Showing posts with label vikatan. Show all posts
Showing posts with label vikatan. Show all posts

Sunday, June 17, 2012

கலைஞர் சாடல் -கலாம் - கலகம்..... கழகம் - கிரகம் - கலைஞர் சாடல்

1.ஆன்லைன் ஆப்பு என்பது டைம் லைனில் நாம் கடலை போடும்போது வாழ்க்கைத்துணையிடம் மாட்டிக்கொள்வதே!


---------------------------------


2. சினேகா - பிரசன்னா மேரேஜை விஜய் டிவில பார்க்கறப்போ சினேகாவின் சிரிப்பில் கூடவே எங்கோ இருக்கும் நாக் ரவியின் சிரிப்பும் என் கண்ணுக்கு...



-------------------------------------


3. கோபத்துல அமலா பால் பொங்குறப்போ அவர் முகத்துல தண்ணீர் தெளிச்சா அடங்கிடுவாரா?



------------------------------


4. விஸ்வரூபம் ட்ரெய்லரை பார்த்தாலே கதி கலங்குது, போட்ட காசு திரும்ப வருமா? - தயாரிப்பாளர், டிஸ்ட்டிபியூட்டர்ஸ்



-----------------------------------------


5. சகுனி ட்ரெய்லர் எனக்குக்கற்றுக்கொடுத்த பாடம் ஹீரோ படத்துல நல்ல முடிச்சவுக்கியா வர்றார்



-------------------------------

6. விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடிச்சிட்டு இருந்த காலம் போய் அடுத்த வாரம் கார்த்தி, அஜித் ரசிகர்கள்.........



------------------------------


7. அஜித்தை கிண்டல் பண்ணுனா அவர்  மாதிரி நடந்து காட்டுன்னு சொல்றாங்க, நல்ல வேளை பூனம் பாண்டேவை கிண்டல் பண்ணலை ;-)



-------------------------------


8. ஜட்ஜ் - ஜெயில்ல ஏதாவது வசதிக்குறைவு இருந்தா சொல்லலாம், 


 நித்தி - லேடி வார்டனை கண்ல காட்ட மாடேன்றாங்க 


----------------------------------

9. பில்லா 2 ரிலீஸ் அப்போ தல ரிலாக்ஸா இருப்பார்.. படம் ஹிட் ஆகிடுமோன்னு விஜய் தான் டென்ஷனா இருப்பார் # அவதானிப்பு 



-----------------------

10. கமல் - வெற்றி, தோல்வியைப்பற்றி நான் என்றும் கவலைப்பட்டதே இல்லை # முதல் போடறவன் தானே கவலைப்படனும்,உங்களுக்கென்ன? 



-----------------------


எந்திரிங்க அய்யா ஊரு வந்துருச்சு.... நீங்கதான் இந்த நாட்டின் சனாதிபதியாம்.... வேடிக்கையா இருக்குல... உங்களைப் பார்த்த சிரிப்பு சிரிப்பா வருது.....:-)


இப்படித்தான் இந்தியாவின் நிலையுமோ.....


11 . ஹாலிவுட் ஸ்பைடர் மேன் கூட  பில்லா 2 மோதுது ,தல ரசிகர்கள் ஜம்பமா சொல்லிக்கலாம் “ எங்க ரேஞ்சே வேற “



--------------------------------


12. அகத்தின் அழகு முக நூலில்  தெரியும்



----------------------------------


13. அஜித் ரசிகர்கள் பேச்சிலர்சா இருந்தாலும் தைரியமா வீடு கொடுக்கலாம்,யாரும் பெண்ணைக்கூட்டிட்டு “ஓடிப்” போக மாட்டாங்க ,நடந்துதான் போவாங்க 



-------------------------

14. பேசாம ஜேம்ஸ்பாண்ட் டை ஜனாதிபதி ஆக்கிடலாம், உலகத்தை சுத்திட்டே இருப்பார் 



----------------------------


15. விஜய் நடிக்கும் படத்தை செகண்ட் பார்ட்டா எடுக்க முடியாது, ஏன்னா அவர் நடிக்கற படமே ரீமேக் -செகண்ட்ஸ்தானே?



------------------------------



16. சின்ன வயசுல எனக்கு கிலாக்காய்னா பிடிக்கும், மிளகாய்ப்பொடி தொட்டு சாப்பிட்டா. அடடா., எப்போ மானாட மயிலாட கலாக்கா வந்தாங்களோ....உவ்வே


-----------------------------

17. ஸ்கூட்டி, பைக் ஓட்டறதுல லேடீஸ் கில்லாடியா இருக்கலாம், ஆனா லேடீஸையே கலாய்ச்சு ஓட்டறதுல நாங்கதான்யா  கேடீஸ்.. ;-)



-----------------------------


18.சென்னையில் 40 பெண்களை திருமண மோசடி செய்தவர் கைது # நாற்பதும் நமதேன்னு அந்த வெண்ணை நினைச்சிக்கிச்சு போல



--------------------------------


19. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை,ஆண்டுக்கு 30முறை விரதம் இருக்கிறேன் -சானாகான் # ஓஹோ, அப்போ மீதி 335 நாட்கள்ல என்ன செய்வீங்க?


-------------------------------


20. கலாம் என்றாலே கலகம் தான் - கலைஞர் #  கழகம் என்றாலே கிரகம் தான்,எங்களுக்கும் எதுகை மோனை வரும்



-----------------------------


Ilaya Raaja shared தமிழச்சி (Tamizachi)'s photo.
இந்தியாவின் 'பண வீக்கம்', 'பணப் பெருக்கம்'




Tuesday, June 12, 2012

கஷ்டாவதானி டி.ராஜேந்தர் பேட்டி

http://www.kollywoodtoday.net/gallery/actors/t_rajendar/images/trajandar15.jpg 

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, திடீர் அரசியல் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர்.  


''ஏன் இந்தத் திடீர் முடிவு?''



''பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியது நான்கு மடங்கு. குறைத்தது ஒரு மடங்கு. பெட்ரோல் விலை உயர்வுக்காக தி.மு.க. போராடியது வெறும் சடங்கு. காங் கிரஸ் தலைமை எச்சரித்த பிறகு கலைஞர் அடங்கி விட்டார் ஒரே அடங்கு. எங்கே போனது அவரது சங்கே முழங்கு? 'ஈழப் பிரச்னைக்கு எம்.பி-க்கள் எல்லாம் ராஜினாமா செய்வோம்’ என்று சொல்லி ராஜினாமா கடிதங்களை முன்பு கலைஞர் வாங்கிவைத்துக் கொண்டதோடு சரி. ஈழத் தமிழர்களுக்காக ராஜினாமா செய்யாத கலைஞரா, பெட்ரோலுக்காகப் பதவியைத் துறப்பார்?''


ஆனால், கலைஞரைவிட அம்மா எவ்வளவோ மேல். மண்ணெண்ணெய் அளவைக் குறைத்த போதும், திட்ட நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியபோதும், மத்திய அரசுக்கு எதிராக உரத்த குரல் கொடுக்கும் ஆற்றல் அம்மா வுக்கு உண்டு. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார். மக்கள் நலனுக்காக மத்திய அரசை எதிர்த்துப் போராடும் அம்மாவின் போராட்ட குணம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். அதனால்தான் அ.தி.மு.க-வை புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆதரிக்கிறேன். கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு புதுக்கோட்டைத் தேர்தலில்தான் அ.தி.மு.க-வை ஆதரிக்கிறோம். இடையில் நடந்த தேர்தல்களில் அவர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை.''



''பால், பஸ், மின் கட்டண உயர்வு உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?''



''கட்டண உயர்வுக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித் திருக்கிறேன். ஆனால், இந்த விலை உயர்வுக்கு தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும்தான் காரணம். மின்உற்பத்திக்கான திட்டங்களை முந்தைய தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் போனதால், அதன் பாதிப்புகள் இப்போது அ.தி.மு.க. அரசு மீது விழுந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நிதிஉதவி அளித்த மத்திய காங்கிரஸ் அரசு, இப்போது ஏன் பாராமுகம் காட்டுகிறது. நில அபகரிப்புப் புகார்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியைப் போன்று வேறு யாராவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? குறைகள் சில இருக்கலாம். ஆனால் அதைத் தாண்டி மக்களுக்கு நல்ல திட்டங் களைத் தருவதைப் பாருங்கள்.''



''கடந்த சட்டசபைத் தேர்தலில் போதிய இடங் களை உங்களுக்கு ஒதுக்காமல், உதாசீனப்படுத்திய ஜெயலிதாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே..?''






''அப்போது அவர் என்னை உதாசீனப்படுத்த வில்லை. விஜயகாந்த் கூட்டணிக்குள் வருவதற்கு முன்பே அ.தி.மு.க-வோடு நான் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தேன். இன்னும் சொல்லப் போனால், கணிசமான தொகுதிகளை ஒதுக்கித் தர அம்மா சம்மதித்தார். விஜயகாந்த் வந்த சூழ்நிலையில், அங்கே நான் இருக்க முடியாது என்பதால் வெளியேற வேண்டிய நிலை. விஜயகாந்த்தைவிட எங்களுக்கு இடங்கள் குறைவாகக் கிடைக்கும் நிலையில், கூட்டணியில் தொடர விரும்பாமல் வெளியேறினோம். இது நானே எடுத்த முடிவு. மற்றபடி முரண்டு பிடித்து எல்லாம் வெளியேறவில்லை. கௌரவமாகத்தான் நடத்தினார்கள். கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற பிறகு, அரசின் செயல்பாடுகளைச் சுதந்திரமாக விமர்சிக்க முடியாத சூழல் ஏற்படலாம் என்பதாலும் வெளியேற வேண்டிய நிலை உருவானது.''

 http://www.thedipaar.com/pictures/resize_20100921101852.jpg

''புதுக்கோட்டை தேர்தலில்  தி.மு.க. போட்டியிடாதது சரிதானா?''


''திருமங்கலம் தேர்தலில் புதிய ஃபார்முலாவை உருவாக்கிய தி.மு.க., சங்கரன்கோவிலில் டெபாசிட்டைப் பறிகொடுத்ததால், இப்போது நிற்காமல் பின்வாங்கி ஓடியிருக்கிறது. புதுக்கோட்டை யில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன? போட்டியிடுவதற்கு என்ன தயக்கம்? தேர்தலில் போட்டியிடாமல் இருக்க எதற்காக வேண்டும் இயக்கம்?


 புதுக்கோட்டையில் தே.மு.தி.க. நிற்கிறது. தி.மு.க. நிற்காமல் திக்குமுக்காடி நிற்கிறது. தன்னிடத்தில் விஜயகாந்த் ஆதரவு கேட்பார் என்பது கலைஞரின் எதிர்பார்ப்பு. யாரும் நிற்காதபோது நான் ஏன் கலைஞரிடம் வெளிப்படையாக ஆதரவு கேட்க வேண்டும் என்பது விஜயகாந்த்தின் இறுமாப்பு!''


''புதுக்கோட்டையில் லட்சிய தி.மு.க. போட்டியிடும் என்று பேசப்பட்டதே?''



''புதுக்கோட்டையில் என்னை நிற்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன். காரணம் அதில் ஒளிந்திருந்த அரசியல்தான். கலைஞர் அரசியல் சாதுர்யத்தை உருவாக்க நினைத்தார். அதை நான் புரிந்துகொண்டதால் தேர்தலில் போட்டியிடவில்லை. 


நான் களத்தில் நின்றிருந்தால், விஜயகாந்த் தி.மு.க-வின் ஆதரவைக் கேட்டிருப்பார். விஜயகாந்த் வந்து தன்னிடம் ஆதரவு கேட்க வேண்டும் என்பது கலைஞரின் விருப்பம். அந்த விருப்பத்துக்கு நான் வழி ஏற்படுத்தித் தரவில்லை. அதேநேரம், விஜயகாந்த் நேரடியாக கலைஞரிடம் கையேந்தாமல், மனைவியை விட்டு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வைத்திருக்கிறார். அதன்மூலம், தி.மு.க-வின் ஓட்டுகள் விழும் என்பது விஜயகாந்த்தின் கணக்கு.''


''உங்களுக்கு பின்னர் கட்சி ஆரம்பித்த சரத்குமாரும் விஜயகாந்த்தும் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருக் கிறார்கள். நீங்கள் மட்டும்..?''


''விஜயகாந்த்துக்கு அரசியல் தலைவருக்கான நாகரிகம் இருக்கிறதா? இரண்டு தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்கிறோம். அதுகூட அவருக்கு இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்திருப்பதே அம்மாவின் தயவால்தான். 


தனியாக நின்று ஒரு இடத்தில்தானே அவரால் ஜெயிக்க முடிந்தது. டி.ஆரின் துணிச்சல் ஊருக்கே தெரியும். சட்டசபைத் தேர்தலில் ஸீட் வேண்டாம் என்று தூக்கி எறிந்தவன். சிறுசேமிப்புத் துணைத் தலைவர் பதவியைக்கூட விரும்பாமல் ராஜினாமா செய்தவன் நான். பதவியை வைத்து எடை போடாதீர்கள். இறைவன் கொடுக்க நினைப்பதை பூமியில் தடுப்பார் எவருமில்லை. இறைவன் கொடுக்க மறுப்பதை பூமியில் கொடுப்பார் எவருமில்லை!''

http://pirabuwin.files.wordpress.com/2009/03/rajender11.jpg?w=600&h=800

நன்றி - விகடன்

Monday, June 11, 2012

வாலு - ஆளை விடு - வாழ விடு - சிம்பு பேட்டி - கிடாவெட்டு

http://www.cinepicks.com/tamil/gallery/vaalu/santhanam-and-simbu-in-vaalu-poster-861.jpgல்யாண சீஸன் நெருங்குவதால், அதற்கு முன்னரே டாப் கியரில் ஆடிவிடும் மூடில் இருக்கிறார் சிம்பு. அடுத்த படத்துக்கு 'வாலு’ என்று பெயர்.



''ஆஹா... திரும்ப சேட்டையை ஆரம்பிச்சுட் டீங்களா?'


சி.பி - அண்ணன்  எப்போ சேட்டையை விட்டாரு? இப்போ ஆரம்பிக்க? ஆல்வேஸ் அண்ணன் சேட்டை மன்னன் தான், ஆனா எடுக்கப்போற படத்தோட டைட்டில் மட்டும் வேட்டை மன்னன்


''இது எல்லாருக்கும் பிடிக்கிற வாலு! இன்னும் பக்கா சென்னைப் பையனா ஒரு படம்கூடப் பண்ணது இல்லை. அப்படி ரொம்பத் துறுதுறுப்பா, செம கலகலப்பா ஒரு ஸ்க்ரிப்ட் கொண்டுவந்தார் விஜய்சந்தர். லவ் ஸ்டோரி. இதில் என் வால்தனம் மட்டும் இல்லை. எல்லோரோட வால்தனமும் இருக்கிற - மிஸ் பண்ணவே முடியாத கதை. ஹன்சிகா, சந்தானம்னு ஹிட் பேக்கேஜ் சேர்த்து, உடனே இறங்கிட்டோம்.


 தீபாவளிக்கு வர்றான் வாலு. படத்தில் காமெடி அள்ளும். சந்தானத்தை நான்தான் சினிமாவில் முதல்ல கொண்டுவந்தேன். இப்ப, எல்லா ஹீரோக்களுக்கும் அவர் செம தோஸ்த் ஆகிட்டார். 'மன்மதன்’ முதல் நாள் ஷூட்டிங்ல அவரோட சில ஆக்ஷன்களைப் பார்த்தேன். 'ஜஸ்ட் லைக் தட் பெரிய ஆள் ஆயிடுவ நண்பா. சீக்கிரமே என் படத்துக்கு உன்கிட்ட கால்ஷீட் கேட்டு நிக்கிற மாதிரி இருக்கும்’னு சொன்னேன். 'என்ன சார்... பயமுறுத்துறீங்க?’னு தயங்கித் தயங்கிச் சிரிச்சார். நான் சொன்ன மாதிரியே ஆச்சு.


 ஆனா, மனுஷன் ஜெம் ஆஃப் தி ஜெம். என் படம்னா நான் சந்தானத்துக்கிட்ட டேட்ஸ் கேட்கிறது இல்லை. அவருக்கு ஏத்த கேரக்டர்னா 'நீதாம்பா’னு சொல்லிடுவேன். 


ஷூட்டிங் அன்னிக்கு ஸ்பாட்ல நிப்பார். அதுதான் சந்தானம்.''


 சி.பி - ஓஹோ நீங்களும் எம் ஜி ஆர் மாதிரிதானா? நீங்க இருக்கறப்ப சக டெக்னீஷியன்கள், நடிகர்கள் உட்கார விட மாட்டீங்களா?

''ஆர்யா... நயன்தாரானு கிசுகிசுக்கிறாங்களே?''




''அட, அவங்க ஒரு காலத்தில் எனக்கு ஃப்ரெண்ட். அதுக்காக இன்னமும் கேட்டுக்கிட்டே இருக்கணுமா? அவங்க நாளைக்கு இன்னொருத்தர்கிட்ட இருப்பாங்க. அப்புறம், கல்யாணம் பண்ணிப்பாங்க. அதுக்கும் நான் பதில் சொல்லிட்டே இருக்கணுமா? நல்ல காமெடிங்க!''



சி.பி - கீதை வாசகம் சிம்பு அண்ணன் ரசிச்சு மனசுக்குள்ள படிக்க நான் டெடிகேட் பண்றேன் - எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையது , எதை நீ தள்ளிட்டு வந்தாய், போறப்ப அள்ளிட்டுப்போக?


http://chennaionline.com/images/gallery/2012/June/20120606035951/Vaalu_Movie_First_Look_Wallpapers_02.jpg



''இப்போதைய ஹீரோக்களில் யாரைப் பிடிச்சிருக்கு?'



''ஜெய்! அவரோட முகம் முதல் சீன்லயே இம்ப்ரெஸ் பண்ணிருது. நல்ல நல்ல படங்களா பண்ணும்போது இன்னும் சூப்பரா வருவார். சாந்தனுவுக்கு டான்ஸ், காமெடி நல்லா வருது. ஆனா, இன்னும் நல்ல நேரம் அமையலை. ஆர்யா 'பாஸ்’ மாதிரி அசால்ட்டா பண்ணா ரொம்ப நல்லா இருக்கு. கார்த்தியோட பட செலெக்ஷன் அட்டகாசம். ஜெயம் ரவியை ரொம்ப இயல்பா எல்லாரும் ஏத்துக்கிறாங்க. ஜீவாவுக்கு ஃபிட் ஆகாத கேரக்டர் எதுவும் இருக்கானு தெரியலை. பெர்ஃபார்ம் பண்றதில் தனுஷ் கவனம் செலுத்துறார்.''
''உங்களுக்கு செல்வராகவன், பாலா மாதிரி டைரக்டர்களுடன் சீரியஸா படம் பண்ணணும்னு ஆசை இல்லையா?''




''ஒரு விஷயம்... தனுஷ்தான் அப்படிப் பண்ணுவார். அவருக்கு நடிப்பில் சீரியஸா ஏதாச்சும் பண்ணிட்டே இருக்கணும்னு ஆசை. நமக்கு அந்த ஆசை இல்லை. நான் பெர்ஃபார்ம் பண்றவன் இல்லை... என்டர்டெய்ன் பண்றவன்


. பயங்கரமா நடிச்சு பேர் வாங்கணும்னு நான் ஆசைப்படக்கூட மாட்டேன். ஆஸ்கர், தேசிய விருது வாங்கணும்னு எனக்குக் கனவுகூடக் கிடையாது. ரஜினி 'தளபதி’யில் பண்ண மாதிரி எப்பவாவது ஒரு ரோல் நடிக்கலாம். அப்படித்தான் வெற்றிமாறன் கதையில் இன்ட்ரஸ்ட் எடுத்து நடிக்கப்போறேன். மத்தபடி, நமக்கு தியேட்டர்ல விசில் பறக்கணும். கைத்தட்டல் கொட்டணும். டிஸ்ட்ரிபியூட்டர் சந்தோஷப்படணும். அவ்வளவுதான்.''



''அது யு டியூப்போ... இல்லை ஃபேஸ்புக்கோ... உங்க அப்பாவைச் சகட்டுமேனிக்குக் கிண்டல் கேலி பண்றாங்களே... அதைப் பத்தி அப்பாட்ட பேசுவீங்களா?''



''ஜெயிச்ச மனுஷங்களை எப்பவும் நிறையக் கிண்டல் அடிப்பாங்க. அப்படித்தான் அப்பாவையும் கமென்ட் பண்றாங்க. அவரோட ரெக்கார்டு இன்னும் முறியடிக்கப் படலை. அவ்வளவு ஏங்க, ரஜினி சாரையே அதுல பயங்கரமா கிண்டல் அடிக்கிறாங் களே. ரஜினி ஜோக்ஸ்னு தினமும் நிறையக் கொட்டுதே? கிண்டலுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டே இருந்தா, அப்புறம் நாம வேற எந்த வேலையையும் பார்க்க முடியாது. டேக் இட் ஈஸி!''


''சினிமாவில் தம்பியோட என்ட்ரி எப்போ?'



''இந்த வருஷக் கடைசி, இல்லைன்னா... அடுத்த வருஷம். நல்லா டான்ஸ் ஆடுறான். கொஞ்சம் வெயிட்டா இருக்கான். ஃபிட்னெஸ் சரிபண்ணிட்டா, டபுள் ஓ.கே. அவனுக்கு ஏத்த முதல் ஸ்க்ரிப்ட்டை அப்பாதான் ரெடி பண்றார். சின்ன வயசுலயே ஸ்டேட் அவார்டு வாங்கினவன். என்னைவிட நல்லா நடிப்பான்.'



''தங்கச்சி இலக்கியாவுக்குக் கல்யாணம் எப்போ?''



''அடுத்த வருஷம். மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. அந்தப் பையனை எனக்குப் பிடிக்கணும். என் தங்கச்சிக்குப் பிடிக்கிற பையனை எனக்கும் பிடிக்கும். என் தங்கச்சிக்கு நான்னா ரொம்ப உசிரு. கல்யாணம் ஆயிட்டா அவளை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அதுக்காக எத்தனை நாள்தான் வீட்லயே வெச்சுட்டு இருக்க முடியும்? 'பாசமலரே, சீக்கிரம் கௌம்பு’னு இப்பவே சொல்லிச் சொல்லிப் பழகிட்டு இருக்கேன். தங்கச்சிக்கு சினிமா ஆர்வம் இல்லை. படிப்புதான் இஷ்டம். எம்.பி.ஏ. முடிச்சிருக்கா. சினிமா கதை சொன்னா, நல்லா ஜட்ஜ் பண்ணுவா. 'லூஸுப் பெண்ணே பாட்டு ஹிட்டாகும்’னு முதல்ல சொன்னது அவதான். 'எவன்டி உன்னைப் பெத்தான்’ ப்ளே பண்ணப்போ, கொஞ்சம் பயமா இருந்தது. 'இல்லண்ணா, பொண்ணுங்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னா.'



''ரொம்ப சமர்த்தா இருக்கிற மாதிரி இருக்கு. சரி... இப்ப இண்டஸ்ட்ரியில் யாருக்கு உங்க ப்ளேபாய் பட்டத்தைக் கொடுக்கலாம்?''



''நிறைய விஷயங்கள் பட்டு உணர்ந்த பிறகு, இப்பதான் மெச்சூரிட்டி வந்திருக்கு. இனிமே ரொம்ப பெர்ஃபெக்ட்டா இருக்கணும். நானே ப்ளேபாய் இமேஜை விட்ட பிறகு, அப்படி யாரு இருந்தா எனக்கென்ன?''


 http://reviews.in.88db.com/images/stories/nayanthara-simbu-vaalu-movie.jpga

thanx - vikatan

Sunday, June 10, 2012

முன்னணி வசனகர்த்தாக்களின் - 'நான் ரசித்த வசனம்'

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் திரைக்கதை - வசனகர்த்தாக்கள் சிலரிடம், ''நீங்கள் எழுதிய வசனங்களிலேயே, நீங்கள் ரசித்து மகிழ்ந்த வசனம் எது?'' என்று கேட்டோம். அவர்கள் ரசித்த சில வசனங்கள்: 



 'வியட்நாம் வீடு’ சுந்தரம்: 


பிரஸ்டீஜ் பத்மநாபன் ரிட்டையரான அன்று வீட்டுக்குள்ளே வந்ததும், தான் யூஸ் பண்ணின டிஃபன் கேரியர்வைத்த கூடையிடம் பேசுவார்: ''நாளைலேருந்து நீ ஆபீஸுக்குப் போக மாட்டே... இன்னி யோடு சரி!'' அடுத்து, கோட்டுகிட்டே சொல்வார்: ''இனிமே யூ ஆர் நாட் நெசஸரி... என் சர்வீஸே கம்பெனிக்கு நாட் நெசஸரின்னுட்டா... இவ்வளவு வருஷம் வேலை செஞ்சோம்... அட, வயசாயிடுத்துன்னு அவன் ஆத்துக்கு அனுப்பிச்சுட் டான்... நானாவது கேட்டிருக்கலாம். நேக்கு ஒரு பிரஸ்டீஜ். பிரஸ்டீஜ் பத்மநாபனோல்லியோ... வந்துடுத்து... குழந்தைகள்லாம் சின்ன குழந்தைகள்... விவரம் தெரியாம வளர்த்துட்டேன்... பொறுப்பு வரல்லே... சாவித்திரிக்கே இன்னும் பொறுப்பு வரலை...'' என்று சொல்லிவிட்டுத் தாயார் படத்தின் முன்னே நின்று, ''அம்மா! நான் ரிட்டையராயிட்டேன்... உன் குழந்தைக்கு 55 வயசாயிடுத்து... ஹி இஸ் கௌன்ட்டிங் ஹிஸ் டேஸ் டு தி க்ரேவ்''னு சொல்லிண்டே அழுவார் சிவாஜி.



கடைசியில் ஆஸ்பத்திரிக்குப் பத்மநாபன் கிளம்பும் முன், தன்னை வளர்த்து ஆளாக்கின அத்தையிடம் பணத்தைக் கொடுத்து... ''நீ காசிக்குப் போகணும்னு சொன்னே பார்... இந்தா, வெச்சுக்கோ'' என்பார். ''இப்ப எதுக்கப்பா?'' என்று அத்தை கேட்பாள்.


''இருக்கட்டும்... வெச்சிக்கோ... நீ முந்திண்டா நோக்கு... நான் முந்திண்டா நேக்கு...'' என்று குலுங்கக் குலுங்க அழுது மற்றவர்களையும் அழவைத்தார் பத்மநாபனாக வரும் சிவாஜி!



ஏ.எஸ்.பிரகாசம்: 


'புகுந்த வீடு’ படத்தில் மனைவி ஒரு புதிர் போடுகிறாள். விடுகதைபோலச் சொல்லி விடையும் சொல்லும் அந்த வசனம்: ''சேர்ந்தது ரெண்டு பேரு... சிக்கினது ஒரு புதையல்... ஒருத்தருக்குத் தெரியும், ஒருத்தருக்குத் தெரியாது... இதிலே சேர்ந்தது நீங்களும் நானும்... புதையலைத் தெரிஞ்சது நான். தெரியாதது நீங்க. புதையல்... இப்ப என் வயித்துலே வளர்ந்துக்கிட்டிருக்கற உங்கக் குழந்தை...''



'வீட்டு மாப்பிள்ளை’ படத்தில் மாமனார் சுந்தர்ராஜன் தன் இரு மாப்பிள்ளைகளில் பணக்கார மாப்பிள்ளையைத் தன் 'பைப்’புக்கும், ஏழை மாப்பிள்ளையைச் செருப்புக்கும் உதாரணம் காட்டு வார்.


ஏழை மாப்பிள்ளையான ஏவி.எம்.ராஜன் சொல்வார், ''மாமா!... நீங்க கையிலே பிடிச்சுக்கிட்டிருக்கிற 'பைப்’ உங்களைத் தேச்சிக்கிட்டு இருக்கு... நீங்க கால்லே போட்டிருக்கற செருப்போ உங்களுக்காகத் தேஞ்சிக்கிட்டிருக்கு...''



விசு: 'அவன்... அவள்... அது’ படத்தில் 'குழந்தை மேல் பாசம்கொண்டு சொந்தம் கொண்டாடக் கூடாது’ என்று கண்டிஷன் போடும் லட்சுமியிடம், ஸ்ரீப்ரியா பதில் சொல்வார்: ''பெத்த பொண்ணை ரயில்வே லைன்லே போட்டுட்டுப் பக்கத்து வீட்டுக்காரனோட ஓடினவளுக்குப் பொறந்தவம்மா நான். என் பரம்பரைக்கே பாசம் கிடையாது... நீ என்னை நம்பலாம்...''


'சதுரங்கம்’ படத்தில் லஞ்சம் வாங்காத ரஜினியை லஞ்சம் வாங்கத் தூண்டுவார் பிரமீளா.


பிரமீளா: உங்க ஆபீஸ் கிளார்க் சிவகுமார் தன் பொண்டாட்டிக்கு வைர மூக்குத்தி வாங்கிக் கொடுத்திருக்கார்... என்ன மூக்குத்தி... வைர... வைர... மூக்குத்தி...


ரஜினி: சிவகுமாரோட பொண்டாட்டி ஊர்லே கண்டவனோட போறாளாம்... நீயும் போறியா..? அப்ப நானும் வைர மூக்குத்தி வாங்கித் தரேன்...



மணிவண்ணன்: 


'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்:


அம்மா: ஏண்டா விச்சு, பேச முடியாம படுத்துண்டிருக்கியா..? இல்லே, பேசக் கூடாதுன்னு படுத்துண்டிருக்கியா?


விச்சு: அம்மா... அவ இல்லாம என்னாலே இருக்க முடியாதும்மா... பசிக்குது... என்னாலே சாப்பிட முடியலே... தூக்கம் வருது... என்னாலே தூங்க முடியலே... நா அவளைப் பார்க்கணும்... அவளோட பேசணும்... அவளோட வாழணும்... இல்லே, அவளோட சாகணும்மா...


அதே படத்தில் இன்னொரு சீன்ல...


பாதிரியார்: கவலைப்படாதீங்க... கர்த்தரோட ஆசீர்வாதத்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்மா...



அம்மா: எல்லாம் நல்லபடியா நடந்தா சரிங்க... அது கர்த்தரோட ஆசியிலே நடந்தாலும் சரி, கந்தனோட கருணையாலே நடந்தாலும் சரி...



மௌலி: 


பள்ளிப் பருவத்தில் தன் தந்தை மிகவும் கண்டிப்பாகத் தன்னை வளர்த்ததைத் தனக்கு இழைத்த கொடுமையாக எண்ணிக்கொண்டு தன் மகனுக்கு அளவுக்கு மீறி வசதிகள் செய்துதருகிறார் தந்தை. இதனால் பாட்டனார் உள்ளே இருக்கும் ரூமில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து வாசல் கதவு வரை வந்துவிடுகிறார்.



வாய் மூடிக்கிடக்கும் பாட்டனாரைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டுக்கு வரும் குடும்ப நண்பன் கான் ஆச்சர்யப்பட்டுக் கேட்கிறான்.


கான்: என்ன பெரியவரே... இங்க மூலையிலே குந்தியிருக்கீங்க...?


பெரியவர்: பேரனுக்கு விவரம் தெரியாம இருந்தப்ப உள்ளாற இருந்தேன். விவரம் தெரிஞ்சுது - ஹாலுக்கு வந்தேன். வேலைக்குப் போனான் - இங்கே வந்துட்டேன். நாளைக்கு வெளியே வராந்தாவில் போடறதுக்குள்ளாற போயிடணும்பா...



'ஒரு வாரிசு உருவாகிறது’ படத்தில் இடம்பெறும் இந்த வசனத்தை வயதானவர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்!



நன்றி - விகடன் 

Saturday, June 09, 2012

ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் அதிரடிப்படங்கள் 4 - முன்னோட்டம்

சும்மாச்சுக்கும் இல்லை... நிஜமாகவே உலகம் முழுக்க வெளியாகி திரையரங்குகளை அதிரடிக்கவிருக்கும் மெகா சினிமாக்கள் குறித்த கலர்ஃபுல் டிரெய்லர் இங்கே... -ஜாக்கிசான்,ஜேம்ஸ்பாண்ட்,ஸ்பைடர் மேன் -லேட்டஸ்ட் படங்கள் ஒரு பார்வை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjb6qt7JlXkMSs-DZjTDbHWnfGksOCP8LlErDRkECHj30yauePg6JmWr80yHQnYcd_XQ6DGNi0_Qxno0D6f4tSo5xMqEBU5jr-iG1xgpNUrwaxhAPpGM0_lD6lrB5xa1S21QW_EvBN1SCc/s1600/Skyfall+Movie+Poster.jpg

ஸ்கை ஃபால்

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 23-வது படம். டேனியல் க்ரேய்க்கின் மூன்றாவது பாண்ட் அவதாரம். ''டபுள் ஓ செவன்... நீ என் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவன்னு உனக்குத் தெரியாதா?'' என அடிக்கடி பாண்டின் மீது செல்லக் கோபம் காட்டும் 'மிஸ் எம்’ அப்பத்தா ஓர் இக்கட்டில் சிக்கிக்கொள்கிறார். அது அவர்களின் 'எம்16’ (MI6) புலனாய்வு அமைப்புக்கே சிக்கலாகும் சமயம் பாண்ட் என்ன செய்கிறார் என்பதுதான் படம்.


'மிஸ் எம்’ வேடத்தில் முந்தைய படங்களில் நடித்த ஜூடி டென்ச்சின் கணவர் இறந்த பிறகு, 'இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்’ என்று அறிவித்திருந்தார். ஆனால், பிறகு 'பாண்ட் படங்களுக்கு என் ஆயுள் முழுக்க நடிக்கக் கடன்பட்டு இருக்கிறேன்’ என்று தன் முடிவை மாற்றிக்கொண்டு, அடங்காத குதிரை பாண்டை மிரட்டி வேலை வாங்கும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.


''மிஸ்டர் ஜேம்ஸ்... யார்கிட்ட இருந்து எப்படி உண்மையை வரவழைக்கணும்னு உங்களுக்குச் சொல்லியா தரணும்?'' என்றபடி ஆடைகளைக் களையும் ஹீரோயின்களாக நவோமி ஹாரிஸும்  பெரினிஸ் மார்லோவும் நடித்திருக்கிறார்கள். கறுப்பழகி நவோமி ஹாரீஸுக்கு படத்தில் பாண்டுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகள் உண்டு. பாண்டுடன் நவோமி உருண்டு புரளும் சமயமே ஹிட் ஹாட் கெமிஸ்ட்ரியும் அரங்கேறுமாம்.


முன்னெப்போதையும்விட, இந்த பாண்ட் படத் தயாரிப்பில் ஏகப்பட்ட சிக்கல். ஆரம்பத்தில் எம்.ஜி.எம். நிறுவனம்தான் படத்தைத் தயாரித்தது.


ஆனால், வங்கிக் கொள்ளையில் பணத்தைப் பறிகொடுத்து மிகப் பெரிய இழப்பில் தவித்த அந்த நிறுவனம், படத்தை சோனி நிறுவனத்துக்குக் கை மாற்றியது. இதனால் உப தயாரிப்பாளர்கள்  நம்பிக்கையிழந்து கழன்றுகொண்டனர். இந்தியாவில் கொங்கன் ரயில்வேயின் அதீத வளைவுகளில் படம் பிடித்த சமயம் ரசிகர்கள் கூட்டத்தால் ரத்தான படப்பிடிப்பு, விபத்து காரணமாக டேனியல் க்ரேய்க்கின் ஓய்வு என ஏகப்பட்ட தடைகள். அத்தனையையும் தாண்டி உள்ளம் கொள்ளைகொள்ள வருகிறான் பாண்ட்!



படத்துக்கான பட்ஜெட்...? 150 மில்லியன் டாலர்கள் மட்டுமே! நம்மூர் மதிப்பில் கிட்டத்தட்ட 838 கோடி ரூபாய். படத்தில் வில்லனுக்கே 100 கோடி சம்பளமாம். அப்போ க்ரேய்குக்கு..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvazIv0HWuUK8xDyTsg_CWYCaUU27M7y8ieU_BSQ3Gw9zX0_w3KRmRoKoNo3E31oHVSHJhz1sSLwauS6UX6y8UxhszNfw78SwcKo8ad6OzQyoP1TodBcJQRSJbibBL0Pt22_HbltUvlavY/s1600/cz12+poster+cannes.JPG



சைனீஸ் ஸோடியாக்
''இந்தப் படத்தோடு ஆக்ஷனில் இருந்து ஓய்வுபெறப்போகிறேன். இனி, என் வயதுக்குத் தகுந்த மென்மையான படங்களில் மட்டுமே நடிப்பேன்'' என ஜாக்கிசான் அறிவித்திருப்பதால், எதிர்பார்ப்பை மில்லியன் டாலருக்கு எகிறவைத்துள்ள படம்... 'சிஇசட்12’ (CZ12) என்று குறிப்பிடப்படும் சைனீஸ் ஸோடியாக்.


12.12.12-ல் வெளியாகவிருக்கும் இந்தப் படம், ஜாக்கியின் ஹிட் சீரிஸ் படமான 'ஆர்மர் ஆஃப் காட்’ படத்தின் மூன்றாவது பாகம். சகட்டுமேனிக்குக் காயங்கள், 58 வயதுக்கே உரிய தளர்ச்சி, காதல் மனைவி லின் ஃபெங்கின் தொடர் அறிவுரை கள்தான் காரணம், 'ஆக்ஷன் ரிட்டையர்மென்ட்’ முடிவுக்கு.


படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, ஆக்ஷன் என அத்தனையும் ஜாக்கி சான். சீன அரசின் பொக்கிஷத்தை ஸ்பெயின், பிரிட்டிஷ் படைகளின் பாதுகாப் பில் இருந்து மீட்டு வரும் முந்தைய பாகக் கதையின் தொடர்ச்சிதான் என்றாலும், நவீன டெக்னாலஜியோடு ஆக்ஷன் காட்சிகளை அலேக்காக அமைத்திருக்கிறார் ஜாக்கி.

 க்ளைமாக்ஸ் சண்டைக்கு மட்டும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாம். புவி ஈர்ப்புக்கு எதிராகக் காற்றில் பறந்து மோதும் சாகசக் காட்சிகளில் தன் டிரேட் மார்க் குறும்புத்தனம் சேர்த்து ஷூட் செய்திருக்கிறார். ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் என உலகின் அத்தனை சாகசங்களையும் உள்ளடக்கிய பேக்கேஜாக வரும் இந்தப் படத்திலும் வழக்கம்போல டூப் போடாமல் நடித்து இருக்கிறார் ஜாக்கி. 'என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது நீயல்லவா’ என்று ரசிகர்களை நோக்கிப் பாடுவதற்கு மிகப் பொருத்தமான ஜாக்கி... இனி, 'ஒரு பவுன் வியர்வை’ சிந்த மாட்டார் என்பது அகில உலக ரசிகர்களுக்கும் வருத்தமே!



தி அமேஸிங் ஸ்பைடர் மேன்
டம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. முந்தைய ஸ்பைடர் மேன் படங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ என்ற ஹிட் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் படம். ஸ்பைடர் மேனின் பீட்டர்பார்க்கர் கதாபாத்திரத்தில் இந்த முறை நடித்திருப்பவர் ஆண்ட்ரூ.

http://emma-stone-photos.yesyada.com/wp-content/uploads/2012/04/the-amazing-spider-man-poster.jpg


 'தி சோஸியல் நெட்வொர்க்’ படத்தில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸக்கர்பெர்க்கின் ஆருயிர் நண்பன் சாவ்ரின் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஆண்ட்ரூ. இப்போது 'ஸ்பைடர் மேன் படத்துக்காக ஜிம்னாஸ்டிக்ஸ், நடனம், சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு சின்சியராக நடித்தவரை, இரண்டாம் பாகத்துக்கும் கமிட் செய்துவிட்டார்கள். ஆண்களின் மனம் கவர்ந்த டாப் 100 செக்ஸி அழகிகளில் ஆறாவது இடம் பிடித்த எம்மா ஸ்டோன்தான் இந்த வலை மனிதனுக்கு வலை விரிக்கும் அழகி!


படத்தில் இந்தி நடிகர் இர்ஃபான் கான் ('ஸ்லம் டாக் மில்லினியர்’ பட இன்ஸ்பெக்டர்!) ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 'நான் வில்லன் இல்லை. ஆனால், படத்தில் என்னுடைய ஆராய்ச்சிகள் ஸ்பைடர் மேனுக்கு வில்லத்தனமாகத் தெரியும்!’ என்கிறார் இர்ஃபான். படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2010-ல் தொடங்கி ஏப்ரல் 2011-லேயே முடிவடைந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக 'போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகள் மட்டும் நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் வெளியான 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ வீடியோ கேம் மெகா ஹிட் அடித்திருக்கிறது.

http://moviecarpet.com/wp-content/uploads/celebrities/the-amazing/spider-man-character-posters/The%20Amazing%20Spider-Man%20Character%20Posters-03.jpg


இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில்... இந்தியாவில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூன் மாதம் வலை விரிக்கப்போகிறான் இந்த ஸ்பைடர் மேன்!



வேர்ல்டு வார் இஸட்
மெரிக்க எழுத்தாளர் மார்க்ஸ் ப்ரூக்ஸின் 'தி வேர்ல்டு வார் இஸட்’ நாவல் அப்படியே சினிமாவாகி இருக்கிறது. 2006-ல் வெளியான அந்த நாவலில் கவரப்பட்ட ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், தானே படத்தைத் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.


கதை? 'ஸோம்பீஸ்’ (zombies) எனப்படும் மரணம் இல்லா மந்த மனிதர்களால்தான் உலகம் அழியும் என்பதே ஒன் லைன்!


ஆட்கொல்லி வைரஸால் தாக்கப்படும் மனிதர்கள் தங்கள் சிந்திக்கும் திறனை இழந்து வெறும் சதைப் பிண்டங்களாக அலைகிறார்கள். அந்த மந்த மனிதர்களின் மூளையில் பதிந்துள்ள ஒரே பழக்கம்... இயல்பான மனிதர்களைக் கொன்று தின்பது மட்டுமே. இந்த ஸோம்பிக்களின் மூளையைச் சிதைப்பது மட்டுமே அவைகளை அழிக்கும் ஒரே வழி. நிஜத்திலும் இதுபோன்ற ஸோம்பிக்களால்தான் உலகம் அழியப்போகிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டுள்ள ப்ரூக்ஸ், 'ஸோம்பிக்களால் கடி வாங்குபவர்களும் ஸோம்பிகளாக மாறிவிடுவார்கள்.

http://farm5.staticflickr.com/4116/4759295551_3baa1e8cca_z.jpg


இந்தக் கதையை நான் கற்பனையில் மட்டுமே  உருவாக்கவில்லை. இந்த நாவலுக்காக நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது, சில ராணுவ ரகசியங்களை  தெரிந்துகொண்டேன். அமெரிக்க ராணுவம் ஸோம்பிக்களைத் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறது’ என்று அதிர்ச்சி அளிக்கிறார் ப்ரூக்ஸ்.


 படத்தில் எதிரி நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க ஸோம்பிக்களை உருவாக்கும் அமெரிக்க, சீன ராணுவத்தின் கோர முகத்தைப் பதிவுசெய்திருக்கிறார்களாம். தீவிரவாதத்தின் இன்னொரு பக்கத்தை 125 மில்லியன் அமெரிக்க டாலர்களில் செலவுசெய்து காட்டுகிறார்கள். ஸோம்பிக்கள் நிஜத்தில் வந்தால், நாமெல்லாம் என்னாவோம்?!



 நன்றி - விகடன்

Thursday, June 07, 2012

செஸ்’வநாதன் ஆனந்த் பேட்டி @ விகடன்

'செஸ்’வநாதன் ஆனந்த்!


மாஸ்கோ போட்டியில் சாம்பியன்ஷிப் வென்று, ஐந்தாவது முறை உலக சாம்பியன் ஆகியிருக்கிறார் ஆனந்த். ''ஆனந்தின் ஸ்டைல் மலை ஏறிவிட்டது. இந்த முறை கெல்ஃபாண்ட்தான் சாம்பியன்'' எனப் போட்டி தொடங்கும் முன் ஆனந்தை ஏகத்துக்கும் சீண்டின ரஷ்ய ஊடகங்கள். முன்னாள் சாம்பியன் காஸ்பரோவோ, ''ஆனந்திடம் வெற்றிக்கான ஊக்கம் இல்லை'' என கமென்ட் அடித்தார். அத்தனை விமர்சனங்களுக்கும் தனது வெற்றியால் பதில் சொன்னார் ஆனந்த். 


''இந்த வெற்றி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கடைசி நிமிஷம் வரை ரெண்டு பேருக்கும் செம சண்டை. பயங்கர டென்ஷன். ரெண்டு பேருக்குமே ஜெயிக்கிறதுக்கான சான்ஸ் ரொம்ப ரொம்பக் கம்மி. டை பிரேக்கர் வரை இழுத்துட்டுப் போய்... கடைசி நாள் அஞ்சு மணி நேரம் தொடர்ந்து விளையாடி இருக்கோம். மறக்க முடியாத வெற்றி!'' - ரொம்பவே ரிலாக்ஸ்டாகச் சிரிக்கிறார் ஆனந்த்.


''இந்த வெற்றி யாருக்குச் சமர்ப்பணம்?''


''என் பையன் அகிலுக்கு. அவருக்கு ஒரு வயசுதான். 'அப்பா சாம்பியன் ஆயிட்டேன், உனக்கு டெடிகேட் பண்றேன்’னு இப்போ சொன்னாலும் அவருக்குப் புரியாது. ஆனா, அகில் பிறந்த பிறகு கிடைச்ச இந்த சாம்பியன் பட்டம் ரொம்பத் திருப்தி கொடுத்திருக்கு.''


''சாம்பியன்ஷிப் போட்டிக்கு எப்படித் தயாரானீர்கள்?''


''கிட்டத்தட்ட நாலு மாசம் பிராக்டீஸ் மட்டும்தான்! கெல்ஃபாண்ட் ரொம்பவும் டேலன்டட் ப்ளேயர். அவரோட மூவ்களைக் கணிப்பது ரொம்ப சிரமம். ஹான்ஸ் ஷ்மிட், நீல்சன், ரஸ்டம், சௌரவ் சேகர் கங்குலினு என் டீம் நபர்களோட கடந்த நாலு மாசமும் விளையாடிக்கிட்டே இருந்தேன். கஷ்டமான மூவ்களைச் சமாளிக்க மட்டுமே ஸ்பெஷல் பயிற்சி எடுத்துட்டு, மாஸ்கோ போனேன். முதல் ஆறு ஆட்டங்களில் கெல்ஃபாண்டைச் சமாளிச்சு டிரா பண்றதே பெரிய போராட்டம் ஆகிருச்சு. ஏழாவது கேம்ல அவர் ஜெயிச்சுட்டார். ஆனா, நான் அந்தப் பதற்றத்தை மனசுல ஏத்திக் கலை. 'இன்னும் அஞ்சு கேம் இருக்கு. எப்படியும் ஜெயிச்சுடலாம்’னு நம்பிக்கையா  இருந்தேன். அடுத்த கேம்லயே சின்ன லூப் கிடைச்சது. அன்னைக்கு போட்டி முடிஞ்சு ஹோட்டலுக்கு வந்த பிறகும் விளையாடிட்டே இருந்தேன். கெல்ஃபாண்டும் மறுநாள் என்னைப் போலவே ரொம்பவும் தயாரா வந்தார். என்னோட மூவ்களுக்கு அவரோட எதிர் மூவ்கள் அதிரடியா இருந்துச்சு. அப்போ எந்த நிலைமையிலும் அவசரப்படாம விளையாடியதே இந்த வெற்றிக்குக் காரணம்.''



''ஐந்தாவது முறை உலக சாம்பியன். ஜெயிச்ச அந்த நிமிஷம் உங்க மனசுக்குள் என்ன தோணுச்சு?''


''உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு அப்போ சந்தோஷப்படக்கூட சக்தி இல்லை. 'அப்பாடா! நல்லபடியா முடிஞ்சது’னு பெருமூச்சுதான் விட்டேன். மனசு ரிலாக்ஸ் ஆச்சு.''


''செஸ் உலகில் உச்சத்தைத் தொட்டுட்டீங்க. இனிமே உங்க இலக்கு என்ன?'

'
''எனக்கு இலக்கு என எதுவுமே இல்லை. என் வேலை செஸ் விளையாடுறது. விளை ய£டிக்கிட்டே இருப்பேன்!''


''நீங்க செஸ் விளையாட ஆரம்பிச்சப்போ, இந்தியாவில் இந்த விளையாட்டைப் பத்தித் தெரிஞ்சவங்க ரொம்பக் குறைவு. இப்போ ரொம்ப சின்ன வயசுலயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் ஜெயிக்கிறாங்க. அடுத்த ஆனந்தைக் கண்டுபிடிச்சுட்டீங்களா?''


''ரொம்ப சந்தோஷமா இருக்கு. எட்டு வயசுலயே அற்புதமா செஸ் விளையாடுறாங்க. அவங்க மூவ் எல்லாம் யோசிக்கவே முடியாதபடி இருக்கு. இதில் ஒரு ஆனந்தைக் கண்டுபிடிக்கிறது கஷ்டம். பார்த்துக்கிட்டே இருங்க. பல ஆயிரம் ஆனந்துகள் வருவாங்க.''


''செஸ் கூட்டமைப்பு உங்களுக்கு பாரத ரத்னா விருது தரணும்னு கோரிக்கை வெச்சிருக்கே?''



''பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னானு இந்திய அரசின் மிக உயரிய விருதுகளை வாங்கியிருக்கிறேன். பாரத ரத்னாவும் கிடைச்சா சந்தோஷம்தான்!''


நன்றி - விகடன்

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதாபோல ஏன் முயற்சிக்கலை?-சந்தானம் பேட்டி @ விகடன்

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Santhanam/Santhanam-0011.jpg 

1''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 

 
 ''ஏங்க... அவர் என்ன கொத்தவால் சாவடி மார்க்கெட்டா... இல்லை நான்என்ன கோயம்பேடு மார்க்கெட்டா? யாராலயும் யார் மார்க்கெட்டும் போகாதுங்க. சினிமா வுல யாரும் யாரையும் தீர்மானிக்க முடியாது. இப்ப நான் ஹிட்டடிச்சா அதுக்கு யாரெல் லாம், எதெல்லாம் காரணமோ... அதுவேதான் நான் சொதப்பினதுக்கு ஒரு வகையில கார ணமா இருக்கும். புல்லரம்பாக்கம் பிரதர், ஆமா... அவருக்கு எங்கே மார்க்கெட் போச்சு? அவர் இப்பவும் ஸ்க்ரீன்ல வந்தா... ஆடியன்ஸ் அலறுவாங்களே!''



2. ''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


'' 'ஓகே... ஓகே’ படத்துல ஊர்  உலகமே கேட்கிற மாதிரி சொல்லிட்டேனே... 'எந்த ஒயின்ஷாப்லயும் உங்க பிராண்ட் சில்லுனு கிடைக்குறதில்லை’னு. அதே பிராண்ட்தான் தோணி!''



3. ''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு. ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட்ஸ் சொல்லுங்களேன்?'

'
''ஹன்சிகா, தமன்னா எல்லாருமே செம க்யூட். அவங்க ஸ்பாட்ல என்ன வார்த்தை சொன்னாலும் நான் அதைரிப்பீட் அடிச் சுட்டே இருப்பேன். இப்படியே கலாய்ச்சுட்டே இருக்கும்போது கோபம் வந்து கண்டபடி திட்டுவாங்க. அதுல இருந்து நாலு வார்த்தை யைப் பிடிச்சு, படத்துல அந்த வார்த்தையை வெச்சு அவங்களையே கலாய்ப்போம். எப்படி நம்ம தொழில் ரகசியம்?


அவங்களுக்கு டயலாக் வருதோ இல்லையோ, ஆனா ஃபேஸ் எக்ஸ்பிரஷன் பயங்கரமா இருக்கும். 'அவர் வீட்ல இல்லை. வெளியே போயிருக்கார்’. இதுதான் டயலாக். ஆனா, 'அங்கே வீடே இல்லை. பல வருஷமா அங்க ஆள் நடமாட்டமே இல்லை’ங்கிற அளவுக்கு அதுக்கு எக்ஸ்பிரஷன் கொடுப்பாங்க. நாம புரிஞ்சு நடிக்கிறதைவிட, அவங்க புரியாம நடிக்கிறதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். அதுதான் எல்லாருக்கும் ப்ளஸ் பாயின்ட்!''



3. ''இன்னமும் சின்னத் திரை நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?'

'
''பெருசு, சிறுசுங்கிறது எல்லாம் ஸ்க்ரீன் அளவுல மட்டும்தான். மத்தபடி ஃப்ரெண்ட்ஷிப் எப்பவும் டபுள் எக்செல் சைஸ்தான். 'லொள்ளு சபா டீம்’ எப்பவும் என்கூடத்தான் இருப்பாங்க. இருக்காங்க! சுவாமிநாதன், மனோகர்னு லொள்ளு சபா டீம்ல பலரும் என்கூட சினிமால நடிச்சுட்டுத்தான் இருக்காங்க. அடிக்கடி சந்திச்சு மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்குவோம். ஜீவா இப்ப 'மாப்பிள்ளை விநாயகர்’ங்கிற படத்துல ஹீரோ. அதுல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணித் தா மச்சான்னு கேட்டான். அதுல நடிக்கிறேன். பாலாஜி அண்ணன், மாறன் அண்ணன்னு எங்க டீம் எல்லாருமே அடிக்கடி சந்திச்சுப்போம். பார்ட்டி, ஃபங்ஷன்னு வெளியே போனா, இவங்களோட போய் மொத்தமா கலாய்ச்சுக் கழுவிக் கழுவி ஊத்திட்டு வந்துருவேன்!''  




4  ''உங்க ப்ளஸ், மைனஸ் என்ன?''   


''ரெண்டுமே என் வாய்தான்!

சில நேரம் டைமிங்காப் பேசி ஸ்கோர் பண்ணிடுவேன். சில நேரம் ஓவராப் பேசி கோட்டை விட்டுருவேன். ஒரு டைரக்டர் நம்மகிட்ட வந்து, 'புதுமுகங்களை வெச்சுப் படம் பண்றோம். நீங்க நடிச்சா பப்ளிசிட்டிக்கு உதவியா இருக்கும்’னு என் கேரக்டர்பத்திச் சொன்னார். 'நல்ல விஷயமா இருக்கே... பண்ணிக் கொடுக்கலாம்’னு சம்மதிச்சேன்.

 சம்பளம் பேச தயாரிப்பாளர் வந்தார். லோ பட்ஜெட் படம், புதுமுகங்கள் எல்லாத்தையும் மனசுல வெச்சுக்கிட்டு என் வழக்கமான சம்பளத்தைவிட ரொம்பக் குறைச்சு சொன் னேன். அவர் அதுக்கே டென்ஷனாகி, 'என்ன சார் இவ்வளவு சம்பளம் கேட்கிறீங்க? சின்னப் படம் சார் இது’னு கொதிக்க ஆரம்பிச்சுட்டார். 'சின்னப் படம்னா எவ்ளோ... அரை மணி நேரம்தான் எடுக்குறீங்களா?’னு கலாய்ச்சுவிட்டுட்டேன். அவர் டென்ஷன் ஆகிக் கிளம்பிட்டார். இப்படித்தான் நம்ம வாய் எல்லாத்துக்கும் கவுன்டர் அடிக்கும்!''




5. ''உண்மையைச் சொல்லுங்க சந்தானம்... உங்களுக்குப் பிடிச்ச தேன்ன்ன் அடை, ஜாங்கிரி, ஜிலேபி... யாரு?'' 


''பேர் மட்டும் சொல்ல மாட்டேன் பரவாயில்லையா?


இப்படி நான் சொல்லிட்டா, இதுதான் நீங்க என்கிட்ட கேட்ட முதல் கேள்வியா இருக்கும். ஆனா, நான் கொடுக்கிற கடை சிப் பதிலா இருக்கும். அதோட என் வீட்டுல என்னை ஃபினிஷ் பண்ணிரு வாங்க!''



6. ''காதல்ல பல்பு வாங்கிய அனுபவம்?''   


''பாலிடெக்னிக் படிக்கும்போது ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதி, சாக் லேட் பின் பண்ணிக் கொடுத்தேன். அவ சாக்லேட்டை மட்டும் பிரிச்சுச் சாப்பிட்டுட்டு லெட்டரைத் திரும்பக் கொடுத்துட்டுப் போய்ட்டா. சரியான தீனிப் பண்டாரமா இருப்பா போலனு நெக்ஸ்ட் டைம் வெறும் லெட்டர் மட்டும் கொடுத்தேன். அதைப் படிச்சுட்டு இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொடுத்துட்டுப் போய்ட்டா.

 ரொம்ப அவமானமாயிருச்சு. முக்கா முக்கா மூணாவது டைமா தைரி யத்தை வரவெச்சு நேரடியாவே போய்சொல் லிட்டேன். என்னைப் பார்த்தா அவளுக்கு ரொம்பக் கேவலாமத் தோணியிருக்கணும் போல. பகபகனு சிரிச்சுட்டுப் போய்ட்டா. அப்படியே அவளை மறந்துட்டு, அடுத்த பொண்ணு மேல கான்சன்ட்ரேஷன் பண்ண ஆரம்பிச்சிட்டேன்!''



7. ''சந்தானம்... சிறு குறிப்பு வரைக?'' 


''சந்தானம் ஜாலியான பையன். எல் லாரையும் கலாய்ப்பேன். ரொம்ப சென்டி மென்ட் பார்ப்பேன். இருந்தாலும் நடுவில் எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போக முடியுமோ, அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போவேன். எவ்வளவு விட்டுக்கொடுத்தாலும் பிரச்னை தீரலை... ஒண்ணுமே பண்ண முடியாத சூழ்நிலைன்னா, வேற வழியே இல்லாம திரும்பவும் விட்டுக்கொடுத்திருவேன்.
நான் ஆறாவது படிச்சுட்டு இருக்கும்போது 'வாழ்க வளமுடன்’கிற அமைப்புல அப்பா என்னைச் சேர்த்துவிட்டுட்டார்.


 அதுல இருந்தே ஆன்மிக ஈடுபாடு அதிகமாயிருச்சு. கோயி லுக்கு ரொம்பப் போக மாட்டேன். ஆனா, சிவனைத் தினம் கும்பிடுவேன். இலவச இணைப்புகள்ல வர்ற ஆன்மிகப் புத்தகங் களை நீங்கள்லாம் புரட்டிக்கூடப் பார்க்க மாட்டீங்க. ஆனா, அதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். ரமண மகரிஷி, புத்தர், வள்ளலார், பாபாஜினு பெரிய கலெக்ஷனே வெச்சிருக்கேன். ஆன்மிகப் புத்தகங்கள்ல படிக்கிறதையே நான் வேற மாதிரி படத்துல பயன்படுத்தியிருக்கேன்.


'ஆன்மாங்கிற பால், உடலுங்கிறது தண்ணீர். ஜீவாத்மாவோடு, இந்த பரமாத்மா எப்போ ஒண்ணுசேருதோ, அப்போ இந்த உடலை தண்ணீரைப் போலப் பிரிச்சு எடுக் கணும்’னு சொல்வாங்க. அதைத்தான் 'ஓகே ஓகே’ படத்துல குவார்ட்டர், தண்ணீர் பாக் கெட், யூஸ் அண்ட் த்ரோ கிளாஸ்வெச்சு, 'இது மீரா... இது நீ... இது நானு’ன்னு சொல் லிக் காமெடி பண்ணினேன்.


ஓவர் ஆலா... சந்தானம் ரொம்ப நல்லவன்ங்க!''



8. ''இயக்குநராகும் எண்ணம் இருக்கி றதா? அப்படி இயக்கினால் யார் உங்கள் ஹீரோ?'' 


''அப்படி ஒரு ஆசை இருக்குங்க. கால் ஷீட் கமிட்மென்ட் எல்லாம் முடிச்சிட்டு அதைப் பத்தி யோசிக்கணும். அப்போ யாருக்கு என் கதை பிடிக்குதோ, யார் கால்ஷீட் கொடுக்குறாங்களோ, அவங்களைவெச்சுப் படம் பண்ணுவேன். வெறுமனே சிரிச்சுட்டு மட்டும் போகாம, படம் முடிஞ்சதும் யோசிக்கிற மாதிரி காமெடி - சென்டிமென்ட் கலந்த ஒரு கதை வெச்சிருக்கேன். நான் படிச்ச ஆன்மிக விஷயங்களை காமெடி கோட்டிங்ல சொல்லுவேன்.

 நாமெல்லாம் வெளிநாட்டை ஆச்சர்யமாப் பார்க்கிறோம். ஆனா, நம்ம நாட்டுலயே எல்லா விஷயங்களும் இருக்குது. அங்கெல்லாம் 'எப்படி இருக்கீங்க?’னு கேட்டா, 'ஐ யம் ஃபைன்’னு சொல்வாங்க. அவங்க உடம்பையும் மனசையும் பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. ஆனா, இங்கேதான் சோகமா இருந்தா 'மனசு சரியில்லை’னு சொல்லுவோம். டல்லா இருந்தா, 'உடம்புசரி இல்லை’னு சொல்லுவோம். இந்த மாதிரி யான தத்துவங்கள்லாம் நம்ம நாட்டுல மட்டும்தான் உண்டு. இப்படி நம்ம நாட்டுப் பெருமைகளை ஹைலைட் பண்ணி கதை சொல்லணும்!''



9. ''அதென்ன... நீங்கள் சொல்வதைக் கேட்கும், உங்களுக்கு செட் ஆகும்இயக்கு நர்களிடம் மட்டும்தான் நடிப்பேன் என்று ஏதேனும் பாலிசி வைத்திருக்கிறீர்களா?'' 


''டைரக்டர்-ஆர்ட்டிஸ்ட்டுங்கிற காம்பி னேஷன், சரக்கும் சோடாவும் மாதிரி. மிக்ஸிங் கரெக்டா இருக்கணும். இல்லாட்டி, வேற மாதிரி ஹேங் ஓவராகிடும். எனக்கு யாரெல்லாம் மிக்ஸிங் சரியா இருக்காங் களோ, அவங்களோட சேர்ந்து நிறைய படம் பண்றேன். அப்புறம் பெரிய இயக்குநர்கள் படங்கள்லயும் நடிச்சிட்டுதான் இருக்கேன். ஷங்கர் சார் படம் 'எந்திரன்’ பண்ணினேன். இப்ப அவர் விக்ரம் சாரை வெச்சுப் பண்ற  படத்துலயும் பண்றேன். கௌதம் மேனன் சாரின் 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடிக்கிறேன். நீங்க சொல்றதுலாம் இவங்க படங்கள்ல செட் ஆகாது


 .
10. ''சமூக விஷயங்களையும் நகைச்சுவையில் கலந்து தந்த என்.எஸ்.கிருஷ்ணன்,  எம்.ஆர்.ராதாபோல நீங்க ஏன் முயற்சிக்கலை?'' 


 ''அதுதான் அவங்க பண்ணிட்டாங்களே நண்பா! நாம ஏதாவது புதுசா பண்ணுவோம்னுதான் வேற மாதிரி ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்!''




11. ''லொள்ளு சபாவுக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?''   


''ரெண்டுமே லொள்ளுதான். என் சினிமா காமெடிகளை சேனல்ல பார்த்து ரசிக்கிறாங்கன்னா, லொள்ளு சபா காமெடிகளை இன்னமும் யூ-டியூப்ல பார்த்து ரசிக்கிறாங்க. மத்தபடி ரெண்டுக்கும் வேற பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனா, சினிமாங்கிறது எவர் க்ரீன். எதிர்கால ஜெனரேஷன் பார்த்து ரசிக்கிறது. 'டேய் என்னடா இது... அந்தக் காலத்துல சந்தானம் இவ்வளவு மொக்க போட்ருக்கான்’னு எதிர்காலத்துல யாரும் சொல்லிடக்கூடாதுங்கிறதால சினிமாவுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்றேன்!''



டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


Wednesday, June 06, 2012

கொங்குமண்டல கணவன்மார்கள் கவனத்துக்கு .......

தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கிறேன்..
1.கொங்குமண்டல கணவன்மார்கள் தங்கள் மனைவியை செல்லமாக பரிமளா எனவும், மச்சினியை ஷர்மிளா எனவும் அழைக்கிறார்களாம் # ட்விட்டர் ஜி கே



--------------------------------


2. அக்கா வேடத்தில் நடிக்க மாட்டேன் - அசின் ஆவேசம் #  மேடம், 10 வயசுப்பொண்ணுக்கு அக்கா வேஷம் இருந்தாக்கூடா நாட் ஓக்கே?



---------------------------


3. சாலையோரத்தில் நடந்த திருமணம்! மணமக்களை நேரில் வாழ்த்திய நமீதா!! # ரோடு ராக்கிங் மச்சான்-னாரா?



--------------------------------



4. மின் திருட்டு ரூ.900 கோடி: பிடிபட்டது ரூ.60 கோடி # ஷாக்கிங்க் நியூஸ் தான்



---------------------------------


5. தன் அம்மாவுடன் அனுசரித்துப்போகும் மணமகள் தேவை என கல்யாண மாலையில் வேண்டும் மாப்ஸ்,உங்கம்மா சண்டைக்காரினு டெல்லிங்க்?



----------------------------------------


பிக்அப்"டா ;)))அழுத்துடா ராஜா.!! அழுத்துடா ராஜா.!! #பின்னாடி என்னடா வியாபாரவிளம்பரமா !.ஓ. இது,விளம்பரமாடலா!! ;))



6. ஜீப்ரா = (வரிக்)குதிரை = பரி # அப்போ அல்ஜீப்ராவை கண்டுபிடிச்சது  யாரோ ஒரு பரிமளாப்பிரியரோ? # வெட்டி ஆராய்ச்சி



------------------------------------


7. ஈகோ என்பது உதடுகளுக்குத்தான், கண்களுக்கு இல்லை 



-------------------------------------


8.தேமுதிகவினருக்கு நாகரீகமோ, அடிப்படை சட்டமோ தெரியாது.-சரத்குமார்#  சட்டம் சம்பந்தமா நான் நடிச்ச படமே 27, நீங்க நடிச்சது 9 தான்-கேப்டன்


--------------------------------

9.  சச்சின் - நான்  எம் பி ஆகிட்டேன்,நான் சபைக்கு போறப்போ என் கூட வரப்போற பார்ட்னர்  யாரு?


-----------------------------


10. சச்சின் - நான் இதுவரை நூறு நூறா 100 தடவை செஞ்சுரி அடிச்சிருக்கேன், இது போதாதா  அரசியலுக்கு வர ?


ஆ ராசா - கோடி அடிச்சவங்களுக்கு முன்னால


----------------------




11. நான் ஒரு தடவை என் முடியை ( திருப்பதிலயோ, பழநிலயோ ) எடுத்துட்டா மறுக்கா நானே என் முடியை எடுக்க மாட்டேன், ஃபங்க் வெச்சுக்குவேன் # துப்பாக்கி பஞ்ச் டயலாக்



--------------------------------

12. அடிக்கறவங்க ஈசியா அடிச்சுட்டுப்போயிடறாங்க,வலிக்காத மாதிரியே முகத்தை வெச்சுக்க ரொம்ப சிரமமா இருக்கு :)


------------------------------

13. வண்ணான் துறையில் இருக்கும் சலவைக்காரியை நான் சைட் அடிக்கக்காரணம் வெளுத்ததெல்லாம் அமலாபால் என நினைக்கும் அப்பாவித்தனமே!


--------------------------------


14. உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று ( 5.6.2012)ஒரு நாள் முழுக்க உன்னைச்சுற்றி நானும், என்னை சுற்றி நீயும் விளையாடிக் கொண்டு இருப்போம்,வா



-------------------------------

15. சாஸ்திர சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் உனக்கு முத்தங்கள் தரும் தருணங்களில் உன்னிடம் அனுமதி கேட்பேன் என எதிர்பார்க்காதே!



---------------------------------



Gauthaman Ds Karisalkulaththaan's photos


இன்று உலக சுற்றுச்சூழலியல் தினம்: (5.6.2012)



16. மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன் குடம் என்ற பழமொழில இருந்து அறிய வரும் தகவல் - மாமியாரோ மருமகளோ எதையாவதுஉடைச்சுட்டுதான்இருப்பாங்க


---------------------------------


17. நாட்டின் பொருளாதாரம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்: சிதம்பரம் # எங்க அச்சம் எல்லாம் எங்க வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல்,கரன்ட் தான்


----------------------------------

18. அரசு மது விற்கலாம் தவறில்லை - உயர்நீதிமன்றம் கருத்து! # ஆனா எவனும் அதை வாங்கி குடிக்கக்கூடாது - ராம்தாஸ்



-------------------------------------


19. எதிரிகளை வெல்வது என் நோக்கம் இல்லை, என் இலக்கு அவர்களை நண்பர்கள் ஆக்குவதே :)



-------------------------------


20. பொதுவாழ்வில், குடும்ப வாழ்வில் தனி மனித ஈகோவை விடுத்து மன்னிப்பு கேட்பதால் ஒரு பிரச்சனை முடிவுக்கு வரும் எனில் அதில் தவறில்லை



----------------------------------

Christopher Daniyal shared Anish Ani's photo.
 

டிஸ்கி - சென்னை மெகா ட்வீட்டப்பில் விடுபட்ட என்னால் முடியும் அமைப்பு பற்றி..


என்னால்  முடியும்
ஒவ்வொருகுழந்தைக்கும்அடிப்படைக்கல்விகிடைப்பதற்கானதிட்டம்
35-18:  நாம் அனைவரும் எளிதில் செய்யக்கூடியது கழித்தல் கணக்கு. அரசு பாடத்திட்டத்தில் இரண்டாம் வகுப்புக்குழந்தைகள் இதைச்செய்ய இயல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் சில ஆய்வுகள்,   3-5 வகுப்புகளில் படிக்கும் கிராமப்புறக்குழந்தைகளில், 55% குழந்தைகளால் கழித்தல் கணக்குகளுக்கு விடை காண இயலவில்லை. 50%க்கு மேற்பட்ட குழந்தைகளால் தமிழில் ஒரு எளிமையான பகுதி கூடப்படிக்க இயலவில்லை.இந்தக்குழந்தைகளில் பலர் தாழ்த்தப்பட்ட ஏழைக்குடும்பத்தைச்சார்ந்தவர்கள்இந்தக்குழந்தைகளின் அறியாமை, அவர்கள் குடும்ப சூழ்நிலையினால் அல்லது ஆற்றல் பற்றாக்குறையினால் ஏற்பட்டது என்று எண்ணுவது எளிது.  


ஒவ்வொரு குழந்தையாலும் முடியும்” என்றநம்பிக்கையை நிதர்சனமாக்க யுரேக்கா அறநிறுவனம், கல்லூரிமாணவர்கள், தனியார் நிறுவன தொண்டூழியர் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒன்று சேர்ந்து, கிராமப்புறக்குழந்தைகளுக்குத்தேவையான அடிப்படைக்கல்வி வழங்குவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதனைப்பற்றிய விவரங்களை அறியவும், பங்கேற்கவும்,  நம் குழந்தைகளின் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தவும் மேலும்படியுங்கள்...


எங்குதுவங்குவது ?


முதல்படி, பிரச்சனையின் தன்மையையும் அளவினையும் அறிந்து கொள்வது.கிராமங்களில்,குழந்தைகளின் அடிப்படை கணிதம் மற்றும் படிக்கும் ஆற்றலை ஒரு எளியதிறனாய்வு மூலம் நிர்ணயிக்க முடியும். இந்த ஆய்வை 3-4 நபர் 3 மணி நேரத்தில் முடிக்க முடியும்.  இதனைக்குழந்தைகளின் வீட்டிலேயே எளிய செயல்முறைகளைக்கொண்டு மதிப்பிடலாம். இதனைத்தொடர்ந்து,  ஆய்வு முடிவுகளை குழந்தைகளின் பெற்றோர் மற்று ம்ஊர்பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தொண்டூழியர்களும் மற்றவர்களும் கலந்தாலோசித்து, ஊர்ப்பள்ளியின் உதவியுடன் ஏற்ற தீர்வை நிர்ணயிக்கலாம். பள்ளி ஆசிரியர்களிடமும் இந்த ஆய்வின் முடிவுகளைப்பகிர்ந்து கொண்டு குழந்தைகளுக்குத்தேவையான பயிற்சியளிக்க உதவிடலாம்.


திட்டத்தின்வீச்சளவு


தொண்டூழியர்– 200
குழந்தைகள் – 2918
மாவட்டங்கள்-8
ஒன்றியங்கள்- 27
கிராமங்கள்– 105


நிலைமையைமாற்றபெற்றோர்விண்ணப்பங்கள்: 1410



தொடர்பு கொள்ளவும் - செல்வா 9790951652.




Tuesday, June 05, 2012

நான் ஏன் இவ்வளவு முட்டாளா இருக்கேன்னா.......


 https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc6/149793_358002940929367_102856449777352_1006961_1666476748_n.jpg




1.மிஸ், நான்தான் உங்களை லவ் பண்ற முதஆளா?



ஆமா, லவ் பண்ணி 1 வருஷம் ஆகியும் சும்மா தொண தொணன்னு பேசிட்டு மட்டும் இருக்கற முதஆள் நீங்க தான்


---------------------------


2.  நான் ஏன் இவ்வளவு முட்டாளா இருக்கேன்னா எப்படியும் பொண்ணுங்க அறிவாளியை முட்டாள் ஆக்கிடுவாங்க, ஏன் அவங்களுக்கு சிரமம்?ஹி ஹி


------------------------------


3 மனசுக்குப்பிடிச்சவரின் தவறுகளை ( -) நாம் கண்டு கொள்வதில்லை,பிடிக்காதவர்களின் சின்ன சின்ன குறைகளை நாம் ஒதுக்கி விட முடிவதில்லை


-----------------------------------

4. பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகுவோம் - மு.க # சோனியா - நீங்க முதல்ல விலகுங்க, அப்புறம் நாங்க வாபஸ் வாங்கறோம்


-----------------------------------

5  நம் உள்ளங்கைகள் இரண்டும் இணைந்திருந்தபோது நம் நான்கு கண்களும் கலந்திருந்தது

----------------------

6.  பொய் சொன்ன வாய்க்கு விருந்தே கிடைத்தது. நீ அழகென்றேன்! உன் உதட்டால் மென் ஒத்தடம் இட்டாய்!


---------------------------

7.  சேவல்களை நாம் என்றும் ரசித்ததே இல்லை, நம் இருவரையும் பிரிக்கும் முதல் பறவை அதுதான்



---------------------------

8. . என் கவிதைகளுக்கான கருப்பொருள் தீரும்போதெல்லாம் உன் கண்களை ஒரு முறை பார்த்து என் கற்பனையை கூர் தீட்டிக்கொள்வேன்



---------------------------------
9. .  உன் வாசம் வீடெங்கும் விரவிக்கிடக்கிறது.. உன் அழகு அறை எங்கும் பரவிக்கிடக்கிறது! நீ மாலை வரும் வரை தாக்குப்பிடிக்க அவை போதும்


-------------------
10.  . உன் அழகு ஜெவின் அகம்பாவம் போல் அதீதமாய்! என் அன்பு கலைஞரின் பொய் போல் கணக்கற்றதாய்!



------------------------------


11. சென்னை மெரினாவில் கடல் சீற்றம்: பொதுமக்கள் குளிக்க தடை ..# இதை சாக்கா வெச்சு வீட்டுல கூட குளிக்காம இருந்திடாதிங்க


------------------------------

12. பெண்கள் கண்ணுக்குப்போடும் ஐ டெக்ஸ் மையை நரை மீசை மறைக்க பயன்படுத்தலாம் என முதன் முதலில் கண்டு பிடித்தவன் தமிழனே! # டையிங்க் மாஸ்டர்


-------------------------------------


13. திருமணம் ஆனதும் ஆண்கள் கற்றுக்கொள்ளும் முதல் பாடம் மனைவி சேலை கட்டும்போது அவர்கள் காலடியில் அமர்ந்து சேலைக்கு மடிப்பு பிடிப்பதே:)



------------------------------------

14. குட் மார் னிங்க் மேடம் என்றேன், முறைத்தார், சிரித்தேன் # அப்ரைசல் ஊ ஊ ஊ ஊ



----------------------------


15. கணவன்மார்கள் பனியன் அணியும்போது தங்கள் மனைவியின் உதவி நாடுவதில்லை, ஆனால் ... ஹி ஹி ஹி மியாவ் # நீதி - ??


------------------------------


16,  கலகங்கள் ஒழிந்தால் ,கழகங்கள் அழிந்தால் தமிழ்நாட்டுக்கு நன்மை பிறக்கும்,தமிழன் வாழ்வு சிறக்கும்


----------------------

17. நித்யானந்தாவுக்கு சைவ சித்தாந்தம் தெரியுமா? புதிய "வீடியோ'வால் சர்ச்சை # நான் பேசிக்கலி சைவம், பிசிக்கலி அசைவம் - நித்தி



-----------------------------


18.நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் வறுமை பாதிக்குப் பாதி குறைந்து இருக்கிறது.''- மன்மோகன் சிங் # அத்தனை ஏழைகளையும் நாடு கடத்தீட்டீங்களா?


--------------------------------

19. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், பி.ஏ.சங்மாவை ஆதரிக்க வேண்டுமா- ஏ.பி.பரதன் # மொடாக்குடின்னா ஓக்கேவா?


------------------------------

20.  பாரத் பந்த், பஸ் ஓடலைன்னா லீவா?ன்னு கேட்டேன், அப்போ ஆஃபீஸ்லயே தங்கிக்கோன்னுட்டாரு டேமேஜர் , நற நற


------------------------------



Sunday, June 03, 2012

காடு வெட்டி குரு கன்னா பின்னா பேட்டி @ விகடன் - கிடாவெட்டு

''மாநாட்டுக்காக நாலு நாள் மகாபலிபுரத்துல தங்கி இருந்தேன். அங்கே பீச்ல நடக்குறதை எல்லாம் நானும் பார்த்துட்டுத்தான் இருந்தேன். சவட்டிஎடுக்கிற மொட்டை வெயில்ல யாரைப்பத்தியும் கவலைப்படாம கட்டிப்புடிச்சிட்டு மோந்துட்டு இருக்குதுங்க.


சி.பி - யூத்னா அப்டி இப்டித்தான் இருக்குமாம், கேட்டா அப்படி சமாளிக்கறாங்கண்ணே,.. அண்ணே, நிஜமா காத்து வாங்கத்தான் போனீங்களா?இல்லை, ஓ சி ல லைவ் ஷோ பார்க்கப்போனீங்களா?


இதுவாங்க காதல்? அந்தக் காலத்துலயே தமிழனுக்கு வீரமும் காதலும் இருந்ததா, இலக்கியங்கள்ல சொல்லி இருக்காங்களே. அதுதான் காதல்!'' - எடுத்த எடுப்பிலேயே ஆவேசம் காட்டுகிறார் காடுவெட்டி குரு. அவரது சொந்த கிராமமான காடுவெட்டியிலேயே நடந்தது இந்தச் சந்திப்பு

http://kilakarainews.files.wordpress.com/2012/01/wr_540716.jpeg


.
1. ''ஆயிரம் சமாதானம் சொல்லுங்கள்... வன்னியர் சமுதாயத்துப் பெண்களை வேறு சாதிப் பையன்கள் காதலித்துத் திருமணம் செய்தால், அவர்களின் கையை வெட்டுவேன்’ என்று நீங்கள் பேசியது சரியா?''


சி.பி - அண்ணன் காடு வெட்டி குரு இனி லவ்வர்ஸ் கை வெட்டி குரு என அன்போடு அழைக்கப்படுவார், ஆனா ஒரு டவுட், கையை வெட்டுனா அவங்க லவ் பண்ணாம அமைதி ஆகிடுவாங்களா?




''காதல் திருமணமோ... கலப்புத் திருமணமோ செய்யக் கூடாதுனு நான் சொல்லவே இல்லை. அது என் கொள்கையும் கிடையாது. காதல்ங்கிற பேர்ல பொண்ணுங்களை ஏமாத்துறதைத்தான் என்னால ஏத்துக்க முடியலை. கடலூர், அரியலூர் மாவட்டங்கள்ல வசதியாக இருக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவங்களைக் காதலிக்கிற மாதிரி நடிச்சுச் சீரழிச்சுடுறாங்க.


 ஆறு மாசம் அந்தப் புள்ளையைக் கூட வெச்சு நாசம் பண்ணிட்டு, அப்புறம் அடிச்சுத் துரத்திடுறானுங்க. அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணுங்க எங்கே போகும்? தற்கொலைதான் பண்ணிக்குதுங்க. எங்க வன்னியர் சாதிப் பொண்ணுங்களைக் குறிவெச்சு மட்டும்தான் இது நடந்துட்டே இருக்கு. கடலூர், அரியலூர் மாவட்டத்துல புள்ளைங்களைப் பெத்த எத்தனை பேரு கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறாங்கனு ஒரு சர்வே எடுத்துப் பாருங்க...



சி.பி - ஏமாத்தற நாய்ங்களுக்கு ஜாதி என்ன குலம் என்ன? கோத்திரம் என்ன? கிடைச்சதை மடக்கறாங்க... டி வி சீரியல், சினிமா பார்த்தும் பொண்ணுங்கதான் ஜாக்கிரதையா இருக்கனும்.. குறிப்பிட்ட ஜாதிப்பெண்களைத்தான் ஏமாத்தறாங்கன்னு சொல்லிட முடியாது



நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைனு உங்களுக்கே தெரியும். ஏன்... அதே தெய்வீகக் காதல் ஒரு ஏழை வீட்டுப் பெண் மேல வர மாட்டேங்குது? அதான் ஒரு ஆவேசத்துல 'காதல்ங்கிற பேர்ல எங்கக் குடும்பத்துப் பொண்ணுங்களை ஏமாத்துறவங்க கையை வெட்டுங்க’னு சொன்னேன்



. எங்க சாதிப் பையனே அப்படி ஒரு தப்பு பண்ணி இருந்தா, அவனையும் வெட்டுங்கனுதான் சொல்றேன். ஒரு பொண்ணைப் பெத்த அப்பா ஸ்தானத்துல இருந்து பாருங்க... நான் சொல்றதோட அர்த்தமும் வலியும் புரியும்!''



http://www.writermugil.com/wp-content/uploads/2009/03/election-cartoon-11.jpg


'2. 'அப்போ உங்க சாதியைச் சேர்ந்த பசங்க மத்த சாதிப் பொண்ணுங்களைக் காதலிக்கிறதை ஏத்துக்குறீங்களா?''


''காட்டுமன்னார்குடி, அரியலூர் பகுதியில் எங்க சாதிப் பசங்க நிறைய பேரு தாழ்த்தப் பட்ட சமூகத்துப் பெண்களைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணி இருக்காங்க. ஆனா, அவங்க யாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்தப் பெண்ணை அடிச்சுத் துரத்தினது கிடையாது. 


சந்தோஷமா வெச்சிக் குடும்பம் நடத்திட்டு இருக்காங்க. எங்க சுத்து வட்டாரத்துல யாராவது காதலிச்சு வீட்ல சம்மதம் கிடைக்கலைன்னா, நேரா இதே காடுவெட்டி கிராமத்துக்குத்தான் ஓடி வருவாங்க. 'காடுவெட்டி கிராமத்துக்குப் போயிட்டா, குரு அண்ணன் சேர்த்துவெச்சிடுவாரு’னு அவங்களுக்கு ஒரு நம்பிக்க


அப்படி நானே இதுவரை ஆயிரத்துக்கும் மேல காதல் கல்யா ணங்களைச் செஞ்சிவெச்சிருக்கேன். பெத்தவங்ககிட்டயும் பேசி சமாதானப் படுத்திவெச்சிருக்கேன். உண்மையான காதல்னா, உயிரைக் கொடுத்தாவது சேர்த்துவைப்பான் இந்த குரு!''


3. ''பா.ம.க. மீண்டும் சாதி அரசியலைக் கையில் எடுத்திருச்சே?''


சி.பி - பா ம க எப்போ ஜாதி அரசியலை விட்டுச்சு? இப்போ மறுபடி கையில எடுக்க? ஜாதிக்கட்சி ஜாதியை கையில எடுக்கறதுல என்ன தப்பு?



''தமிழ்நாட்டுல சாதி இல்லாம என்ன நடந்திருக்கு சொல்லுங்க? இங்கே இரண்டரைக் கோடி வன்னியர்கள் இருக் கோம். ஆனா, எங்க வாழ்க்கை நிலை இன்னைக்கு வரைக்கும் உயரலையே?


 எங்க பாட்டன் காலத்துல விவசாய நிலக் கிழார்களா இருந்தவுங்க, இன்னைக்கு விவசாயக் கூலிகளா இருக்கோம்.எங்க உரிமைக்காக நாங்க போராடும்போது சாதியைச் சொல்லித்தான் போராட வேண்டி இருக்குது. சாதியை ஒழிச் சிட்டோம்னு சொல்றீங்க...


 சரி, இன்னும் சிதம்பரம் நடராஜர் கோயில்ல நந்தன் போன வாசலை எதுக்கு மூடி வெச்சிருக்காங்க? ஸ்ரீரங்கம் பெருமாளை நாங்க போய்ப் பார்க்க எதுக்கு நடுவுல ஒரு இடைத்தரகர்? தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டுமே சாதி இல்லைனு சொல்லிட்டு, ஊருக்குள்ள சாதியை வளர்த்துக்கிட்டுதான் இருக்கு.


 'நாங்க சாதி இருக்கு’னு சொல்லிட்டு, சாதிக் கொடுமையை ஒழிக்கப் போராடிட்டு இருக்கோம். வடநாட்டுப் பக்கம் போனா, நடிகையில இருந்து கிரிக்கெட் ஆடுறவன் வரைக்கும் அத்தனை பேரும் பேரோடு சாதியையும் சேர்த்துதான் வெச்சிருக்கான். இதெல்லாம் எப்போ மாறி, இந்தியன், தமிழன்கிற நிலை வருதோ... அப்ப நாங்க சாதியைப் பத்திப் பேசினா எங்களை வந்து கேளுங்க!''


4. ''அப்போ 2011-ல் தமிழகத்தில் பா.ம.க-வின் ஆட்சினு சொன்னீங்க.. இப்ப என்ன... 2016-ல் அன்புமணி தமிழக முதல்வர்ங்கிறதுதான் உங்க திட்டமா?''


''கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் - அழகிரி, ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலா, விஜயகாந்துக்குப் பிறகு அவரு பொண்டாட்டினு ஆளாளுக்குச் சொல்லிட்டு இருக்காங்க. எங்க கட்சியை வழி நடத்தும் சின்னய்யாதான் அடுத்த முதல்வர்னு நாங்க சொல்றதுல என்ன தப்பு? வெள்ளைக்காரன் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டான். அப்படிப்பட்டவனே எங்க சின்னய்யா வைப் பார்த்து, எழுந்து நின்னு கை தட்டி இருக்கான். அப்படிப்பட்ட திறமை சாலியை 'முதல்வர்’னு சொல்றதில் என்ன தப்பு?''


சி.பி - வாரிசு அரசியலால தான் தமிழ் நாடு குட்டிச்சுவராகி இருக்கு, மதுவிலக்கு, சினிமா, புகைப்பழக்கம் இப்படி பல நல்ல விஷயங்களில் எல்லாருக்கும் புத்தி சொல்ற தலைவரு இந்த விஷயத்துல மட்டும் தன் மகனை ஏன் முன்னிலைப்படுத்தி பத்தோட 11 ஆகறாரு?என் குடும்பத்தை சேர்ந்தவங்க யாராவது அரசியலுக்கு வந்தா என்னை செருப்பால அடிங்கன்னு ஏன் சொன்னாரு?


http://snapjudge.files.wordpress.com/2008/03/pmk_dmk_ramdoss_mp_rajya_sabha_kalainjar_kalki.jpg


5. ''ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி?''


''எங்கே கோயில் திருவிழா நடந்தாலும் அங்கே ஒரு புது டாஸ்மாக் கடை திறக்கிறதுனு ஒரு புது திட்டம் கொண்டு வந்திருக்காங்க அவங்க. எல்லோரும் குடிச்சிட்டுப் போய் சாமி கும்பிடுங்கனு சொல்றாங்கபோல!


உலகத்துலயே இப்படி ஒரு கேவலம் எங்கேயும் நடக்காது. சாமி கும்பிடுற இடத்துல சாராயத்துக்கு என்னங்க வேலை? குடிகாரங்களை உருவாக்குவதில் தமிழ்நாட்டை முதல் மாநிலம் ஆக்கணும்னு திட்டம் போட்டு வேலை செய்றதைத் தான் ஜெயலலிதாவின் ஒரு வருடச் சாதனைனு சொல்ல லாம்!'


சி.பி - சாராயம்  சாப்பிற சாமி தான் தமிழன்க அதிகம் கும்பிடற கருப்பண்ண சாமி, மாடசாமி இப்படி.. அரசாங்கத்துக்கு முக்கிய வருமானமே டாஸ்மாக் தான்.. குஜராத் மட்டும் எப்படி டாஸ்மாக் இல்லாமயே சமாளிக்குதுன்னு போய் பாடம் கத்துட்டு வரச்சொல்லனும் மேடமை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyWDabmTF4POj8IkzO7WZMsXgl2uehp4-jAsxvGYZQw81mmJrfSiUVyUA-Y_MEwd1xHUj2eQE2hoHa3E54Oy6ZZjkyQ4WlPVd9Ton8IPhVrZM9AnmZwm-jwhmFYxqWk-zXogWmPLkDz0Uy/s1600/ramadoss_jayalalitha1.jpg


6. ''எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்?''


''அவரு இன்னும் தெளியவே இல்லையே! தலைவருக்கு உண்டான தகுதி எதுவுமே அவருக்குக் கிடையாது. ஏதோ ஒரு அலையில மக்கள் ஓட்டுப் போட்டாங்க. ஜெயிச்சு வந்துட்டாங்க.



'நான் ஆஃப் அடிச்சேன். என் தொண்டர்கள் ஃபுல் அடிப்பாங்க. எல்லோரும் குடிப்போம்’கிங்றதுதான் அவரோட கொள்கை. எம்.ஜி.ஆர். வந்தாரு, குடிக்கச் சொன்னாரு. கலைஞரும் குடிக்கச் சொன்னாரு. ஜெயலலிதாவும் குடிக்கச் சொன்னாங்க. நாளைக்கு இவரு வந்தாருன்னா, 'என்னைப் போல எல்லோரும் நிதானம் இல்லாம குடிச்சிக்கிட்டே இருங்க’னு சொல்லு வாரு.



நிதானம் இல்லாம குடிச்சிட்டே இருந்தா, குடும்பத்தையே நடத்த முடியாது. அப்புறம் எப்ப டிங்க நாட்டை ஆள முடியும்? அவரு எந்த நேரத்துல குடிக்காம இருப்பாருனு யாருக்குமே தெரியலயே. சட்டமன்றத்துக்கே அப்படித்தானே வராரு. ஏதோ வந்துட் டாரு... இதோடு அவரு அரசியல் முடிஞ்சிடும். அதனால அவரைப் பத்தி இனி பேச வேண்டியதே இல்லை!''

http://mmimages.mmnews.in/Articles/2011/Feb/2075eacd-69e3-4238-b0de-46a34db1771a_S_secvpf.gif