Showing posts with label வாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹிந்தி). Show all posts
Showing posts with label வாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹிந்தி). Show all posts

Tuesday, January 19, 2016

வாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹிந்தி)


நடிகர் : மோனிஷ் குமார்
நடிகை :அக்‌ஷிதா
இயக்குனர் :சஞ்சய் கான்டெல்வால்
இசை :பாபா ஜகிர்தார்
ஓளிப்பதிவு :-
தனிமையில் வாழ்ந்து வரும் நாயகி அக்ஷிதா, ஆண் துணைக்காக ஏங்குகிறாள். இதற்காக இணையதளம் மூலம் ஏஜென்டை பிடித்து ஆண் துணை தேடுகிறாள். அந்த ஏஜென்ட், நாயகன் மோனிஷ் குமாரை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறார். அதன்படி, இருவரும் ஒருநாள் தனிமையில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போகவே தனிமையில் உல்லாசமாக இருக்கிறார்கள். 

அப்போது, மோனிஷால் அக்ஷிதாவை திருப்திப்படுத்த முடியாமல் போகிறது. இதனால் நாயகிக்கு வெறுப்பு வரவே, நாயகனை வெறுத்து ஒதுக்குகிறாள். ஆனால், நாயகனோ அவளையே பின் தொடர்ந்து செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் நாயகியிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் தவறாக நடக்க முயற்சிக்க, அவனிடமிருந்து நாயகியை காப்பாற்றுகிறார் மோனிஷ். 

இதனால், மோனிஷ் மீது அக்ஷிதாவுக்கு காதல் வருகிறது. இருவரும் காதலித்து வரும் வேளையில் அக்ஷிதாவுக்கு ‘காமசூத்ரா’ புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகத்தின் மூலம் நாயகனின் பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று நினைக்கிறாள். கடைசியில், அந்த புத்தகத்தை நாயகனிடம் கொடுத்து, அதன்மூலம் அவனது பிரச்சினையை நாயகி தீர்த்தாரா? இருவரும் சந்தோஷமாக இருந்தார்களா? என்பதே மீதிக்கதை.

கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'வாத்ஸாயனா காமசூத்ரா-2' என்ற படமே தற்போது தமிழிலும் டப் செய்யப்பட்டு அதே பெயரில் வெளிவந்திருக்கிறது. இதில், நாயகியாக நடித்திருக்கும் அக்ஷிதா, கவர்ச்சியில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். 

காமம் என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. அதனை முழுவதுமாக அனுபவிக்க முடியாதவர்களுக்கு சரியான தீர்வை நமது முன்னோர்கள் கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதை முறையாக கையாண்டால் இல்லற இன்பத்தில் திருப்தி அடையலாம் என்பதை இப்படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வந்திருக்கிறார். 

எளிமையான கதையை படத்தின் நீளத்திற்காக இழுஇழுவென இழுத்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் தலைப்பும் போஸ்டரும் ரசிகர்களை ஈர்த்த அளவிற்கு படம் ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாபா ஜகிர்தார் இசை ரசிக்கும்படியாக இல்லை. 

மொத்தத்தில் ‘காமசூத்ரா-2’ தெளிவு இல்லை.

மாலை மலர் =நன்றி