Showing posts with label LIK லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா). Show all posts
Showing posts with label LIK லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா). Show all posts

Sunday, April 12, 2026

LIK லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)


விக்னேஷ் சிவனின் முதல் படம் போடா போடி(2012) ஓக்கே ரகம்,நானும் ரவுடி தான் (2015) செம ஹிட் ,தானா சேர்ந்த கூட்டம்(2018) சராசரி,காத்துவாக்குல ரெண்டு காதல்(2022) பரவாயில்லை ரகம்.நயன் தாராவின் தயாரிப்பில் உருவான இந்தப்படம் எப்படி?என்று பார்ப்போம்.

                                 


ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை நடக்கும் கால கட்டம் 2040.

வில்லன் ஒரு டிஜிட்டல் உலகத்தின் முடிசூடா மன்னன்.இவர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று ஒரு ஆப் கண்டுபிடிக்கிறார்.கல்யாண மாலை நிகழ்ச்சி மூலம் வரன் பார்ப்பது போல இந்த ஆப் மூலம் காதலர்கள் தங்கள் ஜோடிப்பொருத்தம் அறிந்து கொள்ளலாம்.


நாயகி ஒரு அரை லூஸ்.ரீல்ஸ் பைத்தியம்.வளர்ப்பு சரியில்லை.நாயகியின் அம்மாவும் சோசியல் மீடியா அடிக்ட்.லைக்ஸ் ,கமெண்ட்ஸ் தான் இவர்கள் இருவரது லட்சியம்

நாயகனின் அப்பா பசுமை உலகம் நிர்வாகி.செல்போனால் குற்றம் செய்த நபர்களை அரசாங்கம் செல் இல்லாத உலகமான பசுமை உலகத்துக்கு அனுப்புகிறது.நாயகனின் அப்பாவுக்கு செல்போன் பிடிக்காது.காரணம் அவரது மகள் செல்பி எடுத்துக்கொண்டே சாலையைக்கடக்கும்போது விபத்தில் மரணம் அடைந்தவர்.

நாயகனின் அப்பா நாயகனையும் தன்னைப்போலவே  செல் போன் யூஸ் செய்யாமல் இருக்கும்படி வளர்க்கிறார் 

நாயகன் நாயகியைப்பார்த்ததும் காதல் கொள்கிறான்.நாயகியோ எல் ஐ கே ஆப் செக் செய்வோம்.இருவருக்கும் பொருத்தம் இருந்தால் ஓக்கே  என்கிறார்.


ஆனால் ஆப் பொருத்தம் இல்லை என்று சொல்லி விடுகிறது.இதனால் கடுப்பான நாயகன் வில்லனிடம் சவால் விடுகிறான்.இந்த ஆப்  பத்து பைசாவுக்குப்பிரயோஜனம் இல்லை என்பதை நிரூபிக்கிறேன் என்கிறார்.

இடை வேளை.இதற்குப்பின் நாயகன் சவாலில் ஜெயித்தாரா?என்பது மீதிக்கதை


நாயகன் ஆக பிரதீப் ரங்கநாதன்,அதே நடிப்பு ,அதே முக பாவனை ,அதே பரட்டைத்தலை,அதே கழுவாத முகம்.ஆனால் யூத் கூட்டம் கை தட்டுகிறது. அவர் செய்யும் கூலிங்க் கிளாஸ் ஸ்டைல் எல்லாம் 1975ல் ரஜினொ செய்து விட்டார்.டான்ஸ் ஸ்டெப்ஸ் குட்.

நாயகி ஆக க்ரித்தி ஷெட்டி.இவரது ஆடை வடிவமைப்பு அருமை.காஸ்ட்யூம் டிசைனருக்கு பாராட்டு.ஆனால் நடிப்பு சுத்தமாக வரவில்லை.


வில்லன் ஆக எஸ்  ஜே சூர்யா ஆர்ப்பாட்டமான நடிப்பு.ஆனால் இடைவேளைக்குப்பின் எடுபடவில்லை.

நாயகனின் அப்பாவாக சீமான் பண்பட்ட நடிப்பு.நாயகியின் அம்மாவாக மாளவிகா ஓவர் மேக்கப்,ஓவர் ஆக்டிங்க்.

காமெடியன் ஆக யோகிபாபு ஆனால் சிரிப்பு வரவில்லை.

நாயகனின் தோழி ஆக வரும் கவுரி கிஷன் நாயகியை விட அழகாக இருக்கிறார்.தேவை இல்லாமல் இவருக்குக்கிளாமர் காட்சி எதற்கு?

ஆனந்த் ராஜ் ,சுனில் ,மிஸ்கின்,ரங்கராஜ் பாண்டே போன்ற வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள் பாவம்.


அனிரூத்தின் இசையில் 6 பாடல்கள்.அவற்றில் 3 செம ஹிட்.2 ஓக்கே ரகம்.பின்னணி இசை அருமை.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டம்.ராகவின் எடிட்டிங் கில்  157 நிமிடங்கள் படம் ஓடுகிறது.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் விக்னேஷ் சிவன்

சபாஷ்  டைரக்டர்

1  அனிரூத்தின் இசையில் 5 பாடல்கள் ஹிட்.பின்னணி இசை படத்தைத்தாங்கி நிற்கிறது.

2 எஸ் ஜே சூர்யா டான்ஸ் ஆடும் காட்சியில் அரங்கு அதிரும் கை தட்டல்.

3 என்னதான் பிரபுதேவா உடல் மொழி,தனுசின் முக பாவனை ,ரஜினி ஸ்டைல் என காப்பி அடித்தாலும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு அருமை

4 மாடர்ன் சென்னையை வடிவமைத்த விதம் ,அமெரிக்கரை குடை விற்பவராகக்காட்டி நக்கல் அடித்த விதம் ,ஒளிப்பதிவு பிரம்மாண்டம் ,ஆர்ட் டைரக்சன் அருமை.

செம  ஹிட்  சாங்க்ஸ்

1 தீமா தீமா

2 பட்டுமா

3 எனக்கென யாரும் இல்லையே?

4 அட வாடி

5 பூக்கட்டும்


  ரசித்த  வசனங்கள் 


1 எனக்கு உன்னை விட நீ என் மேல வெச்சிருக்கும் லவ் பிடிக்கும்,ஏன்னா என்னால இதுவரை அனுபவிச்சுப்பார்க்காத ஒரு உணர்வு அது


2 ஹார்ட் - இந்த ஒரு ஏரியா கரெக்டா இருந்தா எல்லாமே கரெக்டா இருக்கும்.

3 எவ்ளோ பெரிய பிரச்சனையா இருந்தாலும் நேருக்கு நேர் பேசினா பிராப்ளம் சால்வ்டு


4  சோஷியல் மீடியாவில் எதிரியைப்பழி வாங்க நினைச்சவனும்,அதுல வர்ற கமெண்ட்சை நோண்டி நோண்டிப்படிச்சவனும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.

5  இவ ஏன் லூஸ் மாதிரி பேசிக்கிட்டு இருக்கா?


ஏன்னா அவ நிஜமாவே லூஸ் தான்

6  பொண்ணுங்களோட வீக்னெஸ் இன்செக்யூரிட்டி

7  டேட்டாஸ் = டைமண்ட்ஸ் 

8  ஒரு அப்பா வேணாம்னு சொன்னா அதுக்கு  100 காரணம் இருக்கும்,1000 அனுபவம் இருக்கும்

9  வெளிநாட்டுப்பானம் கொக்கோகோலாவை ஸ்ட்ரா போட்டுத்தலை  குனிந்து குடிக்கறோம்.இளநீரை அண்ணாந்து தலை நிமிர்ந்து குடிக்கிறோம்

10  நல்லவன் மாதிரி நடிக்கறதோட நிறுத்திக்குங்க,அதை நம்ப வைக்க முயற்சி பண்ண வேண்டாம்

11 உடம்பை எல்லாரும் பார்க்கற மாதிரி பார்த்துக்கோ ( ஒரு அம்மா மகளுக்குத்தரும் அட்வைஸ்,அடடா,என்ன ஒரு அம்மா கேரக்டர்)


12. இண்ட்டர்நெட்  இல்லாத இன்ப்ளூயன்சர்  வாழ்க்கை என்ன ஆகறது?

13. லவ்வர்ஸ்னா பிரேக்கப் ஆகும் ,தம்பதின்னா டைவர்ஸ் ஆகும் ,ஆனா நண்பர்களுக்குள் மட்டும் பிரிவே வராது.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 கோர்ட்ல ஜட்ஜ் முன் வில்லன் சேர் போட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பது எப்படி ?

2  ஒரு ஆப் (App)பைத் தடை பண்ண கோர்ட் சொல்லும் கண்டிஷன் மடத்தனமானது.சப்ஸ்க்ரைபர்ஸ் டபுள் ஆனா ஓக்கே ,பாதியாக்குறைந்தா தடை என்பது நகைக்க வைக்கிறது.

3 யோகி பாபு வுக்குக்காமெடி வரவில்லை.அது பரவாயில்லை,அவர் பேசும் டபுள் மீனிங் டயலாக்ஸ் ஓவர்,போட்டு வரும் பெண் வேடம் ரண கொடூரம்.

4  நாயகியைப்பார்த்ததும் நாயகனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இதயம் துடிப்பதை நிறுத்துவது ஓவரோ ஓவர்

5  நாயகன் வில்லனிடம் இண்ட்டர்வெல் பிளாக்கில் விடும் அதே சவாலை இண்ட்டர்வெல் முடிந்து அரை மணி நேரம் கழித்து மீண்டும் விடுவது ஏன்?

6 நாயகியின் அம்மா மாளவிகாவுக்கு ஓவர் மேக்கப்.நடிப்பும் ஓவர் ஆக்டிங்க்.

7 வில்லன் மனிதர்களை வெறுப்பவன்,மனிதனை  நம்ப மாட்டான், ஆனால் அவன் கண்டு பிடித்த ஆப் க்கு மனிதனின் குரல் எதற்கு? கணிணியின் குரல் போதாதா?

8 வில்லன் நாயகியிடம் இனி அவனுடன் இணையக்கூடாது,மீறினால் அவன் உயிருக்கு ஆபத்து என மிரட்டுவது 1970 நம்பியார் கால டெக்னிக்.

9. கம்ப்யூட்டரால் வடிவமைக்கப்பட்ட ஆப் vs மனித இதய உணர்வுகள். இரண்டில் எதற்கு வெற்றி ?என்பதுதான் திரைக்கதை செல்ல வேண்டிய பாதை ,ஆனால் நாயகன் vs வில்லன் ஒன் டூ ஒன் சோலோ பைட் என மாறுவது செம காமெடி.

10 காதல் கதையில் நாயகியைப்பார்த்து ஆடியன்சுக்கு லவ் வர வேண்டும்.ஆனால் நாயகியின் முக சேஷ்டைகள்,செய்யும் காரியங்கள் பார்த்து என்ன?இவ்ளோ மட்டமான ரசனையா?என்ற எண்ணம் தான் வருகிறது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - விக்னேஷ் சிவன் இயக்கிய 5 படங்களில் தர வரிசையில் இதுதான் கடைசி ரேங்க்.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த நான்கு படங்களில் இது தான் கடைசி  ரேங்க்.

முதல் பாதி பரவாயில்லை ,பின் பாதி அய்யோ சாமி ,முடியவில்லை.விகடன் மார்க் யூகம் 41.குமுதம் ரேங்க்கிங் சுமார்.அட்ரா சக்க  ரேட்டிங் 2.25 /5


Love Insurance Kompany
Theatrical release poster
Directed byVignesh Shivan
Written byVignesh Shivan
Produced byNayanthara
S. S. Lalit Kumar
Starring
CinematographyRavi Varman
Edited byPradeep E. Ragav
Music byAnirudh Ravichander
Production
companies
Distributed byRed Giant Movies
Release date
  • 10 April 2026
Running time
157 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budgetest. 95 crore[2]
Box office9.93 crore[3]