Sunday, June 12, 2022

THE PRIEST (2021) மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஹாரர் மிஸ்ட்ரி த்ரில்லர்) அமேசான் பிரைம்


  ஹீரோயின்  ஒரு  ஸ்கூல்  டீச்சர் . இவரோட  அக்கா  ஆல்ரெடி  ஒரு  சாலை  விபத்தில்  மரணம்  அடைந்தவர் . ஹீரோயின்  ஒர்க்  பண்ற  ஸ்கூல்ல  ஒரு 12  வயசுப்பொண்ணு.. கொஞ்சம்  வித்தியாசமான  கேரக்டர்.  யார்  கிட்டேயும்  அதிகம்  பேசாத  ரிசர்வ்  டைப் 


 ஃபாரீன்ல  இருக்கும்  ஒரு  கோடீஸ்வர  லேடி  அவங்க  குடும்பத்தில்  இருக்கும்  நபர்கள்  3  பேரு  அடுத்தடுத்து  தற்கொலை  பண்ணிக்கறாங்க ,சந்தேகத்துக்கு  இடமாக   அவங்க  மரணம்  இருக்கு ,.  ஃபாரீன்ல  இருந்து  அந்த  லேடி  இந்தியா  வர்றாங்க .  மேலே  ஒரு  ரிசர்வ்  டைப்  பேபி  பற்றி  சொன்னோமே  அந்த  பொண்ணு  அந்த  ஸ்கூல்  +  ஆசிரமத்துல  இருந்து  தப்பி  வந்துடுது   அந்த  கோடீஸ்வர   லேடி  கிட்டே  அடைக்கலம்  ஆகுது . அன்னைக்கு  நைட்டே   அந்த  கோடீஸ்வர  லேடி  மர்மமான  முறைல  இறக்கறாங்க. 


  அந்த  லேடியோட  மர்ம  மரணம்  பற்றி  துப்பு  துலக்க  வரும்   போலீஸ்  ஆஃபிசருடன்  படத்தோட  ஹீரோவான  ஃபாதரும்  வர்றார்.  அவர்  அந்த  லேடியோட  மரணம்  அந்த  லேடியோட  ஃபேமிலி  மெம்பர்ஸ்  தற்கொலை  மர்மம்  பற்றி  துப்பு  துலக்கறார்


 கோடீஸ்வர  லேடி  இறந்தப்போ  அருகிலேயே  இருந்த  அந்த  பேபி  மட்டும்  கொலைகாரன்  கிட்டே மாட்டாம   எஸ்கேப்  ஆகிடுது , அந்த  விஷயம்  ஹீரோவுக்கு  ஒரு  ஆச்சரியம்


யார்  கூடவும்  பேசாத  அந்த  பேபி  ஹீரோயினான  டீச்சர்ட்ட  மட்டும்  நல்லா  ஒட்டிக்குது  ஸ்கூல்  லீவ்  விட்டதும்  அந்த  பேபியை  டீச்சர்  தன்  வீட்டுக்குக்கூட்டிட்டுப்போறாங்க   அங்கே  சில  அமானுஷ்ய  விஷயங்கள்  நடக்குது  அந்த பேபியோட  உடம்புல  ஏதோ  ஆவி  புகுந்துக்கறதா  ஹீரோயின்  நினைக்கறாங்க .  ஹீரோ  வர்றார்  அனைத்து  மர்மங்களையும்  கண்டுபிடிக்கறார்


 ஹீரோவா  மெகா  ஸ்டார்  மம்முட்டி  படம்  முழுக்க  ஒரே  டிரஸ்  ஆனா  முக  பாவனைகள்  வேற  வேற . அவரைப்பொறுத்தவரை  இது  ஜூஜூபி  ரோல்  அசால்ட்டா  நடிச்ட்டார் 


  ஹீரோயினா   டீச்சரா  நிகிலா   விமல்  நல்ல  நடிப்பு  அழகிய  முகம்   .  பேபியாக வரும்   மோனிகா  வுக்கு  தான்  படம்  பூரா  பர்ஃபார்ம்  பண்ற  வாய்ப்பு .  பல  காட்சிகளில்  மிர்ட்டறார் .டீச்சரிடம்  அன்பு  காடும்போது  அம்பியாகவும்  திடீர்  என  அந்நியள்  ஆகி மிரட்டுவதும்  கலக்கல்  பர்ஃபார்மென்ஸ் 


 ஹீரோயினோட  அக்காவா  மஞ்சு  வாரியர் .  கெஸ்ட்  ரோல்  தான்  என்றாலும் கச்சிதமான  நடிப்பு 


சபாஷ்  டைரக்டர்  (  சாபின்  டி  சாக்கோ ) 


 1  முதல்  பாதி  நல்ல  கிரைம்  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  பார்த்த  திருப்தி  டைம் போனதே  தெரிய  செம  ஸ்பீடு  ஸ்க்ரீன்  ப்ளே 


2   பாட்ஷா   , அந்நியன்  பட  ஹீரோக்கள்  போல  மாறுபட்ட  நடிப்பு  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன்கள்  ஒரு  12  வயசு  பொண்ணை  நம்பி    உருவாக்குனதும்  அதை  படமாக்கிய  விதமும் 


3  ராகுல்  ராஜின்  பிஜிஎம்  பல  இடங்களில்  மிரட்டுது   அகில்  ராஜின்  ஒளிப்பதிவு  இது  போன்ற  ஹாரர்  த்ரில்லர்  மூவீஸ்க்கு  எப்படி  செட்  ஆகனுமோ  அப்படி  பக்காவா  உக்காந்திருக்கு 


4   2012  l  ரிலீஸ்  ஆன  ஹிந்திப்படமான  தலாஷ் (TALAASH)  படத்தில்  வரும்  ட்விஸ்ட்டை  சாமார்த்தியமாக  இதில்  சேர்த்தது .   திரைக்கதை  அமைத்ததில்  2017ல்  ரிலீஸ்  ஆன  த  இன் விசிபிள்  கெஸ்ட்  படத்தின்  திரைக்கதை  அமைப்பை  லைட்டா  டச்  செய்தது 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   நயன்  தாரா  நடிச்ச  இமைக்கா  நொடிகள்  உட்பட  பல  படங்களில்  சாலை  விபத்தில் மரண மடைய  இருக்கும்  நபரை  விபத்தை  ஏற்படுத்திய  நபர்  ஒரு  பயத்துல  அப்படியே  விட்டுட்டுபோவதும்  அந்த  மரணத்துக்குப்பழி  வாங்குவதும்  காட்டப்பட்டு  போர்  அடிச்சிடுச்சு  இந்த  ஃபார்முலாவை  மாத்துங்கப்பா 


2  ஹீரோயினுக்கும்  அந்த  பேபிக்கும்  சம்பந்தமே  இல்லை . ஆவி  அந்த  பேபி  உடலில்  போக  தேவையே  இல்லை .அப்டியே  போனாலும்  போனோமா  போன  வேலையை  முடிச்சமா  என  இல்லாமல்  சும்மா  டைம்  பாஸ்  பண்ணிட்டு  இருக்குது


3   பேயை  விரட்ட  இதுவரை  வேப்பிலை  அல்லது  சிலுவை  யைத்தான்  யூஸ் பண்ணுவாங்க , இதில் டெக்னிக்கலா  ஏதோ  ஒரு  மிஷினை  வெச்சு  ஆவியையும்  ஆவி  புகுந்த  உடலையும்  பிரிப்பது  தமாஷ் 


4  அக்கா  தங்கை  இருவர்  மட்டும் வசிக்கும்  வீட்டில்  இரவு  நேரத்தில்  பார்ட்டிக்குப்போக  வேண்டாம்  என  தடை  விதித்த அக்காவை  ஏமாற்றி  தங்கை  எப்படி  மிட்  நைட்ல  போறார்?னு  தெரியலை 


5   மஞ்சு  வாரியர்  நல்ல  அழகிய  முகம்  உள்ளவர்  ஆனா  அவரைக்காட்டும்போது  ஏன்  பேய்  மாதிரி  இருக்கார்னு  தெரியல . டைரக்டர்  அல்லது  ஃபோட்டோகிராஃபருடன்  என்ன  ஃபைட்டோ?| 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  பாதி  க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  பின்  பாதி  ஹாரர்  மிஸ்ட்ரி  த்ரில்லர்  எனவே  த்ரில்லர்  ரசிகர்கள்  கண்ணை  மூடிட்டு  சாரி  திறந்து  பார்க்கலாம்  ரேட்டிங்  2.75 / 5  அமேசான் பிரைம்  ல் கிடைக்குது 

0 comments: