Skip to content

Thursday, January 07, 2016

சரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன் யாரு? ஒரு ஆராய்ச்சி முடிவு

உங்க காதலி கோபத்துல உங்க செல் போனால அடிச்சா நீங்க எப்டி சமாதானப்படுத்தனும்?


செல்லால் அடிச்ச சுந்தரி

விடிஞ்சிடுச்சு எந்திரி




===========




2 டாக்டர்.மூச்சு விடவே முடியவில்லை..ரொம்ப சிரமமா இருக்கு.


எதுக்கு அவ்ளோவ் சிரமம்?,மூச்சே விடாதீங்க.விட்ருங்க



============

3 மேடம்.ஏன் வாக்கிங் வர்லை?


எண்ட்ற மாமனுக்காக வெயிடிங்"

அவருக்காக உங்க வெய்ட்டை ஏன் ஏத்திக்கிட்டு இருக்கீங்க?



==============

4 மேடம்.இந்த சீன்ல ஹால்ல உட்கார்ந்து ஹீரோ கிட்டே பேசிட்டு இருக்கீங்க?


கிளாமர் ஹீரோயின் = நாயுடு ஹால் லயா?



================

5 மிஸ்.ஐ லவ் யூ.யூ?


தூ.ஏன் என் தங்கச்சி கிட்டே இதே கேள்வியைக்கேட்கல?

கேட்டேன்.அவ தான் உன் மூஞ்சிக்கு என் அக்காவே போதும்னு அனுப்ச்சா



=============

6 டீச்சர்.டாப்சி பன் னுக்கு 2 சுழி ன் னா? 3 சுழு ண் ணா?


தமிழ் மிஸ் தன்யா = மேரேஜ் ஆகும் வரை டாப்சி பன் ஆன பின் டாப்சி பண்




================

7 பெண்பார்க்க வந்த மாப்ளை பொண்ணோட பேரைக்கேட்டதும் டக்னு சேர்ல இருந்து எந்திரிச்ட்டாரே ஏன்?


பேரு பானு மதியாம்.மதிக்கனுமில்ல?




================

8 மனைவி க்கும் கேப்டன்/சிம்பு /அர்விந்த் கேஜ்ரிவால்க்கும் என்ன வித்யாசம்?


அவங்க அடிக்கடி சாரி கேட்பாங்க.இவங்க எப்பவும் சாரி கேட்க மாட்டாங்க



===============

9 சார்.உங்க பால் பண்ணை ல பீப் மில்க் கிடைக்கும்னு போர்டு இருக்கே?


சீம்பால் தான்.சீசன் க்கு ஏத்தபடி சிம்பு ரிலேட்டடா பேர் வெச்ட்டோம்




================

10 சார்.17 கிஸ் சீன் படத்துக்கு யு சர்ட்டிபிகேட் கொடுத்த நீங்க கிராமிய இசைக்கலாச்சாரப்படத்துக்கு ஏ தர்றீங்க ?


சாரி.இட மாறு தோற்றப்பிழை




==============

11 டியர், பொண்ணுங்களோட திமிரு ஒரு அழகு, உங்களுக்குப்பிடிக்குமா?

 ம்ஹூம், ஆம்பள ( விஷாலோட) திமிரே பிடிக்கல


==================


12  டாக்டர்.பித்தம் தெளியனும்னா என்ன சாப்பிடனும்.


அரை மணி நேரம் கழிச்சு சொல்றேன்.சாப்ட்ட சரக்கு மப்பு தெளியல எனக்கு

==============

13 சார்.500 ரூபா பணம் கட்டுனா 50 பாலோயர் தர்றேன்.


அப்டியா.?நான் உனக்கு 60,000 பாலோயர்சை பல்க்கா தரேன். நீ எனக்கு 6 லட்சம் ருபா தா


===============


14 பிரம்மச்சாரி மணி ஏன் தலை தெறிக்க ஓடறார்?


பூனைக்கு மணி கட்றது யாரு?னு பஞ்சாயத்துல பேசுனதை அரைகுறையா புரிஞ்சுகிட்டு பயந்துட்டான்


================


15 டியர், நம்ம காதல் ஜெயிக்கனும்னா முதல்ல நீங்க “அம்மா” கிட்டே சம்மதம் வாங்கனும்.

 அய்யய்யோ, அது நடக்காதே? நான்  எதிர்க்கட்சி ஆள் ஆச்சே?


======================

16  தலைவரே! திருப்பாவை , திருவெம்பாவை பேர் மாத்தனுமா? ஏன்? 

 செல்வி பாவை , செல்வி வெம்பாவைன்னு தானே வரனும்?யார் கிட்டே?


===================

17  தலைவரே!,துணை முதல்வர் பதவி தர்றதா உங்க மகன் கேப்டனுக்கு வாக்கு கொடுத்தாராமே?

பொய் சொன்ன வாய்க்கு போஜனம்தான் கிடைக்காது.அரியாசனம் கிடைக்கும்

==============

18 தலைவரே! நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க?

எனக்கு வந்த குற்றப்பத்திரிக்கைல 678 ம் பக்கம் வரை படிச்சிருக்கேன்.இன்னும் 328 பக்கம் படிக்கனும்

===============

19 சரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன் யாரு? வேட்டைய்யனா இல்லை சரவணன்னா?"

6 மாசம் அவரு 6 மாசம் இவரு.சுழற்சி முறை.

===============

20 துணை முதல்வர் பதவியை அவருக்கு கொடுத்துட்டா எனக்கு?

பதவிக்கு வந்ததும் ஏதோ ஒரு வம்புச்சண்டை போட்டு கூட்டணியை விட்டு துரத்தி விட்டுடுவோம்.

=============

Wednesday, January 06, 2016

செம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமில்லையா? - குவியும் ஆதாரங்கள்!

சென்னை மூழ்குவதற்கு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தாமதமாக தண்ணீரைத் திறந்துவிட்டதே என்ற புதிய காரணம் கண்டுபிடிக்கப்பட்டதால்தான் அந்த பயம்.  செய்தி வெளியானதும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதை அப்படியே பேட்டியாகத் தட்டிவிட்டார். தி.மு.க தலைவர் கருணாநிதி, காரணங்களை அடுக்கி கண்டன அறிக்கை வெளியிட்டார். மழையிலும் வெள்ளத்திலும் ஊறிப்போய் கிடந்த சென்னையில், செம்பரம்பாக்கம் பரபரவென பற்றிக் கொண்டது.

 
கொழுந்துவிட்டெரிந்த செம்பரம்பாக்கத்தின் அனல், அ.தி.மு.க பொதுக்குழுவிலும் அடித்தது. 
அதில் பேசிய  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காலதாமதம் ஏற்பட்டதுதான் சென்னை வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளக்கமாக அறிக்கை கொடுத்த பின்னரும், மீண்டும் மீண்டும் ஒரே பொய்யை  திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மழைக் காலங்களில் ஏரிகளில் நீர் அளவு எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ‘வெள்ளநீர் ஒழுங்கு விதிமுறைகள்’ என்பதில் மிகத்தெளிவாக உள்ளது. இது நன்றாகத் தெரிந்தும், வேண்டுமென்றே தி.மு.க.வினர் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். இதுபற்றி எதிர்க்கட்சியினருக்கு புரியவில்லை என்றால் 8-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள 'காலம் மற்றும் வேலை' பற்றிய கணக்குகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று கொந்தளித்தார்.
 
இவ்வளவு விவகாரம் கிளப்பிய விஷயத்தில்  உண்மையில் நடந்தது என்ன? 
 
பொதுப்பணித்துறையின் நீர் மேலாண்மைப் பிரிவின் சிறப்புப் பொறியாளர் (ஓய்வு) வீரப்பன்,  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் இதுதான் நடந்தது என்று சொல்லும் தகவல்கள் இங்கு அப்படியே...

 
டிசம்பர் 1, 2 தேதிகளில் என்னதான் நடந்தது?
 
பொறியாளர் வீரப்பனைப் பொறுத்தவரை,  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு சரியான சமயத்தில்,  தெளிவான திட்டமிடலுடன்தான் திறக்கப்பட்டது என்கிறார். எந்த வீண் தாமதமும், அலட்சியமும் இல்லை என்று அவர் சொல்கிறார். இதற்கான ஆதாரங்களாக அவர் முன்வைக்கும் வாதங்கள் பின் வருமாறு...
 
1- செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்டது 29 ஆயிரம் கன அடி மட்டுமே..!
 
டிசம்பர் 2-ம் தேதி சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் மூழ்கியபோது, அந்த இடத்தைக் கடந்த தண்ணீரின் அளவு, 55 முதல் 60 ஆயிரம் கன அடி. இது அத்தனையும் செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்டதல்ல. செம்பரம்பாக்கத்தின் மொத்தக் கொள்ளளவே 33 ஆயிரம் கன அடிதான். உபரி நீரை வெளியேற்ற அங்குள்ள நீர் வெளியேற்றும் வழிகள் மொத்தம் 24. அவை அனைத்தையும் திறந்துவிட்டாலும்கூட 29 ஆயிரம் கன அடி நீர்தான் வெளியேறும். அதனால், அங்கிருந்து 55 ஆயிரம் கன அடி தண்ணீரோ,  60 ஆயிரம் கன அடி தண்ணீரோ திறந்துவிடப்படவில்லை.


2- முதல்நாளே ஏன் திறக்கவில்லை?


 'டிசம்பர் 2-ம் தேதி மொத்தமாக 29 ஆயிரம் கன அடி தண்ணீரை ஏன் திறக்க வேண்டும்? அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிட்டு இருக்கலாமே...?' என்பது சிலரின் கேள்வி.
 
டிசம்பர் 1-ம் தேதி வரை செம்பரம்பாக்கத்திற்கு வந்த நீர்வரத்து வெறும் விநாடிக்கு 960 கன அடி தண்ணீர். அதில் பொதுப்பணித்துறைப் பணியாளர்கள், 900 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளனர். 60 கன அடி தண்ணீரை சேமித்துள்ளனர். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.



  
ஒன்றாம் தேதி இரவுக்கு முன்புவரை சென்னையிலும்,  அதனைச் சுற்றி உள்ள பகுதியிலும் பெய்த மழையின் அளவு வெறும் 50 மி.மீ .தான். ஆனால், ஒன்றாம் தேதி இரவிலும் அதற்குப் பிறகும்,  மழை பேய்த்தனமாக பெய்யத் தொடங்கியது. 50 மி.மீ  பெய்து கொண்டிருந்த மழையின் அளவு,  கிடுகிடுவென அதிகரித்து 400 மி.மீ க்கு உயர்ந்தது. அதனால், இரண்டாம் தேதி, அணைக்குச் சட்டென விநாடிக்கு, 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது. இது ஆபத்து என்று உணர்ந்த பொதுப்பணியாளர்கள்,  அணையிலிருந்து 29 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டனர். இதில் எந்தத் தவறும் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒன்றாம் தேதி வரை வெறும் 960 கன அடி தண்ணீர்தான் அணைக்கு வந்தபோது, அதில் சரியாக 900 கன அடி  தண்ணீரை பொதுப்பணியாளர்கள் திறந்துவிட்டுள்ளனர்.

ஒன்றாம் தேதி இரவுக்குப் பிறகு சட்டென 26 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. அதனால், அதில் 29 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். 29 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்பது எதிர்பார்க்காத ஒன்று. ஏனென்றால், கன மழை பெய்யும் என்றுதான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததே தவிர, 400 மி.மீ  அளவிற்கு அது பெய்யும் என்பது வானிலை ஆய்வு மையம் உள்பட எத்தரப்பும் எதிர்பார்க்காதது. அதுபோல், நாம் நினைப்பதுபோல் முதல் நாளே திறந்துவிட்டிருந்தால், 960 கன அடித் தண்ணீரையும் திறந்துவிட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் செய்ய முடியாது. ஏனென்றால், 1-ம் தேதி இரவுக்குமேல் பெய்த மழையைப்போல் ஒரு ராட்சத மழை பெய்யவில்லை என்றால், மொத்தத் தண்ணீரையும் கடலுக்கு அனுப்பிவிட்டு அணையை காயப்போட்டு வைக்க முடியாது. பிறகு மழை பெய்தும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்கும். அப்போது, தண்ணீரை ஒழுங்காகச் சேமித்து வைக்கவில்லை என்று அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனம் கிளம்பும்!

தேதிஅணையின் கொள்ளளவு(TMC)ஒரு விநாடிக்கு ஏரிக்கு வந்த நீர் கனஅடியில்ஒரு விநாடியில் ஏரியிலிருந்து வெளியேறிய நீரின் அளவு கனஅடியில்
01.12.20153.141960900
02.12.20153.39626,00029,000
03.12.20153.09410,20011,000
04.12.20153.1324,9005,000

 
3 – முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்காக காத்திருந்தனரா?
 
பொதுப்பணித்துறைப் பணியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கத் தேவையில்லை. வெள்ளம், பெருமழைக் காலம் போன்ற நேரங்களில், அவர்களுக்கு யாருடைய உத்தரவும் தேவையில்லை. தங்களுடைய பொறுப்பில் இருக்கும் ஏரிக்குப் பின்புறம் உள்ள பகுதியைப் பற்றியோ, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கு முன்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியோ அவர்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, அதில் சேமிக்க வேண்டிய நீரை சேமித்துக் கொண்டு மற்றவற்றை திறந்துவிடுவார்கள். ஒன்றாம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு,  29 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத் தொடங்கியதும்,  அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவில்லை. உடனடியாகத் திறந்துவிட்டனர். அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவும் தேவையில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது!


 
4 - பாசனத்திற்குத் திறப்பது வேறு... வெள்ளச் சமயங்களில் திறப்பது வேறு!
 
அணையில் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்காக திறக்கும்போது, தலைமைச் செயலாளர், முதலமைச்சரிடம் அனுமதி கேட்பது நடைமுறை. ஏனென்றால், அது குடி நீர் தேவைக்கும் அல்லது எதிர்காலத்தில் தகுந்த விவசாய காலத்திற்கும் ஏற்றவகையில் அவற்றைப் பயன்படுத்தலாமா... அல்லது இப்போது திறந்துவிடலாமா? என்று அனுமதி கேட்பார்கள். ஆனால், மழை வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் இதுபோன்ற நடைமுறைகளுக்காக காத்திருக்கமாட்டார்கள். கோப்புகள் கையெழுத்தாகி வரும் வரையில் பொறுத்திருக்கத் தேவையும் இல்லை. அதை அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுப்பணித்துறை பொறியாளர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். அதுபோல்தான் இப்போதும் நடந்தது. அதனால், தலைமைச் செயலாளர் உத்தரவுக்காகக் காத்திருந்தனர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தவுக்காக காத்திருந்தனர் என்றெல்லாம் சொல்லப்படுவது முகாந்திரமற்றக் குற்றச்சாட்டுக்கள். 

5- நீர் அளவு 29 ஆயிரம் கன அடி எப்படி 60 ஆயிரமானது?
 
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்தான் அடையாறாக சென்னைக்கு வருகிறது. அப்படி அது வரும் வழியில் 278 ஏரிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்தத்  தண்ணீரையும் அது உள்வாங்கிக் கொண்டு வருகிறது. மேலும், அன்று முழுவதும் விடாமல் கொட்டிக் கொண்டிருந்த மழையும் அதோடு சேர்ந்து கொண்டது. அந்தத் தண்ணீரெல்லாம் செம்பரம்பாக்கத்தோடு சேர்ந்துதான் 60 ஆயிரம் கன அடி தண்ணீரானது..

6 – 2005ம் ஆண்டு ஏற்படாத சேதம் இப்போது ஏன்? 
 
சைதாப்பேட்டை பாலத்திற்கடியில் தண்ணீர் கடப்பதற்கு மொத்தம் 12 வழிகள் இருந்தன. ஆனால், அவற்றில் 7 அடைக்கப்பட்டுவிட்டது. எல்லாம் ஆக்கிரமிப்புகள். 2005-ம் ஆண்டு 60 ஆயிரம் கன அடித் தண்ணீர் ஓடியபோது, 12 வழிகளும் இருந்தன. ஆனால், இப்போது அவை இல்லையே. பிறகு எப்படித் தண்ணீர் வெளியேறும்? ஆக்ரோஷமாக வரும் வெள்ளம் ஊரைத்தான் காவு வாங்கும்!
 


 
7 – சிதைக்கப்பட்ட அடையாற்றின் கரைகள்! 
 
ஒரு ஆறு என்பது தன்னளவில் அகன்று கொண்டே வர வேண்டும். ஆனால், செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீரைப் பெற்றுக் கொண்டு வரும் அடையாற்றின் கரைகள் எந்தளவிற்கு சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்த்தால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கான காரணத்தையும் உணர முடியும்.
 

செம்பரம்பாக்கம் ஏரி நீர் கடலில் கடக்கும் பாதை


அடையாறு மந்தநந்தபுரத்தில்,  105 மீட்டராகவும் ஆழம் 9 மீட்டராகவும் இருந்து,  ஏர்போர்ட் வரும்போது 222 மீட்டர் அகலமாகவும், ஆழம் வெறும்  6 மீட்டராகவும் குறுகிறது. மணப்பாக்கத்தில் அதுவும் குறுகி, அகலம் 112 மீட்டராகவும் ஆழம் 5 மீட்டராகவும் மாறுகிறது. பிறகு, மீண்டும் நந்தம்பாக்கத்தில் ஆற்றின் அகலம் 59 மீட்டராகக் குறுகி, ஆழம்  9 மீட்டராகிவிடுகிறது. சைதாப்பேட்டையில் ஆற்றின் அகலம் 83 மீட்டராகவும், ஆழம் 4 மீட்டராகவும் சிறுத்துவிடுகிறது. அடையாறு பாலத்தின் அருகில்  222 மீட்டர் அகலம் வெகுவாகச்  சுருங்கிப் போய்விடுகிறது.
 
ஆற்றின் பரப்புக்கு மட்டுமல்ல, ஆற்றின் கரைகளுக்கும் இதுதான் நிலை. ஒருபக்கம் உயர்ந்தும், ஒரு பக்கம் அரிக்கப்பட்டும் கிடக்கிறது. இப்படி இருக்கும்போது, பரந்து வரும் வெள்ளத்தின் வேகம், தன் பாதையில் தடை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அடித்து நொறுக்கிக் கொண்டு போகிறது. இதுபோதாதென்று அடையாற்றின் கரைகளைச் சிதைத்து வைத்துள்ளனர். அதனால்தான், கரையை நாம் பலவீனப்படுத்தி வைத்த இடங்களில், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. ஆற்றின் ஆழத்தை கட்டுமானக் கழிவுகளால் நிரப்பிய இடங்களில், அது பொங்கி  தெருத் தெருவாக ஓடியது. 

அடையாறு ஆற்றுப்படுகையின் ஆக்கிரமிப்புகளை சுட்டிக் காட்டும் வரைபடம்

 
கடல் நோக்கி செல்லச் செல்ல ஆக்கிரமிப்புகளால் குறுகும் அடையாற்றின் பரப்பளவு! 
 
(பொதுவாக ஆற்றின் இருபக்க கரைகளும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தாழ்வான கரையில் வெள்ளம் ஏறும். ஆனால், அடையாற்றின் கரைகள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதையும் கடைசி அட்டவணை  உணர்த்துகிறது!)

செம்பரம்பாக்கத்தில் இருந்து தொலைவுஇடத்தின் பெயர்ஆற்றின் பரப்புஆற்றின் ஆழம்கரைகளின் உயரம் (இடது -வலது)
8.40 கி.மீஉள்வட்டச்சாலை116 மீட்டர்11 மீ10 மீ -13மீ
13.40 கி.மீவிமானநிலையம்222 மீட்டர்6 மீ8மீ-7மீ
18.40கி.மீநந்தம்பாக்கம்59 மீட்டர்9 மீ7 மீ-6மீ
23.40கி.மீசைதாப்பேட்டை83.3 மீட்டர்4 மீ5 மீ -9 மீ
28.80 கி.மீதிரு.வி.க பாலம்485 மீட்டர்1 மீ4 மீ - 5 மீ
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, தாமதமாக தண்ணீர் திறந்துவிட்டதுதான் சென்னை மூழ்கியதற்கு காரணம் என்று சொல்வது சுத்தப் பொய். அதனால், சென்னை மூழ்கவில்லை. தண்ணீரும் அங்கிருந்து தாமதமாகத் திறந்துவிடப்படவில்லை. சரியான நேரத்தில், சரியான அளவில் தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. டிசம்பர் முதல்நாள் வரை ஏரிக்கு தண்ணீர் வரத்து 960 கன அடிதான் இருந்தது. அப்போது 900 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இது சரியான அளவு. ஆனால், 2-ம் தேதி அப்போது பெய்த கனமழையால் தண்ணீரின் வருகை அளவு திடீரென 29 ஆயிரம் கன அடியாகக் கூடியது. அப்போது 26 ஆயிரம் கன அடி தண்ணீரை  திறந்துவிட்டுள்ளனர் பொதுப்பணித்துறைப் பணியாளர்கள். அவர்களுடைய வேலை, ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது. எந்த நேரத்தில் அதைத் திறந்துவிட வேண்டும். எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதை கணக்கிட்டு செயல்படுவதுதான்.
ஏரிக்கு அப்பால் நடக்கப்போவதையோ, ஏரிக்கு முன்னால் நடப்பதையோ பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அது அவர்களுடைய வேலையும் இல்லை. தண்ணீர் வரும் பாதையை சரியாக பராமரிக்காமல், சைதாப்பேட்டை பாலத்தில் உள்ள நீர் வெளியேறும் வழிகளை அடைத்து வைத்தால் அதற்கு அவர்களா பொறுப்பு? அதுபோல அடையாற்றின் கரைகளைச் சிதைத்து வைத்துள்ளனர். ஆற்றுக்குள் கட்டுமானக் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால்தான் அடையாற்றில் வந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்து சென்னையை மூழ்கடித்தது.

-ஜோ. ஸ்டாலின் 

விகடன்

வணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)

வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்:
1 டிரேடர்ஸ் : வணிக மையம் 
2 கார்ப்பரேஷன் : நிறுவனம் 
3 ஏஜென்சி : முகவாண்மை 
4 சென்டர் : மையம், நிலையம் 
5 எம்போரியம் : விற்பனையகம் 
6 ஸ்டோர்ஸ் : பண்டகசாலை 
7 ஷாப் : கடை, அங்காடி 
8 அண்கோ : குழுமம் 
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி 
10 ஜெனரல் ஸ்டோர்ஸ் : பல்பொருள் அங்காடி 
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம் 
12 டிராவல்ஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம் 
13 எலக்டிரிகல்ஸ் : மின்பொருள் பண்டகசாலை 
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம் 
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை 
16 ஜூவல்லர்ஸ் : நகை மாளிகை, நகையகம் 
17 டிம்பர்ஸ் : மரக்கடை 
18 பிரிண்டர்ஸ் : அச்சகம் 
19 பவர் பிரிண்டர்ஸ் : மின் அச்சகம் 
20 ஆப்செட் பிரிண்டர்ஸ் : மறுதோன்றி அச்சகம் 
21 லித்தோஸ் : வண்ண அச்சகம் 
22 கூல் டிரிங்க்ஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம் 
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம் 
24 காபி பார் : குளம்பிக் கடை 
25 ஹோட்டல் : உணவகம் 
26 டெய்லர்ஸ் ; தையலகம் 
27 டெக்ஸ்டைல்ஸ் : துணியகம் 
28 ரெடிமேட்ஸ் : ஆயத்த ஆடையகம் 
29 சினிமா தியேட்டர் : திரையகம் 
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம் 
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம் 
32 சிட் பண்ட் : நிதியகம் 
33 பேங்க் : வைப்பகம் 
34 லாண்டரி : வெளுப்பகம் 
35 டிரை கிளீனர்ஸ் : உலர் வெளுப்பகம் 
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம் 
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி 
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி 
39 ஆர்ட்ஸ் : கலையகம், கலைக்கூடம் 
40 ஆஸ்பெஸ்டாஸ் : கல்நார் 
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம் 
42 ஆட்டோ : தானி 
43 ஆட்டோமொபைல்ஸ் : தானியங்கிகள், தானியங்கியகம் 
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம் 
45 பேக்கரி : அடுமனை 
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம் 
47 பஜார் : கடைத்தெரு, அங்காடி 
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம் 
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை 
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி 
51 போர்டிங் லாட்ஜிங் : உண்டுறை விடுதி 
52 பாய்லர் : கொதிகலன் 
53 பில்டர்ஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர் 
54 கேபிள் : கம்பிவடம், வடம் 
55 கேப்ஸ் : வாடகை வண்டி 
56 கபே : அருந்தகம், உணவகம் 
57 கேன் ஒர்க்ஸ் : பிரம்புப் பணியகம் 
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை 
59 சிமெண்ட் : பைஞ்சுதை 
60 கெமிக்கல்ஸ் : வேதிப்பொருட்கள் 
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி 
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி 
63 கிளினிக் : மருத்துவ விடுதி 
64 காபி ஹவுஸ் : குளம்பியகம் 
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வகம், 
66 கம்பெனி : குழுமம், நிறுவனம் 
67 காம்ப்ளக்ஸ் : வளாகம் 
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம் 
69 காங்கிரீட் ஒர்க்ஸ் : திண்காரைப்பணி 
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம் 
71 கூரியர் : தூதஞ்சல் 
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம் 
73 சைக்கிள் : மிதிவண்டி 
74 டிப்போ : கிடங்கு, பணிமனை 
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர் 
76 டிரை கிளீனர்ஸ் : உலர் சலவையகம் 
77 எலக்ட்ரிகல்ஸ் : மின்பொருளகம் 
78 எலக்ட்ரானிக்ஸ் : மின்னணுப் பொருளகம் 
79 எம்போரியம் : விற்பனையகம் 
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம் 
81 சைக்கிள் ஸ்டோர்ஸ் : மிதிவண்டியகம் 
82 பேக்டரி : தொழிலகம் 
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம் 
84 ஃபாஸ்ட் ஃபுட் : விரைவு உணவகம்
85 ஃபேக்ஸ் : தொலை எழுதி 
86 பைனான்ஸ் : நிதியகம் 
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி 
88 கார்மெண்ட்ஸ் : உடைவகை 
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர் 
90 ஹார்டு வேர்ஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை 
91 ஜூவல்லரி : நகை மாளிகை 
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம் 
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி 
94 மார்க்கெட் : சந்தை அங்காடி 
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம் 
96 பேஜர் : விளிப்பான், அகவி 
97 பெயிண்ட்ஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு 
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம் 
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு 
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம் 
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய் 
102 பார்மசி : மருந்தகம் 
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிப்பட நிலையம் 
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிழித் தொழிலகம் 
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர் 
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை 
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம் 
108 பவர்லும் : விசைத்தறி 
109 பவர் பிரஸ் : மின் அச்சகம் 
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம் 
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம் 
112 ரப்பர் : தொய்வை 
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம் 
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம் 
115 ஷோரூம் : காட்சிக்கூடம் 
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை 
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம் 
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள் 
119 சப்ளையரஸ் : வழங்குநர், 
120 லெதர்ஃபேக்டரி : தோல் பதனீட்டகம் 
121 டிரேட் : வணிகம் 
122 டிரேடர்ஸ் : வணிகர் 
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம் 
124 டிராவல்ஸ் : பயண ஏற்பாட்டாளர் 
125 டீ ஸ்டால் : தேனீரகம் 
126 வீடியோ : வாரொளியம், காணொளி 
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு 
128 ஜெராக்ஸ் : படிபெருக்கி, நகலகம் 
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்



