Tuesday, January 19, 2016

WAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)


பயங்கரவாதிகள் தடுப்புப்பிரிவில் ஒரு  உயர் அதிகாரியா பணி ஆற்றும் ஹீரோ, ( ஆன்ட்டி டெரரிசம் ஸ்கோடு)அவருக்கு ஒரு சம்சாரம், ஒரு குழந்தை -ன்னு வாழ்க்கை அதிமுக ஆட்சி மாதிரி தங்கு தடை இல்லாம நீட்டா போய்க்கிட்டு இருக்கும்போது  திடீர்னு வந்த மழை வெள்ளமா  ஒரு செயற்கைப்பேரிடர்.


தம்பதிகள் குழந்தையோட ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் போற வ்ழில ஹீரோ ஒரு தீவிரவாதியைப்பார்க்கறாரு. சம்சாரத்தை பர்ச்சேஸ் பண்ண விட்டுட்டு இவரு அந்த தீவிரவாதியை ஃபாலோ பண்ணிட்டுப்போறாரு.பின் சிட்ல குழந்தை இருக்கு.ஹீரோக்கும் தீவிரவாதி க்ரூப்க்கும் ஃபைட்.தீவிரவாதிகள் தாக்குதல்ல குழந்தை இறந்துடுது.


 எந்த அப்பாவாவது தன் குழந்தை இறக்கட்டும்னு விரும்புவானா? இந்த தத்தி பொண்டாட்டிங்களுக்கு புருசனை புரட்டிப்போட்டு அடிக்கத்தெரிந்த அளவுக்கு புருசனைப்புரிஞ்சுக்கத்தெரியாது. தன் குழந்தை சாவுக்கு  தன் புருசன் தான் காரணம், அவனோட அஜாக்கிரதைன்னாலதான் செத்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு  கோவிச்ட்டு தனியாப்போய்டுது.


ஹீரோ தனி ஆகிடறார். அப்போ அவருக்கு ஒரு செஸ் மாஸ்டர் நட்பு கிடைக்குது. இருவரும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவராஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துக்கறாங்க செஸ் மாஸ்டர் உடனான சந்திப்புக்குப்பின் தன் வாழ்க்கை புது திசையில் போவதா ஹீரோ உணர்றார். புதுசா ஜிம்முக்குப்போனவன் மனசும், மெடிட்டேசன் கிளாஸ் போனவன் மனசும் முதல் 10 நாள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருக்குமே அப்டி ஹீரோ உணர்றார்.


அப்போ செஸ் மாஸ்டர்  ஒரு  குண்டைத்தூக்கிப்போடறார். ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரை போட்டுத்தள்ளனும், அதுக்கு நான் ஐடியா கொடுக்கேன் , நீ செஞ்சுமுடிங்கறார்

சாணக்கியத்தனமா ஒரு திட்டமும் போட்டுத்தர்றார். ஹீரோ அந்தக்கொலையை செஞ்சாரா? செஸ் மாஸ்டரோட ஃபிளாஸ்பேக் என்ன? கோவிச்ட்டுப்போன சம்சாரம் மறுபடி வந்து சேர்ந்துச்சா? இதெல்லாம் வெண் திரையில் காண்க


அமிதாப் பச்சன் செஸ் மாஸ்டரா அசத்தி இருக்கார் . அவர்  வீல் சேரிலேயே படம் முழுக்க வரும் மாற்றுத்திறனாளியா இருந்தாலும் பிரமாதப்படுத்தி  இருக்கார்.பாடி லேங்குவேஜ் , வசன உச்சரிப்பு  என அவர் பங்களிப்பு பக்கா

பர்கான் அக்தர் தான் ஹீரோ , ஆஜானுபாவகமான தோற்றம், நம்ம ஊர்  விஷால் போல். ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்குது. அந்த செஸ் மாஸ்டர் ட்விஸ்ட் சீனில்  ஹீரோ நடிப்பு அற்புதம்

அதிதி ராவ் தான் ஹீரோயின். இவரை இன்னும் நல்லா முழுசா பயன்படுத்தி இருக்கலாம். ஆனா இது ஆக்சன் ஸ்டோரி . அதனால ஹீரோயினை ஊறுகாய் மாதிரி தான் யூஸ் பண்ண முடியும்.

 வில்லன் நடிப்பில்  கொடூரம் இன்னும் காட்டி இருக்கலாம்.



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


ஜெயிக்கறதுக்காக இங்கே வரும் பலரும் நமக்கு ஜெயிக்க கத்துத்தர்றாங்க.செஸ் மூவ் மாதிரி ஒவ்வொருவர்ட்டயும் ஒரு ஐடியா


பண்டிதர்கள் மேலும் படித்து மகா பண்டிதர்கள் ஆகிறார்கள்.திறமைசாலி மேன்மேலும் தன் திறமையை வாய்ப்புக்கிடைக்கும்போதுகூர் தீட்டிக்கொள்கிறான்#wazir


3  வெற்றியும் , தோல்வியும் வெவ்வேறு விதமான படிப்பினையைக்கற்றுத்தரும்.செஸ் விளையாட்டிலும் வாழ்க்கையிலும்  


சவாலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு வாழ்வு ஒரு செஸ் ஆட்டம் போல். ஒவ்வொரு மூவ்-ம் முக்கியம்.ஒரு சின்ன தப்ப்பும் சிக்கலில் மாட்டி வைக்கும்  






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  அமிதாப் பச்சன் அருணாச்சலம் ரஜினி ( அப்பா கேரக்டர்) ஸ்டைலில் வீடியோவில் தோன்றி சொல்லும் ட்விஸ்ட் சீன் எதிர்பாராதது.

2 ஆக்சன் ,கார் சேசிங் சீன் கள் எல்லாம் பக்கா.






இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  பின் சீட்டில்  குழந்தையை வெச்சுக்கிட்டு ஒரு பொறுப்பான அப்பா ஒரு தீவிரவாதியை துரத்துவாரா? சாதாரணமா நடுத்தரக்குடும்ப அப்பா 80 கிமீ வேகத்துல பைக்ல போறவரா இருந்தாலும் பின் சீட்டில்  குழந்தை இருந்தா 40 தான் போவார் அப்படி இருக்கும்போது  ஹீரோ பின் சீட்ல பேபியை வெச்சுக்கிட்டு காரை கண்ணை மூடிக்கிட்டு வேகமா ஓட்டுவதும் , தீவிரவாதியை தாக்குவதும் நம்ப முடியலை.குழந்தையை அம்மா கிட்டே அனுப்பிட்டு அப்புறமா ஃபாலோ பண்ணி இருக்கலாமே?


2 பின் பாதி  திரைக்கதை சீன் பை சீன் யூகிக்க முடிவது திரைக்கதையின் மைனஸ்


3   அமிதாப் பச்சனும் ஹீரோ போலவே  ஃபேமிலியை இழந்தவர் என்பதான கதை பெரிய சுவராஸ்யம் தர்லை




சி  பி  கமெண்ட்
WAZIR  - அமிதாப் பச்சனின் ஆக்சன் + திரைக்கதையில் ஒரு ட்விஸ்ட்,மற்றபடி மாமூல் மசாலா- ரேட்டிங் = 2.5 / 5


திருவனந்தபுரம்  ஏரீஸ்பிளக்ஸ் காம்ப்ளெக்ஸில் படம் பார்த்தேன்


Wazir
Poster of Wazir
Theatrical release poster
Directed byBejoy Nambiar
Produced byVidhu Vinod Chopra
Written by
  • Vidhu Vinod Chopra
  • Abhijat Joshi
  • Dialogue:
  • Abhijeet Deshpande
  • Additional dialogue:
  • Gazal Dhaliwal
Screenplay byAbhijat Joshi
Vidhu Vinod Chopra
Starring
Music by
CinematographySanu Varghese
Edited by
  • Vidhu Vinod Chopra
  • Abhijat Joshi
Production
companies
Distributed byReliance Entertainment
Release dates
  • 8 January 2016
Running time
104 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget35 crore(US$5.2 million)[2]
Box office44 crore(US$6.5 million)[3] (first week)


வாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹிந்தி)


நடிகர் : மோனிஷ் குமார்
நடிகை :அக்‌ஷிதா
இயக்குனர் :சஞ்சய் கான்டெல்வால்
இசை :பாபா ஜகிர்தார்
ஓளிப்பதிவு :-
தனிமையில் வாழ்ந்து வரும் நாயகி அக்ஷிதா, ஆண் துணைக்காக ஏங்குகிறாள். இதற்காக இணையதளம் மூலம் ஏஜென்டை பிடித்து ஆண் துணை தேடுகிறாள். அந்த ஏஜென்ட், நாயகன் மோனிஷ் குமாரை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறார். அதன்படி, இருவரும் ஒருநாள் தனிமையில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போகவே தனிமையில் உல்லாசமாக இருக்கிறார்கள். 

அப்போது, மோனிஷால் அக்ஷிதாவை திருப்திப்படுத்த முடியாமல் போகிறது. இதனால் நாயகிக்கு வெறுப்பு வரவே, நாயகனை வெறுத்து ஒதுக்குகிறாள். ஆனால், நாயகனோ அவளையே பின் தொடர்ந்து செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் நாயகியிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் தவறாக நடக்க முயற்சிக்க, அவனிடமிருந்து நாயகியை காப்பாற்றுகிறார் மோனிஷ். 

இதனால், மோனிஷ் மீது அக்ஷிதாவுக்கு காதல் வருகிறது. இருவரும் காதலித்து வரும் வேளையில் அக்ஷிதாவுக்கு ‘காமசூத்ரா’ புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகத்தின் மூலம் நாயகனின் பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று நினைக்கிறாள். கடைசியில், அந்த புத்தகத்தை நாயகனிடம் கொடுத்து, அதன்மூலம் அவனது பிரச்சினையை நாயகி தீர்த்தாரா? இருவரும் சந்தோஷமாக இருந்தார்களா? என்பதே மீதிக்கதை.

கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'வாத்ஸாயனா காமசூத்ரா-2' என்ற படமே தற்போது தமிழிலும் டப் செய்யப்பட்டு அதே பெயரில் வெளிவந்திருக்கிறது. இதில், நாயகியாக நடித்திருக்கும் அக்ஷிதா, கவர்ச்சியில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். 

காமம் என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. அதனை முழுவதுமாக அனுபவிக்க முடியாதவர்களுக்கு சரியான தீர்வை நமது முன்னோர்கள் கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதை முறையாக கையாண்டால் இல்லற இன்பத்தில் திருப்தி அடையலாம் என்பதை இப்படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வந்திருக்கிறார். 

எளிமையான கதையை படத்தின் நீளத்திற்காக இழுஇழுவென இழுத்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் தலைப்பும் போஸ்டரும் ரசிகர்களை ஈர்த்த அளவிற்கு படம் ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாபா ஜகிர்தார் இசை ரசிக்கும்படியாக இல்லை. 

மொத்தத்தில் ‘காமசூத்ரா-2’ தெளிவு இல்லை.

மாலை மலர் =நன்றி

கோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பிடிச்ச பிரபல பெண் ட்விட்டர் யாரு?

காலைல 6 மணிக்கே நெட் தமிழன் பொண்ணுங்க கிட்டே சாப்ட்டியா?குளிச்ட்டியா?பல் துலக்கிட்டியா? நலம் விசாரிப்பை ஆரம்பிச்சடறான்.



=============




2 நெட் தமிழன் லொக்கேசன் சிஸ்டத்தை ஆப் பண்ணி வெச்ட்டு சிட்னியில் காலை இனிதே விடிந்தது அமெரிக்காவில் பிகர் படிந்ததுனு அடிச்சு விடறார்



============




3 கிளாமர்


சிலருக்கு காட்ட தெரியவில்லை ...
சிலருக்குக் காட்டுவது தெரிவதில்லை...
பலருக்கு காட்டுவது  புரிவது இல்லை...


==================


4 எனக்கு சோறுதான் முக்கியம் அதுக்குதான் அக்ரிகல்சர் படிக்கறன் 
ஐ டிஸ் அக்ரி திஸ் கல்ச்சர்


=================

5  நாகரிகம் என்பது நாகபாம்பின் நன்னடத்தை.
சாரைரீகம் என்பது சாரைப்பாம்பின் நன்னடத்தை


==============


6  ஆண்டவன் நம்ம எல்லார்க்கும் உண்டான அரிசில நம்ம பேரை எழுதி வெச்சிருக்கான்.



ஆரம்பத்துல இருந்தே கோதுமைல எழுதி வெச்சிருந்தா சுகர் வந்திருக்காது

============

7 டியர்.நம்ம காதலை ஏன் கட் பண்ணிட்டே?



நீங்க தானே என்னை கட்டழகின்னு வர்ணிச்சீங்க.அதான் கட் அழகி.மேட்சுக்கு மேட்ச்.

==========


8 என்னை யாருமே கண்டுக்க மாட்டேன்றாங்க.



மிஸ்.இப்டி ஒல்லியா இருந்தா க்ளோசப்ல பாத்தாலே எதும் தெரியாது.லாங் ஷாட்ல எப்டி கண்டுக்குவான்?

=============
9 சார்.பேபி ஹாஸ்பிடல் க்கு எப்டி போகனும்?



இப்டி மொட்டையாக்கேட்டா எப்டி? பன் பேபி ஹாஸ்பிடலா? க்யூட் பேபியா?ஷ்க்கலக்க பேபியா?

==============

10  சிறுமி க்கு டி எம் அனுப்புன குற்றத்துக்காக உன்னை கைது பண்றோம்.



ட்விட்டர் வரலாறு தெரியாம பேசாதீங்க.அவங்க ஹேண்டில் நேம் தான் சிறுமி.

===========

11 திரைக்கதையில் அசத்தப்போகும் பொங்கல் ரிலீஸ் தர வரிசை # எதிர்பார்ப்பு

1 கெத்து

2 தாரை தப்பட்டை
3 கதகளி

4 ரஜினிமுருகன்


===========

12 மீரா-லயே அஜித் ரசிகை மீரா, விஜய் ரசிகை மீரான்னு 2 பேரு இருக்காங்க,2 ஹேண்டிலையும் சரியாப்பார்க்காம டி எம் அனுப்பிடாதீங்க  மக்களே!


=================

13  எந்தப்பெண்ணும்  அறிமுகம் இல்லாத ஆணிடம் வலியனா பேசமாட்டாங்க.எனவே முன் பின் (சைடு) தெரியாத பெண்குரலில் ஃபோன் வந்தால் அது ஃபேக் என கொள்க


================

14  இளைஞர்கள் கிட்டே  எழுச்சி ஏற்படுத்த  ஏதோ தீம் ரெடி பண்ணுனீங்களாமே?

ஆமா,கோடம்பாக்கத்தின் வயாக்ரா,மிதந்து வரும் நயாகரா நம்ம நயன் தாரா பாடுது


=================================


15  எல்லா பொண்ணுங்க கிட்டேயும் மென்சன் வாங்க குறுக்கு வழி ஒரே பொண்ணுதான் இருக்கு டிஎல்ல"னு அடிச்சு விடுவதே?யாரு னு ஆர்வமா கேட்பாங்க.கடலை போடலாம்


================



16 நம்ம கேப்டனுக்குப்பிடிச்ச ட்விட்டர் யாரு?


இவர் தான் ": KEER"THU"

================


17 இந்த ஆபீஸ்ல எல்லாரும் ஷேர் ஆட்டோல வர்றா மாதிரியே இருக்கானுங்க.

எதுக்கும் ஒரு அடி தள்ளியே உக்காந்து இருங்க. மிஸ்..நம்ம பசங்களை நம்ப முடியாது

=============


18 நாகரீகமாக நாசூக்காக நுனி விரல்களால் சாதம் சாப்பிடுவது ஜீரணத்துக்கு ஆபத்து.உள்ளங்கை எதுக்கு இருக்கு?சும்மா பிசைஞ்சு அடிக்கனும்

==================



19 நீ ஒரு குரங்கு நான் ஒரு குரங்கு ன்னு பிகரு திட்டினா நெட் தமிழன் அசராம வா ஆரணங்கு.என்னுடன் வந்து உறங்கு னு அடிச்சுவிடறான்

===============

20 சாதா தமிழன் ஜிம் முக்குப்போனா வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்து குளிப்பான்.நெட் தமிழன் உடற்பயிற்சி இனிதே நிறைந்தது னு FB ல ஸ்டேட்டஸ் போடுவார் நெட் தமிழன்


=======================

Monday, January 18, 2016

மயிலு ஹிட் , ரயிலு அவுட்

பாலியல் வழக்கு.்் ஆசாராம் பாபுவுக்காக ஆஜரானார்் சு.சுவாமி !# அசராம பாய்ண்ட் எடுத்துக்கொடுத்துட்டு நீதி வென்றதுன்னு கூசாம பேட்டி கொடுப்பாரு


=============



2 தேர்தல் பணியாற்ற அம்மா் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம்: நாஞ்சில் சம்பத்# பந்தியிலயே உக்கார வேணாம்னுட்டாங்க.இலையை நானே போட்டுக்கறேன்னா எப்டி?



============



3 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: இளங்கோவன் பேச்சு# உதிரிப்பூ இல்லைன்னா மேரேஜே நடக்காதா?



===========




4 திருடனை பிடிக்க உதவுபவருக்கு ஆண்டு முழுவதும் இலவச பீட்சா:ஓட்டல் நிர்வாகம் அறிவிப்பு # திருடனே சரண்டர் ஆகி ஓசி பீட்சா சாப்பிடப்போறான்



============



5 இந்தக் கொடுமை என்று முடியும் என மக்கள் நினைக்கிறார்கள்..-கருணாநிதி எது நினைச்சாலும் அதை மக்கள் நினைப்பதா சொல்லிடுவார் போல



===========



6 ஆக்ஷன்,காமெடி,லவ்னுு எல்லாத்தையும் ரயில் பெட்டி மாதிரி இணைச்சு ஒருபொழுதுபோக்கு சினிமா பண்ணியிருக்கேன்.-பிரபுசாலமன் #,ரைட்டு.ரயிலு பெயிலு



=========




7 ஜல்லிக்கட்டு நடக்க காரணமே நான் தான்: ஜெயலலிதா - நல்லவேள.ஜல்லிக்கட்டைக்கண்டுபிடிச்சதே நான்தான் னு சொல்லலை



==========




8 10 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு பசங்க2 டிக்கெட் இலவசம்- செய்தி#20 வயசுக்குக்கீழ் உள்ள குழந்தைகளுக்கு(1?)இடைவேளை வரை இலவசமா?




==================




2016ல் கேப்டன் அரியணை ஏறப் போகிறார்- பிரேம லதா # ஓஹோ, சரித்திரப்படத்துல ராஜா வேசமா?




================




10 முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது: நல்லகண்ணு சாடல்# அப்போ ஜனங்க யாரை நம்பி ஓட்டு போடுவாங்க?




==================




11  திமுக – முஸ்லிம் லீக் கூட்டணி தொடரும்: காதர் மொகிதீன் பேட்டி # 12  சீட் கேட்டிருக்கீங்க, அதுல பாதிதான் தருவாரு.ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன்...




================




12 தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகளை எனக்கு பிடிக்காது; - விஜய்காந்த் # பேரம் பேசிட்டிருக்காரு.சீட் ஏத்திக்கேட்க இது ஒரு துருப்பு சீட்டு



=============



13 நடிப்பை மட்டும் பாருங்கள் “நடிகைகள் பொது சொத்து அல்ல” பார்வதி மேனன் பேட்டி # ஏம்மா பேர்லயே பார் னு வெச்ட்டு பார்க்காதேன்னா எப்டி?



=============



14 அமீர் கானை துரோகி என ஒருபோதும் கூறவில்லை: பாஜக எம்.பி மறுப்பு # குருதிப்புனல்னு சொன்னீங்களா? அதோட பழைய டைட்டில்தான் துரோகி



================



15 சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்”: கெஜ்ரிவாலுக்கு பாஜக எச்சரிக்கை # உள்ளே போனா வெளியே ஆதரவு கூடிடும் - அர்விந் மைன்ட் வாய்ஸ்



==============



16 சென்னை வியாசர்பாடி அருகே சாலையில் திடீர் பள்ளம்.. மக்கள் பீதி! # என் ஆட்சியில் என் ஆணைப்படி விரைவில் தேர்தலுக்குள் சரி செய்யப்படும்



===============

17 சென்னை-கன்னியாகுமரி இடையே சுற்றுலா கப்பல் போக்குவரத்து!'# ரைட்டு.கடல் வழி கடலை பிரயாணம் எப்டினு பார்த்துடுவோம்


================
18 உங்ககிட்ட சொல்ல மாட்டேன்... மக்களிடம்தான் சொல்வேன்- பொதுக்குழுவில் விஜயகாந்த் தடாலடி # அதும் இப்போ சொல்லமாட்டேன்.பேரம் படிஞ்சபின் சொல்வேன்


================

19 கட்-அவுட் வைத்தால் கெட்-அவுட்... கும்பிடு போட்டால் க்ளோஸ்! - போயஸ் கார்டன் கெடுபிடி # தரையோட தரையா படுத்தா தரைமட்டம்?

============

20 இப்போதே தேர்தல் வந்தால் 100, தள்ளிவந்தால்150 : பா.ம.கவின் அடடே கணக்கு! #,ரொம்ப தள்ளிப்போனா 200,சும்மா அடிச்சு விடுங்க.காசா?பணமா?

==============

MALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்)

மால்குடி நைட்ஸ் -னு டைட்டில் வெச்சிருந்தா மாளாத கூட்டம் வந்திருக்கும், தியேட்டருக்கு, புரொடியூசருக்கு மார்க்கெட்டிங்க் நாலெட்ஜ் பத்தலை போல , மால்குடி டேஸ்-னு வெச்ட்டாரு. 2016ஆம் ஆண்டில்  வெளியான முதல் படம் .8.1.2016ல் ரிலீஸ் ஆன இந்தப்படத்தைப்பத்தி பார்ப்போம்


ஒரே ஒரு ஊர்ல ஹீரோ ஒரே ஒரு சம்சாரம் , ஒரே ஒரு குழந்தையோட  நிம்மதியா வாழ்ந்துட்டு வர்றாரு.அப்போ அவங்க வீட்டுக்கு அர்த்த ஜாமத்துல  4 பேரு  வர்றாங்க,அதுல ஒரு ஆளுக்கு கால் ல அடி பட்டிருக்கு. உதவி கேட்கறாங்க. சரின்னு உள்ளே விட்டா அந்தாள் கால்ல பாய்ஞ்சு கிடந்தது புல்ல்ட். அவங்க மாவோயிஸ்ட் எனப்படும் தீவிரவாதிகள்


போலீசோ மிலிட்ரியோ வர்றாங்க ( யூனிஃபார்மைப்பார்த்தா காக்கியாவும் இல்ல மில்ட்ரி கலராவும் இல்ல)போலீசுக்கும் தீவிரவாதிக்கும் நடந்த தாக்குதல்ல  ஹீரோவோட சம்சாரம் மேல புல்லட் பட்டுடுது.ஆள் அவுட். ஹீரோ செம கடுப்பாகி அந்த மிலிட்ரி ஆஃபீசரை ஆன் த ஸ்பாட் சூட் பண்ணிடறாரு.


பைக்ல போகும்போது டிராஃபிக் போலீஸ் வழி மறிச்சு மாமூல் கேட்கும்போது 100 ரூபா தர்லைன்னாலே ஜென்மப்பகைவனாட்டம் நம்மைப்பார்க்கும் போலீஸ் தன் டிபார்ட்மெண்ட் ஆளையே சுட்டுக்கொன்ன ஹீரோவை விடுவாங்களா?கேப்டனைத்துரத்தும் அரசியல் கட்சிகள் மாதிரி தீவிரமாத்துரத்தறாங்க. ஹீரோ ஒரு ஸ்கூல் கிரவுண்ட் பின்னால ஒளிஞ்சுக்கிட்டு இருக்காரு. 

 இது  ஒரு டிராக் கதை 




இன்னொரு டிராக்கில்  இன்னொரு கதை.



கடல் கரைல நின்னு செல்ஃபி எடுக்கும்போது அலை வந்து அப்பாவை அடிச்ட்டுப்போய்டுது.அம்மாவும் குழந்தையும் அநாதை ஆகிடறாங்க.பெண் குழந்தை வேற . அது மனோரீதியா பாதிக்கப்படுது.சூழல் மாற்றம் வேணும்னு ஒரு ஆசிரமம் மாதிரி ஸ்கூல்ல சேர்த்து விடறாங்க

அந்த  ஸ்கூல் ல டூர் போறாங்க. போகும்போது ஒரு பையனும் ,  ஒரு பொண்ணு ( அப்பாவை இழந்த பொண்ணு)மட்டும் ஸ்கூல்க்குள்ளே மாட்டிக்கறாங்க.அவங்க 2 பேரையும்  நம்ம ஹீரோ தான் காப்பாத்தறாரு.

 ஆனா போலீஸ் அவரை என்கவுண்ட்டர்ல போட்டுத்தள்ள ஆர்டர் போட்டுடுது.


ஹீரோ  அவங்க கிட்டே மாட்னாரா? தப்பிச்சாரா? என்பது க்ளைமாக்ஸ்

இந்தக்கதையின் மூலமா டைரக்டர் உருப்படியா 2 விஷயம் தான் சொல்லி  இருக்கார்.

 1 ஸ்கூல்  டூர் போகும்போது பஸ்ல அட்டெண்டென்ஸ் நல்லா செக் பண்ணனும். ஸ்கூலைப்பூட்டிட்டுப்போகும்போது உள்ளே தரவா செக் பண்ணனும்.

2  யாருக்கு உதவுவதா இருந்தாலும் அவங்க கிட்டே ஆதார் கார்டு , ஐ டி கார்டு  ரேஷன் கார்டு இதெல்லாம் செக் பண்ணிட்டு தான் உதவனும் . நாமா தெரியாத்தனமா உதவி மாட்டிக்கக்கூடாது

 மேலே சொன்ன இந்த  2 மெசேஜை ஃபேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டசாவோ  ட்வீட்லாங்கர்ல  ஒரு ட்வீட்டாவோ போட்டிருந்தா மேட்டர்  ஓவர்


 எதுக்கு தேவை இல்லாம ஒரு  சினிமா எடுத்தாரோ?



 படம்  சின்னப்படம் தான்  108  நிமிசம் தான் . ஆனா ஒரே சமயத்தில் 2 புலி படம் பார்த்த மாதிரி  ஒரு எஃபக்ட்

ஹீரோவா  அனூப் மேனன்  செமயான நடிப்பு . ஆனா கேரக்டர் கரெக்டா  செட் ஆகலை. ஆனா அது அவர் தப்பு இல்லை அவருக்கு கொடுத்த வேலையை அவர் சரியாச்செஞ்சுட்டார் . இயக்குநர் தான் சில கேள்விகளுக்கு பதில்  சொல்லனும் 


ஹீரோயின்  பாமா. அதிக வாய்ப்பில்லை

 முழுக்கதையும் அந்த  ஸ்கூல்ல மாட்ன  குழந்தைங்களையே  ஃபோகஸ் பண்ணி இருப்பதால்  படம் செம போர் அடிக்க ஆரம்பிச்சுடுது


ஒளிப்பதிவு  இசை  சுமார்  ரகம்




இயக்குநரிடம்  சில  கேள்விகள்


1   ஒரு பொது ஜன வீட்டில்  தீவிரவாதி புகுந்துட்டாங்க என சந்தேகிக்கும்  போலீஸ் / மிலிட்ரி  முதல்ல அவங்க குடும்பத்தை காப்பாத்த நினைக்கமாட்டாங்களா? அதுக்கான எந்த முகாந்திரமும் காட்டலையே?


2  அந்த 4 பேர் மூஞ்சியைப்பார்த்தாலே கேடிக மாதிரிதான் இருக்கு, ஹீரோவுக்கோ அவர் சம்சாரத்துக்கோ ஏன் டவுட் வர்ல?


3 ஹீரோ ஸ்கூல் கிரவுண்டுக்குப்பின்னால மறைஞ்சு வாழறார் சரி அவர் கைல டப் லேது சாப்ப்பாட்டுக்கு என்ன பண்றார்? குளியல், டிரஸ் சேஞ்சிங் எதுவுமே இல்லாம எப்டி இருக்கார் பல நாட்க்ளா?



4 ஸ்கூல் வாட்ச்மேன் ஃபோனை எடுக்கலைன்னா பிரின்சிபால் அப்டியே விட்டுடுவாரா? ஸ்கூல் அக்கம் பக்கம் தெரிஞ்சவங்களுக்கு ஃபோன் போட்டு  வாட்ச்மேன் எங்கே தேட மாட்டாரா?


5   எட்டு வயசே ஆனா அந்த  2 குழந்தைங்க சாப்பாடோ  குடி நீரோ இல்லாம 3 நைட் 3 பகல் உயிரோட இருக்காங்க. அதுவரை  ஸ்கூலில் வேற யாரும் வர்லையா? ஏன்னா டூர் போனது 2 பஸ் மட்டும் . சராசரியா ஒரு பஸ் ல 60 பேர்னா 2 பஸ் ல 120 பேர் . அந்த ஸ்கூல் ல மினிமம் 2000 பேர் படிப்பாங்க. மீதி மாணவர்கள் எல்லாம் எங்கே? அவங்க ஏன் அடுத்த நாள்  ஸ்கூல் வர்ல? 


6  பிரின்சிபால்  வாட்ச்மேனுக்கு ஃபோன் போட்டு எடுக்கலைன்னதும் ஏன் மெசேஜ் அனுப்பலை? ஸ்கூலில் 2 குழந்தைங்க இருக்கா?ன்னு செக் பண்ணி சொல்னா வேலை  முடிஞ்சதே?



டிவிடி ல பார்க்கக்கூட  தகுதி இல்லாத படம் 

 ரேட்டிங் = 2 / 5

திருவனந்த புரம் ஏரிஸ் காம்ப்ளெக்ஸ் ல ஆடி 3 ல பார்த்தேன்

திரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்கையா மாதிரி= ஆர்யா அதிரடி

கீர்த்தி சுரேஷும்.. தனுஷும் இணைய.. பிரபுசாலமன் இயக்கத்தில் ‘ரயில்’! # ஹீரோ ஹீரோயின் 2 பேரும் ரயில்ல ஊரைச்சுத்திப்பார்க்கறதுதான் கதையாம்


============




2 வாட்ஸ்அப்பில் மதம் குறித்து சர்ச்சை கருத்து..் அட்மின், மீீது வழக்கு # உருப்படியா வாட்சப் அட்மின் வேலை பார்க்கக்கூட விடமாட்டாங்க போல




================



3 1,000 ஊழியர்கள் பணி நீக்கம்.. பீதியில் யாஹூ நிறுவன ஊழியர்கள்.# ராஜம்மா மலையாளப்படம் ஹிட் ஆகியும் ஏன் க்ளோஸ் பண்றாங்க?




=============



4 ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மதுரை மாவட்டம் பாலமேட்டில் மக்கள், பட்டாசு வெடித்து கொண்டாட்டம்# பொங்கல் அன்னைக்கே தீபாவளி கொண்டாடறவங்கய்யா நாங்க



===========



5 சில மணி நேரங்களில் ஜல்லிக்கட்டு போட்டி அனுமதி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் - பொன்்.ராதா் # கொஸ்டீன் பேப்பரை அவுட் பண்ணீட்டீங்ளே?




==============



6 நான் கதைய நம்பித்தான் படம் எடுக்கிறேன் சதைய நம்பியல்ல-டி.ஆர்# நான் பரபரப்பை நம்பிதான் படம் நடிக்கறேன்.பிரச்னைன்னா அப்பா மன்னிப்பு கேட்பாரு- சிம்பு




==================



7 ஆட்சியில் பங்கு தந்தாலும் DMK,ADMKகூட கூட்டணி இல்லை -திருமாவளவன் # கோடி ரூபா குடுத்தாலும் 6 மணிக்கு மேல வேலை செய்யமாட்டேனா?30ரூபாதந்தாபோதும்




=================



தமிழகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திமுகதான்: ‘நமக்கு நாமே’ பயணத்தில் ஸ்டாலின் பேச்சு # பகல் கனவு, நமக்கு நாமமே!




====================




தமிழகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திமுகதான்:  ஸ்டாலின் # மொத்தத்துல ரெட்டை வேடம் போடறிங்கன்னு ஒத்துக்கறீங்க




=================




10 கட்சிகளின் சமூக ஊடக செலவுகளையும் கண்காணிப்போம்: தேர்தல் ஆணையம்  மட்டுமா? ஆளுங்கட்சிக்கும் இது செல்லுமா?




=================




11  பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன் # அட ஈஸ்வரா! இப்டி ஒரு கட்சி வேற இருக்கா?




==============




12 தமிழகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திமுகதான்: ஸ்டாலின் # அதாவது கலைஞர் தன் குடும்பத்துக்கு ஹீரோ , மக்களுக்கு வில்லன்?




====================




13 திமுக. மூலம் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்- மு.க.ஸ்டாலின்  # இப்பவெல்லாம் சூரிய நமஸ்காரம் பண்ணக்கூட பலர் பயப்படறாங்க ,மாற்றம், முன்னேற்றம்




====================



14 ஜல்லிக்கட்டின் போது காளைகளை வதைக்க கூடாது மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் # பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சினு ராமராஜன் மாதிரி பாடனுமா?




===================




15  காங்கிரஸ்தனித்து போட்டியிட்டால்

இளங்கோவன் முதல்வர் ஆவார்- குஷ்பூ # நான் நல்லா படிச்சா பாஸ் ஆவேன்.ஆனா படிக்க மாட்டேன்

===========

16 128 நாட்கள்தான்... தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்..- ஸ்டாலின். # இப்டியே எண்ணிட்டே இருக்க வேண்டியதுதான்.

===========


17 ரூ.50 லட்சம் சொத்திற்காக... உயிருடன் இருக்கும் கணவனை “சர்டிபிகேட்”டில் கொன்ற மனைவி கைது # நல்லவேளை.நிஜமா கொல்லலை.கொலையும் செய்வாள் பத் மினி

================

18 பொங்கல் விழாவை "மோடி பொங்கலாக" கொண்டாடுங்கள்...- பொன்னார் # மோடி பொங்கல்னா வெளிநாடு போகனும்.வசதி இல்லையே



===============


19 அதிமுக அரசின் 2வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்:-EVKS # பொன்னியின் செல்வன் நாவல் மாதிரி பாகம் பாகமா ரிலீஸ் பண்ற அளவு ஊழல்?

==============

20 திரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி-ஆர்யா # நல்லவேளை.நயன் தாரா எனக்கு நங்கையா மாதிரின்னு சொல்லலை.


===============