Wednesday, August 23, 2023

அஸ்வின் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

   


2020  ஆம்  ஆண்டு  தருண்  தேஜா  என்ற  இயக்குநர்  அஸ்வின்  என்ற  பெயரில்  ஒரு  குறும்படத்தை  இயக்கினார் , அது  மெகா  ஹிட்  ஆனது . அதே  படத்தைத்தான்  இப்போது  இரண்டு  மணி  நேரப்படமாக  இயக்கி  இருக்கிறார்


 ஸ்பாய்லர்  அலெர்ட்

மெயின்  கதைக்குப்போகும்  முன்  ஒரு  முன்  கதை 


ஒரு  விவசாயிக்கு  இரு  மகன்கள் . இருவரும் தண்ணீரில்  மூழ்கி  இறக்கிறார்கள் . விவ்சாயி  கடவுளை  நோக்கி  க்டுமையான  தவம்  இருக்கிறார். அவரது  தவத்தை  மெச்சி  இறைவன்  ஒரு  வரம்  கொடுக்கிறார். இரு  குழந்தைகளில்  ஒருவனை  மற்றும்  உயிர்ப்பிக்கிறோம், அவனுக்கு  இரு  சிலைகள்  பரிசாகத்தருகிறோம், அந்த  சிலைகள்  அவனிடம்  இருக்கும்  வரை  வெளி  சக்திகளால்  அவனுக்கு  மரணம்  வராது , இயற்கை  மரணம்  தான்


இறைவன்  மறைந்த  பின்  சாத்தான்  அந்த  சிலையை  அடைய  திட்டம்  போடுகிறது , மனித  உருவில்  அந்தப்பையனிடம்  வந்து  உன்  சகோதரனை  உயிருடன்  மீட்டுத்தருகிறேன் , எக்சேஞ்ச்  ஆஃபர்  ஆக  உன்னிடம்  இருக்கும் இரு  சிலைகளில்  ஒரு  சிலையை  எனக்குத்தா  என்கிறது . இவனும்  ஏமாந்து  தந்து  விடுகிறான் இதனால்  சாத்தானின்  ஆதிக்கம்  பெருகி  அந்த  ஊர்  மக்கள்  எல்லாம்  நோய்  வந்து  வரிசையாக  இறக்கிறார்கள் . பிறகு  உண்மை  அறிந்து  அந்த  இரு  சிலைகளையும்  மீட்டு  ஒரு  மந்திரக்கயிறால்  கட்டி  பூமிக்குள்  புதைக்கிறார்கள் 


ஆர்க்கியாலஜி  டிபார்ட்மெண்ட்டை  சேர்ந்த  ஆர்த்தி  என்ற  பெண்   இந்த  சிலைகளை  மீட்கிறார்.  மேலே  சொன்ன  முன்  கதையை  ஒரு  வீடியோவில்  பதிவு  செய்து  சிஸ்டத்தில்  ஸ்டோர்  பண்ணுகிறார். ஆனால்  சாத்தான்  ஆர்த்தியைக்கொன்று  விடுகிறது


போலீசுக்குக்கிடைத்த  தகவல்படி  ஆர்த்தி  என்ற  பெண்  அந்த  மேன்சனில்  வாழ்ந்த  18  பேரைக்கொலை  செய்து  விட்டு  தானும்  தற்கொலை  செய்து  கொண்டாள் . ஆனால்  ஆர்த்தியின் டெட்  பாடி  மட்டும்  கிடைக்கவில்லை 


 இந்த  கேசின்  மர்மத்தைக்கண்டறிய  யூ  ட்யூப்  பிரபல  டீம்  ஒன்று  களம்  இறங்குகிறது. வழக்கமான  பேய்ப்படங்களில்  நாம்  என்னென்ன  பார்ப்போமோ அந்த  சம்பவங்கள்  எல்லாம் நடக்கிறது , இறுதியில்  சாத்தானை  நாயகன்  எப்படி  வெற்றி கொள்கிறான்  என்பது  க்ளைமாக்ஸ் 


 ஆங்கிலப்படங்களுக்கு  இணையான  ஒளிப்பதிவு , பிரமாதமான  பின்னணி  இசை , நடித்த  அனைவருடைய  பர்ஃபார்மென்ஸ்  தான்  படத்தின்  பலம்  


சபாஷ்  டைரக்டர்


1  இருபது  நிமிடத்தில்  முடிக்க  வேண்டிய  படத்தை  ஜவ்வாக  இழுத்தது 

2   டெக்னிக்கலாக  பிரமாதமான  கூட்டணி 


  ரசித்த  வசனங்கள் 


1      விடாம  துரத்தும்  சாபக்கேடுகளிடம்  மாட்டியவர்களுக்கு  சாவின்  வரம்  கூட  சாபம்  தான் 


2  எல்லாருடைய  மண்டைக்குள்ளும்  எப்பவும்  ரெண்டு  குரல்  கேட்டுட்டு  இருக்கும்


3 இருட்டில்  இருந்து  வெளிச்சத்தைப்பார்க்கும்போது  கேட்கும்  குரல்  வெளிச்சத்துல  இருந்து  இருட்டைப்பார்க்கும்போதுதான்  புரியும் (  எதுவும்  புரியல ) 

4  இந்த  பூமியில்  இறந்து  போகிறவர்கள்  கம்ப்ளீட்டா  இறந்து  போக  மாட்டாங்க . அவங்க  வேற  ஒரு  இண்ட்டர்மீடியேட் ல  கனெக்ட்  ஆகி  இருப்பாங்க 

5  இந்த  உலகத்துல  எதுவுமே  தற்செயலா  நடப்பதில்லை 

6  தலைக்குள்ளே  இருக்கும்  ராட்சசனை  ஒரு  நிமிச்த்துக்குள்  அழிக்க  முடியும்  என்பது  மனிதனுக்குக்கிடைத்திருக்கும்  பெரிய  வரம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   அது  ஒரு  அமானுஷ்யமான  இடம்னு  தெரியும், அப்படி  இருந்தும்  மேன்சனுக்குள்  ஐந்து  பேரும்  பிரிந்து  வெவ்வேறு  இடங்களுக்குப்போவது  ஏன்? எல்லா  இடங்களுக்கும்  ஒற்றுமையாக  ஒரே  குழுவாகப்போகலாமே?  சீக்கிரமா  எல்லா  இடங்களையும்  கவர்  பண்றது  முக்கியமா? உயிரை  கவர்  பண்றது  முக்கியமா?

2 படத்தோட  ஓப்பனிங்  சீன்ல 12  நிமிடங்களுக்கு  ஒரு  விவசாயியோட  ட்வின்ஸ் மகன்கள்  பற்றிய  ஒரு  கதை  வாய்ஸ்  ஓவர்;ல  சொல்றாங்க , அதே    கதையை  படத்தின்  பின் பாதில  அதாவது  62  வது  நிமிடத்துல  மீண்டும்  ஒரு  முறை  12  நிமிடங்களுக்கு  சொல்றாங்க , ஏன்? 

3  நாயகனுக்கு  தன்  சொந்த  சம்சாரம்  மாசமா  இருக்கறது  தெரியாது . அடுத்த  நாள்  காலைல  நாயகனின்  பிறந்த  நாள்  வருவதால்  அப்போ  அந்த  சஸ்பென்ஸை  ஓப்பன்  பண்ணப்போறதா  அவ  சொல்றா, ஆனா  நாயகன்  அன்னைக்கு  நைட்டே  அவ  வயிற்றில்  முத்தமிட்டு  அழறான். நம்ம  குழந்தைக்காக  உன்னை  நீயே  அழிச்சுக்காதேனு  சொல்றான். அடுத்த  நாள்  காலைல  தெரிய  வேண்டிய  அந்த  ராணுவ  ரகசிய  கொஸ்டீன்  பேப்பர்  எப்படி  அவுட்  ஆச்சு? 


4  சாத்தானின்  அந்த  ,மந்திர  சிலைகள்  இரண்டையும்  கிராமத்தார்  மந்திரக்கயிறு  கொண்டு  பூமிக்குள்  புதைச்சுடறாங்க . பல  வருடங்களுக்குப்பின்  அதை  தோண்டி  எடுக்கும்போது  கயிறு  சேதாரம்  ஏதும்  இல்லாம  அப்படியே  இருக்கே? எப்படி ?


5  பல  வருடங்களுக்குப்பின்  கிடைக்கும்  அந்த  சிலை  ஒண்ணு  மட்டும்  தான்  நாயகன்  கைவசம்  இருக்கு , இன்னொரு  சிலை  சாத்தானிடம்  இருக்கு. ஆனா  மந்திரக்கயிறு  யார்  கிட்டேயும்  இல்லயே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -யூ, ஆனால்  ஜம்ப்ஸ்கேரிங்  சீன்ஸ்க்காக  ஏசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -     ஹாரர்  த்ரில்லர்  ரசிகர்கள்  பொறுமையாகப்பார்க்கலாம்., ரேட்டிங் 2.75 / 5

0 comments: