Showing posts with label vijaykanth. Show all posts
Showing posts with label vijaykanth. Show all posts

Friday, January 07, 2011

கேப்டன் போடும் கணக்கு

ஆர்.டி.ஓ ஆஃபீசருக்கும்,விஜய்காந்த்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.என்ன அது?
ஆர்.டி. ஓ ஆஃபீசர் 8 போட்டு காட்ட சொல்வார்.விஜய்காந்த் 8 % ஓட்டு கைவசம் இருக்கு என்பார்.
இது பழைய கணக்கு.இப்போது இவரின் ஓட்டு 12.8 %.தி.மு.க,அ.தி.மு.க,காங்கிரஸ் போன்ற பாரம்பரியமான கட்சிகள் பல வருடங்களாக கட்டிக்காத்து வந்த தொண்டர்கள்,மக்கள் ஆதரவு,ஓட்டு வங்கி இவை அனைத்தையும் குறுகிய காலத்தில் அசைத்துப்பார்க்க ஆயத்தமானவர்.
கே.பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,சிவாஜி போன்றவர்கள் சினிமா புகழில் வந்த செல்வாக்கை அரசியலில் புகுத்தி தனிக்கட்சி தொடங்கிய போது மக்கள் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை.ஆனால் விஜய்காந்த் தனி ரகம்.

தி.மு.க,அ.தி.மு.க 2 கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என துணிந்து கருத்து கூறினார்.இவர் ஒரு குடிகாரர் என ஜெ கூறிய போது அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா எனக்கேட்டு அதிர வைத்தார்.
இவர் போகும் இடங்களெல்லாம் கூட்டம் கூடினாலும் ,கலைஞர் சொல்வது போல் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது.
 எம் ஜி ஆர்க்குப்பிறகு எந்த நடிகரும் அரசியலில் வென்ற சரித்திரம் இல்லை என கலைஞர் நினைக்கிறார்.விதிவிலக்காக விஜயகாந்த் திகழ ஒரு வாய்ப்பு இருப்பதாக அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள்.பொதுவாக நடிகர்களின் 100வது படம் ஹிட் ஆவதில்லை.(விதிவிலக்கு எம்.ஜி ஆரின் ஒளிவிளக்கு,சிவாஜியின் நவராத்திரி)ரஜினி சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த ஸ்ரீ ராகவேந்திரர்,கமலின் முதல் சொந்தப்படமான ராஜபார்வை,சத்யராஜின் சொந்தப்படமான வாத்தியார் வீட்டுப்பிள்ளை 3 படங்களும் அவரவரின் 100வது படம்தான்.3மே தோல்விப்படங்கள்.ஆனால் விஜயகாந்த்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட் படம்.அதற்கும்,அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால் அவரது ரசிகர்கள் சினிமாவில் விதிவிலக்காக 100வது படத்தை வெற்றிப்படமாக்கியவர்ரால் அரசியலிலும் ஏன் வெற்றி பெற முடியாது என்கிறார்கள்.
நடுநிலையாளரும்,சிறந்த அரசியல் நையாண்டி பத்திரிக்கையாளருமான சோ அவர்கள் ஒரு வாசக்ரின் கேள்விக்கு அளித்த பதில் சிந்திக்க வைக்கிறது.
கே- 2011 சட்ட மன்றத்தேர்தலில் அ.தி.மு.க + ம தி மு க + காங்கிரஸ்+ தே மு தி மு க + கம்யூனிஸ்ட் கூட்டணி அமைந்தால் அந்தக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
ப- அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது கூட்டணி அல்ல.அதுதான் அசெம்ப்ளி.
அவரது கருத்து சரிதான்.ஏனெனில் அரசியலில் அரித்மேட்டிக் கால்குலேஷன் இருக்கிறது.ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத ஓட்டு உண்டு.

அ.தி.மு.க 26 %,  தி. மு.க 28 %,காங்கிரஸ் 20 %.,பா ம க 4 %,ம தி மு க 3%, என ஒரு கால்குலேஷன் உண்டு.கலைஞர் சிறந்த ராஜ தந்திரி என்பதால் சோ நினைப்பது போல் ஒரு கூட்டணி அமைக்க விடமாட்டார்.
விஜயகாந்த் நினைப்பது என்ன?தி மு க கூடவோ,அ.தி.மு.க கூடவோ கூட்டணி வைத்தால் அதிக பட்சம் 25 சீட் தான் கிடைக்கும்.அதுவே காங்கிரஸ் கூட தனியாக கூட்டணி வைத்தால் 50 % சீட் நிச்சயம்.கட்சியை வளர்த்து விடலாம்.
ராகுல்காந்தி அதேபோல் காங்கிரசை தனிப்பெரும் சக்தியாக வளர்க்க நினைப்பதால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் ராகுல் விஜய்காந்த் கூட்டணியில் ஆர்வமாக உள்ளார்.பொதுவாக ஜெ யாரையும் மதிக்க மாட்டார் என்ற பேச்சு முத்துசாமி கட்சியை விட்டு விலகியபோது நீர்த்துப்போனது.எப்போதுமில்லாத அதிசியமாக “எப்போது வேண்டுமானாலும் கட்சியினர் என்னை சந்திக்கலாம் எனக்கூறி அ தி மு க தொண்டர்கள் மனதில் ந்ம்பிக்கையை விதைத்தார்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.விஜயகாந்த் தனியாக நின்றதால் கிடைத்த 12% ஓட்டுகள் தி மு க வுடனோ,அ தி மு க வுடனோ கூட்டணி வைத்தால் அதே அளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
எனவே இப்போது இருக்கும் நிலவரப்படி விஜயகாந்த் காங்கிரஸ் உடன் கூடணி காண்பதே அவரது கட்சி வளர்ச்சிக்கு நல்லது.ஆனால் 50 வருடங்களுக்கு மேல் பொது வாழ்க்கையில் அனுபவம் நிறந்த கலைஞர் அதற்கு வழி விடுவாரா என்பதில்தான் கேப்டனின் எதிர்காலமும் ,தமிழக அரசியலின் போக்கும் தீர்மானிக்கப்படும்.
பி.கு-என்னைப்பொறுத்தவரை அவர் அரசியலில் பிரகாசிப்பதே நல்லது ஏன் எனில் எங்கள் ஆசான்,சபரி,காந்தி பிறந்த மண் மாதிரி படங்களில் அவரைப்பார்ப்பதற்கு அது ஒன்றும் மோசம் அல்ல.