Wednesday, August 02, 2023

வல்லவன் ஒருவன் (1966) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஸ்பை ஆக்சன் த்ரில்லர் ) @ யூ ட்யூப்

 


தமிழில்  ரிலீஸ்  ஆன  ஸ்பை  ஆக்சன்  த்ரில்லர்களில்  இது ஒரு மெகா  ஹிட்  படம் , ஜெய்சங்கருக்கு  நட்சத்திர  அந்தஸ்தைத்தந்த  படம், ஆனந்த  விகடன் , குமுதம், கல்கி  வார  இதழ்களில்  விமர்சனங்களில்  பாராட்டித்தள்ளீய  படம் 


1964 ல் ரிலீஸ்  ஆன  ஃபிரெஞ்ச்  படமான   ஷேடோ  ஆஃப்  ஈவில்  படத்தின்  அஃபிஷியல்  ரீ மேக்  இது . கமர்ஷியல்  ஆக  செம  விறுவிறுப்பாக , ஜாலியாகப்போகும்  படம் இது

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாட்டில்  பல  இடங்களில்  வெடிகுண்டுகள்  வெடிக்கின்றன, ரயில்களில்  பாம்  வைக்கிறார்கள் . இதற்கெல்லாம்  அவர்களுக்கு  எங்கிருந்து  கந்தகம்  சப்ளை  ஆகிறது ? இவர்களாகவே  தயாரிக்கிரார்களா? எங்காவது  வாங்கிக்கொள்கிறார்களா?  ஆயுத  சப்ளை    எங்கே  நடக்கிறது ? இவற்ரை எல்லாம்  கண்டு  பிடிக்க  உளவுத்துறை  சிஐடி  ஆஃபீசரை  நியமிக்கிறது 


கந்தக  தொழிற்சாலையில்  இதைப்பற்றி  விசாரிக்கச்சென்ற  சி ஐடி  ஆஃபீசர்  மர்மமான  முரையில்  கொலை  செய்யப்படுகிறார். இந்தக்கொலை  பற்றி  துப்பு  துலக்கவும், ஆயுத  சப்ளை  பார்ட்டியை  பிடிக்கவும்  இன்னொரு  சி ஐ டி  ஆஃபீசர்  வருகிறார், அவர்தான்  நாயகன் 


நாயகன்  இந்தக்கேசை  துப்பு  துலக்குகிறார் . ஒரு  டாக்டரின்  தங்கையைக்காதலிக்கிறார். நாயகனின்  பர்சனல்  அசிஸ்டெண்ட்  இருவரும்  எதிராளீயின்  கையாள்கள் . இங்கே  நடப்பதை  அங்கே  பாஸ்  செய்கிறார்கள் . அதை  எல்லாம்  நாயகன்  எப்படிக்கண்டு பிடித்து  எதிரியை  வீழ்த்துகிறான்  என்பதே  மீதி  திரைக்கதை 


  நாயகன்  ஆக  ஜெய் சங்கர்  வழக்கமான  ஸ்டைல் ,  பிரமாதமான  டிரஸ்சிங், சுறு  சுறுப்பான  ஆக்சன்கள்  என  வலம்  வருகிறார்

நாயகி  ஆக  எல்  விஜயலட்சுமி  அருமையான  ஜோடிப்பொருத்தம் . பாடல் காட்சிகளில்  அவரது  முக  பாவங்கள்  அடடே!


  தேங்காய்  சீனிவாசன்  காமெடி  டிராக்  ரசிக்கும்படி  இருக்கிறது .  நாயகனின்  அண்ணனாக  மனோகர்  நல்ல  கம்பீரமான  நடிப்பு


வேதா வின்  இசையில்  ஐந்து  பாட;ல்கள், அவற்றில் மூன்று  மெகா  ஹிட்   பாலுவின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  இரண்டரை  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 

 ஏ எல்  நாராயணன்  திரைக்கதைக்கு   ஆர்  சுந்தரம்  உயிர்  கொடுத்து  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1     நாயகன்  எந்த  ஹோட்டலில்  ரூம்  போட்டாலும்  அந்த   ரூம்  நெம்பரை  உலகமெல்லாம்  பரப்பி  விட்டு  அந்த  ரூமுக்கு  அருகே  இருக்கும்  ரூமில்  தங்கி  கண்காணிப்பது  நல்ல ஐடியா 


2   எதிர்ப்படும்  பெண்களிடம்  எல்லாம்  வழிந்து  ஃபோட்டோ  எடுத்து  வலிய  நட்பு  ஏற்படுத்திக்கொள்ளும்  நாயகனின்  குணம்  ஜேம்ஸ்பாண்ட்  சாயல் 


3  டிடெக்டிவ்  கம்  ஸ்பை  ஆக்சன்  படம்  என்றாலும்  காமெடி , காதல்  என  ஜனரஞ்சகமான  மசாலா  படமாக  எடுத்த  விதம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  பளிங்குனால் ஒரு மாளிகை  பருவத்தால் மணி மண்டபம்உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா


2   இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது   இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது    நான் கேட்டதை தருவாய் இன்றாவது


3  தொட்டுத் தொட்டுப்பாடவா

தொடர்ந்து வந்து பாடவா
கட்டிக் கொண்டு பாடவா
கன்னம் பார்த்துப் பாடவா

அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மம்மா சுகமென்ன சொல்லு
ஹே வாம்மா தங்கத்தில் கட்டி வைத்த பந்து
மஞ்சத்தில் கட்டி வைத்த செண்டு
ஆடட்டும் வந்து அம்மம்மம்மா

5  முத்துப்பொண்ணு  வாம்மா  அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஜாலியான  , விறுவிறுப்பான  ஸ்பை  ஆக்சன்  த்ரில்லர் . இந்தக்காலத்திற்கும்  ஏற்ற  படம் , ரேட்டிங் 2.75  / 5 


Vallavan Oruvan
Theatrical release poster
Directed byR. Sundaram
Written byA. L. Narayanan
Produced byT. R. Sundaram
StarringJaishankar
L. Vijayalakshmi
CinematographyC. A. S. Mani
Edited byL. Balu
Music byVedha
Production
company
Release date
  • 11 November 1966
Running time
147 minutes[1]
CountryIndia
LanguageTamil

0 comments: