Thursday, June 02, 2022

போத்தனூர் தபால் நிலையம் (2022) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் ) @ ஆஹா ஓடி டி


ரெண்டு  மணி  நேர  மெலோ  டிராமா  த்ரில்லர்  டைப்  படத்துல  கடைசி  20 நிமிசம்  மட்டும் பரபரப்பான  க்ரைம்  த்ரில்லர்  திரைக்கதையா  இருந்தா  நீங்க  ரசிப்பீங்களா?  அப்போ  நிச்சயம்  இதை  நீங்க  பார்க்கலாம் 

 இந்தக்கதை  இயக்குநரின்  அப்பா வின்  வாழ்வில்  நிகழ்ந்த  உண்மை  சம்பவமாம்,  கதை  நடக்கும்  கால  கட்டம் 1990  , கதைக்களம் போத்தனூர் 

Spoiler  alert 


சம்பவம் 1 - போஸ்ட்  ஆஃபீஸ்ல  கேஷியரா  ஒர்க்  பண்றவர்  வாங்கற  லாட்டரி டிக்கெட்ல  2  லட்சம்  ரூபா  பரிசு  விழ அதுல  பாதிப்பணத்துக்கு  அதாவது  ஒரு  லட்சம்  ரூபாக்கு  லாட்டரி  டிக்கெட்டாவே  வாங்கிடறார்( இந்த  மாதிரி  பைத்தியங்கள்  நிறைய  உண்டு , எல்லாம்  பேராசை  தான்)  ஆனா  திடீர்னு  அந்த  லாட்டரி  நெம்பர்  மாறிடுச்சு , கொடுத்த  பரிசுப்பணத்தைத்திருப்பிக்குடுனு  கேட்கறாங்க . அடியாள்  வெச்சு  மிரட்றாங்க . ஒரு  லட்சம்  ரூபாயை  புரட்டியே  ஆகனும்கற நெருகக்டில  கேஷியர் 

 சம்பவம்  2 . அதே  போஸ்ட்  ஆஃபீஸ்ல க்ளர்க்கா  ஒர்க்  பண்றவர்  கள்ள  நோட்டுக்கும்பல்  கிட்டே  மாட்டிக்கறார். அதாவ்து  நீங்க 10,000  ரூபா  ஒரிஜினல்  நோட்டுக்குடுத்தா  அவங்க  20,0000  ரூபாக்கு  கள்ள  நோட்டுக்குடுப்பாங்க  அதை  நீங்க  புழக்கத்தில்  விட்டுட்டா  உங்களுக்கு  10,000  ரூபா  லாபம், போலீஸ்ல  மாட்டுனா  கம்பி  எண்ணனும். சின்ன  சின்னதா  ரோலிங்  பண்றவர்  ஒரு  கட்டத்துல  போஸ்ட்  ஆஃபிஸ்ல  லாக்கர்ல  இருக்கற  பணத்தை  ரோலிங்  பண்ண  பிளான்  போடறார் 

சம்பவம் 3    போஸ்ட்  ஆஃபீஸ்ல  போஸ்ட்  மாஸ்டரா  ஒர்க்  பண்றவர்  தான்   ஹீரோவோட  அப்பா , ஒரு  வெள்ளிக்கிழமை  டெபாசிட்டா  6  லட்சம்  ரூபா   வருது ,  அன்னைக்கு  பேங்க்ல  கட்ட  முடியல. இனி  திங்கட்கிழமை தான்  கட்டமுடியும், ஆஃபீஸ்லயே  இருந்தா  பாதுகாப்பு  இல்லை , வீட்ல  கொண்டு  போய்  வெச்சிருந்து   கொண்டு  வரலாம்னு  எடுத்துட்டுப்போறப்ப  வழில  பணம்  மிஸ்  ஆகிடுது . இவரு  திங்கட்கிழமைக்குள்ளே  இழந்த  பணத்தை  ரெடி  பண்ணிக்க்ட்டனும்  அல்லது  களவு  போன  பணத்தைக்கண்டு  பிடிக்கனும்

 மேலே  சொன்ன   3  சம்பவங்களும்  எப்படி   ஒரு  புள்ளில  இணையுது ? ஹீரோ  எப்படி  அதைக்கண்டு  பிடிக்கிறார்  என்பதே  திரைக்கதை 

 அது  போக  2  வது  பாகம்  வருவதற்கான  லீடும் , ஒரு  ட்விஸ்ட்டும்  உண்டு , கடைசி  20  நிமிசம்  தான்  படத்தின்  முதுகெலும்பு 

 
 டி  ராஜேந்தர் , கே பாக்யராஜ் , கடல் புறா  பாபுகணேஷ்  வரிசையில்  ஏகப்பட்ட  பொறுப்புகளை  ஏற்று  ஹீரோவாகவும்  நடிச்சிருக்கார்  புது முக  இயக்குநர் பிரவீன். இவர்  முக  சாயலில்  மூடர்  கூடம்  இயக்குநர்  நவீன்  போல  இருக்கார் 

ஹீரோ  வுக்கு  முக  பாவனைகள்  , உடல்  மொழி  கை  கூடி  வந்த  அளவு  வசன  உச்சரிப்பு  சரியா  செட்  ஆகலை , ஆனா  எதிர்காலத்தில்  ஆக்சன்  ஹீரோ  ஆகும்  வாய்ப்பு  அதிகம், இதன்  2  ம்  பாகத்துலயே  அது  தெரியும், முதல்  பாகத்தை  விட  2ம்  பாகம்  விறு  விறுப்பா  இருக்கவும்  வாய்ப்புண்டு 

ஹீரோயினா  அஞ்சலி  ராவ்.  கிராமத்துப்பெண்  லுக்கில்  வரும் இவர் ஒரு  சீனில் ரன்  பட  மாதவன் ஷ்ட்டர்  ஃபைட்  மாதிரி  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன்  ஒண்ணு  வரும், நல்லா  பண்ணி  இருக்கார்  அந்த  சீன் ல  இன்னும்  டெம்ப்போ  ஏத்தி  பில்டப்  கொடுத்திருக்கலாம், தியேட்டர்  ரிலீஸா  இருந்தா  ஆரவாரமான  கை  தட்டல்  கிடைச்சிருக்கும் 

ஹீரோவின்  நண்பனா  வெங்கட்  சுந்தர்  , இவருக்கு  ஒரு  காமெடி  டிராக்  சேர்த்து  இருக்கலாம்,  நல்ல ஸ்கோப்  இருந்தும்  தவிர்த்தது  ஏனோ ?

ஹீரோவின்  அப்பாவாக  வரும்  ஜெகன்  க்ரிஷ்  நல்ல  தேர்வு  , குணச்சித்திர  நடிப்பு .  ஹீரோவின்  நண்பனுக்கு  ஒரு  ஜோடி  உண்டு  அவரும் ஓக்கே   ரகம் 

 பீரியட்  ஃபிலிம்  என்பதால்  ஆர்ட்  டைரக்சன்  , ஒளிப்பதிவு  இரண்டுக்கும்  ஏகப்பட்ட  ஒர்க்  லோடு  நல்லாவே  பண்ணி  இருக்காங்க . இசை  ஓக்கே  ரகம்


சபாஷ்  டைரக்டர் 

1   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும்  கடைசி  20  நிமிட  பரபர  காட்சிகளும்,  2ம்  பாகத்துக்கான  லீடும்  அருமை 

2   ஹீரோயின்   மாஸ்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  ஃபைட்  சீன் 

3  ஒரு  சோகமான  சூழ்நிலையில் கூட  ஹீரோவின்  நண்பன்  அந்த  கேஷியர்  பொண்ணுக்கு  லவ்  லுக்  விடும்  சீனும்  அங்கே  கிடைக்கும்  க்ரீன்  சிக்னலும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 

  1  கை  வசம்  ஆஃபீஸ்  கேஷ்  7  லட்சம்  ரூபா  இருக்கு  அதை  பத்திரமா  கொண்டு  போய்  சேர்க்கவேண்டிய  வேளையில்  சாவகாசமா  டீ  குடிச்ட்டு  பணத்தை  கோட்டை  விடும்  முக்கியமான  காட்சியை  நம்பகத்தன்மையுடன்  எடுக்கலை 


2   பேங்க்  மேனேஜர்  கட்டை  விரல்  சூப்பும்  பழக்கம்  உள்ளவர்  என்பதை  ரொம்ப  முக்கியமான  அட்டகாசமான  காமெடியா  இயக்குநர்  நம்பி  இருக்கார்  அது  பிலோ  ஆவரேஜ்  காமெடி 

3  ஹீரோ  லோனுக்கு  அலைவது  கம்ப்யூட்டர்  பிராஜெக்ட்,  பேங்க்  மேனேஜர்  காமெடி  இதெல்லாம்  இந்த  திரைக்கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை ,  அந்த  ஹீரோ  பேக்  கிரவு8ண்ட்  போர்சனை  மொத்தமா  தூக்கிக்க்டாசி  இருந்தாலும்  கதையில்  எந்த  பாதிப்பும்  நிகழாது 


ரசித்த  வசனங்கள்

1     நான்  உன்னை  லவ்  பண்றப்பவே  என்  வீட்ல  சொன்னாங்க . உன்னை  விட  உயரமான  பொண்ணைக்கட்டாதே  உன்னை  மதிக்க  மாட்டா,,

2  ஃபேமிலில    தோத்துட்டு   ஃபேமிலியை  தொலைச்சுட்டு  பிஸ்னெஸ்ல  ஜெயிச்சு  என்ன  யூஸ் ? ரெண்டையும்  பேலன்ஸ்  பண்ணி போகனும்


3   வாழ்க்கைல  பெருசா  சாதிச்சவங்க ஏதோ  ஒரு  கட்டத்துல   துணிச்சலான  முடிவு  எடுத்தவங்களா  இருப்பாங்க 

4    அவன்  விட்டாலும்  இவ  விட  மாட்டா  போல  இருக்கே ?   டேய்  வெளியாளுங்க  வந்தா  கொஞ்சமாவது  கூச்சப்படுங்கடா.. 

5  நாம  சாகும்போது  நாம  நினைச்ச  இலக்கை  அடைஞ்சமோ  இல்லையோ  அந்த  முயற்சிலயாவது  இருக்கனும் .முயற்சியே  இல்லாம  தோத்துட்டு  சாகக்கூடாது 

6  ஒரு  சேஃப்டிக்கு  கராத்தே  சொல்லிக்குடுத்தேன்  அவளுக்கு , இது  இப்போ  யூஸ்  ஆகுது

 ஏண்டா , எங்களுக்கு  எல்லாம்  சேஃப்டி  தேவை  இல்லையா?  


7   மாட்டிக்கொண்ட  எல்லா  திருடர்களும்  மாட்டிக்காம  ஏதோ  ஒரு  தப்பு  செஞ்சவங்களாத்தான்  இருப்பாங்க  


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  த்ரில்லர்  விரும்பிகள் , மெலோ  டிராமா  ரசிகர்கள்  பார்க்கலாம்,   டீசண்ட்டான  படம்  தான்  ஆஹா  ஓடிடி  ல  ரிலீஸ்  ஆகி  இக்ருக்கு  ரேட்டிங்  2.75  / 5  ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க்  42 (  ஆனா  நிஜத்தில்  40  தான்  குடுத்தாங்க )

0 comments: