Monday, August 28, 2023

ஐங்கரன் (2022)- தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா) @ ஆஹா தமிழ் ஓடிடி

 


 2015  ஆம்  ஆண்டு  அதர்வா  நடிப்பில்  வெளியான  ஈட்டி  படத்தை இயக்கிய ரவி  அரசு  இயக்கிய  இரண்டாம்  படம்  இது /. 2015லேயே  துடிக்கும்  கரங்கள்  என்ற  திரைக்கதையை  பதிவு  செய்தவர் 2019ல் தான்  இப்படத்தை  எடுத்திருக்கிறார். சில  கார்ணங்களால்  3  வருடங்கள்  தாமதமாக  வந்தாலும்  விமர்சகர்கள்  இடையே  வரவேற்பைப்பெற்ற  படம்  


   ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் நகைக்கடையில்  வைரங்களைக்கொள்ளை  அடித்து   செல்லும்போது  எதிர்பாராத  விதமாக  மூடப்படாத  ஆழ்துளைகிணறில்  அந்த  வைர  மூட்டை  மாட்டிக்கொள்கிறது. அரசாங்க  உதவி  இல்லாமல்  அதை  மீட்க  முடியாது  என்பதால்  ஒரு  குழந்தையை  அந்த  ஆழ்துளைக்கிணற்றில்  போட்டு  விடுகிறான். அரசாங்கத்தால்  மீட்க  முடியாததை  நாயகன்  எப்படி  மீட்கிறான்  என்பதே  மீதி  திரைக்கதை


நாயகன்  ஆக ஜி வி  பிரகாஷ். இதுவரை  பி  சி  செண்ட்டர்  ரசிகர்களைக்குறி  வைத்து விடலைப்பையன், ரவுடி , பொறுக்கி  கேரக்டர்களில்  நடித்தவர்  ,முதல்  முறையாக குடும்பங்கள்  ர்சிக்கும்  இளம்  விஞ்ஞானி  ரோலில்  கண்ணியமாக  நடித்திருக்கிறார். பாரட்டுக்கள் , வாழ்த்துகள் . கெட்ட  வார்த்தை  பேசாமல் ,டபுள்  மீனிங்  வசனம்  பேசாமல்  இவர்  நடித்த  முதல்  படம்  இது 


 நாயகி  ஆக  மஹிமா  நம்பியார். 3  காட்சிகளில்  மட்டும்  வருகிறார். ரசிக்க  வைக்கும்  காதல் கலாட்டா  காட்சிகள்


நண்பனாக  காளி  வெங்கட் , அப்பாவாக ஆடுகளம்  நரேன்  கச்சிதமான  நடிப்பு . வில்லன்  ஆக  வரும் சித்தார்த்தா  சங்கர்  குட்  ஆக்டிங் . சின்ன  வில்லன்  ஆக  வரும்  ஹரீஷ் பெராடி  ரசிக்க  வைக்கிறார்\


ராஜா  மொகமத்  எடிட்டிங்கில் போர்  அடிக்காமல்  காட்சிகள்  நகர்கின்றன.சரவணன்  அபிமன்யூ  ஒளிப்பதிவு  நேர்த்தி . திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ரவி  அரசு. இளம்  விஞ்ஞானிகளின்  கண்டு  பிடிப்புக்கு  அரசு  உரிய  அங்கீகாரம்  தரவேண்டும் என்பதுதான்  கதைக்கரு. பாராட்டத்தக்க முயற்சி 


 இசை ஜிவிபி  தான்  பின்னணி  இசை  கவனிக்க  வைக்கிறது 



சபாஷ்  டைரக்டர் (ரவி  அரசு.)


1  இயக்குநர்  மெக்கானிக்கல்  எஞ்சினியர்  ஆக  இருக்க  வேண்டும், நாயகனின்  கண்டு பிடிப்புகளாக  அவர்  காட்டும் சைக்ளிங்கில்  கிரைண்டர்  , மிக்சி  3 இன் ஒன் ,  ஒரே  சமயத்தில்  லாரித்தண்ணீரை 20  குடங்களில்  பிடிக்கும்  ஐடியா ,  பேனாவில்  மைக்  என  சின்ன  சின்ன  ஐடியாக்கள்  அசத்தல் 

2 வில்லன்களில்  ஒருவன்  ஆறு விரல் கொண்டவன்  என்பதை  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  கண்டு பிடிக்கும்  காட்சி   


3  நாயகன்  காட்டிய  கருவியை  உடைத்த  வில்லன் இப்போ  போய்  காப்பாத்து  என்றதும்  நீங்க  உடைச்சது  டெமோ  காட்ற  கருவிதான், ஒரிஜினல்  நம்ம  கிட்டே  இன்னொண்ணு  இருக்கு  என  சொல்லும்  காட்சி 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  தான்  அடி திருக்கல்  அடி 

2 டக்கரு  பார்வை 

3  தித்திப்பா

4  உயிரினும்  உயர்ந்த 


  ரசித்த  வசனங்கள் 

1  வாழ்க்கைல  உருப்படியா  ஏதாவது  பண்ணு  அல்லது  உருப்பட  ஏதாவது  பண்ணு 

2  ஓடாத , விழுந்திடுவே  என  சொல்ல  ஆயிரம்  பேர்  இருக்காங்க , ஆனா  விழாமல்  ஓடுனு  சொல்லத்தான்  ஆளுங்களே  இல்லை 

3    டிக்கெட்  செக்கிங்  வந்திருக்கேன், டிக்கெட்டைக்காட்டுங்க 


 சார்  , அவன்  சாப்ட்டுட்டான்


 நான்  நாலே  நாலு  இட்லி  தான்  சாப்ட்டேன்


சார்  அவன்  என்  டிக்கெட்டை  சாப்டுட்டான்


இதை  எந்த  லூசாவது  நம்புவானா? சார், நீங்க  நம்பறீங்களா? 


4 நேர்மையா  வாழ்ந்து  என்னத்தை  சாதிச்சேன்?


 நேர்மையா  வாழ்வ்தே  ஒரு  சாதனை  தான் 


5  பல  நாள்  ஃபாலோ  பண்ணியும்  பக்கம்  வராத  ஃபிக்ரை பழம்  மாதிரி  முகத்தை  வெச்சுக்கிட்டு  பார்க்க  வெச்சுட்டியே?


6  பயந்தா  பாதி  பலம்  குறைஞ்சிடும்   

7 இது  மாதிரி  புது  முய்ற்சிகள்  ஆரம்பத்தில்  வீண்  முயற்சியாகப்பேசப்பட்டாலும்  வெற்றி  பெற்ற  பின்  விடா  முயற்சி  என  பாராட்டப்படும்


8   நம்ம  கண்ட்ரோல்ல  இருக்கும்  ஏரியாவில்  க்ரைமே  நடக்கக்கூடாது, அப்படி  நட்ந்தா  நம்ம  கண்ட்ரோல்ல  தான்  நடக்கனும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன்  தன்  அறிவியல்  கண்டுபிடிப்புகளை  ஒவ்வொரு  முறையும்  ஒரு  குறிப்பிட்ட  ஆளிடமே  டெமோ  காட்டுகிறார். அவரும்  ரிஜெக்ட்  செய்து  கொண்டே  இருக்கிறார்? ஏன்  வேறு  ஆளை  மாற்றக்கூடாது . லவ்  லெட்டர்  கொடுக்கும்போது  வாங்க  மறுத்தால்  அந்தப்பெண்ணின்  தோழிக்கோ , தங்கைக்கோ  கை  மாற்றும்  காலம்  இது . ஒரே  ஆளிடம்  ஏன்  தொங்க  வேண்டும் ? ஹையர்  ஆஃபீசரை  அப்ரோச்  பண்ணி இருக்கலாமே?


2  மெயின்  கதையின்  வீரியத்தை  ஆழ்துளைக்கிணறு  குழ்ந்தை  சம்பவம்  டைவர்ட்  பண்ணி  விடுகிறது . மேலும்  இது  அறம்  படத்தின்  மையக்கரு  என்பதால் பார்த்து  சலித்த  காட்சி  ஆகிறது 


3  குழந்தையைக்காப்பாற்றும்  முயற்சியில்  வைரக்கற்கள்  உள்ள  மூட்டை  மாட்டுவது  எப்படி ?

4  வில்லன்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  வில்லன்  கேங்கில்  மாட்டுவார்  என்பதை  யூகிக்க  மாட்டாரா? அவரா  வாண்ட்டடா போய்  மாட்டிக்கறார்


5  ஜீப்பில்  வ்ந்த  அனைத்து  போலீஸ்காரர்களையும் டப்னு  சுட்டு  காலி  பண்ணும்  வில்லன்  நாயகனின்  அப்பாவை  மட்டும்  அடித்தே  கொல்ல  முயற்சிப்பதும்  நாயகன்  காப்பாற்றுவதும்  நாடகத்தனம்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மெயின்  கதையை  நீட்டாக  எடுத்து  விட்டு  தேவையற்ற  கிளைக்கதையாக  கோழித்தீவன  ஊழல்  வில்லன்  கதையை  இழுத்தது  மைனஸ்  என்றாலும் பார்க்கலாம், ஆஹா  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது /. ரேட்டிங் 2.75 / 5 


Ayngaran
Theatrical release poster
Directed byRaviarasu
Written byRavi Arasu
Produced byB. Ganesh
StarringG. V. Prakash Kumar
Mahima Nambiar
CinematographySaravanan Abimanyu
Edited byRaja Mohammed
Music byG. V. Prakash Kumar
Production
company
Common Man Presents
Release date
  • 12 May 2022
CountryIndia
LanguageTamil

0 comments: