Showing posts with label கிஸ் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி ரொமாண்டிக் காமெடி டிராமா ). Show all posts
Showing posts with label கிஸ் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி ரொமாண்டிக் காமெடி டிராமா ). Show all posts

Monday, September 22, 2025

கிஸ் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி ரொமாண்டிக் காமெடி டிராமா )

           

              அறிமுக இயக்குனர் ஆன சதீஷ் கிருஷ்ணன் நடன்  இயக்குனர் ஆக பணீயாற்றியவர் . நாயகன்  கவினுக்கு கடைசியாக வந்த இரு படங்களூம் தோல்வி . அதனால்  வெற்றியைக்கொடுக்க  வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரது காம்போவில் வந்த படம் கிஸ்  ஹிட் டா? இல்லையா? என்பதைப்பார்ப்போம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகனின் அம்மாவும் , அப்பாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் . நாயகனுக்கு 25 வயதாக இருக்கும்போது நாயகனின் பெற்றோர் டைவர்ஸ் செய்து கொள்கிறார்கள் . அதற்கான கிளைக்கதை தனி . அதைப்பிறகு பார்ப்போம் 


 தன் பெற்றோர் டைவர்ஸ் செய்து கொண்டதால் நாயகனுக்கு காதல் , காதலர்கள் என்றாலே அலர்ஜி  இப்படி இருக்கும்போது ஒரு நாள் நாயகி மூலம் நாயகனுக்கு ஒரு புத்தகம் கிடைக்கிறது . அந்தப்புத்தகம் வந்ததில் இருந்து நாயகனுக்கு ஒரு விசேச சக்தி கிடைக்கிறது 


 யாராவது  காதல்  ஜோடி அல்லது கள்ளக்காதல் ஜோடி லிப் கிஸ்  அடித்துக்கொள்வதை நாயகன் பார்த்தால் அந்த காதலர்களின் எதிர்காலம் அவன் கண்களுக்குத்தெரிகிறது . இதன் பின்னணியைக்கண்டு பிடிக்க நாயகன் நாயகியைத்தேடிப்போகிறான் 


நாயகி  ஒரு டான்ஸ் டீச்சர் . டான்ஸ்  கிளாஸ்  நடத்தி வருகிறாள் . நாயகன் நாயகியிடம் மாணவன் ஆக சேர்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி இருவருக்குள் காதல் மலர்கிறது . ஒரு கட்டத்தில் நாயகி நாயகனுக்கு லிப் கிஸ் அடிக்கிறாள் 


 அப்போது  நாயகனுக்கு நாயகியின் எதிர் காலம்  தெரிகிறது . அதாவது நாயகி   இறக்கப்போகிறாள் . நாம் காதலித்துத்திருமணம் செய்து கொண்டால் நாயகி இறப்பாள் என்பதால் நாயகன் நாயகியை விட்டு விலகுகிறான் .


 நாயகிக்கு நாயகன் விலகியதற்கான காரணம் தெரியாது . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை 


 நாயகன்   ஆக கவின் அசால்ட் ஆக நடித்திருக்கிறார் , அவர் நடிப்பில் நல்ல முன்னேற்றம் ஸ்கின் டோனிலும் பளபளப்புக்கூடி இருகிறது 


 நாயகி ஆக  அயோத்தி பட  நாயகி  ப்ரீத்தி  அஸ்ராணி   சிறப்பாக  நடித்து  இருக்கிறார். ஆனால் ஓவர் மேக்கப் 


 நாயகனின் அப்பாவாக  ராவ் ரமேஷ்  நல்ல நடிப்பு , நாயகனின் அம்மாவாக   தேவயானி , சித்தியாக   கவுசல்யா இருவருக்கும் அதிக வாய்ப்பில்லை 


  நாயகனின்  நண்பன் ஆக ஆர் ஜே   விஜய், அவரது  அப்பாவாக வி டி வி கணேஷ்   கலகலப்பான நடிப்பு 


 ஜென்  மார்ட்டின் இசையில் 7 பாடல்கள் . 2  குட் . பின்னணி இசை ஓக்கே ரகம் .ஹரீஸ்   கண்ணன் ஒளிப்பதிவு அருமை .   ஆர் சி பிரனவ் எடிட்டிங்கில் படம் 143 நிமிடங்கள் ஓடுகிறது 


கதை , திரைக்கதை, வசனம்  எழுதி  இயக்கி இருப்பவர்             அறிமுக இயக்குனர் ஆன சதீஷ் கிருஷ்ணன்


 வசன  உதவி  முகில்   + சவ்ரி முத்து 


சபாஷ்  டைரக்டர்


1 லவ்  சப்ஜெக்ட்  என்பதால் எடிட்டிங்கில் கரெக்டாக 143 நிமிடங்கள் டைம் டியூரேசன் வருவது போல கட் செய்த சாமார்த்தியம் 


2   ஜிம்மில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் இளைஞனுடன் வி டி வி கணேஷ் காமெடி டிராக் கலக்கல் ரகம் 


3 ரெகுலரான  ரொமண்டிக்  டிராமாவில்  ஃபேண்ட்டசி எலிமெண்ட்சை சாமார்த்தியமாக மிக்ஸ் செய்த விதம் 


5   நாயகனின் நண்பன் பெண் வேடம் இட்டு  தன் காதலியின் கலயாணத்தில் மண்டபத்தில்  செய்யும் காமெடி கலாட்டாக்கள்  அருமை , பெண் வேடம் செம 


6 மெயின் கதையின்  க்ளைமாக்சை  விட நாயகனின் பெற்றோர்  பிரிவது , அப்பாவின் பழைய காதலி  க்ளைமாக்ஸ் செம . ஒரு அழகான சிறுகதை போல அமைந்த காட்சிகள் 


7 நாயகன் காப்பாற்றும் நாய்  அதன் துணை நாய் ஹாஸ்பிடலில் வந்து  காட்டும் அன்பு கண் கலங்க வைக்கும் காட்சி 


  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு பெண்ணை அழ வெச்ச நீ இன்னொரு பெண்ணால அழுவே !


2 நீங்க லவ் பண்றதை இன்ஸ்டாவில் போடறாதல பிரச்சனை இல்லை , ஆனா இன்ஸ்டாவில் போடுவதற்காக லவ் பண்ணாதீங்க 


3   இவன் கூட எல்லாம் இருந்தா கடலை சாப்பிடத்தான் முடியும் , கடலை போட முடியாது 


4  உன் கவலையை யோசிச்சு யோசிச்சு  நான் கவலைக்கு இடம் ஆகிட்டேன் , நீ  என்னடான்னா  உன் கவலையை என் கிட்டே  கொடுத்துட்டு என் ஃபோனைக்கூட அட்டெண்ட் பணண மாட்டேன்கறே 


 சரி , கிளம்பி வீட்டுக்குப்போய் ஃபோன் பண்ணுங்க அட்டெண்ட் பண்றேன் 


 5   நான் ஆட வர்லை , எனக்கு ஆடவும் வர்லை 


6   புக்  படிக்கத்தெரியலைன்னா பரவாயில்லை , பிடிக்கவே தெரியலை 


7 சாகற நேரத்துல கூட என்ன ஸ்டேட்டஸ் வைக்கலாம்னு  யோசிக்கறான் பாருங்க ,


8  நான் செத்துட்டா   என் காதலி   விண்டோ  ஆகிடுவா


 அது விடோ . உன் குழந்தையை அப்புறமா ஸ்கூலில் விடலாம், முதல்ல நீ ஸ்கூல் போ நாயே 


9 சார், ஜிம்மை மூடப்போறோம்


 ஏன்பா, நல்லாதானே  போய்க்கிட்டு இருக்கு , எதனால ஜிமை மூடனும் ?


 சார் க்ளோசிங்க் டைம், போய்ட்டு நாளைக்கு வாங்க 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  இக்கதையின் கதைக்கரு  2022ல்  வெளியான சவுத் கொரியன் வெப் சீரிஸ் ஆன  கிஸ் சிக்ஸ்த் சென்ஸ்  - இருந்து  இன்ஸ்பயர் ஆகி இருக்காங்க . அதில் நாயகிக்கு அப்படி நடக்கும் , இதில் நாயகனுக்கு நடக்குது 


2 நாயகி ஒரு டான்ஸ் டீச்சர் , நாயகன் அப்போதுதான் புதிதாக டான்ஸ் கிளாசில் சேர்ந்த ஸ்டூடண்ட் . போட்டி நடனத்துக்கு முறைப்படி டீச்சர் ஆல்ரெடி பிராக்டிஸ் செய்த சீனியர் ஸ்டூடண்ட் உடன் தானே ஜோடி சேர்ந்து ஆடனும் ?  டான்சே தெரியாத  தத்தி  நாயகனுடன் ஏன் ஜோடி சேர்ந்து ஆடனும் ? 


3   நாயகன் - நாயகி  இருவரும்  காதலை வெளிப்படுத்தும் இண்ட்டர்வெல் பிளாக் டான்ஸ்  சீன் புன்னகை மன்னன்  கமல் - ரேவதி தீம் மியூசிக் டான்ஸ் ஸ்டெப் மாதிரியே  இருக்கு . சொந்தமா  யோசித்து இருக்கலாம் 


4   சுவராஸ்யம்,ஆகச்சென்ற  முதல் பாதி போல பின் பாதி அமையவில்லை. எமோஷனல் கனெக்ட்டையும் கொடுக்கவில்லை 


5   நாயகனின் அப்பா  நாயகனுடன் பேச பல முறை  முயற்சி  செய்கிறார். நாயகனின் தம்பி அதாவது அவரது இரண்டாவது மகனுடன் பேசவே முயசிக்க வில்லையே அது ஏன் ? 


6  ஒரு காதல் ஜோடி பிரிவதாகக்காட்சி வைக்கும் முன் அவர்களது காதல் அழுத்தமாக ஆடியன்ஸ் மனதில் பதியும்படி காட்சிகள் வைக்க வேண்டும், ஆனால் முதல் பாதியில் அப்படி ஒரு சீனே வைக்காமல் கிஸ் அடித்ததும் பிரிவது போல் சீன் வைத்தது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை 


7  நாயகியின் அப்பாவுக்கு சீரியஸ், ஹாஸ்பிடலில் சேர்க்கறாங்க , இதுதான் சீன், இந்த சீனில் நாயகி ஸ்லீவ்லெஸ் பனியன் போட்டுட்டு கிளாமராக வருகிறார். சோக சீனிலாவது  நாயகி டீசண்ட்டாக கவர் பண்ற மாதிரி டிரஸ் போடலாமில்ல ? 


8   க்ளைமாக்ஸ்  தீ விபத்து செயற்கை . மனதில் ஒட்டவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16 +  லிப்  கிஸ் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள்  பார்க்கலாம் , ஃபேண்ட்டசி சப்ஜெக்ட்டில்   ஆர்வம் உள்ளவர்களூம் பார்க்கலாம் .  பி சி செண்ட்டர்களில் மீடியம் ஹிட் அடிக்கும்  விகடன் மார்க் யூகம் 41 . ரேட்டிங்க் 2.5 / 5 


முத்தம்
நாடக வெளியீட்டு சுவரொட்டி
இயக்கியவர்சதீஷ் கிருஷ்ணன்
எழுதியவர்சதீஷ் கிருஷ்ணன்
உரையாடல்கள்
  • சதீஷ் கிருஷ்ணன்
  • முகில் (கூடுதல்)
  • ஆர். சவரி முத்து (கூடுதல்)
தயாரித்தவர்ராகுல்
நடிப்பு
ஒளிப்பதிவுஹரிஷ் கண்ணன்
திருத்தியவர்ஆர்.சி. பிரணவ்
இசையமைத்தவர்ஜென் மார்ட்டின்
தயாரிப்பு
நிறுவனம்
ரோமியோ படங்கள்
வெளியீட்டு தேதி
  • 19 செப்டம்பர் 2025
இயக்க நேரம்
143 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வசூல்தோராயமான  1.5 கோடி [ 2 ]