Showing posts with label அனோமி (2026) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் ). Show all posts
Showing posts with label அனோமி (2026) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் ). Show all posts

Thursday, April 16, 2026

அனோமி (2026) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் )

     

                       

அனோமி (2026) - மலையாளம் /தமிழ்  - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் ) 


 6/2/2026  அன்று  கேரளாவில்  ரிலீஸ் ஆன இந்தப்படம்  இப்போது தமிழ் டப்பிங்கில்  தமிழகத்  திரையரங்குகளில்  வெளியாகி இருக்கிறது . அனோமி என்ற   சொல்லுக்கு தனிமையில்  இருத்தல் , உளவியல் ரீதியாக  பாதிக்கப்பட்ட   நெறிமுறை அற்ற  சமூக நிலை   என்று அர்த்தம் . லோ  பட்ஜெட்டில்  தயாரான  இந்தப்படம்  ரிலீஸ்  ஆன முதல்  இரண்டு நாட்களில்  48 லட் சம்   ரூபாய்  வசூல்  செய்து  இருக்கிறது .


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு தடயவியல்  நிபுணர் .  இவருக்கு  ஒரு தம்பி  உண்டு . நாயகியின்  பெற்றோர்  ஒரு கார்   விபத்தில்  இறக்கிறார்கள் . அந்த விபத்துக்குத் தான் தான்  காரணம்  என்ற குற்ற உணர்வு  நாயகியின்   தம்பிக்கு  இருக்கிறது . தற்கொலைக்கு  முயல்கிறான் . நாயகி  அவனைக்காப்பாற்றிப் பேணி பாதுகாக்கிறார் . .


நாயகன்  ஒரு போலீஸ் ஆபீசர் அவரிடம்  அடைக்கலம்  கேட்டு  வந்த  ஒரு காதல் ஜோடி யில்  ஒருவர் ஆணவக்கொலை  செய்யப்பட  இன்னொருவர்  மனமுடைந்து  தற்கொலை   செய்து  கொள்ள  அவர்களைப்பாதுக்காக்க முடியாமல் போய் விட்டதே  .  என்ற   மன வருத்தத்தில்   இருக்கிறார் .டியூட்டியில்  கவனம்  இல்லாமல் ஏனோ தானோ   என்று  இருப்பவரை  உயர் அதிகாரி  கண்டித்து   தற்கொலை  போல்  ஜோடிக்கப்பட்ட  இரு வழக்குகளை  அவர் வசம்  தந்து  விசாரணை  செய்யச்சொல்கிறார் 



 நாயகியின்   தம்பி  தற்கொலை செய்து  கொள்கிறார் . ஆனால்  அது கொலை  என  நாயகி சந்தேகிக்கிறார் . நாயகியே அந்தக்கேஸை  டீல்  செய்கிறார் .


நாயகனிடம்  இப்போது  மூன்றாவதாக   நாயகியின்   தம்பி  கொலைக் கேஸ்   சேர்கிறது . அவர்   ஒரு பக்கம் விசாரிக்கிறார்   


 நாயகிக்கு   ஒரு காதலன்   உண்டு . அவன் மர்மமான   முறையில்  கொலை செய்யப்படுகிறான் . ஆனால்  இந்த பேட்டர்ன்  வேறு   மாதிரி   இருக்கிறது . 


 மற்ற   மூன்று  கேஸ்களும்  கொலை   செய்து   தற்கொலை  போல  ஜோடிக்கப்பட்டவை . நாயகியின்   காதலன்  கொலை  தற்கொலை  போல  ஜோடிக்கப்படாமல்  இருப்பது . இந்த நான்கு கேஸ்களிலும்  உள்ள  ஒரே ஒற்றுமை  நான்கு பேருமே  மனதளவில்   பாதிக்கப்பட்டு  தற்கொலைக்கு  முயன்றவர்கள்  தான் . இந்தக்கேஸில்  இருக்கும்  மர்மத்தை   நாயகன்  கண்டுபிடிப்பதுதான்  மீதி திரைக்கதை 

நாயகி ஆக  பாவனா . இது  இவரது  சொந்தப்படம் . தயாரிப்பாளர்   என்பதால்   போட்ட   காசு   திரும்ப  வருமோ ?  வராதோ  ? என்ற  மன வருத்தத்தில்  இருந்தார்   போல , படம் முழுக்க   டல்   முகமாகவே   வருகிறார் . அது அந்த கேரக்ட்டருக்கு  வலு  சேர்க்கிறது . அவரது   ஆடை  வடிவமைப்பும்   அருமை .

நாயகன் ஆக  ரகுமான்  என்கிற  ரகு  .  போலீஸ்    ஆபீசரின் கம்பீரம்,மிடுக்கு அந்த உடல் மொழி எல்லாம் பிரமாதம்.நாயகியுடன் வரும் மோதல் காட்சியில் கச்சிதமான நடிப்பு

நாயகியின் தம்பி ஆக வரும் ஷெபின் ,நாயகியின் காதலன் ஆக வரும் அர்ஜூன் (ஆக்சன் கிங்க் அர்ஜூன் அல்ல) இருவரும் குறைவான நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பு.


முக்கியக்கேரக்டர்கள் போக   அந்த டாக்டர் கேரக்டர் ,போலீஸ் அதிகாரி கேரக்டர் இருவரது கதாப்பாத்திர வடிவமைப்பும் அருமை.

ஹர்சவர்தன் தான் இசை.இவரது பின்னணி இசை படம் முழுக்க ஒரு டெம்ப்போவை ஏற்றுகிறது.ஒளிப்பதிவு சுஜித்சாரங்க்.நாயகியின் க்ளோசப் ஷாட்களைக்கையாண்ட விதம் அருமை.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர். ரியாஸ் மராத்

சபாஷ்  டைரக்டர்

1 சீரியல் கில்லர் கதை என்பது போல் போக்குக்காட்டி அதை க்ளைமாக்சில் மெடிக்கல் க்ரைம் திரில்லர் ஆக கொண்டு போன விதம் அருமை.

2 நாயகன்,நாயகி இருவருக்கும் காதல் என்று ஜல்லி அடிக்காமல் ,டூயட் வைக்காமல் கதை சொன்ன விதம் குட்.

3  நிகழ்காலக்கொலைகள் மூன்றில் 11 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு கொலை இதே பேட்டர்னில் இருப்பதைக்கண்டு பிடிக்கும் ட்விஸ்ட் சீன் செம.

4  டைட்டிலில் வரும் அனோமி - த ஈக்வேசன் ஆப் டெத் என்ற வாசகத்துக்கு மெனக்கெட்டு. விளக்கம் சொல்ல இயக்குநர் உபயோகித்த ஐடியா பிரமாதம்.

5  கொலையாளி யார் என்பதில் வரும் ஒரு  ட்விஸ்ட் ,நாயகியின் காதலனைக்கொன்ற நபர் பற்றிய ட்விஸ்ட் (இருவரும் வேறு வேறு) அட்டகாசம்.

6 மரணம். பற்றிய ஆராய்ச்சி,ஒருவர் இறந்த பின்பும் மூளை கொஞ்ச நேரம் செயல்படும் என்ற தகவல் இவை எல்லாம் இதுவரை சொல்லப்படாதவை

7 வில்லனுக்கான ஓப்பனிங்க் சீன்,கேரக்டர் டிசைன் அருமை.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1.  தற்கொலை என காட்டப்படும் மரணங்களில் போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட் உடலில் ஒரு வித கெமிக்கல் கலந்திருப்பதாக வருகிறது.கொலை காரன் இதை யூகிக்கவில்லையா?

2 படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்கள் மன நலன் பாதிக்கப்பட்டவராக ,சோக முகஙகளாகவே வருவது பின்னடைவு.யார் முகத்திலும் சந்தோஷமே இல்லை.பாசிட்டிவ் வைப் இல்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் திரில்லர் ரசிகர்கள் அவசியம் பார்க்கலாம்.ஒர்த்.ரேட்டிங்க் 3 /5