Tuesday, September 23, 2025

HRIDAYAPOORVAM ( 2025) - ஹிருதயப்பூர்வம் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( எ ஃபீல் குட் மூவி ) @ ஜியோ ஹாட் ஸ்டார்

           

              30  கோடி  பட்ஜெட்டில் தயார் ஆகி 80 கோடி வசூலித்த படம் . புலி முருகன் மாதிரி ஆக்சன் படங்கள்  வசூலில் சாதனை செய்வது பெரியவிஷயம் இல்லை . ஒரு மெலோ டிராமா  இவ்ளவ் வசூல் செய்தது அதிசயம் தான் . இது மோகன் லாலின் சொந்தப்படம் .28/8/2025  அன்று திரை  அரங்குகளில் வெளியான இந்தப்படம்   26/9/2025 முதல்  ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் காணக்கிடைக்கும் 


நீ  வருவாய் என (1999)  படத்தில்  தன் காதலனின் கண்களை  தானமாகப்பெற்ற ஒருவனை   நாயகி விசேஷ கவனிப்பு காட்டுவதை  நாயகன் காதலாக நினைப்பது அதன் பின் நடப்பதுதான் கதை  அழகன் ( 1991)  படத்தில் ஒருவரை மூன்று பெண்கள் காதலிப்பதுதான் கதை . இந்த  2 படங்களின் டிவிடியை இயக்குனர் அட்லீயிடம் கொடுத்து ஒரு புதுக்கதை  ரெடி பண்ணுங்க என்றால் அவர் என்ன செய்வார்? அதுதான் இந்தப்படம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  குடிப்பழக்கம் , தம் பழக்கம் உண்டு , அவரது இதயம் கெட்டுப்போய் விடுகிறது . அவர்  பெரிய பணக்காரர் ஆக இருப்பதால் மாற்று இதயம் வைத்துக்கொண்டு தப்பி விடுகிறார்


 நாயகனுக்கு இதய தானம் செய்தவருடைய மகள்   நாயகனைத்தேடி வருகிறார் . விரைவில்  அவருக்குத்திருமணம் . அந்தத்திருமணத்தை நாயகன் நேரில் வந்து நடத்திக்கொடுத்தால் அவளது அப்பாவே அருகில் இருந்து ஆசீர்வதித்தது போல இருக்கும் என நாயகி கூறுகிறாள் 


 ஆரம்பத்தில் மறுத்த நாயகன் பின் மனம் மாறி  திருமண விழாவுக்கு வருகை தர சம்மதிக்கிறார். .ஆனால் நாயகிக்குத்திருமணம் தடைபடுகிறது . நாயகி வீட்டிலேயே நாயகன் தங்கி இருக்கிறார். நாயகனுக்கு நாயகி மீது காதல் பிறக்கிறது . ஆனால் நாயகி நாயகனை அப்பா வடிவில் தான் பார்க்கிறாள் , காரணம் நாயகியின் அப்பாவின் இதயம் தான் நாயகனுக்கு வைக்கப்பட்டிருக்கிறது 


 நாயகியின் அம்மாவுக்கு நாயகன் மீது ஒரு பிரியம் உருவாகிறது . காரணம்  புருசனின் இதயம் தான் நாயகனிடம் .நாயகன் அதைக்காதல் என்று நினைக்கிறார். ஆனால் காதல் இல்லை 


 நாயகனுக்கு ஒரு முன்னாள் காதலி உண்டு . ஆனால் காதலிக்குத்திருமணம் ஆகி விட்டது ஒரு மகளும் உண்டு . காதலியின் கணவன் ஓடிப்போய் விட்டான் . இப்போது காதலி  நாயகனிடம்  ப்ரப்போஸ் செய்கிறார்


 இந்த  மூன்று காதல்களில் எது நாயகனுக்கு செட் ஆகிறது என்பதுதான் மீதித்திரைக்கதை 


 நாயகன் ஆக மோகன் லால் அண்டர் ப்ளே ஆக்டிங்கில் அசத்தி இருக்கிறார். . பல இடங்களில்,அவரது அனுபவம் மிக்க நடிப்பு கை கொடுக்கிறது 


 நாயகி ஆக  மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார் . இவர் நாயகனுக்கு ஜோடி இல்லை   என்பதும்   அப்பா  முறை தான் என்பதும் தெளிவாகத்தெரிந்து விட்டதால்   இவரை  ஜோடி ஆகப்பார்க்கத்தோன்றவில்லை . நடிப்பில் குறை இல்லை 


 நாயகனின்  நண்பன் ஆக  நர்ஸ்  ஆக  சங்கீத் பிரசாத் காமெடி நடிப்புக்கு 


நாயகியின் அம்மாவாக சங்கீதா  மாதவன்  நாயர் ஆச்சரியம் அளிக்கும் நடிப்பு . 


நாயகனின்  முன்னாள்  காதலியாக  சவும்யா பாக்யம் பில்லா  உற்சாகமான நடிப்பு 


இவர்கள் போக சித்திக் ,சபீதா ஆனந்த்   போன்ற தெரிந்த   முகங்களும் உண்டு , அனைவர்  நடிப்பும் கச்சிதம் 


ஜஸ்டின்  பிரபாகரன் இசையில் நான்கு பாடல்கள் . இரு பாடல்கள் நல்ல மெலோடிஸ் . பின்னணி இசையும் அருமை 


ஒளிப்பதிவு  அனு.  காட்சிகளில் பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார். 3 நாயகிகளையும் அழகாக , கண்ணீயமாகக்காட்டி இருக்கிறார் 


 கே  ராஜகோபாலின் எடிட்டிங்கில் படம் 150 நிமிடங்கள் ஓடுகிறது 


 கதை  அகில் சத்யன்  திரைக்கதை  சோமு . இயக்கம் சத்யன் அந்திக்காடு 


சபாஷ்  டைரக்டர்


1   படத்தின் முதல்  காட்சியிலேயே நேரடியாகக்கதைக்கு வந்து விடுவது அருமை , பெரும்பாலான  மலையாளப்படங்களில் முதல் 30 நிமிடங்கள்   கேரக்டர்ஸ்  இண்ட்ரோவுக்கே எடுத்துக்கொள்வார்கள் 


2   இது ஒரு மெலோ டிராமா என்பதால் போர் அடிக்காமல் இருக்க ஆங்காங்கே காமெடிசேர்த்தது குட் ஐடியா 


3  நாயகியின்  அம்மா நிச்சயம்  உன் மேல் கிரஷ்  கொள்வார்  காரணம்  உன்னிடம் இருப்பது   அவளது  கணவனது இதயம் என நண்பன் உசுப்பேற்றும் சீனும் , நாயகியின் அம்மா நாயகனைக்கண்டு கொள்ளாமல் இருப்பதும் செமக்காமெடி 


4  நாயகனின் முன்னாள் காதலி அடிக்கடி வீடியோ காலில் வருவதும்  நாயகன் தவிப்பதும் நல்ல காமெடி  என்றால்  நாயகி  அவள்  முன்  நாயகனின்  ஜோடி போல நடித்து கடுப்பேற்றுவது அருமை 


5    நாயகியின்  அம்மா நாயகனின் குணத்தில்  மதி மயங்குவதும் ஒரு நாள் கூட தன் கணவன் சாரி சொன்னதே இல்லை என மருகுவதும் செமயான காட்சிகள் 


  ரசித்த  வசனங்கள் 


1   சார்  நீங்க பார்க்க  யங்கா , புதுசா இருக்கீங்க 


 அப்படியா? அப்போ இதுக்கு முன்னால நான் பழசா , வயசான மாதிரி இருந்தேனா? 

  அய்யோ அப்டி இல்லை சார் 


 அப்பறம் ஏன் பொய் பேசறே ? 


2   என்  புருசன் போய்ட்டாரு


 அடப்பாவமே செத்துப்போய்ட்டாரா? 


 இல்லை , அஃபிசியலா ஓடிப்போய்ட்டாரு 


3  புனே  நகரில்  பெண்கள் ரொம்ப ஓப்பனா இருப்பாங்களாமே? 


 அப்போ  புனே வில் பொண்ணுங்களை டீப்பா வாட்ச் பண்ணி இருக்கீங்க ? 


4   அப்பாவோட ஹார்ட் உன்னிடம் இருப்பதால்  மகளுக்கு   நீ அப்பா  ஓக்கே , ஆனா  கணவனோட  ஹார்ட் உன்னிடம் இருப்பதால்  மனைவிக்கு  நீ புருசனா , இது நாட் ஓக்கே 


5   நான்  ஃபகத் ஃபாசில் ஃபேன் 


 ஏன் இந்த சீனியர்  ஹீரோஸ் மம்முட்டி மோகன்லால் எல்லாம் பிடிக்காதா? 


 நோ 


6  வாழ்க்கைல நாம் தோல்வியை சந்திக்கிறோம் . அது ஜஸ்ட்  ஒரு தோல்வி தான் , அதுக்காக இடிஞ்சு விழுந்துடக்கூடாது 


7  நாம  மிகவும் விருப்பப்பட்டு ஒரு ரயில் பயணம் போறோம்,, அப்போ  டக்னு டி டி ஆர் வந்து உங்க ஸ்டேஷன் வரப்போகுது அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கனும்னு சொன்னா நமக்கு எப்படி இருக்கும் ? அப்படித்தான் நான் வாழ்க்கையை அனுபவிக்கறப்ப திடீர்னு  ஹார்ட் ஃபெய்லியர் ஆகி கடவுள் என்னை  முடிச்சுக்க சொல்லிட்டாரோ என நினைத்தேன் 


8   உங்களுக்குப்பிடித்த விலங்கு எது ?


 ஆடு. சாப்பிட அல்ல . பெட் அனிமல் 





லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அழகன்  படத்தில் வருவது போல ஆடியன்சுக்கு மூவரில் யாரா இருக்கும் ஜோடி என்ற குழப்பம் இதில் வரவில்லை , அது  பெரிய மைனஸ் 


2  நாயகன் - நாயகி அப்பா மகள் உஅவு என்பது க்ளீயர் ஆகத்தெரிந்து விட்டதால் நாயகனின் காதல் நமக்கு ஃபீல் ஆக வில்லை 


3   நாயகனின் முன்னாள்   காதலி திருமணம்  ஆகி 20 வயது மகளுடன் வருவது   அவரை நாயகன் ஏற்றுக்கொள்வது  மனதில் ஒட்டவில்லை 


4    வலிய திணிக்கப்பட்ட க்ளைமாக்ஸ் ஃபைட்  சீன்  திருஷ்டிப்பூசணி 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    ஃபீல்  குட் மூவி பார்க்க நினைப்பவர்கள் , மெலோ டிராமா பார்க்கும் பொறுமைசாலிகள் பார்க்கலாம் . ரேட்டிங்க் 3 / 5 


Hridayapoorvam
Theatrical release poster
Directed bySathyan Anthikad
Screenplay bySonu T. P.
Story byAkhil Sathyan
Produced byAntony Perumbavoor
Starring
CinematographyAnu Moothedath
Edited byK. Rajagopal
Music byJustin Prabhakaran
Production
company
Distributed byAashirvad Cinemas
Release date
  • 28 August 2025
Running time
151 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹30 crore
Box office₹80 crore[2]

Monday, September 22, 2025

கிஸ் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி ரொமாண்டிக் காமெடி டிராமா )

           

              அறிமுக இயக்குனர் ஆன சதீஷ் கிருஷ்ணன் நடன்  இயக்குனர் ஆக பணீயாற்றியவர் . நாயகன்  கவினுக்கு கடைசியாக வந்த இரு படங்களூம் தோல்வி . அதனால்  வெற்றியைக்கொடுக்க  வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரது காம்போவில் வந்த படம் கிஸ்  ஹிட் டா? இல்லையா? என்பதைப்பார்ப்போம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகனின் அம்மாவும் , அப்பாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் . நாயகனுக்கு 25 வயதாக இருக்கும்போது நாயகனின் பெற்றோர் டைவர்ஸ் செய்து கொள்கிறார்கள் . அதற்கான கிளைக்கதை தனி . அதைப்பிறகு பார்ப்போம் 


 தன் பெற்றோர் டைவர்ஸ் செய்து கொண்டதால் நாயகனுக்கு காதல் , காதலர்கள் என்றாலே அலர்ஜி  இப்படி இருக்கும்போது ஒரு நாள் நாயகி மூலம் நாயகனுக்கு ஒரு புத்தகம் கிடைக்கிறது . அந்தப்புத்தகம் வந்ததில் இருந்து நாயகனுக்கு ஒரு விசேச சக்தி கிடைக்கிறது 


 யாராவது  காதல்  ஜோடி அல்லது கள்ளக்காதல் ஜோடி லிப் கிஸ்  அடித்துக்கொள்வதை நாயகன் பார்த்தால் அந்த காதலர்களின் எதிர்காலம் அவன் கண்களுக்குத்தெரிகிறது . இதன் பின்னணியைக்கண்டு பிடிக்க நாயகன் நாயகியைத்தேடிப்போகிறான் 


நாயகி  ஒரு டான்ஸ் டீச்சர் . டான்ஸ்  கிளாஸ்  நடத்தி வருகிறாள் . நாயகன் நாயகியிடம் மாணவன் ஆக சேர்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி இருவருக்குள் காதல் மலர்கிறது . ஒரு கட்டத்தில் நாயகி நாயகனுக்கு லிப் கிஸ் அடிக்கிறாள் 


 அப்போது  நாயகனுக்கு நாயகியின் எதிர் காலம்  தெரிகிறது . அதாவது நாயகி   இறக்கப்போகிறாள் . நாம் காதலித்துத்திருமணம் செய்து கொண்டால் நாயகி இறப்பாள் என்பதால் நாயகன் நாயகியை விட்டு விலகுகிறான் .


 நாயகிக்கு நாயகன் விலகியதற்கான காரணம் தெரியாது . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை 


 நாயகன்   ஆக கவின் அசால்ட் ஆக நடித்திருக்கிறார் , அவர் நடிப்பில் நல்ல முன்னேற்றம் ஸ்கின் டோனிலும் பளபளப்புக்கூடி இருகிறது 


 நாயகி ஆக  அயோத்தி பட  நாயகி  ப்ரீத்தி  அஸ்ராணி   சிறப்பாக  நடித்து  இருக்கிறார். ஆனால் ஓவர் மேக்கப் 


 நாயகனின் அப்பாவாக  ராவ் ரமேஷ்  நல்ல நடிப்பு , நாயகனின் அம்மாவாக   தேவயானி , சித்தியாக   கவுசல்யா இருவருக்கும் அதிக வாய்ப்பில்லை 


  நாயகனின்  நண்பன் ஆக ஆர் ஜே   விஜய், அவரது  அப்பாவாக வி டி வி கணேஷ்   கலகலப்பான நடிப்பு 


 ஜென்  மார்ட்டின் இசையில் 7 பாடல்கள் . 2  குட் . பின்னணி இசை ஓக்கே ரகம் .ஹரீஸ்   கண்ணன் ஒளிப்பதிவு அருமை .   ஆர் சி பிரனவ் எடிட்டிங்கில் படம் 143 நிமிடங்கள் ஓடுகிறது 


கதை , திரைக்கதை, வசனம்  எழுதி  இயக்கி இருப்பவர்             அறிமுக இயக்குனர் ஆன சதீஷ் கிருஷ்ணன்


 வசன  உதவி  முகில்   + சவ்ரி முத்து 


சபாஷ்  டைரக்டர்


1 லவ்  சப்ஜெக்ட்  என்பதால் எடிட்டிங்கில் கரெக்டாக 143 நிமிடங்கள் டைம் டியூரேசன் வருவது போல கட் செய்த சாமார்த்தியம் 


2   ஜிம்மில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் இளைஞனுடன் வி டி வி கணேஷ் காமெடி டிராக் கலக்கல் ரகம் 


3 ரெகுலரான  ரொமண்டிக்  டிராமாவில்  ஃபேண்ட்டசி எலிமெண்ட்சை சாமார்த்தியமாக மிக்ஸ் செய்த விதம் 


5   நாயகனின் நண்பன் பெண் வேடம் இட்டு  தன் காதலியின் கலயாணத்தில் மண்டபத்தில்  செய்யும் காமெடி கலாட்டாக்கள்  அருமை , பெண் வேடம் செம 


6 மெயின் கதையின்  க்ளைமாக்சை  விட நாயகனின் பெற்றோர்  பிரிவது , அப்பாவின் பழைய காதலி  க்ளைமாக்ஸ் செம . ஒரு அழகான சிறுகதை போல அமைந்த காட்சிகள் 


7 நாயகன் காப்பாற்றும் நாய்  அதன் துணை நாய் ஹாஸ்பிடலில் வந்து  காட்டும் அன்பு கண் கலங்க வைக்கும் காட்சி 


  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு பெண்ணை அழ வெச்ச நீ இன்னொரு பெண்ணால அழுவே !


2 நீங்க லவ் பண்றதை இன்ஸ்டாவில் போடறாதல பிரச்சனை இல்லை , ஆனா இன்ஸ்டாவில் போடுவதற்காக லவ் பண்ணாதீங்க 


3   இவன் கூட எல்லாம் இருந்தா கடலை சாப்பிடத்தான் முடியும் , கடலை போட முடியாது 


4  உன் கவலையை யோசிச்சு யோசிச்சு  நான் கவலைக்கு இடம் ஆகிட்டேன் , நீ  என்னடான்னா  உன் கவலையை என் கிட்டே  கொடுத்துட்டு என் ஃபோனைக்கூட அட்டெண்ட் பணண மாட்டேன்கறே 


 சரி , கிளம்பி வீட்டுக்குப்போய் ஃபோன் பண்ணுங்க அட்டெண்ட் பண்றேன் 


 5   நான் ஆட வர்லை , எனக்கு ஆடவும் வர்லை 


6   புக்  படிக்கத்தெரியலைன்னா பரவாயில்லை , பிடிக்கவே தெரியலை 


7 சாகற நேரத்துல கூட என்ன ஸ்டேட்டஸ் வைக்கலாம்னு  யோசிக்கறான் பாருங்க ,


8  நான் செத்துட்டா   என் காதலி   விண்டோ  ஆகிடுவா


 அது விடோ . உன் குழந்தையை அப்புறமா ஸ்கூலில் விடலாம், முதல்ல நீ ஸ்கூல் போ நாயே 


9 சார், ஜிம்மை மூடப்போறோம்


 ஏன்பா, நல்லாதானே  போய்க்கிட்டு இருக்கு , எதனால ஜிமை மூடனும் ?


 சார் க்ளோசிங்க் டைம், போய்ட்டு நாளைக்கு வாங்க 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  இக்கதையின் கதைக்கரு  2022ல்  வெளியான சவுத் கொரியன் வெப் சீரிஸ் ஆன  கிஸ் சிக்ஸ்த் சென்ஸ்  - இருந்து  இன்ஸ்பயர் ஆகி இருக்காங்க . அதில் நாயகிக்கு அப்படி நடக்கும் , இதில் நாயகனுக்கு நடக்குது 


2 நாயகி ஒரு டான்ஸ் டீச்சர் , நாயகன் அப்போதுதான் புதிதாக டான்ஸ் கிளாசில் சேர்ந்த ஸ்டூடண்ட் . போட்டி நடனத்துக்கு முறைப்படி டீச்சர் ஆல்ரெடி பிராக்டிஸ் செய்த சீனியர் ஸ்டூடண்ட் உடன் தானே ஜோடி சேர்ந்து ஆடனும் ?  டான்சே தெரியாத  தத்தி  நாயகனுடன் ஏன் ஜோடி சேர்ந்து ஆடனும் ? 


3   நாயகன் - நாயகி  இருவரும்  காதலை வெளிப்படுத்தும் இண்ட்டர்வெல் பிளாக் டான்ஸ்  சீன் புன்னகை மன்னன்  கமல் - ரேவதி தீம் மியூசிக் டான்ஸ் ஸ்டெப் மாதிரியே  இருக்கு . சொந்தமா  யோசித்து இருக்கலாம் 


4   சுவராஸ்யம்,ஆகச்சென்ற  முதல் பாதி போல பின் பாதி அமையவில்லை. எமோஷனல் கனெக்ட்டையும் கொடுக்கவில்லை 


5   நாயகனின் அப்பா  நாயகனுடன் பேச பல முறை  முயற்சி  செய்கிறார். நாயகனின் தம்பி அதாவது அவரது இரண்டாவது மகனுடன் பேசவே முயசிக்க வில்லையே அது ஏன் ? 


6  ஒரு காதல் ஜோடி பிரிவதாகக்காட்சி வைக்கும் முன் அவர்களது காதல் அழுத்தமாக ஆடியன்ஸ் மனதில் பதியும்படி காட்சிகள் வைக்க வேண்டும், ஆனால் முதல் பாதியில் அப்படி ஒரு சீனே வைக்காமல் கிஸ் அடித்ததும் பிரிவது போல் சீன் வைத்தது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை 


7  நாயகியின் அப்பாவுக்கு சீரியஸ், ஹாஸ்பிடலில் சேர்க்கறாங்க , இதுதான் சீன், இந்த சீனில் நாயகி ஸ்லீவ்லெஸ் பனியன் போட்டுட்டு கிளாமராக வருகிறார். சோக சீனிலாவது  நாயகி டீசண்ட்டாக கவர் பண்ற மாதிரி டிரஸ் போடலாமில்ல ? 


