Tuesday, August 08, 2023

சத்ரு (2019) - தமிழ் -= சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ முரசு டி வி

 


பரியேறும்  பெருமாள்   ஹிட்  ஆனதும்  அதன்  நாயகன்   கதிர்  ஒரு  மாஸ்  மசாலா  கமர்ஷியல்  போலீஸ்  சப்ஜெக்ட்டில்  நடிக்கலாம்  என  முடிவு  செய்து  புது முக  இயக்குநர்  கை  வண்ணத்தில்  சத்ரு  வில்  நடித்திருக்கிறார். போலீஸ்  யூனிஃபார்மில்  அவர்  பிரமாதமாக  ஜொலிக்கவில்லை  என்றாலும்  போலீஸ்  கதைகளுக்கே  உரிய  பர  பரப்பு  இதில்  இருக்கிறது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  போலீஸ்  இன்ஸ்பெக்டர் . நீதி  நேர்மை , நியாயம்  என  ரூல்ஸ்  பேசும் இவர்  தனது  உயர்  அதிகாரிகளை  எல்லாம்  மதிப்பதே  இல்லை . அதனால்  அடிக்கடி  மெமோ  வாங்குபவர்


 ஐந்தாறு  பேர்  கொண்ட  கும்பல்  ஒன்று  சிறுவனைக்கடத்தி  மிரட்டி  பணம்  பறிக்கும்  வேலையில்  ஈடுபட   நாயகன்  அந்த  பணக்கார  சிறுவனை  மீட்கிறார். அந்த  மீட்புப்பணியில்  கடத்தல்  கும்பலில்  ஒருவனை  போட்டுத்தள்ளி  விடுகிறார். இதனால்  உயர்  அதிகாரியின்  கோபத்திற்கு  ஆளாகி  மூன்று  மாதங்கள்  சஸ்பெண்ட்  ஆகிறார்


 வில்லன்  கும்பலில்  மீதி  இருக்கும்  ஐந்து  பேரும் எல்லா  வேலையையும்  விட்டு  விட்டு  தங்கள்  கூட்டாளியைப்போட்டுத்தள்ளிய  பாட்டாளியின் குடும்பம், அவருக்குப்பெண்  கொடுத்தோர்  என  சொந்த  பந்தம்  எல்லாரையும்  போட்டுத்தள்ள  சபதம்  எடுக்கின்றனர் .


 இதைக்கேள்விப்பட்ட  ரிட்டையர்டு  மிலிட்ரி  வீரரான  நாயகனின்  அப்பா  அதே  24  மணி  நேரக்கெடுவிற்குள்  வில்லன்  கும்பலை  ஒழிக்க  நாயகனிடம்  சத்தியம்  வாங்குகிறார்


 போலீஸ்  பணியில்  சஸ்பெண்ட்  ஆன  நாயகன்  ஒரே  நாளில்  வில்லன்  கும்பலை  எப்படி  அழித்தார்? அதற்கு  அவர  சந்தித்த  இழப்புகள்  என்ன ? என்பதை  பின்  பாதி  திரைக்கதை  விளக்குகிறது 


 நாயகன்  ஆக  கதிர். போலீஸ்  யூனிஃபார்மில்  அவருக்கு  கம்பீரம்  பெரிதாக  வரவில்லை , ஆனாலும்  போலீஸ்  மிடுக்கை  வரவழைத்து  சமாளிக்கிறார்

  நாயகி  ஆக  சிருஷ்டி  டாங்கே  அதிக   வேலை  இல்லை, சும்மா  தலையை  காட்டுகிறார். மெயின்   வில்லனாக  லகுபரன்  கச்சிதம் , அவரது  அடியாட்கள்  எல்லாரும்  அவரை  அண்ணன்  என  மரியாதையுடன்  அழைக்கின்றனர். ஆனால்  மெயின்  வில்லனை  விட  அடியாட்கள்  சித்தப்பா , பெரியப்பா  வயசில்  இருக்கிறார்கள் 


117  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  கட்செய்து  இருக்கிறார்கள் 

மகேஷ்  முத்துசாமியின்  ஒளிப்பதிவில்  சேஷிங்  காட்சிகள்  உயிரோட்டமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளன 


 அம்ரீஷ்  கணேஷ் , சூர்ய  பிரசாத்  இசையில்  மூன்று  பாடல்கள்  ஓக்கே  ரகம்,  பிஜிமெ  இன்னும் விறுவிறுப்பாக  போட்டிருக்கலாம்


திரைக்கதை  , இயக்கம்  நவீன்  நஞ்சுண்டான்.. பரபர  விறு  விறு  திரைக்கதை  அமைக்க  வேண்டும்  என்ற  உத்வேகம்  தெரிகிறது , ஆனால்  பல  காட்சிகள்  பல்  ஹிட்  படங்களில்  ஏற்கனவே  பார்த்த  காட்சிகளே 


சபாஷ்  டைரக்டர்


1   போலீஸ்  ஆஃபீசருக்கு  போலீஸ்  ஹையர்  ஆஃபீசர்ஸ்  தான்  எதிரி  என  காட்டிய  விதம் 


2   நாயகன்  -  வில்லன்  கேங்  சேசிங்க்  தான்  முக்கால்வாசிப்படம்  என்பதால்  செம  ஸ்பீடு  ஸ்க்ரீன்ப்ளே 


3  மொக்கைக்காமெடி  டிராக் , லவ்  போர்சன் , டூயட்  இவற்றை  எல்லாம்  தைரியமாக   ஸ்கிப்  செய்தது  குட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  அச்சம்  நீக்கி \

2   காதலிக்க  இங்கு  நேரம்  இல்லை 

3  நேரம்  இந்த  நேரம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  கேங்கின்  நண்பரை  நாயகன்  போட்டுத்தள்ளி  விட்டதால்   டிட்  ஃபார்  டாட்  , அதாவது  பழிக்குப்பழி  வாங்க  வேண்டும்  எனில்  நாயகனின்  நண்பர்கள்  அல்லது  கொலீக்ஸைத்தானே  போட்டுத்தள்ள  வேண்டும் ? ஆனால்  வில்லன்  கேங்க்  நாயகனின்  ஃபேமிலி  மெம்பரசை  போடுவது  ஏன் |?


 2 நாயகன்  துன்பப்பட  அவரது   காதலி ./ மனைவி   அம்மா, அப்பா  என  நெருங்கிய  சொந்தங்களை  போட்டுத்தள்ள  முயற்சிப்பது  ஓக்கே , ஆனால்  சித்தப்பா , பெரியப்பா , மாமன்  மச்சான்   சகலை  என  குறி  பார்ப்பது காமேடி 


3   பணயத்தொகை  பணமாக  ஒரு  பேக்கில்  போலீஸ்  தந்தால்  வில்லன்  கேங்  அந்த  பேக்கை  பிரித்துப்பார்த்து  செக்  செய்யாதா?  ஜிபிஎஸ்  கருவி  இருக்கா?  இல்லையா?  என  பார்க்காதா? 


4   மூன்று  மாதங்கள்  சஸ்பெண்ட்  ஆன  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  கூட  எப்போதும்  3  போலீஸ்  இருப்பது  எப்ப்டி? அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   போலீஸ்  கதைகளுக்கே  உரிய  த்ரில்லிங்  உண்டு , போர்  அடிக்காமல்  இருக்கிறது , பார்க்கலாம்  ரேட்டிங் 2.25 / 5 


Sathru
Poster
Directed byNaveen Nanjundan
Written byNaveen Nanjundan
Screenplay byNaveen Nanjundan
Produced byRaghukumar
Raja Ratnam
Sritharan
StarringKathir
Srushti Dange
CinematographyMahesh Muthuswami
Edited byPrasanna GK
Music byAmresh Ganesh
Surya Prasadh R
Production
company
RT Infinity Deal
Release date
  • 8 March 2019
Running time
117 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: