Sunday, August 06, 2023

நீ (1965) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா) @ யூ ட்யூப்

 


யார்  நீ   என்ற  படம்  வேறு , இது  வேறு , குழப்பிக்கொள்ள  வேண்டாம். அது  திகில்  படம், மெகா  ஹிட்  மூவி ,  இது  ஹிட்  படம் .முதல்  பாதி  ஃபேமிலி  மெலோ  டிராமா  போலவும் , பின்  பாதி  த்ரில்லர்  மூவி  போலவும்  பயணிக்கும் . இரு  மெகா  ஹிட்  பாடல்கள்  இதில்  உண்டு . எம் எஸ்  விஸ்வநாதன்  முதன்  முதலாக  தனியே  இசை  அமைத்த  படம், அதனால்  தன்  திறமையை  நிரூபித்தே  ஆக  வேண்டிய  கட்டாயத்தில்  இருந்தார் . பிஜிஎம் மிலும்  கலக்கி இருப்பார் 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  பெரிய  கோடீஸ்வர  குடும்பத்துப்பையன்.  காலேஜ்  படித்துக்கொண்டு  இருக்கிறான். நாயகி  மிகவும்  ஏழை . பாட்டி  உடன்  வசித்து  வருகிறார். அம்மா, அப்பா  இல்லை . ஒரு  முறை  உடல்  நலம்  சரி  இல்லாத  பாட்டிக்கு  மருந்து  வாங்கிக்கொண்டு  வரும்போது  சில  ரவுடிகள்  குறுக்கிட்டு  நாயகியை  கிண்டல்  செய்து  தகறாரு  செய்கிறார்கள் . அப்போது  நாயகன்  எண்ட்ரி  ஆகி  ஒரு  ஃபைட்  போட்டு  அந்த  வெட்டிப்பசங்களை  விரட்டி  அடித்து  விட்டு  நாயகியிடம்  பேசிக்கொண்டு  இருக்கிறார்


 அப்போதே  இன்சிடெண்ட்  லவ்   வந்து  விடுகிறது .தான்  ஒரு  ஏழைப்பெண்ணைக்காதலிப்பதாகவும்  அவளையே  திருமணம்  செய்து  கொள்வதாகவும்  ஊரில்  இருக்கும்  அண்ணன், அண்ணிக்கு  கடிதம்  எழுதுகிறான்.  வீட்டில்  கடும்  எதிர்ப்பு . அதனால்  நாயகன்  நண்பர்கள்  முன்னிலையில்  கோயிலில்  நாயகியைத்திருமணம்  செய்து  கொள்கிறான்


 டிகிரி  படிப்பு   கேன்சல் , வேலைக்குப்போகலாம்  என  முடிவு  செய்து  வேலை  தேடுகிறான், அண்ணன் , அண்ணி  சமாதனம்  ஆகி  வீட்டுக்கு  அழைக்கிறார்கள். நாயகன்  தன்  மனைவியை  அழைத்துக்கொண்டு  வீட்டுக்குப்போகிறான்


 அங்கே  ஒரு பெரிய  அதிர்ச்சி  காத்துக்கொண்டிருக்கிறது . நாயகனின்   வீட்டில்  உள்ள  மருமகன்  ஒருவர்  நீதிபதி ,அவர்  நாயகியைப்பார்த்து  அதிர்ச்சி  அடைகிறார். நாயகி  ஒரு  முறை  கோர்ட்டில்  அவரால்  தண்டனை  பெற்ற  பெண். ஹோட்டலில்  சில  ஆண்களுடன்  நடத்தை  கெட்டவராக  இருந்தார்  என்பது  வழக்கு 


 நாயகன்  வேலை  தேடி  வெளியூர்  போகிறார். அங்கே  வேலையில்  சேர்ந்து  வீடு    ரெடி  பண்ணி  விட்டு  பின்  நாயகியை  அழைத்துச்செல்லத்திட்டம் . ஆனால்  நாயகன்  ஊரில்  இல்லாத  போது  நாயகியை  நாயகன்  வீட்டு  ஆட்கள்  கண்டபடி  பேசி  வீட்டை  விட்டு  அனுப்பி  விடுகிறார்கள் 


நாயகன்  வேலை  எல்லாம்  செட்  ஆகி  ஊருக்குத்திரும்பி வந்து  மனைவி  எங்கே  எனக்கேட்கும்போது  பதில்  இல்லை . அப்போது  நாயகனின்  உறவினர்  ஒருவர்  நாயகி  பெங்களூரில்  ஒரு  ஹோட்டலில்  டான்சராக  பார்த்தேன்  , உடனே  கிளம்பி  வா  என்கிறார்


நாயகனுக்குக்குழப்பம்.  பத்தினியான  தன்  மனைவி  எப்படி  ஹோட்டலில்  கிளாமர்  டான்ஸ்  ஆட  முடியும் ? உண்மையை  அறிய  பெங்களூர்  போகிறார். அங்கே  நாயகியை  டான்சர்  ஆகப்பார்க்கிறார் 


 இதற்குப்பின்  நாயகன்  என்ன  முடிவு  எடுத்தார் ? நாயகன்  நாயகியை  ஏற்றுக்கொண்டாரா?  நாயகி  தான்  கற்புள்ளவர்  என்பதை  நிரூபித்தாரா?   என்பதை  பின்  பாதி  திரைக்கதை  பதில்  சொல்லும் 


நாயகன்  ஆக  ஜெய்சங்கர் , முகத்தில்  பணக்காரக்களை  நன்கு  தெரிகிறது. பல  காட்சிகளில்  நடிக்க  நல்ல  வாய்ப்பு 


நாயகி  ஆக  ஜெ . ஏழைப்பெண்ணாக  வருகையில்  குடும்பக்குத்து  விளக்கு  மாதிரி  காட்சி  அளிப்பவர்   ஹோட்டல்  டான்சராக  காட்டபப்டும்போது  மாடர்ன்  கேர்ள்  ஆக  மாறுபட்ட  பரிமாணத்தில்  வருகிறார். இரு  வேறு  குணாதிசயத்தை  நன்றாக  வெளிப்படுத்துகிறார்


பண்டாரிபாய்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  உள்ளார் . நாகேஷ்  காமெடி  டிராக்  படத்தின்  மெயின்  கதையுடன்  ஒட்டாமல்  தனியே  பயணிக்கிறது , ஆனாலும்  சிரிக்க  வைக்கிறது 


 எம் எஸ்  விஸ்வநாதன்  இசையில்  5பாடல்கள் , அவற்றில்  இரு  பாடல்கள்  மெகா  ஹிட் 

எம் எஸ்  மணியின்  எடிட்டிங்கில்  123  நிமிடங்கள்  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்கள் . காமெடி  டிராக்  25  நிமிடங்கள்,   ஐந்து  பாடல்கள்  15  நிமிடங்கள்   போக  ஆக  மொத்தம் 80  நிமிடங்கள்  தான்  மெயின்  கதை 


எம் ஏ  ரஹ்மான்  ஒளிப்பதிவில்  ஜெ  வின்  அழகு  இளமை  கொப்புளிக்க  படம்  ஆக்க்கப்பட்டுள்ளது 


கனக சண்முகம்  தான்  இயக்கம், ஆனால்  டைரக்சன்  மேற்பார்வை  டி ஆர்  ராமண்னா 
சபாஷ்  டைரக்டர்  ( கனக சண்முகம்)


1    நாயகி  நல்லவரா?  கெட்டவரா? என்பதுதான்  மெயின்  கதைக்கரு, அதை  சாமார்த்தியமாக  முக்கால்  வாசிப்படம்  வரை சஸ்பென்ஸ்  ஆகவே  மெயிண்ட்டெயின்  பண்ணி  இருக்கிறார்


2   நாயகி  அழுது  வடியும் போதெல்லாம்  சாமார்த்தியமாக  நாகேஷ்  காமெடி  நம்மைக்காப்பாற்றுகிறது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  வெள்ளிக்கிழமை  விடியும்  வேளை  வாசலில்  கோலம் இட்டேன் 


2    அடடா  என்ன  அழகு ? அருகே  வந்து  பழகு 


3   சொன்னாலும்  சொன்னானடி 


4  வந்தாலென்ன? எனக்கு  வந்தாலென்ன? 


5  ஒன்  டே  ஒன்  வே 


 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பாட்டி  சாகும்  தருவாயில்  இருக்காங்க , அவருக்கு  மருந்து  வாங்கிட்டுப்போறேன்  என  நாயகி  சொல்கிறார். ரவுடிகள்  வழி  மறித்து  தகறாரு  பண்றாங்க, நாயகியை  நாயகன்  காப்பாற்றுகிறார். ரவுடிகளுடன்  ஃபைட்  போடுகிறார். ஃபைட்  நடக்கும்  அந்த  20  நிமிசமும்  நாயகி  வேடிக்கை  பார்த்துக்கொண்டிருக்கிறார். ஓடிப்போய்  மருந்தை  பாட்டியிடம்  கொடுத்திருந்தால்  அவராவது  உயிர்  பிழைத்திருப்பார். ஃபைட்  எல்லாம்  முடிஞ்சு  சாவகாசமா  இருவரும்  கடலை  போட்டு  விட்டு  வீட்டுக்குப்போவதற்குள்  பாட்டி  அவுட்  


2   நாயகி  திருமணத்துக்கு  அவசரப்படுத்தவில்லை . நாயகிக்கு  சொந்தம்  யாரும்  இல்லை ,  ஆனால்  நாயகன்  ஏன்  திருமணத்துக்கு  அவசரப்படுகிறார் ? படிப்பு  முடித்து  விட்டு  மேரேஜ்  பண்ணலாமே? 


3   டான்சரான  நாயகி  போலீசால்  கைது  செய்யப்படுகிறார் ,  அவரது  கணவரை  விசாரிக்க  போலீஸ்  அவர்கள்  இருக்கும்  இடத்துக்குத்தானே  வர  வைப்பார்கள்? ஆனால்  போலீஸ்  டான்சரைக்கூட்டிக்கொண்டு  நாயகனின்  இருப்பிடத்துக்கு  ஏன்  வர வெண்டும் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  படம்  தான்சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   படம்  கொஞ்சம்  ஸ்லோ  தான் .  பார்க்கலாம்,   2  பாட்டுக்காகவும் , ஜெ  வின்  அழகான  தோற்றத்தை  ரசிக்கவும் .  ரேட்டிங் 2.25 / 5 


Nee!
Theatrical release poster
Directed byT. R. Ramanna
Kanagashanmugam
Written bySakthi T. K. Krishnasamy
Produced byT. K. Ramaraj
StarringJaishankar
Jayalalithaa
CinematographyM. A. Rahman
Edited byM. S. Mani
Music byM. S. Viswanathan
Production
company
Sri Vinayaga Pictures
Release date
  • 21 August 1965
Running time
123 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: