Showing posts with label MARDAANI 3(2026)-ஹிந்தி-சினிமா விமர்சனம் (மெடிக்கல் க்ரைம் ஆக்சன் திரில்லர் ). Show all posts
Showing posts with label MARDAANI 3(2026)-ஹிந்தி-சினிமா விமர்சனம் (மெடிக்கல் க்ரைம் ஆக்சன் திரில்லர் ). Show all posts

Friday, April 17, 2026

MARDAANI 3(2026)-ஹிந்தி-சினிமா விமர்சனம் (மெடிக்கல் க்ரைம் ஆக்சன் திரில்லர் )@நெட் பிளிக்ஸ்


MARDAANI 3(2026)-ஹிந்தி-சினிமா விமர்சனம் (மெடிக்கல் க்ரைம் ஆக்சன் திரில்லர் )@நெட் பிளிக்ஸ்                                   

30/1/2026 அன்று வெளியான இந்தப்படம் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 78 கோடி ரூபாய் வசூல் செய்தது.இப்போது 27/3/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடி யில் வெளியாகி இருக்கிறது.தமிழ் டப்பிங்க் இல்லை.ஆங்கில சப் டைட்டில் உண்டு.27/4/2026 முதல் தமிழ் டப்பிங்கில் கிடைக்கும்.


இந்தப்படத்தின் முதல் பாகமோ,இரண்டாம் பாகமோ பார்க்காதவர்கள் கூட இதை ரசிக்க முடியும்.காரணம் மூன்று பாகங்களும் வேறு வேறு கதைகள்.ஒரே ஒரு கேரக்டர் அதாவது நாயகி மட்டும் மூன்று பாகங்களிலும் மெயின் ரோலில் வருவது மட்டும் தான் ஒரே ஒற்றுமை.


ஆண் போலீஸ் ஆபீசர் ஹீரோவாக நடித்த படங்கள் பல பாகங்கள் ஏற்கனவே வந்திருக்கிறது.சூர்யா நடித்த சிங்கம் 1 சிங்கம் 2 சிங்கம் 3  ,விக்ரம் நடித்த சாமி 1 ,சாமி 2 ஆகியவை உதாரணங்கள்.ஆனால் பெண் போலீஸ் ஆபீசர் படங்கள் இப்படி 3 பாகங்களாக வருவது இது முதல் முறை.விஜயசாந்தி நடித்த வைஜயந்தி ஐ பி எஸ் மெகா ஹிட் ஆனாலும் என்ன காரணத்தாலோ அதன் அடுத்த பாகம் வரவில்லை.ராணி முகர்ஜிக்குத்தான் இந்திய அளவில் அந்தப்பெருமை கிடைத்திருக்கிறது.

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லி ஒரு அமைப்புக்குத்தலைவி.பல அடியாட்கள் அவள் அமைப்பில்  வேலை செய்கிறார்கள்.ஏழைக்குழந்தைகளை,அனாதைக்குழந்தைகளைக்கடத்தி வருவதுதான் அடியாட்களுக்குத்தரப்படும் டாஸ்க்.ஒரு குழந்தைக்கு ஒரு லட்சம் சன்மானம் அடியாளுக்கு உண்டு.


கடத்தி வரப்பட்ட குழந்தைகளை வில்லி பாலா இயக்கிய நான் கடவுள் பட வில்லன் மொட்டை ராஜேந்திரன் போல  பிச்சை எடுக்கப்பழக்கி விடுகிறாள்.

இந்தியாவின் முக்கியமான அம்பாசிடர் ஒருவரின் மகளைக்காணவில்லை.யாரோ கடத்தி விட்டார்கள்.அந்த மகளைத்தேடும் பணி நாயகிக்குத்தரப்படுகிறது.


நாயகி கடத்தல்காரனை ட்ரிக்கர் செய்ய அம்பாசிடரின் குழந்தை போட்டோவை மீடியாவில் காட்டி இந்தக்குழந்தையைக்கண்டு பிடித்தால் ,ஒப்படைத்தால் ரூ 2 கோடி பரிசு என அறிவிப்பு செய்ய உத்தரவிடுகிறார்.


வில்லியின் அடியாள் தான் அம்பாசிடர் குழந்தையைக்கடத்தியவன்.ஆனால் பெரிய இடத்துக்குழந்தை எனத்தெரியாது.தெரியாமல் கடத்தி வில்லியிடம் குழந்தையை  ஒப்படைத்தவன் இப்போது டி வி விளம்பரம் பார்த்து அடடா,ஒரு லட்சத்துக்கு ஆசைப்பட்டு 2 கோடி பரிசை விட்டு விட்டோமே என்று நினைத்து  வில்லியிடம் ஒப்படைத்த குழந்தையை மீண்டும் தன் வசம் கொண்டு வருகிறான்.

நாயகி ,வில்லி ,வில்லியின் அடியாள் இவர்கள் மூவருக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் கதை.


நாயகி ஆக சீனியர் சூப்பரிண்டண்ட் ஆப் போலீஸ் ஆபீசர்  ஆக ராணி முகர்ஜி கம்பீரமாக நடித்திருக்கிறார்.அவரது உடல் மொழி,போலீஸ் கம்பீரம் எல்லாம் பிரமாதம்.


வில்லி ஆக மல்லிகா பிரசாத் நல்ல நடிப்பு,தெனாவெட்டான உடல் மொழி,அவரின் கொடூரமான பார்வையே மிரட்டல் ரகம்.


வில்லியின் வளர்ப்பு மகன் ஆக பிரஜேஸ் காஷ்யாப்க்கு நடிக்க நல்ல வாய்ப்பு.வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார்.


போலீஸ் கான்ஸ்டபிள்  பாத்திமா ஆக வரும்  ஜானகி போதிவாலா அப்ளாஸ் அள்ளும் நடிப்பு.


மேலே சொன்ன இந்த நான்கு முக்கியமான கேரக்டர்கள் தவிர படத்தில் வரும் மற்ற அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

பாடலுக்கான இசையை சார்த்தக் கல்யாணியும்,பின்னணி இசையை ஜான் ஸ்டீவர்ட் யதூரியும் கவனித்து இருக்கிறார்கள்.பிஜிஎம் நல்ல விறுவிறுப்பு.

ஒளிப்பதிவு,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்.129 நிமிடங்கள் ரன்னிங் டைம்.


ஆயுஷ் குப்தா கதை,திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் அபிராஜ் மினவாலா.ஆதித்யாசோப்ராவின் தயாரிப்பு இது.


சபாஷ்  டைரக்டர்

1 வில்லியாக நடித்தவர்  நிஜ வாழ்வில் முன்னாள் எம் எல் ஏ என்பதால் அந்த கேரக்டரை அனாயசமாக டீல் செய்திருந்தார்.


2 படத்தில் பாடல்கள் இல்லாதது படத்தின்  விறுவிறுப்பைக்கூட்ட உதவி ஆக இருந்தது.(ஒரே ஒரு சின்னப்பாட்டு மட்டும்)


3 ஹியூமன் டிராபிக் + குழந்தைக்கடத்தல் பற்றிய விழிப்புணர்வுப்பதிவாகக்கொடுத்த விதம் அருமை.

4. பிச்சை எடுக்க வைப்பது மட்டும் அல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை எடுத்து விற்பது என்ற ஐடியா ,அந்த தாட் பிராசஸ் அருமை (உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இதை இணைத்திருக்கிறார்கள் )

5 தொடர்ந்து 3 பாகங்களிலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாகத்திரைக்கதை அமைத்த விதம்

6 உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்ததால் காட்சிகளில் நம்பகத்தன்மை அதிகம்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகியின் இண்ட்ரோ சீன். அருமை என்றாலும் அந்த சாக்குப்பை மேட்டர்  ஏற்கனவே புஷ்பா (தெலுங்கு) படத்தில் வந்த காட்சி தான்.

2 வில்லி கேரக்டர் க்ளைமாக்சுக்கு முன்பே இறந்து விடுவதால் ஒரு எதிர்பார்ப்பு ,விறுவிறுப்பு இல்லை

3 படத்தின் இரு பெரிய ட்விஸ்ட் என இவர்கள் நினைத்து வைத்த அந்த மேட்டர் நாம் சுலபமாக யூகிக்கக்கூடியதாக இருந்தது பின்னடைவு.

4 நாயகியின் ஆள் வில்லி கேங்கில் உளவு பார்ப்பது ,வில்லியின் ஆள் நாயகி கேங்கில் இருந்து உளவு பார்ப்பது இரண்டிலும் சஸ்பென்ஸ் இல்லை


5 கடத்தப்பட்ட குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என ஒரு போலீஸ் ஆபீசரே குழந்தையின் பெற்றோரிடம் சொல்லலாமா?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+

மன உளைச்சலைத்தரக்கூடிய சில காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் ,சிறுவர்கள் தவிர்க்கவும்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -     க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ரசிகர்கள்,ராணி முகர்ஜி ரசிகர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5         


விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு சுவராஸ்யத்தகவல்.


இப்படத்தின் ஷூட்டிங்க் டெல்லியில்  நடந்தபோது 800 குழந்தைகளை போலீஸ் மீட்கும் காட்சியைப்பார்த்து பொது மக்கள் அது ஒரு நிஜ சம்பவம் என நினைத்து பீதி அடைந்தார்கள்.டெல்லி போலீஸ்  தயாரிப்பாளரிடம் நட்ட ஈடு கேட்டது.தயாரிப்புத்தரப்பு நட்ட ஈடு தர மறுத்தது.