Thursday, March 01, 2012

பள்ளிக்கல்வி முறையை சாடும் சாட்டையடி வசனங்கள் இன் தோனி

http://reviews.in.88db.com/images/Dhoni-movie-latest-gallery/Dhoni-movie-shooting-pics.jpg

1.  டேய்.. நீ நினைக்கற மாதிரி எல்லாம் வாழனும்னா நீ அம்பானி வீட்ல பிறந்திருக்கனும்..

அப்போ நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்

------------------------------------------

2 சார்.. சி உங்க ஃபோனை யூஸ் பண்ணிக்கவா? என் மனைவி ஒரு சந்தேகப்பேர்வழி,என் ஃபோனை செக் பண்ணுவா..சில சமயம் என் ஃபோனை பிரிச்சே மேஞ்சிடுவா

ஓக்கே, இங்கேயே பேசு

கொஞ்சம் செக்சியா பேசுவேன் .பரவாயில்லையா?

------------------------------------------

3. சார்.. நல்லதா ஒரு பைக் வாங்கனும்.. சீப் அண்ட் பெஸ்ட்டா ஏதாவது மாடல் சொல்லுங்க

சீப்பா இருக்கறது பெஸ்டா இருக்காது,பெஸ்ட்டா இருக்கறது சீப்பா கிடைக்காது..

----------------------------------------

4. போன மாசம் தானே  யாரோ ரகு என்னை எட்டி பார்க்கறதா சொன்னீங்க?

அது ரகு இல்லை,ராகு

----------------------------------------------

5. ஏங்க, 3 மாசத்துல வீடு வாங்குவோம்னு அந்த லேடி கிட்டே சொன்னீங்களா?

ஆமா.. ஹி ஹி , ஏன்?

டைவர்ஸ் தான் வாங்குவோம்..


---------------------------------------

6. அடங்கொய்யால.. இந்தாள் எல்லாம் யூத்னா அப்போ நான் யாரு..

யோவ், பேசாம வேலையைப்பாரு..

-------------------------------

7. சார்.. உலக விபரங்கள் எல்லாமே ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருக்கீங்களே, அது எப்படி?

ரெண்டு ரூபா குடுத்து நியூஸ் பேப்பர் வாங்கிப் படிய்யா, உனக்கும் தெரியும்..

-----------------------------

8. டாடி.. வேற டி வி வாங்கலாம்.. கிரிக்கெட் பால் சின்னதா தெரியுது.

ஃபுட்பால் மேட்ச் பாரு. பால்( ball) பெருசா தெரியும்..

--------------------------------

9.  நான் சாதா ஆள் தான், ஆனா போடறது என்னவோ வி பி ஜட்டி..


-----------------------------------------

10. டாடி.ஸ்கூல்ல ஸ்விம்மிங்க் பூல்  கட்ட டொனேஷன் கேட்கறாங்க..

ஸ்கூலே ஸ்விம்மிங்க் பூல் சைஸ்ல தாண்டா இருக்கு?

-----------------------------------------

http://g.ahan.in/tamil/Dhoni%20Movie%20Stills/Dhoni%20Movie%20(35).jpg

11. மூளையே இல்லாதவனுக்கு எல்லாம் மேரேஜ் செட் ஆகுது.. ஆனா சொட்டை தலை, முடி இல்லைன்னு என்னை பல பொண்ணுங்க ரிஜக்ட் பண்றாங்க..

ரொம்ப யோசிக்காதீங்க  சார்

----------------------------------------------------

12. பரம சிவனை நம்பலாம், ஆனா அதுக்காக அவன் கழுத்துல இருக்கற பாம்பை நம்ப முடியாது


-----------------------------------------------
13. நான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன், நீங்க எடுக்கலை..

 மிஸ்டு கால் குடுத்தேன்ன்னு சொல்லு.. நான் கால் பண்ணாததுக்கு காரணம், எப்படியும் கடன் தானே கேட்கப்போறீங்கன்னுதான்..

-----------------------------

14. டேய், பார்த்த மேட்சை ஏண்டா திருப்பி திருப்பி பார்க்கறே?

நீங்க மட்டும் கேட்ட பாட்டை திருப்பி திருப்பி கேட்கலையா?

-----------------------------------


15.  அத்தைக்கு இந்த கலர் பிடிக்குமா? எடுக்கலாமா?
அத்தைக்கு மாமாவையே பிடிச்சிருக்கு... அப்புறம் என்ன?எந்த கலரும் பிடிக்கும்..

-------------------------------
  
16.  தனியா கஷ்டப்படறதுக்கு இன்னொரு மேரேஜ் பண்ணிக்கலாமே?
எதுக்கு? 2 பேரும் சேர்ந்து கஷ்டப்படவா?

------------------------------

17.  ள்ளே வாங்க

அதுக்கு வேற ஆள் பாருங்க...நான் அந்த மாதிரி அலையற ஆம்பளை இல்லை

--------------------------

18.பேண்ட் சர்ட் போட்ட எல்லாருமே ஆம்பளைங்கன்னு சொல்லிட முடியாது, ஏன்னா இப்போ நிறைய லேடீசும் பேண்ட் போடறாங்க..

-------------------------------
 
19. ஒழுங்கா படிச்சு 4 காசு சம்பாதிச்சு, வாழாம இப்படி கண்ட ஆம்பளைங்க பின்னால ஏன் சுத்துறேன்னு பார்க்கறீங்களா?

-------------------------------------

20.பொண்டாட்டி இல்லாத நீ பொண்ணுங்களை பிராக்கெட் போடாம  ஏன் ஊறுகாய் பாக்கெட் போட்டுட்டு இருக்கே?

-------------------------------

http://www.andhrabulletin.com/admin/images/Dhoni%20Movie%20Stills%20(24).jpg

21.  தம்பி.. எங்கே இருக்கே நீ?

அவுட் ஆஃப் ஸ்டேஷன் சார்.. ஊட்டி.. ஹில் ஸ்டேசன்..

அட நானும் ஊட்டிலஃ தான் இருக்கேன், அட்ரஸ் சொல்லு..

அவ்வ்வ்வ்வ்

-----------------------------------------

22.  மொட்டை மாடில ஏன் காய வைக்கறீங்க.. காணாம போயிடும்..

ஆமா, பெரிய சூப்பர் மேன் ஜட்டி..?

-----------------------------------------

23 நீ இங்கே கிரிக்கெட் ஆடிட்டு இருக்கே.. அங்கே ;பிரின்சிபால் என்னை ஃபுட் பால் ஆடிட்டாரு

டாடி.. அவ்ளவ் சின்ன ரூம்ல எப்படி ஆட முடிஞ்சுது?

அடங்கோ

-----------------------------------------

24.  என்னைக்கேட்டா நாட்ல டோனி, சச்சின் டெண்டுல்கர் இவங்களை எல்லாம் பேக் பண்ணீ வீட்டுக்கு அனுப்பனும்..

--------------------------------------

25. நீ ஏன் இப்படி கிரிக்கெட் பைத்தியமா இருக்கே? இந்தியாவுல 110 கோடி பேர்  இருக்காங்க, ஆனா மேட்ச்  ஆட 11 பேர் தான் டீம்க்கு தேவை

 நோ டாடி.. 15 பேரு

--------------------------------------

26 சாரி.. ஹர்ட் யூ

 பரவால்லை விடுங்க, எனக்குள்ள என்ன கஷ்டம் இருக்குன்னு நீங்க ஸ்கேன் பண்ணியா பார்த்திங்க?

--------------------------------

27. சாக்கடைல தெரியாம விழுந்துட்டேன்னு சொல்றதா? விரும்பி வந்தேன்னு சொல்றதா?

---------------------------------

28. ஒரு மனுஷனை முழுக்கா புரிஞ்சுக்காமயே அவங்களை ஹர்ட் பண்ணிடறோம் இல்ல?

--------------------------------------

29.  ஸ்டூடண்ட்ஸ் எக்கேடு கெட்டா உங்களுக்கு என்ன? உங்களுக்கு தேவை ஸ்கூலோட பர்சண்டேஜ், நல்ல பேரு இது மட்டும் தான் முக்கியம்

---------------------------

30. உன் தலைல பெட்ரோல் ஊற்றி கொழுத்தினாலும் உனக்கு படிப்பு வரப்போறதில்லை

------------------------------ 



31.. நீங்க வேணா பாருங்க.. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உள்ளே போடற ஜட்டி கூட ஸ்கூல் யூனிஃபார்ம் மாதிரி அவங்க சொல்றதைத்தான் போடனும்னு சொல்லப்போறாங்க.

-------------------------------

32. பொதுப்பிரச்சனையை 4 பேர் கேட்கற மாதிரி, ஏத்துக்கற மாதிரி சொல்ல தனி திறமை வேணும்..



----------------------------------------

33.  குழந்தைக்கு ஹோம் ஒர்க் சொல்லித்தர்ற அளவு ஒரு பொண்ணு படிச்சிருந்தா போதும்..

------------------------

34. நல்லா கார் ஓட்டத்தெரிஞ்சவங்க மட்டும் வாங்க, நான் டிரைவிங்க் சொல்லித்தர்றேன்னு சொல்ற மாதிரி இருக்கு  எல்லா பசங்களும் நல்லா படிச்சுட்டா அப்புறம் உங்களுக்கு என்ன சார் வேலை?

---------------------------------------------

35.  என் புள்ளயை மக்கு மக்குன்னு சொல்லி சொல்லி என்னை அடிக்க வெச்சுட்டாங்க..

-----------------------------

36.  அந்த பி ஆர் மேடம் வள வளனு பேசுனாலும் தள தளன்னு இருக்கா இல்ல?

------------------------------

37. உனக்கெல்லாம் 10,000 ரூபா தரவே யோசிப்பாங்க, ஒரு லட்சம் ரூபா தந்து அடிக்க சொல்லி இருக்காங்களே/..

----------------------------------

38. நம்ம  பையன் மறுபடி எழுந்திடாத படி நாம அடிச்சிடக்கூடாது

------------------------------------------

39.  படிக்காதவங்களை விட படிச்சவங்க தான் அதிக தப்பு பண்றோம்..

---------------------------

40. எல்லாருக்கும் எல்லா வேலையும் கண்டிப்பா தெரிஞ்சிருக்காது

---------------------------------
http://www.chitramala.in/photogallery/d/598470-1/Dhoni+Movie+Working+Pics+_15_.jpg

ஆண்களில் ஹோம்லி ஃபிகர்ஸ் யார் யார் தெரியுமா?

http://p.twimg.com/Amj8GNHCAAIJgDU.jpg 
இதுதான் காதல் என்பதா? நாய்கள் தூங்கிவிட்டதா?

1.ஏய், சாப்பாட்ல முடி இருக்கு,ஒழுங்கா அரிசி களையலை?

முடி இருந்தா நம்ம உறவு நீடிக்கும்ங்க,

ம்க்கும், இதுக்காகவே இனி அரிசியை நான் களையனும்

------------------------------------

2. மீள் என்றால் என்ன அர்த்தம்?

 அதாவது மேடம். நயன் தாராவுக்கு சிம்பு இப்போ மீள் லவ்வர் ஹி ஹி


--------------------------------

3. ஆண்களில் ஹோம்லி ஃபிகர்ஸ் உண்டா?

யா, வீட்டோட மாப்பிள்ளையா இருக்கற எல்லாருமே  ஹோம்லி ஃபிகர்ஸ் தான் ஹி ஹி

-----------------------------------

4. பொது இடங்களில் என்னை ( என்) மனைவியுடன் பார்க்க நேருகையில் யாரும் பிளாக், ட்விட்டர் பற்றி பேசவேண்டாம் ஹி ஹி


---------------------------------

5. இன்ஸ்பெக்டர், எதுக்காக எங்க ஊர் மைனரை அரெஸ்ட் பண்றீங்க?

ஊர்ல இருக்கற மேஜர் ஆன பல பொண்ணுங்க வாழ்க்கையை பேஜார் பண்ணி இருக்கான்

------------------------------

6. ராகவன் ஜி - பொண்ணுங்க லிப்ஸ்டிக் போடறதுக்கு சிரமமா இருக்காதா? #


அண்ணே, ஆண்களுக்குத்தான் அந்த லிப்ஸ்டிக்கால சிரமம் ஹி ஹி


-------------------------------------

7. அம்மா மேனகா பிச்சை போடுங்கம்மா.

. என்னை ராஜகுமாரின்னு கூப்பிட்டாத்தான்.


. பொல்லாத மொதலாளிடா இவங்க, 4, 5 ராஜ்யம் வெச்சிருக்காங்க:)

--------------------------------

 8. மெடிக்கல் ஷாப் மேனகா -அத்தான், என் ஹேண்டிலை மாத்திட்டேன், இனி நீங்களும் என்னை ராஜகுமாரின்னுதான் கூப்பிடனும்.

 கஸ்டம்ஸ் ஆஃபீசர் - ஒரே குஷ்டமப்பா.சாரி கஷ்டமப்பா

-------------------------------------

 9. ரியாஸ் - உங்களுக்கு மாவுச்சத்து ரொம்ப கம்மியா இருக்கு


அய்யனார் - நல்லா செக் பண்ணுங்க டாக்டர், டெய்லி நான் தான் அரிசி மாவு ஆட்டறேன்

------------------------------

10. டியர், நீ மயில் மாதிரி இருக்கே..

 தாங்க்ஸ் டார்லிங்க், என் கூந்தல் மட்டும் 5 அடி..

 நான் சொன்னது உன் குரலை.. உன் நாக்கே 7 அடி

-----------------------------------


Mutharasan Arasan இன் புகைப்படங்கள்
எதுக்குடா இந்த மானம் கேட்ட பொழப்பு
இவரால்: Mutharasan Arasan -in face book


11. அத்தான், நகைன்னா உங்களுக்கு பிடிக்காதா? ஏன் அலறி அடிச்சுட்டு ஓடறீங்க?


ஹி ஹி , உங்கப்பா போட்ட நகை எல்லாம் பிடிக்கும்


---------------------------------

12. சிவா - தினமும் நொறுங்கும் உன் வளையல்கள் ஒலியே நம் காதல் மொழி!! # அடங்கொய்யால, அதுக்குப்பேரு கில்மா மொழி லேய்

------------------------------

13. ஜெ யின் தவறுகளை எண்ணிப்பாருங்கள்-வைகோ பிரச்சாரம் # ராமானுஜம் - இன்ஃபினிட்டி


--------------------------------

 14. வங்கிக்கொள்ளையர்கள் கவனத்திற்கு -இன்று நாடு முழுவதும் பேங்க் ஸ்ட்ரைக்.. போலீஸ் கவனத்திற்கு - இரவு என்கவுண்ட்டர்க்கு ரெடி ஆகவும்

-------------------------------

15. ஜனநாயக கோவிலில் புளூ பிலிம் பார்க்கும் அரசியல்வாதிகள் - கெஜ்ரிவால் # பிட்டுப்படத்தை பிரசாதமா நினைச்சுட்டாங்க போல


-------------------------------------

 சச்சின் டெண்டுல்கர் சின்ன பையனா இருந்தப்ப எடுத்த மாறுவேட ஸ்கூல் ஃபோட்டோ


16. நான் இப்போது தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன் - நயன் தாரா # தமிழா! தமிழா! நாளை நம் நாளே!மடியும் மடியும் மய்க்கா நாள் இந்த ஃபிகரே!


---------------------------------

17. வாய்ப்புக்கு மேல் வாய்ப்பு! திக்குமுக்காடும் நயன் தாரா # எல்லாமே MAடE வாய்ப்புத்தானா?


------------------------------------------

18. டியர், விடிஞ்சிடுச்சு, பாயை சுருட்டி வெச்சிடேன் ப்ளீஸ்.


. ஏய்யா, உனக்கு என்ன கேடு? நீ செய்ய மாட்டியா அந்த வேலையை?


-----------------------------------------

19. நதிகள் இணைப்புத் திட்டத்தை அமல்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் # ரஜினி - போச்சு, ஒரு கோடி கொடுக்கனுமே?


------------------------------------

20. மிஸ், அமைதிக்கான நோபல் பரிசு உங்களுக்கு தந்திருக்கோம்..

கன் ஃபைட் காஞ்சனா - ஹா ஹா நான் எப்போ அமைதியா இருந்தேன்? 


இனிமே அப்படி இருக்கறதுக்குத்தான் இந்த பரிசே!

----------------------------------------------

Wednesday, February 29, 2012

ஃபிகர் என்ற வார்த்தையை ஒய் ரிப்பீட்டிங்க்? - அட்ரா சக்க சி பி பதில்கள் பாகம் 3

http://www.cineikons.com/wp-content/uploads/2012/01/kajal-agarwal-stills-085.jpg
26.   நீங்க இது வரை விட வேண்டும் என்று நினைத்து விட முடியாத

 கெட்ட பழக்கம் எது? (ஒண்ணு சொல்லுங்க போதும்) - சுதா, பெங்களூர்



 எனக்கு என்னவோ 75 கெட்ட பழக்கம் இருக்கற மாதிரியும், அதுல ஏதோ 

ஒண்ணு சொல்லுங்கன்னு கேட்கற மாதிரியும் இருக்கே? உலகத்துக்கே 

தெரியும் எனக்கு சிகரெட், தண்ணி (சரக்கு), காஃபி, டீ, அசைவம் என எந்த கெட்ட

 பழக்கமும் இல்லைன்னு.. என் கிட்டே இருக்கற ஒரே கெட்ட பழக்கமா அம்மா 

, அப்பா சொல்றது சினிமா ஒண்ணு விடாம பார்க்கும் ஆளா

 இருக்கான்கறதுதான்.. அதனால ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ஒவ்வொரு

 மனிதனுக்கும் ஒரு ரிலாக்ஸ் வேணும், அதுன் எனக்கு சினிமாவா இருந்துட்டு

 போகுது.. இப்போ என்ன?

----------------------------------



27.  நாளுக்கு இரண்டு பதிவு வீதம் பதிவு போடுறீங்களே, உங்கள் பதிவை 

நீங்கள் திரும்ப படிச்சு பார்க்க நேரம் இருக்கா ?         



 நான் போக்கிரி விஜய் மாதிரி, ஒரு தடவை போஸ்ட் பொட்டுட்டா என்

 போஸ்ட்டை நானே படிக்க மாட்டேன்.. ( ஏன்னா ஆல்ரெடி 3 தடவை படிச்சு

 பார்த்துட்டு, மிஸ்டேக் எல்லாம் கரெக்ட் பண்ணிட்டுதானே  பப்ளீஷ் 

பண்றேன்?)


-----------------------------------------

28. டிவிட்டில் சிலசமயம் சிலரை அளவுக்கு அதிகமா கிண்டல் செய்து அவங்க

 பீல் செய்தா காணமல் போயிடுறீங்க ?உங்க ஆக்சுவல் ரியாக்சன் என்ன?      


    

எனக்கு கிடைக்கற நேரம் ரொம்ப கொஞ்சம்.. கேப் கிடைச்சா 5 ட்வீட்

 போட்டுட்டு போயிடுவேன்.. அந்த கேப்ல என்னை காணாதவங்க கிசு கிசு

 பரப்புவாங்க .. பிரச்சனைன்னா ஓடிடறான் .. ஆண்கள் கேள்வி கேட்டா பதில் 

சொல்றதில்லைன்னு.. இவங்களா கிளப்பி விடறதுதான்.. ஆனா சில சமயம்

 குறிப்பிட்ட பெண் பதிவர்களை நகைச்சுவையா கிண்டல் செயுய்யறப்ப அது

 ஓவர் டோஸ் ஆகி அவங்க மனம் வருத்தப்பட்ட சம்பவங்கள் உண்டு, என் 

மேல் தப்பு இருந்தா டைம் லைனில், டி எம்மில் மன்னிப்பு கேட்க 


தயங்கியதில்லை.. 

-------------------------------------------



     29. சில கீச்சர்கள் பற்றி கற்பனை பதிவு போட்டீங்களே,கொஞ்சம் வரம்பு 

மீறியதா தோணலையா ? by @jroldmonk  




ஆமா, கோவை, சிங்கப்பூர் ட்வீட்டர்களை பற்றி தலா ஒரு பதிவு போட்டேன்.

. 2ம் காமெடிக்காகத்தான்.. ஆனால் அதில் ஒரு பதிவு தங்கள் குடும்பத்தை

 மனம் வருத்தம் செய்ய வைத்து விட்டது என்று அந்த ட்விட்டர் சொன்னதும்


அந்த பதிவை அகற்றி விட்டேன்.. 

--------------------------------------------


30.  புதியதாக பதிவு எழுத வருபவர்களுக்கு தங்களின் அட்வைஸ்? :- By

 @Prabhu_B         


நிறைய படியுங்க.. நீங்க ஒரு போஸ்ட் போடனும்னா 10 போஸ்ட் 

படிச்சிருக்கனும்.. நீங்க 10 பேர்க்கு போய் படிச்சு கமெண்ட் போட்டு , ஓட்டு 

போட்டுட்டு வந்தாத்தான் அதுல பாதிப்பேராவது உங்க பதிவுக்கு வருவாங்க.

. அதாவது நீங்க உங்க வீட்டு விஷேஷத்துக்கு மொய் வரனும்னு நினைச்சா

 ஆல்ரெடி நீங்க மொய் வெச்சிருக்கனும்.. எழுதுவது எல்லாருக்கும் 

உபயோகமாக இருக்கனும், மனம் களிக்கும்படி இருக்கனும், மற்றவங்க முகம் 

சுளிக்கும்படி இருக்கக்கூடாது

----------------------------------------



31. இந்த தீராத கலைதாகம்(!) உங்களுக்கு எப்டி,எப்பருந்து வந்துச்சு...? உங்க

 இன்ஸ்பிரேஷன் யாரு?  by @siva_says 



 நான் எப்பவும் வெய்யில்லயே சுத்திட்டு இருப்பேன், ஏன்னா என் வேலை

 அப்படி , வெளீல அலையற வேலை.. அதனால வீட்டுக்கு வந்ததும் செம தாகம்

 எடுக்கும். கொஞ்சம் தண்ணீர் குடிச்சுட்டு போஸ்ட் போட ரெடி ஆகிடுவேன் 


 ( ஏய்யா கேள்விக்கு இடைல ஆச்சரியக்குறி போட்டுட்டா கலாய்க்கறதா


 ஆகிடுமா?)





எனக்கு இன்ஸ்பிரேஷன் சேட்டைக்காரன், குசும்பன்,பன்னிக்குட்டி

 ராம்சாமி,சிரிப்புப்போலீஸ் உட்பட நகைச்சுவையா யார் எல்லாம்

 எழுதறாங்களோ அவங்க எல்லாம்..

 ( இப்போ லேட்டஸ்ட் ஹிட்டர் கட்டதுர கூட எனக்கு இன்ஸ்பிரெஷன் தான்.. )


-------------------------------------




 32.  உங்களை ஃபிகர் என்று அழைக்கலாமா??    By @RealBeenu         



 ஒரு ஃபிகரே என்னை ஃபிகர் என்று அழைக்குதே அடடே..!! 

 ஹலோ.. பொதுவா பொண்ணுங்க  திட்டுனாலே நாங்க சிரிப்போம், 

பாராட்டுனா கேட்கவா வேணூம்.. நீங்க என்னை செம கட்டை, சூப்பர் ஃபிகர் 

இப்படி எப்படி கூப்பிட்டாலும் கோபமே பட மாட்டேன்.. ஏன்னா நாங்க 

நல்லவ்ங்கங்க ங்க 


--------------------------------------------




33. மென்ஷன்களுக்கு இப்போதெல்லாம்  பதில் போடுவதில்லை ஏன் ?       

                       .சிலரிடம் மட்டும் பேசுகிறீர் அது ஏன் ? காரணம் ?   By @soniaarun     

      

மென்ஷன் பார்க்கவே கொஞ்ச நாளாத்தான் கத்துக்கிட்டு இருக்கேன்.. இனி முடிஞ்ச வரை போடறேன்.. எனக்கு டைம் ரொம்ப கம்மி.. இருக்கற கொஞ்ச நேரத்துல ட்வீட்ஸ் போடனும், பிளாக் போஸ்ட் போடனும், கமெண்ட்க்கு ரிப்ளை போடனும், மொய் வைக்கனும்( பிளாக்ல) 

சிலர்ட்ட மட்டும் பேசறேன்னா - யார் நம்ம வேவ் லெங்க்த்க்கு செட் ஆகறாங்களோ அவங்க கூட பேசறேன்.. இப்போ உங்களை என்ன திட்டுனாலும் உங்களூக்கு கோபம் வராது.. கலாய்ச்ச்சாலும் ஜாலியா எடுத்துக்குவீங்க, சீரியஸ் ஆக மாட்டீங்கன்னா உங்க கிட்டே பேசுவேன்.. வீட்டை விட்டு வெளீல வர்றப்பவே சண்டைக்கு தயாரா வாளோட வந்தா..? ( வாள் பொண்ணை சொல்லலை.. )

-------------------------------------------

34. பிகர் , கில்மா என்ற வார்த்தைகள் தான் உங்களுக்கு அதிகம் பிடித்த வார்த்தைகளா?

கூகுள் சர்ச்ல மக்களால அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்ன?னு ஒரு கணக்கெடுத்தேன். அதுல நாகரீகமான வார்த்தைகள் இந்த ரெண்டும் தான்.. இந்த வார்த்தைகலை என் பிளாக்ல  ட்வீட்ஸ் ல அதிகம் பயன் படுத்தறப்போ கூகுள் சர்ச்ல என் பிளாக் தட்டுப்படும் , அது ஒரு மார்க்கெட்டிங்க் டெக்னிக் வேற ஒண்ணும் இல்லை  

-------------------------------

35.    டைம் லைனில் ஒருவர் போடும்  ட்வீட்டை வைத்தே பல ட்வீட் போடுகிறீரே அது எப்படி ? ஏன் இப்படி எல்லாரையும் கலாய்க்கிறீங்க, அதுவும் மென்ஷன்  போடாமலேயே ?     

சொந்தமா சரக்கு இருக்கறவன் வந்தமா ட்வீட்ஸ் போட்டமா போனோமான்னு போயிடுவான், இல்லாதவன் மற்றவங்க போடற ட்வீட்ஸ்ல இருந்து ஒண்ணு புதுசா உருவாக்குவான்  ரீமிக்ஸோ டெக்னாலஜின்னு அதுக்கு பேரு ஹி ஹி 

 மென்ஷன் போட்டு கலாய்ச்சா சண்டை வந்துடும். பொதுவா சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க, கேட்டாலும் எஸ் ஆகிடலாம்.. நாங்க எல்லாம் அட்டாக் பண்றப்பவே ஓடறதுக்கு ரோடு எங்கே இருக்குன்னு பார்க்கற ஆளுங்க ஹி ஹி 


-  தொடரும் 


http://searchandhra.com/english/wp-content/uploads/2009/11/Kajal-Agarwal-Photo-Gallery-1-48.jpg


டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html