Tuesday, June 14, 2022

நெற்றிக்கண் (1981) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா) அமேசான் பிரைம்

 


ஹீரோ கோவையில்  இருக்கும்  பெரிய  தொழில்  அதிபர் , அவருக்கு  ஒரு  சம்சாரம்  ஒரு  மகன்  ஒரு  மகள் . வெல்  செட்டில்டு . ஆனா  அவர்  ஒரு சபலிஸ்ட்.  திருமண  வயதில்  இரு  வாரிசுகள்  இருந்தும்  இவர்  பெண்கள்  விஷயத்தில்  வீக்காக  இருக்கார்  அல்லது  ஸ்ட்ராங்காக  இருக்கார்.


இவர்  கம்பெனில  இண்ட்டர்வ்யூ   அட்டெண்ட்  பண்ண  வர்ற  ஒரு  பொண்ணு  கிட்டே  அவர்  கை  வைக்கப்பார்க்க  அவளும்  கை  வெச்சுடறா.. பளார். சமாளிச்சு  வந்துடறார்


 மகன்  அப்பாவைத்திருத்த  பல  வழிகளில்  அவருக்கு  கேட்  போடறான். இவன்  கெடுபிடி  தாங்க  முடியாம  அப்பா  ஃபாரீன்  போறார்.  அங்கே  கம்பெனில  அவருக்கு  பளார்  கொடுத்த  பொண்ணைப்பார்க்கறார். பாலியல்  வன்முறை  நடக்குது.


 ஃபாரீன்ல  இருந்து  இந்தியா  ரிட்டர்ன்  வந்தா  அவருக்கு சில  அதிர்ச்சிகள்  காத்திருக்கு . அவரோட  கம்பெனில  இப்போ  மேனேஜரா  இருக்கறது  அந்தப்பொண்ணுதான். அதை  விடப்பெரிய  அதிர்ச்சி  வீட்டுக்கு  வந்தா  அவரோட  மகனின்  மனைவியா  அவருக்கு  மருமகளா  இருப்பதும்  அந்தப்பெண்  தான்


இந்த  உறவுச்சிக்கல்ல  இருந்து  அவர்  எப்படி  விடுபடறார் ?தன் சபலிச குணத்தை  மாத்திக்கிட்டாரா?  இல்லையா?  என்பதே  கதை 


இதுக்கு  கதை  வசனம்  விசு  ,  திரைகக்தை   கே  பாலச்சந்தர் . இயக்கம்  எஸ்  பி  முத்துராமன்


ஹீரோவா  டூயல்  ரோலில்  ரஜினி .   மகனாக  அடக்க  ஒடுக்கமாக  வருபவர் ரெகுலர்  ரஜினி என்றால்  ஆர்ப்பாட்டமான  வில்லன்  நடிப்பில்   சக்ரவர்த்தியாக  கலக்குபவர்  ஓல்டு  கெட்டப்  ரஜினி .  அப்பா  கெட்டப்பில்  அவரது  நடை  உடை  பாவனை  பாடி  லேங்க்வேஜ்  எல்லாம்  அருமை   (  எந்திரன்  ல  ரோபோ  ரஜினிக்கான  பாடி  லேங்க்வேஜ் இந்த  கேரக்டரில்  இருந்துதான்  எடுத்திருக்கக்கூடும் ) 


 அம்மாவாக  லட்சுமி . அனுபவம்  வாய்ந்த  நடிப்பு . கணவரைத்திருத்த  அவர்  எந்த  முயற்சியும்  எடுக்கவில்லை  என்பதில்  நம்பகத்தன்மை  இல்லை 


பாலியல்  வன்முறைக்கு  ஆளாகும்  பெண்ணாக  சரிதா . கொடுத்த  கேரக்டருக்கு  உகந்த  நல்ல  நடிப்பு 


ரஜினியின்  சம்பந்தியாக   கவுண்டமணி . கலக்கல்  மணி .  எகத்தாளமான  அவர்  குரலில்  வந்து  விழும் கவுண்ட்டர்கள்  எல்லாம்,  அபாரம் 


ரஜினி படங்களில்  எப்போதும்  சரத்  பாபுக்கு  ஒரு  ரோல்  உண்டு , இதிலும்  டிட்டோ 


 மகன்  ரஜினியின்  காதலியாக  வரும்  மேனகா  வுக்கு  இன்னும்  அதிக  காட்சிகள்  கொடுத்திருக்கலாம்


 இசை  இளையராஜா.  மாப்பிள்ளைக்கு  மாமன்  வயசு  மாமனுக்கோ  காமன்  மனசு  செம  ஹிட்  பாட்டு  மட்டுமல்ல  அருமையான  சிச்சுவெஷன்  சாங்க்  கூட   சூப்பர்  ஹிட்  மெலோடியான  ராமனின்  மோகனம்  ஜானகி  மந்திரம்  பாட்டு  டூயட்டா  வருது  . இந்த  2  ஹிட்  சாங்க்ஸ்  போக  சுமாரான  பாட்டுக்கள்  இன்னும்   3  இருக்கு 


சபாஷ்  டைரக்டர் 


1 பொதுவாக  வில்லன்  கேரக்டர்  ஸ்கெட்ச்  ஆடியன்ஸ்  வெறுக்கும்படியாகத்தான்  உருவாக்கப்படும்   அமைக்கப்படும்  ஆனால்  இதில்  வில்லன்  ரோல்  செம  அப்ளாஸ்  வாங்கும் விதமாக  அமைத்ததும்  அதற்கு  உயிர்  கொடுக்கும்  ரஜினியின்  நெகடிவ்  நடிப்பும்  செம 


2  அப்பா  ரஜினி  ஒரு   கட்டத்தில்  அவரைப்போலவே  லேடி  சபலிஸ்ட்டான  சரத் பாபுவிடம் ஒரு  பெண்ணை  வைத்து  சாகசம்  செய்து  ஒரு  ஃபைலில்  சைன்  வாங்குவதும்  அதே  ஆள்  தன் மகளுக்கு  மாப்ளையாக  வர  இருப்பதைக்கண்டு  அதிர்ச்சி  ஆவதும் 


3   வசனகர்த்தா  பல  இடங்களில்  முத்திரை  பதிக்கிறார் . உயிரோட்டமான  வசனங்கள்   படத்தின்  பெரிய  பலம்


4  வில்லன்  ரஜினி  வரும்  சீன்களில்  எல்லாம்  வரும்  ஒரு  தீம் மியூசிக்  வயலின்  இசை  கலக்கல்  ரகம் . இன்றும்  பல ரஜினி  ரசிககர்கள்  அதை ரிங்க்  டோனாக  வெச்சிருக்காங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1   கம்பெனியின்  ஹெச்  ஆர்  ஓ  அல்லது அசிஸ்டெண்ட்  மேனேஜர்  மாதிரி  ஒரு  பதவிக்கு  லோக்கல்  ட்ரெய்னிங்கே  போதும்   அவர்   ஒண்ணும்  கம்ப்யூட்டர்  ஒர்க்  பார்க்கவில்லை  எதற்காக  ஃபாரீன்  ட்ரெய்னிங்க்கு  அவர்   ஹாங்காங்  போகனும் ?


2  எழைப்பெண்ணான  சரிதா  வேலைக்கு  சேர்ந்த  உடனே  பாஸ்போர்ட்  விசா  எடுத்தது  எப்படி ?  அதுக்கே  6  மாசம்  ஆகுமே 


3   மகன்  ரஜினி  அப்பா  ரஜினி  போல  கெட்டப்  மாற்றி  அம்மாவுடன்  காரில்  போகும்போது  சில  ரகசியங்களை    அம்மா  வாய்  மூலம்  பேச  வைக்கிறான். அது  ரிஸ்க்  ஆச்சே?  ஒரு  அம்மாவுக்கு  புருசன்  மகன்  வித்தியாசம்  தெரியாமயா  போகும்?  ஃபோன்  மூலம்  மிமிக்ரி  பண்ணி  பேசி  இருந்தா  ரிஸ்க்  கம்மிதானே ? 


4   சபலிஸ்ட்  கேரக்டர்   ஆன  தொழில்  அதிபர்  அவர்  கம்பெனில  90%  ஆண்களைத்தான்  வேலைக்கு  வைத்திருக்கார்  அது  ஏன் ?


5  என்னதான்  சபலிஸ்ட்  ஆக  இருந்தாலும்  ஒரு தொழில்  அதிபர்  தன்  வேலை  ஆட்களிடம்  தன்  வீக்னெசை  வெளிக்காட்டிக்க  மாட்டார் 


4   மகன்  ரஜினி  தன்  காதலியிடம் நடந்த  உண்மைகளை  ஈசியாக  சொல்லி  கன்வின்ஸ்  பண்ணலாமே?  ஏன்  செய்யவில்லை ?


 ரசித்த  வசனங்கள் 


1   ஒரு  பொண்ணோட  சுத்தம்  அவ  யூஸ்  பண்ற  பொருடகளில்  தெரியும் \\


2    ஆண்டவனைக்கூட  பகைச்சுக்கலாம், ஆனா  அரசியல்வாதியை    பகைச்சுக்கக்கூடாது \\\


3  பொண்ணுங்க  கையால  அடி  வாங்கறது  இண்ட்ரஸ்ட்டாதான்  இருக்கு 


4   உன்  அறிவுக்கு  ஒரு  டெஸ்ட்  வைக்கிறேன் . உன் முதலாளியே  தப்பு  செஞ்சா  என்ன  செய்வே? 


 சின்னத்தப்புன்னா  மன்னிப்பேன்  பெரிய  தப்புன்னா  கண்டிப்பேன் , தொடர்ந்து  அதே  தப்பை  செஞ்சா  தண்டிப்பேன் 


5  ஒவ்வொரு  மனுசனுக்கும் பலம் , பலவீனம்  ரெண்டுமே  இருக்கும்   நீ  பலத்தை  மட்டுமே  பாக்கறே  நான்  மனுசனோட  பலவீனத்தைப்பார்த்து  அதுல  அடிக்கறேன் 


6  வாழ்க்கையை  அனுபவிக்க பட்டம்  பதவி  பணம்  மட்டுமே  போதாது   ரசிப்புத்தன்மையும்  வெண்டும் 


7   எதையுமே   நாம  தப்புன்னு  நினைச்சாதான்  தப்பு 


8    நீ  வெறும்  கொசு  நான்  சிங்கம் 


  சிங்கத்தை  வலை  விரிச்சுப்பிடிச்சுடறோம், ஆனா  கொசுவுக்கு பயந்து  நாம  வலைக்குள்ளே  போய்  ஒளிஞ்சுக்கறோம்


9   கோயம்புத்தூர்ல  பாதி  சொத்து  அவருதுதான்  இவ்ளோ ஏன்  கோயம்  பூரா  அவருது   புத்தூர்  மட்டும்  வேறவங்களுது 


10  கண்ணகி  கூட  கோபத்துல  மதுரையைதான்    எரிச்சா  கோவலனை  இல்லை 


11 துறு துறு    மாப்பிள்:ளை  துரு ப்பிடிச்ச   மாமனார்  என்ன  ஒரு  காம்பினேஷன்


12   தப்புன்னு  ஒண்ணு  பண்ணி  இருந்தா  தானே  பிளாக்  மெயில்னு  ஒண்ணு  பண்ண  முடியும் ?


13   பீடி  குடி  லேடி  அதாண்டா  உன்  டாடி 


14   நீ  சொல்ற  உபதேசத்தைக்கேட்க  நான்  ஒண்ணும்  அந்த  ஈஸ்வரன்  இல்லைடா ,  கோடீஸ்வரன் 


15  நீ  யுவராஜான்னா  நான்  சக்கரவர்த்திடா 


 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரஜினி  ரசிகர்கள்  மட்டுமல்ல   அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்  கல கலப்பான  ஃபேமிலி  காமெடி  மெலோ டிராமா  இது

அமேசான்  பிரைம்ல  யூ  ட்யூப்ல  கிடைக்குது  அது  போக  ராஜ்  டிவி  லா  வாரா  வாரம்  போட்டுட்டே  இருக்கான்  பார்க்காதவங்க  பார்த்துடுங்க   ரேட்டிங்   2.75 / 5  

0 comments: