Showing posts with label JOK. Show all posts
Showing posts with label JOK. Show all posts

Thursday, February 03, 2011

விகடனில் விஜய் பேட்டி - காமெடி கும்மி


இந்த வார ஆனந்த விகடன்ல  அட்டைல விஜய் ஃபோட்டோ + பேட்டி மேட்டர் பார்த்ததும் ஆஹா மாட்டிடுச்சுய்யா பதிவுக்கு ஒரு மேட்டர்னு துள்ளிக்குதிச்சேன்.புக் வாங்கி பார்த்தா விஜய் கேப்டன் ரேஞ்சுக்கு பொங்கி இருந்தார்.. வழக்கமா 2 லைன்ல திருக்குறள் மாதிரி பதில் சொல்றவர்  இப்போ லியாகத் அலிகான் வசனம் எழுதிக்கொடுத்த மாதிரி நீள நீளமா பேசி இருக்கார்.. ( யார் இந்த லியாகத் அலிகான்? # கேப்டனோட ஆஸ்தான வசனகர்த்தா)

அதனால விஜய்யை ரசிக்கறவங்க பேட்டியை ரசிக்கவும்.. காமெடியை ரசிக்கறவங்க கமெண்ட்டை ரசிக்கவும்.

1.;முதல்ல எம் ஜி ஆர், அடுத்து ஜெயலலிதா,அப்புறம் கேப்டன்,  அந்த வரிசைல அடுத்து நான்..ஒரே ஒரு கேள்வி கேட்டார்னு தூக்கி எறியப்பட்டவர் எம் ஜி ஆர்,அவரோட இறுதி ஊர்வலத்துல கீழே தள்ளி விடப்பட்டவர் ஜெ, கல்யாண மண்டபம் இடிக்கப்பட்ட கேப்டன், அந்த வரிசைல காவலன் ரிலீஸ்க்கு முட்டுக்கட்டை போட்ட கூட்டம்..

இதுல எம் ஜி ஆருக்கு 136 படம் நடிச்ச அனுபவம் இருக்கு...அதுல பாதிப்படம் மக்களுக்கு உபயோகமான கருத்துக்கள் உள்ள படம்.. கேப்டன் படங்கள்ல 125 ல 60 படங்கள்ல ஏழைகள் பற்றி அரசியல் பற்றி பேசி இருக்காரு... நீங்க சங்கவிக்கு சோப்பு போட்டீங்க..படத்துல வில்லனுக்கு ஆப்பு வெச்சீங்க.. சீர்திருத்த கருத்து சொன்னீங்களா?

2. டிஷ்யூம் டிஷ்யூம் படங்களை இனி மேல் தொடர்ந்து தர மாட்டேன்..இனிமே வருஷத்துக்கு 2 படம் பண்ணுவேன்.. அதுல காவலன் மாதிரி கல கல காமெடி படம் ஒண்ணு, ஜிவு ஜிவுன்னு வேலாயுதம் மாதிரி ஆக்‌ஷன் படம் ஒண்ணு

எனக்கென்னவோ வேலாயுதம் ஜிவு ஜிவுவா? ஜவ்வான்னு டவுட்டா இருக்கு..


3;இதுவரைக்கும் என் படங்கள் ரிலீஸ் டைம்லயோ, அல்லது ரிலீஸ் பண்றதுலயோ எந்த பிரச்சனையும் வந்ததில்லை..காவலன தான் ஃபர்ஸ்ட் டைம்
உங்க படங்கள் ரிலீஸ் ஆகறப்ப எந்த பிரச்சனையும் வராது.. ரிலீஸ் ஆன பிறகு நாங்க அதை பார்க்கறப்பதான் பிரச்சனை.ஹி ஹி
4. என் படத்தை வராம தடுக்கறவங்க அவங்க டி வி சேனல்ல மட்டும் என் படங்களை தொடர்ந்து ஒளி பரப்பறாங்களே.. ஏன்?. என் முகத்தை அழிக்கக்கூட என் முகமேதான் மறுபடி தேவைப்படுது.


இப்போ எப்படி உங்க பேட்டியை நக்கல் அடிச்சே நான் ஒரு பதிவைத்தேத்துன மாதிரி..விஜய்யை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிச்சொல்லியே ஆளாளுக்கு விஜய் பதிவு போடற மாதிரியா?

5தியேட்டர் அதிபர்களை காவலன் படத்தை திரையிட வேணாம்னு ஓப்பனா மிரட்டுனாங்க..எல்லாத்தடைகளையும் மீறி படம் ரிலீஸ் ஆச்சு. மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க..

வந்தாங்க.. ஓக்கே திரும்பி பத்திரமா வீட்டுக்கு போய் சேர்ந்தாங்களா?

(ஆனா அதுல ஒண்ணு வேணா உண்மை.. ஈரோட்ல அபிராமில ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு மிரட்டல் வந்தது.. ஓனர் எதுக்கு வம்புன்னு சிறுத்தையை ரிலீஸ் பண்ணீட்டு தேவி அபிராமில காவலன் போட்டுட்டார்.)

6.  ;முன்பெல்லாம் பொங்கல்,தீபாவளி வந்தா 8 ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்..தியேட்டரே திருவிழா மாதிரி இருக்கும். இப்போ  அப்ப்டி இல்லை.. 3 படம்தான் ரிலீஸ் ஆகுது...

பின்னே என்ன?. முன்பெல்லாம் ஒரு படம் ஒரு தியேட்டர்ல ரிலீஸ் ஆகும்..இப்போ ஒரே ஊர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி ஒரே வாரத்துல ரிசல்ட் வெளில தெரியறதுக்குள்ள வசூலை அள்ளிடனும்னு நினைக்கறாங்களே..7ஒரு படத்தை தயாரிக்க எவ்வளவு கஷ்டப்படறாங்க தெரியுமா?அத்தனை அவமானங்களையும்,கேவலங்களையும் தாண்டித்தான் காவலனை ரிலீஸ்  பண்ணுனேன்...

படத்தை தயாரிக்க எல்லாரும் சிரமப்படறாங்க ஓக்கே.. ஆனா அதை பார்க்க ரசிகர்கள் கூடத்தான் ரொம்ப கஷ்டப்படறாங்க...

8.  நடிகனாகனும்னு ஆசைப்பட்டேன்,நான் நினைச்சதை விட  மிகப்பெரிய இடத்துல உக்கார வெச்சிருக்காங்க இந்த ஜனங்க


இந்தத்தமிழங்க எப்பவும் இப்படித்தாங்க நீங்க அவங்களை நம்பி அரசியல்ல இறங்கி உள்ளதும் போச்சுடா... அப்படின்னு புலம்பாதீங்க..

 09-பிப்ரவரி  -2011

9.யார் பேச்சையும்  கேட்டு எதிலும் உடனடியாக இறங்கிட மாட்டேன்

என் பேச்சை நானே கேக்க மாட்டேன்னு ஒரு படத்துல பஞ்ச் டயலாக் பேசுனீங்க.. உங்க பேச்சையும் கேக்க மாட்டீங்க.. அடுத்தவங்க பேச்சையும் கேக்க மாட்டீங்கன்னா எப்படி..?


10.;யாருக்கு  எப்போ எப்படி வெற்றி தோல்வியை தரனும்னு தீர்மானிக்கறது கடவுள்.சாதாரண மாமிச உடம்புள்ள எந்த மனித ஜென்மத்தாலயும் இதைத்தடுக்க முடியாது..

கலைஞரைத்தான் தாக்குறீங்கன்னு எங்களுக்கு புரியுது..எதுக்கும் பார்த்துக்குங்க..வேலாயுதம் ரிலீஸ் அப்பவும் பிரச்சனை பண்ணிடப்போறாங்க...

நிறையப்பேரு என்ன சொல்றாங்கன்னா இந்த பேட்டியை படிச்சு கலைஞர் கோபப்பட்டு கூப்பிட்டு மிரட்டுனா அடுத்த  வாரமே நான் அந்த அர்த்தத்தில் பேட்டி அளிக்கவில்லைன்னு விஜய்யும், பிரிண்ட் போனப்ப ஒரு தவறு நேர்ந்து விட்டதுன்னு விகடனும் சால்ஜாப்பு சொல்லிடுவாங்க.. அப்படின்னு...

Monday, January 10, 2011

ஃபிகர்களோட கடலை போட ......

http://www.unp.co.in/attachments/f44/6819d1242315852-neha-sharma-new-face-in-tamil-cinema-neha3.jpg
1. நான் உங்களுக்கு 5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன்,வெரி ஸ்வீட் கேர்ள்ஸ். ஜாலியா கடலை போடலாம்.எவ்வளவு நேரம் வேணாலும் அவங்களோட பேசலாம்..
ஏர்டெல் -121
ஏர்செல் - 55333
ரிலையன்ஸ் - 369
பி எஸ் என் எல் -123
வோடஃபோன் -111

இந்த மேட்டர் யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்,நமக்குள்ளயே இருக்கட்டும்.2. ஒரு குட்டி எலி ஒரு பெரிய பூனை கிட்டே மாட்டிக்கிச்சு,அது தன் உயிரைக்காபாத்திக்க , " பூனை அண்ணே பூனை அண்ணே,நான் எங்கம்மா அப்பாவுக்கு ஒரே பையன்,என்னை  விட்டுடுங்கன்னு கதறுச்சு,அதுக்கு அந்த பூனை என்ன சொல்லிச்சு?தெரியுமா?

மியாவ்னு..

(எலி எப்பவும் தனியா ஒரே ஒரு குட்டி மட்டும் போடாதுன்னு யாரும் கமெண்ட்
போட்டுடாதீங்க.மொக்கைல,ஜோக்ல எல்லாம் லாஜிக் பாக்கக்கூடாது)3. நல்ல நேரம், கெட்ட நேரம் என்ன வித்தியாசம்?

எதிர்ல உள்ள ஃபிகர் போட்டிருக்கற தாவணி (இந்தக்காலத்துல எந்த ஃபிகர்
தாவணி போடுது? # DOUBT)) காத்துல விலகுனா அது நமக்கு நல்ல நேரம்.அந்த டைம்ல கரெக்ட்டா நம்ம கண்ணுல தூசி விழுந்தா அது நமக்கு கெட்ட நேரம்.


4. ஜட்ஜ் - உனக்கும்,உன் புருஷனுக்கும் டைவர்ஸ் தர முடியாதும்மா...

லேடி - ஏன் சார்?

ஜட்ஜ் - டைவர்ஸ் தரனும்னா வலுவான காரணம்வேணும்மா.

லேடி - என் புருஷன் ஒரு குடிகாரன் சார்.

ஜட்ஜ் - செல்லாது செல்லாது,நாட்ல 90% பேரு குடிகாரப்பசங்கதான்.

லேடி - என்னை விஜய் படத்துக்கு கூட்டிட்டுப்போய் கொல்லப்பாத்தாரு

ஜட்ஜ் - அவ்வளவு பெரிய கொடுமைக்காரனா?ஓக்கே டைவர்ஸ் சேங்க்‌ஷன்.

http://www.koolbollywood.com/wp-content/uploads/2010/07/Fashion-gets-new-face-with-Sonam-Kapoor%E2%80%99s-AISHA.jpg
5. என்னதான் சிங்கம் மாதிரி கம்பீரமா ,தனியா பஸ் ஸ்டேண்ட் போனாலும் கடைசில பஸ் வந்தா பன்னி மாதிரி கூட்டமா ஏறிதான் ஆகனும்.6. காதலியின் வீட்டுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் தவறு செய்து விட்டோமோ என குற்ற உணர்ச்சி... ஏன்னா அவளோட தங்கச்சி அவளை விட செம ஃபிகர்.. (இந்த மாதிரி கவிதை எழுதுனா செட் ஆனதும் அப்பீட் ஆகிடும்.)

7. ஒரு விடுகதை, 1  - 11 - 111 இந்த 3க்கும் என்ன வித்தியாசம்?

1 - தனியா இருக்கு.
11 - ஜோடியா இருக்கு
111- ஃபேமிலியா இருக்கு

யாரப்பா அது கல்லை எடுக்கறது?


8. ஃபிரண்டுக்கும், லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?

ஃபிரண்ட் கிட்டே நீதான் என் பெஸ்ட் ஃபிரண்டுன்னு சொல்லலாம்
லவ்வர் கிட்டே நீதான் என் பெஸ்ட் லவ்வர்னு சொல்ல முடியுமா?

(அப்படி சொல்லீட்டா நமக்கு பல லவ்வர் இருக்கற மேட்டர் வெளில வந்துடாது?)

Saturday, January 01, 2011

முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPJah30Q8wP_awUe4bxDnUsobCzoc6WhXbU4HIJYohZurjICzfRXQv_Tcfatq8VEmgoqFg8mnt-OS80D7cEs-QQShAgZdXmFCdgoY4WOr5lgZ-NfPzAMay0UtNEQ3WHif-TUAN9-G1HnOX/s400/odum.jpg
1. கமல் - எனக்கு பொண்ணுங்களே பிடிக்காது..அப்புறம் முத்தம் தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.

2. ரஜினி - எனக்கு வயசு 20. என் அடுத்த படத்துல அனாகா என்கிற அம்லாபால் தங்கச்சிதான் ஜோடி.அரசியலுக்கு வருவேனா? வரமாட்டேனா ?அப்படிங்கறதை 2011 முடிஞ்சாக்கூட சொல்ல மாட்டேன்.

3. கே பாக்யராஜ் - எனக்கு டான்ஸ் நல்லா வரும்.சித்து பிளஸ் டூ படம் பட்டி தொட்டி எல்லாம் நல்லா ஓடுது.


4.தனுஷ் - தமிழகத்தின் அர்னால்டு நான்தான். பொங்கலுக்கு வர்ற ஆடுகளம் ஆக்‌ஷன்ல மைல்கல் படம்னு பேர்வாங்கும்.

5.ராஜ்கிரண் - எனக்கு ஜீன்ஸ் பேண்ட் ரொம்ப மேச்சிங்க் டிரஸ்.ராஜ் டிவி என்னுதுதான்னும்,கிரண் எனக்குப்பிடிச்ச நடிகைன்னும் சிலர் சொல்றாங்க அது உண்மை இல்ல.
http://narumugai.com/wp-content/uploads/2010/12/Nayanthara3.jpg
6. சிம்பு - நான் என் லைஃப்ல ஒரே ஒரு பெண்ணை மட்டும்தான் லவ் பண்ணுவேன்.


7. விஜய்காந்த் - விருதகிரி எம் ஜி ஆர் நடிச்சு டைரக்ட் பண்ணுன உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி கலக்கிட்டு இருக்கு.அதனாலதான் விருதகிரி 10வது நாள் போஸ்டர்ல உலகம் சுற்றும் வாலிபன் பட ஸ்டில்ல்லை போட்டிருக்கேன்.

8. அஜித் - மங்காத்தா படம் ஒரு ஆத்தா செண்ட்டிமெண்ட் படம்.

9. பிரபுதேவா - என் அடுத்த படம் டைட்டில் ஒருவனுக்கு ஒருத்தி.

10. விஜய் - எங்கம்மா சத்தியமா நானும் ஒரு ஹீரோ,நம்புங்க

டிஸ்கி 1- காலைல 7 மணிக்குத்தானே ஒரு பதிவு போட்டே ,அதுக்குள்ள என்ன மறுபடி ஒரு பதிவு?ன்னு கேக்கறீங்களா? அது அட்டர் ஃபிளாப் ஆகிடுச்சு.அதான்.( புது வருசம் ஓப்பனிங்கே சரி இல்லையே).

டிஸ்கி 2 - ஹீரோக்கள் பற்றிய பதிவுக்கு ஹீரோயின் நயன்தாரா ஸ்டில் எதுக்கு? காரணம் 1 - ஹீரோக்கு ஜோடி வேணாமா?  காரணம் 2 - பிரபுதேவா ஸ்டில் போட்டு உங்களை கடுப்பேற்றவிரும்பவில்லை.அதுக்கு சப்ஸ்டிடியூட்டா...நயன்

Thursday, August 05, 2010

தல தலயா அடிச்சுக்கிட்டேன் யார் கேட்டா..? இப்போ பாருங்க...

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில் இது.இந்தியாவுல ஏன் இவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா?னு கேட்டு அதைப்பற்றி காமெடியா ஒரு விளக்கம் கொடுத்திருக்காங்க.தேவைப்பட்ட இடத்துக்கு மட்டும் தமிழ்ல மொழி பெயர்த்திருக்கேன்.ஒரு வெளை இதை ஏற்கனவே பார்த்திருந்தால் ரிப்பீட் ஆடியன்ஸாக ரசிக்கவும்.

இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடி,அதுல 9 கோடி பேரு ரிட்டயர் ஆகிட்டாங்க.37 கோடி பேரு மாநில அரசில் பணி புரிகிறார்கள்.20 கோடி பேரு நடுவண் அரசில் பணி புரிகிறார்கள்.(மத்திய அரசுன்னு சொன்னா டாக்டர் ராம்தாஸ்க்கு கோபம் வந்துடும்.)

2 பிரிவுலயும் யாரும் வேலை செய்யறதில்லை. ஐ டி ல (அதாவது தகவல் தொழில் நுட்பம் எனப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி )1 கோடி பேரு இருக்காங்க.ஆனா அவங்க இந்தியாவுக்காக வேலை செய்யறதில்லை.25 கோடி பேரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ். 1 கோடி பேரு குழந்தைங்க.(5 வயசுக்கும் கீழ).15 கோடி பேரு வேலை இல்லா பட்டதாரிகள்.1 கோடியே 20 லட்சம் பேரு எப்பவும் ஹாஸ்பிட்டலே கதினு இருக்காங்க.79,99.998 பேரு ஜெயில்ல களி சாப்பிட்டுட்டு இருக்காங்கன்னு ஒரு நிலையியல் புள்ளி விபரம் சொல்லுது.மிச்சம் இருக்கறது நீயும் ,நானும் மட்டும்தான்.நீ  வெட்டியா மெயிலை படிச்சுட்டு ,அதை ஃப்ரண்ட்ஸ்க்கு ஃபார்வர்டு பண்ணிட்டு இருக்கே.நான் மட்டும் தனியா இந்தியாவை எப்படி காப்பாத்தறது?அதான் மடேர் மடேர்னு தலைல அடிச்சுக்கறேன்.

Why INDIA is in trouble.....


Population: 110 crore


9 crore retired 
[][][][][]
37 crore in state Govt; 


20 crore in central Govt. 


(Both categories don't work) 
[][]
1 crore IT professional (don't work for India ) 
[][][][]
25 crore in school 
[][][]
1 crore are under 5 years 
[][]
15 crore unemployed 
[][][]
1.2 crore u can find anytime in hospitals 
[][][][][][]
Statistics says u find 79,99,998 people anytime in jail 
The Balance two are U & Me. 


U are busy " checking Mails /sending fwds.. "..!! 
[][][][][][]
HOW CAN I HANDLE INDIA alone? 


[]- பி.கு-இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை.