Monday, June 20, 2022

FIR (2022) - சினிமா விமர்சனம் ( ஸ்பை ஆக்சன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 Spoiler alert கமல்  நடிச்ச  காக்கிச்சட்டை ,   வெற்றி  விழா ,விஜயகாந்த்  நடிச்ச  நரசிம்மா ,   மாதிரி  பல   ஸ்பை ஆக்சன்  த்ரில்லர்  படங்கள்  தமிழ்  சினிமா  உலகில்  கல்லா  கட்டின . லேட்டஸ்ட்டாக  வந்திருக்கும்  படம் தான்  இது 


ஐ எஸ் எஸ்  தீவிரவாதிகளில்  தமிழக  தலைவன்  அபுபக்கர்   தமிழகத்தில்  முக்கியமான  இடங்களில் குண்டு  வைத்து  சேதப்படுத்த  திட்டமிடுகிறான்.அதை  எப்படி  முறியடிக்கிறாங்க  என்பதுதான்  கதை 


ஹீரோ  ஒரு  வேலை  விஷயமாக  ஒரு  ஊருக்குப்போக  ஏர்ப்போர்ட்  வருகிறார் அந்த  இடத்தில்  அவரது  செல்  ஃபோன்  மிஸ்  ஆகிடுது  அது  பற்றி  புகார்  தர்றார். அப்போ  போலீசுடன்  ஏற்படும்  வாக்குவாதத்தில்  என்  பேக்கை  எதுக்குய்யா  செக்  பண்றீங்க ? அதுல டைம்பாமா  இருக்கு ? நான்  புகார்  தர  வந்தவன்  என்கிறார். அந்த  டைமில் நிஜமாவே  ஒரு  பாம்  அங்கே  வெடிக்கிறது


 சந்தேகத்தின்  பேரில்  ஹீரோ  கைதாகிறார் .  தான்  நிரப்ராதி  என்பதை  நிரூபித்தாரா? இல்லையா?  என்பது  பரபரப்பான  ஆக்சன்  த்ரில்லர்  கதை 


 ஹீரோவா  விஷ்ணு  விஷால்  இவரது  வெற்றி  மிக  நிதானமாக   அதே  சமயம்  தரமானதாக    அமைந்து  வருவது  மகிழ்ச்சி  .  நீர்ப்பறவை  ,  ஜீவா , ராட்சசன்  என மாறுபட்ட  கதை  அம்சங்களில்  நடித்து  வருவது  நல்ல  விஷயம் .  அம்மா  செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்  , காதலியுடனான  ரொமான்சில் , கேர்ள்  ஃபிரண்டுடனான  கலாய்ப்பில்  என    முக  பாவனைகளில்  சபாஷ்  வாங்குகிறார், ஆக்சன்  காட்சிகளில்  நல்ல  வேகம் 


 ஹீரோயினா  ரைசா  வில்சன் . அருமையான  வாய்ப்பு  நன்கு  யூஸ்  பண்ணி  இருக்கார் . முஸ்லீம்  பெண்  கெட்ப்பில்  போலீஸ்  தோரணை  மிடுக்கு  அருமை 


மஞ்சிமா  மோகனுக்கு  அதிக  வாய்ப்பில்லை  ஆனாலும்  அழகாக  இருக்கிறார்  , காதலியாக  வரும்   ரெபா  மோனிகா    குட் 


 கவுதம்  வாசுதேவ்  மேனன்  ஹையர்  ஆஃபிசராக  கலக்கலான  கம்பீர    நடிப்பு 

ஹீரோவின்  அம்மாவாக  வருபவர்  குணச்சித்திர  நடிப்பில்  மிளிர்கிறார்


 ஒளிப்பதிவு  , எடிட்டிங்  பின்னணி  இசை  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  ஓக்கே  என்றாலும்  ஆக்சன்  காட்சிகள்  ஸ்டண்ட்  இயக்குநர்  கூடுதல்  கவனம்  பெறுகிறார்


  சபாஷ்  டைரக்டர் 


1  இந்தியாவில்  முஸ்லீம்  என்றாலே  தீவிரவாதி  இமேஜ்  படிவது  ஏன்? என்ற கருத்தை  மிக  அழுத்தமாக  பதிவு  பண்ணி  இருக்கார் 


2  ஹீரோவுக்கு  மட்டும் முக்கியத்துவம்  தராமல்  பல  கேரக்டர்களுக்கும்  நல்ல  வாய்ப்பை  வழங்கி இருக்கார் 


3  படத்தில்  3  நாயகிகள்  இருந்தாலும்    யாரையும்  கிளாமருக்கு  பயன்படுத்தாமல்  மிக  கண்ணியமாக  படத்தில்  காட்சிப்படுத்திய  விதம்  அருமை 


4  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எதிர்பாராதது  என்றாலும்   ஹீரோ  அவரது  அம்மா அவரது  குடும்பத்துக்கு  மீடியா  மூலம்  கிடைத்த  கெட்ட  பேருக்கு  என்ன  சொல்யூஷன்  என்பதை  நாட்டுப்பற்று  தியாகம்  என  சமார்த்தியமாக  விளக்கிய  விதம் 


5   யூட்யூப்  விமர்சகரான  இட் ஈஸ்  பிரசாந்த்துக்கு  ஒரு   ரோல்  கொடுத்து  அதன்  மூலமாகவே  அவரை  மட்டம்  தட்டுவது  நல்ல  ஐடியா 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    வில்லனின்  அப்பாவை  ஹீரோ  தாக்கும்போது  வில்லன்  எந்த  வித  ரீ  ஆக்சனும்  காட்டாமல்  இருப்பது  பிறகு  வில்லனே  வில்லனின்  அப்பாவைக்கொல்வது 


2  முஸ்லீம்களுக்கு  ஆதரவாக  பல  வசனங்களை  வைத்த  இயக்குநர்  மெயின்  வில்லனை  முஸ்லீமாக  சித்தரித்தது    முரண்பாடு 


3 ஹீரோவின்  அம்மாவுக்கு  ஜி  ஹெச்சில்  தான்  சிகிச்சை  என  வசனமாக  வருது ஆனா  ஹாஸ்பிடலைக்காட்டும்போது  வசதியான  பிரைவேட்  ஹாஸ்பிடலாதான்  காட்றாங்க 


ரசித்த  வசனங்கள் 


1   வாழ்க்கைல  வெவ்வேற  பாதைல  பயணிக்க  முடிவெடுத்த  இருவர்  இணைந்து  பயணிக்க  முடியாது 


2  நல்ல  விஷயங்களை  நினைத்துப்பார்ப்பதும்  நல்ல  விஷயமே 


3   முகத்தைப்பார்த்து  மதத்தையும்  மதத்தைப்பார்த்து  அவங்க  குனத்தையும் இந்த சமூகம் கண்டுபிடிக்க  முயலுதே  அது  எப்படி ?


4    எந்த ஒரு  அம்மாவும்  தன்  மகன்  ஒரு  தீவிரவாதினு  ஒத்துக்க  மாட்டா 


5  இந்த  மொத்த  உலகமுமே  உன்னை  நம்பாம  உனக்கு  எதிரா  இருந்தாலும் நான்  உன்னை  நம்பறேன் 


6   பலசாலியா  இருக்கறதை  விட  புத்திசாலியா  இருக்கறதுதான்  நல்லது  அவன்  தான்  ஜெயிப்பான் 


 சிபிஎஸ்  ஃபைனல் கமெண்ட் -    ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்களூக்கும்  பிடிக்கும்  அம்மா  மகன்  செண்ட்டிமெண்ட்  காட்சிகளைக்கண்டு  கன் கலங்கும் பெண்களுக்கும்  பிடிக்கும்  ரேட்டிங்  2.5  / 5  அமேசான்  பிரைம்ல கிடைக்குது 
0 comments: