Showing posts with label thangarbachan. Show all posts
Showing posts with label thangarbachan. Show all posts

Saturday, November 17, 2012

அம்மாவின் கைப்பேசி - சினிமா விமர்சனம்

http://chennaionline.com/images/gallery/2012/October/20121003060930/Ammavin_Kaipesi_Movie_Posters_Wallpapers_04.jpg 

ஒரு படத்தின் தயாரிப்பாளரோ , இயக்குநரோ அந்தப்படத்தில் தலை காட்ட ஆசைப்பட்டால்  பாலைவனக்கூடாரத்தில் தலைக்கு மட்டும் இடம் கேட்ட ஒட்டகத்தின் கதை ஆகி விடும், ஒரு நல்ல கதை கூட தேவையற்ற ஆக்ரமிப்பால் திசை மாறி திரைக்கதை தடுமாறிப்பயணித்து விழலுக்கு இரைத்த நீர் ஆகி விடும் என்பதற்கு சமீபத்திய நல்ல உதாரணம் தான் இந்த அம்மாவின் கைப்பேசி


படத்தோட கதையை தங்கர் பச்சான் சொன்ன மாதிரி அப்படியே சொல்லிட்டா அது தமிழ் இனத்தலைவரின்  ஈழப்பிரச்சனை பற்றிய தி முக நிலைப்பாடு மாதிரி குழப்பி அடிக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்தக்கதையை எப்படி சொல்லி இருக்கனுமோ அப்படி நேரா கதைக்கு வர்றேன். 


ஹீரோவுக்கு மாமன் பொண்ணு ( ஹீரோயின் ) மேல காதல். ஆனா அவர் வேலை வெட்டி இல்லாம ஊரைசுத்திட்டு இருப்பதால் காதலுக்கு தடை. ஹீரோயினின் அப்பா நடத்தும் மினர்ல் வாட்டர் கம்ப்பெனிலயே அவருக்கு வேலை போட்டுத்தர்றாரு. நல்லா சுமூகமா போய்ட்டு இருக்கும்போது வில்லங்கமா ஹீரோ மேல ஒரு திருட்டுப்பழி விழுது.


 பெத்த அம்மாவே ஹீரோவை நம்பலை. அதனால நல்ல நிலைமைக்கு வர்ற வரை இந்த ஊர்ப்பக்கம் தலை வெச்சு படுக்க மாட்டேன்னு சவால் அல்லது சபதம் எடுத்து ஹீரோ அம்மாவை அம்போன்னு விட்டுட்டு போயிடறார்.


 7 வருஷம் ஒரு  கல் குவாரில சூபர்வைசரா , மேனேஜரா வேலை செய்யறார்.அங்கே நடக்கும் ஊழலை கண்டு பிடிச்சு ஓனர்ட்ட காட்டிக்குடுக்கறார். பணி புரியும் ஆஃபீஸ் பணத்தை 65 லட்சம் ரூபாயை பேங்க்ல இருந்து எடுத்துட்டு வரும்போது அதே கல்குவாரில ஒர்க் பண்ணின ஆட்கள் 3 பேரால் ஹீரோ கொலை செய்யப்பட்டுடறார்.



தன் மகன் வருவான் வருவான்னு பார்த்துட்டு இருந்த அம்மா, மாமன் மகள் என்ன செஞ்சாங்க என்பது மிச்ச மீதிக்கதை 


ஹீரோ சாந்தனு. மிக அருமையான நடிப்பு. இதுவரை பிளே பாயாக நடித்தவர் முதல் முதலா குணச்சித்திர நடிப்பு. வெல்டன்.ஹேர் ஸ்டைலை எல்லாம் கிராமத்தான் போல் மாற்றி பாடி லேங்குவேஜிலும் அக்கறை காட்டி இருக்கிறார். அம்மாவிடம் விளக்குமாற்றால் அடி வாங்கும் காட்சியில் தாய்க்குலங்களின் அனுதாபத்தையும் , கமல் , விக்ரம்க்குப்பின் ஈகோ பார்க்காமல் அடி வாங்கும் 3 வது தமிழ் ஹீரோ என்ற அந்தஸ்தையும் பெறுகிறார்


இனியா அவருக்கு  ஜோடி. காதல் காட்சியிலும் சரி , சோகக்காட்சியிலும் சரி அளவான நடிப்பு. டூயட்  காட்சியில் இளமை கொப்புளிக்கிறது. ( பல் துலக்கற சீனா?ன்னு கேட்கக்கூடாது) 


 தங்கர் பச்சான் தான் படத்துல வில்லன் படத்துக்கும் வில்லன். அதாவது இந்தப்படம் போதிய வரவேற்புப்பெறாமல் போவதற்குக்காரணமே இவர் கேரக்டர் தான். இயக்குநருக்கான கேள்விகள் பகுதில இவருக்கு ஆப்பு காத்திருக்கு,. 


 ஒளிப்பதிவு , எடிட்டிங்க் , இசை எல்லாம் நிறைவாக இருக்கு. இந்த மாதிரி கிராமியக்கதைகளில் இளையராஜாவின் இசை இருந்தால் அது படத்துக்கு பிளஸ் ஆக இருக்கக்கூடும். ஆனால் இசை புதுமுகம்.

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Jul/16/Ammavin_Kaipesi_Latest_Movie_Stills/Ammavin_Kaipesi_Latest_Movie_Stillsfef194123a98e23594c841797206e7cc.jpg.


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தில் முடிந்தவரை தொழில் சம்பந்தப்பட்ட விவரங்களை படத்தின் தேவைக்கு மீறி விலாவாரியாக காட்டியது.  மினரல் வாட்ட்டர் பாக்கெட் தயாரிப்பு , மாம்பழ ஜூஸ் கம்ப்பெனி , கல் குவாரி ஃபேக்டரி சம்பந்தப்பட்ட காட்சிகள் 



2. படத்தின் மெயின் கதையிலோ, நாவலிலோ கல்குவாரி பற்றி இல்லை. ஆனாலும் பட ஷூட்டிங்க்கின் போது டாபிக்கல் மேட்டராய் கல்குவாரி பிரச்சனை ஓடியதால் மணி ரத்னம் பாணியில் அதை சாமார்த்தியமாய் உள் நுழைத்தது 



3..ஹீரோ - ஹீரோயின் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் இளமை ஊஞ்சல் , தூரி ஆடும் வகையில் படப்பிடிப்பு 



4. சைக்கிள் கேப்பில் கிராமத்து நடன வகைகள் , கிராமத்து இசை வாத்தியங்களை ஆங்காங்கே சேர்த்து இசையை ரசிக்க வைத்தது 


5. பெரும்பாலான கேரக்டர்களை கிராமத்து நிஜ மனிதர்களை நடிக்க வைத்தது. ஒரே கல்லுல 2 மாங்காய். நடிப்பு இயல்பா இருக்கும். சம்பளமும் தரத்தேவை இல்லை.. வேலை வாங்கும் சாமார்த்தியம் இருந்தா போதும் 


6. தங்கரின் மனைவியாக வருபவர் நடிப்பு அற்புதம். ரசிக்கத்தக்க நடிப்பு + இடுப்பு மடிப்பு 


http://mimg.sulekha.com/tamil/ammavin-kaipesi/stills/ammavin-kaipesi-movie-pics-0124.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. படத்தோட மெயின் கதை அம்மா , மகன் பாசம் , பிரிவு மீண்டும் அவர்கள் சேர்வது பற்றித்தான். ஆனால் திரையில் 60 % கதையை இயக்குநரான நீங்களே ஆக்ரமிச்சுட்டா மெயின் கதையின் தாக்கம் எபப்டி மக்களுக்குப்போய்ச்சேரும்? 


2. படத்துல 3 வில்லன்க. அதுல ஒருத்தர்தான் இயக்குநரான நீங்க.. அதென்ன உங்களூக்கு மட்டும் ஏகப்பட்ட காட்சிகள் , ஒரு டூயட் வேற . சகிக்கலை.. இந்த லட்சணத்துல இயக்குநருக்கு ஒரு கில்மா சீனும், ஏய் இன்னொருக்கா அப்டினு கேட்கும் கிளு கிளு காட்சியும், படத்துல மகா எரிச்சலை வரவைக்கும் காட்சி.. ஏய்யா , கதை எவ்ளவ் சீரியஸா போய்ட்டிருக்கு.. அதுல போய் கில்மா காட்சியா? அப்டியாவது ஹீரோ - ஹீரோயினுக்குன்னா கூட பரவாயில்லை.. 


3. க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனான நீங்க ஒரு கொலையை பண்ணிட்டு சாமி கோயில்ல ஆணி செருப்புல நடந்து தாய்க்குலத்தின் இரக்கத்தை சம்பாதிக்க முயற்சி பண்ணிய சீனுக்காகவே உங்களை  ஜெயில்ல போடனும் . படு கேவலமான , அனுதாபத்தை பிச்சை கேட்கும் காட்சி// 



4. ஹீரோ அம்மாவுக்கு ஃபோன் பண்றார். அம்மா செல்ஃபோனை வந்து எடுக்கறதுக்குள் கட் ஆகிடுது. ஏன் அவர் 2 வது டைம் பண்ண மாட்டாரா>? 7 வருஷம் பிரிஞ்சு இருப்பவர் இப்படித்தான் பொறுப்பில்லாம இருப்பாரா? 



5. அம்மா - மகன் செண்ட்டிமெண்ட் காட்சியை பிழிஞ்சு எடுக்க  நினைத்ததெல்லாம் ஓக்கே. அதுக்கு  என்ன பண்ணி இருக்கனும்? அம்மா - மகன் பாசத்தை ஆல்ரெடி ஓப்பனிங்க்ல காட்டி இருக்கனும்.. ஒரு சீன் கூட அம்மா மகன் பாசக்காட்சியே ஆழமா காட்டலை./. உங்களூக்கு உங்களை முன்னிலைப்படுத்தவே நேரம் சரியா இருக்கு 


6.  மாமன் மக்ளை பிரிஞ்சு போன ஹீரோ அவருக்கு ஒரு கடிதம் கூட போட மாட்டாரா?  அட்லீஸ்ட் ஹீரோயின் தோழி, பக்கத்து வீட்டுக்காரம்மா யார் மூலமாவது தொடர்பு கொள்ள முயற்சிக்க மாட்டாரா>? 



http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Jul/16/Ammavin_Kaipesi_Latest_Movie_Stills/Ammavin_Kaipesi_Latest_Movie_Stillse7cee2300ad768707777b28d444c8bba.jpg



7. மாமன் மகளுக்கு மேரேஜ் வேற ஒருவர் கூட ஆகிடுது. அதுக்கு அவர் சொல்ற காரணம் செம காமெடி . உங்க கிட்டே இருந்து தகவலே வர்லை என்பதால் நீங்க செத்துட்டீங்கன்னு நினைச்சேன். டெட் பாடி பார்க்காம எப்டி அப்டி ஒரு முடிவுக்கு வர்றது? 


8. கல் குவாரில அப்போதான் முதல் நாள் வேலைக்கு சேரும் ஹீரோ சட்டசபையில் கேப்டன் மாதிரி ரணகளப்படுத்துவது எப்படி? முதல் நாள்ல எல்லாருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். அந்த காட்சி படு செயற்கை 



9. ஆண்டாண்டு காலமாய் ஊழல் செய்யறவன், கோடிக்கணக்குல சம்பாதிச்சவன் தனக்கு இடையூறாய் ஒருத்தன் வந்தா  டக்னு ஆளை கொலை செஞ்சு விபத்து மாதிரி காட்டுவானே தவிர நீயும் கூட்டாளீயா சேருன்னு கோடிக்கணக்குல பணத்தை லாஸ் ஆக்க மாட்டான்.. 


10. கல்குவாரில நல்ல வேலைக்கு சேர்ந்ததும் ஹீரோ ஏன் அம்மாவுக்கு தகவல் சொல்லலை? மாமன் மகள் இடம் தன் சந்தோஷத்தை பகிர்ந்துக்கலை. காதலியிடம் தான் இப்படிப்பட்ட சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்க முடியும். அதை ஏன் அவர் செய்யலை? 



11.  பத்துநாளா உனக்கு ஃபோன் பண்ணிட்டே இருக்கேன், ஏன் எடுக்கலை?னு ஹீரோயின் கேட்டப்ப ஹீரோ சொல்லும் டயலாக் சிறுபிள்ளைத்தனமானது. “ நான் இங்கே ஒரு பிரச்சனைல மாட்டி இருக்கேன்” அதான்.   10 நாளா அவர் குளிக்காம , சாப்பிடாம இருந்தாரா? ஃபோன் அட்டெண்ட் பண்ணக்கூட டைம் இல்லையா?


12. பேங்க்ல 65 லட்சம் கேஷ் தர்றாங்க.அதை எத்தனை கட்டு இருக்குன்னு கூட செக் பண்ணாம எந்த  மடையனாவது பேக்கை திறந்து கூட பார்க்காம வாங்கிட்டு வருவானா? காட்டுப்பாதைல அவ்ளவ் கேஷ் வெச்சுக்கிட்டு  தனியா பயணம் செய்வாங்களா? எங்க ஆஃபீஸ்ல ஒரு லட்சம் வித்ட்ரா பண்ணிட்டு வர்றதுன்னாலே மேனேஜர் 2 பேரை கூட கூட்டிட்டுப்போங்கறார். 65 லட்சம் அப்படி அநாமத்தா விட்டுடுவாங்களா? 


http://www.breezemasti.com/gallery/data/media/201/iniya_in_ammavin_kaipesi_movie_stills_2.jpg


13. முக மூடி போட்டு வழிப்பறி பண்றவங்க ஏன் திடீர்னு அதை கழட்டி ஹீரோ கிட்டே தங்களை அடையாளப்படுத்திக்கறாங்க? துப்பாக்கில வந்த மாதிரி சஸ்பென்சோட  சாவுன்னு ஏன் சொல்லாம இடம் சுட்டி பொருள் விளக்கி டைம் வேஸ்ட் பண்றாங்க?



14. ஹீரோவை  2 பேர் சூழ்ந்ததும் என்னை விட்டுடு , பணத்தை வேணா எடுத்துக்க அப்டினு ஹீரோ சொல்றது எப்படி? 10 பேர் சேர்ந்த கும்பல்னா ஓக்கே , ஜஸ்ட் 2 பேர். சமாளிக்கலாமே? ஏன் முயற்சியே பண்ணலை? 


15. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பணத்துக்காக தன்னை துரத்தும் 2 வில்லன்க கிட்டே இருந்து தப்பிக்க அந்த பள்ளத்தாக்குல இருந்து ஜஸ்ட் தண்ணீரில் ஜம்ப் பண்ணி இருக்கலாமே? ஏன் செய்யலை? ( நீச்சல் தெரியாதுன்னு சாக்கு சொல்ல வழி இல்லை.. கிராமங்களில் நீச்சல்  தெரியாத ஆளே இல்லை )



16. க்ளைமாக்ஸ் ஓவர் இழுவை.. சீக்கிரம் முடிங்கப்பா  என தியேட்டர்ல அவனவன் கதறிட்டு இருக்கான்.. 


17. யார் நம்பலைன்னாலும் பெத்த அம்மா மகனை நம்புவா.அப்படியே நம்பலைன்னாலும் வெளீல சொல்லிட்டு இருக்க மாட்டா. ஊர் மக்கள் முன்னாடி விளக்கு மாற்றால் அடிப்பது எல்லாம் ஓவரோ ஓவர் 



http://masscinema.in/wp-content/gallery/ammavin-kaipesi-movie-stills/ammavin-kaipesi-movie-stills-11.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. சும்மா இருக்கும் ஆம்பளையை எந்த பொண்ணுக்கும் பிடிக்காது # ( சும்மா = வேலைக்குப்போகாம)


2. இன்னைக்கு உலகத்துல இருக்கும் பெரும்பாலான பணக்காரர்கள் எல்லாருமே ஒரு கால கட்டத்துல ஒரு வேளை சாப்ப்ட்டுக்கூட வழி இல்லாம கஷ்டப்பட்டவங்களே.. 



3. இன்னும் 10 வருஷத்துல இந்த நாடே குடிகார நாடா மாறப்போகுது


4. சுத்த பத்தமா இருந்தா எங்கேயும் சாப்பிடலாம். கையேந்தி பவன்ல கூட .


5.  தமிழ்ல இருக்கறதுலயே உயர்வான வார்த்தை அய்யா தான்.
சார் எல்லாம் வெள்ளைக்காரன் கண்டு பிடிச்சது.


6. ஒரு வெள்ளைக்காரன் இன்னொரு வெள்ளைக்காரனை சார்னு கூப்பிட்டு பார்த்திருக்கிங்களா? 


7. கிழவன் தான் கரும்பு ஜூஸ் குடிப்பான், குமரன் கரும்பைத்தான் கடிப்பான் ( டபுள் மீனிங்க் )


8. குவாரிங்கறது தங்க முட்டை இல்லை இல்லை வைர முட்டை இடும் வாத்து



9. அம்மா அலங்காரம், நீயே ஒரு அலங்காரம் , உனக்கு எதுக்கும்மா இன்னும் அலங்காரம்? 


 http://tamilmaxs.com/wp-content/gallery/ammavin-kaipesi-tamil-movie-stills/thangar-bachan-and-meenal-at-ammavin-kaipesi-movie-stills-3.jpg



 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 


  எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 



 எதிர்பார்க்கும்   டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேட்டிங்க் -  5 /10



சி.பி கமெண்ட் - தாய்க்குலங்கள் , டி வி சீரியல் ரசிச்சுப்பார்க்கறவங்க பார்க்கலாம். மற்ற யாராவது போனீங்க அவ்ளவ் தான். இல்லை அழகி , ஒன்பது ரூபாய் நோட்டு என நல்ல படம் எல்லாம் குடுத்திருக்கார். ஏமாற்ற மாட்டார்னு அடம் பிடிக்கறவங்க போங்க , படுங்க ஐ மீன் பட்டுத்தெளிங்க.ஈரோடு தேவி அபிராமியில் பார்த்தேன் .


http://filmiparadise.com/upload/stills/1628_wallpaper202813257.jpg