Monday, August 07, 2023

மழைக்கால மோகம் ஒன்று - குறும்பட விமர்சனம்

 ஹை  குவாலிட்டியில் வைத்துப்பாருங்கள்  என்று  கோரிக்கை  வைத்ததில்  இருந்தே  இதில்  ஒளிப்பதிவு  ஜாலவித்தை  புரிந்திருக்கு  என்று   புரிந்து  விட்டது  , வழக்கமாக  டேட்டா  சேவர்  மோடில்  பார்க்கும்  நான்  இதை  ஹை  குவாலிட்டியில்  பார்த்தேன் 


18  நிமிடக்குறும்படம்  என


  சொல்லப்பட்டாலும்  டைட்டில்  காட்சி  2  நிமிடங்கள்  போக  16  நிமிட  குறும்படம் தான்  இது 


நாயகன் , நாயகி  இருவர்  மட்டுமே  நடித்திருக்கும்  படம்  இது . நாயகன்  ஒரு  முற்போக்குவாதி  என  தன்னைத்தானே  நினைத்துக்கொள்பவன். திருமணத்துக்குப்பார்க்கும்  பெண்களிடம் தன்னைப்பற்றி  ஓப்பனாக  பிளஸ்  , மைனஸ்  எல்லாம்  சொல்லி  அவங்களே  அவனை  ரிஜெக்ட்  பண்ணும்  அளவுக்கு  ஃபிராங்க்காகப்பேசுபவன் . அவன்  பேசுவதைப்பார்த்து  மற்ற  பெண்கள் இவன்  நமக்கு  சரிப்பட்டு  வர  மாட்டான்  என  விலகிச்செல்கின்றனர் ஆனால்  நாயகி  அப்படி  அல்ல. நாயகனுக்கே  கவுண்ட்டர்  கொடுத்து  விட்டு  த  பால்  ஈஸ்  ஆன் யுவர் கோர்ட்  என  சொல்லி  விட்டுச்செல்கிறாள். நாயகன்  என்ன  முடிவு  எடுத்தான்  , எடுக்கப்போகிறான்  என்பதை  நம்  யூகத்துக்கே  விட்டு   படம்  முடிகிறது 


 நாயகன்  ஆக  நடித்தவர்  முகச்சாயலில்  சுந்தர்  சி  போலவும் , தாடி  வைத்திருக்கும்  ஸ்டைலில்  இயக்குநர்  போலவும்  (  ஆர்வாவின்  படங்களில்  நாயகன்  தாடி  வைத்திருப்பான் )   வசனம்  பேசும்  ஸ்டைலில்  சத்யராஜ் , சிபி  சத்யராஜ்  போலவும்   தெரிகிறார். அடிக்கடி  ஒரு  சிரிப்பை  செயற்கையாக  வெளிப்படுத்துவது  நன்றாகத்தெரிகிறது


 நாயகி கண்ணியமான  உடையில்  கச்சிதமான  முக  பாவனைகளில்  கே  பாலச்சந்தர்  பட  நாயகி  போல  கவுண்ட்டர்  கொடுக்கிறார். முக  வசீகரத்தில் நடிப்பில்   நாயகனை  ஓவர்  டேக்  செய்து  விட்டார்  என்றே  சொல்லலாம்

  ( நாம  எப்போ  நாயகனைப்பாராட்டி  இருக்கோம் ? )


ஒரு  பெண்  இயக்குநர் படங்களில்  தான்  ஆண்களை  நோஸ்கட்  கொடுக்கும்  காட்சியும், வசனங்களூம்  பெரும்பாலும்  வரும் . அதனால்  இயக்குநரின்  கேர்ள்  ஃபிரண்ட்ஸ்களில்  யாராவது  ஒருவர்  திரைக்கதை , வசனத்தில்  பங்காற்றி  இருக்கலாம்  என  தோன்றுகிறது 



ரசித்த  வசனங்கள் 


1  ஒரே  ஒரு  லைஃப்  பார்ட்னரால  ஒருவனால்  லைஃப்  பூரா  செக்சுவலா  சேட்டிஸ்ஃபேக்சனா  இருக்க முடியும்  என்பதில்  எனக்கு  நம்பிக்கை  இல்லை 


2    ஃப்ரீடம்  என்பது  நீங்க  எனக்குக்கொடுப்பதா? நான்  உங்க  கிட்டே  இருந்து  எடுத்துக்கொள்வதா?   அல்லது  ஆல்ரெடி  என் கிட்டே  இருப்பதா?


3   எனக்கு  ஃப்ரீடம்  கொடுக்க  நீங்க  யார் ? நான்  உங்க  கிட்டே  அடிமையா  இருந்தாத்தான் நீங்க  எனக்கு  ஃப்ரீடம் கொடுக்க  முடியும் ?


4  ஆக்சுவலா  பெரியார்  சொன்னதை  வெச்சு  ஸ்டேட்மெண்ட்  சொல்றது  இங்கே  ஃபேஷன்  ஆகிடுச்சு 


5  பெரியார்னு இல்லை , யாரையும்  ஒழுங்காகப்படிக்காத  வரை  எல்லாரும்  சிறியார் தான் 


 சபாஷ்  டைரக்டர் 


1  பின்னணியில்  மழை  வருவது  போல்  காட்சி  வைத்து  ஒரு  ரொமாண்டிக்  மூடு  செட்  பண்ணியது  அருமை


2   குறும்படத்தில்  எந்த  அளவு  கூட்டம்  இல்லாமல்  இருக்கிறதோ  அந்த  அளவு  திரைக்கதை  ஆடியன்சின்  மனதில்  நன்கு  பதியும்  என்று  சொல்வார்கள் , அதை  மெய்ப்பித்து  இருக்கிறார்


 திரைக்கதையில்  சில  ஆலோசனைகள் 


1  நாயகன்  தன்  தரப்பு   நியாயத்தைச்சொல்ல  தனக்குப்பிடித்த  படங்களாக  ஆட்டோகிராஃப் , அழகி  ஆகிய  படங்களைப்பற்றிச்சொல்லும்போது  நாயகி  கொடுக்கும்  இரண்டு  கவுண்ட்டர்களும்  பிரமாதம் , ஆனால்  இன்னும் ஒரே ஒரு  விஷயம்  சேர்த்திருக்கலாம் .  சொல்லாமலே  சசி  இயக்கிய  பூ  படம்  ஒரு  பெண்ணின்  திருமணத்துக்கு  முந்தின  காதல்.   பற்றி ந் ந்சொல்லும் பிரமாதமான  கவிதைப்படம், ஆனால்  கமர்ஷியலாக  ஓடவில்லை ,. அதை  உதாரணமாக  நாயகி  காட்டி  இருக்கலாம்.  மக்களால்  ஒரு  ஆணின்  ஆட்டோகிராஃபை  ரசிக்க  முடிந்த  அளவு  ஒரு  பெண்ணின்  ஒரே  ஒரு  காதலைக்கூட  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை  என்பதை  சொல்லி  எனக்குப்பிடித்த படம்  பூ  என்று  நாயகி  சொல்வது  போல  அமைத்து  இருக்கலாம். அதே  போல்  நாயகிக்கு  பல  காதல்கள்  இருக்கும்  ஜூன்  என்னும்  மலையாளப்படத்தையும்  அவருக்குப்பிடித்த  படமாக  சொல்லலாம். ஆனால்  ஜூன்  ஹிட்  படம். அதை  அங்கே  மக்கள்  ஏற்ற்க்கொண்டார்கள் . அதனால்  அதை  சொல்வதை  விட  வெற்றி  பெறாத  பூ    படத்தை  உதராணமாக  சொல்லி  இருந்தால் சரியான  பூமாரங்  அட்டாக்  ஆக இருந்திருக்கும்


2   க்ளைமாக்சில்  நாயகி  கவுண்ட்டர்  பக்கா . ஆனால்  ஃபினிஷிங்  இல்லை . நாயகன்  என்ன  முடிவு  எடுத்தான் ?   ஆனால்  அவனால்  முடிவே  எடுக்க  முடியவில்லை  என்பதை  அவன்  வாயாலேயே  சொல்ல  வைத்திருந்தால்  இன்னும்  பிரமாதமாக  இருந்திருக்கும்  (  நாயகி  பூடகமாக  டிரஸ்  போடலையா? எனக்கேட்கும்போதே  அவனை  நிர்வாணப்படுத்தி  சொல்லால்  தாக்கி  இருக்கிறார்  என்பதை  உணர  வைத்திருந்தாலும்  அது  ஏ செண்ட்டர்  ஆடியன்சுக்கு  மட்டுமே  புரியும் ) 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்ஸ்  -  வழக்கமாக  ஆர்வாவின்  படங்கள்   ஆண்களைத்தான்  அதிகம்  கவரும், இந்த  முறை  பெண்களை  டார்கெட்  செய்து  கோல்  அடித்திருக்கிறார்.  ரேட்டிங் 3 / 5   யூ  ட்யூப்பில்  கிடைக்கிறது . லிங்க்  முதல்  கமெண்ட்டில் 


2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

https://www.youtube.com/watch?v=nEwWoZbkuy0

Aravind said...

தொடர்ந்து நல்ல படங்களை அரிமுகம் செய்வதற்காக மிக்க நன்றி சார்.