Tuesday, March 06, 2012

சுஜாதாவின் வசனம் எழுதும் ஸ்டைல் - ஷங்கர் சிலாகிப்பு பேட்டி

http://www.extramirchi.com/wp-content/uploads/2010/01/Shankar-Rajini-and-Aishwarya-Rai-at-endhiran-the-robot-on-location.jpg

1.  ''எழுத்தாளர் சுஜாதாவுடன் நீங்கள் படத்துக்கு வசனம் அமைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன். சில சிரமமான சீன்களுக்கு சுஜாதா சார் பளிச் என்று நச் வசனம் பிடித்த உதாரணம் ஏதேனும்? அப்படி சுஜாதா சார் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''

சி.பி - சுஜாதாவின் நாவல்களில் பஞ்ச் கொடுக்கும் ஹீரோயிசம் செமயா இருக்கும்.. வரலாற்று பின்னணியில்  குமுதத்தில் தொடராக வந்த ரத்தம் ஒரே நிறம் நாவலில் கூட அப்படிப்பட்ட பஞ்ச் ஏகத்துக்கும் இருக்கும்..

 ''நாங்க வெளியூருக்கு கதை டிஸ்கஷன் போறதுக்கு முன்னாடி, 'கதை ஃபுல் லைன் ரெடியா இருக்கா, சுபம் போடற வரைக்கும்?’னு கேட்டுக்குவார். டிஸ்கஷன் ஆரம்பிச்சதும் அவர் அமைதியாக் கவனிப்பார். எந்த வசனமோ, கதையோ, காட்சிகளோ, சொல்ல மாட்டார். கதைப் போக்குல, காட்சிகள்ல ஏதாவது சிக்கல் வந்து முக்கி நிக்கிறப்போ மட்டும், எதனால சிக்கல்னு தெளிவுபடுத்தி, 'இந்த ரூட்ல யோசிங்கம்பார். அப்பப்போ சில படங்களையும் சில காட்சிகளையும் ரெஃபரன்ஸுக்கு சுட்டிக்காட்டுவார்.

தீர்க்க முடியாத பிரச்னை ஏதும் வந்தா, மறுநாள் 'Syd Field, Robert Mckee, இவங்க எல்லாம் ஸ்க்ரீன் ரைட்டிங்ல இந்தந்தப் பிரச்னை வந்தா, இந்தந்த சொல்யூஷன் சொல்லியிருக்காங்க. இதை ஃபாலோ பண்ணுங்கம்பார். டிஸ்கஷன் எங்கேயும் தேங்கித் தடை இல்லாம வேகமாப் போறதுக்கு வழிகாட்டுவார். டிஸ்கஷன் முடிஞ்சதும் சீன் ஒண்ணுல இருந்து சுபம் வரைக்கும் என்னை கேசட்ல விவரிக்கச் சொல்லி வாங்கிட்டுப் போயிடுவார்.
ஒரே வாரத்துல ஃபர்ஸ்ட் ஹாஃப் வசனம் வந்துடும். அடுத்த வாரத்துல செகண்ட் ஹாஃப் வந்துடும். செம ஃபாஸ்ட். டிஸ்கஷன்ல உள்வாங்கின அத்தனை விஷயங்களையும் தான் நினச்சதையும் சேர்த்து நிறையவே எழுதி விளாசிப் பின்னித் தள்ளியிருப்பார். சுஜாதா சார், படிச்சுக் காமிக்கும்போது அவரோட ஒன் லைனர்களை எல்லாம் கை தட்டி ரசிப்பேன். அவர் எழுதினதுல இருந்து என்னென்ன எந்த அளவுக்குத் தேவையோ எடுத்து, எனக்கு எப்படி வேணுமோ அப்படி ஒரு டிராஃப்ட் எழுதி திருப்பி அவர்கிட்ட அனுப்புவேன். அதுல அவர் ஒண்ணு ரெண்டு எக்ஸ்ட்ராவா இருக்கிற வார்த்தைகளை அடிப்பார். அசிஸ்டென்ட் டைப் பண்ணப்ப விட்டுட்ட க், ச், ஞ், சின்ன '’, பெரிய 'பிழைகளைச் சரிபண்ணி அனுப்புவார். இதான் எங்க வொர்க்கிங் ஸ்டைல்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcLqpbDprP2xq0KA8Z5aEOErP1Te8bASJprQCoaGHxgAcL60zrLuIqYk31X1X9viE0IHt9ev3Q8LTpF5WWUVH-_3ITkRV3SeC6L9mszMZ2fQMBMnz8UewyaklmztdMIeVJPbKAKoJCUNcJ/s320/sujatha_OEA_family_3.jpg
'இந்தியன் சந்துரு (கமல்): 'இந்த உலகத்துல இருக்கற எல்லா வழியும் குறுக்கு வழியா மாறிடுச்சு... இது எங்க அப்பாவுக்குப் புரியல!’
'முதல்வன்க்ளைமாக்ஸ்ல ரகுவரன்: இறக்கும்போது சொல்ற, 'That was a good interview...’
'அந்நியன்: 'தப்பு என்ன பனியன் சைஸா? ஸ்மால், மீடியம், லார்ஜ்னு... விளைவுகளோட சைஸைப் பாருங்க... எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்!’
'சிவாஜி ரஜினி சார்: (ஒரு ரூபாயைச் சுண்டி இறந்துகிடக்கும் சுமனின் நெத்தியில் அடித்து) 'இதைக்கூட நீ எடுத்துட்டுப் போக முடியாது...’
'எந்திரன் சிட்டி: 'என்னைப் படைச்சவர் டாக்டர் வசீகரன்... கடவுள் இருக்கார்...’
- இப்படிப் பல சிரமமான காட்சிகள்ல வர்ற விஷயங்களை ஒரே வரில நச்சுனு சொல்றதுல சுஜாதா சார், சுஜாதா சார்தான்!
அவர் எழுதினதுல எனக்குப் பிடிச்சது 'இந்தியன்தாத்தா பேசற, 'மத்த நாடுகள்ல எல்லாம் லஞ்சம் இருக்கு... அங்க எல்லாம் கடமையை மீறுறதுக்குத்தான் லஞ்சம்... இங்கதான் கடமையைச் செய்றதுக்கே லஞ்சம்கிற வசனம்தான்.
மொத்தப் படத்தோட விஷயமும் வீரியமும் இந்த ஒரே வரியில எவ்வளவு அழகா வந்திருக்கு பாருங்க!''


சி.பி - சுஜாதாவின் இழப்பு இலக்கிய உலகுக்கு மட்டும் அல்ல, சினிமா உலகத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.. அவர் இருந்திருந்தா  இன்னும் பல சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரியும், பல நல்ல சினிமாக்களும் வந்திருக்கும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2uKhlyy1iX7zWgP1XSaf2wO__XiY7Sv10AvW7xxTXY2jAr6JvaBt9jbR5XLtUkqCClIyz76Vf_nWi2EyGGiOp-ni52RcmFCObZBwbLaAT3CU0g7hzbEM5lWDMguNMkKr7QuqcS_nOKv8/s320/rajini_kamal_05.jpg
2. ''ஒரே படத்தில் கமலையும் ரஜினியை யும் சேர்த்து இயக்கும் எண்ணம் உண்டா?''

சி.பி - அவருக்கு எண்ணம் ஆசை எல்லாம் இருக்கு.. கமல் ரஜினி கூட ஓக்கே சொல்லிடலாம், ஆனா தியேட்டர்ல ரசிகர்கள் நிலைமை? கண்டிப்பா கலவரம் தான் வரும்.. 

 '' 'சிவாஜிரிலீஸுக்கு அப்புறம் ரஜினி சாரே, 'நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படி இருக்கும்? நான் வேணா கமல்கிட்ட பேசுறேன்னு சொன்னார். 'ரெண்டு பேரும் சேரும்போது வர்ற பெரிய எதிர்பார்ப்பைத் திருப்திப்படுத்துற அளவுக்கும் ரெண்டு பேரும் கன்வின்ஸ் ஆகிற அளவுக்கு சப்ஜெக்ட்டும் அமைஞ்சா பண்ணலாம்னு நான் சொன்னேன். 'எந்திரன் பார்ட் 2’ கதையைக்கூட ரெண்டு பேரையும்வெச்சு சில சமயம் நான் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேன்!
பார்ப்போம்... நாளை நமக்கு என்னவெச்சிருக்குனு யாருக்குத் தெரியும்!''


சி.பி - இதுல என்ன கவனிக்க வேண்டியதுன்னா கமலை ஹீரோவா போட்டு ரஜினியை வில்லனா போட்டாக்கூட ரஜினிதான் ஈசியா பேர் சம்பாதிக்கற மாதிரி அசால்ட்டா ஸ்டைலிஸ் ஆக்டிங்க் கொடுத்து அப்ளாஸ் அள்ளுவார்..
3. ''நீங்கள் நன்றாகக் கவிதை எழுது வீர்களாமே? எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க, ப்ளீஸ்...''
 ''அப்படியா... யார் சொன்னா..?!

- இது கவிதையானு பாருங்க!''

சி.பி - இதை எங்க ஊர்ல மொக்கைம்போம்..

4. ''சினிமாவில் ஓர் இடம் தேடித் தவித்த ஐஸ்வர்யா ராயையும் இயக்கி இருக்கிறீர் கள்... இந்தியாவின் அடையாளமாக உருவெடுத்த 'மோஸ்ட் வான்டட் அழகிஐஸ்வர்யா ராய் பச்சனையும் இயக்கி இருக்கிறீர்கள். இரு காலகட்டத்திலும் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?''


சி.பி - கேள்வி சுத்தி வளைச்சு என்ன கேட்க வருதுன்னா மேரேஜ்க்கு முன்னால மேரேஜ் ஆன பிற்பாடு ஃபிகர்ட்ட என்ன மாற்றம்கறதை கொஞ்சம் நாகரீகமா, சுத்தி வளைச்சு கேக்குது.. 

 
 '' 'ஜீன்ஸ்அவங்களுக்குக் கிட்டத்தட்ட முதல் படம்தான். முதல் நாள் பாடல் ஷூட்டிங்லயே டான்ஸ் ரொம்பப் பிரமாதமா ஆடினாங்க. சீன்ஸ் எடுக்கும்போது எல்லா வசனங்களையும் முதல் நாளே வாங்கிட்டுப் போய்ப் படிச்சிட்டு வருவாங்க. கஷ்டமான காட்சிகள்ல, நடிச்சுக் காட்டச்சொல்லி அதை அப்படியே ஃபாலோ பண்ணுவாங்க. சில நாள் லேட்டா வரும்போது கோபமா 'ஏன் லேட்டுனு கேட்டா, 'உடம்பு சரியில்ல... காஸ்ட்யூம் சரியில்லனு சொல்வாங்க. 104 டிகிரி ஜுரம் அடிச்சுத் துவண்டு படுத்திருப்பாங்க. 'ஷாட் ரெடின்னா, அதை வெளிக்காட்டிக்காம உடனே கேமரா முன்னாடி அற்புதமா வொர்க் பண்ணிட்டு, 'கட்சொன்னதும் பொத்துனு போய் பெட்ல விழுந்துடுவாங்க.
உலக அதிசயங்கள்ல பாட்டு எடுத்துக்கிட்டு இருக்கோம். ஒரு நாட்டுல ஷூட் முடிச்சு, சாயங்காலம் ஃப்ளைட் பிடிச்சு இன்னொரு நாட்டுக்குப் போகணும். மிஸ் ஆனா மறுநாள் மொத்த ஷூட்டிங்கும் காலி. மொத்த யூனிட்டும் ஏர்போர்ட் போய், எல்லாரோட லக்கேஜ், எக்யூப்மென்ட்ஸ்லாம் கொண்டுவந்து சேர்த்து, கஸ்டம்ஸ், இமிக்ரேஷன்னு புரொடக்ஷன் ஆளுங்க ஒரு பக்கம் குழம்பி அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போ, ஐஸ்வர்யா ராய் சட்டுனு எல்லாரோட பாஸ்போர்ட், டிக்கெட்லாம் வாங்கிட்டுப்போய் பத்தே நிமிஷத்துல செக் இன், போர்டிங் பாஸ், லக்கேஜ்னு எல்லாத்தையும் ஒரே ஆளா முடிச்சிட்டு வந்து நின்னாங்க. இப்ப நினைச்சுப்பார்த்தாலும், எப்படி ஒரே ஆளா அதெல்லாம் முடிச்சாங்கனு ஆச்சர்யமா இருக்கு!

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன்ல கடைசி நாள் ஷூட்டிங். கடைசி ஷாட் முடிஞ்சதும் என் காலைத் தொட்டு, 'என்னை பிளெஸ் பண்ணுங்கன்னாங்க. 'அய்யோனு நான் அலறி, எகிறி, 'மூணு படம்தான் பண்ணியிருக்கேன்னேன். 'நோ... யூ ஆர் மை டீச்சர்ன்னாங்க.
இன்னைக்கும் அதேதான். 'ஹி இஸ் மை டீச்சர்னுதான் பேட்டிகள்லயும் மேடைகள்ல யும் சொல்றாங்க. ஒரு சீனியரா ரஜினி சார் கிட்ட அவங்க காட்டுற மரியாதை, அவர் கிட்ட இருந்து எடுத்துக்கிற பிளெஸ்ஸிங்ஸ், மச்சுபிச்சுல உடல் முழுக்க சிவப்புச் சிவப்பா, தடிக்கத் தடிக்கப் பூச்சி கடிச்சும், அதை எல்லார்கிட்டயும் காட்டி சீன் போடாம, க்ரீம் போட்டு மூடி நடிச்ச டெடிகேஷன்... இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.
என் திருமண நாள் அன்னைக்கு, என் வீட்டுக்கு ரஜினி சார், ஐஸ்வர்யா ராய், சாபுசிரில், ரத்னவேல், எல்லாரும் வந்திருந்தாங்க. ஒரே அரட்டையும் சிரிப்புமா இருந்தது. சாப்பிட எல்லாரும் தயங்கிட்டு இருந்தப்போ சட்டுனு எழுந்த ஐஸ்வர்யா ராய், குழம்புல கரண்டியைப் போட்டு எல்லாருக்கும் பரிமாற ஆரம்பிச்சுட்டாங்க. சாபுவுக்கு ஆச்சர்யத்தில் பேச்சே வரலை.
ஒரு குடும்பப் பெண்ணா, இந்தியப் பெண்ணா, நடிகையா, உலக அழகியா, எல்லா வகையிலும் முழுமையானவர் ஐஸ்வர்யா ராய். அன்றும் இன்றும் மேலும் பண்பட்டவராக!''


சி.பி - ஷங்கர் உருகறதை பார்த்தா இன்னம் கூட ஒரு படத்துல  அவரை யூச் பண்ற ஐடியா இருக்கும் போல ( ஹீரோயினா நடிக்கவைக்க யூஸ் பண்ற ஐடியாப்ப்பா)

5. ''நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகம்.... ரசித்த சினிமா..?''
 ''லா..ரா. எழுதிய 'அபிதா’.
The Battle of Algiers.''
http://www.behindwoods.com/hindi-tamil-galleries/prabhu-daughter-wedding/Prabhu-07.jpg

6. ''.ஆர்.ரஹ்மானுடனான சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
''.ஆர்.ரஹ்மான்... நான் சந்தித்தவர்களிலேயே மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி.
என் மகன் அர்ஜித் பிறந்ததுல இருந்து தொடர்ந்து விரல் உடையறது, தாடை உடையறது, உடல்நிலை சரியில்லாமப் போறதுனு என்னென்ன துயரங்கள் உண்டோ... எல்லாத்தையும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தான். வாரம் ஒரு தடவையாவது டாக்டர்கிட்ட எதுக்காகவாவது அவனை அழைச்சிக்கிட்டுப் போக வேண்டியிருந்தது. ஆறு வயசுலயே எல்லா டாக்டர் களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப்படி.
இதைக் கேள்விப்பட்ட ரஹ்மான், 'ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ... பையனை அழைச்சுக்கிட்டு மவுன்ட் ரோடு தர்ஹாவுக்கு வரச் சொல்லுங்கனு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சொல்லியிருக்கார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன். பார்த்தா, ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹா வுக்கு வந்திருந்தார். என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரே பண்ணாங்க. மந்திரிச்சுக் கயிறு எல்லாம் கட்டினாங்க.
எவ்வளவு பிஸியானவர்? எவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபி மானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழவெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.
நம்ப மாட்டீங்க... ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். 'எப்படி இது சாத்தியம்னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!''


சி.பி - ஹா ஹா அதெல்லாம் ஓக்கே , அந்நியன் படத்துல ஹாரீஸ் ஜெயராஜை மியூசிக் போடச்சொன்னப்போ குமுதத்துல வந்த பேட்டில  என்ன சொன்னீங்க? என்பதை ரீ வைண்ட் செய்யவும் ஹி ஹி  


http://tamilwire.com/images/2008/07/rajini-kamal.jpg

நடிகை அல்போன்சாதான் கொலையாளியா? மர்ம முடிச்சுகள்-காதலன் கொலை வழக்கு விபரங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMm9y2oZ_COBqX8nhzWB5rovM5KzVzlwKtWs4JbYKT2OJif04Z_zwtJggdakhlNn1ZWku3PGAtgkifWVfRVDKO9vJ_wfKGm1Lhs_evSp4Rx5lej-hA5QR8n8Zy9YzAGLaRTInihEV93sQ/s1600/alfonsa2.jpgஎனது காதல் நிஜமானது. வினோத் குமார் எடுத்த முடிவு எதிர்பாராதது. சாவதற்கு முன்பு என்னை விதம் விதமாக ஆடைகள் கட்டி வரச் சொல்லி எனது அழகை ரசித்தார். நான் கடைசியாக சேலையில் அவர் முன்பு வந்து நின்றபோது அதையும் ரசித்தார். பிறகுதான் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை அல்போன்சா கூறியுள்ளார்.


சி.பி - அடப்பாவமே! என்னா அழகு..!! சாவடிக்கறாடா! அப்டின்னு சொல்வாங்களே.. அது இதுதானா?


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. பாட்ஷா, பஞ்சதந்திரம், ஸ்ரீ உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரது தம்பிதான் நடன மாஸ்டர் ராபர்ட்.

இவருக்கு ஏற்கனவே துபாயைச் சேர்ந்த ஒருவருடன் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருப்பினும் தற்போது கணவரைப் பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் அல்போன்சா.

சி.பி - வீ வாண்ட் மோர் டீட்டெயில்ஸ்..  அவர் இவரை பிரிஞ்சாரா? இவர் அவரை பிரிஞ்சாரா?


இவரது தம்பி ராபர்ட் மூலம் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் பழக்கமானார். 

சி.பி - பேக்கரியை நீ பார்த்துக்கோ, அக்காவை நான் பார்த்துக்கறேன்னு  வினோத் சொல்லிட்டார் போல.. 



 நடனம் கற்க வந்த வினோத்குமார், அல்போன்சாவுடன் காதலில் விழுந்தார். இருவரும் ஆரம்பத்தில் நட்புடன் பழகி பின்னர் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அளவுக்கு தீவிரக் காதலில் விழுந்து விட்டனர். கடந்த ஒரு வருடமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனராம்.


சி.பி - டான்ஸ் பழகறேன்னு உடான்ஸ் விட்டு ஃபிகரை கரெக்ட் பண்ணி இருக்கார்.. ஓக்கே, ஒண்ணும் தப்பில்லை,. எல்லாரும் பண்றதுதான்


இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கிய நிலையில் அல்போன்சா வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் வினோத்குமார். இது தற்கொலை என அல்போன்சா கூறுகிறார். ஆனால் வினோத்குமாரின் குடும்பத்தினர் இது கொலை, அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் சேர்ந்து வினோத்குமாரை அடித்துக் கொலை செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதை சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சி.பி - எனக்கும் இது கொலைன்னுதான் தோணுது.. பொதுவா ஆம்பளைங்க , அதுவும் வினோத் மாதிரி ஆளுங்க தற்கொலை செய்யற மாதிரி இருந்தா மதுவுல விஷம் கலந்து தான் குடிப்பாங்க.. பொண்ணுங்கதான் சேலை தலைப்புல் தூக்கு போட்டுக்குவாங்க.. அதுவும் இல்லாம தூக்கு போட்டு சாகறது என்பது தனிமையில் , துக்கத்தில், விரக்தியில் இருக்கும்போது எடுக்கப்படும் முடிவு.. யாரும் வீட்ல பலரை வெச்சுக்கிட்டு தூக்கு போட்டுக்க மாட்டாங்க.. லெட்டர் எதும் எழுதி வைக்கலை 


வினோத்குமாரின் தந்தை பெயர் பாண்டியன். இவர் திருக்கழுக்குன்றம் நகர எம்ஜிஆர் பேரவை செயலாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், காதலர் மரணம் குறித்து அல்போன்சா போலீஸாரிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நானும், வினோத்குமாரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். எனது சகோதரர் ராபர்ட்ராஜ், வினோத்குமாருக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வினோத் வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் முதலில் காதலை சொன்னார்.

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்ததால், முதலில் அவரது காதலை ஏற்க தயங்கினேன். எனது வீட்டில் இந்த காதலை ஆதரித்தார்கள். முதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு ஒருவருட காலம் பிரிந்து வாழவேண்டும் என்று எனது வக்கீல் சொன்னார். இதனால் எனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து ஒரு வருடத்துக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வினோத் விரும்பினார். என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டார். துபாய்க்கு நடன நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என்று சொன்னார். திருமணத்துக்குப்பிறகு அதை ஏற்றுக்கொள்வதாக நான் சொன்னேன்.

தற்கொலை செய்வதற்கு முன்பு இரவு 8 மணி அளவில் வினோத் அவரது தாயாருடன் காரசாரமாக செல்போனில் பேசி சண்டை போட்டார். பின்னர் போனை வைத்துவிட்டு, எனது வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் என்று கோபமாக சொன்னார். அவரது கோபத்தை தணிக்க நான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றேன். உங்கள் விருப்பப்படி நடக்கிறேன். தயவு செய்து கோபத்தை விடுங்கள் என்றேன்.

சி.பி - இந்த சீன்ல என்ன நடந்திருக்கும்னா வினோத் அம்மா பேச்சை கேட்டுட்டு அல்போன்சாவை கழட்டி விடலாம்னு பிளான் போட்டிருப்பார்.. அம்மா கிட்டே ஓக்கே சொல்லி இருப்பார்.. உடனே அல்போன்சா சண்டைக்கு வந்திருப்பார்.. வாக்குவாதம் முற்றி இருக்கும்.. அவங்க வினோத்தை போட்டுத்தள்ளி இருப்பாங்க

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihzAmy9UK_kG1-2D13nGAQNwJOI-8UIatXaMn-e7jfsaRSbq2dnFeKktuT8V3F8tJQ4qe0pwBTKzt2inf1Lm6OAZEtqcAzKAoLKWZiTvH9eUrNgOHvkLEMJzGZjMk1vZd0XyVNA4_uQ4A/s1600/thirupachi-aruva.jpg


என்னை வித விதமான ஆடை அணிந்து அழகு காட்டும்படி ஆசையாக கேட்டார். நானும் அதன்படி நடந்தேன். கடைசியாக சேலை கட்டி வரும்படி கூறினார். நானும் சேலை கட்டி வந்தேன். எனது அழகை ரசித்தார். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.

சி.பி - போறதுக்கு முன்னால கடைசி ஆசையை பாப்பா நிறைவேத்தி இருக்காங்க.. 


பின்னர் சிகரெட் குடிக்க பாத்ரூம் சென்றார். நான் சேலையை கழற்றிவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு, வேறு உடை அணிய முயற்சித்தேன். பாத்ரூம் சென்ற அவரை நீண்ட நேரம் காணாததால், துண்டோடு படுக்கை அறையைவிட்டு வெளியில் வந்தேன். அப்போது எதிரில் உள்ள இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தான், வினோத்குமார் அங்கு தூக்கில் தொங்கியதை பார்த்து, மார்பில் கட்டியிருந்த துண்டோடு வெளியே ஓடி வந்து உதவி கேட்டேன்.

சி.பி - சும்மா ரீல் ரீலா விடாதீங்க.. பெட்ரூம்ல 2 பேருதான், எதுக்கு துண்டு கட்டுனேன், டிரஸ் மாத்துனேன்னு கதை விடறீங்க?இது எல்லாம் செட்டப்.  தூக்குல காதலன் கம் கணவன் உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது எந்த பொண்ணும் பதறி அவரை காப்பாத்த போய் தாங்கிப்பிடிப்பாங்க.. வெளீல ஓடி வந்து உதவி கேட்க ஏது டைம்? அதுக்குள்ள அவர் போய்ச்சேர்ந்துடமாட்டாரா?காமரா இருக்கறதை தெரிஞ்சுக்கிட்டு ஒரு அலிபி கிரியேட் பண்ண பாப்பா ஆக்ட் குடுத்திருக்கு..


காவலாளி உள்ளிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில்தான், அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கினோம். அவர் இதுபோல் ஒரு முடிவை எடுப்பார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது காதல் நிஜமானது என்று அல்போன்சா கூறியுள்ளாராம்.

சி.பி - உங்க காதல் நிஜமானதுதான், ஆனா வினோத் உங்களூக்கு துரோகம் பண்ண நினைச்சிருக்காரு.. அது உங்களுக்கு பொறுக்கலை




அல்போன்சா வசிக்கும் வீடு சியாமளா கார்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 3வது மாடியில் உள்ளது. இது பெரும் பணக்காரர்கள், சினிமாக்காரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகமாகும். பல நடிகர், நடிகையர் இங்கு வசிக்கிறார்களாம்.

இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் கண்காணிப்புக் கேமரா உள்ளது. அல்போன்சா வீட்டின் தளத்திலும் கூட கேமரா உள்ளது. அதில் வினோத்குமார் மரணத்திற்கு முன்பும், பின்பும் யாரும் வீட்டுக்குள் வந்ததாக பதிவு இல்லை. அதேசமயம், அல்போன்சா கட்டிய துண்டுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் படம் உள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள்.

சி.பி - நல்லா உன்னிப்பா பாருங்க.. அல்போன்சா கேமராவை ஒரு தடவையாவது பார்த்திருப்பார்.. சரியா இருக்கா?ரெக்கார்டு ஆகுதா?ன்னு செக் பண்ண? ( உண்மையான பதட்டமா இருந்தா கேமராவை பார்க்க டைம் இருக்காது, தோணாது.. )


ஆனால் வினோத்குமார் மரணத்திற்கு முன்பு ஏதோ விபரீதமாக நடந்துள்ளதாகவும், அதனால்தான் வினோத்குமார் மரணம் நேர்ந்துள்ளதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் கடும் தண்டனை நிச்சயம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். மேலும் மரணத்திற்கு முன்பு, அல்போன்சாவின் துபாய் கணவரின் புகைப்படங்களை வினோத் குமார் கிழித்தெறிந்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.


சி.பி - ஒரு வேளை அல்போன்சா முதல் விக்கெட் கூட செகண்ட் இன்னிங்க்ஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம், அது 2 வது விக்கெட்க்கு பிடிக்காம இருக்கலாம்.. 



வினோத்குமாருடன் அல்போன்சா ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்தபோது அதை அல்போன்சாவின் கணவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. வினோத்குமாருடன் பழக வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதை அல்போன்சா கேட்கவில்லையாம். தொடர்ந்து பழகியுள்ளார்.
சி.பி - உலகின் முதல் பெண்ணே சொல் பேச்சு கேட்காதவள் தான். ஆப்பிளை சாப்பிடாதேன்னு கடவுளே சொல்லியும் கேட்கலையே?கணவன் சொன்னா மட்டும் கேட்கவா போறாங்க?

இந்த நட்பு நாளுக்கு நாள் தீவிரமடையவே வெறுத்துப் போன அல்போன்சாவின் கணவர் தனது மகள் ஆலியாவை விட்டு விட்டு துபாய் போய் விட்டாராம். அதன் பின்னர்தான் விருகம்பாக்கத்தில் வசதியான வீட்டை எடுத்து வினோத்குமாருடன் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார் அல்போன்சா.

அல்போன்சா, வினோத்குமாரின் இந்த வாழ்க்கைக்கு அல்போன்சாவின் தந்தை அந்தோணியும், தாயார் ஓமனாவும், தம்பி ராபர்ட்டும் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் கல்யாணம் செய்து கொள்ளவும் ஆதரவு தெரிவித்தனராம். இதையடுத்தே விவாகரத்து செய்ய அல்போன்சா முடிவெடுத்துள்ளார்.

சி.பி - அல்போன்சாவின் பெற்றோர் உன்னை நினைத்து படத்துல வர்ற லைலா பெற்றோர் மாதிரி போல.. எவன் வசதியா இருக்கானோ அவன் கூட ஜாயிண்ட் ஃபேமிலி ஆகிடறது.. 

வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தரப்பினரும் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று அல்போன்சாவின் காதலர் வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கப் போவதாகவும் அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

நடிகை அல்போன்சாவின் காதலராக இருந்து வந்தவரான வினோத்குமார் நேற்று இரவு அவரது விருகம்பாக்கம் வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த வீட்டில்தான் அவர் அல்போன்சாவுடன் வசித்து வந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இது ஒரு கொடூரக் கொலை என்று வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினோத்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர். அவரது காது, முகத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. அவரை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொன்று தூக்கில் போட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.

இதுதொடர்பாக அல்போன்சா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.

இந்தப் புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சி.பி - அன்புள்ள அல்போன்சா.. வினோத்தை சண்டைல அடிச்சிருந்தா நீங்க என்ன பண்ணி இருக்கனும் கார்ல வினோத்தை போட்டுக்கிட்டு ஐ மீன் வினோத் டெட்பாடியை போட்டுகிட்டு ஏதாவது மலைப்பிரதேசத்துக்கு போய் அங்கே இருந்து உருட்டி விட்டு அப்புறம் மலையில் இருந்து கீழே தவறி விழுந்துட்டார்னு ரீல் விட்டிருக்கனும் ஜஸ்ட் மிஸ்டு


துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு மேல் வந்த பிறகுதான் அல்போன்சாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே மோதல் மூண்டு அது தற்கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhidUApnXlSQCfTy5feMc_wgDujlUfQo_NFpSOmqyazotETE8CqYMfFYzSs2AkQlPTIOrp4lLXr1lS33y33x42-GAV-DiPxmiQtzzSvz5w1ea165VA9_pQwdoDenlBOqEd_yV619PyFwdI/s400/4_%252520AlfonsaRedCholiBelly.jpg
ஒரு காலத்தில் பிசியான குத்தாட்ட நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். பின்னர் படிப்படியாக இவர் தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டார்.

இவரும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத்குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர்.

அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படித்தான் தற்போதும் அவர் துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார். நள்ளிரவு வாக்கில்தான் அவர் நேற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியதுமே அவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே மோதல் மூண்டதாக தெரிகிறது.


அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

சி.பி -இது சும்மா ஸ்டண்ட்.. தன் மேல் டவுட் வரக்கூடாதுன்னு பண்ணுன டிராமா.. அல்லது பயந்திருப்பாங்க.. 


அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவர் தேறி வந்த பிறகுதான் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்கிறார்கள்.

என்னது? மல்லிகா ஷெராவத் சாமியார் ஆகிட்டாரா? அவ்வ்வ் ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ்)

http://www.moneymint.in/wp-content/uploads/2010/02/hsc_exam.jpg1. தலைவரே! ஏன் இந்த வருஷம் மட்டும் அமைதிப் பேரணி நடத்துறீங்க?


கலைஞர் - உடன் பிறப்பே!எதிர்க்கட்சியா எப்ப இருந்தாலும் இப்படித்தான்

--------------------------------------

2. எல்லா காதலர்களுமே காதலியை குட் கேர்ள்னு சொல்றாங்களே?

அதுவா? மேரேஜ்க்குப்பிறகு “குட்டு” வைக்கும் கேர்ள் ஆவாங்கன்னு தெரியாதில்ல?

----------------------------------

3. உங்க மனைவி 24 மணி நேரமும் கடு கடுன்னே இருக்காங்களே? ஏன்?

கோபத்துலதான் நீ செம அழகுன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்:)

----------------------------------

4. லைப்ரரிக்குள்ள எப்போ வந்தாலும் ஒரு டம்ளர் தண்ணி குடிக்கறீங்களே, ஏன்?


எனக்கு இலக்கிய தாகம் அதிகம் சார்

--------------------------------

5. ரைட்டர் சார், ஏன் கோபமா இருக்கீங்க?

என் எல்லா தொகுப்பையும் கண்காட்சில பார்த்துட்டு ஒருத்தன் கேட்கறான், “ சார், உங்க மற்ற தொடுப்புகள்?”

-------------------------------

6.  வீடு புகுந்து திருடினியா?

நோ யுவர் ஆனர், நான் திருடுனதே  வீட்டைத்தான் ஹி ஹி

---------------------------------------

7.  தலைவரே! எதுக்காக மேடைல சரக்கோட பெப்ஸியை கலந்து கூட்டத்துக்கு டெமோ காட்றீங்க?

தலைவர் இப்போது உங்கள் முன் தோன்றி செம கலக்கு கலக்குவார்னு சொன்னாங்க.. அதான்..

--------------------------------------------

8.  பாட்டெல்லாம் சூப்பரா இருந்தாலும் தியேட்டர்ல யாருமே ஒன்ஸ் மோர் கேட்கலையே, ஏன்?

 இப்போ பனிக்காலம், ஒன்ஸ் “மோர்” எப்படி கேட்க.. சேராம போய்ட்டா?
---------------------------------------

9. நடிகைக்கு ரயில்ல ரிசர்வேஷன் டிக்கெட் கிடைக்கலைன்னு கேள்விப்பட்டதும் தலைவர் ஏன் சந்தோஷப்படறாரு?

அந்த நடிகை டிக்கெட் இல்லைன்னா வித் அவுட்ல போவார்னு யாரோ சொன்னாங்களாம்.. 

----------------------------------------

10. சாமியார் போல மாறி வருகிறேன் -மல்லிகா ஷெராவத்# மேடம் , நாங்க டியூப் லைட், நித்யானந்தா போலவா? பிரேமானந்தா போலவா? டாக் கிளியர்லி

---------------------------------

http://farm3.static.flickr.com/2005/2133251974_0f9ff44b5b.jpg

11. காங்கிரஸுக்கு வர பாரதிராஜாவை ஞானதேசிகன் அழைப்பு!# மன்னிக்கவும், நான் கூத்துப்பட்டறையைத்தான் விரும்புவேன், கூத்து பண்ற ஆட்களை அல்ல-பா ரா

-----------------------------

12. சொந்த வீட்டைக் காணவில்லை, அரசு அலுவலர் போலீசில் புகார். # நல்லா பாருங்க :”சின்ன” வார்த்தை ஏதாவது விட்டுட்டீங்களா?

--------------------------

13. அன்புள்ள பெண்களே, தயவு செஞ்சு மெரூன் கலர் லிப்ஸ்டிக்கை யூஸ் பண்னாதீங்க, அப்புறம் உங்க கணவர் கூட உங்க லிப்ஸை யூஸ் பண்ண மாட்டாங்க:)

--------------------------------

14. போலீஸ் - டேய், அந்த பொண்ணை ஃபாலோ பண்ணுனியா?

ட்விட்டர் லூசு - சார், டெயிலி பலரை ஃபாலோ பண்றேன், மொட்டையா கேட்டா எப்படி?

-------------------------------

15. மிஸ்,உங்க செல் நெம்பர் கொஞ்சம் தர முடியுமா? 

லூஸா நீ? கொஞ்சம் கொடுத்தா எப்படி கால் பண்ணுவே? முழுசாவே தர்றேன்


-----------------------------------------------

16. மேடம், ஒரு வீடு கட்டலாம்னு இருக்கேன், பட்ஜெட் 10 லட்சம்..

இதை ஏன் என் கிட்டே சொல்றீங்க?

நீங்க தானே ஹோம் மேக்கர்னு சொன்னீங்க?

--------------------------------------

17. ஆண்கள் மீதான ஆர்வம் குறைகிறது- மல்லிகா..# மீரா நாயர் படத்துல கமிட் ஆகிட்டிங்களா? வாழ்த்துகள் மேடம்

----------------------------------------

18.பீச்சில் ஒரு காதலன் காதலியின் திருகாணியை திருகி விளையாடிட்டு இருக்கறப்போ அவனுக்கு ஒரு கால் வருது (செல்ஃபோன்ல) “ ,மச்சி, ஆணி ஜாஸ்தி,

------------------------------------------

19. ஒரே பஸ்ல ரெகுலரா போற பசங்க செய்ய வேண்டிய முத வேலை அந்த பஸ் கண்டக்ட்ரை, டிரைவரை ஒரு வணக்கம் போட்டு சிநேகம் பிடிச்சு வெச்சிக்கறதுதான்

--------------------------------------

20. ஒரே பஸ்ல ரெகுலரா போற பொண்ணுங்க எதுவும் செய்ய வேண்டிய தில்லை, ரெகுலரா போனாலே போதும் ,மிச்சத்தை மத்தவங்க பார்த்துக்குவாங்க ஹி ஹி

---------------------------------

http://www.hindu.com/2010/09/08/images/2010090860730201.jpg

Monday, March 05, 2012

அரிதிலும் அரிதான படமான அரவான் - அழகியல் வசனங்கள்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/03/Aravaan_Movie_Review-300x300.jpg

1. தூக்கம் வர்றவன் காவலுக்கும், தும்மல் வர்றவன் களவுக்கும் வரக்கூடாது


-----------------------------------

2.  ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம்மளை ஏமாத்தி கம்மியான விலைக்கு களவுப்பொருள்களை வாங்கறானே இவன் வீட்ல களவாடனும்


-------------------------------

3. வெறும் வெத்தலை ( வெற்றிலை) போட்டா அது வீட்டுக்கு ஆகாது.. சுண்ணாம்பும் எடுத்துக்கறேன்..?

--------------------------

4. ராத்திரி 3ம் ஜாமம் தான்  கட்டில் காவிலி வரும் , மனுஷன் அடிச்சுப்போட்டு கிடக்கற மாதிரி தூங்கற டைம், அப்போதான் நாம களவாடப்போகனும் .. ( ஜெ ஆட்சில அந்த தொல்லை இல்லை, கரண்ட் கட் ஆகறதால விழிச்சுக்கறாங்க)


-----------------------------------

5. களவாணிப்பயலுக்கு அழகே புகுந்த இடத்துல ஏதாவது களவாண்டுட்டு வர்றதுதான்.. நீ என்னடான்னா வெறும் கையோட வந்திருக்கே?

அது சரி,.. நான் போனப்ப ஒரு பொண்ணு நாண்டுக்கிட்டு செத்துடுச்சு ( தூக்கில் தொங்கி) பழி எம் மேல வந்துடக்கூடாது பாரு.. 

----------------------------------

6.  களவுக்கும் காலம், நேரம், திசை எல்லாம் உண்டு.. 

---------------------------

7.  லேடி பெருசு - ஏலேய்.. இந்த நேரத்துல எங்க ஊர்க்கு எதுக்கு வந்திருக்கே? நீ சம்மணம் போட்டு  உக்காந்திருக்கற சாமியை கும்பிடற கோத்திரத்துல வந்தவன் தானே..இப்படி அர்த்த ஜாமத்துல இங்கே வந்தா  உனக்கு சாமானம் எந்திரிக்காது பார்த்துக்க.. 

 பாட்டி, வயசுக்கு தகுந்த பேச்சு பேசு.. 

----------------------------------

8.  கோட்டையூர் பற்றி உனக்கு தெரியலை.. எங்க ஊர் பொன்னை, பெண்ணை கொண்டு வர வேண்டாம்.. ஒரு பிடி மண்ணை கொண்டு வாங்கய்யா பார்க்கலாம்.. எவ்வளவு பாதுகாப்பு.. அரண்.. 

--------------------------------

9.  திறன் இருக்கறவன் என் கூட வா.. திறன் கெட்டவன் சொந்த ஊர்  திசை தேடி ஓடிப்போ . ஆபத்துல சிக்குன நண்பனை விட்டுட்டு என்னை மட்டும் காப்பாத்திக்க மாட்டேன்.. 

-------------------------------------

10.  களவுத்தொழில்ல இருக்கறவனுக்கு எவ்ளவ் வேணாலும் ரத்தம் வரலாம், ஆனால் கண்ணீர் வரக்கூடாது.. 

------------------
http://www.southgossips.in/wp-content/uploads/2011/10/actress-dhanshika-latest-hot-photoshoot-gallery-pics-6.jpg
குத்து விளக்குடன் நிற்கும் குத்தாட்ட கலக்கு விளக்கு தன்ஷிகா

11.  ஏய்யா.. எனக்கென்ன குறைச்சல்? கொப்பும் குலையுமாத்தானே இருக்கேன்.. பொம்பளை தானா இறங்கி வந்து கேட்டா இந்த ஆம்பளைங்களுக்கு எப்பவும் எளக்காரம் தான்..

--------------------------

12. குலம் தெரியாதவனை ஊர்ல சேர்க்கலாம், ஆனா குடும்பத்துல சேர்க்க முடியாது. 

-------------------------------

13.  என்னது, என் ,மாட்டை அடக்கிடுவியா.. என் மாட்டோட கொம்பை தொட வேணாம்.. ------------------ கை தொடுய்யா பார்க்கலாம்.. 


-------------------------------

14.  களவுல இருந்துதான் காவல் பிறக்கும்..  உங்கப்பன் வழில வந்திருந்தா நீ புல் தான் புடுங்கிட்டு இருந்திருப்பே. 


-------------------------------------------

15.  கொளுந்தியாளை வம்புக்கிழுக்கறது தப்பா?

 அப்படி இழுக்கற மாதிரி இருந்தா உன் கொளுந்தியாளை வம்புக்கிழு.. எதுக்கு என் கொளுந்தியாளை வம்புக்கிழுக்கறே?

--------------------------------------

 16. என்னதான் இருந்தாலும் மச்சினி, கொளுந்தியான்னா ஒரு போதைதான்

----------------------------

17.  சிங்கம்புலி - என் பொண்டாட்டி குளிக்கறப்ப ஒளிஞ்சிருந்து பார்த்தான்.. அங்கங்கே அப்பப்ப கிள்ளினான்.. அதைக்கூட பொறுத்துக்கிட்டேன்... ஆனா என் கொளுந்தியாவை எக்காரணம் கொண்டும் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்.. அவ எனக்குத்தான் ஹி ஹி பாதுகாப்பேன்..  இந்த ஊர்ல யாருக்கும் கொளுந்தியா பாசமே இல்லையா? ஏன் என்னை மட்டும் குறை சொல்றீங்க?

----------------------------------

18. காலைச்சுத்துன பாம்பு கணக்கா விதி நம்ம ஊரச்சுத்திக்கிடக்கு.. ஒவ்வொரு ஊரா   ரெண்டு ரெண்டு பேரா போய் தாக்கல் சொல்லிட்டு வந்துடுங்க ( இறந்த தகவல்)

---------------------------------

19.  எதா இருந்தாலும் நாம ஊர்க்காரங்க பேசித்தீர்த்துக்கலாம்.. 

 பேசிப்பேசியே தீர்த்துட்டீங்களே..  ஆளையே. அவன் என் தம்பிடா..

--------------------------------

20.  போரம் கேட்கப்போறப்ப பிரச்சனை வேணாம்னு பார்க்கறேன் (போரம் கேட்கப்போறப்ப - துக்கம் விசாரிக்க இழவு வீட்டுக்கு செல்லுதல்)

--------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYAPFAJntUtA9sgjhzwFsU30hI4yBMFVtWtISSBEgkieRxDshgUS3GLrz7c2vcsbdBraOQee5eG87cm_XCHHK11ystS2vpFjIhf58LKz0IrvYuDKOQzEiXtpMLcj6mzo-95hcfLumEaQ/s1600/swetha+menon-in-aravaan-movie-hot-stills.jpg

21.  புலியோட மீசை நரம்பு எடுத்து உன் கண்ல  ஒரு முடியை ஏத்துனா உன்  மூளை நரம்பு வெடிச்சு நீ செத்துடுவே..

-----------------------------

22.  விதவை ஆகப்போறேன்னு தெரிஞ்சும்  அப்பா கூட மல்லுக்கட்டி  உன்னை கட்ட நினைச்சேனே அது என் தப்பு.. 

---------------------------

 23.  உன்னை பார்க்கும்போதெல்லாம் 100 வருஷம் வாழ ஆசை வருது.. பலிக்கு பலி ஆடா நான் போகலை.. 

----------------------------

24.மதுர ராசா சாதாரண ஆளா? அவர் அரணாக்கொடியே என் கைல மாட்டி இருக்கு.. எம்புட்டு இடுப்பை பார்த்ததோ?


-------------------------------------

25.  மகா பாரதத்துல பாண்டவர்கள் போருக்கு முன்னால உயிர் பலி குடுத்தாங்களே.. அது மாதிரி தான் இதுவும்.. கலங்காதே..

--------------------

26.  மல்லுக்கட்டி 2 ஊரு மக்களும் போட்டி போட்டுக்கிட்டு சாகறதுக்கு ஒரு ஆளை மட்டும் பலி கொடுக்கறது தப்பே இல்லை..

----------------------

27.  உன்னை மந்தைல வெச்சு மொட்டை அடிச்சு விடனும்.. இல்லைன்னா டேஞ்சர்.

--------------------------------

28.  கோடாங்கி கண்ணீர் ஊரையே அழிச்சிடும்.

---------------------

29, சாகப்போறான்னு தெரிஞ்சும்  அவனை எப்படிம்மா உனக்கு கட்டி வைப்பேன்?

சரி.. அப்போ சாகாத ஆள் யார்னு காட்டுங்க.. அவனையே கட்டிக்கறேன்.. 

-------------------------

30.  யோவ்,.,. என்னைப்பற்றி என்னய்யா நினைச்சே.. நாளைக்கே வாந்தி எடுத்துக்காட்டவா?

---------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD8dK66jPy0fkUNiLb7dPnajNSaZS8K5ogej2QPk9GYK6o9t4PUYY2Mkxgqw_7ijhPXF4ngvDmhkgYI-yZPBAxiRD_lNwzO9_kQSJO1GkDpLfwiqQvoXaeXES3_I0JohpZKVmkbyDAQnY/


31. சின்ன மகாராணி - மகாராஜா.. ஒண்ணு தெரிஞ்சுக்குங்க.. வெட்டி சாய்ச்சுத்தான் கொல்லனும்னு இல்லை.. விதைச்சும் கொல்லலாம்..

-----------------------------

32. ராணிக்கு அத்தர் வாசமும் பிடிச்சிருந்தது.. அத்தர் விற்க வந்தவனையும் பிடிச்சிருந்தது..

---------------------------------

33. மகா ராஜா - ஆடு கோழியைத்தான் பலி கொடுப்பாங்க.. யானையை எதுக்கு பலி கொடுக்கனும்? நான் ராஜா நான் எதுக்கு பலி ஆகனும்?

----------------------------

34. உன் நாக்கு புரளாத வரை உனக்கு மரணம் இல்லை..

--------------------------

35.  பலி ஆள் ஆனா என்ன? 10 வருஷம் தலை மறைவா இருந்துட்டு வந்துட்டா உனக்கு ஊரே மன்னிப்பு கொடுத்துடும்.. அப்படி ஒரு விதி இருக்கு.

--------------------------------------

சாருநிவேதிதாவின் எக்செல் நாவல்- ஒலக மகா எலக்கியம்- புத்தக (!!) விமர்சனம்

க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமாரை விட   கில்மா கதை மன்னன், கோபியர்கள் கொஞ்சும் ரமணன்,அண்ணன் சாரு அவர்கள் இரண்டு மடங்கு பெரியவர் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக அவர் எழுதிய நவீன நவீனம் தான் எக்செல்.. அதாவது ராஜேஷ் குமார் எழுதற நாவல்ல 3 வெவ்வேற டிராக் ஓடும்.. விவேக், ரூபலா, கோகுல்நாத் அண்ட் கோ ஒரு அத்தியாயத்துல பேசிட்டு இருப்பாங்க .. கொலையாளி கொலை செஞ்சுட்டு இருப்பான்.. கொலை செய்யப்படப்போற ஆளோட ஃபிளாஷ்பேக் கதைல ஒரு லவ் ஸ்டோரி ஓடும்.. நாவலோட கடைசி அத்தியாயத்துல எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து தேரை நிலை சேர்த்துவாரு.. 

அந்த டெக்னிக்ல அண்ணன் சாரு 6 வெவ்வேற டிராக்ல கதையை ஓட்டறாரு.. அதாவது

http://images.indiaplaza.in/books/9788/1849/9788184932041.jpg

1. முதல் டிராக் -  ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணோட அண்ணன் லேசு பாசா சேட் பண்ணி இருந்தாரு..அதை எப்படியோ ரெகார்டு பண்ணி அண்ணனோட வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தி இண்ட்டர் நெட் உலகத்தை ஒரு கலக்கு கலக்குச்சே ஒரு  யூ டியூப் வீடியோ ( யாரும் மிஸ் பண்ணிட்டமேன்னு பதட்டப்படேல்.. ஒன்லி வாசகங்கள்).. அந்த மேட்டர்ல தப்பு என் பேர்ல இல்லை.. நான் உலக மகா உத்தமன்.. எல்லா தப்பும் அந்த பொண்ணு மேல தான், எல்லாம் திட்டமிட்ட சதின்னு ஒரு தன்னிலை விளக்கம்.. ( இதுல அண்ணன் கேட்கறாரு.. நானே அயோக்கியன்னு தெரியும் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் என் கூட சேட்டுக்கு வரனும்?னு நியாயமான லாஜிக்கான கேள்வி  கேட்கறாரு... )

2. ரெண்டாவது டிராக் - குமுதம் பத்திரிக்கைல ” கதவைத்திற காயத்ரி, கவிதா யாராவது வரட்டும்”னு ஒரு ஆன்மீகக்கட்டுரை எழுதி லட்சக்கணக்கான வாசகர்களை பெற்றாலும்  ஜஸ்ட் லைக் தட் 3 நிமிட குறும்படம் சன் டி வி ல வந்ததால அகில உலக ஃபேமஸ் ஆன உலகம் போற்றும் உத்தமர், ஒழுக்க சீலர், கலியுக ராமர், சந்நியாசி மத்தியானந்தா, சாயங்காலனந்தா, நைட்டானந்தா, மிட் நைட்டானந்தா  அவர்கள் ரஞ்சிதா என்ற குணச்சித்திர நடிகையுடன் ஆன்மீகப்பணி ஆற்றும் நிலை பார்த்து பக்தர்கள் அனைவரும் புளகாங்கிதம் அடைஞ்சாங்களே.. அந்த மேட்டர்ல சாருவின் மனைவி சாமியார்க்கு ஒரு லெட்டர் எழுதியதை சாமியார் மீடியாவிடம் பப்ளிஷ் பண்ணி சாருவின் மானத்தை டைட்டானிக் ஏத்துனாரே அதுக்கு பதில் அடி + தன்னிலை விளக்கம்.. ( இதுல ஒரு காமெடி என்னன்னா என் மனைவி அப்படி எல்லாம் லெட்டரே எழுதலைன்னு சொன்னவர் அப்புறம் ராம்தாஸ் விட கேவலமா ஒரு பல்டி அடிச்சு அப்படியே அவர் தான் லெட்டர் எழுதுனார்னே வெச்சுக்குவோம்அதை அவர் பப்ளிஷ் பண்ணுனது நியாயமா?ன்னு அனுதாப ஓட்டு வாங்கும் எம் எல் ஏ மாதிரி பம்மறாரு)

3. மூணாவது டிராக் - ஆ ராசா ஒரு லட்சம் அண்ட் சொச்சம் கோடி  அடிச்சாரே அவர் அந்தரங்க காரியதரிசி  சாதிக் பாட்சாவின் ஆவி தன்னிலை விளக்கம் சொல்ற மாதிரி கொஞ்சம் பக்கங்கள்.. ( அநேகமா அவை ஜூ வி, நக்கீரன் கட்டுரைகளின் தொகுப்புன்னு நினைக்கறேன்)

4. நான்காம் டிராக் - இதுலதான் நாவலோட மெயின் மேட்டர்.. அண்ணன் எழுதுனதுல சைடு, பார்டர், எல்லாத்துலயும் மேட்டர் இருந்தாலும் மெயின் கதை இந்த டிராக்ல தான் வருது.. அதாவது அண்ணன் கணக்கு பண்ணுன லேட்டஸ்ட் ஃபிகர் பேரு அஞ்சலி.. அந்த பாப்பாவோட சுய சரிதையை பாப்பாவே சொல்ற மாதிரி  வருது.. அநேகமா நோகாம நோம்பி கும்பிட்டுட்டாருன்னு நினைக்கறேன்.. பாப்பாவையே அந்த கதையை டைப் பண்ணச்சொல்லி ஊடால விட்டுட்டாரு போல.. 

 அதாவது அஞ்சலி சின்ன வயசுலயே  திவாகர் அப்டிங்கற ஆளால பால் இயல், மோர் இயல், தயிர் இயல் பலாத்காரம் பண்ண முயற்சி செய்யப்பட்டு அதுல 50 % வெற்றி மட்டுமே அடைஞ்ச ஆள்.. அந்த திவாகர் வேற யாரும் இல்லை, அஞ்சலியோட அம்மாவுக்கு புது பாய் ஃபிரண்ட்.. மீன்ஸ் பாய்ல படுத்திருக்கும்போதும் நட்போட இருப்பாங்க.. 

அஞ்சலிக்கு திவாகர் என்னென்ன கொடுமை எல்லாம் செஞ்சார்னு சொல்றதையே சினிமால காட்டி இருந்தா 4 ரீல் வரும்.. அப்புறம் அஞ்சலி க்கு மேரேஜ் ஆகிடுது.. புருஷன் தண்டம்.. ( அப்டி கதையை கொண்டு போனாத்தானே கிளு கிளுப்பு வரும்?) 

உதயாவோட தூய நட்பு அஞ்சலிக்கு கிடைக்குது.. இந்த கதைல வர்ற உதயா அண்ணன் சாருதான்.. அஞ்சலியும், உதயாவும் பரிமாறிக்கொள்ளும் கில்மாக்கடிதங்கள், சேட்கள் இதைவெச்சே 60 பக்கங்கள் கிளு கிளுப்பா நகர்த்திடறாரு..

தமிழன் கேப்ல கெடா வெட்றவன் ஆச்சே.. அதை நிரூபிக்கும் விதமா அண்ணன் சாரு இந்த அஞ்சலி கதை ஊடால நைஸா தன்னோட பராக்கிரமங்களை அள்ளி விடறாரு.. அதாவது அண்ணனுக்கு வயசு 60 ஆனாலும் 20 மாதிரி அல்ல அல்ல உலக அளவுல தான் தான் கில்மா மன்னன்கறாரு.. 

இந்தக்காலத்துல வயக்காட்டுல, டிராக்டர்ல ஏர் ஓட்டறவனே அரை மணி நேரத்துக்கு ஒருதடவை ரெஸ்ட் எடுத்துக்கறான்.. ஆனா அண்ணன் விடாம 2 மணி நேரம்  நான் ஸ்டாப்பா உழைப்பேன்னு அடிச்சு விடறாரு.. கின்னஸ் சாதனையாளர் போல.. 

அஞ்சலி பாப்பா ஒரு ஃபிரான்ஸ் கேர்ள் போல.. அதனால ஆங்காங்கே ஆங்கில கவிதைகள், ஆங்கில உரையாடல்கள் எஸ் எம் எஸ் கள், சேட்கள் எல்லாம் வருது.. அதை எல்லாம் ஸ்கிப் ஆகி போனா சீக்கிரமா படிச்சுடலாம்.. 

இதை மட்டுமே தனி நாவலா கொண்டு போய் இருந்தா ஒரு வேளை மனம் கவரும் நல்ல நவீனமாக வந்திருக்கலாம்..

இந்த கதை டிராக்ல அண்ணன் சேலம் சித்த வைத்திய சாலை, பழநி டாக்டர்ஸ் ரேஞ்சுக்கு இறங்கி பல சித்த வைத்திய, கில்மா மருத்துவ உத்திகள், ஐடியாக்கள் எல்லாம் குடுக்கறார்.. 

5. ஐந்தாம் டிராக் - அண்ணன் சாருவுக்கு இலக்கிய உலகத்துல அராத்து (இவர் ட்விட்டர்லயும் இருக்கார்), மனுஷ்ய புத்திரன்,ஆர்னிகா நாசர் போன்ற எழுத்தாளர்கள் நண்பர்களா இருக்காங்க.. இந்த 3 பேரில் ஒருவரை அல்லது மூன்றும் கலந்த ஒரு கேரக்டரை உருவாக்கி  கொக்கரக்கோ அப்டின்னு ஒரு எழுத்தாளரோட பள்ளிப்பருவ நிகழ்வுகளை கொஞ்சம் சொல்றாரு.. இது கொஞ்சம் சுவராஸ்யமா இருக்கு.. 

ஆனா சர்க்கரை பொங்கல்ல கல்லா, பிரபு தேவா- நயன் தாரா தெய்வீகக்காதல்ல நுழைந்த ஹன்சிகாவா அண்ணன் தன்னையே ஒரு ஹோமோன்னு அறிவிச்சு பெருமைப்பட்டுக்கறாரே அதுதான் உறுத்துது.. சீரியசா கதை போய்ட்டு இருக்கும்போது நாம என்ன கேள்வி கேக்கனும்னு நினைக்கறோமோ அந்த கேள்வியை கொக்கரக்கோவை விட்டே கேக்கற மாதிரி கதை நடை செல்வது நல்ல யுக்தி.. 

6. ஆறாம் டிராக்  -சினிமால கோக்குமாக்கான சீன் உள்ள படமா இருந்தாலும் அறிவுரை சொல்ற மாதிரி சில சீன் வைப்பாங்க.. அது சென்சாரை கன்வின்ஸ் பண்ண உதவும்.. அந்த மாதிரி நாவலுக்கு சம்பந்தமே இல்லாம ஐயப்பன் சாமி 18 படிகள் பற்றிய விளக்கங்கள், தேவாரப்பாடல்கள் ,  சித்தர்கள் பற்றிய குறிப்புகள்  அப்டின்னு அண்ணன் அள்ளி விடறாரு.. அதை நாவல் படிச்ச ஆட்கள்ல 90% பேரு அப்டியே ஸ்கிப் ஆகித்தான் படிப்பாங்க.. ஆனாலும் அண்ணனுக்கு கவலை இல்லை../ ஏன்னா யாராவது நாவலை குறை சொன்னாக்கூட என் நாவல்ல யூஸ்ஃபுல் மேட்டர் இருக்குன்னு காட்டிக்கறதுக்காகவும் அது தேவைப்படுது போல.. 

 இதுல என்ன காமெடின்னா சித்தர்கள் ராஜ்ஜியம்னு ஒரு வலைப்பூ பற்றி குறிப்பிட்டு அண்ணன் லிங்க் குடுத்திருக்காரு.. தோழி என்ற புனை பெயரில் எழுதும் அவருக்கு இது நல்ல அங்கீகாரம் தான்.. . 

முதல் வசந்தம் குங்குமப்பொட்டுக்கவுண்டர் -ஹிட்ஸ் வந்ததுன்னு சந்தோஷமாவும் இருந்துக்குங்க, அதே சமயம்  சாக்கிரதையாவும் இருந்துக்குங்க.. அவரிடம் கேட்காமல் அண்ணன் 3 பதிவை அப்படியே சுட்டு போட்டிருக்காரு, அதுக்கு பிராயசித்தமா லிங்க் குடுத்துட்டார் போல

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8AAvKaSncrIfslOXuIwYPRzkZBTDEhMKZfAHMsdr0VZu42BwcZrmZHNm5bBA71b-pBuku7saQZd5V-5VEjw-8ke-8a4LRoTWB52T_pA0AztD55Qw2N19n1P1LVvZW_Ox4_YggWTmvayg/s640/Balu-mahendra-010808.jpg



 குப்பையில்  பொறுக்கிய மாணிக்கங்கள்


1. ஒருவனுக்கு 20 வயதில் காதல் வரவில்லை என்றால் அவனுடைய உடலில் ஏதோ கோளாறு இருக்குன்னு அர்த்தம்... ஒருவனுக்கு 40 வயதில் காதல் என்றால் அவன் மனதில் கோளாறு என்று அர்த்தம் அப்டினு யாரோ சொன்னாங்களாம்.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை..


2.  தமிழிலேயே எழுதிக்கொண்டிருந்தால் தமிழின் ஆகச்சிறந்த  எழுத்தாளர்களெல்லாம்  எப்படி மறக்கடிக்கப்பட்டார்களோ அதே போல் நானும் மறக்கடிக்கப்படுவேன்

3. இரவு 7 மணிக்குள் சாப்பிடவேண்டும் என்று சொல்லும் இந்தியர்கள் 50 வயதில் நோயில் விழுவதும், மிட் நைட்டில் 2 மணிக்கு சாப்பிடும் சீனர்கள் 90 வயது வரை ஆரோக்யமாகவும் வாழ்வது இயற்கையின் முரண்பாடு


4. வாழ்க்கையை உணர வேண்டும் என்றால் உங்களுக்கு சிறிது பைத்தியக்காரத்தனம் வேண்டும்

5. சாமியாரின் பேச்சு நடைபெற்ற இடம் மிகச்சிறிய இடம்./.  ஒரு அரசாங்கம் இவ்வளவு சிறிய  இடத்தில் 16,000 பேர்  கூடுவதற்கு எப்படி அனுமதி அளித்தது?மேலும் ஒருவர் இடையில் வெளீயே போக நினைக்கும்போது அவர்களை அனுமதிக்கவில்லை, அப்படித்தடுப்பது சட்டத்துக்குப்புறம்பானது இல்லையா? ( WRONGFUL CONFINEMENT)

6.  உன்னை காதலிக்கும் பெண்கள் அனைவருமே எப்படி ஒரு கூடை சோகங்களை  கை வசம் வெச்சிருக்காங்க?நீ ஏதும் பண்ட மாற்று வேலை செய்கிறாயா?

7.  பெண்கள் அனைவரும் ஹீரோவைத்தேடி வாழ்க்கை முழுக்க அலைந்து கொண்டிருக்கின்றனர்.. அவர்கள் பழைய வில்லன்களை எல்லாம் இன்றைய ஹீரோ ஆக்குகிறார்கள்

8. தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் சோகமாக ஆக்கிக்கொள்வது ஒரு வித மன நோய்.. அப்படிப்பட்ட பெண்கள் மன நல நிபுணரை பார்க்கலாம், அல்லது புது காதலரை காதலிக்கலாம்

ஓக்கே .. ஓவர் ஆல் நாவல் எப்படி இருக்கு? யார் எல்லாம் படிக்கலாம்?

கில்மா ரசிகர்கள், ஃபிகர்களை செட் பண்ணுவது எப்படி? சேட்டிங்கில் ஆண்ட்டிகளை மடக்குவது எப்படி?, வெறும் வாய்லயே மங்கலம் பாடி மங்களத்தை கரெக்ட் பண்ணுவது எப்படி? போன்ற பல அரிய கேள்விகளை மனதில் தக்க வைத்துள்ள ரசிக மகா ஜனங்கள் இதை படிக்கலாம்..

 யாரெல்லாம் படிக்கக் கூடாது?  தனி மனித ஒழுக்கத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்,கண்ணியமானவர்கள்,ஒரு இல் ஒரு சொல் என்று வாழ்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ ,மாணவிகள், 30 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள்,இவங்க எல்லாம் படிக்கக்கூடாது..

நாவல் மொத்தம் 435 பக்கங்கள்.. அதுல ஆங்கில வசனங்கள், ஜோதிட பக்கங்கள், சபரிமலை சுலோகங்கள் போன்ற வெகுஜன மக்கள் ஒதுக்கும் பக்கங்கள் போக  403  பக்கங்கள்.. படிக்க மொத்தம் நாலரை மணி நேரம் ஆகுது.. புத்தகம் படிக்கும் பழக்கம் குறைவாக உள்ள சராசரி வாசகனுக்கு 6 மணி நேரம் ஆகலாம்.. 


விகடன் மார்க் போட்டால் - 40