Thursday, August 17, 2023

பாயும் ஒளி நீ எனக்கு ( 2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


 வானம்  கொட்டட்டும்  2020 ஆம் ஆண்டு  வெளியானபோது  விக்ரம் பிரபு  ஒப்பந்தம்  ஆன  படம்  இது . புதுமுக  இயக்குநர் கார்த்திக்  அத்வைத்  திரைக்கதை  , இயக்கத்தில்   உருவாகி  அவரே  தயாரித்த  படம்  இது 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


அமைதிப்படை  அமாவாசை  மாதிரி  வில்லன்  ஒரு  அரசியல்வாதியிடம் அசிஸ்டெண்ட் ஆக  இருக்கிறான். அந்த  அரசியல்வாதி  நல்லவர். மாவட்டச்செயலாளர்  ஆக  இருந்து  எம் எல் ஏ  ,எம்  பி  என  பதவிகளை  அடைகிறார், மக்கள் செல்வாக்கும்  இருக்கிறது. இது  வில்லனுக்குப்பிடிக்கவில்லை , அவர்  இடத்தை  தான்  அடையனும்  என  நினைக்கிறான். எனவே  கூடவே  இருந்து  குழி  பறிக்கும்  வேலையை  செய்கிறான். அந்த  அரசியல்வாதிக்கு  ஸ்லோ  பாய்சன்  கொடுத்து கொலை  செய்கிறான். அந்த  விஷயம்  ஒரு  டாக்டருக்கு  தெரிந்து  விடுகிறது. அவர்  விஷயத்தை  வெளியே  சொல்லி விடக்கூடாது  என  அவரைப்போட்டுத்தள்ளி  விடுகிறான். இந்தக்கொலையை  நாயகனின்  சித்தப்பா  பார்த்து  விடுகிறார். அவரையும்  வில்லன்  முடித்து  விடுகிறான்


நாயகனுக்கு  இந்த  விஷயங்கள்  எதுவும்  தெரியாது, எதிரிகளே  இல்லாத  அவரை  யார்  எதற்காக  கொலை  செய்தார்கள்  என  குழம்புகிறான். அவன்  எப்படி  வில்லைனை  அடையாளம்  கண்டான்? எப்படி  ப்ழி  தீர்த்தான்  என்பதே  மீதி  திரைக்கதை

நாயகன்  ஆக  விக்ரம்  பிரபு . தாடியுடன்  இருப்பதால்  ஒரு  முரட்டுக்களை  வந்து  விடுகிறது . இவருக்கு  இரவு  நேரத்தில்  அல்லது  வெளிச்சம்  குறைவாக  இருக்கும்  இடத்தில்  பார்வை  தெரியாது  என்ற  விஷயத்தை  படம்  ஆரம்பித்து  40 நிமிடங்கள்  கழித்துத்தான்  ஓப்பன்  செய்கிறார்கள் .


நாயகி  ஆக  வாணி  போஜன். சரியாக  பல  நாட்கள்  போஜனமே  இல்லாதது  போல  வாடிய  தோற்றம் . நாயகன் உடனான  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை . இருவருக்கும்  காதல்  மலர்வது  செயற்கையாக  இருக்கிறது 


 சித்தப்பாவாக  திருடா  திருடா  ஆனந்த். நல்ல  அரசியல்வாதியாக  வேல  ராம  மூர்த்தி . வில்லன்  அக  தனஞ்செயா  மூவரும்  கச்சிதமாக  ந்டித்திருக்கிறார்கள் . நாயகனின்  நண்பனாக  விவேக்  பிரசன்னா  மிதமான  இயல்பான  நடிப்பு 

 ஸ்ரீதர்  ஒளிப்பதிவில்  ஒரு  புதுமை  செய்திருக்கிறார். நாயகனுக்கு  மங்கலாகத்தெரியும்  சூழலை  டல்  ஃபோட்டோகிராஃபி  பயன்படுத்தி  இருக்கிறார். இசை மகதி  ஸ்வசாகர் . . இவர்  இசை  அமைப்பாளர்  மணிசர்மாவின்  மகன் . 3  பாடல்கள்  தேறுகிறது . பின்னணி  இசை  நல்ல  விறுவிறுப்பு , பிரேம்  குமாரின்  எடிட்டிங்கில்  2  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 



சபாஷ்  டைரக்டர் (கார்த்திக்  அத்வைத்)

1  தமிழ்  சினிமா  செண்ட்டிமெண்ட்  படி  நாயகன்  விழி  ஒளி  இழந்தவராக  நடித்த  படங்கள்  எல்லாமே  அட்டர்  ஃபிளாப் . உதா  கமலின்  ராஜ  பார்வை , முரளியின்  இரவு  சூரியன் , விக்ரமின்  தாண்டவம்   என  சொல்லிக்கொண்டே  போகலாம். இது  தெரிந்தும்  துணிச்சலாக  களம்  இறங்கியது 


2  இந்தப்ப்டம்  ஒரு  பெரிய  டர்னிங்  பாயிண்ட்  ஆக  இருக்கும்  என  நாயகனை  நம்ப  வைத்து  கால்ஷீட்  வாங்கியது 

செம  ஹிட்  சாங்க்ஸ்

1  ஹே  பாப்பா , ரூட்டு  போட்டா 

2  அனிச்சம்பூவே  நீ  அழாதே! வெளிச்சம்  நானே  வீழாதே


  ரசித்த  வசனங்கள் ( தில்சுயன்)

1  நீங்க  சொல்ற  மாதிரி இதுவரை  எங்க  சிஸ்டத்துல  அப்படி  பிராப்ளம்  எதுவும்  வந்ததில்லையே?

  சாரி  சார் , இது வரை  நீங்க  சாகலை , அதுக்காக  நீங்க  எப்பவும்  சாகவே  மாட்டீங்கனு  சொல்ல  முடியுமா? 


2  பிறக்கும்போதே  யாரும்  ஜீனியசாகப்பிறப்பதில்லை 


3  ஆசை , எதிரி , துரொகி  எதிலும்  மிச்சம்  வைக்கக்கூடாது 


4  நல்லவன்னு  ஒருத்தன்  இருந்தா  அவனுக்கு  கெடுதல்  பண்ண  ஒரு  கெட்டவனும்  இருப்பான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  வீட்டுக்கு  விருந்தினராக  வந்த  நாயகி  நாயகனின்  வீட்டு  பெட்ரூமுக்குள் டெக்ரேசன்  சம்பந்தமாக  பார்க்க  வரும்போது  செருப்பில்லாமல்  வருகிறார், ஆனால்  நாயகன்  மட்டும்  செருப்புடன்  இருக்கிறார். நாயகனின்  தங்கையும்  காலில்  செருப்பில்லாமல்  தான்  வருகிறார் 

2  கார்  டிரைவரின்  மண்டையில்  நான்கு முறை  இரும்புக்கம்பியால்  மடார்  மடார்  என  தாக்கி  அவரது  உடலை  இழுத்துச்செல்கிறார் அடியாள் . ஆனால்  ஒரு  சொட்டு  ரத்தம்  கூட  அங்கே  இல்லை 

3  ஃபைட்டால்  கழுத்தில்  கத்திக்கீறல் பட்ட  நாயகன்  ஹாஸ்பிடலில்  ட்ரீட்,மெண்ட்  எடுத்துட்டு  வீட்டுக்கு  வர்றார். அப்போ  அவர்  கழுத்தில்  பேண்டேஜ்  காணோம், 

4  ஃபாரீன்  படங்களில்  தான்  சின்னப்பையனா  இருந்தாலும்  தனி  ரூமில்  படுத்துத்தூங்குவது  போல்  காட்டுவார்கள் , இரவில்  கண்  தெரியாத  சிறுவனை  அவன்  அப்பா  ஏன்  தனி  பெட்ரூமில்  படுக்க  வைக்கிறார்?


5  வில்லன்க்ளால்  துரத்தப்படும்  ஆனந்த்  மகனுக்கு  ஃபோன்  பண்ணி என்னைக்கொலை  பண்ண  ஆட்கள்  துரத்தறாங்க  என்க  நாயகன்  லைவ்  லொக்கேஷன்  ஷேர்  பண்ணுங்க  என்கிறான், அவரும்  ஷேர்  பண்ண  அதற்குப்பின்  10  நிமிடங்கள்  காரில்  சேசிங்  நடக்கிறது. 10 கிமீ  தாண்டி  இருப்பார் . அப்போ  எப்படி  கரெக்டாக  நாயகனால்  அங்கே  ஸ்பாட்டுக்கு  வர  முடிந்தது ? 

6 ஒரு  முறை  நாயகி  பார்ட்டியில்  லேட்  ஆக  இனி  எப்படிப்போவது? என  நாயகனிடம்  கேட்க  நான்  டிராப்  பண்றேன்னு  நாயகன்  சொல்றார். அவருக்குதான்  இரவில்  கண்  தெரியாதே? எப்படி  டிராப்  செய்தார்? 

7  இன்ஸ்பெக்டரைக்கொலை  செய்ய  அவர்  வீட்டுக்கு  வரும்  ஆள்  கொலை  செய்து  விட்டு  ஆதாரங்கள் அடங்கிய  பேப்பர்சை  எரிக்கிறான். இத்தனை  வேலைகளையும்  வீட்டுக்கதவை  உள்  தாழ்ப்பாள்  போடாமல்  செய்கிறான். ஏன்? நாயகன்  உள்ளே  ஈசியாக  வரட்டும்  என்றா? 


8  காலை  9. 30 க்கு  நாயகன்  இன்ஸ்பெக்டர்  வீட்டுக்குப்போவதாக  காட்சி . அந்த  டைம்  இன்ஸ்பெக்டர்  போலீஸ்  ஸ்டேஷனில் தானே  இருக்கனும் ? 

9  தன்  அடியாளின்  சாவுக்கு  வீட்டுக்கு  வரும் வில்லன்  அங்கே  நாயகனைப்பார்த்ததும்  போடுங்கடா  அவனை  என  கத்தறார். உடனே  டெட்  பாடிக்கு கீழே இருந்து  ஏகப்பட்ட  ஆயுதங்களை  அடியாட்கள்  எடுக்கின்றனர் , சாவு  வீட்டில்  எதுக்கு  ஆயுதங்களை  அங்கே  வைத்திருக்கிறார்கள் ? 

10  ஆனைமலை அய்யா  ஃபிளாஸ்பேக் சீன்ல  அவரு  ஒரு  ஆளை  கத்தியால  2  தடவை  குத்தி  கத்தியை  வீசறார். ரத்தக்கறையே  இல்லை .,தண்ணில  கழுவி  வீசிட்டாரா? 


11  நாயகன்  க்ளைமாக்சில்  வில்லனுக்கு  சவால்  விட்டு  குறிப்பிட்ட  இடத்துக்கு  வரச்சொல்வாராம், அந்த  இடத்தில்  முன்  கூட்டியே  திட்டமிட்டு  விலங்குகளைப்பிடிக்க  பொறி  வைப்பது போல  செய்வாராம் , மாங்கா  மடையன்  வில்லன்  அதே  போல்  அங்கே  அடியாட்களுடன்  வந்து  மாட்டிக்கொள்வானாம்

12  ஏதோ  தப்பு  நடக்குது , தன்  அடியாட்கள்  எல்லாம்  வரிசையா  சாகறாங்க , ,முதல்ல  இந்த  இடத்தைக்காலி  செய்வோம்  என  நினைக்காமல்  வில்லன்  பேக்கு  மாதிரி  அங்கேயே  நிற்கிறான்

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  வன்முறை  காட்சிகள்  மட்டும்  உள்ளது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி  ல  போட்டாக்கூட  முழுசா  பார்க்க  முடியாது  என்ற  அளவில்  தான்  இருக்கிறது , டப்பா  படம்  ரேட்டிங் 1.5 / 5 

0 comments: