Showing posts with label PENNUM PORATTUM (2026) -பெண்ணும் பொரட்டும் -மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் (. Show all posts
Showing posts with label PENNUM PORATTUM (2026) -பெண்ணும் பொரட்டும் -மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் (. Show all posts

Wednesday, April 15, 2026

PENNUM PORATTUM (2026) -பெண்ணும் பொரட்டும் -மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ நெட் பிளிக்ஸ்

               

      PENNUM PORATTUM  (2026) -பெண்ணும்  பொரட்டும் -மலையாளம் /தமிழ் - சினிமா  விமர்சனம் ( காமெடி டிராமா ) @ நெட் பிளிக்ஸ் 


        அறிமுக  இயக்குனர் ராஜேஷ்  மாதவன் இயக்கத்தில்  உருவான  இந்த லோ பட்ஜெட்  படம் முழுக்க  முழுக்க  புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டு பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம் , படத்தைப்பற்றிப்பேசும் முன் பட இயக்குனர்    கடந்து வந்த பாதை பற்றிப்பார்த்து விடலாம்


பகத்  பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் (2016) படத்தில்   துணை நடிகராக அறிமுகம் ஆனார் ,தொண்டி முதலும் திரிசாக்ஷியும் (2017) படத்தில்  உதவி இயக்குனர் ஆகப்பணி ஆற்றினார் .நா  தான்  கேஸ் கொடு (2022)  படத்தில்  முக்கிய வேடம் ஏற்ற  இவர்  மரணமாஸ் (2025) படத்த்தில்  சைக்கோ  வில்லன் ஆக நடித்து கலக்கியவர் . நம்ம  ஊர்   வடிவேலு வின்  ஆரம்ப கட்ட     ஒல்லி   உருவத்துடன்  இருக்கும்  இவர்   தன உடல் மொழியாலேயே  பிரமாதமாக காமெடி செய்யக்கூடியவர் . இந்தப்படத்தில்  ஒரு  சின்ன ரோலிலும்  நடித்து  படத்தையும் இயக்கி இருக்கிறார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு கிராமத்தில் வசிக்கிறாள் இவள் செல்லமாக ஒரு நாய் வளர்த்து வருகிறாள் அந்த நாய்க்கு  ரேபிஸ்  நோய்  தொற்று ஏற்பட்டு விட்டது என்ற வதந்தி  பரவி அந்த கிராமமே  நாயைத்துரத்தி விட  முயற்சிக்கிறது அந்த நாயை  கிராமத்து  மனிதர்கள்  துரத்துவது   காமெடியாக  ஒரு டிராக்கில் காட்டப்பட்டுக்கொண்டே வருகிறது. இது  ஒரு டிராக் 



 நாயகனுக்கு காதல் , கல்யாணம்  இவற்றில் எல்லாம்  கொஞ்சம்  கூட நம்பிக்கை இல்லை , ஆனால்  திருமணத்துக்குப்பின் நிகழ இருக்கும்  சம்பவம்  மட்டும் தனக்கு நிகழ  வேண்டும் என்று ஆசைப்படுகிறான் . தனது   ஆசையை   நாயகன் , நாயகிக்கு  வாட்சப்பில்  வாய்ஸ்  மெசேஜ்  மூலம்   சொல்கிறான் . நாயகி அந்த மெஸேஜைக்கேட்டதும்  செம  கடுப்பாகி நாயகனை லெஃப்ட்   அண்ட்   ரைட்   வாங்கி  விடுகிறாள் . இந்த மாதிரி என் கிட்டே  பேசும்   வேலை எல்லாம்  வெச்சுக்க வேண்டாம் என எச்சரித்து    வாய்ஸ்   மெசேஜ் அனுப்புகிறாள் 

இந்த  விஷயம்  கிராமம்  முழுக்கப்பறவி விடுகிறது 

நாயகனின் அம்மா  ஒரு மொய்  விருந்துக்கு  கிராம மக்களை அழைத்திருக்கிறாள் . விஜயகாந்த்  நடித்த சின்னக்கவுண்டர் படத்தில்  மொய்  விருந்து  பற்றி  தமிழ்  சினிமாவில் முதன் முதலாக ஒரு விளக்கம் வைத்து இருப்பார்கள் . வீட்டில்  திருமணம்  போன்ற நல்ல காரியங்கள் செய்யும் முன்  செலவுக்குப்பணம்  திரட்ட   கிராமங்களில்   மொய் விருந்து  வைப்பார்கள் . விருந்துக்கு  வரும் சொந்த  பந்தங்கள்  சாப்பிட்டு விட்டு  மொய்  வைத்து  விட்டு  செல்வார்கள் .


தன் மகனுக்கு இப்போதைக்குத்திருமணம்  நடக்காது  என்பதை  உணர்ந்த  நாயகனின் அம்மா  தனது  பழைய வீட்டைப்புதுப்பிக்க  ஊர்  மக்களை அழைத்து  மொய் விருந்து     வைக்கிறாள் , இந்த  விருந்தில்  கலந்து  கொள்ளும் ஊர்  மக்கள் செய்யும் காமெடி கலாட்டாக்கள்   ஒரு டிராக் .

நாயகியின்  அம்மா  விடம்  பலர்   வந்து  அந்த  வாட்ஸப்  மெசேஜை பற்றி  வத்தி  வைக்க  தன சொந்த பந்தங்களை எல்லாம்  அழைத்துக்கொண்டு  நாயகனின்  அம்மா  வீட்டுக்கு  வந்து  அந்த  மொய்  விருந்து  நடக்கும்போதே   நாயகியின்  அம்மா  கலாட்டா   செய்கிறாள் 


இதற்குப்பின்  நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான்   மீதித்திரைக்கதை 


நாயகன் , நாயகி  இருவரும்  புதுமுகங்கள் . இவர்கள்  படத்தில்   வரும்  நேரம்  கொஞ்ச  நேரம் தான் . கிராம மக்கள் செய்யும் அழிச்சியாட்டங்கள்தான் மொத்தத்திரைக்கதையுமே 

 நாயகி ஆக  ரைனா ராதா கிருஷ்ணன்  நடித்திருக்கிறார் . சந்தன  சிலை  போல   இருக்கிறார் . குறைவான  நேரமே   இவர்  திரையில்  வந்தாலும்   நிறைவான நடிப்பு 

 வைசக்த்   சுகுணன்  பாடல்கள்  எழுதி  இருக்கிறார் . கதை , திரைக்கதையை  ரவி சங்கர் எழுதி  இருக்கிறார் . சாபின் உரலிகண்டி    ஒளிப்பதிவு  செய்திருக்கிறார் . கிராமிய அழகைக்கண்  முன்   நிறுத்தி இருக்கிறார் , சாமன் சாக்கோ   எடிட்டிங்க்  செய்து இருக்கிறார் . படத்தின் ரன்னிங்க் டைம்  2 மணி நேரம் 


சபாஷ்  டைரக்டர்

1   நாயகன் , நாயகி  இருவரும்   பெயரளவிற்குத்தான் . மொத்தமே  20 நிமிடங்கள்  தான்  வருகிறார்கள் .படத்தில்  டூயட்   இல்லை . லவ் போர்சன்  எதுவும்   இல்லை . முழுக்க  முழுக்க  காமெடி தான் 

2  மொய்  விருந்தில்  கட்டு கட்டிச்செல்லும்   பெண்  குறைவான மொய் வைக்க  அதை ஒட்டி   நாயகனின் அம்மா செய்யும் அலப்பறைகள்  காமெடி கலாட்டா 

 3    நாயகனின்   அம்மா  தரப்பு ஆட்கள் , நாயகியின் அம்மா   தரப்பு ஆட்கள்  இரு தரப்பும்  சண்டை  இட்டுக்கொள்ளும்  காட்சி   காமெடி அதகளம்   என்றால்  சண்டை  முடிந்தபின்  திடீர்  என  சம்பந்தம்  செய்து கொள்வது  கலக்கல் காமெடி 

4    கிராமத்து   மக்களின் வெள்ளந்தித்தனம்,முட்டாள்த்தனம் அனைத்தையும் நையாண்டி செய்த விதம்.முகமது பின் துக்ளக் படத்தில் துக்ளக் சோ அரசியல் நையாண்டி செய்தது போல இதில் கிராமத்து மக்களின் அப்பாவித்தனம்,அறியாமையை நையாண்டி செய்த விதம்

,5 விருப்பம் இல்லாத இடத்தில் இருந்து தப்பி ஓடத்தான் இந்த உலகமே படைக்கப்பட்டிருக்கிறது என்ற வசனத்தை ஓப்பனிங்க் சீனிலும்,க்ளைமாக்சிலும் வைத்து சொல்ல வந்த கதைக்கருவை முன்னிலைப்படுத்திய விதம்


6 ஒரு நாயின் பார்வையில் மனிதர்களை ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்கும் ஐடியா ,தாட் பிராசஸ் அருமை.நாய்க்குக்குரல் கொடுத்திருப்பவர் டொவினோ தாமஸ் (தமிழ் டப்பிங் கில் வேறு ஒருவர்)

7  சகித்துக்கொள்வதற்குக்கத்துக்கறோம்,மறக்கறதுக்கும் கத்துக்கனும்

எமோசன்ஸ் வேற வாழ்க்கை வேற

இந்த இரண்டு கருத்துக்களையும் முன்னிறுத்திய விதம்.

8  நடிக ,நடிகையரின் டிராமாடிக் ஆக்டிங்கைப்பார்த்துப்பழகிய நமக்கு அச்சு அசல் கிராமிய மக்களின் யதார்த்த நடிப்பு பாரதி ராஜா படங்களை நினைவுபடுத்துகிறது.

9 கிராமத்தில் கொல்லைப்புறத்தில் இருக்கும் மனைவிக்கு கணவன் மைக் எடுத்து குரல் கொடுப்பது கலக்கல் காமெடி

10. இங்கே என்ன நடக்குது?எனக்கேட்டவரிடம் அதான் டி வி ல பார்த்துட்டு இருக்கேன் என கிராமத்து ஆள் சிசிடிவி காமராவில் பார்க்கும் சீன் செம.

11 நாயகன் நாயகியிடம் ரூம் எடுத்துத்தங்கலாம் என்று ஏன் சொன்னான் என சண்டை நிகழும்போது அதுதான் இவ்ளோ பெரிய வீடு இருக்கே?எதுக்கு ரூம் எனக்கேட்கும் சீன் வெடிச்சிரிப்பு.

12 நாய் கடிச்ச கோழிக்கு தொப்புளை சுத்தி ஊசி போடனும்.கோழிக்கு தொப்புள் எங்கே?காட்டு எனக்கேட்கும் சீன்.

13 வேகமாகப்போகும் காரில் இருக்கும் மாஸ்டர் வண்டியைத்திருப்பு என்றதும் சடன் பிரேக் அடித்துத்திருப்பும் சீனில் மாஸ்டர் அடிக்கும் கவுண்ட்டர் அட்டாக் ரகளை.

14 கிரேசி மோகன் டைப் வார்த்தை ஜாலக்காமெடி அசத்தல்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் உதா-

அவ உன் கிட்டே என்ன சொன்னா?

என்னைக்கட்டாயப்படுத்த வேணாம்.

படுத்தலை.நீ சொல்லு.


அதான் இப்போ சொன்னேனே.என்னைக்கட்டாயப்படுத்த வேணாம்னு அவ சொன்னா.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கதை சொல்லும் பாணி புதிது என்றாலும் சிலருக்குப்பிடிக்காமல் போகலாம்.நாயகன்,நாயகி வரும் நேரம் மிகக்குறைவே என்பது சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

2 ஆர் பாண்டியராஜனின் நெத்தி அடி படத்தில் முதல் 14 நிமிடங்கள் கிராமத்து மக்களின் காமெடி சேசிங் சீன் தான்.அதே சீன் படம் முழுக்க வந்தால் எப்படி இருக்கும்? பலரும் என்ன இது?,கதையே இல்லை? எனக்கேள்வி எழுப்பக்கூடும்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு.ஆனால் கிராமிய வசைச்சொற்கள் இருக்கும்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான ,கலகலப்பான மாறுபட்ட நகைச்சுவைப்படம்.ரேட்டிங் 3/5


இந்தப்படம் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.பட விழாவில் டைட்டில் Girl And Fools