Thursday, June 23, 2022

vaashi 2022 ( மலையாளம்) -சினிமா விமர்சனம் ( கோர்ட் ரும் டிராமா)

vaashi 2022 ( மலையாளம்) -சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா)


தமிழ்  சினிமாவில்  கோர்ட்  ரூம்  டிராமா  ரொம்பக்கம்மியாதான்  வந்திருக்கு. குறிப்பா  மெயின்  ரோல்ஸ் வக்கீல்களா  நடிச்சதுன்னா  சுஜாதா - ஜெய்சங்கர்  விதி  ,  உதய  நிதி  நடிச்ச  மனிதன் , விஜய்  ஆண்ட்டனி  நடிச்ச  இந்தியா  பாகிஸ்தான் ( காமெடி) , டி ராஜேந்தர் - கவுதமி  ஒரு  வசந்த  கீதம்,  ஒரு  தாயின் சபதம்
ஸ்பாய்லர்  அலெர்ட்
இந்தப்படத்தோட  கதையோட  ஒன் லைன்  என்னன்னா  காதல்  தம்பதியா  இருக்கும் வக்கீல்கள்  ஒரு  காதல்  மோசடி  வழக்கில்  எதிர்  எதிர்  தரப்பில்  ஆஜர்  ஆவதால்  ஏற்ப்டும்  பிரச்சனைகள்
ஹீரோ , ஹீரோயின்  ரெண்டு  பேருமே  வக்கீல். ஒரே  ஆஃபீஸ்ல  ஒர்க்  பண்றாங்க . இருவ்ருக்கும்  மனசுக்குள்  காதல்  இருந்தாலும்  வெளிப்படையா  ஐ லவ்  யூ  சொல்லிக்கலை , ஆனாலும்  ரெண்டு  பேருக்கும்  தெரியும்.. வீட்ல  பரஸ்பரம்  பேசி  மேரேஜ்  ஆகிடுது.
ஹீரோ  பப்ளிக்  பிராசிக்யூட்டர்  ஆகிடறார்,இப்போ  ஒரு  கேஸ்  வருது. அதாவது வெளிப்படையா  காதலை சொல்லிக்காத  ஒரு  ஜோடி  ஒரு  சந்தர்ப்பத்தில்  தனிமையில்  தப்பு  பண்ணிடறாங்க . மேரேஜ்  பண்ணிக்கோனு   பொண்ணு  கேட்டதும்  பையன்  அய்யய்யோ  நான்  அந்த  மாதிரி  நினைச்சுப்பழகலை . ஏதோ  உணர்ச்சி  வசப்பட்டு  ரெண்டு  பேரும்  தப்புப்பண்ணிட்டோம் ., இந்தப்பிரச்சனையை  இதோட  விட்டுடுங்கறான்
பொண்ணு  விடலை .  செக்சன் 375 படி  அவன்  மேல  கேஸ்  போடறா. ஹீரோ  அந்தப்பொண்ணு  சார்பா  ஆஜராகும்  வக்கீல் . ஹீரோயின்  அந்தப்பையன்  சார்பா ஆஜராகும்  வக்கீல் .  . இந்த  கேஸ்ல  வாதிடுவதால் கோர்ட்டில்  ஏற்படும்  மனக்கசப்பு  வீட்டிலும்  தொடருது. அந்தக்கேஸ்  யார்  பக்கம்  தீர்ப்பாச்சு , இவங்க  டைவர்ஸ்  கேஸ் வரை  போனாங்களா? என்பதே  க்ளைமாக்ஸ்
ஹீரோவா  டோவினோ  தாம்ஸ், இவருக்கு  கேரளாவில்  தீவிர  ரசிகைகள்  உண்டு . தீவண்டி  என்ற  படத்தின்  முதல்  நாள்  முதல்  காட்சியில்  95%  காலேஜ்  பெண்களே  அரங்கை  நிறைத்த  அதிசயம் நடந்தது (  கோட்டயம்- சங்கணாச்சேரி  அப்சரா) விசில்  என்ன  டான்ஸ்  என்ன?  அதைப்பத்தி  தனியா  ஒரு  கட்டுரையே  எழுதலாம்
ஹீரோயின்  மேல்  அகக்றை  உண்டு  அன்பு  உண்டு  ஆனா  வெளில  சொல்லிக்கலை  என்ற  கான்செப்ட்டில்  அவரது  முக பாவனைகள்  எல்லாம்  அருமை  . பப்ளிக்  பிராசிக்யூட்டர்  ஆனதும் கெத்து  காட்டும்   நடை  என்ன? பாடி  லேங்குவேஜ்  என்ன? கோர்ட்  சீன்களில்  தான்  ஜெயிப்பது  போன்ற  நிலைமை  வரும்போது  ஹிரோயினை  தர்மசங்கடமாகப்பார்ப்பதும் , தோற்பது  போன்ற  நிலை  வரும்போது  குற்ற  உணர்ச்சியுடன்  தலை  குனிவதும்  செம  ஆக்டிங்
ஹீரோயினா  கீர்த்தி  சுரேஷ்.  காதல்  காட்சிகளில்  கலக்கலான  நடிப்பு  ஆனா  லாயரா  கம்பீரம்  காட்டும்போதும்  கோர்ட்  ஆர்க்யூமெண்ட்  சீன்களிலும்  ஏனோ  ஓவர்  ஆக்டிங்..  ஆங்காங்கே  கமல்  தனம்  தெரியுது . இதோ  நான்  நடிக்கறேன் , பாருங்க பாருங்க  என  அறைகூவல்  விடுவது  போல  இருக்கு
பாதிக்கப்பட்ட  பெண்ணா  வருபவர்   உருக்கமான  நடிப்பு  , ஆனா  அவருக்கு  எதிரா  சாட்சி  சொல்லும்  அவரது  தோழி  கம்பீரமான  நடிப்பு .
ஒளிப்பதிவு  கச்சித,ம் .,  பாடல்  இசை  பர்வால்லை  ரகம்,  எடிட்டிங்  கச்சிதமா  ரெண்டு  மணி  நேரத்தில்  கட்  பண்ணி  இருக்காங்க
சபாஷ்  டைரக்டர்
1   ஹீரோ  ஹீரோயின்  ஒரே  ஆஃபீசில்  ஒர்க்  பண்ணினாலும்  தனி  தனி  டூ  வீலரில்  போவது  , வருவது கண்ணியமாய் காதலிப்பது   நல்ல  முன்னுதாரணம்
2   ஹீரோயின்   வக்கீலா  இருந்தாலும்  தன்  கேரியர்  பேசப்பட்ட  பின்  தான்  திருமணம்  என  உறுதி  காப்பது  ஹீரோ  தான்  பெண்  பார்க்கப்போவதாக  சொன்னபோது  தன்னைப்பெண்  பார்க்க  மாப்ளை  வீட்டுக்காரங்க  வற்றாங்க  என  கெத்துக்காட்டுவதும்  குட்
3  கோர்ட்  சீன்கள்  சுவராஸ்யமாய்  இருந்தது. நாடகத்தனம்  இல்லை
லாஜிக்  ம்ஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  ஆலோசனைகள்
1    படத்தின்  கதைக்கரு  ஆல்ரெடி    துவைச்சுக்காயப்போட்ட  விதி  , பிங்க் (  நேர்  கொண்ட  பார்வை   சாயலில்  இருப்பது  பின்னடைவு
2   பாதிக்கப்பட்ட  பெண்ணின்  சுடிதார்  பட்டன்  தெறித்து  விழுந்தது  பற்றிப்பேசும்போது  ஹீரோயின்  மேரேஜ்  ஆன  புதுசில்  என்  சுடி  கூட  அப்டிதானே  ஆச்சு? என  சொல்ல  வரும்போது  ஹீரோ  ஏன்  எரிந்து  விழனும்? ஆஃபீஸ்  விஷயத்தை  வீட்டுக்குக்கொண்டு  வராதே  என்கிறார் அது  அவரது  கேர்க்டர்  ஸ்கெட்ச்க்கு  ஒரு  சறுக்கல்
3  திரைக்கதை  மன்னன்  கே  பாக்ய ராஜ் ஒரு  முறை  சொன்னமாதிரி  ஒரு  படத்தின்  திரைக்கதை  சுவராஸ்யமாய்  அமைய ஹீ5ரோ - ஹீரோயினுக்கு  திருமணத்தடை  இடைவேளை  பிளாக்கில்  வரனும் அவங்க  சேர்வாங்களா? மாட்டாங்களா? என்பது  க்ளைமாக்சா  அமையனும் (  விதி  விலக்கு  ஆரோரோ  ஆரிராரோ- இதில்  இண்ட்டர்வெல்  பிளாக்  சீனில்  மேரேஜ்  ஆகும் )
4 ஹீரோயின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  பெண்ணியம்  பேசுது  ஆனா  கேசுக்காக  வாதிடும்போது  ஆணாதிக்கம்  அல்லது  ஆண்  செய்யும்  தவறுகளை  ஆதரிக்குது . இது  முரண்
5  கேஸ்  தீவிரமாவதை  உணர்ந்த  அந்தப்பையன்  சரி  நான்  அந்தப்பெண்ணை  மேரேஜ்  பண்ணிக்கறேன்  என்று  சொன்னால்  அவ  கேசை  வாபஸ்  வாங்கிக்குவா , 10  வருச  ஜெயில்  தண்டனைல  தப்பிக்கலாம்  அந்த  ஆப்சனை  யோசிக்கவே  இல்லையே?
ரசித்த  வசனங்கள்
1    பொண்ணுங்க  கிட்டே  பேசி  ஜெயிக்க  முடியாது , அதனால  தான்  நான் பெண்கள்ட்ட  ஆர்க்யூ  ப்ண்றதே  இல்லை
2   எந்த  வேலையா  இருந்தாலும்    ஃபேமிலி  தனி  ஜாப்  தனினு  பிரிச்சுக்கனும்.  ரெண்டையும்  பேலன்ஸ்  பண்ணிக்கனும்
3  நம்ம  ரெண்டு பேருக்குமே  ஒரு  ஒற்றுமை  இருக்கு  . நாம  ரெண்டு பேருமே  நம்ம  மனசுக்குப்பிடிச்சவங்களை  தோற்கடிக்க  முயற்சி  பண்ணிட்டு  இருக்கோம்
சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஸ்லோ  மூவி  தான்  , கோர்ட்  ரூம்   டிராமா , லவ்  ஸ்டோரி  பார்க்கறவங்களுக்கு  பிடிக்கலாம். தியேட்டர்களில்  ஓடுது  கேரளாவில்  இது  சூப்பர்  ஹிட் ஆகலை ,  மீடியமாதான்  போகுது   விரைவில்  நெட்  ஃபிளிசில்  ரிலீஸ்  ஆகுது   ரேட்டிங்  2. 25  /.5

0 comments: