Saturday, April 07, 2012

அகதா கிறிஸ்டி - க்ரைம் ஸ்டோரி சிருஷ்டி - பட்டது திருஷ்டி

http://static.cinemarx.ro/poze/postere/filme/2004/Agatha-Christie-A-Life-in-Pictur...-117245-460.jpg

ஒரு நாவல் உண்மையாக நடக்கிறது

அதிர்ச்சியூட்டும் உண்மைக் கதை


துப்பறியும் நாவல்களை நிறைய எழுதி உலகப் புகழ் பெற்ற அகதா கிறிஸ்டி  வயது 81 -ல் அவருக்கு ஒரு பேரிடி; பெரிய ஷாக். ஆள் ஒரேயடியாக அசந்து உட்கார்ந்துவிட்டார்.
 அப்படி என்ன அதிர்ச்சி?
பத்து வருடங்களுக்கு முன் அகதா ஒரு மர்ம நாவல் எழுதினார். நாவலின் தலைப்பு: 'தி பேல் ஹார்ஸ்’.
அந்த நாவலில் கிறிஸ்டி வுட்நிட் என்று ஓர் இளைஞன் வருகிறான். வில்லன். அதற்கு முன்னால் பிரிட்டனில் யாருமே உபயோகித்து அறியாத 'தாலியம்என்னும் விஷத்தைக் கொடுத்து சில தொழிற்சாலைப் பணியாளர்களைக் கொல்லத் திட்டம் போடுகிறான். கொல்லவும் செய்கிறான்.
கிறிஸ்டி வுட்நிட் செய்த அதே காரியத்தை கிரகாம் யங் என்கிற இளைஞன் இப்போது நிஜமாகவே செய்துவிட்டான். அவனைப் போலவே சில தொழிலாளர்களைக் கொன்றான்; அவனைப் போலவே இவனும் 'தாலியம்விஷம்.
தான் கற்பனை செய்த விஷமே நிஜத்தில் இரண்டு உயிர்களைக் குடித்துவிட்டது என்பதைக் கேட்டால், யாருக்குத்தான் அதிர்ச்சியாக இராது?

http://www.wearysloth.com/Gallery/ActorsW/43180.gif

கிரகாம் யங்குக்கு இப்போது 24 வயது. சென்ற ஆண்டில் புகைப்படக் கருவிகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான் அவன். ஸ்டோர் கீப்பருக்கு உதவியாள் வேலை.
அவன் வேலையில் சேர்ந்த 11-வது வாரம் ராபர்ட் ஈகிள் என்கிற 60 வயது சக தொழிலாளி இறந்துபோனார்.
எப்படி, எதனால் இறந்தார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால், அந்த ஃபேக்டரியில் வேறு சில தொழிலாளர்களை வேறுவிதமான நோய் பீடித்தது. சிலர் தலையில் உள்ள ரோமங்கள் எல்லாம் உதிர்ந்தன; சிலருக்குத் தற்காலிகமாகக் கை கால் பிடிப்பும் வாதமும் ஏற்பட்டன; வேறு சிலர் வாந்தி எடுத்தார்கள்.
முதலில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.
ஆனால், சில வாரங்களுக்குப் பின், சென்ற நவம்பர் மாதத்தில் இன்னொரு தொழிலாளியும் புதிராக இறந்துபோகவே தொழிற்சாலை மிரண்டது.
அந்தக் கூட்டத்தில் எல்லாரும் அவரவர் கருத்தைத் தெரிவித்துப் பேசினதுபோல யங்கும் பேச வேண்டி வந்தது. யங் எழுந்து பேசினான். எப்படி? ஒரு சாதாரண ஃபேக்டரி தொழிலாளிக்குக் கனவில்கூடத் தெரிந்திருக்க முடியாத வைத்திய பரிபாஷைகளும், ரசாயனங்கள், விஷங்களைப் பற்றிய விவரங்களும் அவன் வாயில் இருந்து சரமாரியாக வந்தன.

யங்கின் 'வைத்திய ஞானப் பேச்சைக் கேட்டுத் தொழிலாளர்கள் எல்லாரும் ஆச்சர்யம் அடைந்தார்கள். ஆனால், ஒரே ஒரு மனிதர் மட்டும் சந்தேகம் அடைந்தார். காதும் காதும் வைத்தாற்போல போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டார்.
போலீஸ் ரகசியமான விசாரணையைத் தொடங்கியது. வெகு சீக்கிரத்திலேயே கிரகாம் யங்கின் ரகசிய அறையை அது கண்டுபிடித்துவிட்டது.


http://www.providings.com/Images/2007/DEC/Providings.com_44_20071225111849.jpg
அந்த அறையில், ஒரு மாதத்துக்கு ஒரு பெரிய மருந்துக் கடைக்குப் போதுமான அளவு 'தாலியம்பாட்டில்களிலும் டின்களிலும் இருந்தது. பாட்டில்கள் எல்லாம் மிக அழகாக வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. அவற்றுக்குக் கீழே இருந்த ரகசிய டிராயரில் யங் எழுதிவந்த டைரி ஒன்று கிடைத்தது.
'தாலியம் விஷத்தை மனிதர்கள் மீது பிரயோகித்தால் என்ன விளைவு ஏற்படும்?’ என்பதை யார் யார் மீதெல்லாம் எப்படி எப்படி, எப்போது பரிசோதித்துப் பார்த்தான் என்கிற விவரங்களை எல்லாம் யங் அந்த டைரியில் குறித்திருந்தான்.
அந்த டைரியில் தன் நண்பர்களை எல்லாம் அவர்களுடைய பெயர்களின் முதல் எழுத்தைக்கொண்டு யங் குறிப்பிட்டு இருந்தான்.
தன்னுடைய 14 வயதில் விஷத்தைக் கொடுத்து மூன்று பேரை மேலுலகுக்கு அனுப்பப் பார்த்து இருக்கிறான் யங். அந்த மூன்று பேரும் வேறு யாரும் இல்லை... அவனுடைய தந்தை, சகோதரி மற்றும் பள்ளியில் உடன் படித்த ஒரு மாணவன்.
சிறு வயதில் இது நிகழ்ந்ததனால் யங்குக்கு 14 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து, மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். வெளியில் வந்த பின் அவன் நடத்திய கூத்துதான், போட்டோ தொழிற்சாலையில் அடுத்தடுத்துச் செய்த கொலைகள்.
யங்குக்கு இப்போது கிடைத்திருப்பது, ஆயுள் தண்டனை!இந்தப்பகுதி விகடன் பொக்கிஷம் பழைய அபூர்வ  கலெக்‌ஷன்

மிஸஸ் ஆனபின்பும் மிஸ் என்றே அழைக்கப்படும் பெண்கள் யார்? ( ஜோக்ஸ்)

1.இடைத்தேர்தல் பணிகளுக்கு 32 அமைச்சர்கள் # 32 அமைச்சர்களும் 32 பல்லை காட்டி ஓட்டு கேளுங்கன்னு சொல்லாம சொல்றாரோ?


-----------------------------


2. நல்ல நடிச்சா விருந்து வைத்து பாராட்டும் விஜய் -செய்தி # அந்த விருந்துல அவர் மட்டும் சாப்பிடவே முடியாதே?


------------------------------------

3. நம்மை விட பலவீனமானவர்கள் எதிர்ப்பு செல்லுபடி ஆகாத இடங்களில் அவர்கள் சார்பாக நாம் எதிர்ப்புக்குரல் கொடுப்பதே வீரம் எனப்படும்


--------------------------------------

4. கல்யாணம் மட்டும் ஏன் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது? 


அதுக்கு அப்புறமா நரகம் தான்கறதால ஒரு சான்ஸ் தர்றாங்க 


-----------------------------------


5. டியர், லிஃப்ட்ல பேசிட்டு இருக்கலாம், வா.

வேணாம், 14 மாடிதான் 3 நிமிஷத்துல வந்துடும்.


அட மேலேபோய்ட்டு போய்ட்டு வந்தா போச்சு, ஏன் இறங்கனும்?


--------------------------------------


முதல்ல இவனுங்கல தண்ணி அடிக்காம சரியான செய்திய போடா சொல்லணும் :)))))))) http://pic.twitter.com/UAstKDSx - அண்ணே ஒரு விளம்பரம்

6. சமையல் பண்ண பெண் 2 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார். அதை சாப்பிடும் ஆண் 10 நிமிடத்தில் முடிச்சுக்கட்டிடறான் # நீதி - ஆண் சுறுசுறுப்பு


---------------------------

7. கல்லாப்பெட்டி சிங்காரம் சினி ஃபீல்டுக்கு ( கோடம்பாக்கம்) வந்த போதுதான் சிங்காரச்சென்னை ஆன


--------------------------

8. கற்பு என்றால் என்ன? 


மனதளவில்  தன்னை நம்பி இருப்பவருக்கு உண்மையாய் இருத்தல்

--------------------------

9. சிம்புவின் புதிய படம் டைட்டில் வாலு, தயாரிப்பு நிக் ஆர்ட்ஸ் # ம்க்கும் நிக் ஆர்ட்ஸ்க்கு நிக்கர் கழடபோகுது


------------------------------

10. பிரமிக்கத்தக்க நடிகை கத்ரீனா கைப் : ஷாரூக் புகழாரம்! # ரம்மியமா ஏதோ இருக்குன்னு ஒத்துக்கலாம். பிரமிக்கற அளவு பெருசா எதுவும் இல்லையே?


-------------------------------


11. எங்க ஊர்ல ஈமு வளர்க்கும் 3 பண்ணையார்கள் பிச்சை எடுக்கும்  நிலைக்கு முந்திய கட்டத்தில் இருக்கிறார்கள்

------------------------------

12. ஆண்கள் எதையும் வெளிப்படையாகப்பேசும் ஓப்பன் டைப். பெண்கள் உடையில் மட்டும் தான் ஓப்பன் டைப்


------------------------------------

13. விரைவில் ஜெயா டி வி யில் டும் டும் டும் படம் 


-----------------------------

14.  சசி - அக்கா, என் நடிப்பு எப்படி?


 ஜெ - ஃபீல்டை விட்டு வந்தும் டச் விடாம என் நடிப்பு எப்படி?-


----------------------------

15.  ஜெ, சசி, நடராஜன் # 3  எப்பவும் ஹிட் ஃபிலிம்


------------------------------



16. சட்டசபையில் பேசுவது குறித்து தேமுதிக எம்எல்ஏக்கள் ஒத்திகை  # நாக்கை மடிக்கறேன்னு கடிச்சுக்காதீங்கய்யா, பே பே பெப்பே பே தான்


-------------------------------

17. மேடம், கற்பு பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?


 9 தாரா - யார் கூட இருந்தாலும் விசுவாசமா இருக்கனும்,பச்சை குத்திக்கனும், கழட்டி விடறப்ப அழிக்கனும்


---------------------------------

18. ஆசிரியைப்பணியில் இருப்பவருக்கு மட்டும் கிடைக்கும் வாய்ப்பு, மணம் ஆகி மிஸஸ் ஆன பின்பும் அனைவரும் மிஸ் என்றே கூப்பிடப்படும் பாக்கியம்


-----------------------------

19. என் அம்மா, அக்கா, மனைவி என மும்மூ ( கீ)ர்த்திகளும் ஆசிரியை என்பதால் கீழ்ப்படிதல், பணிவு எல்லாம் எனக்கு இயற்கையாகவே அமைந்து விட்டது


---------------------------------

20. மனிதனின் மானம் காக்கும் உடைக்கு நூல் தரும் பருத்திப்பூவை தேசிய மலராய் இந்தியா ஏன் அறிவிக்கவில்லை?


-------------------------------


Sibichander Chander face book
கடவுள் மறுப்புகொள்கையை திராவிடதலைமை துவங்கியபோது எனக்கு கட்சிமுக்கியமில்லை கடவுள்தான் முக்கியம் என்று வெளியேறியவர் சிவாஜி.. எனக்கு கடவுள் முக்கியமில்லை கட்சிதான் முக்கியம் என்று கட்சிபணியில் தீவிரமாகியவர் எம்.ஜி.ஆர் இதில் வெற்றிபெற்றது யார் ?

Friday, April 06, 2012

மழைக்காலம் - காதல் சரண்யாவின் கில்மாப்படமா? - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrj4cW780PkJWimYcUMkA4IkXhOC1NcavcndnkSVDKVQ2xVnjxukxm5_oTUdJB-_TxMtY4tx-GkSvHrb0lWffKGw_RHtmWdh9fGNfOIYQYS01r5-wDk2vkpbl1Z4QTIn6CMA_C9_wbbuuj/s640/Mazhaikalam+Movie+Posters.jpg
சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு கொள்கை இருக்கு.. அதாவது தேவதாசின்னு சொல்றாங்களே.. அந்த வகைப்பட்ட பொட்டு கட்டி விடப்படும்பெண்களும் சரி.. நெற்றில பொட்டு வைக்காத ஃபிகர்களும்  சரி.. நம்ம ரசனைக்கு ஒத்து வராதுன்னு.. படத்துல ஹீரோயின் கடைசி வரை பொட்டே வைக்கலை.. அவ்வ்வ்வ்வ்

படத்தோட ஓப்பனிங்க் சீனே ஒலகப்பட ரேஞ்சுக்கு.. அதாவது ஹீரோயினும் , ஹீரோவும் சந்திக்கற சீன் அன் ஃபெயித்ஃபுல் ஒயிஃப்னு ஒரு கில்மா ஹாலிவு த்ரில்லர் வந்ததே நினைவிருக்கா?  ( UN FAITHFULL WIFE) அதே படத்தை 100% உல்டா பண்ணி ஹிந்தில  மர்டர்னு எடுத்தாங்களே மல்லிகா ஷெராவத்தை ஹீரோயினா போட்டு.. அந்தப்படத்தோட  சீன்ல இருந்து சுட்டுட்டாங்க.. 

 அதாவது ஹீரோயின் கை நிறைய புக்ஸோட ரோட்ல நடந்து வர்றா.. திடீர்னு காத்து பலமா வீசுது... அந்தக்காத்துக்கு ஹீரோயின் போட்டிருக்கற தாவணி கூட அசையலை.. ஆனா கைல வெச்சிருக்கற 13 பைண்டிங்க் புக்கும் பறந்து கீழே விழுது.. ஹீரோ அப்போ எண்ட்டர் ஆகி பொறுக்கி தர்றாரு.. அட.. இவ்ளவ் அழகா பொறுக்கறானே.. இந்த மாதிரி ஒரு பொறுக்கியை  பார்த்ததே இல்லைன்னு ஹீரோயின் அதிசயமா பார்க்கறா.. 

 2 பேரும் சிரிக்கறாங்க.. பேசறாங்க.. ஃபிரண்ட்ஸ் ஆகறாங்க.. ஊர் எல்லாம் சுத்தறாங்க.. 2 பேரும் கையை பிடிச்சுக்கறாங்க.. ( கையை மட்டும் தான்)

 ஹீரோவோட பேரண்ட்ஸ்  பொண்ணு கேட்டு போனா பொண்ணு வீட்ல அவங்கம்மா மட்டும் தான்.. நோ வில்லன்.. ஆனா அந்த ஹீரோயினே எனக்கு கல்யாணம் வேண்டாம்கறா.. பயங்கர ஷாக்.. ஆடியன்ஸுக்கு இல்லை.. ஹீரோவோட பேரண்ட்சுக்கு.. இடைவேளை.. 




http://chennai365.com/wp-content/uploads/movies/Mazhaikalam/Mazhaikaalam-Stills-3434034.jpg


ஏன் அப்படி துரத்துனே? உண்மையை சொல்லுன்னு ஹீரோ 4 ரீலா விரட்றார்.. பாப்பா உண்மையை சொல்லவே இல்லை.. க்ளைமாக்ஸ்ல தான் மேட்டர் தெரியுது.. அதாவது வாழ்ந்து கெட்ட குடும்பம் ஹீரோயினுது.. நல்ல வசதியான குடும்பம்.. ஒரு விபத்துல அப்பா இறந்ததால ஏழ்மை.. வேற வழி இல்லாம ஓவியக்கல்லூரில நிர்வாணமா போஸ் குடுத்து மாடலிங்க் கேர்ளா ஹீரோயின் மாறிடறா.. 

 இந்த சப்ப மேட்டரை வெச்சு 13 ரீல் இழுக்கனுமா? அந்த சேதி கேட்டதும் ஹீரோ ஹார்ட் அட்டாக் வந்து செத்துடறார்.. ஹீரோயின் பெயிண்ட் டப்பாவுல இருக்கற பெயிண்ட்டை குடிச்சு மர் கயா .. போங்கய்யா யோவ் 

 ஹீரோ ஓக்கே.. ஆள் டீசண்ட்டா தான் இருக்கார்.. லட்சனமான முகம்.. ஹீரோயின் என்னமோ விளக்கெண்ணெய் குடிச்சுட்டு ஷூட்டிங்க் வந்த மாதிரியே ஒரு ஃபீலிங்க்.. 

 காமெடி டிராக் என்ர பெயரில் கஞ்சா கறுப்புவை வெச்சு செம மொக்கை போடறாங்க யப்பா சாமி.. 

ஹீரோவின் அண்ணியா வர்ற ஃபிகர் செம கட்டை.. அந்த ஒரே ஒரு ஆறுதல் தான் மொத்தப்படத்துக்கும்


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/03/actress-kadhal-saranya-wiki-filmography-mazhaikalam-hot-stills.jpg


டப்பா படத்துலயும்  டாப்பா இருந்த வசனங்கள்



1.  அண்ணி - தலையை  ஏண்டா இப்படி சீவி இருக்கே? தாய் இல்லாப்பிள்ளைங்க தான் இந்த மாதிரி சீவுவாங்க.. 


2.  கிரிக்கெட் மேட்ச் நடக்கறதால தியேட்டர் கலெக்‌ஷன் எல்லாம் டல் சார். 

 அடடா... திருட்டு வி சி டி பிரச்சனை பத்தாதுன்னு இப்போ இது வேறயா?


3. கஞ்சா கறுப்பு - ஹலோ மன்மத ராசா ஸ்பீக்கிங்க்... 

திருமண தகவல் நிலையத்துல இருந்து பேசறோம்.. 

 ஓ புரோக்கரா? அப்படி தெளிவா சொல்லுங்க.. 

4.  இந்த சிலை அழகாத்தானே இருக்கு? ஏன் வேனாம்கறே?

 என்னதான் அழகுன்னாலும் நிர்வாணத்தை என்னால கலையாக்கூட பார்க்க முடியல ( இந்த 3 வது ரீல் டயலாக்லயே என்ன கதைன்னு ஆடியன்சுக்கு தெரிஞ்சுடுச்சு.. சஸ்பென்ஸாம் அடங்கோ.. )

5.  என் மனசுக்கு இருக்கற ஒரே ஆறுதல்  கர்த்தர் தான்.. 

 அப்போ நான்?



http://3.bp.blogspot.com/-qoS6YunFXjk/T2_vBCQRHXI/AAAAAAAAP1s/d8Lo_OkkqQc/s1600/kadhal+saranya+Mazhaikalam+movie+hot+stills+06.jpg

6.  கிறுஸ்துவ மதத்துல இருந்தாலும் நீங்க பரத நாட்டியத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கறது ஆச்சரியம்.. 

 மதத்தோட ஏன் சம்பந்தப்படுத்தறீங்க? அது ஒரு அழகிய க;லை.. என் பொண்ணு ஆசைப்படறா..

7.  எனக்குத்தேவையானது உன் அன்பு தான். அனுதாபம் இல்லை

8.  சென்னை மேப், மெட்ராஸ் மேப் - என்ன வித்தியாசம்?

 அது தமிழ்ல இருக்கும்.. இது இங்க்லீஷ்ல இருக்கும்.. 

9.  குளத்துல குளிக்கப்போன பொண்ணு முழுகாம வந்துட்டா.. 

 ஏன்? 

 கும்ப கோணம் குளம் அது.. அர்ச்சகர் ஏதோ கச முசா பண்ணிட்டாராம்

10.  அந்த பொண்ணு வேணாம்.. அவ ஆத்தாவுக்கு 2 புருஷனாம்../


 ஆத்தாவுக்குத்தானே.. அதனால நமக்கு என்ன? நாம கட்டப்பொரது பொண்ணைத்தானே?


11.  நல்ல பொண்ணா பார்த்து உங்க பையனுக்கு மேரேஜ் பண்ணி வைங்க.. 

 அப்போ நீ நல்ல பொண்ணு இல்லையா?



http://www.cinesnacks.in/tamil-movies/actress/Kadhal-Saranya-Hot-Gallery/kadhal-saranya-stills-032.jpg

 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. டைட்டில் டிசைன் சூப்பர்.. மழைக்காலம் ல வர்ற 2 மெய்யெழுத்துக்கும் குடை வந்து குடை பிடிப்பது செம.. 

 2. படத்துல 4 பாட்டு.. எல்லாமே சுமார் ரகம்.. படமாக்கப்பட விதம் ஓக்கே . சரக்குடா ஆடுவோம், தேவதை நீதான், ஒரு வார்த்தையும் பேசாத, இதயத்தில் இது வரை இந்த 4 இல் 4 வது டாப்.. 

3. போஸ்டர் டிசைன், பேப்பர் விளம்பரங்கள், படம் தேறாதுன்னு தெரிஞ்சு ரிலீஸ் டைம்ல இந்த படத்துல கில்மா சீன் இருக்குன்னு வதந்தியை கிளப்பி விட்ட சாமார்த்தியம்





 இயக்குநரிடம் செம காண்டாய் சில கேள்விகள்


1. ஹீரோயின் நிர்வாண மாடலிங்க்காவே இருந்தால் தான்  என்ன? அது என்ன சாமி குத்தமா? அது என்னமோ பெரிய தப்பு மாதிரி எதுக்கு அந்த பில்டப்பு?

 2. ஸ்டரப்டீஸ் எனப்படும் டான்சர்கள் எல்லாம் மேரேஜ் பண்ணி வாழலையா?

3. இந்தப்படம் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

4. இவ்வளவு ஓவரா பில்டப் குடுத்துட்டு படத்துல முக்கியமான அந்த ஓவியக்காட்சில  கசமுச கட்டம் போட்டு மறைச்சுட்டீங்களே அது ஏன்? 

5. ஹீரோயின் ஒரு சீன்ல கூட சிரிக்கலையே.. அந்த அழு மூஞ்சியை பார்க்கத்தான் நாங்க 50 ரூபா செலவு பண்ணி வரனுமா?



http://moovstills.com/wp-content/uploads/2012/03/Tapsee-Latest-Hot-Stills-5-e1332711300702.jpg

படத்தின் புரொடியூசருக்கு சில கேள்விகள்

1. பல லட்சம் முதலீடு பண்றீங்களே.. என்ன கதை? இது தேறுமா? தேறாதா? அப்டினு யோசிக்க மாட்டீங்களா? 

2. இந்தப்படம் 3 நாள் ஓடுனாலே பெருசு.. என்ன பண்ணப்போறீங்க? 


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ம்ஹூம் தேறாது

 சி. பி கமெண்ட் - நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற 

 ஈரோடு சங்கீதாவுல இந்தப்படம் பார்த்தேன்.. சங்கு ஊ ஊ ஊ திட்டாங்க :((((

 டிஸ்கி - ஸ்டில்ஸ் பார்த்து ஏமாறாதீங்க.. இங்கே இருக்கற எந்த சீனும் அங்கே இல்லை.. டாப்ஸி சும்மா ஆறுதலுக்காக.. படத்துல தான் டாப்பா எதுவும் இல்லை.. டாப்சியாவது இருக்கட்டும்னு சும்மா ..

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6.4..2012 ) 8. படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.filmglitz.com/tamil/wp-content/uploads/2012/04/Mazhaikalam.jpg 

1. மழைக்காலம் - இந்தப்படத்தோட பரபரப்பே காதல் பட சரண்யா இதுல நிர்வாணமா நடிச்சதுதான்.. 


ஜனநாதனின் பேராண்மையில் அறிமுகமான சரண்யா, தற்போது ஏ.ஆர். ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் மழைக்காலம் படத்தில் நடித்துவருகிறார்.
சஞ்சய் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் இயக்குநர் தீபன். இதில் சரண்யா ஓவியக் கல்லூரி மாணவியாக வருகிறார். இதற்காக ஓவியக் கல்லூரிக்குச் சென்று அங்குள்ள மாணவ மாணவிகளை உற்றுக் கவனித்திருக்கிறார்.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் நிச்சயமாகப் பேசப்படும் என்று ஆருடம் சொல்கிறார் அம்மணி. 
http://cdn4.supergoodmovies.com/FilesFive/saranya-appears-nude-in-mazhaikalam-96d31ed7.jpg
மழைக்காலம் படம் நாயகி சரண்யா ஆபாசமாக நடித்ததை பற்றி கொலிவுட் பரபரப்பாக பேசி வருகிறது.


தமிழில் காதல், பேராண்மை படங்களுக்கு பிறகு படத்தில் நாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்க, சரியான வாய்ப்பிற்காக சரண்யா காத்திருந்தார்.


பின்பு மழைக்காலம் படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்ததும், முதலில் ஏற்க தயங்கினார் என்று படக்குழு கூறியுள்ளது.


இதுகுறித்து நாயகி சரண்யா கூறியதாவது, போராண்மை படத்திற்கு பின்பு நாயகி பாத்திரத்தில் நடிக்க, சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தேன்.


மழைக்காலம் படத்தின் கதையை கேட்டேன். இப்படத்தின் நாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது.


இந்தப்படத்தில் ஆபாசமாக நடித்து என் நடிப்பு திறமையை காட்டியுள்ளேன்.

 http://www.tamilspy.com/wp-content/uploads/2012/01/nirv.jpg
காட்சிப்படி கலைக்கல்லூரி மாணவர்கள் முன்பு நான் ஆபாசமாக தோன்றவேண்டும். இந்தக் குறிப்பிட்ட காட்சியில் 'ஸ்கின்-டோன்','பாடி-ஷுட்ஸ்' பயன்படுத்த இயக்குனர் யோசனை சொன்னார்.


ஆனால், படத்தில் இந்தக்காட்சி யதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காக நான் துணிச்சலாக ஆடைகளை துறந்து நடிக்க முடிவெடுத்தேன்.


படத்தில் இது ஆபாசமான காட்சியாக இல்லாமல் கலைநயமாக வந்துள்ளது. தணிக்கை அதிகாரிகளும் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு சங்கீதா வில் ரிலீஸ் 

 http://tamilstarmedia.com/wp-content/gallery/rakalai/06-copy.jpg
 2. ரகளை - தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் இப்படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்-தமன்னா ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பார்த்திபன், அஜ்மல் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். மற்றும் நாசர், கோட்டா சீனிவாசராவ், கீதா, பிரகதி ஆகியோருடன் இந்தி பட உலகின் பிரபல வில்லன் நடிகர்கள் ஐந்து பேரும் நடித்து இருக்கிறார்கள். 
http://www.chiranjeeviblog.com/albums/Galleries/Movies/Racha/107.jpg
.. இதுதான் தமன்னா நடித்து வரும் ஒரே தமிழ்ப் படம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் படம் என்றாலும் தெலுங்கு நடிகர் ஹீரோ என்பதால் தெலுங்குக்குதான் முதல் ம‌ரியாதை.
http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2612&option=com_joomgallery&Itemid=140

தமன்னா ரசிகர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக தெலுங்கில் அவர் நடித்தப் படமொன்று தமிழில் வெளியாகிறது.

ரட்சா என்ற அந்தப் படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடித்துள்ளார். தெ‌ரிந்த முகங்களான பார்த்திபனும், அ‌‌ஜ்மலும் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தமன்னாவின் கவர்ச்சி இருக்கிறது. யோசிக்காமல் டப்பிங் வேலையை தொடங்கியிருக்கிறார்கள். படத்துக்கு பெயர் ரகளை.

இந்த டப்பிங்க் படத்துக்கு வந்த மவுசு பாருங்க ஈர்ரோட்டில் 2 தியேட்டரில் ரிலீஸ்.. தேவி அபிராமி, ஸ்ரீகிருஷ்ணா
http://mp3scorner.com/wp-content/uploads/2009/09/Agarathi-2009-mp3s.jpg 


3. அகராதி -வர்னிகா மூவி மேக்கர்ஸ் அகராதியை தயாரிக்கிறது. க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய, இரவில் ஒரு வானவில் கதையையே அகராதி என்ற பெயரில் எடுக்கிறார்கள்.


குடும்பப் பின்னணியில் உறவுகளின் சிக்கல்களையும் அதனால் உருவாகும் எதிர்மறை விளைவுகளையும் அகராதி சினிமா ஆக்சன் கலந்து சொல்கிறது. பணத்தால் கலாச்சாரங்களை மீறி உறவுகள் சிதறிப் போவதையும் அகராதி காட்சிப்படுத்துகிறது.


webdunia photoWD
நாகா வெங்கடேஷ் இயக்குனர். பிரதீப், மோனிகா, செளந்தர்யா, அர்ச்சனா, கிரண், பவன் ராஜ்குமார், காயத்ரி ப்ரியா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சத்யன், புவனேஸ்வரி, மூமைத்கான் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சென்னை எண்ணூரில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
ஒரு பாடலுக்கு முமைத்கான் ஆடியுள்ளார்.


சந்தர் சி பாபு இசையில் வாலி, தாமரை, கவிவர்மன், அண்ணாமலை ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு பியோன். திரைக்கதை இயக்கம் காகா வெங்கடேஷ். இந்தப்படம் இன்று அல்லது ஏப்ரல் 13 ரிலீஸ்..
 http://www.filmics.com/tamil/images/stories/news/2012/March/21-03-12/titanic-movie.jpg
4. டைட்டானிக் 3டி - 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் டைட்டானிக் படத்திற்கு எந்தவித கட் கொடுக்காமல் அப்படியே ரிலீஸ் செய்ய இந்திய தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியாகி, இந்தியா உள்ளிட்ட உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சரித்தர சாதனை படைத்த படம் டைட்டானிக்.

1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பிரம்மாண்ட கப்பல் அட்லாண்டிக்கு கடலில் மூழ்கியதை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. உலகமெங்கும் வசூலில் சாதனையும், 11 ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிய டைட்டானிக் படம் இப்போது 3 டி தொழில் நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை


http://www.thegate.ca/wp-content/uploads/2009/02/kate-winslet_ar_0130.jpg

ஏப்ரல் 5ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட உலகமெங்கும் ரிலீஸ் . டைட்டானிக்கு 3டி படத்திற்கு இந்திய தணிக்கை குழு அதிகாரிகள் யு/ஏ சான்று அளித்துள்ளனர். முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு டைட்டானிக் படம் இந்தியாவில் ரிலீஸ் ஆன போது, அதில் கேத் வின்ஸ்லெட்டின் நிர்வாண ஓவியம் மற்றும் டிகாப்ரியோ-கேத் வின்ஸ்லெட் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளிட்ட சில காட்சிகளை கட் செய்தனர் தணிக்கை குழுவினர். ஆனால் இம்முறை அந்த காட்சிகள் எதுவும் கட் செய்யப்படவில்லை. அப்படியே ரிலீஸ் செய்ய தணிக்கை குழு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.


டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 100ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டைட்டானிக் 3டி படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_94994318486.jpg

5. அஸ்தமனம்  - கிஷோரை ஹீரோவாக்கி போர்க்களம் என்றொரு படம் வெளிவந்தது நினைவிருக்கிறதா? பண்டி சரோ‌ஜ்குமார் இயக்கியது. படம் முழுக்க ஸ்லோமோஷனில் எடுக்கப்பட்ட ப‌ரிசோதனை முயற்சிப் படம்?

பலரை திரும்பிப் பார்க்க வைத்த அந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்கியிருக்கும் படம்தான் அஸ்தமனம். டார்க் ஃப்ளேவ‌ரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஸ்டில்களும் எதிர்பார்ப்பை தூண்டுவதாகவே உள்ளது. சென்சார் இதற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
வரும் 6ஆம் தேதி அஸ்தமனம் திரைக்கு வருகிறது. நல்லதொரு அனுபவத்துக்கு தனது படம் உத்தரவாதம் என்கிறார் பண்டிட் சரோ‌ஜ்குமார்.ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்
 http://wallpaperpassion.com/upload_big_thumb/15586/housefull-2-hq-wallpaper.jpg
 
6. HOUSEFULL -2  - ஹிந்தில மட்டும் இல்லை , எந்த மொழிலயும் ஒரு படம் ஹிட் ஆகிட்டா அதனோட 2 வது பாகம் எடுக்காம விட மாட்டாங்க.  Akshay Kumar, John Abraham, Ritesh Deshmukh, Asin, Jacqueline Fernandez, Zarine Khan, Shazahn Padamsee, Boman Irani, Rishi Kapoor, Mithun Chakraborty, Johnny Lever, Chunky Pandey, Shreyas Talpade அப்டின்னு பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடிச்சிருக்கு...ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்.. 
 
 http://cini.in/wp-content/uploads/2012/04/Nandu-Baski.jpg
 
 
7. நண்டு பாஸ்கி -  அய்யனார் கிரியேஷன்ஸ் சார்பில் பி.செல்வகுமார் தயாரித்து, இயக்கும் படம், �நண்டு பாஸ்கி�. புதுமுகங்கள் ஜெகன், புருஷோத்தமன், விக்கி, பிரபாத், சத்யா ஹீரோக்கள். ரித்து, துர்கா, ஜோஷிதா ஹீரோயின்கள். முக்கிய வேடங்களில் ஆண்டனி, துளசிங்கம் உட்பட பலர் நடிக்கின்றனர். 
 
ஒளிப்பதிவு, ஜெயச்சந்திரன். இசை&பாடல்கள்: ஜெயம் செந்தில். படம் பற்றி செல்வகுமார் கூறுகையில்,
 
 
 �நண்பன் நினைத்தால், ஒருவனை உயர்த்த முடியும். காப்பாற்ற முடியும். அதேநேரம், அழிக்கவும் முடியும். உயரிய நட்புக்கு துரோகம் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இதில் சொல்கிறோம்� என்றார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglBkGBj6wKUGnCTKvwwGYWX3bp4lCJHISRi92coc-Bvud4XuwgSAb5h9otV5uIWIg1KzkTwWSZdR8hbyIjl7T84pC7E4HY3vRuwqMqrwKMXHqpS2VdLF-_LIzp_oYv4twr9nEYK44o7OY/s1600/01.jpg
 
8.  ரதி நிர்வேதம் -மலையாளத்தில் வெ:ளிவந்த ரதிநிர்வேதம் கில்மா படங்களீன் முன்னோடி.. பல வருடங்களுக்குப்பின் ரீமேக் ஆகி போன வருஷம் மறுபடி எடுத்தாங்க.. இப்போ தமிழ்ல டப் பண்ணி இருக்காங்க ..ஈரோடு அன்னபூரணியில் ரிலீஸ்
 

ரதிநிர்வேதம் -கேரளத்துக்கவிதை @கில்மா மொழி - சினிமா விமர்சனம்   http://www.adrasaka.com/2011/07/blog-post_6567.html

 
 

கொஞ்சி கொஞ்சிப்பேசி மதி மயக்கும்..,- சிறுகதை

                                                     
வெள்ளிக்கிழமை....,

ஹேய் கிஷோர், என்னப்பா நீ இன்னிக்கு நம்ம கல்யாண நாள் , நான் இங்க நம்ம வீட்டுல ரொம்ப நேரமா தனியா உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன் நீ என்னடான்னா ஆடி அசைஞ்சு வர்ற? என்னைப்பார்த்தா உனக்கு பாவமா தெரியலியாடா?

ம்ஹ்ஹும் ''உன்னைப்பார்த்தா எனக்கு பேரழகியாத்தான் தெரியுது, பாவமா தெரியலியேடி...,


--....................................... 
சனிக்கிழமை....,

 ஹைய்யோ உனக்கு வெட்கப்படவெல்லாம்கூட தெரியுமாடி?

 நீ எனக்கு எவ்ளோ ஐஸ் வச்சாலும் இன்னிக்கு உனக்கு தரவேண்டிய வழக்கமான லஞ்சம் கிடையவே கிடையாது. போடா, ஐ ஹேட் யூ 


என்றவாறே விறு விறுவென்று சமையலறை நோக்கி நடக்க ஆரம்பித்த ஜமுனாவை  பின் தொடர்ந்தபடியே போன கிஷோர்...,



 ''ஓஹ் பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ஓஹ் பியூட்டியின்னா பியூட்டிதான் பின்னழகை காட்டி சின்ன பையனைத்தான் வாட்டி செல்லும் மஞ்சள் நிலா என்னைக்கொல்லாதே'' 

 என்ற இதயம் திரைப்படத்தில் வரும் பாடலை பாடவும் எவ்வளவு வேகமாக நடந்தாளோ அவ்வளவு வேகத்தில் திரும்ப வந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.



 இந்த சின்ன சந்தோஷத்திற்க்கு பாட்டெல்லாம் படிக்க வச்சுட்டியே செல்லம் என்று கமல் ஸ்டைல்லில் கிஷோர்  சொல்ல, 


அதுக்கு பரிசா இந்தா வச்சுக்கோ வழக்கமா தர்ற லஞ்சம்தான் ஆனா இது கொஞ்சம் ஃப்ரஞ்ச் மெத்தட் என்று ஜமுனா சொல்லவும்



 ஓஹ் ''ஆனா இது கையூட்டு கிடையாது வாயூட்டு'' ஹ ஹ ஹா என்று சிரிக்க ஆரம்பித்தான் கிஷோர் அதிகப்படியாக வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள் ஜமுனா..!!!!


>>>>>>>>>>>>


ஞாயிற்றுக்கிழமை..., 


ஹாலில் உட்கார்ந்திருந்த கிஷோர்...,

ஹேய் ஜம் இன்னிக்கு ஜம்ம்னு இருக்க என்னடி விசேஷம் என்றான் 

ஒண்ணுமில்லடா  என்றவளிடம் 


இங்க பாரு நான் உன்னோட பெயரை சுருக்கி எவ்ளோ அழகா ஜம் ஜம்ன்னு கூப்பிடறேன் நீ என்னோட பெயரை செல்லமா சுருக்கி கூப்பிட மாட்டியா? 

ஓஹ் அப்படியா? சரி கூப்பிடறேன் கிஷ் என்று கூப்பிட்டு முடிந்ததும் நாக்கை கடித்துக்கொண்டு

 அய்யய்யோ நீ ப்ளான் பண்ணித்தான் என்னை அப்படி கூப்பிடச்சொன்ன இல்ல நான் கூப்பிட மாட்டேன்ப்பா இப்போவே உன் இம்சை தாங்கலை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா எத்தனை தடவை கூப்பிட்டேனோ அத்தனை கிஷ் கொடுத்து என்னை ஒரு வழி பண்ணிடுவ ஆள விடு சாமி



 என்று ஜமுனா ஓடி ஒளிய


 சரி சரி இப்போ இரண்டு தடவை கூப்பிட்டதுக்கு என்ன பண்றது என்று கிஷோர் கிண்டல் பண்ணியபடியே அவளை நோக்கி சென்று அந்த இரண்டு கிஸ்ஸையும் பெற்றுக்கொண்டான்..! 


>>>>>>>>

திங்கட்கிழமை....,

ஒரு விளையாட்டு இருக்குஅதில் நான் ஜெயித்தால் நான் சொல்லுவதெல்லாம் நீ கேட்க வேண்டும் நீ ஜெயித்தால் நீ சொல்வதெல்லாம் நான் கேட்பேன் 
என்று கிஷோர் ஜமுனாவிடம் சொல்லவும்...,

 என்ன விளையாட்டுடா?! என்று ஆர்வமாக கேட்டவளிடம்

 ''உனக்கு பிடிச்ச Munch சாக்லேட் இருக்கு இல்லியா அதை அப்படியே முழுசா வாய்ல இருந்து வெளிய எடுக்காம கைகளால் தொடாம கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு முடிக்கணும் ரெடியா?'' என்றான்.

 சரி என்றவளிடம்...,

 லேடீஸ் ஃபர்ஸ்ட்

 என்றபடி ஒரு சாக்லேட் எடுத்து கொடுத்தான் வாயில் சாக்லேட் வைத்து சாப்பிட ஆரம்பித்தவள் ஒரு லெவலுக்கு மேல் சாப்பிட இயலாமல் முழித்தவளிடம் 


கேன் ஐ ஹெல்ப் ?


என்றான் .ம்ம்ம் என்ற சத்தம் மட்டும் வந்தது சாக்லேட்டின் மறுமுனையை கிஷோர் சாப்பிட ஆரம்பிக்க சாக்லேட் தீர ஆரம்பித்திருந்தது இருவரின் உதடுகளும் இணையும் வேளையில் அவர்கள் முத்த சாக்லேட் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்..! 


>>>>>


செவ்வாய் கிழ்மை....,

அழகான முன்னிரவு வேளயில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த ஜமுனாவின் அருகில் அமர்ந்து அவளின் முகத்தில் விழுந்திருந்த தலை முடியை ஒதுக்கிவிட்டபடி இருந்தான் கிஷோர் ஜமுனாவோ விசும்பியபடியே இருந்தாள் ,

 அறையில் ''இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ'' பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது பாடலின் இடையில் ''மானிடப்பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பதே சிறப்பு'' என்ற வரியோடு தானும் பாடினான் கிஷோர்

 அதெப்படி முடியும் என்று சிணுங்கலாய் கேட்டவளிடம் போர்வையை விலக்கி உன் கால்களைப்பார் என்றான் அவளின் இரண்டு கால்களின் பெருவிரல் நகங்களிலும் அவனுடைய சின்ன ஸ்டாம்ப் சைஸ் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டியிருந்தான்

 அதைப்பார்த்து ஹைய்யைய்யோ என்றபடியே ஏன் இது மாதிரிலாம் பண்ற கிஷோர் ப்போ எனக்கு வெட்கமா இருக்கு என்றபடி அவன் கன்னங்களில் செல்ல முத்தமிட்டு தோள்களில் சாய்ந்து கொண்டாள்..!

>>>>>>


புதன் கிழமை...,

கிஷோர் ஜமுனா இருவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து அலை பாயுதேவில் வரும் சிநேகிதனே சிநேகிதனே பாடல் பார்த்துக்கொண்டிருந்தனர் அதில் ஷாலினி பாடும் பாடல் வரிகளை அவளிடம் சொல்லி விளக்கிக்கொண்டிருந்தவன் ''உப்பு மூட்டை சுமப்பேன்'' என்ற வரிகளை சொன்னதும் சிரிக்க ஆரம்பித்தாள் ஜமுனா என்னால முடியாதுப்பா நீ என்னை விட 30 கிலோ ஜாஸ்தி என்றாள், நீ சுமக்காட்டின்னா என்ன நான் உன்னை உப்பு மூட்டை சுமப்பேனே என்றான்


 பதிலுக்கு வீ வில் ட்ரை என்றான் ஜமுனாவைப்பார்த்து ம்ஹ்ஹும் மாட்டேன்ப்பா நீ தூக்கி கீழ டொம்முன்னு போட்டாலும் போட்ருவ, இல்லம்மா அப்டிலாம் பண்ண மாட்டேன் என்றவனின் ஆசைக்கு கட்டுப்பட்டவளை உப்பு மூட்டை சுமந்து நேராக பெட்ரூம் சென்றவன் டொம்மென்று பெட்டில் விட்டான் .

செல்ஃபில் இருந்த ஆலிவ் ஆயிலை எடுத்தவனிடம் எதுக்கு இப்போ அது என்றாள், ''ஐவிரலிடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவகம் செய்ய வேண்டும்'' என்று பாட ஆரம்பித்திருந்தான்

 அவள் ஹைய்யைய்யோ என்றபடி அவனிடமிருந்து விலகி ஓடி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தாள்...


>>>>>>



       என் வயிற்றில் ஆடும் தாமரை கையசைக்க  காலசைக்க காத்து வளர்ப்பேன் ன்னு என் ராசாவின் மனசுல வரும் பாடலை ஹம் செய்தவாறே...,  பிள்ளை சுமக்க போகும் வயிற்றை தடவியவாறே, நாட்டைக்காக்க எல்லைக்கு செல்லும்  கிஷோருக்கு கையசைத்தவாறு அவன் வருகைக்காக்காக நாட்களை எண்ணி காத்திருக்க தொடங்கினாள்.