Showing posts with label யூத் (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ). Show all posts
Showing posts with label யூத் (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ). Show all posts

Monday, April 06, 2026

யூத் (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

   

       யூத் (2026) - தமிழ் - சினிமா  விமர்சனம்  ( ரொமாண்டிக்  டிராமா ) 


              இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த  நான்கு முக்கியக்காரணங்கள்

1 தனுஷ் நடித்த அசுரன்,வாத்தி ஆகிய படங்களில் நல்ல கேரக்டர் ரோல் பண்ணி இருந்த கென் கருணாஸ் நாயகன் ஆக நடிக்கும் முதல் படம்

2 கென் கருணாஸ் இயக்குநர் ஆக,பாடல் ஆசிரியர் ஆக,பாடகர் ஆகக்களம் இறங்கி இருக்கும் படம்

3 இசை அமைப்பாளர்  ஜி வி பிரகாஷ் சம்பளம் வாங்காமல் இசை அமைத்த முதல் படம்

4 முட்டை கலக்கி என்ற மெகா  ஹிட் பாடல் உட்பட படத்தின் எல்லாப்பாடல்களும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஹிட்


ஸ்பாய்லர்  அலெர்ட்


எதிர்பார்த்து  வருவது காதல் இல்லை , எதிர்பார்க்காமல்  வருவதுதான் உண்மையான காதல்  என்பதுதான் படத்தின் ஒன லைன் .


நாயகன்  ஒரு நடுத்தரக்குடும்பத்தில்   பிறந்து  வளர்ந்தவன் .  அப்பா  ஒரு பேக்கரிக்கடை வைத்து இருக்க்கிறார் , அம்மா  ஹவுஸ் ஒயிப் . நாயகனுக்குப்படிப்பில்   பெரிய அளவில் ஆர்வம் இல்லை .  பத்தாவது  படிக்கும்போதே சராசரிக்கும் குறைவான மார்க்கே வாங்கி ஜஸ்ட் பாஸ் தான் ஆகி இருக்கிறான்.


  இருந்தாலும்  தன மகனை ஒரு பெரிய பிரைவேட் ஸ்கூலில்  சேர்க்கிறார்கள் .நாயகனின் அம்மாவுக்கு தன் மகன் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை.

ஆனால் நாயகனுக்குப்படிப்பில் ஆர்வம் இல்லை.காதலில் தான் ஆர்வம்.

 தான் அழகு  இல்லையோ ? தன்னை யாரும் கவனிக்க மாட்டார்களோ ? என்ற   தாழ்வு  மனப்பான்மையில் நாயகன் இருக்கிறார் . பள்ளியில்  படிக்கும் பெண்ணைக்காதலித்த்து  காலேஜில் அதே காதலைத்தொடர்ந்து  அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்  என்பதுதான்  நாயகனின் லடசியம்  ( ஆஹா, இதுவல்லவோ லடசியம் ? ) 


 பள்ளியில் நாயகனை எந்தப்பெண்ணுமே கண்டு கொள்ளவில்லை . . இதனால் கடுப்பில் இருக்கும் நாயகனை  ஒரு பெண் காதலிக்கிறார் . அவருக்கும் , பள்ளியில் படிக்கும் மாணவிக்கும் காதல்  வருகிறது ,, இருவரும்  காதலிக்கிறார்கள் . திடீர்   என  அந்தப்பெண்ணின்  பாட்டிக்கு உடல் நிலை சரி இல்லை என்று தகவல் வர அந்தப்பெண்  பாட்டியைப் பார்க்க ஊருக்குப்போகிறாள் 


 இந்த  சமயத்தில்  நாயகனிடம்  இன்னொரு பெண்  தன காதலை வெளிப்படுத்துகிறார் . இதற்கும்  நாயகன் ஓகே  சொல்லி விடுகிறார் . இவர்கள்  இருவரும் நெருக்கமாப்பழகுவதைக்கண்ட  நாயகனின்   முதல் காதலி பிரேக்கப் செய்து விடுகிறாள் 


நாயகன்   மனம்  உடைந்து  இருக்கும்   தருணத்தில்     மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது, அவளிடம்  நாயகன்  காதலை சொல்லும்போது  அவள்  நாயகனிடம்  இது காதல் இல்லை , வெறும் நட்பு தான் என்று சொல்லி விடுகிறாள்  .


நாயகன்  உடைந்து போகிறான் . இதற்குப்பின்  இவரது காதல்  கனவு என்ன ஆச்சு ?  பள்ளியில்  படித்து  பாஸ் ஆனானா?  என்பது  மீதித்திரைக்கதை  


நாயகன் ஆக கென் கருணாஸ் கச்சிதமாக நடித்திருக்கிறார்.வைகாசி பொறந்தாச்சு பிரசாந்த் போல இளம் உள்ளங்களைக்கொள்ளை கொள்கிறார்.முக பாவனை ,நடன அசைவுகள் ,குரல் அனைத்தும் அருமை.


நாயகிகள்  ஆக மீனாட்சி தினேஷ்,அனிஷ்மா அனில் குமார் , பிரியன்சி யாதவ் மூவரும் நடித்திருக்கிறார்கள்.அழகு,இளமைத்துள்ளல்  ,நடிப்பு அனைத்தும் ஓக்கே ரகம்.

முதல் பாதி கலகலப்பாக ,ஜாலியாகப்போகிறது.பின் பாதி எமோஷனல் டிராமா.

சபாஷ்  டைரக்டர்

1 கலகலப்பான ,ஜாலியான முதல் பாதி சம்பவங்கள்

2 நடுத்தர மக்களின் மனதைத்தொடும் வகையில் அமைக்கப்பட்ட சில செண்டிமெண்ட் காட்சிகள் ,சில வசனங்கள் அருமை.

3 கலர்புல்லான ஒளிப்பதிவு.மொத்தப்படத்தையும் தன் ஒத்த இசையால் தாங்கிப்பிடித்த ஜிவிபி யின் இசை ,பின்னணி இசை. போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமாதம்

4  மெகா ஹிட் பாட்டான முட்டை கலக்கி ,மெலோடி சாங்

5 படிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய விதம்

6   படிக்காம போனதால் இந்த சமூகம் என்னை எப்படி மோசமாக நடத்தியது?என்பதை நாயகனின் அப்பா நாயகனிடம் விளக்கும் அந்தக்காட்சி உருக்கம்.


7   சிம்பு நடித்த மன்மதன். படத்தில் வரும் மன்மதனே நீ பாட்டு பிளேஸ் செய்யப்பட்ட இடம்,பிளேஸ் செய்த விதம் அதகளம்.தியேட்டரே அதிர்ந்தது கை தட்டலில்.


8  இண்ட்டர்வெல் பிளாக் சீன்,க்ளைமாக்ஸ் சீன் இரண்டுமே ஆடியன்சின் மனதில் நிற்கும் அளவு கச்சிதமாய் அமைந்தது

9   நாயகன் ஒரு பாடலில் சிங்கிள் ஷாட்டில் பிரமாதமாக ஆடும் லெங்க்தி ஷாட் அபாரம்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனுடைய கேரக்டர் டிசைன் முதல் பாதியில் ஒரு மாதிரியாகவும் (ஜாலி டைப்),பின் பாதியில் வேறு மாதிரியாகவும் (சீரியஸ் டைப்)ஆவது எப்படி?

2 ஜி வி பி யின் பிஜி எம் பல இடங்களில் அனிரூத் பி ஜி எம் போலவே இருக்கிறது

,3 பல படங்களில் பார்த்து சலித்த டெம்ப்ளேட்  காட்சிகள்.திரைக்கதையில் ஆஹா என சிலாகிக்க வைக்கும் புதுமை இல்லை

4 பின் பாதி திரைக்கதை சோர்வடைய வைக்கிறது

5    சமீபத்தில் வந்த டான் படத்தின் காட்சிகள் பலவற்றை நினைவுபடுத்தியது.


6   அவன் லவ் பெயிலியர் ஆனால் தான் என் லவ் சக்சசே ஆகும் என நாயகனின் லவ்வைக்கெடுத்து விட்ட  பெண்ணின் காதல் என்ன ஆச்சு?என்பதைக்காட்டவே இல்லை.அந்தக்கேரக்டருக்கு ஒரு பினிஷிங் கிடைக்கவில்லை.

- 7  இது கமிங் ஆப் ஏஜ் டிராமா என்பதால் அந்தக்கால ஆட்களுக்குக்க்டுப்பைக்கிளப்பலாம்.அதேபோல் பெற்றோர்களுக்கு க்ளைமாக்ஸ் தவிர மற்றவை பிடிக்காது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜென் இஜட் சந்ததியினர் ரசித்துப்பார்க்கும் ஒரு படமாக இருக்கும். ரேட்டிங் 2.5 /5


DISKI -நாயகன் கென் கருணாஸ் நடிகர் தனுஷ் இடம் உதவி இயக்குநர் ஆகப்பணி ஆற்றியவர். படத்தின் பல காட்சிகளில் தனுஷ் பாணி இயக்கம் தெரிகிறது.



நாயகன் அடிப்படையில் சிம்பு வின் தீவிர ரசிகர்.படத்திலும் சிம்பு ரசிகர் ஆகவே வருகிறார்.