8   க்ளைமாக்ஸ்  தீ விபத்து செயற்கை . மனதில் ஒட்டவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16 +  லிப்  கிஸ் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள்  பார்க்கலாம் , ஃபேண்ட்டசி சப்ஜெக்ட்டில்   ஆர்வம் உள்ளவர்களூம் பார்க்கலாம் .  பி சி செண்ட்டர்களில் மீடியம் ஹிட் அடிக்கும்  விகடன் மார்க் யூகம் 41 . ரேட்டிங்க் 2.5 / 5 


முத்தம்
நாடக வெளியீட்டு சுவரொட்டி
இயக்கியவர்சதீஷ் கிருஷ்ணன்
எழுதியவர்சதீஷ் கிருஷ்ணன்
உரையாடல்கள்
  • சதீஷ் கிருஷ்ணன்
  • முகில் (கூடுதல்)
  • ஆர். சவரி முத்து (கூடுதல்)
தயாரித்தவர்ராகுல்
நடிப்பு
ஒளிப்பதிவுஹரிஷ் கண்ணன்
திருத்தியவர்ஆர்.சி. பிரணவ்
இசையமைத்தவர்ஜென் மார்ட்டின்
தயாரிப்பு
நிறுவனம்
ரோமியோ படங்கள்
வெளியீட்டு தேதி
  • 19 செப்டம்பர் 2025
இயக்க நேரம்
143 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வசூல்தோராயமான  1.5 கோடி [ 2 ]

Sunday, September 21, 2025

சக்தித்திருமகன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் ஆக்சன் மசாலா )

           


         இந்தப்படத்தை ஆர்வமாகப்பார்க்க இரண்டே  காரணங்கள் தான் அருவி (2017)  என்ற  வித்தியாசமான ஹிட் படத்தைக்கொடுத்த இயக்குனர்   அருண் பிரபு புருஷோத்தமன்  இயக்கிய படம் + விஜய் ஆண்ட்டனியின் 25 வது படம் , அவரது சொந்தப்படம் . 19/9/25  முதல் திரை  அரங்குகளில் வெளியாகி உள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சென்னை தலைமை செயலகத்தில் நாயகன்  ஒரு மீடியேட்டர் ஆக புரோக்கர் ஆகப்பணிபுரிகிறான். ஐ ஜி க்கு புரமோஷன்  வாங்கித்தருவது , மந்திரிக்கு  பெரிய பதவி கிடைக்க செய்வது என பல மேலிடங்களுக்கு உதவியாக இருந்து அதில்  10 % கமிஷன் ஆகப்பெறுகிறான் . 15 வருடங்களில் கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்கிறான். தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஏழை மக்களூக்கு செலவு செய்கிறான் 


  வில்லன் 30 வருடங்களாக அரசியலில் இருந்து  கோடிக்கணக்கான பணம் சம்பாதித்து இருக்கிறான். ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதுதான் வில்லனின் லட்சியம் . நாயகனின் அம்மாவை  இளம்வயதில் பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்தவன் இவன்


நாயகன்  வில்லனை எப்படிப்பழி வாங்கினான் என்பதே   மீதித்திரைக்கதை 


நாயகன் ஆக விஜய் ஆண்ட்டனி  நடித்து இருக்கிறார். வழக்கம் போலவே  முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் நடித்து இருக்கிறார் . அவரது  பி ஏ   ஆக விவேக் படங்களில் காமெடி செய்யும் செல் முருகன் வித்தியாசமான குணச்சித்திர வேடத்தில் நடித்து இருக்கிறார்


பாரதிராஜாவின் காதல் ஓவியம் படத்தில் நாயகன் ஆக நடித்த கண்னன்  என்கிற  சுனில் தான் இதில் வில்லன் . ஜனாதிபதி ஆக இவர் செய்யும் மூவ்கள் எல்லாம் பயங்கரம் . இவரது  கெட்டப் துக்ளக்   ஆசிரியர் ஆடிட்டர்  குரு மூர்த்தியை நினைவு படுத்துகிறது , இவரது  உடல் மொழி , டயலாக் டெலிவரி நடிப்பு கலக்கல் ரகம் 


  வில்லனுக்குத்துணை புரியும்  மத்திய  அமைச்சர் ஆக வரும் வில்லி கெட்டப்  நிர்மலா சீதாராமனை  நினைவுபடுத்துகிறது . சென்சாரில் எப்படி விட்டார்கள் என்பது தெரியவில்லை 


நாயகி ஆக  திருப்பாதி ரவீந்திரா  நடித்திருக்கிறார் . குடும்பப்பாங்கான கண்ணீய தோற்றம் , ஆனால் அதிக வாய்ப்பில்லை 


 நாயகனின் வளர்ப்புத்தந்தை ஆக வாகை சந்திர சேகர் நடித்திருக்கிறார்


 விஜய் ஆண்ட்டனி தான் இசை . ஒரு பாடல்  நன்றாக இருக்கிறது . பின்னணி இசை ஓக்கே ரகம் 


ஷெல்லி ஆர் காலிஸ்ட்  தான் ஒளிப்பதிவு .  ஷங்கர்  படங்களில்  வரும் பிரம்மாண்டம்  இருக்கிறது .எடிட்டிங்க் இன்னமும்  கவனம் தேவை . பின் பாதியில் ரொம்ப ஸ்லோ .157  நிமிடங்கள்  படம் ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  முதல்  பாதி  திரைக்கதை  நல்ல வேகம் . ஒரு சீனில் என்ன நடக்கிறது ? அது சாத்தியமா? எப்படி? என யோசிப்பதற்குள் அடுத்த சீன் வருகிறது . நல்ல உத்தி 


2  சாதா  பழி வாங்கும் கதையை  அரசியல் சதுரங்க விளையாட்டில்  லாவகமாக பரபரப்புக்கூட்டியது 


3  இப்படி  எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை , ஆனால் நடந்தால்  நல்லா இருக்கும் என்ற சாமான்யனின் மைண்ட் செட் தான் படத்தின் வெற்றிக்குக்காரணம் 


  ரசித்த  வசனங்கள் 


1 பலவீனமான ஆடு பலி ஆவது பாவம் இல்லை , பிராப்தம் 


2 அரசியலில்  அப்பிராணியா இருந்தா ஆப்பு வெச்சுச்சுப்போயிடுவாங்க


3 ஆட்சி , அதிகாரம் இருக்கும்போதே சம்பாதிச்சாதான் உண்டு , பதவி போய்ட்டா எவனும் மதிக்க மாட்டான் 


4  நாலு பேரு கையெடுத்துக்கும்பிட்டாலும்  எட்டுப்பேரு நாசமாப்போ என சொல்லும் அளவுக்கு இறங்கிப்பண்ணி இருக்கேன் 


5  பெரிய பெரிய   கல் எல்லாம் சின்னக்கல் தடுக்கித்தான் கீழே விழும் 


6 இந்த நாட்டில் சம்பாதிப்பதை விட பினாமிகளைக்கண்டு பிடிப்பதுதான் குதிரைக்கொம்பா ஆகிடுச்சு 


7  ஒருத்தரை தொடர்ந்து அப்சர்வ் பண்ண ஆரம்பிச்சா அவங்க அடுத்து என்ன செய்யப்போறாங்க என்பது தெரிஞ்சிடும் 


8  தீவிரவாதியை விட அரசியல்வாதி மோசமானவன் ,அரசியல்வாதியை விட மோசமானவன் ,  பிம்ப்            மோசமானவன் ,  இவங்க   3 பேரையும் விட  மோசமானவன்   மீடியேட்டர் /புரோக்கர் ச்


9 எங்கெல்லாம் சிஸ்டம் ஃபெயில் ஆகி  அரசாங்கம் மக்களூக்கு செய்யலையோ அங்கெல்லாம் இவன் செஞ்சிருக்கான் சார் 


10 வாழ்க்கை என்பது அவனவன் வாழ்வதற்கு மட்டும் இல்லை , அடுத்தவங்களூக்காக வாழ்வதும்தான் 


11   குறி  பார்க்காம சுடுவது எவ்வளவு ஆபத்தோ அதை விட ஆபத்து சிந்திக்காமல் பேசுவது 


12  பத்தாயிரம் பேரு  பட்டினியா இருந்தாத்தான் ஒத்தைப்பணக்காரன் வயிறு நிரம்பும் 


13  தனக்கான வழியைத்தானே உருவாக்கிக்கொள்பவன் தான் தலைவன் ஆக முடியும் 


14 காட்டுல ஒரு பிரச்சனைன்னா அழிக்க வேண்டியது சிங்கத்தை அல்ல

 நரியை 


15   இந்த நாட்டில் பிரச்சனையே தகுதியே இல்லாதவன் தன் தகுதிக்கு மீறி  ஆசைப்படுவதுதான் 


16     என்ன  ஜாதின்னா கேட்டே? இங்கே நல்லவன் , கெட்டவன் ரெண்டே ஜாதி தான் 


17  இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடி . இதுல பாதிப்பேரு ரேஷன் அரிசியை  நம்பித்தான் வாழ்றான்


18   நான்  செய்த பாவத்தைக்கணக்குப்போட கடவுளுக்கே  ஆயுசு  பத்தாது 


19     எல்லாரையும்  பிச்சைக்காரன் ஆக்கிட்டு யார் கிட்டே திருடுவது ?


20    ஜனநாயக நாட்டில் மேலே இருக்கிறவன் தான் கீழே  இருப்பவனிடம் பயப்படனும் 


21 இங்கே  இருக்கும் மினிஸ்டருங்க எல்லாம் எம் ஜி ஆர்  மாதிரியா இருக்காங்க , நல்லா குடிச்சுட்டு பன்னி மாதிரிதானே இருக்காங்க ?


22  இல்லைன்னு சொல்றவன் நாத்திகன் , இருக்குன்னு சொல்றவன் ஆத்திகன் , இந்த இரண்டு கேட்டகிரிக்கும் நடுவில் இருக்கானே அவன் தான் ஸ்ட்ரைட் கிரிமினல் 


23  இத்தனூண்டு  பூனையைப்பார்த்து  பயந்து  ஊரை சுத்திப்போறான் பார்த்தியா இதுதான் மூட நம்பிக்கையின் உச்சம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஷங்கரின்  முதல் படமான ஜெண்ட்டில்மேன்  ரெஃப்ரென்ஸ் பல இடங்களில் கொட்டிக்கிடக்கிறது 


2  மெயின்  வில்லன் , வில்லி , சைடு  வில்லன் மூவரும்  ஆங்கில வசனங்கள் அதிகமாகப்பேசுவதால்   அதற்கு  தமிழ் சப் டைட்டில் போடாததால் பல வசனங்கள் புரியவில்லை 


3 ரமணா  வில் நாயகன்  செய்வதில் நம்பகத்தன்மை இருந்தது , இதில் மிஸ்சிங்க் 


4    வில்லன் நாயகனைக்கார்னர் செய்தபோதே இடைவேளை  டைமிலேயே கொன்றிருக்கலாம் . விட்டு விடுவது ஏனோ?


5   பின் பாதியில்  நாயகன் என்னமோ தகிடுதித்தம் செய்கிறான் என்பது வில்லனுக்குத்தெரியும்போதே  நாயகனைப்போட்டுத்தள்ளி இருக்கலாம், ஆனால் சும்மா ஃபாலோ பண்ணி அப்டேட் கொடுத்துட்டு இருக்காங்க .   அடியாளூங்க 


6    வாகை சந்திர சேகர்  நாயகன் கைக்குழந்தையாக சுடுகாட்டில்  பார்த்து  தத்து எடுத்து வளர்க்கிறார் . அவருக்கு   எப்படி நாயகனின் அம்மாவைக்கொலை செய்த வில்லனின் விபரங்கள் தெரிந்தன? 

7   பின் பாதியில்  அரசாங்கத்தைக்குறை சொல்லும் சீன்கள் எல்லாம் நியூஸ் சேனல் பார்ப்பது போல ஒட்டவில்லை , ரமாணாவில் ஆழமாகபப்திய வைத்திருந்தார்கள் 


8 பவர்ஃபுல்லான வில்லனுக்கு 15 வருடங்களாக  தமிழகத்தை ஆட்டி வைக்கும் நாயகனைத்தெரியாமல் இருப்பது எப்படி ? 


9   நாயகன்  ஃபாரீனில் கிரிப்டோ கரன்சியை டீல் செய்வது ஹவாலா மோசடி எல்லாம் காதில் பூக்கூடை ரகம்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஜெண்டில்மேன் + ரமணா  பாணீயில் பரபரப்பான  முதல் பாதி , நம்பவே முடியாத பின் பாதி , கமர்ஷியல் ஹிட்  பி , சி செண்ட்டர்களில் ஆகிடும் . விகடன் மார்க் யூகம் 42 . ரேட்டிங்க் 2.75 / 5 



Shakthi Thirumagan
Theatrical release poster
Directed byArun Prabu
Written byArun Prabu
Produced byFatima Vijay Antony
Meera Vijay Antony (Presenter)
Starring
CinematographyShelley R. Calist
Edited byRaymond Derrick Crasta
Dinsa
Music byVijay Antony
Production
company
Vijay Antony Film Corporation
Release date
  • 19 September 2025
Running time
157 minutes
CountryIndia
LanguageTamil

Saturday, September 20, 2025

LOKAH CHAPTER 1 - CHANDRA (2025) - மலையாளம் - சினிம விமர்சனம் ( டார்க் ஃபேண்ட்டசி சூப்பர் ஹீரோ த்ரில்லர் ) @நெட் ஃபிளிக்ஸ்

       

            30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு      24  நாட்களில் 260 கோடி வசூல்  சாதனை செய்த    மலையாளப்படம் இது .  ஓவர் ரேட்டட் என சிலரும் , ஒர்த்தான் என பலரும் விமர்சித்து வரும் வேளையில்   அப்படி என்னதான் இருக்கிறது என பார்ப்போம் என  களம்  இறங்கினேன் . மம்முட்டி , மோகன் லால் மாதிரி  சூப்பர்  ஹீரோக்கள் யாரும் இல்லாமல்  ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம் வசூலில் கலக்கி இருப்பது மகிழ்ச்சி 

 மம்முட்டியின்   மகன் ஆன  துல்கர் சல்மான் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் . வசூலில் வந்த லாபம் முழுக்க படத்தில் பங்குபெற்ற நடிகர்,. நடிகையர் , தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு சமமாகப்பிரித்துக்கொடுத்துவிட்டாராம், சபாஷ் . இப்படத்தின் 2ம் , 3ம் பாகங்கள் வர இருக்கின்றன 


28/8/2-025  அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம்   28/9/2025 முதல் நெட் ஃபிளிக்ஸ் சில்  காணக்கிடைக்கும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு சராசரி இளைஞன். ஆல்ரெடி ஒரு லவ் ஃபெய்லியர் உண்டு. நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடிப்பது இவர் வழக்கம் . இவர்  வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு புதுப்பெண் குடி வருகிறார் . அவர் தான் நாயகி . வெளி நாட்டில் இருந்து இங்கே வந்திருக்கும் அவர் ஒரு கம்பெனியில் நைட் ஷிட்ஃப்ட்டில்  வேலை பார்க்கிறார் 


 நாயகன் நாயகி பின்னாலயே  சுற்றுகிறார் . நண்பர்களுடன் கேலி கிண்டல் , நாயகி பின்னால் அலைவது என முதல் அரை மணி நேரம்  ஜாலியாக்கதை போகிறது 


 அந்த  நகரில்  மனித உறுப்புக்களைத்திருடும் கும்பலை போலீஸ் தேடுகிறது . போலீசின் சந்தேக  வளையத்தில் நாயகி சிக்குகிறார்


 நாயகன்  ஒரு முறை நாயகியை ஃபாலோ செய்து போன போது  ஒரு அதிர்ச்சிகரமான சம்பத்தைப்பார்க்கிறார் . நாயகி மனிதப்பிறவியே அல்ல,  யட்சி  ( லேடி டிராகுலா மாதிரி ) 


நாயகி   சிறுமியாக இருந்தபோது  (அதாவது  பலநூற்றாண்டுகளுக்கு முன் ) நாயகியின் பெற்றோரை ஒரு கும்பல்  கொலை செய்கிறது . அப்போது வெகுண்டு எழுந்த நாயகி தனக்குள் அபூர்வ சக்தி இருப்பதை உணர்கிறாள் . தான் ஒரு யட்சி என்பதை உணர்கிறாள் . 20 வருடங்களுக்கு ஒரு முறை அவர் இடம் மாறிவிட வேண்டும் .கண்ணன்  அவதாரம் எடுத்து அரக்கர்களை அழிப்பது போல நாயகி  20 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ஏரியாவுக்கு வந்து அங்கே இருக்கும் தீய சக்திகளை அழிக்கிறார். நாயகிக்கு இப்போது வயது 1200 


நாயகி க்கு ,மரணம் இல்லை. நாயகனுடன் ஆன  காதல்  என்ன ஆச்சு ? நாயகிக்கு ஒரு வில்லன் எப்படி முளைக்கிறான் ? அவனை நாயகி எப்படி சமாளிக்கிறாள் என்பது மீதி திரைக்கதை 


நாயகி  ஆக  கல்யாணி  பிரியதர்ஷினி கலக்கி இருக்கிறார் .சிரிக்காத முகம் , ஆனால் சுண்டி இழுக்கும் கண்கள் 


 ஜேக்ஸ்  பீஜாய் தான் இசை . இரு பாடல்கள்  குட் , பின்னணி இசை அருமை . சாமன் சாக்கோ தான் எடிட்டிங்க்  முதல் பாதி செம ஸ்பீடு . 150 நிமிடங்கள் டைம் ட்யூரேசன் . ஒளிப்பதிவு நிமிஷ் ரவி . கலக்கலான ஃபோட்டோகிராஃபி . போஸ்டர் டிசைன்கள்  , பல ஸ்டில்கள்   எல்லாம் அள்ளுது 


 சாந்தி  பாலச்சந்திரன் உடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  தனியே இயக்கி இருக்கிறார்  டொமினிக்  அருண்


சபாஷ்  டைரக்டர்


1   ஆர்ட் டைரக்சன் ,ஒளிப்பதிவு , பின்னணி இசை  போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமாதம் . ஃபாரீன் லொக்கேஷன் மாதிரி செமயாக  எடுத்து இருக்கிறார்கள் 


2 டொவினோ தாமஸ் , துல்கர் சல்மான் , கூலி வில்லன்  சவுபின் சாஹிர்   போன்றோர் கேமியோ ரோலில் வரும்போதெல்லாம் தியேட்டரில் கை தட்டல் காதைப்பிளக்கிறது 


3  நாயகனின்  அப்பாவிமுகம் , நாயகியின் இறுகிய முகம் ஸ்பெஷல் காம்போ  ரசிகர்களை சுண்டி இழுக்கிறது 


4   க்ளைமாக்சில்   நாயகியின் ஃபைட் , உடல் மொழி அபாரம் . வைஜயந்தி ஐ பிஎஸ்  விஜயசாந்தி ரேஞ்சுக்கு கலக்குகிறார் 


5  நாயகியை வெறும் வேம்ப்பயர் , லேடி டிராகுலா மாதிரி காட்டாமல் கிராமத்து தெய்வம் அவதாரம் மாதிரி   கலந்து கட்டி கேரக்டர்  டிசைன்  அமைத்ததில்  இயக்குனருக்கு வெற்றி 


6  இண்ட்டர்வல்  பிளாக் சீன் பாட்ஷாவுக்கு இணையான ட்ராண்ஸ்ஃபர்மேசன் சீன் கலக்கல் ரகம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி தன் பவரை  உபயோகிக்கும் காட்சிகளில் கூஸ்பம்ப்  சீன்கள் வைக்காமல் இயக்குனர்  தவறு செய்து விட்டார் 


2  நாயகி , வில்லன்  இருவருக்குமான ஃபைட் சீன்கள் அயர்ச்சியைத்தருகின்றன 


3  கழுத்தைக்கடிப்பது , ரத்தம் பீறிட்டு  வருவது   போன்ற   வன்முறைக்காட்சிகள் அதிகம் 


4  வில்லன்  சாண்டியின் நடிப்பு ஓக்கே , ஆனால் அவர் வயசு ஒரு மைனஸ். சின்னப்பையனாக இருகிறார். பவர் ஃபுல் வில்லன் ரோலுக்குப்பொருத்தம் இல்லை 


5  வில்லன்   ஒரு போலீஸ் ஆஃபீசர், அவர் தனது ஹையர் ஆஃபீசரை முறைப்பது , கோபித்துக்கொள்வது எல்லாம் ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  18+  வயலனசுக்காக 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கலாம் .மேல்சாவனிஸ்ட்களூக்குப்பிடிக்காது ( ஹீரோயின் வீரம் ஹீரோ கோழை )  ரேட்டிங்க்  3/ 5 


Lokah: Chapter 1 – Chandra
Theatrical release poster
Directed byDominic Arun
Screenplay byDominic Arun
Santhy Balachandran
Story byDominic Arun
Produced byDulquer Salmaan
StarringKalyani Priyadarshan
Naslen
Sandy Master
Arun Kurian
Chandhu Salimkumar
CinematographyNimish Ravi
Edited byChaman Chakko
Music byJakes Bejoy
Production
company
Distributed byWayfarer Films[1]
Release date
  • 28 August 2025
Running time
149 minutes[2]
CountryIndia
LanguageMalayalam
Budget₹30 crore[3]
Box officeest.₹260 crore[4][5]

Friday, September 19, 2025

மாயக்கூத்து (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி க்ரைம் டிராமா ) @ சன் நெக்ஸ்ட்

           

              SIX CHARECTERS IN SEARCH OF AN AUTHOR     என்ற     புகழ் பெற்ற இத்தாலிய   நாடகத்தை   லோகி பிராண்டெல்லோ    19 ம் நூற்றாண்டில் எழுதினார் . அதில்  இருந்து இன்ஸ்பயர் ஆகி  இந்த வித்தியாசமான திரைக்தை அமைக்கப்பட்டிருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு ரைட்டர் . கொஞ்சம் தலைக்கனம் கொண்டவன் . தான் படைப்பதே   எழுத்து , தான் பிரம்மாவுக்கு சமம் என்ற அகந்தை கொண்டவன் . புகழ் பெற்ற  எழுத்தாளனான  நாயகன்  ஒரு பிரபல பத்திரிக்கையில் 3 சிறுகதைகள் ( தொடர்கதை )  எழுதுகிறான் 


கதை 1 - 49 கொலைகள் செய்த லோக்கல் தாதா ஒருவன் தன் 50 வது கொலை செய்யும் முன் அவனது குடும்ப ஜோசியர் மூலம் தன் கூட்டாளிகளில் ஒருவன் துரோகி , அவனாலேயே தான் கொல்லப்படப்போகிறோம் என்பதை அறிகிறான் . அந்த துரோகி யார் என்பதைக்கண்டு பிடிக்கும் முயற்சியில் இருக்கிறான் 


 கதை 2  நாயகி ஒரு பணிப்-பெண் , ஏழை . ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும்போது  அவர்கள் வீட்டில் 2000  ரூபாய் நோட்டு  காணாமல் போகிறது ., நாயகி தான் அதை எடுத்திருப்பாள் என ஓனரம்மா சந்தேகம் கொள்கிறாள் .ஆனால்  நாயகி அதை எடுக்கவில்லை 


  கதை  3 - நாயகி ஒரு  மருத்துவ மாணவி . விவசாயக்கடும்பத்தில் பிறந்த ஏழை . டாக்டர்  ஆக வேண்டும் என்ற   இவரது லட்சியத்துக்கு நீட் தேர்வு முட்டுக்கட்டை போடுகிறது . தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கு நாயகி தள்ளப்படுகிறாள் 


 மேலே  சொன்ன 3 கதைகளின் மெயின் கேரக்டர்கள்   ரைட்டரை  நேரில் சந்தித்து தங்களூக்கு நியாயம் வழங்க வேண்டும் என மிரட்டுகின்றன . நியாயம் வழங்காவிடில் ரைட்டரைக்கொலை செய்வதாக மிரட்டுகின்றன . நாயகன் என்ன முடிவு எடுத்தார் . எப்படி அதை செயல்படுத்தினார் என்பது மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக நாகராஜன் கச்சிதமான நடிப்பு . மிரண்டு ஓடும் காட்சிகளில் அவரது பயம் அருமை ,அவரது மனைவியாக வரும் காயத்ரி நடிப்பு செம ( இவர் நிஜத்தில் ஒரு டாக்டராம் ) 


முதல் கதையில் தாதாவாக வரும் சாய் தீனா நடிப்பு மிரட்டல் ரகம் . 2வது  கதையில்  பணிப்பெண்னாக வரும் ஐஸ்வர்யா ரகுபதி கவனிக்க வைக்கும் நடிப்பு /  எடிட்டர் ஆக வரும் அமரர் டெல்லி கணேஷ்  மட்டும் தான் அனைவருக்கும் தெரிந்த முகம் . மற்றவர்கள் பெரும்பாலும் புது முகங்களே 


ஒளிப்பதிவு சுந்தர் ராமகிருஷ்ணன் . பல காட்சிகளில் கலக்கி இருக்கிறார் . இசை அஞ்சனா ராஜகோபாலன் . ஒரு பாடல் அருமை . பின்னணி இசையும் கச்சிதம் .


 கதை , திரைக்கதை  சீனிவாசன் , இயக்கம் ராகவேந்திரா 


சபாஷ்  டைரக்டர்


1   மூன்று  கதைகளையும்  குழப்பம் இல்லாமல் சுவராஸ்யமாக , மனதில் பதியும்படி சொன்ன விதம் 


2   சாதா  ஷாட்களைக்கூட ஹாரர் ஃபீலிங்க் வரும்படி  கட் செய்த அபாரமான எடிட்டிங்க் . 2 மணி நேரத்தில் ஷார்ப் ஆக முடித்த விதம் 


3  எழுத்தாளர்களூக்கு சமூகப்பொறுப்பு இருக்கிறது , புகழுக்கு   ஆசைப்பட்டு  மனம் போனபடி எழுதக்கூடாது என்ற கருத்தை சொன்ன விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1 நாம் வெளிப்படுத்தும்  ஒவ்வொன்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் 


2 ஒரு பொருளை உருவாக்க  ரொம்ப நாள்  மெனக்கெடனும், ஆனால் அழிக்க ஒரு நொடி போதும் 


3 எழுத்தாளன் கடவுள் மாதிரி  தான் 


4   சிலர் சாமியைப்பார்த்ததா   சந்தோஷமா சொல்வாங்க , சிலர் பேயைப்பார்த்ததா பீதியோட சொல்வாங்க 


5  ஆணவத்தில் ஆடுபவர்களுக்கு ஆண்டவன் ஒரு நாள் கொடுப்பான் 


6 பிள்ளைங்க ஆசைப்பட்டுட்டாங்க , ஒரு வாட்டி செத்துடு 


7  அதிகாரம் என்பது சரியானவற்றை  சரியான நேரத்தில் கொடுப்பது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 2000 ரூபாய்  நோட்டு  நியூஸ்பேப்பர்  அடியில்  வைப்பவர்  அருகில் இருக்கும்  வெயிட்டை  அதன் மேல் ஏன்  வைக்கலை ?காத்துக்கு  பறக்கும் எனத்தெரியாதா? 


2 பொதுவாக  பொண்டாட்டிங்க புருசனை  அடக்குவாங்க  என்பது உண்மை தான் ,ஆனால்  49 கொலைகள்  செய்த  தாதாவின்   மனைவி  அவனை  மதிக்கவே  இல்லையே? புருசனா  மதிக்காட்டி பரவாயில்லை , மனுசனாக்கூட மதிக்கலை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்   யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  அனைவருக்குமான படம் இல்லை . மாறுபட்ட ரசனையை விரும்புபவர்களூக்கு மட்டும் . ரேட்டிங்க் 3 / 5 


மாயக்கூத்து
நாடக வெளியீட்டு சுவரொட்டி
இயக்கியவர்ஏ.ஆர். ராகவேந்திரா
எழுதியவர்நாகராஜன் கண்ணன் (உரையாடல்கள்)
திரைக்கதை எழுதியவர்
  • ஏ.ஆர். ராகவேந்திரா
  • எம். ஸ்ரீனிவாசன்
கதை எழுதியவர்
  • ஏ.ஆர். ராகவேந்திரா
  • எம். ஸ்ரீனிவாசன்
தயாரித்தவர்ராகுல் தேவ
பிரசாத் ராமச்சந்திரன்
நடிப்புநாகராஜன் கண்ணன்
டெல்லி கணேஷ்
மு ராமசுவாமி
ஒளிப்பதிவுசுந்தர் ராம் கிருஷ்ணன்
திருத்தியவர்நாகூரான் ராமச்சந்திரன்
இசையமைத்தவர்அஞ்சனா ராஜகோபாலன்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ராகுல் மூவி மேக்கர்ஸ்
அபிமன்யு கிரியேஷன்ஸ்
வெளியீட்டு தேதி
  • 11 ஜூலை 2025
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Thursday, September 18, 2025

தணல் ( 2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )

               

        தணல்  என்ற  தமிழ் சொல்லுக்கு   கனன்று கொண்டிருக்கும் நெருப்பு  என்று அர்த்தம் . டனல்  என்ற ஆங்கில சொல்லுக்கு  சுரங்கம் என்று அர்த்தம் . இந்த இரண்டு அர்த்தங்களையும் கனெக்ட் பண்ணி  அழகாக  திரைக்கதை  அமைத்து  இருக்கிறார்கள் 


 லோகேஷ்  கனகராஜின் கைதி படத்துக்குப்பின் ஒரே இரவில் நிகழும்  கதைகளுக்கு மவுசு ஏற்பட்டிருக்கின்றன  . அவை பெரும்பாலும்  வெற்றியும் பெற்று வருகின்றன . அந்த வகையில்  இந்தக்கதையும்  ஒரே இரவில் நடக்கும் ராபரி  த்ரில்லர் கதைதான் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்தவன் .. பிறகு சொந்த ஊரில் ஒரு சுரங்கத்தில்  வெடி வைப்பவன் ஆகப்பணி புரிகிறான் . வில்லனின் தம்பி தன் நண்பர்களுடன் சேர்ந்து நகரில் ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கிறான், . அப்போது  கொள்ளையைத்தடுக்க வந்த பொலீஸ்  என்கவுண்ட்டரில் வில்லனின் தம்பி உட்பட  அனைவரையும் கொண்று விடுகிறது . தன் தம்பியின் மரணத்துக்குப்பழி வாங்க வில்லன் வித்தியாசமான திட்டம் ஒன்றைத்தீட்டுகிறான் 


நாயகன் ஒரு போலீஸ்  கான்ஸ்டபிள் . அன்றைக்குத்தான் டியூட்டியில் முதல் நாளாக ஜாயின் செய்து இருக்கிறான் . அவனை  ரோந்துப்பணிக்கு அனுப்புகிறார்கள் / நாயகனும்  மேலும்  சில கான்ஸ்டபிள்களும் ரோந்துப்பணிக்கு வந்தபோது  வில்லனின் திட்டம் எதேச்சையாகத்தெரிய வருகிறது 


 நகரில்  அனைத்து  வங்கிகளிலும்  ஒரே நாள் இரவில்  ஆல்ரெடி தோண்டி வைத்த சுரங்கப்பாதை மூலம் கொள்ளை அடிப்பதுதான் அந்த திட்டம் . நாயகன்  அந்த திட்டத்தை எப்படி முறியடிக்கிறான் என்பதே மீதி திரைக்கதை 


நாயகன்   ஆக அதர்வா  கச்சிதமாக நடித்திருக்கிறார் . அவரது ஃபிட் ஆன  ஜிம் பாடி  போலீஸ்  கேரக்டருக்கு  பொருந்துகிறது . ஆக்சன்  காட்சிகளில்  கலக்கி  இருக்கிறார் . 


 நாயகி ஆக லாவண்யா த்ரிப்பாதி பேருக்கு ஏற்றபடி பாதிப்படத்தில் வருகிறார் . அதிக வாய்ப்பில்லை 


 வில்லன் ஆக அஸ்வின் கருமனு  மிரட்டலான தோற்றம் + நடிப்பு . வில்லியாக வரும் லட்சுமிப்பிரபா  நடிப்பும் அருமை 


நாயகனின்  நண்பர்களாக வரும் பரணி, சாரா நடிப்பு ஓக்கே ரகம் 


 நாயகனின் அப்பாவாக வரும் அழகம் பெருமாள் குணச்சித்திர நடிப்பில் கொடி கட்டிப்பறக்கிறார் 


ஜஸ்டின்  பிரபாகர் இசையில்   விறு விறுப்பான பின்னணி  இசை கச்சிதம்  சக்தி சரவணன் ஒளிப்பதிவில் ஒரே இரவில் நடக்கும் கதையை அருமையாகப்படம் பிடித்துள்ளார்  கலைவாணனின் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது 


 கதை , திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர் ரவீந்திர  மாதவா 


சபாஷ்  டைரக்டர்


1   பணத்துக்காக கொள்ளை அடிக்காமல் பழி வாங்கக்கொள்ளை அடிக்கும் வில்லனின் மாறுபட்ட ஐடியா அருமை 


2   பேங்க்  கொள்ளை  பற்றிய துப்புக்கிடைத்ததும் நாயகன் அதைத்தடுக்க முயற்சிக்கும் ஐடியாக்களும் செம 


3  வில்லன் நாயகனுக்கு வைக்கும் செக் 

4 விறு விறுப்பான திரைக்கதை , இயக்கம் 


  ரசித்த  வசனங்கள் 

1  அழுகையின் வலி புரியனும்னா நீயும் கூட சேர்ந்து அழு 


2  பயத்துல ஓடலாம், ஒளியலாம், ஆனா சண்டை போட முடியாது 


3   வாழ்க்கைல முதல் டைமா பொய் சொல்றே , ஆனா கான்ஃபிடண்ட்டா சொல்றே 


4   அவனுக்கு  என்ன ஆச்சோ என்ற பயத்துல தான் நான் இங்கே வந்தேன் , இப்போ அவனுக்கு என்ன ஆகப்போகுதுனு தெரிஞ்ச பின்  நான் ஏன் அவனை இங்கே வரச்சொல்லப்போறேன் ? 


5   போனவங்க:ளுக்காக சண்டை போட்டு இருக்கறவங்களை இழக்கச்சொல்றியா? 


6   எந்த அப்பாவும் தன் பிள்ளை பிறக்காமலேயே இருந்திருக்கலாம்னு நினைக்க மாட்டான், ஆனா நீ அப்படி என்னை நினைக்க வைக்கறே


7   எந்தக்குறையுமே இல்லாத எங்க பொண்ணை எந்தத்தகுதியுமே இல்லாத உங்க பையனுக்குத் தர முடியாது 


8  இவன் ஒழுங்கா பிளான் போட்டாலே சொதப்பலாத்தான் முடியும், ஆனா சொதப்பலா  பிளான் போட்டிருக்கான் 


9  உலகத்துல சில முகங்களை யாராலும் மறக்க முடியாது  அவளும் மறக்க மாட்டா 


10   நான் பிறக்கும்போதே ஐடியாவோட பிறந்தவன் 


11 இவன் பாடி லெங்க்வேஜே தப்பா இருக்கே ? 


12   இவ என் லெவந்த் கிளாஸ் மேட் 


 எந்த வருசம்னு சொல்லு ஏன்னா 8 வருசமா இவன் லெவந்த்தான் 


13  அவ யாரு ?

 தெரிஞ்சு  நீ  என்ன பண்ணப்போறே? 


 மறைத்து  நீ  என்ன பண்ணப்போறே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லனின் ஃபிளாஸ்பேக் நீளம் . அவன் தரப்பு நியாயத்தை சரி என சொல்ல முயல்வது தேவை இல்லை 


2  நாயகன் , நாயகி  ரொமாண்டிக்  போர்சன் 29 நிமிடங்கள் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை . அதை  கட் பண்ணி விட்டால் ஆங்கிலப்படம் போல் 90 நிமிடங்களீல் கிரிஸ்ப் ஆக இருந்திருக்கும் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விறுவிறுப்பான ஆக்சன் த்ரில்லர் விரும்பிகள் , பேங்க் ராபரி  த்ரில்லர் விரும்பிகள் பார்க்கலாம் . விகடன் மார்க் யூகம் 41 . ரேட்டிங்க் 2.75 / 5 



Thanal
Theatrical release poster
Directed byRavindra Madhava
Written byRavindra Madhava
Starring
CinematographySakthi Saravanan
Edited byKalaivannan
Music byJustin Prabhakaran
Production
company
Annai Film Production
Distributed byAyngaran International
Release date
  • 12 September 2025
CountryIndia
LanguageTamil