Sunday, August 02, 2026
Saturday, August 01, 2026
Super Girl - சூப்பர் கேர்ள் (2026)- ஆங்கிலம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் திரில்லர்)
பிரபல இயக்குநரான ஜேம்ஸ்கன் ஒரு காலத்தில் விக்ரம் லோகேஷ் கனஜராஜ் மாதிரி ஹிட் கொடுத்தவர் தான்,இந்தப்படம் பார்த்தால் கூலி லோகேஷ் கனகராஜ் மாதிரி ஆகி விட்டாரோ என எண்ணத்தோன்றுகிறது.
நம்ம ஊரில் ரஜினி - கமல் மாதிரி. அஜித் -விஜய் மாதிரி ஹாலிவுட்டில் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மார்வெல் ,டிசி தயாரிப்புகள் போட்டி போட்டுக்கொண்டு படங்களை ரிலீஸ் செய்ய டி சி கம்பெனி தயாரிப்பான சூப்பர் மேன் படத்தின் தொடர்ச்சியாக சூப்பர் கேர்ள் வந்திருக்கிறது.
186 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் ரிலீஸ் ஆன இரு நாட்களிலேயே 29 மில்லியன் டாலர் வசூலித்திருக்கும் படம்.டி சி காமிக்ஸ் த எபோனிமஸ் கேரக்டர் என்ற புத்தகத்தைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.டிசி உலகின் இரண்டாவது படமாக இது வெளியாகியுள்ளது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு சூப்பர் கேர்ள்.அவளின் பெற்றோருடன் வேறு ஒரு கிரகத்தில் வசிக்கிறாள்.அங்கே ஏற்பட்ட ஒரு நியூக்ளியர் விபத்தால் நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம்
நம்ம பொண்ணாவது உயிருடன் இருக்கட்டும் என நாயகியை எப்பாடுபட்டோ அவளது செல்ல நாய்க்குட்டியுடன் பூமிக்கு அனுப்பி விடுகிறார்கள்.நாயகியை நாயகனின் கசின் பிரதரான சூப்பர்மேன் பார்த்துக்கொள்கிறார்.இவரது கண்காணிப்பில் தான் நாயகி வளர்கிறார்.
நாயகி 23 வது பிறந்த நாள் கொண்டாடுகிறாள்.அப்போது ஒரு சிறுமி நாயகியிடம் உதவி கேட்கிறாள்.என் அம்மா ,அப்பாவைக்கொலை செய்தவனை நான் பழி வாங்க வேண்டும்,அதற்கு உன் உதவி வேண்டும் எனக்கேட்கிறாள்.அப்போது நாயகி உனக்கு வில்லன் எனக்கும் வில்லன் தான்.என் பெற்றோர் பலியாகக்காரணமும் அவன் தான்.நானும் அவனைப்பழி வாங்க வேண்டியிருக்கு என்கிறாள்.நாம் இருவரும் சேர்ந்தே அவனைப்பழி வாங்குவோம் என்கிறாள்.இதற்குப்பின் நாயகின் எண்ணம் ஈடேறியதா?இல்லையா?என்பது தான் மீதித்திரைக்கதை.
நாயகியாக மில்லி ஆல்காக் பிரமாதமாக நடித்திருக்கிறார்.முகத்தில் நல்ல தெளிவு.துடுக்குத்தனம்,சுட்டித்
நாயகிடம் உதவி கேட்கும் பெண்ணாக ஈவ் ரிட்லி நடித்திருக்கிறார்.கச்சிதமான நடிப்பு.
வில்லனாக மேத்தியாஸ் சியாநெர்ட்ஸ் நேர்த்தியாக வில்லன் ரோலை செய்திருக்கிறார்.
சூப்பர் மேனாக டேவிட் க்ரம்ஹோல்ட்ஸ் கெஸ்ட் ரோலில் வருகிறார்.
இந்த முக்கிதமான நான்கு கேரக்டர்கள் போல சின்னச்சின்ன கேரக்டர்களில் வரும் அனைவரும் அவரவர் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்.
இயக்கம் கிரெய்க் கில்லஸ்பி
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங்க் சீனில் ஸ்பேசில் நடக்கும் ஒரு அதிரடி சீக்வன்ஸ் அருமை.
2 நாயகியின் நாய்க்குட்டி குழந்தைகளைக்கவரும்
3 சூப்பர் மேன் என்பதற்கு பெண் பால் சூப்பர் விமன் தானே?ஏன் சூப்பர் கேர்ள் என்று சொல்கிறோம் என்பதற்கான விளக்கம் அருமை.
4 பிளைட் சீக்வண்சில் நாயகியின் ஆக்சன் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆக்சன் மூவிகளில் முக்கியமான அம்சமே க்ளைமாக்ஸ் தான்.ஆனால் இதில் சொதப்பி விட்டார்கள்.சிஜி ஒர்க்ஸ் பிசிறடிக்கிறது.வாவ் மொமெண்ட்ஸ் மிஸ்சிங்க்
2 த்ரீடி (3டி ) வெர்சன் எடுபடவில்லை
3 நாயகிக்கும்,நாயகியின் குடும்பத்துக்குமான எமோஷனல்பாண்டிங்க்,நாயகியிடம் உதவி கேட்கும் பெண்ணுக்கும் ,அவரது குடும்பத்துக்குமான எமோஷனல் கனெக்ட்,நாயகிக்கும்,அந்த உதவி கேட்கும் பெண்ணுக்குமான நட்பு இந்த மூன்று விஷயங்களையுமே பிராப்பராக படமாக்கவில்லை.திரைக்கதையில் எழுதப்படவில்லை.
4 வில்லன் கேரக்டர் பலவீனமான வடிவமைப்பு.
5 வில்லன் அழிய வேண்டும் ,நாயகி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணமே நமக்கு வரவில்லை.ஏதோ செத்தவன் கையில் வெத்தலை பாக்குக்கொடுத்த கதையாக தேமே என்று படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு தான் வந்தது.
6 முழுக்கதையாக இல்லாமல் கேரக்ட்டர் இண்ட் ரோ மாதிரியே முழுப்படமும் இருந்தது
7 நாயகியை சரக்கு அடிப்பவராக,போதைப்பொருள் உபயோகிப்பவராக எதற்குக்காட்ட வேண்டும்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - எதிர்பார்த்த அளவுக்கு பிரமாதமான காட்சிகளோ ,கலக்கலான ஆக்சன் சீக்வன்சோ இல்லாத ஏமாற்றத்தைத்தந்திருக்கும் ஒரு சாதா படம்.ரேட்டிங்க் 2/5.இது சூப்பர் கேர்ள் இல்லை.சுமார் கேர்ள்
| Supergirl | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Craig Gillespie |
| Written by | Ana Nogueira |
| Based on | Characters from DC |
| Produced by | |
| Starring | |
| Cinematography | Rob Hardy |
| Edited by | |
| Music by | Claudia Sarne |
Production companies |
|
| Distributed by | Warner Bros. Pictures |
Release dates |
|
Running time | 108 minutes[1][2] |
| Country | United States |
| Language | English |
| Budget | $170–186 million[3][4] |
| Box office | $29.1 million[5][6] |
Friday, July 31, 2026
Heartin- ,ஹார்ட்டின்-(2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி ட்ராமா)
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வின் மகள் தான் படத்தின் நாயகி இமயா. தமிழச்சி தங்க பாண்டியன் இவருக்கு அத்தை முறை.கார் என்ற பிரம்மாண்ட ஹிட் படத்துக்கு இசை அமைத்த ராஜேஷ் முருகேசன் தான் இந்தப்படத்துக்கு இசை இந்த இரண்டு அம்சங்களும் படம் பார்க்கத்தூண்டுபவை.அது போக படத்தின் ரன்னிங்க் டைம் 2 மணி நேரம் தான் என்பதால் ஒரு குயிக் வாட்ச் ஆகவே இந்தப்படத்தைப்பார்த்து விடலாம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு ஹோட்டல் ஓனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தான் கதை நடக்கும் களம்.நாயகன் எப்போதும் இதயத்தைத்திருடாதே நாகார்ஜூன் மாதிரி உம்மென்று இருக்கிறார்.யாருடனும் கலகலப்பாகப்பேசுவதில்லை.சிரிப்
நாயகி ஐடி டிபார்ட்மெண்ட்டில் பணியாற்றும் ஊழியர்.பொதுவாக ஐ டி ஊழியர்கள் சமைப்பதில்லை .ஹோட்டலில் தான் சாப்பிடுவார்கள்.அப்படி ஹோட்டலுக்கு அடிக்கடி வந்ததில் நாயகிக்கு நாயகன் மேல் லவ்.ஆனால் லவ் பிரப்போசலை நாயகன் ஏற்றுக்கொள்ளவில்லை.காரணம் நாயகனுக்கு ஒரு முன் காதல் கதை இருக்கிறது.
ஊட்டியில் வில்லி ,நாயகன் இருவரும் காதலிக்கின்றனர்.வில்லி நாயகனை ஏமாற்றி பிரேக்கப் செய்து விட நாயகன் மனதளவில் உடைந்து போகிறார்.
இந்தக்காரணத்தால் நாயகனுக்கு இன்னொரு காதல் என்றாலே பயம்.நாயகி நாயகனுக்கு தைரியம் சொல்லி எல்லாப்பெண்களும் அப்படி இல்லை என்று புரிய வைத்து காதலுக்கு சம்மதம் வாங்குகிறார்.
இப்போது நாயகன் ,நாயகி இருவரும் காதலிக்கிறார்கள்.இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து தமிழகம் வருகிறார்கள். அப்போது நாயகனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு ,தலையில் அடிபட்டு சில நினைவுகளை மட்டும் மறக்கிறார்.
அதாவது நாயகியுடன் கொண்ட காதலை மறக்கிறார்.வில்லியுடன் கொண்டகாதல் ,பிரேக்கப் மட்டும் நினைவு இருக்கிறது.
நாயகன் வில்லியைத்தேடி ஊட்டி போகிறார்.கூடவே நாயகியும் போகிறார்
இதற்குப்பின் நடக்கும் சம்பவங்களும் ,யாருடன் நாயகன் இணைந்தார்?என்பதும் தான் மீதித்திரைக்கதை.
நாயகனாக சனந்த் அளவாக நடித்திருக்கிறார்.இதுவரை சின்னச்சின்ன ரோல்களில் நடித்தவர் முதன்முதலாக ஹீரோ ஆகி இருக்கிறார்.சுமாரான நடிப்பு.மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம்,கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட ஆகிய படங்களில் சின்ன ரோலில் நடித்தவர்.
நாயகியாக இமயா அருமையான நடிப்பு.நிஜத்தில் ஒரு முன்னாள் அமைச்சரின் மகளாக இருந்தும் பக்கத்து வீட்டுப்பெண் போன்ற எளிமையான தோற்றம் க்யூட்டான முக பாவனைகள்,இளமைப்பொலிவு என ரசிக்க வைக்கிறார்.
வில்லியாக மடோனா செபாஸ்டியன் அழகாக வந்து போகிறார்.கல்லூரித்தோழியாக,கா
காமெடியனாக வாட்சப் மணி நாயகனுடன் கலகலப்பாக வந்து போகிறார்.இன்னமும் அவருக்கு அதிகக்காட்சிகள் வைத்திருக்கலாம்.
நாயகனின் அம்மாவாக பிரகதி நல்ல குணச்சித்திர நடிப்பு.உமா பத்மநாபன்,மேத்யூ வர்கீஸ்(அஜித் சாயலில் இருப்பார்) என அனைவர் நடிப்பும் கச்சிதம்.
இசை ராஜேஷ் முருகேசன்.பாடல்களுக்கான இசை தரத்துக்கு இணையாக பின்னணி இசை தரம் இல்லை.முகேஷின் ஒளிப்பதிவு கலக்கல் ரகம்.
கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் கிஷோர் குமார்.
சபாஷ் டைரக்டர்
1 படத்தில் வரும் அனைத்துபெண் கதாபாத்திரஙகளின் முக அமைப்பு ஓவல் ஷேப்பில் அமைந்தது தற்செயலானதா?திட்டமிட்டதா?தெரி
2 ஒளிப்பதிவு பிரமாதம்.ஊட்டி ,ஜெய்ப்பூர் அழகுகளைக்கண் முன் நிறுத்தியது.லாங் ஷாட் ,க்ளோசப் ஷாட்ஸ் என அனைத்தும் அழகு.
3 ஒரு மெலோடி ஷாங் ,ஒரு ஸ்பீடு சாங்க் என கலந்து கட்டி ஹிட் அடித்த விதம்
4 நாயகன் ,நாயகி,வில்லி,காமெடியன் என நான்கே கேரக்டர்கள் தான் முக்கியக்கதாப்பாத்திரங்கள் என்பதால் குழப்பம் இல்லாத திரைக்கதை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனை வில்லி எதற்காக பிரேக்கப் செய்கிறார்?என்பதற்கு வலுவான காரணம் சொல்லப்படவில்லை. நாயகி நாயகனை ஏன் அவ்வளவு சின்சியராக லவ் பண்ணுகிறார்?என்பதற்கான காரணமும் சரியாக சொல்லப்படவில்லை.
2 க்ளைமாக்சில் வில்லியின் போர்சன் பூர்த்தி ஆகாமல் அம்போவென அந்தரத்தில் நிற்கிறது
3. நாயகி ,வில்லி என நாயகனுக்கு இரு காதலிகள் இருந்தும் ரொமாண்டிக்கான காட்சிகளே படத்தில் இல்லை.
4 முக்கோணக்காதல் கதை,மறதி நோய் இவை எல்லாம் 1990 களில் பல படங்களில் வந்ததுதான்.புதுமை இல்லை.
5 வில்லியுடனான காதலில் இருந்த உயிர்ப்பு நாயகியுடனான காதலில் இல்லை.அதனால் க்ளைமாக்சில் நாயகன் வில்லியுடன் சேர்ந்தால் தேவலை என நினைக்க வைக்கிறது திரைக்கதை அமைப்பு
,6 நாயகி சாதனா நடிக்கும்போது தேவை இல்லாமல் மேடைப்பேச்சாளர் போல கையை ஆட்டி ஆட்டிப்பேசுவது செயற்கை
7 பின் பாதியில் நாயகி ,வில்லி இருவரின் கேரக்டர் டிசைன் மாறுவது எப்படி?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - காதலர்கள் ,தம்பதிகள் ,ஜென் சி கிட்ஸ் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5/5.ரொமாண்டிக் காமெடி மூவி என்று பிரமோஷன் செய்த படத்தில் காமெடியைத்தேட வேண்டி இருக்கிறது.
Thursday, July 30, 2026
அந்தரன் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் மிஸ்ட்ரி திரில்லர்) @ZEE5 மற்றும் Simply South
அந்தரன் என்ற சொல்லுக்கு வேடன் என்று அர்த்தம்.மறைந்திருந்து தாக்குபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.ஏற்கனவே எம் ஜி ஆர் நடிப்பில் வேட்டைக்காரன்,சரத்குமார் நடிப்பில் வேடன் போன்ற டைட்டில்களில் படங்கள் வெளிவந்திருப்பதால் சங்க இலக்கியத்தில் தேடிப்பார்த்து இந்த டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.
ப்ரஜின் பத்மநாபனின் முதல் படம் டிஷ்யூம்(2006)ஆக இருந்தாலும் அவர் நாயகனாக நடித்த முதல் படம் மணல் நகரம் (2015).மலையாளம்,தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது.இதுவரை பெரிய கமர்ஷியல் வெற்றியைப்பெறாத இவர் 20 வருடங்களாகப்போராடி முதன் முதலாக ஒரு ஹிட் படத்தில் நடித்திருக்கிறார்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி தன் அப்பாவுடன் வசித்து வருகிறார்.நாயகியைத்திருமணம் செய்ய முயற்சித்தாலோ,காதலித்தாலோ,நெரு
தன் அப்பாதான் ஜாதி வெறியில் அவர்களை ஆணவக்கொலை செய்து விட்டாரோ என நாயகி சந்தேகப்படுகிறார்.
போலீசில் நாயகி புகார் கொடுக்கிறார்.நாயகன் தான் இந்தக்கேசை விசாரிக்கும் போலீஸ் ஆபீசர்.இந்தக்கேஸ் சம்பந்தமாக நாயகியை அடிக்கடி பார்க்க வந்தவர் ,சந்தித்தவர் ஒரு கட்டத்தில் நாயகியின் மீது காதலில் விழுகிறார்.
நாயகியை சின்ன வயசிலேயே காதலித்து விட்டு ஊரை விட்டு ஓடிப்போனவர் தான் நாயகன்.இப்போது நாயகனுக்கும் மரண தேதி நெருங்குகிறதா?யார் கொலையாளி என்பதை எப்படிக்கண்டு பிடித்தார்?என்பதே மீதித்திரைக்கதை.
நாயகியாக இவானா அமைதியாக அழகாக நடித்திருக்கிறார்.இந்தப்பூனையு
நாயகனாக பிரஜன்.போலீஸ் ஆபீசருக்குண்டான க்ளோஸ் கட்டிங்க்ஹேர் ஸ்டைல்,உடல் மொழி,போலீஸ் தோரணை எல்லாம் பக்கா
போலீஸ் என்கொயரி டீமில் இருப்பவர்களாக வரும் ஐஸ்வர்யா கண்ணன் ,பிரியங்கா செல்வி இருவரும் நல்ல நடிப்பு.ஆனால் அவர்ககுக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறைவு.இன்னமும் நன்கு பயன்படுத்தி இருக்கலாம்.
டாக்டராக வரும் அனுபமா குமார் கச்சிதம்.அவர் சொல்லும் சில விஷயங்கள் நமக்குப்புதுசு.
நாயகியின் அப்பாவாக வரும் சாம்பசிவம் நல்ல நடிப்பு.இவர் தான் படத்தின் தயாரிப்பாளர்.
ஆதிரன்,பத்மென்,செந்தில் குமாரி என அனைவருமே அவரவருக்குத்தந்த ரோல்களை சரியாகக்கையாண்டு இருக்கிறார்கள்.
ஹரி எஸ் ஆர் தான் இசை.ஒரு டார்க் திரில்லர் படத்தில் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்று உணர்ந்து பி ஜி எம் அமைத்திருக்கிறார்.
கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பு.நாயகிக்கான க்ளோஷப் ஷாட்ஸ் ,இரவு நேரக்காட்சிகளைப்படமாக்கிய விதம் இரண்டும் குட்.
சசிகுமாரின் ஆர்ட் டைரக்சன்கச்சிதம்.
ஆக்சன் சீக்வன்சை வடிவமைத்த ராம்குமார் பாராட்டுக்குரியவர்
இக்னேசியஸ் அஸ்வின்,சதீஷ் குரோசோவா இருவரும் எடிட்டர்கள்.முதல் பாதி மிக நீளம்.பல காட்சிகளில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.டயலாக்சை இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.
கதை,திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் சந்தோஷ் ராவணன்.முதல் பாதியை குடும்பப்படம் போலவும் ,பின் பாதியை சைக்கலாஜிக்கல் மிஸ்ட்ரி திரில்லர் போலவும் இயக்கி இருக்கிறார்.
சபாஷ் டைரக்டர்
1கடைசி அரை மணி நேரக்காட்சிகள் படத்துக்குப்பெரிய பிளஸ்
2 நாயகியின் அப்பா ,அல்லது நாயகன் இருவரில் ஒருவர் தான் கொலையாளி என்பது போல் மாறி மாறி சந்தேக வளையத்துக்குள் கொண்டு வருவது நல்ல யுக்தி
3 நாயகியின் வித்தியாசமான பை போலார் டிஸ் ஆர்டர் நடிப்பு தமிழ் சினிமாவுக்குப்புதுசு ( மயக்கம் என்ன ?,3 ஆகிய படங்களில் தனுஷ் செய்த ரோல்)
4 முத்தம் சம்பந்தப்பட்ட ஒரு க்ளூவை வைத்து இன்வெஸ்டிகேஷன் செய்யும் இடம் பரபரப்பு ( இது போல் ஒரு ஐடியா தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை)
5 கொலைகாரனைக்கண்டுபிடிக்க நாயகன் போடும் திட்டமும்,விரிக்கும் வலையும் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 முதல் பாதி மிக நீளம்.தேவை இல்லாத காட்சிகள் ,வசனஙகள்
2 பெண்களுக்கு அட்வைஸ் சொல்வது போல் சில காட்சிகள் இருக்கிறது.ஏன் ஆண்களுக்கு யாரும் அட்வைஸ் செய்வதில்லை?அவர்கள் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரர்கள் என்பதாலோ ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான ,பரபரப்பான ,விறுவிறுப்பான லோ பட்ஜெட் க்ரைம் சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி திரில்லர் இது .பார்க்கலாம்.ரேட்டிங் 2.5 / 5
Wednesday, July 29, 2026
Concity - கான் சிட்டி(2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (பைனான்சியல் க்ரைம் திரில்லர்)
கதை நடக்கும் கால கட்டம் 2010.
சம்பவம் 1
நாயகன் ஈ பி ஆபீசல் பில் கலெக்டர் ஆக வேலை பார்ப்பவர்.தினசரி வசூல் ஆகும் தொகையை அடுத்த நாள் வங்கியில் செலுத்தி விட வேண்டும்.நாயகனுக்கு ஏகப்பட்ட கடன் இருக்கிறது.ஈ எம் ஐ கட்டச்சொல்லி நெருக்குகிறார்கள்.அப்போது நாயகனுக்குத்தெரிந்தவர் ஒரு ஐடியா சொல்கிறார்.தினசரி ஒரு லட்சம் ருபாய் என்னிடம் கொடுத்தால் அடுத்த நாள் ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாயாகத்தருகிறேன்.இது போல் ஒரு மாதம் நீ ரொட்டேஷன் செய்தால் ரூ 2000 × 30 = ரூ60,000 சம்பாதிக்கலாம் என்கிறார்.
நாயகனுக்குக்கடன் பிரச்சனையால் கல்யாணம் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதால் இந்தத்திட்டத்துக்கு ஓக்கே சொல்கிறார்.ஈ பி ஆபீஸ் பணத்தை ரொட்டேஷன் செய்கிறார்.
சம்பவம் 2 .காமெடியன் தன் அம்மாவுடன் வசித்து வருகிறான்.அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை.செக் பண்ணின டாக்டர் அம்மாவுக்குப்பெரிய வியாதி இருக்கிறது.அதிக அளவில் பணம் செலவாகும் என்று சொல்ல காமெடியன் பேஸ்புக்கில் பதிவு போட்டு உதவி கேட்கிறார்.பெரிய தொகை வசூலாகிறது.பணத்துடன் டாக்டரைப்பார்க்கப்போகும்போது டாக்டர் கூலாக சாரி.நான் தப்பா சொல்லிட்டேன்.அம்மாவுக்கு ஒண்ணுமில்லை என்கிறார்.உடனே காமெடியன் சரி வசூலான பணத்தை அவரவருக்கே திருப்பித்தந்து விடுகிறேன் என சொல்ல அம்மாவோ அந்தப்பணத்தை நாமே வெச்சுக்கலாம் என்கிறார்.இன்னமும் வசூல் ஆகும் வரை ஆகட்டும்.வந்தவரை லாபம் என்கிறார்.
சம்பவம் 3 நாயகி ஒரு வீணாப்போனவனைக்காதலித்து நம்பி ஏமாந்து கையில் குழந்தையுடன் இருக்கிறாள்.அவன் ஓடி விட்டான்.பொழைப்புக்கு இவர் ஒரு மாதிரி போர்ஜரி வேலை செய்கிறார்.அதாவது வீடு வாடகைக்கு வேண்டும் என்ற நபரிடம் போக்கியத்துக்குப்பணம் வாங்குவது போல 5 லட்சம் ரூபாய் மொத்தமாக வாங்கி ஹவுஸ் ஓனருக்கு மாதாமாதம் வாடகையை இவர் கட்டி விடுவார்.அந்தப்பணத்தை ரொட்டேஷன் விடுவார்.
நாயகன்,நாயகி,காமெடியன் இந்த மூன்று பேரிடமும் பணம் எக்கச்சக்கமாக சேர்கிறது.காமெடியனிடம் 53 லட்சம்,நாயகியிடம் 85 லட்சம் ,நாயகனிடம் 10 கோடி பணம் சேர்ந்து விடுகிறது.
இப்போது காமெடியன் ,நாயகி இருவரும் நாயகனிடம் தங்களிடம் இருக்கும் பணத்தைத்தந்து டபுள் பண்ணிக்கொடுஙக என்கிறார்கள்.
நாயகனின் நண்பர் ஒருவர் ரெகுலராக நாயகனிடம் பணம் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் ரொட்டேஷன் பண்ணுவாரே அவர் நாயகனிடம் 10 கோடி ரூபாய் வாங்கி விட்டு சிலரால் கொலை செய்யப்படுகிறார்.நாயகன் இழந்த பணத்தை மீட்க முடியவில்லை.
நாயகன்,நாயகி,காமெடியன் மூவரும் இணைந்து ஒரு ஹோட்டல் நடத்தி செட்டில் ஆகிறார்கள்.இந்த சமயத்தில் தான் நாயகியின் மகன் கடத்தப்படுகிறான்.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை
நாயகனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார்.எப்போதும் முகத்தை இறுக்கமாகவே வைத்திருப்பது ஏனோ? காமெடிப்படத்தில் ரிலாக்ஸ் ஆக நடித்திருக்கலாம்.
நாயகியாக அன்னா பென் நடிக்க அதிக வாய்ப்பில்லை.திறமையான நடிகையை வீணடித்து விட்டார்கள்.
அம்மா,மகனாக வரும் வடிவுக்கரசி ,யோகிபாபு நல்ல கெமிஸ்ட்ரி.காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
நாயகனின் கொலீக் ஆக வரும் விடிவி கணேஷ் நடிப்பு அருமை.கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.
ராதாரவி,அருள்தாஸ் ,சாக் ஷி வைத்யா உட்பட மற்ற அனைவரும் அவரவர் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
அர்விந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு குட்.ஷான் ரோல்டன் இசை ஓக்கே ரகம்.பின்னணி இசை கச்சிதம்.
ஹரீஸ் துரை ராஜ் இயக்கி இருக்கிறார்.
சபாஷ் டைரக்டர்
1 அம்மா-மகன் ஆக வரும் வடிவுக்கரசி-யோகிபாபு காமெடி டிராக் பல இடங்களில் நன்கு ஒர்க் வுட் ஆகி இருக்கிறது.கலகலப்புக்கு கேரண்டி
2 நாயகன்,நாயகி இருவரும் ஜோடி கிடையாது,காதல் இல்லை என்பது ஏமாற்றம்தான் என்றாலும் மாறுபட்ட சிந்தனை.
3 ஓப்பனிங்க் சீனிலேயே நாயகியின் மகன் கடத்தப்படுவது,யாராக இருக்கும் என்று சிசிடிவி செக் செய்வது என பரபரப்பான காட்சிகள் நம்மை கதைக்குள் இழுக்கிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 சதுரங்க வேட்டை ,லக்கி பாஸ்கர் படங்களைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகித்திரைக்கதை அமைத்தவர்கள் அதில் வருவது போல் புதுப்புது ஐடியா யூஸ் செய்யவில்லை.ரிப்பீட்டாக ஒரே மாதிரிக்காட்சிகள் போர் அடிக்கிறது.
2 ஒரு பாடாவதி இ பி ஆபீசில் அவ்வளவு பணம் வசூல் ஆவதெல்லாம் காதில் பூ ரகம் தான்
3 மோசடி செய்யும் காட்சிகள் எதுவும் நம்பகத்தன்மையே இல்லை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுவராஸ்யமான ஒன் லைன் பிடித்த இந்த டீம் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டது.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.ரேட்டிங்க் 2 /5
Tuesday, July 28, 2026
அங்கீகாரம் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்போர்ட்ஸ் ட்ராமா)
அங்கீகாரம் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்போர்ட்ஸ் ட்ராமா
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் தூய்மைப்பணியாளரின் மகன்.தடகள விளையாட்டில் பல சாதனைகளைப்படைக்கிறான்.ஓட்டப்
நாயகனாக கே ஜி ஆர் அந்தக்கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.ஜிம் போய் பாடியை செம பிட் (fit)ஆக மாற்றி இருக்கிறார்.அவர் உழைப்புக்கு ஒரு சபாஷ்.
அரசுக்கு ஆதரவாக வாதாடும் அட்வகேட் ஜெனரலாக வரும் விஜி வெங்கடேஷின் உடல் மொழி,கம்பீரம்,டயலாக் டெலிவரி,நடிப்பு எல்லாமே பிரமாதம்.
ஜட்ஜ் ஆக வரும் மோகன் ராம் நடிப்பு பாந்தம்.
பயிற்சி யாளராக வரும் வசுந்தரா ,விளையாட்டுத்துறை அதிகாரியாக வரும் அஜித் ஜோஷி,ஸ்போர்ட்ஸ் மினிஸ்டராக வரும் மன்சூர் அலிகான் அனைவர் நடிப்பும் அருமை.
என் உயிர்த்தோழன் புகழ் ரமா நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார்.கண் கலங்க வைக்கும் நடிப்பு.க்ளைமாக்சில் உருக்கி விட்டார்.
நாயகனின் தங்கயாக வரும் இசபெல்லா கவனிக்க வைக்கிறார் என்றால் விளையாட்டு வீராங்கனை யாக வரும் சிந்தூரி உடற்கட்டு அச்சு அசல் ஸ்போர்ட்ஸ்விமன் போலவே இருப்பது சிறப்பு.
விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.ஷான் லோகேஷின் எடிட்டிங் ஓக்கே ரகம்.
இசை ஜிப்ரான். பாடல்கள் பாஸ் ரகம்.பின்னணி இசையில் இன்னமும் ஜால வித்தை செய்திருக்கலாம்.
கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் தென்பாதியான்
சபாஷ் டைரக்டர்
1 இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்டா?ஹாக்கியா?என்ற விவாதத்தில் ,இந்தியாவுக்கு என தேசிய விளையாட்டே ஒன்று இல்லை என்பதைப்பதிவு செய்த விதம் செம என்றால் அந்த விஷயம் ஜட்ஜூக்கே தெரியாத தகவல் என்பது வியப்பு.
2 வசனகர்த்தா தான் படத்தின் பெரிய பலம் .கலக்கலான வசனங்கள் கை தட்டலைப்பெறுகின்றன.
3 கிரிக்கெட் என்பது விளையாட்டே இல்லை,அது ஒரு போதை என்ற கருத்தைப்பதிவு செய்த விதம்
4 இந்தியாவில் கவனம் பெறாத விளையாட்டுக்கள் பட்டியல் என நாயகன் 35 விளையாட்டுக்களை வரிசையாக சொல்லும்போது தியேட்டரில் அப்ளாஸ்
5 இது ஒரு உண்மை சம்பவத்தின் படமாக்கம் என்பதை க்ளைமாக்சில் சொன்ன விதம் ,அந்த நபரைக்காட்டி கவுரவப்படுத்தியது அருமை.
6 நீதித்துறையில் சாதியப்பாகுபாடு. எப்படி இருக்கிறது என்பதைக்காட்டிய விதம்.
7 இயக்குநர் பா ரஞ்சித்தின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதைப்பறை சாற்றும் விதமாய் காட்சி அமைப்புகளில் கவனம் செலுத்திய விதம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆவணப்படத்தின் தாக்கம் திரைக்கதையில் தெரிகிறது.இன்னமும் கொஞ்சம் கமர்ஷியலாக சொல்லி இருந்தால் வெகுஜன மக்களுக்கும் போய் சேர்ந்திருக்கும்.
2 இயல்பான கதையோட்டத்தில் க்ளைமாக்சில் சாண்டைக்காட்சி ஹீரோயிசம் செயற்கையாகத்தெரிகிறது
3 நடிகர்கள் வசனம் பேசும்போது லிப் சிங்க் செட் ஆகவில்லை.
4 வட்டார வழக்கு மொழி அங்கங்கே மாறி மாறி வருகிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அழுத்தமான திரைக்கதை,அட்டகாசமான வசனங்கள் ,புதுமையான கோர்ட் ரூம் வாதங்கள் என ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு உத்தரவாதம்.ரேட்டிங்க் 3./5
Monday, July 27, 2026
அஜித் குமாரின் கண்டிஷன்களால் தான் அவருக்குப்புதுப்படங்கள் புக் ஆகவில்லையா?
அஜித்குமாரின் விடாமுயற்சி தோல்வி அடைந்தாலும் குட் பேட் அக்லி படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும்,வேண்டுகோளா
Sunday, July 26, 2026
ரஜினியின் சுயசரிதை புத்தகம் ரெடி?
Saturday, July 25, 2026
அனந்தன்காடு(2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (பொலிடிக்கல் ஆக்சன் திரில்லர்)
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் கேரள மாநிலத்தின் முதல்வர்.தனது அரசியல் எதிரிகளைப்பழி வாங்க ஒரு ஐ ஜி யுடன் சேர்ந்து கொண்டு நான்கு பேர் கொண்ட குழுவை வைத்துத்தனக்கு வேண்டாத ஆட்களை எல்லாம் போட்டுத்தள்ளுகிறார்.
ஒரு கொலைக்கேஸ் சிபி ஐ விசாரணைக்கு வர இனிமேல் அந்த நான்கு பேர் கொண்ட குழு இருந்தால் நமக்கு ஆபத்து என்று வில்லனான முதல்வர் நினைக்கிறார்.சிபி ஐ விசாரணையில் அந்த நால்வரும் மாட்டினால் நாமும் மாட்டிக்கொள்வோம்.நம்மைக்காட்டி
நாயகன் ஒரு போராளி.1989ல் இலஙகையில் நடந்த ஒரு கொடூரத்தாக்குதலில் தன் அம்மாவையும் ,சகோதரியையும் இழக்கிறான்.பின் அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்து தமிழக ,கேரள பார்டரில் வில்லனின் அடியாட்களான நான்கு பேர் கொண்ட குழுவில் இணைகிறான்.
வில்லனான முதல்வர் + ஐ ஜி ,நாயகன் இரு தரப்புக்கும் எப்படி மோதல் ஏற்படுகிறது? யார் ஜெயித்தார்கள் ?என்பது மீதித்திரைக்கதை
நாயகனாக ஆர்யா நடித்து இருக்கிறார்.தன் கண் எதிரே சகோதரி சிதைக்கப்படும்போதும் ,அம்மா கொலை செய்யப்படும்போதும் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வில்லனாக இந்திரன்ஸ் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.க்ளைமாக்சுக்கு முன் வரும் ஒரு முக்கிய சீனில் அதகள நடிப்பு.
ஐ ஜி யாக சுனில் கொடூரமான இன்னொரு வில்லன் ரோல் செய்திருக்கிறார்.
நிகிலா விமல் ,சாந்தி பாலச்சந்திரன்,தேவமோகன்,முரளி கோபி ,போஸ் வெங்கட் என மற்ற நடிகர்,நடிகைகளின் நடிப்பு கன கச்சிதம்.
எஸ் யுவா தான் ஒளிப்பதிவு.இரவில் நடப்பதாக காட்டப்படும் காட்சிகளில் உயிரோட்டமான ஒளிப்பதிவு.
இசை அஜனீஷ் லோக்நாத்.பின்னணி இசை தெறிக்கிறது.சண்டைக்காட்சிகளை வடிவமைத்த சக்தி சரவணனின் பங்களிப்பும் அருமை.
சபாஷ் டைரக்டர்
1 போலீஸ் ஐஜி யைத்தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இளைஞர்கள் ஓப்பனிங்க் சீனிலேயே எதிரார்ப்பைத்தூண்டுகிறார் இயக்குநர்.
2 வழக்கமாக குணச்சித்திரக்கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் இந்திரன்சை அதிரடி வில்லனாகக்காட்டியது நல்ல ஐடியா
3 இண்ட்டர்வெல் பிளாக் சீன் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு மாநில முதல்வர் வெறும் நான்கு பேர்கள் கொண்ட குழுவை மட்டும் நம்பி இருப்பாரா?ஆல்ட்டர்நேட்டிவ் ஆட்களே கிடைக்க மாட்டாங்களா?
2 எமோஷனல் கனெக்டே இல்லை.யாருக்கு என்ன ஆனால் நமக்கென்ன?என்று தேமே என்று பார்த்துக்கொண்டிருக்கும் நிலை தான்.
3 யூகிக்கக்கூடிய திரைக்கதை ,அடுத்தடுத்து இப்படி தான் நடக்கும் என்று நாம் நினைப்பது போலவே காட்சிகள் நகர்வது சலிப்பு .
4 மாநில முதல்வரையும் ,போலீஸ் ஐஜி யையும் காட்டும்போது பாதுகாப்பு விஷயஙகள் எவ்வளவு பக்காவாகக்காட்ட வேண்டும்? ஏதோ ரசிகர் மன்ற உறுப்பினர் ரேஞ்சுக்குக்காட்டுகிறார்கள்.
5 மெயின் வில்லனான முதல்வரை முதலில் போட்டுத்தள்ளி விட்டு இன்னொரு ஐ ஜி வில்லனை கிளைமாக்சில் தீர்த்துக்கட்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+ வன்முறைக்காக
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஒழுஙகற்ற திரைக்கதை ,எமோஷனல் கனெக்ட் ஆகாத சம்பவங்கள் இவற்றால் விழலுக்கு இரைத்த நீர் தான் இந்தப்படம். ரேட்டிங்க் 2/5







