2012ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உண்மை சம்பவத்தைத்தழுவி எடுக்கப்பட்ட படம் இது.24/7/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆன படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். நர்சாகப்பணி புரிகிறார்.வக்கீலுக்குப்படிக் கிறார்.நாயகி சிறுமியாக இருக்கும்போதே நாயகியின் அப்பா ஊரைவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் ஓடி விட்டார்.அம்மா தான் நாயகியை சிரமப்பட்டு வளர்த்தார்.
நாயகன் மிகப்பெரிய கோடீஸ்வரன்.தொழில் அதிபர்.முதல் மனைவியை டைவர்ஸ் செய்து விட்டார்.ஒரு குழந்தை உண்டு.மனைவிக்கும் ,குழந்தைக்கும் சேர வேண்டிய ஜீவனாம்சத்தை கோர்ட் மூலம் செட்டில் செய்து விட்டார்.
நாயகியைக்கண்டதும் நாயகன் காதல் கொள்கிறார்.நாயகி நாயகனது காதலை ஏற்றுக்கொள்கிறார்.சாப்பாட்டுக் கே வழி இல்லாத ஏழைக்கு மகாராணி மாதிரி வாழக்கசக்குதா?என்ன?
நாயகன் நாயகிக்குக்காதல் பரிசாக ஆடி கார் மாதிரி விலை உயர்ந்த காரைப்பரிசளிக்கிறார்.அரண்மனை மாதிரி வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.
நாயகிக்கு இன்னமும் பிரமிப்பில் இருந்து வெளிவர முடியவில்லை.இது கனவா?நிஜமா?என கிள்ளிப்பார்த்துக்கொள்கிறார். வலிக்கிறது.அப்போ நிஜம்தான்.
அந்த ஊர் வி ஐ பி கள் முன்னிலையில் நாயகன் ,நாயகி திருமணம் நடக்கிறது.மிகவும் சந்தோஷமாக அவர்களது இல்லற வாழ்க்கை நடக்கிறது.
திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.டாக்டரிடம் செக் செய்தபோது நாயகியிடம் எந்தக்குறையும் இல்லை.டாக்டர் நாயகனையும் செக்கப் செய்ய வேண்டும் என்கிறார்.ஆனால் நாயகன் மறுத்து விடுகிறான்.அதுதான் முதல் மனைவிக்கு ஒரு வாரிசு தந்து என் ஆண்மையை நிரூபித்து விட்டேனே? என அலட்சியமாக சொல்கிறான்.
நாயகன் அடிக்கடி தன்னைத்தனியாக விட்டு விட்டு லேப் டாப்பில் ஒர்க் செய்வதை நாயகி கவனிக்கிறாள்.பாஸ்வோர்டைக்கண்டு பிடித்து ஓப்பன் செய்தால் நாயகிக்கு அதிர்ச்சி.நாயகனுக்குப்பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.
இதை நாயகியால். ஜீரணிக்க முடியவில்லை. நாயகனுடன் வாக்குவாதம் செய்கிறாள்.நாயகனோ அலட்சியமாக உனக்குத்தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து விட்டேன், என்னிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறாய்?என விவாதிக்கிறான்.
ஒரு கெட்ட நேரத்தில் வந்த நல்ல செய்தி நாயகி கர்ப்பமாக இருக்கிறாள்.இருவரும் சந்தோஷப்படுகிறார்கள்.குழந்தை பிறந்து ஒரு வருடம் கழிகிறது.
குழந்தையைப்பார்த்துக்கொள்ள ஒரு நர்ஸ் நியமிக்கப்படுகிறாள்.இப்போது மீண்டும் பழைய பிரச்சனை வெடிக்கிறது.நாயகனின் பல பெண்களுடனான தொடர்பு.
இந்த வாக்குவாதத்தில் நாயகன் நாயகியை ட்ரிக்கர் செய்வது போல் பேச நாயகி கோபம் அடைந்து நாயகனைத்துப்பாக்கியால் சுட்டு விடுகிறாள்.
முதலில் போலீசுக்குத்தகவல் தெரிவிக்க நினைத்தவள் பின் தன் முடிவை மாற்றி விட்டு டெட் பாடியை டிஸ்போஸ் செய்ய முடிவெடுக்கிறாள்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகி எலிசி மட்சுனாகாவாக லொரேனா கம்ப்பரோட்டா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஏழ்மையில் இருந்த பெண்ணிலிருந்து செல்வச்சீமாட்டி ஆகும் ட்ரான்ஸ்பர்மேஷனைப்பிரமாதமாக உடல் மொழியில் காட்டி இருக்கிறார்.நாயகனுடன் வேட்டையாடப்போகும்போது மிருகத்தை சுடப்பயிற்சி பெறுவது,இரக்கமே இல்லாமல் ஷூட் செய்து சாப்பிடுவது என கதிகலங்க வைக்கும் நடிப்பு.
நாயகன் மார்க்கோஸ் மட்சுனாகாவாக ஹென்றிக் கிமுரா சைக்கோத்தனமான நடிப்பில் கலக்கி இருக்கிறார்.இருவருக்கும் ஜோடிப்பொருத்தமே இல்லை.நிஜத்தில் அப்படித்தான் போல.
நாயகியின் அம்மாவாக ,நர்ஸ் ஆக வரும். பெண்களின் நடிப்பு கனகச்சிதம்.நாயகியிடம் இண்ட் ராகேஷன் செய்யும் போலீஸ் ஆபீசர் மிடுக்கும் அருமை.
ரபேல் மோண்ட்டஸ் +மரியானா டோரஸ் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத பிலிப் வெல்லாஸ்கோ இயக்கி இருக்கிறார்.
திகில் ஏற்படுத்தும் கலர் டோனில் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லிசியா அரோஸ்டகே.ஒவ்வொரு பிரேமிலும் அடுத்து என்ன நடக்குமோ?என்ற பயத்தை கேனரா மூலம் கடத்துகிறார்.
லிபியா அர்பெக்ஸ் +மொயாமா ராம்போ இருவரும் இணைந்து எடிட்டிங் செய்திருக்கிறார்கள்.படத்தின் ரன்னிங் டைம் 93 நிமிடங்கள்.
சபாஷ் டைரக்டர்
1 திண்ணையில் படுத்துக்கிடந்தவனுக்கு திடுக்குனு வந்த வாழ்வு மாதிரி நாயகியின் கோடீஸ்வர வாழ்க்கை பிரமிப்பை ஆடியன்சுக்குக்கடத்திய விதம் அருமை.நல்ல எமோஷனல். கனெக்ட்
2 நாயகியின் அம்மாவின் புதுக்கணவன் அதாவது நாயகியின் சித்தப்பா தவறான எண்ணத்தில். நாயகியை நெருங்கும்போது பென் புலி போல சீறுவதும் ,கத்தியை எடுத்து மிரட்டுவதும் மிரள வைக்கும் நடிப்பு.
3 இந்த சம்பவம் நடந்ததும் அம்மா தன் கணவனைக்கண்டிக்காமல் மகளிடம் கடிந்து கொள்ள மனம் ஒடிந்து போய் வீட்டை விட்டு வெளியேறுவது உருக்கமான செண்டிமெண்ட் சீன்.
4 காரில் டெட்பாடியுடன் நாயகி மெயின் ரோட்டில் பயணிக்கும்போது டிராபிக் போலீசிடம் மாட்டிக்கொள்ளும் சீன் ராட்சசன் படத்து செக்கிங் சீன நினைவுபடுத்தினாலும் திரில்லிங் மொமெண்ட்
5. படத்தில் பெரிய திருப்புமுனையோ ,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டோ எதுவும் இல்லை என்றாலும் ஒவ்வொரு சீனையும்ன்பரபரப்பாக நகர்த்திய விதம் அருமை
6 நான் லீனியர் கட்டில் கதை சொன்ன விதம் அருமை.க்ரைம் நடப்பதார்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 நாயகன் கோடீஸ்வரன்.முதல் மனைவியை டைவர்ஸ் செய்து விட்டான்.பல. பெண்களுடன் தொடர்பு உண்டு.அப்படியே ஜாலியாக இருக்க வேண்டியதுதானே?எதற்கு நாயகியைத்திருமணம் செய்ய வேண்டும்?
2. மிடில் கிளாஸ் ஆளே ரெண்டு போன் வைத்திருக்கும்போது கோடீஸ்வரன் ஏன் ஒரே ஒரு போன் வைத்திருந்து மனைவியிடம் மாட்டிக்கொள்கிறான்.ரகசிய மெசேஜ் இருக்கும்போனை ஆபீசில் வைத்து விட்டு வீட்டுக்கு வரும்போது வேறு போன் கொண்டு வந்திருக்கலாமே?
3 டெட் பாடி இருக்கும் காரில் நாயகி போலீசால் வழி மறிக்கப்படும்போது செக் செய்யும் போலீஸ்க்கு டெட் பாடி ஸ்மெல் அடிக்கவில்லையா?
4 நாயகி மூன்று வருடங்களாக அந்த பங்ககாவில் வசிக்கிறாள்.சிசிடிவி கேமரா இருப்பது தெரியாதா?போலீசிடம் மாட்டுவோம் என முன் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமே?
5 நாயகன் அடிக்கடி நாயகியை நீ ஒரு சைக்கோ.எது வேணாலும். செய்வே. என்கிறான்.ஆனால் கன் பாய்ண்டில் நாயகி நாயகனை மிரட்டும்போது நீ சுட மாட்டே என்று அலட்சியமாக சொல்வது ஏன்?
ரசித்த வசனங்கள்
1. எனக்கு இதுவரை யாருமே பரிசாக எதுவும் தந்ததே இல்லை.
2. கடந்த காலத்தை மறப்பது யாருக்கும் எளிதல்ல.
3. உனக்கு என்ன குறை வைத்தேன்? மாளிகை ,செல்வம் ,அதிகாரம் ,வசதி...
உன் அருகாமை ,சமீபம் இல்லையே?
4 எடுத்துக்கறேன்.உன்னையே எனக்குப்பரிசா எடுத்துக்கறேன்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+. வன்முறைக்காக
CPS கமெண்ட் - ட்ரூ ட்ராமா டாக்குமெண்ட் ரி ,க்ரைம் ட்ராமா பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம்.கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லை.ரா வான படம்
ரேட்டிங் 3 /5