நன்றி - வாட்சப்

கோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும் தியேட்டர்

1/தேர்தல் நேரத்தில் மட்டுமே சேரும் கள்ளக்காதலர்கள் அதிமுகவும், பாஜகவும்.. இளங்கோவன் சர்ச்சை பேச்சு # இளங்"கேவலன்" னு பேர் வந்துடப்போகுது சார்



============



2/விஜயகாந்த் கொடும்பாவியை எரிக்காதீர்.தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். ஜெ. சொல்வேன்.அத்தனையும் நடிப்பு - அமைதிப்படை அமாவாசை



===============



3/நியூ இயர்” பாதுகாப்பிற்கு சென்னையில் 15,000 போலீசார் - பெண்களைக் கிண்டல் செய்தால்.. கைது #,அதுல 680 பேர் லேடி போலீசாம்.ஐ ஜாலி




==================




4/செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா: கெளதம் மேனன் தயாரிப்பு # 3 பேருமே ஏ படம் தான் எடுப்பாங்க, அப்போ இது ட்ரிபிள் ஏ வா?




=================




5 கோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும் தியேட்டர் # படம் படுத்துக்கிட்டாக்கூட அப்டியே படுத்துத்தூங்கிடலாம்




==============




6]தேமுதிக-வினர் போல கண்ணியக் குறைவான நடவடிக்கைகளில் அதிமுக-வினர் ஈடுபட வேண்டாம் - முதல்வர் # அவங்க ரூட்ல போக வேணாம், புது ரூட்ல போங்கறாரா?




===============




7 புதுச்சேரியில் பதற்றம்: விஜயகாந்த் தங்கியுள்ள ஹோட்டல் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் # பாண்டிச்சேரி சரக்கு ஊர் ஆச்சே? அங்க ஏன் போனாரு?



===========




8 இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் மக்கள் வாழ முடியாது: ஆய்வில் அதிர்ச்சி தகவல் # ரைட்டர்ங்க உஷார்.தண்ணீர்ப்பஞ்சம் வருதாம்



=================



9 சிம்பு தலைமறைவாக இருக்கிறார்: சென்னை காவல்துறை திட்டவட்டம் # அவர் அஜித் ரசிகராச்சே?தலைமறைவாதான் இருப்பாரு.தளபதிமறைவாவா இருக்க முடியும்?


==============

10 விஜயகாந்த் மனநல மருத்தவம் எடுத்துகொள்ள வேண்டும்
-பத்திரிக்கையாளர்
சங்கம்
# நீங்க டர்க்கி டவல் எடுத்துக்கொள்ள வேண்டும்.துடைக்கனுமில்ல?

===============

11 DMKஆட்சிக்கு வந்ததும் மக்களின் குறைகளை படிப்படியாக நிவர்த்தி செய்யும்: ஸ்டாலின் # அப்போ 2021 வரை இப்டியே கஷ்டப்பட்டுட்டே இருக்கனுமா நாங்க?


===============

12 மாலை நேரத்து மயக்கம்'.. திறந்த மனதுடன் வாருங்கள், பாருங்கள் - கீதாஞ்சலி செல்வராகவன் # ஹீரோயின் ரொம்ப மூடி டைப் போல?


=================

13 எங்களுக்கு 15 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதால் எல்லோரும் என்னைத் தேடி வருகிறார்கள்; விஜயகாந்த் #,அப்போ 85% பேர் எதிர்ப்பு?ஒத்துக்கறீங்க


==============

14 தி.மு.க. கூட்டணியில் சேர காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு கருணாநிதி #,இது கொள்கை அடிப்படையில் அமைந்த கூட்டணியா?
நோ.கொள்ளை அடிப்படையில்

=============

15 ஜல்லிக்கட்டு கோரிக்கை - என்னை காப்பியடித்தார் ஜெயலலிதா - கலைஞர் போய்ட்டீங்க.இல்லைன்னா லாக்கப்ல வெச்சு அடிச்சிருப்பாரு


===============


16 மனதில் பட்டதை உடனே சொல்லி விடுவதால் விஜயகாந்தை தவறாக நினைக்கக்கூடாது: இல.கணேசன் # பிஜேபி கூட கூட்டணி இல்லைன்னு சொன்னாலுமா?டோலுமா?


================

17 அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: மு.க.ஸ்டாலின் # கலைஞர் வேணா தன் வீடு.மனைவி மக்களுக்காக நிறையா செஞ்சிருக்காரு


==============

18 பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்கு ஏ சான்றிதழ் :)
# சென்சாரை கவனிக்கல போல. இல்ல பக்கா லோக்கல் படமோ?

=============

19 என் பெயரை கேட்டால் மோடிக்கு இரத்தம் கொதிக்கும்.
# மோடி பேரைக்கேட்டா உங்களுக்கு உள்ளங்கால் பாதமே வியர்க்குமாமே?

==============

20 தமனா வின் சம்பளம் ரூ 1 கோடியாக உயர்ந்தது  # படத்தில் போடும் டிரஸ் குறையக்குறைய வாங்கும் சம்பளம் அதிகரிக்கும், இது சினிமா விதி


===========================

தீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.! பேட்டி

புதுடெல்லி: எனக்கு புது வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று பதான்கோட்டில் தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் எஸ்.பி. படபடப்புடன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.

இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன், காரில் வந்து கொண்டிருந்த பஞ்சாப் மாநில குர்தாஸ்பூர் நகர எஸ்.பி. சல்விந்தர் சிங், அவருடைய நண்பரும் நகை வியாபாரியுமான ராஜேஷ் சர்மா, சமையல்காரர் மதன்கோபால் ஆகியோரை தீவிரவாதிகள் கடத்தி இருக்கின்றனர். பின்னர் அவர்களை கடுமையாக தாக்கி, வெவ்வேறு இடங்களில் தனித்தனியே கீழே தள்ளிவிட்டு விட்டு காரை மட்டும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். அதன்பின் தாஜ்பூர் என்ற இடத்தில் அந்த காரை நிறுத்திவிட்டு பதன்கோட் விமானப்படை தளம் நோக்கி சென்ற தீவிரவாதிகள்  அங்கு தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து எஸ்.பி. சல்விந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தீவிரவாதிகள் அனைவரும் ஏ.கே. 47 ரக எந்திர துப்பாக்கிகளை வைத்திருந்தனர். எனது 3 செல்போன்களில் இரண்டை பறித்துக் கொண்டனர். முதலில் நான் ஒரு போலீஸ் அதிகாரி என்பது அவர்களுக்கு தெரியாது. போலீஸ்காரர் ஒருவர் என்னை செல்போனில் அழைத்தபோதுதான் போலீஸ் அதிகாரி என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.
கோயிலுக்கு சென்று தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்துவிட்டு வந்ததால் துப்பாக்கி வைத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் சாதாரண உடையிலும் இருந்தேன். எங்களை பிடித்த தீவிரவாதிகள் அனைவரும் கைகளை மேலே உயர்த்தும்படி சொன்னார்கள். ஒரு தீவிரவாதி மண்டியிட்டு நில்லுங்கள் என்றான். எங்களை நீங்கள் பார்த்தால் உடனடியாக சுட்டுக் கொல்வோம் என்றும் மிரட்டியவர்கள், எங்கள் 3 பேரின் கண்களையும் துணியால் கட்டியதுடன், எங்கள் கைகளையும் மடக்கி பின்புறமாக கட்டினர்.

அந்த தீவிரவாதிகள் அனைவரும் உருது, பஞ்சாபி, இந்தி கலந்து பேசினர். அவர்கள் என்னை கொல்வதற்கு திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் எனது கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்துவிட்டேன். தீவிரவாதிகள் கடத்திய சம்பவம் குறித்து உடனடியாக மேலிடத்துக்கு தெரிவித்தேன். அதன்பின்னரே டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி. மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் பதான்கோட் விரைந்தனர்.

நான் உண்மையை மட்டுமே சொல்கிறேன். எனக்கு புதிய வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. என்ன நடந்தது என்பது எனக்குத்தான் தெரியும். நான் எப்படி உயிருடன் வந்தேன் என்பதையும் அறிவேன்" என்றார்.

இந்நிலையில், குர்தாஸ்பூர் நகர எஸ்.பி. சல்விந்தர் சிங்க்கும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதனால், அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்படும். அப்படி அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவரை கைது செய்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நன்றி - விகடன்

மாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அட்டர்ஃபிளாப்பா?த ஹிந்து அலசல்

பெற்றோரின் விருப்பத்துக்காக விருப்பமில்லாத திருமண உறவில் சிக்கிக்கொள்கிறார் மனோஜா (வாமிகா). இவரது கணவன் பிரபு (பாலகிருஷ்ணா) கூச்ச சுபாவம் கொண்டவர். நாகரிகம், நாசூக்கு அறி யாதவர். ஆனால் தன் மனைவி மீது உயிராக இருக்கிறார். மனோஜாவோ பிரபுவை வெறுத்து ஒதுக்குகிறார். இவர் களது திருமணம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் முறிந்துபோகிறது. பிரிந் தவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.


கீதாஞ்சலி செல்வராகவனின் இயக் கத்தில் வந்திருக்கும் இப்படம், அம்மா வும் மகளும் பேசிக்கொள்வதை இயல் பாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்கு கிறது. பிறகு, திருமண முறிவின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிடிக்காத திருமண உறவினுள் போலி யான இல்லறத்தை சிருஷ்டிக்க முற் படுவதில் உருவாகும் முரண்பாடு களும், மெல்ல முகிழ்க்கும் காதல் அத் தியாயமும் தமிழ் சினிமா பலமுறை கண்ட கதை. ஏற்கெனவே கையாண்ட கதையை மீண்டும் கையாளும்போது அதில் இருக்கவேண்டிய புதுமையோ, புதிய பார்வையோகூட சொல் லிக்கொள்ளும் அளவில் இல்லை.



பாத்திர வார்ப்புகள், வசனங்களில் கதாசிரியர் செல்வராகவன் வித்தியாசம் காட்டியிருந்தாலும் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் பெரிய வித் தியாசம் இல்லை. நாயகனை நிராகரிக் கும் நாயகி ஆதிக்க உணர்வுடன் நடந்துகொள்வதை வேண்டுமானால் வித்தியாசம் என்று சொல்லலாம்.


நாயகியின் மனம் இளகும்போது ஏற்படும் எதிர்பாராத சம்பவத்துக் கான பின்புலம் நன்கு கட்டமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த சம்பவம் சித்தரிக்கப்பட்ட விதம் அபத்தம். கதையின் போக்கை திசைமாற்றக்கூடிய இக்காட்சியை ஏற்றுக்கொள்ளும் வித மாகச் சித்தரித்திருந்தால் கதையின் போக்குக்கு அது வலு சேர்த்திருக்கும். கிளைமாக்ஸ் திருப்பமும் வழக்க மான சினிமாத்தனம். போதாக் குறைக்கு, நாயகன், நாயகி இருவரும் தங்கள் தரப்பை நியாயப்படுத்த தலா ஆளுக்கொரு காட்சியில் நீளமாக வச னம் பேசி கொடுமைப்படுத்துகிறார்கள்.


தன் ஆண் நண்பர்களுடன் மனோஜா வுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நவநாகரிகப் போக்கு கொண்டவராக இருந்தும் சுயமரியாதையும் சுய கட்டுப்பாடும் கொண்டவராக இருக்கும் மனோஜாவின் ஆளுமை ஆகியவை நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், திருமணத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் அவர் அவதிப்படுவது, தன் மனைவிக்கு ஏற்ப நடந்துகொள்ளத் தெரியாத பிரபுவின் அவஸ்தைகள் இருவரையும் இணைத்துவைக்க நண்பர்கள் செய்யும் முயற்சி ஆகியவற்றை சித்தரித்த விதம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.



புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாவுக்காகத் திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண், திருமண உறவுக் குள் தான் மோசமாக நடந்துகொண்டால் அதுவும் அம்மாவை பாதிக்கும் என்பதை யோசிக்க மாட்டாளா? பிடிக்கவே பிடிக்காத திருமணத்தில் எதற்காக 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்? ஒரு தவறும் செய்யாத கணவனை தான் வதைப்பது பற்றிய உணர்வே அந்த பெண்ணுக்கு ஏற்படாதா?



டேட்டிங் என்ற சாக்கில் பெண் களைக் காம நுகர்வுக்குப் பயன் படுத்திக்கொள்ளும் நண்பனை அதற் காகவே பிரிகிறார் நாயகி. பின்னாளில் அதே நண்பனோடு டேட்டிங் செல்ல ஒப்புக்கொள்ளும்போது நாயகியின் கதாபாத்திரம் சரிகிறது. யாருமே ஊடுருவ முடியாத இரும்புக் கோட்டை போலத் தன்னை ஆக்கிக்கொண்டுள்ள ஒரு பெண் மனம் மாறும் காட்சியில் எந்த அளவுக்கு வலு இருக்க வேண்டும்? படத்தில் அந்த இடம் சப்பென்று இருக்கிறது.



நகர்ப்புற இளைஞர்களிடம் ஊறி யிருக்கும் டேட்டிங் கலாச்சாரத்தை இயல்பாகச் சித்தரிக்கிறார் இயக்குநர். ஆனால் மாநகர இளைஞர்களும் யுவதிகளும் டிஸ்கொத்தே, மது, டேட்டிங் தவிர வேறு சிந்தனைகளே இல்லாதவர்கள் போன்ற சித்தரிப்பு உறுத்துகிறது.


பொருந்தாத திருமணத்தின் தொடக்க நாட்களைச் சித்தரிக்கும் சில காட்சிகள் இயல்பாக உள்ளன. காட்சிகளைக் கையாளும் விதத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் நேர்த்தியாக வெளிப் படுகிறார். செல்வராகவனின் வசனங்கள் இயல்பாக உள்ளன. மனோஜாவின் நண்பன், பிரபுவுக்கு ஆலோசனை வழங்கும் காட்சி இதற்கு உதாரணம்.



படமாக்கப்பட்ட விதம், உரையாடல் கள் ஆகியவற்றில் இருக்கும் நேர்த்தி, சம்பவங்களைக் கோத்த விதத்தில் இல்லை. பெரும்பாலான காட்சிகள் ஊகிக்கக்கூடியவையாக, பார்த்து சலித்தவையாக இருக்கின்றன. ஒவ் வொரு காட்சியையும் மிக நிதான மாக நகரவிடும் படத்தொகுப்பு திரைக்கதையை மந்தமாக்குகிறது.


வாமிகா, ராமகிருஷ்ணா இருவரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெறும் அளவுக்கு ராமகிருஷ்ணா தன் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார். உறுதியான ஆளுமையை வெளிப் படுத்துவதில் வாமிகாவின் கண்கள், முக பாவனைகள் நன்கு ஒத்துழைக்கின்றன. மனோஜாவின் அம்மாவாக வரும் கல்யாணி, பிரபுவின் அப்பாவாக வரும் அழகம் பெருமாள் ஆகியோரும் பொருத்தமான தேர்வுகள்.


அறிமுக இசையமைப்பாளர் அம்ரித் தின் இசையும், தரின் ஒளிப்பதிவும் கதையுடன் இணைந்து பயணிக்கின்றன. பாடல்கள் நினைவில் தங்கவில்லை என்றாலும் பின்னணி இசை பல இடங்களில் வசீகரிக்கிறது.


ஏற்கெனவே எடுத்தாளப்பட்ட கதையை புது தலைமுறை கதா பாத்திரங்களுடன் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஆனால் காட்சியின் அதிர்ச் சிக்காக, கதாபாத்திரங்களின் அடிப்படை குணாதிசயங்களில் செயற்கையான சிதைவுகளை திணித்திருப்பது கதையின் அஸ்திவாரத்தை வலுவிழக்கச் செய்கிறது. காட்சிகளின் இயல்புத் தன்மையும் சீராக இல்லை.


கலாபூர்வமான சில படங்கள் மெதுவாக நகரலாம். அதற்காக, மெதுவாக நகரும் படமெல்லாம் கலாபூர்வமான படமாகிவிடாது.

நன்றி - த இந்து