Monday, June 13, 2022

oh manapenne (ஓ மணப்பெண்ணே) 2021 - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் டிராமா ) டிஸ்னி ஹாட் ஸ்டார்

 திரைக்கதை  மன்னன்  கே  பாக்யராஜின்  சிஷ்யர்  ஆர்  பாண்டியராஜன் இயக்கிய  கன்னிராசிக்குப்பின்   1985 ல்  ஆண்பாவம்  எனும்  அதிரி  புதிரி  ஹிட்  படம்  கொடுத்தார் . பெண்  பார்க்கப்போகும்   இடத்தில்  ஆள்  மாறாட்டம்  தான்  கதையின்  ஒன் லைன். அந்த  கதைக்கருவை  மைய  இழையாக  வைத்து  சுவராஸ்யமான  திரைக்கதையாக  புதுப்புது  அம்சங்கள்  சேர்த்து   2016 ல்  தெலுங்கில் பெல்லி சூப்புலு மெகாஹிட்   படம்  வந்தது . அது  பின்னர்  ஹிந்தியில் மலையாளத்தில்  ரீமேக்  ஆனது  அந்தக்கதையை  அப்படியே தமிழில்  மாற்றி   ஓ மணப்பெண்ணே  ஆக்கி  இருக்காங்க டிஸ்னி  ஹாட்  ஸ்டார்ல  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  எப்படி  இருக்குனு  பார்ப்போம்

ஹீரோ   தமிழ்  சினிமா  இலக்கணப்படி  வேலை  வெட்டி  இல்லாத  ஆள் . அவனுக்கு  ஒரு  கல்யாணம்  பண்ணி  வெச்சாலாவது  உருப்படுவானானு  பார்க்க  அப்பா ஐடியா  பண்றாரு. ஒரு  வீட்டுக்கு பெண்  பார்க்கப்போறப்ப ஆள்  மாறிடுது . அட்ரஸ்  மாறி  பக்கத்து  தெரு  பெண்ணை  பார்க்கறாங்க.ஹீரோவும்  ஹீரோயினும்  பேசிக்கறாங்க 


இருவரும்  தங்களது  முன்  தின  காதல்  பற்றி  பகிர்ந்துக்கறாங்க . அதுக்குப்பின் தான்  இடம்  மாறி  பெண்  பார்க்க  வந்தது  தெரிய  வருது 


இப்போ  ஹீரோவுக்கு  வேற  பெண்ணும்  ஹீரோயினுக்கு  வேற  மாப்ளையும்\

பார்க்கறாங்க . பார்த்தவங்களையே  கட்டிக்கிட்டாங்களா?  இல்லை

ஜோடி  மாறுதா?  என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


 ஹீரோவா ஹரீஷ்  கல்யாண். இவரோட  கேரக்டர்  ஸ்கெட்ச்  தெளிவில்லை 

சமையல்  கலை  நிபுணராக  வருவதே  லட்சியம்  என்கிறார்  ஆனா  அதுக்கான

அருமையான  வாய்ப்பு  வரும்போது  தண்ணி  அடிச்ட்டு  மட்டை  ஆகிறார்.

ஆனாலும்  அவர்  நடிப்பில்  பாஸ்  மார்க்  வாங்குகிறார்


 ஹீரோயினா பிரியா  பவானி சங்கர்  அற்புதமான  நடிப்பு , சும்மா 

 கண்களாலேயேகாதலை  வெளிப்படுத்துகிறார். கண்ணீர்  விடாமலேயே  சோகத்தை படம்\

பிடிக்கிறார். தமிழ்  சினிமாவில்  நல்ல  எதிர்காலம்  உண்டு 


ஹீரோயினின் முதல்  காதலனாக  அஸ்வின் ( குக்  வித்  கோமாளி ) சுமார்

நடிப்பு . இவரோட  கேரக்டர்  ஸ்கெட்சும்  குழப்படிதான். எந்த  விதமான  பிரதி

பலனும்  எதிர்பாராத  லவ்  வைத்திருப்பவர்  ஒரு  பெரிய  இடம்  கிடைத்ததும்\


காதலியை  சொல்லாமல்  கொள்ளாமல்  பிரேக்  அப்  செய்வது  எப்படினு  

தெரியல 


பொதுவா  பொண்ணுங்க  தான்  வசதியான  மாப்ளைனா  மனசை 

 மாத்திக்குவாங்க . ஆண்கள்  காதலியை  கை  விட்டுட்டு  வசதியான  பெண்ணை

கல்யாணம்  செய்ய  முன்  வருவது  மிக  மிக  சொற்பமே 


பாடல்கள்  ஓக்கே ரகம்  பின்னணி  இசை  கச்சிதம். விஷால்  சந்திர சேகர் 

 தான்  இசை


சபாஷ்  டைரகடர்  (  கார்த்திக்  சுந்தர் )


1   ஹீரோயினின்  ஃபிளாஸ்பேக்  காதல்  சம்பவங்களில்  ஹீரோவும் 

ஒரு பாத்திரமாக  வருவதும்  இருவரும்  அதில்  ஆல்ரெடி  மிங்கிள்  ஆவதும்

அருமை .  12 பி  படத்தின்  கான்செப்ட்


2   உன்னால்  முடியும்  தம்பி ( என்ன சமையலோ), கோபாலா  கோபாலா  

படங்களுக்குப்பின்  ஹீரோ  ஒரு சமையல் கலை  நிபுணராக   வருவது

தமிழ்  சினிமாவில்  அதிகம்  பரிச்சயம்  இல்லாத  ஃபிரெஷ்  கேரக்டர் 


3  ஹீரோ  ஹீரோயின்  இருவருக்குமான லவ்  கெமிஸ்ட்ரி  செமயாக

 ஒர்க்  ஆவுட்  ஆகி  இருப்பது . லவ்  சப்ஜெக்ட்க்கு  இது  ரொம்ப முக்கியம் 


4   காதலுக்கு  மரியாதை  க்ளைமாக்ஸை  நினைவுபடுத்தினாலும்

டச்சிங்கான  உயிரோட்டமான  உச்சக்கட்டக்காட்சி 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைகக்தையில்  சில  நெருடல்கள்


1   பொதுவா  பொண்ணு  பார்க்கப்போகும்  முன்  பொண்ணோட ஃபோட்டோ

பார்ப்போம், ஜாதகப்பொருத்தம்  பார்ப்போம்  கடைசியா  தான்  பொண்ணு  

பார்க்கப்போவோம்  அப்படி  இருக்கும்போது  பெர்ண்ணை  அடையாளம்

தெரியாமல்  இருப்பது  எப்படி ? 


2  ஹீரோயினின்  முதல்  காதலன்  மிடில்  கிளாஸ், ஹீரோயின்  வசதி .

கிட்டத்தட்ட  10  லட்சம்  ரூபா  ஃபுட்  டிரக்கை  கிஃப்ட்  பண்ன  ரெடி  ஆகறா 

அந்த  வாய்ப்பைக்காதலன்  உதறுவது  நம்ப  முடியல 


3  ஹீரோவுக்கு  பார்க்கப்படும் பெண்  கோடீஸ்வர  பெண். பெண்ணோட  அப்பா 

மாப்ளைக்கு  வியாபார  திறமை  எப்படி  இருக்குனு  பார்க்கனும்  என  கேட்பதும்

நம்பற  மாதிரி  இல்லை 


4  கதைல  வர்ற  ஹீரோ , ஹீரோயின் , வில்லன்  வில்லி  எல்லாருக்கும்

ஏற்கனவே  லவ்  இருக்குனு  காட்டுவது  டிராமா  மாதிரி  இருக்கு 

அட்லீஸ்ட்  ஒரு  ஆளாவது   ஃபிரஷ்  என  காட்டி இருக்கலாம்    


ரசித்த  வசனங்கள் 


1   அப்பாகிட்டே  மனம்  விட்டுப்பேசுவது  பெண்களுக்கு ஈசி  ஆனா  

ஆண்களுக்கு  கஷ்டம் 


2   இந்த  அப்பாக்களோட  பிரச்சனையே  எதுலயும்  திருப்திப்படாமல்  இருப்பதே 


3  ஏண்டா  , முகத்தைப்பார்த்து  லவ்வைச்சொல்றீங்க  அந்த  தைரியம்

துணிச்சல்  எல்லாம்,  ஏன்  பிரேக்கப்  பண்றப்ப  இல்லை?|


4  என்  கோபம்  நீ  திடீர்னு  பிரேக்கப்  பண்ணிட்டுப்போனே  என்பதால் இல்லை 

பிரேக்கப்பை  பிராப்பரா   முறையா  சொல்லாம  போனதுதான் பிடிக்கலை 


5  இதுதான்  உங்களுக்கு  ஃபர்ஸ்ட்  டைமா?


  இல்ல  இல்ல  இப்படி  புறா , காக்கா  கக்கா  போறதெல்லாம் பழகிடுச்சு 


ஹய்யோ, பெண்  பார்க்க  வரும்  அனுபவம்  புதுசா?ன்னேன் 


6   என்ன  வேலை  பார்க்கறீங்க ?

 ச்சே  ச்சே  அந்த  மாதிரி  ஆள்  நான்  இல்லை , சும்மாதான்  இருக்கேன் 


7   அவளுக்கு  சுந்தர்  பிச்சை  மாதிரி  ஆள்  வேணும், ஆனா  இவன்  வெறும் 

பிச்சை  மாதிரி  தான்  இருந்தான் 


அதான்  விட்டுட்டுப்போய்ட்டா 


8   ஃபுட்  இண்டஸ்ட்ரில  தான்  200%  பிராஃபிட்


ஆனா காம்ப்பெட்டிஷன்?


9    பசு மாட்டை  கல்லால  அடிச்சா  அவனுக்கு  எதிர்  காலத்துல  ஆண் குழந்தை

பிறக்காதாமே? 


10   நாம  செய்யற  சமையலை  ஒருத்தர்  ரசிச்சு  ருசிச்சு  சாப்பிடறதைப்

பார்க்கறப்ப   இளையராஜா   இசையை கேட்டது  மாதிரி  ஒரு  ஃபீல்  வரும் 


11  வயித்துக்கு  வாசனை  மட்டும் போதுமா? 

12  முதலாளி  காதலி  என்ன  வித்தியாசம் ?


 அவரு  நம்ம  தலைல  தட்டிட்டு  காசு  குடுப்பாரு, காதலி  நம்ம  கிட்டேயே

காசு  வாங்கிட்டு  நம்ம  தலைலயே கை வைப்பா 


13  காதல்ல  விழுந்தவங்களுக்குப்பசிக்காதுனு  சொல்வாங்க  ஆனா 

எனக்குப்பசிக்குது 


14  ஏன்  சிரிக்கறே? 


காமெடியா  இருந்துச்சு \\

 அந்தக்காமெடியே  உன்னை வெச்சுதான் 


15  வாழ்க்கைல  ஜெயிச்சவங்க  பூரா பங்க்சுவாலிட்டியோட இருந்தவங்கதான்


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஹீரோ - ஹீரோயினுக்கு  காதல்   காட்சிகளே

  இல்லாத  காதல்  படங்கள்  தமிழ்  சினிமா  வரலாறில்  ரெண்டே  படங்கள்  

1  சூர்யா  நடிச்ச  காதலே  நிம்மதி   2  ஓ மணப்பெண்னே.  லவ்வர்ஸ்

பார்க்கலாம், நல்லாருக்கு  ரேட்டிங்  2.75 / 5 ,டிஸ்னி  ஹாட்  ஸ்டார்


0 comments: