Tuesday, February 26, 2019

Mr. & Ms. Rowdy (2019) -சினிமா விமர்சனம் ( மலையாளம்)

Image result for Mr. & Ms. Rowdy (2019


Director:

 Jeethu Joseph

Writers:

 Linta Jeethu (story), Jeethu Joseph

Stars:

 Kalidas Jayaram, Shebin Benson, Vishnu Govindhan

அண்ணன் அழகிரி மாதிரி பெரிய ரவுடி ஆகிடலாம்னு ஹீரோ & ஃபிரண்ட்ஸ் க்ரூப்க்கு ஆசை, ஆனா பாருங்க தம்பி தளபதி மாதிரி காமெடி பீஸ் ஆனதுதான் மிச்சம், பெரிய பிராஜெக்டே வரமாட்டேங்குது, வர்றதெல்லாம் டம்மி கேசுங்க


இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் ஹீரோயின் மேல வண்டியை மோத விட்டு ஆக்சிடெண்ட் பண்ணிடறாரு ஹீரோ , ஒரு நாள் அவர் கூட ஹாஸ்பிடல்ல இருக்காரு, ஹீரோயினோட சித்தி இதுதான் சாக்குன்னு ஹீரோயினை வீட்டை விட்டு அனுப்பிடறாப்டி, சின்னம்மா, சித்தின்னாலே கொடுமைக்காரிங்கதானே?

ஒரே விட்ல ரவுடி ஹீரோ, ஹீரோயின் ஆனா இவங்க 2 பேருக்குள்ள லவ் கிடையாது, எப்படி திரைக்கதை பயணிக்குது? அப்டிங்கறதுதான் மிச்ச மீதி

த்ரிஷ்யம் ( பாபனாசம்)னு மெகா ஹிட் த்ரில்லர் கதை எழுதுன அதே ஜீத்து ஜோசப்தான் இதுலயும் திரைக்கதை, இயக்கம், ஆனா பாருங்க அவரோட சம்சாரம்தான் கதை , தயாரிப்பு, நான் என்ன நினைக்கறேன்னா அவரோட சம்சாரம்தான் முழு கதை திரைக்கதை எழுதி பிராண்ட் வேல்யூக்காக தன் புருசன் பேரை போட்டுக்கிச்சுன்னு


முதல் பாதி பூரா அச்சு பிச்சுக்காமெடி, பின் பாதில வேற வழி இல்லாம ஹீரோ , ஹீரோயினை சுத்தி கதை போகுது, ஒரு வலிய திணிக்கப்பட்ட ஆக்சன் க்ளைமாக்ஸ்


ஹீரோ சிடு சிடு முக நரசிம்ம ராவா வர்றாரு, எடுபடலை, பொதுவா ஆம்பளைங்க எப்படி பெர்ஃபார்ம்  பண்ணா நமக்கு என்ன? ஹீரோயினைப்பற்றி பார்ப்போம்,


Image result for aparna balamurali
 அபர்ணா பாலமுரளி தான் நாயகி. ஹீரோ தனுஷுக்கு தம்பி மாதிரி இருக்காரு, ஹீரோயினு அனுஷ்காக்கு அக்கா மாதிரி இருக்கு, கன்னம் எல்லாம் ரொம்ப முற்றிப்போயிடுச்சி, ஆனாலும்  ஃபிகரு சைட் அடிக்கற கணக்காதான் இருக்கு

மொக்கை ஃபிகரு ரோட்ல போனாலே முப்பது தடவை திரும்பிப்ப்பார்ப்போம்,நல்ல ஃபிகர்போனா விடுவமா?


ரவுடியிசக்கதைல கடைசி வரை போலீஸ் ஸ்டேஷன், போலீஸ் இவங்க எல்லாம் இருக்காங்களா? இல்லையா?ன்னே தெரியல

50,000 ரூபா சம்பளம் குடுத்துட்டு நாயகி கிட்டே 5 லட்சம் ரூபாக்கு பர்ஃபார்மென்ஸ் வாங்கற கேமரா மேதை கர்ணன் ( ஜம்பு, இரட்டைக்குழல் துப்பாக்கி, ஜான்சி)கிட்டே இந்தப்படத்தோட கேமரா மேன் , இயக்குநர் கத்துக்க நிறைய இருக்கு, 10 லட்ச ரூபா சம்பளம் கொடுத்து 1000 ரூபாக்கு கூட நாயகியை யூஸ் பண்ணலை, ஒரு க்ளோசப் ஷாட் இல்லை, ஒரு ஸ்லோமோஷன்  சீன் இல்லை, ஒரு டூயட் இல்லை, ஒரு ரொமான்ஸ் சீன் இல்லை, அப்பறம் எதுக்கு தண்டமா அந்த ஹீரோயின்?


நச்  டயலாக்ஸ்


1  நம்ம எல்லாருக்கும் ஒரு வேலை கிடைச்சிருக்கு,ஆனா அதுக்கு ஒரு முழு நாள் சாப்பிடாம பட்டினி கிடக்கனும்


இப்பவே அப்டித்தானே இருக்கோம்?
a jeethu joshep film
தான் ஒரு பேஷன் போட்டோகாராபர்னு அந்தப்பொண்ணு கிட்ட கத விட்டிருக்கான்


ஓஹோ
ஆனா நிஜத்துல அசிஸ்டெண்ட்டா விளக்குப்பிடிக்கற வேலைதான், ஐ மீன் லைட் பாய்
a jeethu joshep filmImage result for aparna balamurali
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  சூர்யா நடித்த "காதலே நிம்மதி" + கமல் நடிக்க இருந்து கைவிடப்பட்ட கண்டேன் சீதையை + வின்னர் வடிவேலு காமெடி டிராக் = ஜீத்து ஜோசப் பின் "Mr & mrs rowdi ( malayalam ) ( இயக்குநர் ஒரு த்ரில்லர் மூவி ஸ்பெஷலிஸ்ட் ஆனா இது காமெடி மூவி)

2  Mr & mrs rowdi ( malayalam ) 11 am fdfs @ kerala kottayam aasha 65% full a jeethu joshep film \


இயக்குநரிடம் சில கேள்விகள்


1   லாஜிக் மிஸ்டேக் 1− ஒரு கோபத்துல வீட்டை விட்டு வெளில போ னு சித்தி துரத்தி விடுது,நாயகி ஒரே ஒரு துக்ளியூண்டு பேக்ல 3 செட் டிரஸ் எடுத்துட்டுப்போகுது.பொதுவா பொண்ணுங்களுக்கு ஒரு பீரோ நிறைய சேலை கலெக்சன் இருக்குமே? நல்ல பேமிலி வேற ((malayalam )2 லாஜிக் மிஸ்டேக் 2− ரூம் கிடையாதுனு சொன்னதும் ஹீரோ ஹீரோயின் கிளம்பறாங்க ,ஊர்ல எத்தனை லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு,ஒரு ஆள் இல்லைன்னா முயற்சியை விட்ருவாங்களா?அட்லீஸ்ட் 3 கூட பாக்க மாட்டங்களா?
a jeethu joshep film

MrandMrsRowdy − பாசில் இயக்கிய அரங்கேற்ற வேளை (ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்க்) போல முதல் 80% திரைக்கதை காமெடி,கடைசி 20 % ஆக்சன் த்ரில்லர் ,மீடியம் ஹிட் அடிக்கும் ,ரேட்டிங் 3/5
a jeethu joshep filmImage result for aparna balamurali hot

0 comments: