Monday, August 14, 2023

ORGANIC MAMA HYBRID ALLUDU (2023) - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ அமேசான் பிரைம்


ஆர்கானிக்  மாமா,  ஹைப்ரிட்  அல்லுடு  என்ற  டைட்டிலுக்கு இயற்கை மாமா, செயற்கை  மருமகன்  என்று  அர்த்தம். இயற்கை  விவசாயி  ஆக  இருக்கும்  மாமனார்க்கு  சினி  ஃபீல்டைச்சேர்ந்த  செயற்கையான  மாப்பிள்ளை  எப்படி  அமைகிறான்  என்பதுதான்  படத்தின்  ஒன் லைன். பெற்றோரின்  சம்மதத்துடன் தான்  காதல்  திருமணங்கள்  நடை  பெற  வேண்டும், ஒருவனுக்கு  தோல்வி  என்பது  நிர்ந்தரம்  அல்ல, தொடர்ந்து  முயற்சித்தால்  அவன்  வெற்றி  பெறுவான்  என்னும்  கருத்துக்களைச்சொல்லும்  படம் .


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா, அப்பா  இருவரும்  மிடில்  கிளாஸ் . கை வினைப்பொருட்கள்  செய்து  விற்பதுதான்  அவர்கள்  தொழில். நாயகன்  ஒரு  சினிமா  டைரக்டர் . ஆல்ரெடி  இரண்டு  அட்டர்  ஃபிளாப்  கொடுத்தவர். மூன்றாவதாக  ஒரு  படம்  புக்  ஆகி  இருக்கிறது 


 நாயகி  பெரிய  கோடீஸ்வரரின்  மகள் . அப்பா  100 ஏக்கர்  நிலம்  கொண்ட  இயற்கை  விவசாயி ,மகள்  மேல்  அளவு  க்டந்த  பாசம்  வைத்திருப்பவர்


நாயகன் , நாயகி  இருவரும்  காதலிக்கிறார்கள் . ஒன்றுமே  இல்லாத  பொருட்களை   எல்லாம்  தன்  மார்க்கெட்டிங்க்  டெக்னிக்கால  விற்கும்  நாயகனின்  திறமையைப்பார்த்து  நாயகி  வியக்கிறாள் . இப்போதே  இப்படி  வாயால்  வடை  சுடுகிறானே? இவனைக்கட்டிக்கொண்டால்  சமையலில்  நமக்கு  மிக  உதவியாக  இருப்பான்  என  நாயகி  நினைக்கிறார்


 ஆனால்  நாயகியின்  அப்பா  திருமணத்துக்கு  சம்மதிக்கவில்லை . நாயகனும்  ஓடிப்போய்  கல்யாணம்  செய்ய  விரும்பவில்லை. இதற்குப்பின்  நாயகன், நாயகி  திருமணம்  எப்படி  நடந்தது, மூன்றாவது  படத்தை  நாயகன்  ஹிட்  ஆக்கினாரா? என்பது  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக ஷையத்  சோஹல்  சாதாரண  தோற்றத்துடன்  அடக்கி  வாசித்து  இருக்கும்  நடிப்பு. ஆரம்பக்கட்டக்காட்சிகளில்  தன்  வாய்  சாமார்த்தியத்தால்  எல்லாப்பொருட்களையும்  விற்கும்  காட்சியிலும்

 சரி , கதையே  க்டைசி  வரை  சொல்லாமல்  தயாரிப்பாளரை டபாய்ப்பதும்  சரி , லேண்ட்  புரோக்கராக  அந்த  மொட்டைத்தலையனை  ஏமாற்றும்போதும்  சரி  கலகலப்பான  நடிப்பு


நாயகி ஆக மிருணாளினி  ரவி. பிரமாதமான  அழகு  என்  சொல்ல  முடியாவிட்டாலும்  சராசரிக்கும்  கூடுதல் அ ழகு  என  சொல்லலாம்., ஸ்லிம்  பியூட்டி  என  பேர்  எடுக்கலாம் 


நாயகியின்  அம்மா, அப்பா  ஆக  நடிகை  மீனா , வெங்கட்  பிரசாத்  நடித்திருக்கின்றனர் . இருவரது  கெமிஸ்ட்ரியும்  ஜோடிப்பொருத்தமும்  அருமை . மூடு  அவுட்  ஆனால்  தனி  தியேட்டரில்  போய்  அமர்வது , அதன்  பின்  மீனா  போவது  அருமை . 


நாயகியின்  பின்னால் ரவுடிகள்  வருவது , நாயகன்  அவர்களை  அடித்துப்போடுவது  அரதப்பழசான  காட்சிகள் . அதே  போல நாயகனின்  நண்பனை  மோசம்  செய்து  பணம்  சம்பாதித்த  மொட்டையனை  நாயகன்  அதே  வழியில்  மோசடி  செய்து  சம்பாதிப்பதும்  ஹைதர்  அலி  காலத்து  டெக்னிக், அதுவும்  இல்லாமல்  மெயின்  கதைக்கும்  அந்த  சம்பவத்துக்கும்  சம்பந்தம்  இல்லை 


ஒளிப்பதிவு , இசை  எல்லாம்  சுமார் ரகம் . இரண்டரை  மணி  நேரம்  ஓடும்  அளவு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 


 சபாஷ்  டைரக்டர் ( எஸ்  வி  கிருஷ்ணா ரெட்டி ) 

1  அரத[ப்பழசான  கான்செப்டை  வைத்து  படம்  எடுத்த  துணிச்சல்

2  காமெடி  டிராக்கை  சாமார்த்தியம்  ஆக  பின்  பாதியில்  நுழைத்து  போர் அடிக்காமல்பார்த்துக்கொண்டது


  ரசித்த  வசனங்கள் 


1  கஷ்டம் தான்  சோறு  போடும், கனவு  சோறு  போடாது 

2 பாசம்  இருக்கற  இடத்துல  பயம்  இருக்காது

3  குழந்தைங்க  ஆசைப்பட்ட  உடனே  வாங்கிக்கொடுத்திடனும், ஆசை  போனதுக்கப்புறம்  அல்ல

4  சந்தோஷ்த்தோட  சேர்ந்து  பட்ட வலிகளையும்  ஞாபகம்  வெச்சுக்கனும்

5 எப்பவும்  நம்ம  தலைஎழுத்தை  நாமதான்  எழுதனும்

6  கோபம்  குறைய  ஆறுதல்  தேவை , வலி  குறைய  தனிமைதேவை

7  என்ன  செய்யக்கூடாதுனு  தெரிஞ்சுக்கிட்டா  என்ன  செய்யனும்னு  தெரிஞ்சிடும்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   தொடர்ந்து  இரண்டு  அட்டர்  ஃபிளாப்  கொடுத்த  இயக்குநருக்கு  தயாரிப்பாளர்  அமைவது  எப்படி? அவர்  கதையே  கேட்காமல்  புக்  செய்வது  எப்படி ?

2  காமெடி  டிராக்  எனறாலும்  நாயகன்  அந்த  லேண்ட்  புரோக்கர்களை  ஏமாற்றும்  இடம்  நம்பவே  முடியாத  காட்சி 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது  ஒரு  மொக்கை  காமெடிப்படம்  தான்.  ரொம்பப்பெரிய  எதிர்பார்ப்பில்லாமல்  ரசிக்கலாம் . ரேட்டிங் 2 / 5 


Organic Mama Hybrid Alludu
Film poster
Directed byS. V. Krishna Reddy
Written byS. V. Krishna Reddy
Produced byKoneru Kalpana
StarringSyed Sohel
Mrinalini Ravi
CinematographyC. Ramprasad
Edited byPrawin Pudi
Music bySongs:
S. V. Krishna Reddy
Score:
S. Chinna
Production
companies
Ammu Creations
Kalpana Chitra
Release date
  • 3 March 2023
CountryIndia

0 comments: