Showing posts with label விஜயின் யூத் பட வசூலை கென் கருணாசின் யூத் வசூல் முந்துமா?ஒரு பார்வை. Show all posts
Showing posts with label விஜயின் யூத் பட வசூலை கென் கருணாசின் யூத் வசூல் முந்துமா?ஒரு பார்வை. Show all posts

Thursday, April 23, 2026

விஜயின் யூத் பட வசூலை கென் கருணாசின் யூத் வசூல் முந்துமா?ஒரு பார்வை




 கென் கருணாஸ் இயக்கிய யூத் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.துரந்தர் பாகம் 2 தமிழ் டப்பிங் வெர்சன் 19/3/2026 அன்று ரிலீஸ் ஆகாததால் அதற்கு ஒதுக்கப்பட்ட ஸ்க்ரீன்களிலும் யூத் திரையிடப்பட்டது.தமிழகத்தில் மட்டும் 476 ஸ்க்ரீன்களில் வெளியானது.முதல் நாள் வசூல் மட்டும் 5 கோடியே 50 லட்சம்.தமிழ் நாட்டில் மட்டும் 4 கோடியே 25 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.



இதில் சுவராஸ்யமான தகவல் படத்தின் மொத்த பட்ஜெட்டே 5 கோடியே 40 லட்சம் தான்.அதாவது முதல் நாள் வசூலிலேயே படத்தின் மொத்த பட்ஜெட் வசூல் ஆகி 10 லட்சம் லாபத்தில் இருக்கிறது.

 2026 ம் வருடத்தில் இதே போல் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஹிட் ஆன படம் வித் லவ்.படம் வெளியாகி 28 நாட்களில் 25 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாக தயாரிப்பு தரப்பு விளம்பரம் செய்து இருந்தது.இப்போது படம் ரிலீஸ் ஆகி 38 நாட்கள் ஆகிறது.இதுவரை மொத்த வசூல் 35  கோடி ரூபாய்.

பிரதீப் ரங்கதான் இயக்கி நாயகனாக நடித்த 3 படங்களும்(லவ் டுடே,டிராகன்,ட்யூட்) 100 கோடி வசூல்  சாதனை செய்து அவரை வானளாவ உயர்த்தியது போல் கென் கருணாசும் முன்னேறுவார் என்று சொல்லப்படுகிறது.

கென் கருணாசால் இவ்வளவு லோ பட்ஜெட்டில் எப்படி ஒரு ஹிட் கொடுக்க முடிந்தது? ஜிவிபி மிக முக்கியக்காரணம்.அவரது இசையும் ,பாடல்களும் படம் ஹிட் ஆக முக்கியக்காரணம்.அவர் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்பட்டாலும் பிராபிட் ஷேர் இருக்கலாம் என்று யூகிக்கலாம்.

படத்தின் இயக்குநர்,பாடல் ஆசிரியர் ,நாயகன். மூவரும் ஒருவரே என்பதால் அந்த சம்பளம் மிச்சம்.நாயகிகளாக புக் செய்யப்பட்ட மூவருமே பெரிய சம்பளம் கேட்காத புது நடிகைகள் தான்.அதனால் தான் சிக்கனமாக முடித்து விட்டார்கள்.

கென் கருணாஸ் இயக்குநர் வெற்றி மாறனிடமும்,நடிகர்  தனுஷிடம் இயக்குநர் பயிற்சி பெற்றவர் என்பது தெரிய வந்துள்ளது.தனுஷ் நடித்த வேலை இல்லாப்பட்டதாரி ,3 ஆகிய படங்களின் சாயல்  யூத் படத்தில் படம் நெடுக இருந்தது.

எப்படியும் இந்தப்படம் 50 நாட்கள் ஓடிவிடும் என்பதால் வசூலில் 50 கோடி நிச்சயம் 100 கோடி லட்சியம் என்று வைத்துக்கொள்ளலாம்.

விஜய் நடித்த யூத்(2002) படத்தின் வசூலை கென் கருணாசின் யூத் பட வசூல் முந்துமா?என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது .அதில் ஆல்தோட்ட பூபதி நானடா பாட்டும் ,சிம்ரன்-விஜய் ஜோடி டான்சும் செம ஹிட்.படமும் ஹிட்.விஜயின் யூத் படம் Chiru Navvutho(2000)  என்ற தெலுங்குப்படத்தின் அபிஷியல் ரீமேக் தான்.படத்தின் மொத்த வசூல் 48 கோடி

கென் கருணாசின் யூத் தமிழில் மட்டுமல்லாது  தெலுங்கு ,மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளி வர இருக்கிறது.

திரை அரங்குகளில் திருவிழாக்கூட்டம் தானாம்.கவுண்ட்டரில் கூட்டத்தைக்கட்டுப்படுத்த முடியாமல் ஒழுங்கு படுத்த திரை அரங்கு உரிமையாளர்கள் தனி ஆள் நியமித்து இருக்கிறார்களாம்.

எப்படியும் இந்தப்படம் 50 கோடி ரூபாய் வசூலைத்தாண்டுவது உறுதி என்று சொல்கிறார்கள்.இப்போது +2 தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.அது முடிந்தபின் மாணவர்கள் கூட்டம் இன்னமும் அதிகமாகும்.

பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு ,விக்ரமனின் இயக்கத்தில் வந்த புதுவசந்தம் ஆகிய படங்கள் எல்லாமே மினிமம் பட்ஜெட்டில் உருவாகி மெகா ஹிட் ஆன படங்கள் தான்.

உச்ச நட்சத்திரங்களான ரஜினி,கமல்,விஜய்,அஜித் படங்கள் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி 300 கோடி வசூல
 செய்வதை விட லோ பட்ஜெட் படங்களின்  ஹிட் வசூல் சாதனை யாகப்பார்க்கப்படுகிறது.காரணம் வட்டி இல்லை.

உதாரணமாக விஜய் நடித்த லியோ படம் 300 கோடி பட்ஜெட்.படம் எடுக்க ஒரு வருட காலம்.வட்டி மட்டும் 15 கோடிக்கு மேல் வரும்.வசூல் 350 கோடி எனில் வட்டி போக நிகர லாபம் 35 கோடி தான்.

ஆனால். யூத்  மாதிரி சின்னப்படங்கள் மொத்த பட்ஜெட்டே 5 கோடி தான் என்னுன்போது வசூலில் 50 கோடி வந்தால் 10 மடங்கு லாபம் எனக்கொள்ளலாம்.இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்யமான பாதை


கென் கருணாஸ் அடிப்படையில் சிம்பு ரசிகர் என்பதாலும்,தனுஷின் ஆதரவும் ,அடைக்கலமும் கொண்டவர் என்பதாலும் சிம்பு ,தனுஷ் ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கும்.

ஒரு நாயகன் உதயம் ஆகிறான் என்ற தாவணிக்கனவுகள் பாடல் வரி நினைவு வருகிறது