா பிட்டுப்படம் பார்க்க மாட்டேன், முக்காட்டை போட்டுட்டு வீட்லயே பார்த்துடறேன்னு பம்புவான்.. 

 பிட்டுப்படம் பார்த்த அட்டுப்பசங்க

கர்நாடகா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக அமைச்சர்கள்.............!! #Karnataka #BJP #MLA's

கர்நாடக அமைச்சர் லட்சுமண் சவதி குறிப்பிடுகையில், "மொபைல் போனில் ஆபாச படம் எதுவும் பார்க்கவில்லை. அதை பார்த்ததில் தவறு எதுவுமில்லை. என்னிடம் இருந்தது என் மொபைல் போனல்ல. நான் பார்த்தது, டாக்குமெண்ட்ரி படம். இதை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தேன் என்று கூறுவது சரியல்ல. அமைச்சர் கிருஷ்ண பலேமர், இந்த மொபைல் போனை என்னிடம் கொடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதை பாருங்கள் என்று என்னிடம் கொடுத்தார். கிருஷ்ண பலேமருக்கு யாரோ அவரது மொபைல் போனுக்கு "எம்.எம்.எஸ்.,' அனுப்பியுள்ளனர்' என்றார்.


சி.பி - பார்த்தது பிட்டுப்படம், இதுல என் செல் ஃபோன் இல்ல, அவருதுன்னு ஒரு சப்பைக்கட்டு வேற.. இது எப்படி இருக்குன்னா கொலை செஞ்சு கையும் களவுமா மாட்டிக்கிட்டவன் குத்துன கத்தி என்னுது இல்லை, கடைக்காரனுதுன்னு சொல்ற மாதிரி.. 

இச் சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடக சட்டசபையில் இன்று, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். 

 மக்கள் கருத்து 

1. அந்த மான் - மனுநீதி பாண்டியன் -அரசியல் வாதிகள் அதிகாரம் இருக்கும் தெம்பில், பயமில்லாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் நியாய படுத்துகின்றனர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க தண்டனை கிடைத்தால் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். பாரதிய ஜனதா , காங்கிரஸ் இந்த இரண்டும் சேர்ந்து நாட்டை எங்கு கொண்டு போய் விட போறார்களோ தெரியவில்லை, அதற்குள் மக்களாகிய நாம் அனைவரும் விழித்து கொள்ள வேண்டும்.

சி.பி - ம்க்கும் தூங்குனாத்தானே விழிக்க, இன்னைல இருந்து 8 மணீ நேரம் கரண்ட் இருக்காது,, பெக்கே பேக்கேன்னு முழிச்சுட்டே இருக்க வேண்டியதுதான்


2. ஆரூரன், சென்னை - சட்டசபை உறுப்பினர்களை அவ்வபொழுது குஷிப் படுத்த "சீர் கேர்ள்ஸ்களை" ஆட விடலாமே. அரசவை நடனங்கள் நம் நாட்டுப் பாரம்பரியம்தானே? இருவர் மட்டும் ரகசியமாக படம் பார்த்தால்தானே தவறு?

சி.பி - அது சட்ட சபையா? செட்டப் சபையா? விட்டா தொழில் நடத்த சொல்வாரு போல.. 

3. மதுரை விருமாண்டி - தொலைபேசி நிறுவனத்தில் இருந்து மாண்புமிகு அமைச்சரின் தொலைபேசியிலும், தொலைபேசி அலைவரிசையிலும் டெக்னிகல் கோளாறு ஏற்ப்பட்டதற்கு உரிய சான்றுகளும், மாண்புமிகு சபாநாயகரிடமும், மாண்புமிகு முதலமைச்சரிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன...பொய் வீடியோ எடுத்து பிரசுரித்த சானல் மீது, மாண்புமிகு அமைச்சரின் அலுவல்களில் அத்து மீறி நுழைந்ததாக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க மாண்புமிகு சபாநாயகர், மாண்புமிகு முதல்வரின் அனுமதி கேட்டுள்ளார்... மாண்புமிகு முதல்வர் இதை எதிர்க்கட்சிகளின் சதியாக இருக்கும் என்று நம்புகிறார்...கேஸ் குளோஸ்டு..

சி.பி - அது சரி.. ஐடியா எடுத்துக்குடுக்கறீங்களா? அதுதான் நடக்கப்போகுது ஹூம்.. 

4. ராஜா , யுனைட்டட் கிங்க்டம் - அப்புடி போடு போடு போடு போடு.. இப்படி போடு மொபைலிலே..

சி.பி - சிச்சுவேஷன் சாங்க்?ஒரு மந்திரி இப்போ வந்தார் கில்மாவா.. அவர் சீன் படம் பார்த்தார் செல் ஃபோனில் ஒரே ஜொள்மாவா..

5. அருள், சிங்கப்பூர் - ரொம்ப போரியடிக்குதுன்னு நாளைக்கு ரெண்டு குட்டிகள தள்ளிகிட்டு வந்துடாம. மானம்கெட்ட மக்கள் நல அக்கறை இல்லாத அமைச்சர்கள். இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யனுமின்னு தெரியலப்பா

சி.பி - சொல்ல முடியாது, மாறு வேஷம் போட்டு கூட்டிட்டு வந்தாலும் வந்துடுவாங்க.. 

6. கோவிந்த் - டெல்லி - காங்கிரஸ் N D திவாரி ஆந்திரா ராஜ் பவனுக்குள் பலான பெண்களை கூட்டி கொண்டு போய் கூத்தடித்தது வீடியோ ஆதரங்களுடன் வந்தது. அய்யா இங்க பிஜேபி யை சேர்ந்த இரண்டு வெத்துவேட்டுகள் செய்த தவறை யாரும் சரி என்று சொல்ல வில்லை. இவர்களை மிக கடுமையான தண்டனைக்கு உள்ளாக வேண்டும் என்பது தான் என் வாதம். அதே நேரத்தில் 2G , 4G அதில் 1 76 ஆயிரம் கோடி , 2 இலட்சம் கோடி என்று தவறு செய்து நாட்டை சுரண்டும் காங்கிரஸ் முன்னர் இந்த இரண்டு பேரும் எம்மாத்திரம். அவர்கள் சபைக்குள் இருந்து கொண்டு படம் பார்த்தது தான் தவறு. அதற்காகவே அவர்களை தண்டிக்க வேண்டும். ஆனால் இந்த செய்கையினால் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறைந்த பட்சம் நஷ்டம் ஏற்படவில்லை என்றாவது சொல்லி மனதை தேற்றி கொள்ள வேண்டும்....

சி.பி - பி ஜே பி.னா  பயங்கர ஜொள்ளு பார்ட்டின்னு ப்ரூஃப் பண்ணிட்டாங்க..

 இனி ஜோக்ஸ் 

1. ஜட்ஜ் - செல்ஃபோன்ல சீன் படம் பார்த்தீங்களாமே? ஏன்? 


எம் பி - என் லேப்டாப் ரிப்பேர் யுவர் ஆனர்

----------------------------------

2. ஜெ - இனி மின்வெட்டு தினசரி 8 மணி நேரம்..

மக்கள் - பிரமாதம் மேடம்,கலைஞரை விட நீங்க பல மடங்கு டேலண்ட் தான்

-----------------------------

3. இன்று முதல் காலை 6-9 மதியம் 12-3 மாலை 6-7 இரவு 8-9 அறிவிக்கப்பட்ட மின்வெட்டு

தமிழ் நாடு மின் வாரியம்  சினிமா தியேட்டர் மாதிரி ஆகிப்போச்சு.. 

-----------------------------

Monday, February 06, 2012

IP MAN 2 -குங்க்ஃபூ மாஸ்டர் ஸ்டோரி (புரூஸ்லீ யின் குரு) -சைனீஷ் சினிமா விமர்சனம்

http://www.moviedeskback.com/wp-content/uploads/2011/01/IP-Man-2-Legend-of-the-Grandmaster-Wallpapers-1.jpg

 டைட்டிலை பார்த்துட்டு நம்மூர் வி ஐ பிங்க ஐ பி கொடுத்துட்டு ஓடிடுவாங்களே, அந்த மாதிரி கதையோன்னு யாரும் பயப்பட தேவை இல்லை.. ஆக்‌ஷன் ஃபிலிம் தான்.. ஃபாரீன்ல சூப்பர் ஹிட் ஆன படம்.. ஒரிஜினலா நடந்த கதையாம்

வறுமை தாண்டவமாடும் இடங்களில் கூட திறமை நாட்டியம் ஆடும்.. இயற்கை ஒரு வாசலை மூடும்போது மற்றொரு வாசலை திறந்து விடுகிறது.. 1949.ல் ஹாங்க்காங்க்கில் வாழ்ந்த ஒரு குங்க்ஃபூ மாஸ்டரின் உண்மைக்கதைதான் இது.. 2008-லேயே இதன் முதல் பாகம் வந்தது.. இப்போது (2010) வந்திருப்பது அதே கதை, ஆனால் நடிகர்கள் வேறு.. புரூஸ்லியின் குரு இவர் தான் என்று படம் முடியும்போது சில க்ளிப்பிங்க்ஸ் காட்றாங்க..

படத்தோட கதை என்ன?ஹாங்க்காங்க்கில் ஒரு புது ஊருக்கு பிழைப்பு தேடி தன் நிறைமாத கர்ப்பிணி, மகனுடன்  வர்றார் ஹீரோ.. அவருக்கு குங்க் ஃபூ மட்டும் தான் தெரியும்.. தற்காப்புக்கலை , மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்கூல் நடத்த முடிவு பண்றார்.. கொஞ்சம் கொஞ்சமா பசங்க சேர்றாங்க.. டியூஷன் மாதிரி எடுக்கறார்.. அப்போ தான் மதுரை அழகிரி மாதிரி லோக்கல் தாதா சோமோ ஹங்க் இடஞ்சலா வர்றார்.. 

ஜாக்கிசானின் படங்களில் எல்லாம் குண்டா ஒருத்தர் வருவாரே ( ஸ்பானிஷ் கனெக்‌ஷன் ) அவர்தான்.. அவரும் ஒரு மாஸ்டரே.. அவர் ஒரு கண்டிஷன் போடறார்.. இங்கே இருக்கற மாஸ்டர் கூட ஃபைட் போட்டு ஜெயிச்சா ஸ்கூல் நடத்தலாம்னு.. ஃபைட்டுக்கு ஃபைட்டும் ஆச்சு.. திரைக்கதையை விறு விறுப்பா நகர்த்துன மாதிரியும் ஆச்சு.. 

ஹீரோ ஜெயிச்சுடறார்.. அழகிரியையும் ஜெயிக்கிறார்.. இப்போ அவர் ஸ்கூல் நடத்த பர்மிஷன் கிடைச்சுடுது.. இப்போ அழகிரி அண்ணனுக்கு ஸ்டாலின் மாதிரி ஒரு இடைஞ்சல் வருது.. அதாவது வேற ஒரு குத்துச்சண்டை சாம்பியன். அவர் ஒரு மேடைல பப்ளிக்கா சவால் விடறாரு...

ஜெ கேப்டன் கிட்டே திராணி இருந்தா தனியா நி ந்னு சங்கர மடம்ல ஜெயிச்சு காட்டுங்கன்னு சொன்னாரே அந்த மாதிரி அந்த சாம்ப்பியன் சவுண்ட் குடுக்கறார்.. 

விறு விறுப்பான ஃபைட்டில் சாமோ ஹங்க் காலி ஆகிடறார்.. சாம்ப்பியன் அறை கூவல், ஹால் கூவல், போர்ட்டிகோ கூவல் எல்லாம் விடறார்.. நம்ம ஹீரோ அந்த சவாலை ஏற்று க்ளைமாக்ஸ் ஃபைட்ல ஜெயிக்கிறார்.. அவ்ளவ் தான் சண்டை  அடச்சே அவ்ளவ் தான் கதை..

ஜீன் கிளாடு வாண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட் படத்துலயே இதெல்லாம்  பார்த்தாச்சு என்றாலும் ஹீரோவா நடிச்சவரோட தோரணை, பாடி லேங்குவாஜ், ஃபைட் பண்ணும்போது அமைதியான லாவகம் செம,.. 

புரூஸ்லீ, எம் ஜி ஆர்  வரிசையில் சண்டைக்காட்சியில் கூட அமைதியான புன்னகையில் நிதானமான வேகம் காட்டும் அவரது அணுகு முறை அழகு.. 

சாமோ ஹங்க் ஆள் வயசானாலும் கலக்கறார்.. அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர் வரும் காட்சிகளில் க்ளாப்பிங்க் .. 

http://www.differentvideos.info/wp-content/uploads/2010/12/IP-Man-2-Legend-of-the-Grandmaster-Teaser-Official.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ, ஹீரோயின் அறிமுகம் எந்த பில்டப்பும் இல்லாமல் மிக சாதராணமாக, எளிமையாக இருந்தது பாராட்ட வைத்தது

2. வில்லனின் பாத்திரத்தேர்வும், சாமோஹங்க்கின் கேரக்டரைசேஷனும் செம.. 


3. ஒளிப்பதிவு எந்த ஜால வித்தையும் புரியாமல் மிக சாதாரணமாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் தந்தது..

4. வசனங்கள் பல இடங்களில் தன்னம்பிக்கையை ஊட்டும் விதத்தில் எழுதி, குடும்பத்துடன் பார்க்கும்படி மிக கண்ணியமாக இயக்கியது.. 

http://www.betalevel.com/images/ip_man_2.jpg
லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. மிக ஏழ்மையாக வாடகையே கொடுக்க முடியாத சூழலில் இருக்கும் ஹீரோ ஏன் அவ்ளவ் ஆடம்பரமான வீட்டில் குடி வந்தார்? சாதாரணமான வீட்டில் ஏன் குடி போகலை?

2. கிட்டத்தட்ட 27 மாணவர்கள் அவரிடம் பயில்கிறார்கள்.. அவர்கள் ஃபீஸ் குடுத்தும் ( அதுல 3 பேர் மட்டும் தர்லை) அது வாடகைக்கே போதலை.. அப்போ பூவாவுக்கு அவர் என்ன செய்வார்? ஹவுஸ் ஒயிஃப்.. இவருக்கும் வேற தொழில் தெரியாது.. 

3. க்ளைமாக்ஸ்சில் ஹீரோ ஜெயிக்கும் சூழல் வந்ததும் நடுவர் குழு அவரிடம் இனி காலால் உதைக்கக்கூடாது ஒன்லி கை தான் யூஸ் பண்ணனும்னு சொல்றாங்களே, அது பாக்ஸிங்க் ரூல்ஸ் தானே.. அது எப்படி அது வரை ஹீரோ காலால் உதைக்கிறார்? 

4. க்ளைமாக்ஸ் ஃபைட் பயிற்சிக்காக வீட்டில் பயிற்சி எடுக்கும்போது எழும் சத்தங்கள்  நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவிக்கு இடஞ்சலாக இருக்கக்கூடாது என அவரை ஹவுஸ் ஓனர் வீட்டில் விட்டுட்டு வந்து ஹீரோ பயிற்சி எடுக்கறாரே.அது எப்படி? வாடகையும் தர்லை.. இவர் சம்சாரத்தையும், மகனையும் பார்த்துக்க ஹவுஸ் ஓனர் என்ன  காப்பகமா வெச்சு நடத்தறார்?. 

5.  ஒரு ரவுண்ட் டேபிள், அதுல ஹீரோவும், சோமோ ஹங்க்கும் ஃபைட் போடறாங்க,யார் அந்த டேபிளை விட்டு விலகறாங்களோ அதாவது கீழே விழறாங்களோ அவங்க ஜெயிச்சவங்க, ஒரு இடத்துல அந்த டேபிள் ரெண்டா உடையுது.. அது மேலே போய் ரெண்டா பிரிஞ்சு வருது.. இவங்க 2 பேரும் பறந்து போய்  ஆளுக்கு ஒரு அரை வட்டப்பலகையை பிடிச்சு அதுல காலை வெச்சு ஸ்டெடியா நிக்கறாங்களே.. உஷ் அப்பா முடில.. செம காமெடி சீன் .. 

http://f.imagehost.org/0933/ip_man_2small.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1.  மாஸ்டர்.. யாராவது ஸ்டூடண்ட்ஸ் இப்போ இங்கே வருவாங்களா?

நோ, ஏன் கேட்கறீங்க?மேடம்


இல்ல, காலியா இருக்கற இடத்துல துணி காயப்போட..  ( தக்காளி , எந்த நாட்டுக்கு போனாலும் பொண்ணுங்க புத்தி!!!!!!!!)

2.  ஆளைப்பார்த்தா லாண்ட்ரி மாஸ்டர் மாதிரி இருக்காரு? இவரா ஃபைட் மாஸ்டர்? புரோட்டா மாஸ்டரோ?

3.  ஒரு ஃபைட்டருக்குத்தேவையானது - தாக்கறதுல வேகம் இருக்கனும், தடுக்கறதுல விவேகம் இருக்கனும்

4.  மாஸ்டர். ஒரே சமயத்துல 10 பேரை அடிப்பீங்களாமே?


ஆமா.. 

அவங்க ஆயுதங்களோட வந்தாலுமா?

வரட்டும், பார்க்கலாம்.. 

5.  மாஸ்டர். அப்பாடா, 10 பேரை ஈஸியா அடிச்சுட்டீங்க. 

ஹூம், இதனால தான் பிரச்சனை.. அவங்க ஆளுங்க 80 பேர் வந்திருக்காங்க.. 

6.  உங்க பணம் ரொம்ப பேடு ஸ்மெல் அடிக்குது, பட் ஐ லைக் இட் 

7. ஹிப்மேன், உங்க கூட அவர் தாக்கு பிடிப்பாரா?

இப்படி உசுப்பேத்தி வம்புல மாட்டி விடறதே  உங்களுக்கு பிழைப்பா போச்சு

8.  மாஸ்டர்.. அவர் கூப்பிடறாரு. நீங்க போங்க.. ஃபைட் போடுங்க./. 

இரப்பா.. யாராவது போறாங்களா?ன்னு பார்ப்போம், நாமளா ஏன் வலுவுல போய் மாட்டனும்?

9. சரி.. இப்போ நான் போறேன்

போங்க போங்க, போய் வாங்கி கட்டிக்குங்க.. 

10.  டேபிள்  ரொம்ப வழுக்குது.. இல்லைன்னா இன்னும் கொஞ்ச நேரம் நான் தாக்குப்பிடிச்சிருப்பேன் ஹி ஹி 

11.  உங்க சுய லாபத்துக்காக ஃபீஸ் கேட்டா நான் கட்ட மாட்டேன், ஆனா அதே சமயம் யாராவது சவால் விட்டா அதை ஏத்துக்க தயாரா இருக்கேன் ( சைனீஷ்லயும் பஞ்ச் டயலாக் பேசலாம் போல )

12.  எல்லாருக்கும்  முதுமைன்னு ஒண்ணு வரும்.. அதனால  நெம்பர் -ஒன் என யாரும் நிரந்தரம்  கிடையாது ( ஹி ஹி , சைனாக்காரங்க கூட நம்மை தாக்க ஆரம்பிச்சாச்சா? அவ்வ்)

13. வெள்ளைக்காரனுக்குக்கூட வேப்பிலை அடிக்க ஒருத்தன் வராமலா போவான் ( வேலாயுதம் எஃபக்ட்?0

14. ஜெயிச்சவன் தோத்தவன் கிட்டே மன்னிப்பு கேட்கனும்னா நான் டெய்லி ஒரு ஆள்ட்ட மன்னிப்பு கேட்கனும்


15.   சீஃப் எதிரே நிக்கறியே.. யாரு நீ? உனக்கு என்ன பிரச்சனை?

நீ தான் பிரச்சனை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKe9D18gPbZ6IgBbh070Qon1cOyir52823viz4Z-QoCVZVb0R8ktvivzFI7bWWGGN0dY5aFqOZUEkoaq_38mCUakwLfr5RHG7CMnnM1aRJYA1kojsHjRK07k8mG10P8mmL4noO0m4qVsMr/s1600/ip+man+2+bj+presscon+donnie+huang+lynn.jpg



சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் ரசிகர்கள், குங்க் ஃபூ பட விரும்பிகள், சாமோ ஹங்க் ரசிகர்கள் பார்க்கலாம்.. பெண்களூம் பார்க்கலாம்.. டீசண்ட்டான டைரக்‌ஷன்.. தலை வலி தராத சண்டைக்காட்சிகள்.. போர் அடிக்காத விறு விறுப்பான திரைக்கதை..

ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன்




சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 3

உலகத்தில் பிறக்கும் அனைவருமே ஏதாவது ஒரு தனித்திறமையுடன் தான் பிறக்கிறார்கள்,ஆனால் யாரெல்லாம் அதை அடையாளம் காண்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்..ஆனால் அதே சமயம் திறமை உள்ள அனைவருமே வெற்றி பெறுவதில்லை.. குடத்தில் இட்ட விளக்குகளை குன்றில் இட்ட தீபங்களாக்க சில கை கொடுக்கும் கைகள் தேவைப்படுகின்றன..

பத்திரிக்கை உலகில் அந்த மாதிரி திறமை சாலிகளை ஊக்குவிக்கும் இருவர் என் கண்ணுக்கு தென் பட்டார்கள் ஒருவர் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ் பாலசுப்ரமண்யன், இன்னொருவர் அமரர் ஆசிரியர் சாவி அவர்கள்..

சாவி இதழில் தீபாவளி மலரில் அட்டைப்படத்தில் என் ஜோக்ஸ் போட்டு, அதே இதழில் 2 சினிமா விமர்சனங்கள், ஜெ பேட்டி காமெடி கற்பனை கட்டுரை செம ஹிட் ஆகவே அவர் மனம் மகிழ்ந்து பாராட்டியது எனக்கு இன்னும் உத்வேகம் தந்தது..

பொதுவா ஒரு நாள்ல சராசரியா 20 ஜோக்ஸ் , சனி ,ஞாயிறுல 50 ஜோக்ஸ் எழுதனும்னு ஒரு கணக்கு வெச்சுக்கிட்டு எழுதற நான் அன்னைக்கு மட்டும் 100 ஜோக்ஸ் எழுதிட்டேன்.. பாராட்டும், அங்கீகாரமும் கொடுக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாது..

ஹிந்தி பிரச்சார் சபாவில்  ஹிந்தி பிரச்சாரக் பட்டம் பெற சென்னை தி நகர் ஹிந்தி பிரச்சார சபா போக வேண்டி இருந்தது.. ( நான் டென்த் படிக்கும்போதே பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ர பாஷா உள்ளிட்ட 8 ஹிந்தி எக்ஸாம்கள் முடிச்சிருந்தேன்)சாவி அவர்களிடம் முன் கூட்டி தகவல் சொல்லி விட்டேன்


முதல் முறையாக ஒரு பத்திரிக்கை அலுவலகம் செல்லும் வாய்ப்பு.. எனக்கு பிரமிப்பாக இருந்தது.. அவர் வந்தார், என்னை அரவணைத்தார்.. என் அப்பா ,அம்மா, ஆசிரியர் காலில் மட்டுமே விழுந்து பழக்கம் உள்ள நான் முதன் முறையாக ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன்..

சாவி அவர்கள் நகைச்சுவை ரசனை மிக்கவர்.. அதனால் அவர் எனது ஜோக்ஸ் பற்றி ஞாபகமாக பல விஷயங்கள் நினைவு கூர்ந்தார்.. சினிமா விமர்சனம் நன்றாக எழுதுவதாக பாராட்டினார்.. அதில் உள்ள சில நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தார்.. 

விகடன் எஸ் பாலசுப்ரமணியன் அவர்கள்

http://www.frontlineonnet.com/fl2024/images/20031205004912402.jpg

தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்கள் வெளியிடும் சினிமா விமர்சனம்  முற்றிலும் நடு நிலைமையில் இருக்காது எனவும் வார இதழ்களில் வெகு சில பத்திரிக்கைகளே தயவு தாட்சண்யம் இல்லாமல் நீட்டான விமர்சனம் எழுதும் என்றும் சொன்னார்.. தின நாளிதழ்கள் சினிமா விளம்பரங்கள் வெளியிடுவதால் அவர்கள் படத்தில் உள்ள நல்ல அம்சங்கள் மட்டுமே சொல்வார்கள். மைனஸ் பாய்ண்ட்டை லைட்டாகத்தான் சொல்வாங்க. அதில் இருந்து வித்தியாசப்பட்டு நாம எழுதனும் என்றார்..

மேலும் படத்தின் கதையை ரெண்டே லைனில் சொல்லி முடிச்சிடனும்..  படம் பார்த்தவர்கள் விமர்சனத்தை ரசிச்சு படிக்கும்படியும், படம் பார்க்காதவர்கள் விமர்சனம் படிச்சா படம் பார்க்கும் ஆவலைத்தூண்டும்படியும் இருக்கனும், அதுதான் ஒரு நல்ல விமர்சனத்துக்கான அடையாளம் என்றார்..

அவர் சொன்ன தகவல்களை நான் உள் வாங்கிக்கொண்டேன்... அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டேன்..

ஜோக்ஸ் எழுதுவதை குறைத்துக்கொண்டு சினிமா விமர்சனத்தில் ஆர்வம் காட்டினேன்..  சாவி வார இதழில் ஒரே ஒரு பக்கம் தான் விமர்சனம் எழுத அனுமதி..  கிட்டத்தட்ட 8 பத்திகள்.. அதற்குள் சொல்ல வந்ததை நறுக் சுருக் என சொல்ல வேண்டும் என்பது சவாலாக இருந்தது.. இப்போது வரும் ஆனந்த விகடன் விமர்சன அளவில் மூன்றில் ஒரு பங்குதான் எழுத முடியும்..

ஒரு படம் பார்க்கும்போது அந்தப்படத்தின் வெற்றி தோல்வியை கணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. ஏ செண்ட்டர் ரசிகர்களுடன் அதாவது பால்கனியில் படம் பார்ப்பது ஒரு சினிமா விமர்சகனுக்கு உகந்ததல்ல என்று உணர்ந்தேன்.. ஏன்னா அவங்க அமைதியா படம் பார்த்துட்டு சத்தம் இல்லாம போயிடுவாங்க, ஆனா பி சி ரசிகர்கள் தான் கமெண்ட் அடிச்சு, கை தட்டி ரசனையோட படம் பார்க்கறாங்க.

அதனால நான் எப்போ தியேட்டருக்குப்போனாலும்  செகன்ட் க்ளாஸ் டிக்கெட் தான் எடுப்பேன்.. காட்சிகளின் ஃபீடு பேக் உடனுக்குடன் எனக்கு கிடைச்சிடும்.. அது போக தியேட்டர் இடைவேளையின் போது காண்ட்டீனில் 4 பேர் 4 பேராக சேர்ந்து படத்தை பற்றி கமெண்ட் அடிப்பதை நோட் செய்யத்தொடங்கினேன்..

தியேட்டர் ஆபரேட்டர்கள் விஷய ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள்.. அவர்களிடம் கேபின்க்குப்போய் சும்மா பேச்சு குடுப்பேன்.. அவர் படம் எத்தனை நாள் ஓடும், தேறுமா, தேறாதா என்பதை ஓப்பனாக சொல்லி விடுவார்..

கேண்ட்டீன் -ல் வேலை செய்யும் பையன்கள், பைக் ஸ்டேண்ட்டில் பாஸ் போடும் ஆள் என ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்பேன், ஆரம்பத்தில் அப்படி நாமாக வலிய போய்க்கேட்க கொஞ்சம் தயக்கமக இருந்தது.. கொஞ்ச நாள் போனதும் சரி ஆகி விட்டது , அவர்களே நன்றாக ப்ழகி விட்டார்கள்.. கருத்து சொல்வார்கள்..


ஃபிலிமாலயா, நியூ ஃபிலிமாலயா, இதயம் பேசுகிறது, ஹெர்குலிஸ், தங்கம் , விகடகவி ,சாவி உட்பட 12 வார மாத இதழ்களில் என் சினிமா விமர்சனம் வரத்தொடங்கியது.. இதில் இன்னொரு சிக்கல் ஒரே படத்தின் விமர்சனம் 12 வெவ்வேறு வடிவத்தில், உள்ளடக்கத்தில் தர வேண்டிய நெருக்கடி எனக்கு சவால் நிறைந்ததாக தோன்றியது.. மிக சிரமமாக இருந்தது.

ஒரு வருடம் சமாளித்தேன்.. அது என் கிரியேட்டிவிட்டியை குறைக்கும் அபாயம் இருப்பதாகத்தோன்றியது.. ஜோக்ஸ் எழுதுவதை மீண்டும் தீவிரம் ஆக்கலாமா? என யோசித்த போதுதான் குமுதம் வார இதழில் இருந்து அழைப்பு வந்தது.. 1998 டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் ஒரு சந்திப்பு சென்னை ஆஃபீசில் போக வர அனைத்தும் அவர்கள் செலவில்..

நான் துள்ளிக்குதித்தேன்.. ஏன்னா டாப் டென்ல ஒருத்தனா வந்ததுக்காக இல்லை... மீதி 9 பேரை அவங்க செலவில் சந்திக்கலாமே, குமுதம் ஆஃபீசை சுற்றிப்பார்க்கலாமே?

அமரர் சாவி அவர்கள்

http://balhanuman.files.wordpress.com/2010/05/saavi.gif

தமிழ் நாட்டின் நெம்பர் ஒன் ஜோக்  ரைட்டர் வி சாரதி டேச்சு, அம்பை தேவா,பா ஜெயக்குமார் வந்தவாசி,சீர்காழி வி ரேவதி, பாஸ்கி, திருவெண்ணெய் நல்லூர் எஸ் எஸ் பூங்கதிர், இடைப்பாடி ஜெ மாணிக்க வாசகம்,  உ ராஜாஜி, கொங்கனாபுரம் வே செந்தில் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததே பெரிய வரப்பிரசாதம்..

குமுதம் ஆஃபீசில் என்ன நடந்தது?....

 தொடரும்

டிஸ்கி -1  இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்


டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க http://adrasaka.blogspot.com/2012/01/1.html


இந்த கட்டுரையின் 2ம் பாகம் -http://adrasaka.blogspot.in/2012/01/2.html  

டிஸ்கி 3 - பதிவுலக சகோ மாய உலகம் ராஜேஷ் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீடு சுரேஷின் விருப்பத்துக்கு இணங்க, நிரூபன் சொன்னது போல் நாளை செவ்வாய் அன்று பதிவுலகின் துக்க நாளாக கடைபிடிப்போம்

http://balhanuman.files.wordpress.com/2010/09/sujatha_raviprakash_saavi.jpg?w=510

Sunday, February 05, 2012

நயன் தாரா .. ஹன்சிகா மோத்வானி ..ரம்லத் .. வாழ்க்கை ஒரு வட்டம்டா. ( ஜோக்ஸ்)

http://cinespot.mywapblog.com/files/nayan-cute-8.jpg1.நடன நிகழ்ச்சிகளில் சில பெண்களின் அங்கஅசைவுகளுக்கு கிடைக்கும் கைதட்டல்கள் அந்த பெண்களின் நளினத்தை அவர்களயும் அறியாமல் குறைத்துவிடுகிறது

--------------------------------



2. தாலி கட்டிய கணவனை பொது இடங்களில் டா போட்டு பேசுவதன் மூலம்  தன் பிரத்யேக உரிமையை நிலை நாட்டுகின்றனர் சில புரட்சிப்பெண்கள்

--------------------------

3. அந்த ஆளே சரின்னு போறாராம். உங்களுக்கு எங்க வலிக்குது?

ஹலோ, அந்த ஆளே நான் தாங்க.. ஹி ஹி

-----------------------------

4. தன் சவுகர்யத்தை முன்னிட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தாலும் அந்த பெண் அடங்காத தன்மையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறாள்

-------------------------------------

5. ஆண்களின் சில குரூர மகிழ்வுகளுக்கு  தனது அசாதாரணமான சமயங்களில் உருவாகும்ஆடை நெகிழ்வகளும் காரணம் என்பதை பெண் பல சமயங்களில் உணர்ந்தே இருக்கறாள்

--------------------------------


http://m0.eyeofindia.com/gallery/3039/nayanthara.jpg

6. பெண்ணின் படைப்புக்கு தனி கவனம்  என்றும் உண்டு ,பலரால் சிலாகிக்கப்டும், சிலரால் விவாதிக்கப்படும், பர பரப்புக்கு பஞ்சம் இன்றி

-----------------------------

7. சௌபர்ணிகா - ஹிந்தில SOW = 100 , இங்க்லீஷ்ல BURN = எரித்தல் தமிழ்ல கா = தன்னிடம் பழம் விட்டவர்ளிடம் கூட சண்டை போட்டு டூ விடுபவர்

------------------------

8. வாசன் ஐ கேர்ல எல்லாரும்ரொம்ப அன்பா பழகறாங்கன்னு ஒருபொண்ணு விளம்பரத்துல சொல்லுச்சு, நான்போனப்ப என்னை யாரும் கண்டுக்கவே இல்ல:)

-----------------------------------

9. எண்ணெய் தடவப்பட்ட தலை முடி அழகுக்குறைவு என பல இளைய தலை முறைகள் நினைத்துக்கொண்டு,ஆரோக்யக்குறைவுககு அடி கோலுகின்றனர் ( இரு பாலினரும்)

------------------------------------

10. தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல பெண்கள் தங்கள் விழிகளிலிருந்து கண்ணீரை இறக்கிக்கொள்கிறார்கள்

-----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBsDSPp9HYUpZBxtMgF0-OauB7IG-xfEh6L8b-IniETA7yL2NcwuGGh57SFLh0acMB9-z_i2mzQirnGJ4S_Ce-yU7AQNj_znQpV4rnXCJlRvG5aK6n3g_KdPcvNLRddW-rpGf31c0NWop-/s1600/Hansika-motwani-wedding.jpg

11.ராமராஜன் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கா? அய்யய்யோ எப்படி?

ராமர் ஆட்சியை அவரால தரமுடியுமே? ( ராமர் + ராஜன்)

-------------------------------
12. என் ஆளு நயன் தாரா மாதிரி....

ஓஹோ,சாயல்லயா? 

ம்ஹூம், நடத்தைல. லவ் மட்டும் பண்ணா போதும், மேரேஜ் பண்ணிக்கத்தேவை இல்லை

----------------------------------

13. நேற்று ரம்லத்க்கு சக்களத்தியா நயன்தாரா, இன்று நயன்தாராக்கு  சக்களத்தியா  ஹன்சிகா மோத்வானி இதுதான் வாழ்க்கை # ஜோடி மாறும் கேடி மாறமாட்டான்

--------------------------------

14.  தலைவரே, எல்லா எம் எல் ஏஎக்களும்  ஏன் லேப் டாப் பார்த்துட்டே இருக்காங்க?

இனிமே பதவி போகுதான்னு மெயில் பார்த்தே தெரிஞ்சுக்கலாம் 

------------------------------------

15. காலனி ஆதிக்கம் சிறு குறிப்பு வரைக ./

டீச்சர், காலம் மாறிடுச்சு, இப்போ செருப்பு வீசறதுதான் ஃபேஷன்.. காலணி ஆதிக்கம் தான் ஜாஸ்தி

--------------------------------

http://mimg.sulekha.com/hansika-motwani/images/wallpaper/1024-768/hansika-motwani-sexy-wallpaper-hot25.jpg

மகளிர் அணித்தலைவி ரத்னாவோட வாழ்க்கைல தலைவர் .... (joks)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij8lH-nSbqEY0XsUK_OrRsdCi8FcB7dXoCxOLF9UsY_4wT4UDgHOLJoDPTjJmfCwvBt2GoGH4xrAZPde7BQWbZ7rIphMjrftY49pApyx5lCkTIOm30fUEKVMyp8IAZofY_6rq3EzqsZxo/s1600/Anuya10.jpg


1. உங்க பாடல்கள் எல்லாமே செம ஹாட்டா இருக்கு. அது எப்படி?

பல ஆல்வங்கள்ல இருந்து ‘சுட்டு’ தர்றேனே...  அதான்.

----------------------------------------

2. இளைய தலை முறைக்கு வழி விடுவோம்-னு தலைவர் சொல்றாரே?

அவரோட பேரன் ரெடி ஆகிட்டான்-னு அர்த்தம்.

---------------------------------------

3. மாதர் சங்கத்த் தலைவியை மேரேஜ் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு

ஏன்?

ஆண் குழந்தை எனக்கு பிடிக்கு-னு சொன்னாக் கூட ஆணாதிக்கவாதியா!-னு கேட்கறா!

-----------------------------------------

4. தலைவர் எட்டாத உயரத்தை அடையப் போறார்-னு எப்படி சொல்றே?

பொதுக்குழு நடக்கறது 8-வது மாடில. இப்போ அவரு 7-வது மாடி போயிட்டாரு. அடுத்து 8-வது தானே?

----------------------------------------

5. தலைவருக்கு பிடிச்சது இந்திய நாடா? வெளிநாடா?

எந்த நாடா இருந்தாலும் தலைவர் கை போகும் திசை அந்த நாட்டுப் பெண்ணின் சுடிதார் நாடா.

----------------------------------------

6. தலைவர் டயட்-ல இருக்கறது வேஸ்ட்.

ஏன்?

வாரத்துக்கு 6 நாள் டயட்ல இருக்காரு. எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சு சண்டே செம கட்டு கட்டிடறாரே?

--------------------------------------

7. என் ஆளுக்கு ‘ஆண்’ என்றாலே அலர்ஜி.

நிஜமாவா?

ஆமா! பயத்துல, வலி-ல கத்தறப்பக்கூட ‘ஆ’-னு கத்தமாட்டா! ‘பெ’, ‘பே’-னு தான் கத்துவா!

-------------------------------------

8. மோசமான படைப்புகளை நாம குப்பைல போடனும்.

சார். எங்கெங்கிருந்தோ எழுத்தாளர்கள் எழுதுவாங்க! அதை இங்கே இருக்கற நாம எப்படி குப்பைல போடறது?

-------------------------------------


http://4.bp.blogspot.com/-_WjlsPzn7o8/TezrZPK8QvI/AAAAAAAAE_g/GYQUSl5rROw/s1600/Anuya+hot1.jpg

9. மகளிர் அணித்தலைவி ரத்னாவோட வாழ்க்கைல தலைவர் விளையாடிட்டாராம்.

ஆனா இதுக்காக எல்லாம் கேல் ரத்னா விருது எதிரிபார்த்தா எப்பிடி?

----------------------------------

10. கட்சிக்காக எதை வேணும்னாலும் தியாகம் செய்வேன்னு சொன்னது உண்மைதான். அதுக்காக அடிப்படை உறுப்பினர் பதவி வரை தியாகம் செய்யச் சொன்னா எப்படி தலைவரே?

--------------------------------------

11. ஆத்துல குளிச்சா 10 நிமிஷத்துல வெளில வந்துடுவேன்.

ஏன்?

அரை மணி நேரம் இருந்தா, வெளில வந்ததும் “உடம்பு ஊறிடுச்சு போல”-னு யாராவது கேட்டுட்டா?

----------------------------------------

12. உன் சம்சாரம் சமையல்ல வீக்கா?

எப்படி தெரியும்?

சம்சாரம் என்பது வீணை! சமையல் செய்யறது எல்லாம் வீணே!-னு பாடறீங்களே?

--------------------------------------

13. சம்பளம் உயர்த்தப்பட்ட மேட்டரை யார் கிட்டயும் சொல்லலையே, ஏன்?

ஃபிரண்ட்ஸ் கிட்டே சொன்னா பார்ட்டி கேப்பாங்க. மனைவிட்ட சொன்னா நகை கேப்பா. ஹவுஸ் ஓனர்ட்ட சொன்னா வாடகை ஏத்திடுவாரு.

--------------------------------------

14. தலைவர் பலி கெடா ஆகிட்டார்.

அடடா! வழக்கமா அவர் பழிவாங்கற கெடாவாத்தானே இருப்பாரு?

---------------------------------------

15. ஆண்கள் 3 வகையா? எப்படி?

1. திருமணம் ஆனவங்க
2. திருமணம் ஆகாதவங்க
3. திருமணம் ‘ஆகாத’வங்க (பிடிக்காது-னு சொல்றவங்க)

--------------------------------

`16. உங்க வீட்ல டெய்லி காலைல இட்லி, நைட் உப்புமா... தானா? ஏன்?

காலைல மீந்து போன இட்லியை உப்புமா ஆக்கிடலாம்

------------------------


http://gallery.southdreamz.com/cache/movie-gallery/madurai-sambavam/madurai-sambavam-harikumar-anuya-karthika-10_720_southdreamz.jpg

Saturday, February 04, 2012

செங்காத்து பூமியிலே- மதுரை உசிலம்பட்டி மண்வாசனை,இளையராஜா இசை ரசனை -சினிமா விமர்சனம்

http://www.desiboost.com/tamil/wp-content/uploads/2011/04/sengathu-bhoomiyile-audio-songs.jpg 

ஆண்களின் அவசர முடிவால் பெண்களுக்கு ஏற்படும் மாறாத வடுக்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.. ஆத்திரத்தில், கோபத்தில் , பழி வாங்கும் உணர்வில் ஆண் செய்யும் சில செயல்கள் அந்த நொடியில் சரியானதாகத்தோன்றினாலும் அதன் பக்க விளைவுகள் காலம் பூராவும் உறுத்திக்கொண்டும், மனதை வருத்திக்கொண்டும் தான் இருக்கும்.. அந்த மாதிரி ஒரு குடும்பப்பகையின் ஆராத ரணம் தான் செங்காத்து பூமியிலே.. 

பாரதிராஜாவின் சீடரான ரத்னகுமார் மண்ணுக்குள் வைரம் படத்திலேயே கண் கலங்க வைத்தவர்.. இந்தப்படத்துக்கு கதைக்கு பெரிதாக மெனக்கெடவில்லை.. பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே தோசையை திருப்பி போட்டா அது செங்காத்து பூமியிலே ... தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற "கிழக்குச் சீமை‌‌யிலே",விருது வாங்குன  "கருத்தம்மா", சுமாரா ஓடுன "கடல் பூக்கள்", ஃபிளாப் ஆன "தமிழ்ச்செல்வன்" போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் தான் இவர்.. 

படத்தோட கதை என்ன? பவன், செந்தில் 2 பேரும் மாமன் மச்சான்ஸ்.. இவர் தங்கச்சியை அவரும், அவர் தங்கச்சியை இவரும் லவ்விங்க்.. ஒரு அடிதடி தகராறுல கொலை கேஸ்ல  பவன் ஜெயிலுக்கு போயிடறாரு.. கொலையை பார்த்த சாட்சி செந்திலும், செந்திலோட அப்பாவும்.. பவனோட அப்பா கெஞ்சறாரு.. என் பையன் உசுரு உங்க கையில தான் இருக்கு.. பொய் சாட்சி சொல்லி காப்பாத்துங்கன்னு.. கேட்கலை.. உண்மை விளம்பிகளா இருக்காங்க.. கோர்ட்ல உண்மையை சொன்னதும் பவன் வீட்ல பிரச்சனை.. உன்னால தானே பையன் ஜெயில்ல இருக்கான், நீ ஏன் உசுரோட இருக்கே, நாண்டுக்கிட்டு சாக வேண்டியதுதானேன்னு சம்சாரம் திட்ட பவனோட அப்பா தூக்கு போட்டு சாகறாரு.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh79kQLlijDP0BomOytw8gSuFh-LNNywgR_kNcoPVDx_dMeMRE4siBDn7IuYxFUs-w94YCUZiZSxnthyJGdOpC4tVw1PxzvovI_b1M81a2MplxmUxwAEd3jUHgwUUrJjmhwyEoGt33U1G4/s1600/Sengathu+Bhoomiyile+Stills+%252814%2529.jpg

அப்பாவோட இறுதி சடங்குல கலந்துக்க ஜெயில்ல இருந்து போலீஸ் பாதுகாப்புல வர்ற  பவன் தன் அப்பாவின் சாவுக்கு மறைமுகமான காரணமா இருந்த செந்திலோட அப்பாவை சதக்..ஆள் க்ளோஸ்.. ஜென்மப்பகை ஆகிடுது.. 2 லவ்வும் பணால்.. 

பல வெட்டு குத்து கொலைகளுக்குப்பிறகு காதல் ஜோடிகள் இணைஞ்சாங்களா? வீணா போனாங்களா? அப்படிங்கறதுதான் கதை..

பவன் நடிப்பு கன கச்சிதம்.. முறைப்பு, விரைப்பு,கோபம், வஞ்சம் என எல்லா உணர்வுகளையும் கண்களிலேயே காட்டி விடுகிறார்.. ஆனா எப்போ பாரு அவர் அருவா , ஆக்ரோஷம் காட்டிட்டே இருப்பது சலிப்பா இருக்கு.. 

மிர்ச்சி செந்தில் வாய்ப்பு கம்மி என்றாலும் வந்த வரை ஓக்கே.. இவர் காதல் காட்சியில் பரிமளிக்கிறார்..

பிரியங்கா மஞ்சள் கிழங்கையும், சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் கலப்பினம் செய்து தயாரிக்கப்பட்ட கலப்பின கிழங்கு வகை மாதிரி தள தள என்று இருக்கிறார்.. ஆல்ரெடி வெய்யில் படத்தில் நடிச்சிருக்கார்.. இவர் தன் மாமனுடன் செய்யும்  குறும்புகள் ஓக்கே ரகம்.. 

சுனு லட்சுமி மாநிறமாக இருந்தாலும் களையான கிராமத்துமுகம்,.,. இவர்க்கு நல்ல எதிர்காலம் இருக்கு..  சோகமான காட்சியில் கூட ஜொலிக்கிறார்.. மேக்கப்பே இல்லாமல், சில இடங்களில் மிக சொற்ப ஒப்பனையில் அவர் பிரியங்காவை முந்துகிறார்.. 

சிங்கம்புலி சீரியஸ் ஆன கதையில் இளைப்பாற கொஞ்சம் காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு.. அவர் வாய்ஸ் மாடுலேஷன் மாபெரும் பிளஸ் என்றாலும் அவர் லொட லொட என பேசிக்கொண்டே இருப்பது போர்..

பவனின் அப்பாவாக வரும் நடிகர் புதுமுகம் போல .. நீட் பர்ஃபார்மென்ஸ்.. அதே போல் செந்திலின் அப்பாவாக வருபவர் நிதானமான நடிப்பு, அதுவும் கோர்ட் சீன்ல் செம கலக்கல்  நடிப்பு.. 

படத்துக்கு பெரிய பிளஸ் இசை ஞாநி இளையராஜா..  படத்தோட ஓப்பனிங்க்ல வரும் ஓரம் போ ரீமிக்ஸ் செம ரகளை.. ஒரே பைக்கில் 2 காதல் ஜோடிகளும் ஊர் உலா போவது செம கிளு கிளு.. ( அவங்க போனா நமக்கு ஏன் கிளு கிளு? ஹி ஹி அவங்க போனா நாம போன மாதிரி ஹி ஹி )

சிக்கிக்குங்க..... பாட்டு செம மெலோடி.. நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்த இசை ஞானி ஹிட்..  காத்திருப்பேன் காத்திருப்பேன் என் கண் ரெண்டும் உள்ள வரை க்கும் பாட்டு அழகான டூயட் பாடல்.. கிராமிய இசை..  க்ளைமாக்ஸ் சோகப்பாட்டான என் உசுரு என்னை விட்டுப்போனாலும் உன்னை விட்டு போகாது உருக்கம்.. தியேட்டரில் யாரும் கிளம்பிப்போகாமல் பார்க்க வைக்கிறது.. கிராமத்து திருவிழாவில் பின்னணி இசையில் புகுந்து விளையாடி இருக்கிறார்.. வழக்கமாக பின்னணி இசையில் அதிக ஸ்கோர் பண்ணும் இசை ஞாநி இதில் பாடல்களுக்கான இசையில் அதீத கவனம் செலுத்தி உழைத்திருப்பது தெரிகிறது

http://mimg.sulekha.com/tamil/sengathu-bhoomiyile/stills/sengathu-bhoomiyile-movie-photos-0115.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  நாயகிகள் தேர்வு கன கச்சிதம்.. இருவரும் படத்துக்கு முக்கிய பிளஸ்..

2. ஒளிப்பதிவு, இசை படத்துக்கு மிகப்பெரிய பிளஸ். சூர்யோதய, அஸ்தமன காட்சிகள் கிராமத்துக்கொள்ளை அழகு.. 

3. இரண்டு நாயகிகள் இருந்தும் மிக கண்ணியமாக காதல் காட்சிகள் வைத்தது.. 

4. அப்பா கேரக்டரில் வரும் இருவரும் மிக இயல்பான நடிப்பை தந்தது.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzoBISdrbDrm_Qz2rCBrp5RofifnCaixwQe38Q3i27UidtTd9xp0eiPIphZmriYcuZtHjNF_3tjUpeHZT4wTuuRPGUY8rQHBxLY-kzI8wmvy1MO09uAgw6lVMYWHj3n8MaOSh0oJiUPwF1/s1600/sengathu-bhoomiyile+_25_.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தில் எதற்கு இத்தனை கேரக்டர்கள்? யார்  யார் யாரோட சொந்தம்? என்று கண்டு பிடித்து புரியறதுக்குள் இடைவேளையே வந்துடுது.. 

2.  நகராட்சி கழிப்பறை வாசலில்  சேர் போட்டு அமர்ந்து வசூல் செய்யும்  ஒரு ஹீரோவின் அம்மா கேரக்டர் உடல் முழுக்க 70 பவுன் நகை போட்டு இருக்கே? ஒரு சாதாரண ஊர்ல ஒரு பொண்ணு அவ்ளவ் நகை போட்டுட்டு மேரேஜ்க்குதான் போவாங்க.. 

3. அதே பெண் வாசலில் அமர்ந்து வசூல் பண்ணி விடுகிறார்.. அடுத்த கட்சியில் அவர் கணவர் உள்ளே போய் ஸ்பாட் வசூல் பண்றார்.. போதாததுக்கு சிங்கம் புலி வேற உள்ளே போய்  வசூல் பண்றார்.. ஏன்?

4. இயற்கை உபாதைகள் கழிப்பதை, அந்த இடத்தை வைத்து காமெடி பண்ணத்தான் வேண்டுமா?

5. கிராமம் என்றாலே வன்முறை கொலை, வெட்டு, குத்து மட்டும்தானா? அதன் மறுபக்கம் ஏதும் இல்லையா?

6. பரோலில் வரும் கைதி உடன் காவலுக்கு 4 போலீஸ் பக்கத்துலயே இருக்காங்க.. தன் அப்பாவின் சடலத்துக்கு தீ வைத்து விட்டு ஒருத்தனை வெட்ட அரிவாள் எடுத்து பாய்வதை அந்த போலீஸ் பார்த்துக்கிட்டே இருக்கு.. அந்த போலீஸ்க்குப்பின்னால நிக்கற கிராமத்து ஆளுங்க பாய்ந்து வந்த பின் தான் போலீஸ் நகர்ந்து வர்றாங்க.. ஏன்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ_Sc7lj8iurPFJQSV42aXx61Adzt8kAihyphenhyphenbCfBjrv9-rk8-Gtz92JfNGWDT9YHuH9HHJBB8aovm-c1oAZvOX83H0TVkYIRGvIa5ODlg-Xtf2di8xgMVrfEy7O2EvxB3PVYn1ZAgT2Xvw/s640/sengathu-bhoomiyile+_44_.jpg


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் -  கிராமத்து கதை ரசிப்பவர்கள், இசைஞானி ரசிகர்கள், பெண்கள் பார்க்கலாம்.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்.

சிவகார்த்திகேயன் பெண்களை கலாய்த்த SMS ஜோக்குகள்,வசனங்கள் (மெரீனா)

http://2.bp.blogspot.com/_bgSuEoVekgg/TJdvegKKX8I/AAAAAAAABgE/bPHVx3oof1E/s1600/Sivakarthikeyan_Marriage_Photos_001.jpg 

1. காதல்ங்கறது முட்டாள் செய்யற புத்திசாலித்தனமான காரியம், புத்திசாலி செய்யற முட்டாள்தனமான காரியம் (SMS)

--------------------------\


2.  இத்தனை ஃபிகருங்க பீச்சுல சுத்துதுங்களே, எங்கிருந்துதான் உஷார் பண்ணி கூட்டிட்டு வந்துடுவானுங்களோ தெரியல..

--------------------------------

3.  வாடி.. அங்கே போய் உக்காரலாம்.. அங்கே ஒருத்தன் ஷோவை முடிச்சுட்டு கிளம்பிட்டான்.. இடம் காலி.. அடடா,, பீச்சுக்கு வந்து இடம் பிடிக்கறது எவ்ளவ் கஷ்டம்?

------------------------------

4. அண்ணே.. நீங்க தான் மொத போணி.. ( டபுள் மீனிங்க்)



முதல்ல போ நீ...

-------------------------------------

5.  டியர்.. நம்ம எதிர்கால லைஃப் பற்றி இப்போ பேசப்போறேன்.. 

ஊ ஊ ஊ ஊ சார்.. சங்கு வாங்கறீங்களா?

சகுனமே சரி இல்லையே,,

------------------------------------

6.  சார்.. பூ வாங்கிக்குடு சார்..

எதுக்கு தண்ட செலவு..

விடு சார் நானே வெச்சு விடறேன்

ம் ம் எவ்ளவ்மா?


முழம் 10 ரூபா.. வெச்சு விட்டதுக்கு 5 ரூபா.. 


அடப்பாவமே, நானா உன்னை கூப்பிட்டேன்.. வெச்சு விடுன்னு.. (( டபுள் மீனிங்க்)

----------------------------------
7.  காதல் நல்ல குரு.. அது எல்லாரையும் சீடர்களா ஏத்துக்கறதில்லை ( SMS )

-----------------------------

8.  அவ பார்த்தாலே வண்டி எனக்கு குடை சாயுதே.. 

----------------------------

9.  அவ எனக்காக பிக்கப் ஆகி வர்றாளா? பைக்கை பார்த்து வர்றாளா? தெரியலையே?


------------------------------------

10.  நான் தான் வின்.. ஒரு லிட்டர் கேனை யூரின் போயே ஃபில் பண்ணிட்டேன்..

நீ ஒரு ச”மூத்திரம்” டா

-------------------------------------

11.  ஏய்.. வாடி.. அங்கே மறைவா போலாம்.. 

மறைவாவா? அய்யோ நான் மாட்டேன்பா..

ஆரம்பத்துல எல்லாரும் அப்படித்தாண்டி சொல்வீங்க..எத்தனை பேரை பார்த்திருக்கோம்.. 

-------------------------------------------

12.  பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?



அதானே , எப்படி இருக்கும்? சொல்லுங்க.. 

நிம்மதியா இருக்கும்.. 

-------------------------------------------------

13.  பொண்ணுங்க இருந்தாலே நிம்மதியை கெடுத்துருவாளுங்க.. 

---------------------------------

14.  அது வேணாம்.. ஆறிப்போனது.. 

நாறிப்போனதை விட ஆறிப்போனது எவ்ளவோ தேவலை.. 

---------------------------

15.  நாம நேசிக்கறதை என்னைக்காவது இழந்துடுவோம்னு சொல்றதுதான் காதல்.. (SMS)
-----------------------------------------

16.  சாப்பாட்டு விஷயத்துல மட்டும் இவ காம்ப்ரமைஸ் ஆகிக்கறா.. அது எப்படி?



----------------------------------------

17.  டேய்.. ஒரு கிஃப்ட் பார்சல் கூட ஒழுங்கா செய்ய மாட்டியா?

ஹி ஹி மறந்துடக்கூடாதுன்னு நேத்தே 2 இட்லி , கெட்டி சட்னி கட்டி பார்சல் பண்ணி வெச்சுட்டேன் எப்பூடி?

--------------------------------------------

18. டேய்.. எங்கேடா இருக்கீங்க?

சார்  “ரவுண்ட்ஸ்”ல இருக்கோம் சார்.. 

ம் , இவனுங்க நிஜமா ரோந்து ரவுண்ட்ஸ சொல்றானுங்களா? சரக்கு அடிக்கற ரவுண்ட்ஸ சொல்றானுங்களா?

---------------------------------------
19.  கேர்ள்ஸ்ங்க எல்லாரும் பக்கா ஃபோர் ட்வெண்ட்டிங்க ( 420)

யார்டா இந்த எஸ் எம் எஸ்ஸை அனுப்புனது?

ஒரு பொண்ணுதான்..

என்னது? பொண்னா?

ஆமா, ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தானே தெரியும்?ஹி ஹி 

--------------------------------

20.  போடா.. குடிகாரப்பசங்களா..

அடியேய்.. எங்களால தாண்டி இந்த கவர்மெண்ட்டே ரன் ஆகுது..  நாங்களாவது பப்ளிக்கா டாஸ்மாக்ல சரக்கு அடிக்கறோம். நீங்க கமுக்கமா வீட்ல அடிக்கறீங்களேடி.. தெரியாதா?

-------------------------------------

http://www.apden.com/images/content/2012/01/10/1326198405_marina-audio-launch-images07.jpg

21.  கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

கழுதைன்னு தெரிஞ்சும் அது கிட்டே கற்பூரத்தை காட்னது உங்க தப்பு.. 

--------------------------

22.  காதல் ஒரு கழுதை மாதிரி, எப்போ உதைக்கும்? எப்படி உதைக்கும்னு யாராலும் சொல்ல முடியாது.. 

---------------------------

23.  காதல் ஜெயிச்சாலும் செலவுதான்.. கர்மம் தோத்தாலும் செலவுதான்.. அப்புறம் என்ன இதுக்கோசரம் காதலிக்கனும்னேன். ?

----------------------------------------------

24.  மேரேஜே ஆகலை.. எப்படி அவன் டைவர்ஸ் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடியும்?

-------------------------------

25.. ஹலோ.. நீ எங்கேம்மா இருக்கே? உடனே வீட்டுக்கு வா..

மம்மி.. என்ன மேட்டர்னு சொல்லுங்க.. 

கூரியர்ல அவன் ஆப்பு அனுப்பி இருக்கான்.. நிஜமான ஆப்பு.. அவ்வ் 

----------------------------------

26.  ஏப்பா .. கூரியர்காரா..  இதென்ன ரிவீட் அடிக்கற ஆணி பார்சல்ல வந்திருக்கு?

ஹா ஹா உங்களுக்கு ரிவீட் அடிச்சிருக்கான் யாரோ.. 

------------------------------------

27.  இனிமே இந்த மாதிரி பார்சலை கொண்டு வந்துடாதே.. 

அட போம்மா.. பேண்டவனை வெட்ட முடியாம , பீயை போய் வெட்டிட்டு இருக்கே..?   (உவ்வே )

----------------------------------------

28.  பன்னாடை பன்னாடை.. 

நீ தான் என் பொன்னாடை ஹி ஹி 

----------------------------------------

29.  நான் யார் தெரியுமா? என் புருஷனே என்னை பார்த்து பயப்படுவாரு தெரியுமா?

நான் தான் உங்க புருஷன் இல்லையே.. நான் எதுக்கு உங்களை பார்த்து பயப்படனும்?

--------------------------------------

30.  IF U WIN THE LOVE U LOOSE THE LIFE.. IF U WIN THE LIFE U WILL LOOSE THE LOVE அப்டினு ஷேக்ஸ்பியர் அவன் பாட்டுக்கு சொல்லிட்டு செத்துப்போய்ட்டான்.. 

( நீ காதலில் ஜெயிச்சா வாழ்க்கைல தோத்துடுவே.. வாழ்க்கைல ஜெயிச்சா காதலில் தோத்துடுவே)

---------------------------------------

31.  அடடே.. புது சொக்கா,.. புது அக்கா.. அடங்கொக்கா மக்கா.. அண்ணே அசத்துங்க,. இவங்க எப்போ உங்களுக்கு சங்கு ஊதப்போறாங்களோ?

--------------------------------

32.;. ஏய் பீச்சுக்கு போலாமா?

வேணாம், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போலாம்.. 

எனக்கு வந்து வாய்க்கறது எல்லாமே எனக்கு செலவு வைப்பதாகவே  வருது

---------------------------------------

செண்ட்டிமெண்ட் வசனங்கள்

33.  சென்னையை சுத்தி பார்த்தியே, என்ன சொல்லுது?

எந்த தொழில் செஞ்சாலும் பிழைச்சுக்கலாம்னு சொல்லுது.. 

பிச்சை மட்டும் எடுக்காதே

நீ மட்டும் எடுக்கறே?

---------------------------------------
34.  இந்த மரத்துல படுத்தா மாசம் ரூ 150 வாடகை.. அட்வான்ஸ் ரூ 500



அடப்பாவி...

---------------------------------------

35.  தாத்தா குட் மார்னிங்க்.. 

------------------

ஓ, இங்கிலீஷ் தெரியாதா? காலை வணக்கங்கள்.. 

சரி சரி விஷயத்துக்கு வா.. 

ரூ50 கடன் வேணும்

-------------------------------------

36.  என் பேரு அன்புச்செல்வன்..  ஐ பி எஸ்.. இந்த பீச்சை வாடகைக்கு விட்டிருக்கேன்.. 

என்ன படிச்சிருக்கே?

ஏ காம், பி காம், சி காம் 


-----------------------------------

37. தம்பி.. நீ என்ன படிச்சிருக்கே?

  காமராஜர் படிப்பு..

அப்டின்னா?

மூணாங்கிளாஸ் 

----------------------------------------

38. உன் பேரென்ன?

அம்பிகாபதி

உன்னை நான் அம்பிகான்னு கூப்பிடலாமா?

ஓக்கே.. உன் பேரென்ன?

கைலாஷ்..

உன்னை கை-ன்னு கூப்பிடலாமா?

----------------------------
39.  டேய்.. இங்கே பாரு, நான் பீச்ல பொண்ணுங்களோட ஃபோட்டோ எடுத்திருக்கேன்.. 

நீயாவது தமிழ் பொண்ணுங்களோட தான் ஃபோட்டோ எடுத்தேன், நான் வெள்ளைக்கார ஃபிகர்ங்களோட எடுத்தேன்

----------------------------------

40.  கா பி சாப்பிடறியா? டீ சாப்பிடறியா?

விஷம்

எல்லாம் 1 தான் 

----------------------------------

http://cinesouth.com/images/trailors/11012012-MT10img1.jpg

41.  மில்லி மீட்டர் விஷயத்துக்கு எல்லாம் கி மீ நீளத்துக்கு கோபப்படறியே.. 

-----------------------------

42.  சார் பெட்ரோல் வேணுமா சார்?

ம், இன்னா விலை?

கவர்மெண்ட்டே 68 ரூபாக்கு விக்குது.. நான் 50 ரூபா தான் சார் வாங்கறேன்..

ஏண்டா என் கிட்டேயே திருடிட்டு என் கிட்டேயே விக்கறியா?

 இல்ல சார் , கடல் தண்ணில இருந்து தயாரிச்ச பெட்ரோல் சார்..

-----------------------------------

43.  இந்த கிஃப்ட்டை பார்த்ததும் உனக்கு என்ன தோணுது?

நீ பொழப்பில்லாம இருக்கேங்கறதை இப்படி கிரியேட்டிவா காட்றே

-----------------------------------------

44.  நான் ஆல்ரெடி இந்த மாதிரி இங்கிலீஷ் படத்துலேயே பார்த்துட்டோம்.. 
அது வைர மோதிரம் தானே..?


ம்க்கும்,, மொக்கை ஃபிகருக்கு யாராவது அவ்ளவ் செலவு செய்வாங்களா? நான் என்ன இளிச்ச வாயனா?

-------------------------------------------

45.  இந்த உலகத்துல புனிதமானது ரெண்டே ரெண்டு தான் 

1. தாயின் கருவறை.. 2. பள்ளியின் வகுப்பறை

----------------------------------

46.  நீங்க படிக்கலைன்னு வருத்தப்படாதீங்க.. நீங்க தோற்கலை.. அந்த ஆசிரியர்ங்க தான் தோத்துட்டாங்க..

-------------------------------------------

47.  வெற்றி மேல எப்பவும் வெறியா இருக்கனும்.. 

----------------------------

48. பீச்ல விக்கற பஜ்ஜி நான் சாப்பிட மாட்டேன்பா.. 

ஏண்டா..?

அந்த கடலை மாவுல கை விட்டு பிசைஞ்சு. உவ்வே பார்க்கவே அருந்துதலா இருக்கும்..மச்சி.. நீ சாப்பிடறா.. 

அடப்பாவி. 

-----------------------------------

49. காதல்ங்கறது காக்கா பீ மாதிரி, அது யார் தலைல எப்போ விழும்னு சொல்ல முடியாது

-------------------------------

50. ஏய்.. நீ இதுக்கு முன்னால பீச்க்கு வந்திருக்கியா?


ச்சே.. ச்சே.. இப்போ தான் மொத டைம் உங்க கூட வர்றேன்.. நமக்கு எல்லாம் இங்கே வர நேரம் ஏது?

-----------------------------


டிஸ்கி -

மெரீனா - குழந்தைக்கல்வியின் அவசியம் - சினிமா விமர்சனம்

Friday, February 03, 2012

மெரீனா - குழந்தைக்கல்வியின் அவசியம் - சினிமா விமர்சனம்

http://moviegalleri.net/wp-content/gallery/marina-movie-wallpapers/marina_movie_wallpapers_150.jpgஒரு பிரமாதமான படைப்பை தன் முதல் முயற்சியாக தந்து வெற்றி பெறும் ஒரு புதிய  படைப்பாளி அதற்கான மக்கள் அங்கீகாரம்,வியாபார ரீதியான வெற்றி இரண்டையும் ஒருங்கே பெறுகையில் ஜென்ம சாபல்யம் அடைகிறான்.. அவனது அடுத்த படைப்பு எது மாதிரி வரும் என்ற அதீத எதிர் பார்ப்பை தூண்டி விடுகிறான்..ஆனால் சில சமயங்களில் அந்த வெற்றி அந்த படைப்பாளன் மனதில் அதீத தன்னம்பிக்கையையும்,நாம் எது சொன்னாலும் மக்கள் ரசிப்பார்கள் என்ற தவறான எண்ணத்தையும் தானாகவே ஏற்படுத்தி விடுகிறது.. எடுத்துக்கொண்ட கரு பாராட்டும் விதமாக இருந்தாலும் சொன்ன விதம் சீராட்டும் விதமாக இல்லாமல் போவதற்கு வெற்றி கொடுத்த  லேசான கர்வமும் ஒரு காரணம் ஆகி விடுகிறது.. 

பசங்க படத்தின் மூலம் விருதை அள்ளிய பாண்டி ராஜ் வம்சம் படம் தந்து இப்போது மெரீனாவில் லேசாக சறுக்கி விட்டார்.. மெரீனாவில் சுண்டல் விற்கும் சிறுவர்கள் வாழ்க்கை, அவர்களை சுற்றிய மனிதர்களின் ஒரு மேலோட்டமான பார்வை இதுதான் கதை..

பசங்க படத்தின் பாதிப்பு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சிவ கார்த்திகேயன் -ஓவியா லவ் ஸ்டோரியை வலிய திணித்து இருக்கிறார்கள்.. அது அதிமுக -தேமுதிக கூட்டணி மாதிரி ஒட்டாமல் தனித்து தெரிகிறது.. 

http://moviegalleri.net/wp-content/gallery/marina-movie-images/marina_movie_stills_94.jpg
உலகப்புகழ் பெற்ற இட்லி, கெட்டி சட்னி பார்சல் கிஃப்ட் சீன் 


இயக்குநர் தனிப்பட்ட முறையிலோ, தன்னை சுற்றி இருப்பவர் வாழ்க்கை மூலமோ பெண்ணால் மிகவும் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.. அதற்காக பெண்ணையும், காதலையும் இவ்வளவு கொச்சைப்படுத்தி இருக்க வேண்டாம்.. 

இந்தக்காலப்பெண்கள் பைக்கையும், செலவு செய்யும் ஒரு ஆளும் கிடைத்தால் லவ்க்கு ஓக்கே சொலிவிடுவார்கள், டக்குனு கழட்டி விட்டுட்டு அடுத்த ஜோடியை தேடிப்போயிடுவாங்க என்ற ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தை காலேஜ் ஸ்டூடண்ட்ஸின் 2 நிமிஷ கை தட்ட்ல்க்கு ஆசைப்பட்டு வலிய திணித்து இருக்கிறார்.. 

 சிவ கார்த்திகேயன் டி வியில் கலக்கியவர் பார்க்க இதில் பரிதாபமாக இருக்கார்.. பிரமாதமான கிரியேட்டிவிட்டியும், டைமிம்ங்க் சென்ஸ்ம் உள்ள இவர் எஸ் எம் எஸ் ஜோக்ஸ் வெச்சு ஒப்பேற்றுவது சகிக்கலை.. அவர் கூட வரும் நண்பர் கேரக்டர் பரவாலை.. கொஞ்சம் மொக்கை கம்மியா போடறார்.. அடுத்த படமாவது கை கொடுக்க வாழ்த்துகள்.
ஓவியா பாவம் பம்ஸ் குட்டி லாபம் ஹி ஹி கொழுக் மொழுக் என்று ஆள் நல்லா தான் இருக்கார். கேனை கேரக்டர் கிட்டத்தட்ட.. வெச்சிருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும்  சிவாவை அம்போ என விட்டு வேறு ஒருவருடன் மணம் புரியும் காட்சியில் காதல் கேலிக்குரியதாகி விடுகிறது;

சிவகார்த்திகேயனுக்காகவும்,சொப்பன சுந்தரிக்காகவும் (ஓவியா)படம் பார்க்கலாமா? அவங்க வர்றதே மொத்தம் 8 சீன் தான் ஹி ஹி கெஸ்ட் ரோல்

http://moviegalleri.net/wp-content/gallery/oviya-new-cute-pictures/oviya_cute_stills_marina_movie_97.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பத்து பைசா செலவில்லாமல் முழு படத்தையும் பீச்சில், சின்ன பசங்களை வேலை வாங்கியே முடிச்சது ( படத்தை, புரொடியூசரை) இதுல அண்ணன் தான் புரொடியூசர் வேற

2. சின்னப்பசங்களுக்கு வாழ்த்து கார்டு அனுப்புவது, தன் மகள் மேரேஜ்க்கு அழைப்பது என அந்த போஸ்ட் மேன் கேரக்டரின் நடிப்பும், கேரக்டரைசேஷனும் செம.. 

3.  ரெண்டு பசங்களுக்கும் ரன்னிங்க் ரேஸ் வைக்கும் போது வரும் துள்ளலான பின்னணி இசை மற்றும் லாங்க் ஷாட்டில் கடல் அலை நுரையாய் பொங்கி கரையை நனைக்கும் அந்த அட்டகாசமான ஒளிப்பதிவு ஸ்பெஷல் ஷாட்

4.  தன் மகன் மருமகளுடன் சேர்ந்து தன்னை ஒதுக்குவதால் மனம் வருந்தி அவனை பழி வாங்க வீட்டை விட்டு வெளீயேறி பீச்சில் பிச்சை எடுக்கும் பெரியவர் கேரக்டர் நடிப்பு கலக்கல்

5.  அப்பப்ப டைமிங்க் டயலாக் அடித்து கை தட்டல் வாங்கும் சேகுவாரா கெட்டப்பில் வரும் மன நிலை குன்றிய பாத்திரம் நடிப்பு, ஒப்பனை செம.. 

6. சிறுமியை வைத்து வித்தை காட்டி பிழைக்கும் பாட்டுக்காரன் நடிப்பு பாராட்டும் விதம்.. 

7. ஒளிப்பதிவு பக்கா.. கடற்கரையை அழகாக காட்டிய விதம். அப்புறம் பக்கோடா பாண்டி, கவுதம் புருஷோத் இரு சிறார்களின் நடிப்பு கன கச்சிதம்


8. பாடல்கள் மெலோடிஸ்.. வணக்கம் வாழ வைக்கும் சென்னை பாடலில் சென்னையையே ஒரு ரவுண்ட் வந்தது மாதிரி ஒரு ஃபீலிங்க்.. ஏலேலோ பொங்கும் கடல்,காதல் ஒரு தேவதையின் கனவா? , நண்பன் அருகில் இருந்தால் கிடையாது ஒரு கவலை என எல்லா பாடல்களுமே போர் அடிக்காமல் எடுத்த விதம்.. 

http://moviegalleri.net/wp-content/gallery/marina-movie-wallpapers/marina_movie_wallpapers_058.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய சில  லாஜிக் மிஸ்டேக்ஸ் & இயக்குநரிடம் சில கேள்விகள்

1. இந்தக்காலத்துல பசங்க ரொம்ப ஷார்ப் மூளை, ஆனா சிவ கார்த்திகேயனை செம  பேக்கு மாதிரி காட்டி இருக்கீங்க, அது ஏன்?காதலிக்கு வித்தியாசமான கிஃப்ட் தர்றேன் பேர்வழின்னு  ஒரு பெரிய பார்சலை தர்றார்.. ஓவியா .. அதை பிரிச்சா மறுபடி உள்ளே ஒரு பாக்ஸ்,, இதே போல் 13 பாக்ஸ் , கடைசில பார்த்தா அதுல 2 இட்லி, கெட்டி சட்னி .. அட ஆண்டவா.. இது காமெடியா? ஓவியா பேக்கு மாதிரி அதை சாப்பிடறார்.. சாப்பிட்ட பின் அய்யே, கெட்டிருக்கே? என கேட்க அதுக்கு சிவா நேத்தே பேக் செஞ்சது அப்டிங்கறார் அய்யோ ஹய்யோ.. தேங்காய் சட்னி 5 மணி நேரத்தில் கெட்டு ஸ்மெல் அடிக்கும், 24 மணி நேரம் கழிச்சு ஓப்பன் பண்ணா ஊரையே தூக்கும்.. அதை எப்படி ஓவியா வாயில் போட்ட பின் கெட்டிருக்குனு கண்டு பிடிக்கறார்.. 

2.  ஒரு சீன்ல செம சூடான போண்டாவை வாயில் போட்ட ஃபிகர் சுடு தண்ணியை  கையில் ஊற்றியது போல் கையை உதறுகிறார்.. எங்க ஊர்ல எல்லாம் சூடா இருந்தா துப்பிடுவோம் ஹி ஹி 

3.  யதார்த்தமான சிறுவர் வாழ்க்கையை காட்றேன் பேர்வழின்னு யூரின் பாஸ் பண்ற சீன்கள் மட்டும் 8 முறை காட்டிய அஷ்டாவதானி அவ்வ்வ்வ்வ் 

4.  இடைவேளை சஸ்பென்ஸூக்காக காட்டப்படும் அந்த சிறுவனின் கைதுப்படலம் ரொம்ப நீளம்.. ஷார்ட்டா கட் பண்ணி இருந்தா சோகத்தின் வீரியம் தூக்கலா இருந்திருக்கும், இப்படி இழுத்தா போர் அடிக்கும்..

5.  அந்த வித்தை காட்டும் சிறுமி வாமிட் பண்ற சீனை அவர் முதுகுக்குப்பின் கேமராவை வைத்து எடுக்கக்கூடாதா? அவர் நேரா கேமராவில் எடுக்கார்.. நம்ம மேலயே எடுக்கற மாதிரி ஒரு ஃபீல் உவ்வே.. 

http://indianmirrors.com/wp-content/uploads/2010/07/HotActressOviya.jpg

6.  அந்த சின்னப்பசங்களுக்கு ஒரு போட்டி வைக்கற சீன்ல சும்மா ஓட்டப்பந்தயம் மாதிரி வெச்சிருக்கலாம்.. குதிரை ரேஸ் மாதிரி வெச்சா  சென்னைல எங்கே பீச்ல அத்தனை குதிரைங்க வரும்? ஜாக்கி வாடகை, குதிரை வாடகைக்கு எல்லாம் பசங்க என்ன செய்வாங்க?

7. இன்ஸ்பெக்டர் பையனை சுண்டல் விற்கும்  பையன் கல்லால் அடிச்சுடறான்.. அது தலைல பட்டு சீரியஸ் ஆகறான்.. உடனே இன்ஸ்பெக்டர் அவருக்குக்கீழே வேலை செய்யும் இரு போலீஸ்காரர்களை ஃபிக்ஸ் பண்ணி அந்தப்பையனை கண்டு பிடிக்க அனுப்பறார்.. யார் அடிச்சா? அவன் எப்படி இருப்பான்? ஃபோட்டோ எதுவுமே இல்லாம அந்த லூஸ் போலீஸ்ங்க படம் பூரா சுத்திட்டே இருக்கு.. கடைசில எப்படியோ கண்டு பிடிச்சு அவனை கொண்டு போய்  எஸ் ஐ முன்னால நிறுத்துனா அவர் தன் பையனை விட்டு அவன் தலைல 10 கொட்டு வெச்சு அனுப்பிடறார்/ அவ்வ்வ்வ் ஆவ்வ்வ்

8. சிவ கார்த்திகேயன் யாரு? அவர் பேக் கிரவுண்ட் என்ன? ஓவியா யாரு? அவருக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? என கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு பவர் ஸ்டார் -ன் ஆனந்த தொல்லை டி வி டி பார்சல்..

படத்தின் ஸ்டில்ஸ், பேப்பர் விளம்பரங்கள், போஸ்டர்கள் டிசைன் எல்லாம் சூப்பர்.. ஆனா படம் தான் ஹி ஹி 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39 ( பசங்க -50)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

http://3.bp.blogspot.com/-aYLk2zvTndQ/Tw8AeUn1oTI/AAAAAAAAHpg/fDOC3zw8Jhg/s1600/Oviya%252C+hot+glamor+actress%252C+tamil+actress+Oviya+stills%252C+Oviya+photos.jpg

சி.பி கமெண்ட் - காதலி மேல் காண்ட் ஆனவங்க , பெண்கள் மேல் வெறுப்பு உள்ளவங்க, காதல் மேல் நம்பிக்கை இல்லாதவங்க ,பெண்களை எப்படி எல்லாம் டீஸ் பண்ணலாம்னு நினைக்கறவங்க, பொழுது போகாத பொம்முகள்,அனைவரும் இந்த படத்தை பார்க்கலாம் ஹி ஹி

 ஈரோடு ஆனூரில் இந்தப்படம் பார்த்தேன்.. அதே தியேட்டரில் தான் அடுத்த வாரம் முப்பொழுதில் உன் கற்பனைகள் வருதாம்.. தெரிஞ்சே தான் படத்தை புக் பண்ணி இருக்காங்க போல ஹா ஹா