Showing posts with label லிங்கா. Show all posts
Showing posts with label லிங்கா. Show all posts

Wednesday, April 01, 2015

‘உப்புக்கருவாடு’ ஹீரோ ஆன நகைச்சுவை நடிகர் கருணாகரன் எமி ஜாக்சனை கரெக்ட் செஞ்சுட்டாரா?திரை உலகம் அதிர்ச்சி

நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் அவ்வப்போது நாயகனாகவும் நடித்து வருபவர் கருணாகரன். தற்போது இயக்குநர் ராதா மோகன் இயக்கிவரும் ‘உப்புக்கருவாடு’ படத்தில் நாயகனாக நடித்துவரும் அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் திரையுலகுக்கு வந்தது எப்படி?
என் சொந்த ஊர் திருச்சி. ஈ.ஆர்.சி பள்ளியில் படித்தேன். அப்பா ‘ரா’வில் பணியாற்றியதால் டெல்லியில் கொஞ்ச காலம் படித்தேன். பிறகு தஞ்சாவூர் சண்முகா கல்லூரியில் பொறியியல் படித்தேன். சென்னையில் மென்பொருள் பொறி யாளராக பணியாற்றினேன். நான் படிக்கும் போதே எனக்கு இயக்குநர் நலன் குமார சாமியை தெரியும். அவர் இயக்கிய சில குறும் படங்களில் நடித்திருக்கிறேன். சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் அலுவலகம் விடுமுறை என்பதால் பத்துக்கும் அதிகமான குறும்படங்களில் நடித்தேன். இரவில் டப்பிங் பேசுவேன்.
ஒரு குறும்படத்தில் என்னுடைய நடிப்பைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் சார் பரிசு கொடுத்தார். அப்போதே அவர் என்னை ‘நண்பன்’ படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அப்போது என்னால் நடிக்க முடியவில்லை.
உங்களை சினிமா நடிகனாக்கியது இயக்குநர் சுந்தர்.சி என்கிறார்களே. உண்மையா?
உண்மைதான். ‘கலகலப்பு’ படத்தில் அவர் என்னை நடிக்க அழைத்தார். வேலையில் இருப்ப தால் நடிக்க முடியாதே என்றேன். அதற்கு அவர் கால்ஷீட்டில் அதைச் சரி செய்து கொள்ளலாம் என்று கூறி நடிக்க வைத்தார்.
அந்தப் படத்துக்கு பிறகு ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘யாமிருக்க பயமே’, ‘கப்பல்’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களில் நடித்தேன். இதில் ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றியும் “காசு பணம் துட்டு” பாடலும் என்னை திரையுலகில் பிரபலமாக்கியது. இதைத் தொடர்ந்து மென்பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, முழுசாக சினிமாவில் இறங்கி விட்டேன். இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.
‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும்போது அவர் ஏதாவது ஆலோசனைகள் கூறினாரா?
ரஜினி சாருடன் ‘லிங்கா’வில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பின்போது அவர் எல்லோரையும் கலாய்ப்பார். ‘நீங்க எப்போதும் இப்படித்தான் திருட்டு முழியுடன் இருப்பீங்களா’னு என்னையும் கலாய்த்தார். என்னுடன் இயல்பாக பழகு, பயப்பட வேண்டாம் என்று என்னை உற்சாகப்படுத்தினார்.
அவருடன் நடித்த 20 நாட்களும் போனதே தெரியவில்லை. நாம் பேசுவதை அப்படியே பேசிக் காட்டுவார். “படப்பிடிப்பின்போது ஏதாவது புது யோசனை தோன்றினால் உடனே சொல்லுங்க. அதைப் படத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று உற்சாகப்படுத்துவார். அந்த மனது எந்த நாயகனுக்கு வரும்?
எமி ஜாக்சனுக்கு பிடித்த நாயகன் நீங்கள்தானாமே?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உதயநிதி, எமி ஜாக்சன் நடிக்கும் பெயரிடப்படாத படப்பிடிப்பு கொச்சி அருகில் நடந்தது. மலைப்பகுதி ஒன்றில் எமி ஜாக்சன் லூனா வண்டி ஓட்டும் காட்சி அது. மலையின் இரண்டு பக்கமும் பள்ளம். நானும், உதயநிதியும் காரில் அமர்ந்திருந்தோம். எமி ஜாக்சன் வண்டியை ஓட்டிக்கொண்டு பள்ளத்துக்கு மிக அருகில் சென்றுவிட்டார். நான் காரில் இருந்து ஓடிச்சென்று வண்டியைப் பிடித்து நிறுத்தினேன். தனக்கே உரிய ஸ்டைலில் நன்றி சொன்னார். இந்தக் காட்சியைப் பார்த்து உதயநிதி விழுந்து விழுந்து சிரித்தார். மற்றபடி தனக்கு பிடித்த நாயகன் என்றெல்லாம் என்னைப்பற்றி எமி ஜாக்சன் சொல்லவில்லை.
நீங்கள் சினிமாவில் நடிக்க உங்கள் வீட்டில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்?
நான் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தபோது வீட்டில் ரொம்பவே பயந்தார்கள். இப்போது, அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். நான் வேலை பார்த்த சாப்ட்வேர் கம்பெனியில் என் மனைவி எச்.ஆர். துறையில் வேலை பார்த்துவந்தார். அப்போது காதலைச் சொன்னால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் அதைச் சொல்லவில்லை. சினிமாவுக்காக வேலையை விடும் போது தைரிய மாக போய் காதலை சொல்லிவிட்டேன். காதலைச் சொல்லும் தைரியத்தை சினிமாதான் எனக்கு தந்தது.

நன்றி  -த  இந்து

Wednesday, February 25, 2015

ரஜினி-யின் லிங்கா பிரச்சனையில் விஜய்க்கு தொடர்பா?வாசகர்கள் அலசல்

  • நடிகர் விஜய்யை சந்தித்து பேசியது தொடர்பாக 'லிங்கா' படத்தின் திருச்சி, தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலன் விளக்கம் அளித்துள்ளார்.
    'லிங்கா' பட நஷ்ட ஈடு தொடர்பான சர்ச்சைகளில் இரண்டு நடிகர்கள்தான் ரஜினியை நஷ்ட ஈடு கொடுக்க கூடாது என்று தடுக்கிறார்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
    ரஜினியை விஜய் தான் தடுக்கிறார் என்று செய்திகள் வெளியானது. மேலும், விஜய் தரப்பினர் இச்செய்திக்கு "விஜய்க்கும் 'லிங்கா' பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை" என்று மறுத்தார்கள்.
    திடீரென்று சிங்காரவேலன் விஜய்யை சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விஜய் தான் விநியோகஸ்தர்கள் பின்னணியில் இருக்கிறார் என்று தகவல் வெளியானது.
    இந்நிலையில், விஜய்யை சந்தித்தது ஏன் என்று சிங்காரவேலனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நான் விஜய் சாரை சந்தித்து உண்மை தான். ஏனென்றால் நாங்கள் எந்தொரு இடத்திலும் விஜய் சாரின் பெயரை உபயோகிக்கவில்லை. ஆனால், விஜய்யை லிங்கா பிரச்சினையில் முன்னிறுத்தி செய்திகளை வெளியிட்டார்கள். இதனால் விஜய் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறார் என்று அவரது செய்தி தொடர்பாளர் என்னிடம் தெரிவித்தார்.
    உடனே, அவரை நேரில் சந்தித்து இதனை விளக்குவதாகவும் தெரிவித்தேன். அதற்கு 'புலி' படப்பிடிப்பு தளத்துக்கு வருமாறு கூறினார்கள், சென்றேன். அன்று தான் விஜய் 'புலி' குழுவினருக்கு விருந்தளித்தார்.
    விஜய்யிடம் நாங்கள் எந்தொரு இடத்திலும் உங்களுக்கு பெயரை உபயோகப்படுத்தவில்லை. ஆனால், தவறான செய்திகளை வெளிவந்துவிட்டது என்று அவரிடம் கூறினேன். அவரும் சரி... பரவாயில்லை என்று கூறினார்.
    விநியோகஸ்தர்களுக்கு மினிமம் கேரன்டி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் மட்டுமே. அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தவறு. அதை வைத்துக் கொண்டு மீண்டும் தவறாக எழுதுகிறார்கள்" என்றார் சிங்காரவேலன்.Joseph Raja  
    சமூக வலைத்தளங்கள் உண்மையும் பரப்பும் ஆனால் பொய்யை உண்மையை விட வேகமாய் பரப்பும் . யோசிக்காம்மல் அனைவரும் பரப்பி விட்டு விளையாடுவது எல்லாம் ஒரு பிழைப்பா. எல்லாரும் சும்மா இருந்தாலும் குத்தம் சொல்றீங்க பேசுனாலும் குத்தம் சொல்றீங்க போட்டோ எடுத்தா குத்தம் சொல்றீங்க நடிச்சா குத்தம் சொல்றீங்க படத்துக்கு பேர் வச்சா குத்தம் சொல்றீங்க. நீங்கள் பகிருவதும் பதிப்பதும் கருத்து அல்ல வெறுப்பு மட்டுமே. லிங்கா பட டைரக்டர் எதுக்கு விஜய பன்cடினுக்கு கூப்பிடனும் , பொது ஜனங்களுக்கு தெரியறது பாதிக்க பட்டவருக்கு தெரியாம இருக்குமா ? சும்மா பிரச்சனைய ஊதி பெருசக்குறது மீடியா . பிடிக்காத நடிகர குற சொலரதுக்கும் அவருக்கு எதிரா நியூஸ் பரபரதுக்குனு ஒரு கூட்டம் . அதுக்கு ஏமாளி அஹுரதுக்குனு ஒரு கூட்டம் . நான் எகப்பட்ட் பெய்க் போடோஷப் வேலைகள பாத்துருக்கேன் விஜய் ரசிகர்கள் ரஜினிய ஒட்டுர மாதிரி . விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சண்டை எற்படுதுரதுக்காக சில பேர் உருவாக்கினது. அது தான் இப்ப இப்படி வளைந்து நிக்குதுங்குரதுதான் நான் சொல்லுவேன் .
    about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Gogulaa  
      லாட்டரி சீட் வாங்கி பரிசு விலலன்ன காச திரும்ப கேட்பார்களா?
      Points
      190
      about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Vikram  
        ரஜினிகாந்தை அசிங்க அசிங்கமாய் பேசி விட்டு அவரை நம்பினால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என அவரை காயப்படுத்தி விட்டு நடிகர் விஜயை ஆறுதல் படுத்த செல்கிறார். அப்படி விஜய்க்கு என்ன நேர்ந்ததென்று ஆறுதல் சொல்ல கிளம்பி விட்டார். இவர் செய்தது தவறு என்று ஏன் எடுத்து கூறவில்லை? அப்படியெனில் விஜய்க்கு இதற்கு மறைமுக அதரவு உண்டா? அவருக்கு பிரியாணி வேறு சமைத்து போட்டுள்ளார். தன்னை விட மூத்தவர்(ரஜினிகாந்த்) ஒருவரை ஒருவன் தரக்குறைவாக பேசியுள்ளான் என்பதை கண்டிக்க முடியாத ஒரு நபர் எப்படி ஒரு சக நடிகனாக இருக்க முடியும்?. இந்த லட்சணத்தில் இவருக்கு ஒரு பிரச்சனை என்றால் எப்படி பிறர் இவரை நம்பி வருவார்கள்? சினிமா என்றால் லாப நஷ்டம் உண்டு என இவருக்கு தெரியாத? அதை எடுத்து கூறமால் விட காரணம்?? என்னை போன்ற ரஜினி ரசிகர்களுக்கு விஜயின் செயல் மிக வருத்தமாக உள்ளது.
        Points
        1650
        about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • சிங்காரவேலன் போன்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவரிடம் படம் கொடுக்காமல் தடை விதிக்க வேண்டும் இவர்களால் சினிமா துறைக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் அவப்பெயர்
          Points
          16805
          about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Vikram  
            // அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தவறு. // தவறு என சொல்ல காரணம்?? பயமில்லை என்றால் ஏன் வைத்தது தவறு என கூற வேண்டும்?? சந்திப்பை ஏன் மறைக்க முயல்கிறார். நடிகர் விஜய்க்கு ஆதரவு கூறுபவர்கள் இதற்கு மழுப்பாமல் சரியான பதில் கூறவும்.
            Points
            1650
            about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • PRASATH  
              ஒரு பிரியாணிக்காக கட்சி மாறிட்டியே
              Points
              510
              about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • படம் சமராக இருந்தாலும் ரஜினி , விஜய் , சிவகர்த்திகேயன் , விஜய் சேதுபதி , தனுஷ்,சூர்யா pondror உடைய படம் வணிக reethiyil laabathai eettum , இவர்களை அணைத்து தரப்பு மக்களும் விரும்பி ரசிப்பது உண்டு . ரஜினி யின் படம் ரம்பமாக இருந்தாலும் வசூலில் வெற்றி பெற்றிருக்கும் . இந்த லிங்கவும் ஸ்மரண படம் தன , வசூலில் ப்ரோடுசெர் கு வெற்றி தன , ஆனால் அதை வாங்கிய விநியோகிச்தர்களுக்கு அது லாபத்தை கொடுத்த என்றால் சந்தேகமே , ஏன் என்றால் அப்படம் miga குறிகிய காலத்திலேயே நெகடிவ் ரெவிஎவ்ச் பெற்று , naraya திரியரங்கை விட்டு வெளியேற்றப்பட்டது . விஜய் இன் படம் வரிசையாக கதை அம்சம் சரியானதாக இல்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றி padangale , சூரிய விற்கு அவ்வபொழுது sarukalgal அதிகம் தன , வசூல் ரீதியில் திருப்திகரமாக இருக்கும் .
                about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • Dilip  
                  உலகமகா நடிப்புடா சாமி........ சிங்கு நானும் திருச்சி தாண்ட உன்னை விட மாட்டேன்......
                  Points
                  290
                  about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • Hari  
                    விஜய் இப்படியொரு கில்தரமானவன் என்பது இப்போதான் தெரியுது .
                    Points
                    210
                    about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Vikram  
                      இவர் எப்படி எல்லாம் சமாளிக்கிறார் என்று பாருங்கள். அன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் எப்படி சமாளிப்பதென விஜயிடம் ஆலோசித்து விட்டு இப்போது மாற்றி பேசுகிறார். இவர் விஜயின் கையால் என்பதற்கு இந்த ஒரு வரியே போதும். //விநியோகஸ்தர்களுக்கு மினிமம் கேரன்டி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் மட்டுமே. // நடிகர் விஜய் நடித்த முந்தய படங்கள் (ஜில்லா, தலைவா) தோல்வி படங்கள் என தெரிந்தும் எப்படி பேசுகிறார் பாருங்கள். 2007 இல் இருந்து 2010 பத்து வரை தொடர் தோல்விகளை கொடுத்தவரை இப்படி புகழ்வதில்ருந்தே தெரிகிறது விஜய் தான் இவரை பின்னிருந்து இயக்குகிறார் என்று. அத்துடன் திரைத்துறைக்கு சம்பந்தமே இல்லாத வேல்முருகன் மற்றும் சீமான்.
                      Points
                      1650
                      about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (3) · 
                      • Seenu  
                        பத்திரிக்கையளர்களை நான்கு முறை சந்தித்துள்ளார் சிங்காரவேலன். கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள். விஜய்க்கு தொடர் தோல்விகள்? 2007-போக்கிரி 2008-குருவி 2009-வேட்டைக்காரன் 2010-சுறா. இவைகளில் சுறா ஒன்று தான் வர்த்தக ரீதியாக தோல்வி. ஒரு வெறுப்புடன் கமெண்ட் செய்யாதீர்கள். உண்மை எனில் கூறுங்கள்.
                        about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (3) · 
                        • Vikram  
                          குருவி, வேட்டைக்காரன் - இவை எல்லாம் ஹிட்??உங்களுக்கும் கருத்துரிமை உண்டு. மறுப்பதற்கில்லை. அழகிய தமிழ் மகன், வில்லு??இவை எல்லாம் சூப்பர் டுபெர் ஹிட்?? ரஜினியை தரக்குறைவாக பேசி விட்டு விஜயை சமாதனாம் செய்ய போவதா சொல்ல காரணம்? // அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தவறு. // தவறு என சொல்ல காரணம்?? பயமில்லை என்றால் ஏன் வைத்தது தவறு என கூற வேண்டும்??
                          about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                          • Raghul  
                            அப்போ குருவியும் வேட்டைகாரனும் ஹிட்டா
                            about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                            • சீனு சார் , நம்பிட்டோம்
                              about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                            • Linga படம் producer ku laabam than , aanal viniyogasthargaluku ? உண்மை என்னவென்று தெரியவில்லை . தமிழ் naatil சினிமா துறையில் எந்த பிரச்சனை yendraalum அதில் விஜய் இன் பெயரை sameeba காலமாக அடிகடி காண முடிகிறது , அதற்கு கரணம் அவருடைய வளர்ச்சி . விஜய் ஐ யாராவது புகழ்ந்தால் உடனே அஜித் , மற்றும் சூர்யா rasigargal அதற்கு பதில் அடி குடுக்கும் விதவமாக நேரெதிர் விமர்சனத்தை பரப்புகிறார்கள். உண்மை என்ன வென்று தெரியாமல் ஒருவன் மீதி பலி போடா கூடாது . நன் நடுநிலையாக படங்களை ரசிப்பவன். ஜில்லா படம் ஒரு பொழுது போக்கு படம் , நல்ல வசூலை குவித்த படம் , அதனை படுதோல்வி என்று கூறினால் அது தவறான ஒரு கருத்தை பரப்புவர்த்து போல் ullathu , ivaru than rasigargal மாறி மாறி ஒரு படத்தை பற்றியும் , ஒரு நடிகனை பற்றியும் வதந்திகளை கூறுகின்றனர் . படங்களை பொழுது போக்காக எண்ணி , அதனை பார்போம் . ஒருவன் மீது அவதூறு பரப்பி கொண்டு , மற்ற நடிகனுக்காக ஒருவனை ஒருவன் அடித்து கொண்டு , தஹாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு நாம் மனித இனம் என்பதை மறந்து விடவேண்டாம் அன்பு நண்பர்களே
                              about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (2) · 
                              • Vikram  
                                ரஜினிகாந்தை அசிங்க அசிங்கமாய் பேசி விட்டு அவரை நம்பினால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என அவரை காயப்படுத்தி விட்டு நடிகர் விஜயை ஆறுதல் படுத்த செல்கிறார். நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை. அதை விடுத்து என்னை அஜித் அல்லது சூரிய ரசிகன் என பேச்சை திசை திருப்புகிறீர்கள் நீங்கள். நான் ரஜினி ரசிகன். மதுரையில் ஜில்லா படம் 23 லட்சம் நஷ்டம் என்பதற்கு ஒரு பிரபல தொலைகாட்சியில் உள்ள வீடியோ ஆதராம் உண்டு. நீங்கள் சிங்காரவேலன் செய்வதை நியயாபடுதுகிரீர்கள ? உங்கள் நடிகர் விஜய் அவர்கள் அவருக்கு புத்தி சொல்லாமல் புகைப்படம் எடுக்க காரணம்? மிநிமும் கியாரண்டி என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? கேள்வியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அன்பரே.
                                about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                • parthi  
                                  அட நண்பரே விஜயை இழுக்க காரணமே இந்த சிங்கார வேலன் தான் அதை விடுத்து மற்றவைகளை குறை கூறுவது நீங்கள் எந்த அளவிற்கு நடு நிலை ரசிகர் என்பதை காட்டுகிறது . அடுத்து விஜயை மட்டும் சமுகதலங்கள் விமர்சிக்க வில்லை .அஞ்சான் தோல்விக்கு காரணமே சமுகதலங்கள் என்று லிங்குசாமி சொல்லு அளவிற்கு அவர்களை பற்றிய விமர்சனம் எழுந்தது .இந்த செய்திகள் தெரிந்தும் நீங்கள் பேசிவதிலேயே உங்கள் நடு (?) நிலைமை என்ன என்று புரிகிறது .
                                  about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                • நல்ல படங்கள் என்றால் மக்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் . நல்ல படங்கள் aendru தெரிந்து kolvatharku munnar athil நடித்திருக்கும் நடிகர்களை பார்த்து ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் . அப்படி அதிகமாக வரும் ரசிகர்கள் . ரஜினி , கமல்,விஜய்,அஜித் ,vikram,surya,dhanush,சிவகர்த்திகேயன்,விஜய் சேதுபதி,சிம்பு ithupondra நடிகர்களுக்க ரசிகர்கள் 1 டு 2 வாரம் தேற்றி நிரப்புவார்கள் . பிறகு நல்ல padamaga இருந்தால் மக்களின் வரவேற்பால் படம் 3 டு 6 வீக்ஸ் நல்ல படியாக ஓடும் . அதை வைத்து படத்தில் லாபம் நட்டத்தை கணக்கிட முடியும் . athe மாதிரி விநியோகச்தர்ஹளும் படத்தை அதிக விலைக்கு வந்கிஹிரார்கள் , atharku mukkia karanam athil நடித்திருக்கும் hero . anaivarum arintha ondru , ரஜினி , விஜய் , அஜித் ஆகிய 3 perum top list il ullanar . yeno ரசிகர்களின் பொறாமை அடுத்த nadiganai avamana படுத்தும் நோக்கு , தாழ்த்தி பேச வேண்டும் என்ற நோக்கு . நல்ல படத்தை குட நல்ல ilai என்றும் . laabagaramaaga ஓடிய படத்தை பலாப் என்றும் koorukindraargal