Tuesday, February 25, 2014

மேகக் கணினி!!!! ?? - இரா. முருகன் @ THE HINDU

ஆதியில் இனியாக் இருந்தது. 2,000 சதுர அடி இடத்தில் 18,000 மண்டை வால்வுகளை அடுக்கி, இணைத்து உருவாக்கிய கணிப்பொறி அது. 10 இலக்க எண்களை நினைவில் வைத்துக் கூட்டிக் கழித்து, அந்த முதன்மை (மெயின் ஃப்ரேம்) கணிப்பொறி 1940-களில் அமெரிக்க சர்க்கார் கணக்குகளைப் போட்டது. 


“இனியாக் போல இன்னும் 10 முதன்மைக் கணிப்பொறிகள் போதும், உலகக் கணக்கு வழக்குகளை யெல்லாம் போட்டுவிடலாம்” என்ற அறிவியல் ஆரூடம் பொய்யானது 1980-களில். மேசைக் கணிப்பொறிகள் கோடிக் கணக்கில் பெருகி வீட்டு முன்னறை, பலசரக்குக் கடை, மருத்துவமனை, ரயில் நிலையம் என்று எங்கும் நிறைந்தன. 


பேரேட்டிலிருந்து கணிப்பொறிக்கு… 


எல்லாத் துறைகளையும்போல் வங்கித் துறையும் கம்ப்யூட்டர்களை இருகரம் நீட்டி வரவேற்க, வங்கிக் கிளையில் தூசி பரத்திய பேரேடுகள் காணாமல் போயின. சேமிப்புக் கணக்கு நடவடிக்கைகளுக்கு மென்பொருள் எழுதி இயக்க ஒரு கணிப்பொறி, வர்த்தகர்களின் நடப்புக் கணக்குக்கு இன்னொன்று, ஆறு மாதம், ஒரு வருடம் நிலையாகப் பணம் போட்டு வைக்கும் நிரந்தர வைப்புத்தொகைக்கு வேறு ஒன்று என்றானது. 



ஒரு சிறிய சிக்கல். வங்கிக் கிளையில் பக்கத்தில் பக்கத்தில் இருந்தாலும் இந்த கணிப்பொறிகள் ‘பேசிக் கொள்வது’ கிடையாது. 5,000 ரூபாய் சேமிப்புக் கணக் கில் இருந்து எடுத்து, நிரந்தர வைப்புத்தொகையில் போட வேண்டும் என்றால், இரண்டு கணிப்பொறிகளிலும் தனித்தனியாகத் தகவல் பதிந்து, நாள் முடிவில் மொத்தக் கணக்கு விவரத்தையும் பேரேட்டில் தனியாக எழுத வேண்டும். 


கிளையன்ட் சர்வர் 


ஒரே வங்கிக் கிளைக்குள் வெவ்வேறு துறைகளுக்கு வைத்திருக்கும் கணிப்பொறிகள் தொடர்புகொண்டு, தகவல் பரிமாறிக்கொள்ள முடியுமா என்று 1990-ல் வெகுவான எதிர்பார்ப்பு எழுந்தபோது, தொழில்நுட்பம் ‘கிளையன்ட் சர்வர்’ அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியது. சற்றே பெரிய ஒரு கணிப்பொறியில் (சர்வர்) சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, நிரந்தர வைப்புத்தொகை, கடன் வழங்குதல் என்று எல்லா முக்கிய வேலைகளையும் செய்யும் மென்பொருள் இருக்க, கவுன்ட்டரில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய கணிப்பொறிகள் குறைந்தபட்ச விவரங்களை மட்டும் பதிவுசெய்துகொண்டு, சர்வரோடு தொடர்புகொண்டு பற்றுவரவை வெற்றிகரமாக முடிக்கும். 



கிளயன்ட் சர்வர் கணிப்பொறி அமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, அதற்கு முன் உபயோகத்தில் இருந்த கணிப் பொறிகளை மென்பொருளோடு அகற்றிவிட்டு, புது மென்பொருள், புத்தம்புது வன்பொருள் என்று வங்கிக் கிளைகள்தோறும் நிரப்ப வேண்டியதானது. செலவுக் கணக்கு என்பதால், வங்கியின் லாபத்திலும் பாதிப்பு. 


வங்கி மையம்

 
21-ம் நூற்றாண்டில், வங்கித் துறை வளரும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், கிளையன்ட் சர்வர் தொழில்நுட்பமும் விடைபெற, கிளைகளுக்கு இடையே தகவல்தொடர்பு கொண்டு பற்றுவரவு நடத்த வேண்டிய காலத்தின் கட்டாயம். வங்கி மையம் (கோர் பேங்கிங்) என்ற கோட்பாடு, இந்தச் சவாலைச் சமாளிக்க உதவிக்கரம் நீட்டியது. ஒரே வங்கியில், காரைக்குடி கிளையில் சேமிப்புக் கணக்கு இருந்தால், கொல்கத்தா பாலிகஞ்ச் கிளையில் கணக்குப் புத்தகத்தை நீட்டிப் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்பது வங்கி மையத்தின் எளிய விளக்கம். கொஞ்சம் இதையே நீட்டினால், தினசரி பற்றுவரவு முடித்ததும் கிளைகள் தனித்தனியாக மெனக்கெடாமல், ஒரே இடத்தில் அன்றைய கணக்கு வழக்கை முடித்து, அடுத்த நாள் கணக்கை ஆரம்பிக்க வசதி, பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏ.டி.எம்.), கைபேசி மூலமாகவும், வீட்டிலிருந்தே இணையம் மூலமும் கணக்கை இயக்க வசதி… இப்படிப் பலவற்றுக்கும் வங்கி மையம் வழிவகுத்தது. 



வங்கி மையம் ஏற்படுத்த, பழைய கிளையன்ட் சர்வர் அமைப்பைக் களைந்துவிட்டு, கிளைகளிலும் நிர்வாக அலுவலகங்களிலும் புதிய கணிப்பொறிகள், புது மென்பொருள் தேவையிருந்ததால் வேறு வழியின்றி இந்தக் கொள்முதலுக்குச் செலவுசெய்ய வேண்டிவந்தது. இது ஒரே முறை செய்யப்படும் செலவு இல்லை. வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சக்தி வாய்ந்த கணிப்பொறிகள், வேகமான மென்பொருள் என்று பழையன கழிதலும் புதியன புகுதலும் தேவையானது. செய்யாவிட்டால், இன்னொரு வங்கி இதை நடத்திக் காட்டி வெற்றிக் கோட்டை நோக்கி முன்னால் ஓடிவிடும் அபாயம். 



“இனி புதுசு புதுசாகக் கணிப்பொறிகள், மென் பொருள்கள் வாங்கக் காசு செலவு செய்ய முடியாது. தேவைப்பட்டபோது தற்காலிகமாகக் கொஞ்சம் கூடுதல் கணிப்பொறி சேமிப்பிடம், ஒன்றுக்கு நாலாக அவதாரம் எடுத்து இயங்க மென்பொருள், எவ்வளவு பற்றுவரவு வந்தாலும் தாங்கும் தகவல் பரப்பு. இத்தனையும் வேண்டும். இயக்கத்துக்கான செலவு (ஆபரேட்டிவ் எக்ஸ்பென்ஸ்) மட்டும் தரத் தயார்.” 


மேகப் புரட்சி

 
வங்கிகளின் இந்த வேண்டுகோளுக்குத் திரும்பவும் தொழில்நுட்பம் செவிசாய்த்தது. மேகக் கணினித்துவம் (கிளவுடு கம்ப்யூட்டிங்) மூலம் இன்னொரு தகவல் புரட்சி ஏற்பட்டது. மேகம் என்பது இணையத்தைக் குறிக்கும் என்பதைச் சொல்லியாக வேண்டும். 



மேகக் கணினித்துவக் கோட்பாட்டின்படி, கணிப் பொறியோ மென்பொருளோ வாங்க வங்கிகள் செலவு செய்ய வேண்டாம். கணிப்பொறி நிறுவனங்களே அவற்றை அமைத்துத்தரும். இந்த வன்பொருளும் மென்பொருளும் உலகில் எங்கெல்லாமோ இருப்பவை. இணையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட வலைப் பின்னலில் இவை இணைந்திருக்கும். எளிய கணிப்பொறிகளை நிறுவி, இந்த மேகக்கணினிகளை இணையம் மூலம் பாதுகாப்பாகத் தொடர்புகொண்டு வங்கிக் கிளைகள் தினசரிச் செயல்பாட்டை வெற்றிகரமாக முடிக்கலாம். மேகம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டதோ அவ்வளவு கட்டணம் செலுத்தினால் போதும். 



மென்பொருளை, தகவல் தளத்தை (டேட்டாபேஸ்), இயங்கவும் தகவல் சேகரித்து வைக்கவுமான கணிப்பொறி வன்பொருளை, இயக்கு மென்பொருளை (ஆபரேடிவ் சிஸ்டம்) எல்லாம் கிரமமாகத் தனிமைப்படுத்தி, எதையும் சாராது விட்டு விலகியிருக்க வைத்து, (வர்ச்சுவலை சேஷன்) அவற்றை இணையத்தின் மூலம் இயக்கிப் பின்னப்படும் மாபெரும் தகவல் வலைதான் கிளையன்ட் கம்ப்யூட்டிங். 



“ஐயோ, என் தகவலை நெட்டுலே யாராவது சுட்டுட்டா?” 


வங்கிகள் கவலையே படவேண்டாம். வளமையான பொதுவுடமை மேகம் (பப்ளிக் கிளவுடு) போக, பட்டா போட்ட தனியுடமை மேகம் (பிரைவேட் கிளவுடு), கலந்துகட்டியானது (ஹைபிரிட் கிளவுடு) எல்லாம் வந்துவிட்டன. என்ன, செலவு கொஞ்சம் அதிகம். 


மேகக் கணினித்துவத்தை அறிமுகப்படுத்திய கணிப்பொறி நிறுவனங்களின் கான்கிரீட் காட்டில் மேகம் திரண்டு மழை. 



- இரா. முருகன், எழுத்தாளர், தொடர்புக்கு: [email protected]



THANX - THE HINDU 

ராஜீவ் கொலை பெரிய தப்பு- அற்புதம் அம்மாள் நேர்காணல் @ THE HINDU

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளில், அற்புதம் அம்மாளைச் சந்திக்க முடியவில்லை; ஓரிரு நாட்கள் கழித்துச் சென்றபோது, வழக்கம்போல, மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்கள் கனக்கும் தோள்பையுடன் கிளம்பியிருந்தார். “எம் புள்ள மட்டும் இல்லப்பா, இன்னும் நெறையப் புள்ளைங்களைத் தூக்குக் கயித்துப் பிடிக்கு வெளியே இழுத்துக்கிட்டு வர வேண்டியிருக்கு” என்றவர், வழியில் ஒரு பொரி பொட்டலத்தை வாங்குகிறார். “ரொம்ப அசத்தினா தவிர, நான் சாப்பாடு தேடுறதுல்ல; பல நாள் இந்தப் பொரிதான் நமக்குச் சாப்பாடு” என்கிறார் சிரித்துக்கொண்டே. நடந்துகொண்டே பேச ஆரம்பித்தோம். 

 

இந்த நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு களோடு 23 வருஷங்கள் போராடி, உங்கள் மகனைத் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்துக்கான மனோபலம் எங்கிருந்து உருவானது?


 
பெரியார்கிட்டே இருந்துதான்பா உருவானுச்சு. நான் பொறந்தது தி.மு.க. குடும்பத்துல. எங்கப்பா டி.ஏ. திருவேங்கடம் கட்சியில எந்தக் கூட்டம், போராட்டம்னாலும் எங்களையும் கூடவே அழைச்சுக்கிட்டுப் போய்டுவார். குறள் ஒப்பிக்கிறது, கூட்டங்கள்ல பேசுறதுனு வாய்ப்புக் கிடைச்சப்பல்லாம் போய்க்கிட்டுதான் இருந்தேன். ஆனா, உண்மையான அரசியலைப் பெரியார்கிட்டேயிருந்துதான் கத்துக்கிட்டேன். 


பெரியார் எப்போது அறிமுகமானார்?

 
என்னோட கணவர் குயில்தாசன்கிட்டேயிருந்து. அவர்தான் பெரியாரையும் சுயமரியாதை வாழ்க்கையையும் அறிமுகப்படுத்தினார். மொதமொதல்ல கலந்துக்கிட்ட தி.க. கூட்டத்துலேயே சின்னச் சின்ன விஷயங்கள்கூட ரொம்பப் பிடிச்சுப்போச்சு. தி.மு.க. கூட்டங்கள்லேயும் கலந்துக்கிட்டிருக்கேன்னாலும், கூட்டத்தை அங்கே ஆண்- பெண்ணுனு ரெண்டு வரிசையா பிரிச்சுருப்பாங்க. இங்கே அந்தப் பாகுபாடு கிடையாது. 



எல்லாரும் சமம்கிறது பதிஞ்சுது. ஒருகாலத்துல எல்லாப் பெண்களையும்போல நகைநட்டு போட்டுக்கிட்டு வெளியே போன நான், பெரியார் பேச்சைக் கேட்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், இந்தச் சமூகம் பெண்களுக்கு அழகுன்னு கற்பிச்சு வெச்சுருக்குற எல்லாமே கைவிலங்குங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டு, தாலியே வேணாம்னு முடிவெடுத்தேன். எல்லோரும் எதிர்த்து நின்னாலும் நாம சளைக்கக் கூடாதுங்கிற தைரியத்தையும் அங்கேதான் கத்துக்கிட்டேன். என் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்தேன். கூட்டங்கள், போராட்டங்கள்ல எல்லாம் குடும்பமாவே கலந்துக்கிட்டோம். நானே ரெண்டு தடவை சிறைக்குப் போயிருக்கேன். இயக்கத்தைத் தனியாவும் எங்க குடும்பத்தைத் தனியாவும் நாங்க பார்க்கலை. 



ராஜீவ் கொலையை இப்போது நினைவுகூர முடியுமா?


 
எப்படிப்பா மறக்க முடியும்? எங்க வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சம்பவம் இல்லையா அது? ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி வந்தப்போ எல்லாக் குடும்பங்களையும் போல எங்க குடும்பமும் ஆடிப்போச்சு. அதுவும் ராஜீவோட கோரமான சாவு, அந்தப் படங்களை எல்லாம் பார்த்தப்போ உடைஞ்சுபோயிட்டோம். ஆனா, அப்போ தெரியலையே… அந்தச் சாவுதான் எங்களோட வாழ்க்கையையும் சூறையாடப்போவுதுன்னு. 



ஈழத் தமிழர் பிரச்சினையில் ராஜீவ் நிலைப்பாட்டையும் அவர் கொல்லப்பட்டதையும்பற்றி உங்கள் கருத்து என்ன?


 
ராஜீவோட அணுகுமுறையை எப்படிப்பா சரின்னு சொல்ல முடியும்? ஈழத் தமிழர்கள் எவ்வளவு பேர் இந்திய அமைதிப்படையால கொல்லப்பட்டாங்க; எவ்வளவு தமிழ்ப் பெண்கள் சீரழிக்கப்பட்டாங்க; ராஜீவோட தவறான முடிவுதானே இதுக்கெல்லாம் காரணம்? அவரு அவங்கம்மா பாதையைப் பின்பற்றியிருக்கலாம்கிறது என்னோட கருத்து. ஆனா, எதுக்காகவும் ஒரு உயிர் கொல்லப்படக் கூடாதுன்னு போராடுற நான் எப்படி ராஜீவ் கொல்லப்பட்டதைச் சரின்னு சொல்வேன்? பெரிய தப்புப்பா. 



பேரறிவாளன் இந்தக் கொலை வழக்கில் சிக்கியபோது, உங்கள் வீட்டுச் சூழல் எப்படி இருந்தது? அதை நீங்கள் எப்படி உள்வாங்கினீர்கள்?

 
அப்போதான் என் பெரிய பொண்ணு அன்புக்கு மாப்பிள்ளை பார்த்திருந்தோம். சின்ன பொண்ணு அருள் படிச்சுக்கிட்டிருந்தா. அறிவுக்கு அப்போ 19 வயசு. டிப்ளமோ படிச்சிருந்தவன் வேலை செஞ்சுக்கிட்டே இன்ஜினீயரிங் படிக்கிறதுக்கு ஏதுவா சென்னையில பெரியார் திடல்ல தங்கியிருக்கான். ஏன் அங்க தங்கியிருந்தான்னா, அதுதான் அன்னைக்குச் சொந்தக்கார வீடு. இந்த நெலமையிலதான் மே 21-ம் தேதி ராஜீவ் கொல்லப்படுறார். ஜூன் 10-ம் தேதி ராத்திரி 12 மணிக்கு எங்க வீட்டுக் கதவு தட்டப்படுது. 


“உங்க மகன்கிட்டே சில விவரங்களை விசாரிக்கணும்; ரெண்டு நாள்ல ‘மல்லிகை'க்கு வரச் சொல்லுங்க”னு சொல்லிட்டுப் போனாங்க. படிப்புல ஆகட்டும், பண்புல ஆகட்டும், ரொம்ப உயர்வானவன் அறிவு. நம்ம பக்கம் எந்தத் தப்பும் இல்லையேங்கிற தைரியத்துல நாங்க தயாரானோம். மறுநாள் காலையிலேயே அனுப்பிடுறோம்னு சொல்லிதான் அவனை அழைச்சுக்கிட்டுப்போனாங்க. ஆனா, என் புள்ள இன்னும் வெளியே வரலைய்யா… 



இந்த வழக்கில் பேரறிவாளன் சிக்கியதற்கான பொறி எது?


 
அன்னைய காலச் சூழல். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவா ஒவ்வொரு தமிழரும் அனுதாபம் காட்டுன நேரம் அது. தமிழ் உணர்வாளர்கள் பலரோட வீட்டையும் போல எங்க வீட்டுலேயும் தம்பி படம் மாட்டியிருந்துச்சு. அறிவு, அவங்க அப்பா ரெண்டு பேரும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தவங்க. கூடவே, நளினியோட தம்பி பாக்கியநாதன், தி.க. கூட்டங்கள் வாயிலா இவங்களுக்கு அறிமுகமாயிருந்தார். இது எல்லாத்தையும் சேர்த்தே அறிவைக் குற்றவாளியா ஜோடிச்சாங்க. 



ஆரம்பத்தில், உங்கள் மகன்தான் வெடிகுண்டைத் தயாரித்தவர் என்று சொன்னார்கள் இல்லையா?

 
 
அறிவு ஒரு வெடிகுண்டு நிபுணன்னே ஜோடிச்சாங்கப்பா. அந்தப் பொய்யை நம்பவைக்க முடியாததால, அறிவு பேட்டரி வாங்கிக்கொடுத்தான்; அந்த பேட்டரியைப் போட்டுதான் குண்டை வெடிச்சாங்கன்னு கதையை மாத்தினாங்க. உண்மை என்னன்னா, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை இவங்களால பிடிக்க முடியலை. அதனால, பிடிச்சவங்களையெல்லாம் குற்றவாளியா மாத்தினாங்க. அப்போ அவங்க போடுற ஆட்டத்துக்கு ஏத்த மாதிரி ஒரு சட்டம் இருந்துச்சு. தடா. ஒருத்தரைப் பிடிச்சுட்டுப்போக எந்தக் காரணத்தையும் சொல்ல வேண்டியது இல்லை. என்ன குற்றச்சாட்டை வேணும்னாலும் சுமத்தலாம். அடிச்சுத் துவைச்சு மிரட்டி வாங்குற கையெழுத்துகளை வெச்சு வாக்குமூலம் தயாரிக்கலாம். மூடின அறைக்குள் யாரையும் விடாம விசாரிக்குற எல்லாத்தையும் நீதிமன்றம் ஏத்துக்கும். அப்படி ஏத்துக்கிட்டுதான் உலகத்துல எந்த நாட்டுலேயும் நடக்காத கொடுமையா, 26 பேருக்குத் தூக்கு தண்டனையை விதிச்சுது. 



பேரறிவாளனுக்கு நீதிமன்றங்களில் மூன்று முறை மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. உச்சக்கட்டமாக, குடியரசுத் தலைவரே கருணை மனுவை நிராகரித்தார். அந்தச் சூழலையெல்லாம் எப்படி எதிர்கொண்டீர்கள்? 



ஒவ்வொரு முறையும் நெஞ்சு வெடிச்சுச் சிதறுற வலியைக் கடந்துதான்பா வந்தேன். அதெல்லாத்தையும்விடப் பெரிய கொடுமை, கருணை மனு நிராகரிக்கப்பட்டதுக்கு அப்புறம் வேலூர் சிறையிலேர்ந்து, ‘செப்டம்பர் 9-ம் தேதி தூக்கிலிடப்படும் உங்கள் மகனின் சவத்தை நீங்கள் பெற்றுச்செல்ல வேண்டும்’னு அனுப்பப்பட்ட கடிதம். ஒரு தாயா, என் நெலமையை அன்னைக்கு நீங்க யோசிச்சுப் பாருங்க... நான் சந்திச்ச அதிர்ச்சிக்கெல்லாம் நான் எப்பவோ செத்துருக்கணும். வீட்டுல ஏற்கெனவே உடம்பும் நைஞ்சு மனுசும் நைஞ்சுபோய் உட்கார்ந்துருக்குற அப்பா; இதுல அம்மா நானும் போய்ட்டா என் புள்ளையோட நெலமை என்னவாகும்? இந்த ஒரே கேள்வியும் வைராக்கியமும்தான் இன்னும் என்னை உசுரோட வெச்சிருக்கு. 



பேரறிவாளன் விடுதலைக்கான இந்தப் போராட்டத்துக்கு இடையிலேயே சிறைச் சூழல் மாற்றத்துக்காகவும் போராடினீர்கள் அல்லவா?

 
ஆமாம். வெளியிலேர்ந்து பாக்குற மாதிரி நம்ம விசாரணை அமைப்புகளும் சிறைகளும் அவ்வளவு சாதாரணமான இடம் இல்லப்பா. அதிகாலையிலேயே புறப்பட்டு, பல பஸ்ஸு மாறி நாள் முழுக்கக் கொதிக்குற வெயில்ல காத்திருப்பேன், எதுக்கு? அஞ்சு நிமிஷம் புள்ள முகத்தைப் பார்க்குறதுக்கு. ஈவிரக்கமே இல்லாம துரத்தியடிச்சுடுவாங்க. ஆரம்பக் கட்டத்துல ‘மல்லிகை'க்கு அறிவைப் பார்க்கப் போனப்ப நடந்த சம்பவம் இது. பல நாள் காத்திருந்து அஞ்சு நிமிஷ அனுமதி வாங்குறேன். வயித்துக்கோளாறு. கூட இருந்த பெண் காவலர்கிட்ட சொன்னப்போ வேண்டாவெறுப்பா பக்கத்துல இருந்த ஒரு கழிப்பறையைக் காட்டுனாங்க. கதவைச் சாத்தப்போறேன்; 



தடுத்துட்டு “தொறந்துவெச்சுக்கிட்டே போ”னு சொன்னாங்க. அப்படியேதான் போனேன், கூனிக்குறுகி. வெளியிலேர்ந்து போற நமக்கே இந்த நெலமைன்னா, உள்ளே இருக்குறவங்க நெலமை எப்படி இருக்கும்? அறிவு எவ்வளவோ சித்திரவதைகளையும் அவமானங்களையும் தாங்கியிருக்கான். தனிமைச் சிறையில, ஒரு சின்ன கொட்டடியில இருக்குற அவனுக்கு எதைத் துணையாக் கொடுக்க முடியும்? அவன் கேக்குற பத்திரிகைகள், புத்தகங்களை எல்லாம் வாங்கிச் சுமந்துக்கிட்டுப் போவேன். 


அரிதா கிடைக்குற அஞ்சு நிமிஷ சந்திப்பும் எப்படி இருக்கும்னு நெனைக்கிறீங்க? ஒவ்வொரு சிறையிலேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சிறையில குறுக்கே கண்ணாடிச் சுவர் இருக்கும். எதுவும் பேச முடியாது. கேக்காது. எல்லாம் சைகைதான். இன்னொரு சிறையில ரெண்டடி இடைவெளியில ரெண்டு கம்பித் தடுப்பு இருக்கும். ரெண்டு பக்கமும் எல்லாரும் கத்துற கத்துல யாருக்கும் எதுவும் கேக்காது. இதையெல்லாம் எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனேன். இன்னைக்குக் கொஞ்சமாச்சும் அது மாற்றத்தைக் கொண்டாந்துருக்கு. 



தொடக்கத்தில் எல்லோருமே உங்களை விட்டு ஒதுங்கியிருப்பார்கள், இல்லையா?


 
நிறையப் பேர் ஒதுங்கிட்டாங்க. ஆனா, சில நல்ல மனுஷங்க அப்போதான் கைகோத்தாங்க. என்னோட பெரிய பொண்ணைப் பார்த்துட்டுப் போயிருந்தாங்கன்னு சொன்னேன் இல்லையா, அந்தச் சம்பந்தம் தட்டிப்போகலை. பேருக்கு ஏத்த மாதிரியே அமைஞ்ச மாப்பிள்ளை ராஜா ‘வழக்கெல்லாம் கிடக்குது’னு சொல்லி என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அறிவு விடுதலைக்காக ரொம்ப நாள் திருமணம் பண்ணிக்க மாட்டேன்னு காத்திருந்த ரெண்டாவது பொண்ணுக்கும் மாப்பிள்ளை தனசேகரன் அப்படித்தான் தேடிவந்தார். இன்னைய வரைக்கும் வழக்குக்காக ஏற்படுற பெருஞ்செலவை என் மகள்களும் மாப்பிள்ளைகளும்தான் பகிர்ந்துக்கிறாங்க. 


ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா? 



சில விஷயங்களை எல்லாம் பேச வேணாம்னு நெனைக்கிறேன்பா. அவ்வளவு துரோகங்கள் இருக்கு அறிவு கதையில. ரெண்டு உதாரணங்களை மட்டும் சொல்றேன். எந்த இயக்கத்தை எங்க உயிரா நெனைச்சோமோ, அந்தத் தி.க. என்ன பண்ணுச்சு தெரியுமா? அறிவு கைதுசெய்யப்பட்ட உடனே, இயக்கத்துக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அறிவிச்சுச்சு. சீக்கிரமே, பகுத்தறிவுக் கழக மாவட்டப் பொறுப்பாளரா இருந்த என்னோட கணவர் குயில்தாசனையும் ஒதுக்குச்சு. அவசர நிலைக் காலகட்டத்துல, கலைஞர் அரசு கவிழ்க்கப்பட்டப்போ, எதிர்த்துப் போராட நிதி வசூலிச்சுக்கிட்டு, ஊரையே திரட்டிக்கிட்டுப்போய், “தலைவா! நாங்க இருக்கோம் உன்கூட”னு நின்ன குடும்பம் எங்களோடது. ஆனா, அறிவு கைதுசெய்யப்பட்ட பின்னாடி இந்த 23 வருஷத்துல ஒருமுறைகூட அவரைச் சந்திக்க முடியலை. இதையெல்லாம் குற்றச்சாட்டா சொல்லலை. வேதனையாதான் சொல்றேன். இப்படி எவ்வளவோ கதைகளைச் சொல்லலாம். ஆனாலும், நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க. எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே


முதல்வரிடம் என்ன பேசினீர்கள்? ஏனையோர் இதைத் தேர்தல் நாடகம் என்றெல்லாம் விமர்சிக்கிறார்களே?


 
அவங்க கூப்பிடலை. நானாத்தான் ஓடினேன், நன்றி சொல்றதுக்காக. அவங்களைப் பார்த்தப்போ அழுகையைத் தாண்டி எதுவும் வரலை. “இவ்ளோ சந்தோஷத்தை என்னால தாங்கிக்கவே முடியலம்மா”னு கதறினேன். “இனி நீங்க அழக் கூடாது. உங்க மகன் சீக்கிரமே வந்துடுவார்”னாங்க. விமர்சிக்கிற வாய்கள் இத்தனை நாள் என்ன பேசுச்சு, என்ன செஞ்சுச்சுனு ஊருக்குத் தெரியும். 



முதல்வர் முடிவுக்கு, பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் எதிர்ப்பால், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது… 



என்ன வேணா நடக்கட்டும். முதல்வரம்மா சொல்லிட்டாங்க. இனி என் புள்ள வெளியே வர்றதை யாராலும் தடுக்க முடியாது. 



சரி, பிள்ளை வந்துவிடுவார். அடுத்து என்ன?


 
அவனைப் பத்தி ஆயிரம் கனவு இருக்குப்பா. ஆனா, அதையெல்லாம் தாண்டி செய்ய வேண்டிய கடமை ஒண்ணு இருக்கு. இந்த நாட்டுல மரண தண்டனையை ஒழிக்கணும். என் புள்ள விஷயத்துல, எதிர்பாராதவிதமா நிறைய விஷயங்கள் நடந்துச்சு. வாக்குமூலத்தைப் பதிவுசெஞ்ச சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் பின்னாடி, “நான் கடமையிலிருந்து வழுக்கியிருக்கேன்; வாக்குமூலத்தை பேரறிவாளன் சொன்னபடி முழுசா பதியலை”னு சொன்னார். 




அதேபோல, மரண தண்டனையை விதிச்ச நீதிபதி கே.டி. தாமஸும் “இவ்வளவு ஆண்டுகள் காத்திருக்கவெச்சு மரண தண்டனை கொடுப்பது சரியில்லை”னு சொன்னார். செங்கொடி மாதிரி ஒரு இளங்குருத்து தன்னை மாய்ச்சுக்கிட்டு உருவாக்கின போராட்டத்தீ இந்த மாநிலமே மரண தண்டனைக்கு எதிரா திரளக் காரணமா இருந்துச்சு. அரசாங்கம் சட்டப்பேரவையில, “மரண தண்டனையை ஆயுள் தண்டனையா குறைக்கணும்”னு தீர்மானம் நிறைவேத்துச்சு. இப்போ முதல்வர் விடுதலை அறிவிப்பையும் வெளியிட்டிருக்காங்க. ஆனா, எல்லாருக்கும் இதெல்லாம் வாய்க்குமா, சாத்தியமா? 


என் காலத்துக்குள்ள இந்த நாட்டுல மரண தண்டனையை ஒழிக்கணும். அதுக்காகக் கடைசி மூச்சு இருக்குறவரைக்கும் போராடுவேன்.” 


- கனக்கும் பையை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு மாற்றுகிறார் அற்புதம் அம்மாள். 


சமஸ், தொடர்புக்கு: [email protected] 


thanx - the hindu



READERS VIEWS


  • Anbarasu Jayaraman at MPS Limited - An Adi-Mps Company
    "வயித்துக்கோளாறு. கூட இருந்த பெண் காவலர்கிட்ட சொன்னப்போ வேண்டாவெறுப்பா பக்கத்துல இருந்த ஒரு கழிப்பறையைக் காட்டுனாங்க. கதவைச் சாத்தப்போறேன்; தடுத்துட்டு “தொறந்துவெச்சுக்கிட்டே போ”னு சொன்னாங்க. அப்படியேதான் போனேன், கூனிக்குறுகி. வெளியிலேர்ந்து போற நமக்கே இந்த நெலமைன்னா, உள்ளே இருக்குறவங்க நெலமை எப்படி இருக்கும்?" இது போன்ற கொடுமைகளை நிச்சயம் களைய வேண்டும்.
    about 4 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
  • k.p.supramanian
    23 ஆண்டுகளாக நினைத்து நினைத்து ஜோடிக்கப்பட்ட கற்பனை கதைகளை இந்த தேசத்தின் பிரதமரை கொன்ற தீவிரவாதியின் தாய் இன்று பேட்டியின வாயிலாக தெளிவாக பேசியிருக்கின்றார் .
    about 4 hours ago ·   (5) ·   (21) ·  reply (1)
    raajaa  · P.Padmanabhan   Down Voted k.p.supramanian 's comment
    • அர்ஜுனன் Arjunan
      //இந்த தேசத்தின் பிரதமரை கொன்ற// ராகுல்தான் சொல்லுகிறார் என்றால் எல்லாருமே அப்படித்தானா? அவர் சாகும் பொழுது பிரதமரில்லை. அமெதி தொகுதியின் எம் பி மட்டுமே. முன்னாள் பிரதமர். சரி...ஒருவர் ஒரு முறை பிரதமராகி விட்டால் காலத்தும் அதுதானா? இப்போதும் கூட கௌடா இருக்கிறார். முன்னாள் பிரதமர்தான் இன்று அவர்.
      about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0)
  •  Johnson Johnson from Chennai
    மரணதண்டனையை ஒழித்துவிட்டு இறந்தவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்.அவர்கள் உயிர் மட்டும் போகலாமா?
    about 4 hours ago ·   (6) ·   (3) ·  reply (0)
    TSJR   Up Voted Johnson Johnson's comment
  • AVUDAIAPPAN
    கண்ணீர்மல்க சொன்னகதையை படித்து கண்ணிர்வேட்டேன்.....எந்த தாயிக்கும் இந்தநிலைமை வரகூடாது ....முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி
    about 3 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • samy kumara from Paris
    இந்தியஇலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட மறுத்ததுடன் ஏனைய தமிழ் ஆயுதக் குழு உறுப்பினர்களைப் படுகொலை செய்யத் தொடங்கிய போது அதனை சீர்செய்து புலிகளை சமாதானப்படுத்துவதற்காக தனது படைகளைப் பயன்படுத்துவதென இந்தியா தீர்மானித்தது. இதற்காக இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டது. சிங்கள இராணுவ முகாமில் முறைப்பாடுகள் செய்தவர்கள், பத்து கிராம் போதைப் பொருட்களை வைத்திருந்தவர்கள், காவற்துறைக்கு தகவல் வழங்கியோர் என 102 பொதுமக்களை புலிகள் அமைப்பினர், நாசி ஜேர்மனியரின் பாணியில் படுகொலை செய்து குப்பைக் கிடங்குகளில் போட்டனர். இதனை என்னால் நினைவுபடுத்த முடிகிறது. இந்தியப் படைகளுடனான முதல் நாள் யுத்தத்தின் போது ரூபவாகினி தொலைக்காட்சி சேவைப் பணியாளர்கள் சிலர் புலிகள் அமைப்பால் உயிருடன் பிடிக்கப்பட்டு மின்விளக்கு கம்பத்துடன் ரயர்களால் கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டனர்.
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • samy kumara from Paris
    என்னமோ நடக்குது... எதுவுமே நல்லால்லே... அற்புதம் அம்மாளைப் பொறுத்தவரை ஒரு தாய் என்ற வகையில் தன்னுடைய மகனின் உயிர் காப்பாற்றப்பட்டதையிட்டு அவர் அடைகின்ற மகிழ்ச்சியை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், அதை வைத்தே அரசியல் பண்ணுவதைத்தான் சகிக்க முடியல்லை அம்மாடி.... அதெல்லாஞ்சரி, தூக்குத் தண்டனையை நிராகரித்தது தனியே பேரறிவாளனுக்கு மட்டும்தானா அல்லது சாந்தன், முருகன் உள்ளிட்ட மூவருக்குமா? ஏனென்றால், எங்கே பார்த்தாலும் பேரறிவாளனைத் தவிர, ஏனைய இருவரைப்பற்றிய சேதிகளையும் அவர்களுடைய சொந்த பந்தங்களையும் காணவேயில்லை. சாந்தனின் வயதான தாய் மகேஸ்வரியை பி.பி.ஸி மட்டும் தேடிக் கண்டு பிடித்து அவருடைய கதையைக் கேட்டிருக்கிறது. மகேஸ்வரி அம்மா சொல்வதைக் கேட்டால்... தன்னுடைய பிள்ளையை (சாந்தனை)ப் போய்ப்பார்க்கவே வசதியில்லை. அவனை இன்றுவரை தான் பார்க்கவில்லை. அவனுக்காக யாருமே (புலிகள் உள்பட) உதவி ஏதும் செய்யவில்லை என்று கண்ணீர் வடிக்கிறார். இதைப்போலத்தான் முருகனின் பெற்றோரைப்பற்றியும் யாரும் கவலைப்பட்ட மாதிரித் தெரியவில்லை. என்னமோ நடக்குது... ஏதேதோ சொல்லுது... ஒண்ணுமே நல்லால்லே...
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • samy kumara from Paris
    ஐயோ... ஐயோ... ஐயோ... பாக்கப் பாக்கக் கண்களால் சகிக்க முடியவில்லை. கேட்கக் கேட்கக் காதுகளால் முடியவில்லை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே என்று பாடுவதற்கு நானொன்றும் பாரதியார் இல்லை. நான் ஒரு சாமானியன் ஐயா... ஆனால், பொய்யையும் புரட்டையும் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக்கொண்டிருக்கலாம்? இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் நெஞ்சுக்குத்தோ மாரடைப்போ வந்தே தீரும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று பேரின் தூக்குத் தண்டனைத் தீர்ப்பு நிராகரிக்கப்பட்ட பிறகு ஆளாளுக்கு ஒவ்வொருவரும் அடிக்கிற கூத்தும் போடுகிற நாடகங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. கருணாநிதி சொல்கிறார், தான் எழுதிய கடிதங்களாலும் நிறைவேற்றிய தீர்மானங்களாலும்தான் இந்த நியாயம் கிடைச்சிருக்கு என்று என்ன சுத்துச் சுத்துறாரய்யா... சிங்கமென்றால் சிங்கம்தான். தமிழர்களுக்குக் கிடைத்த அருமையான ஒரு தங்கத் தலைவன்.
    about 3 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
  • R.Subramanian from Bangalore
    எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது, அது ஏன் ராஜீவ் காந்தி கொலைக்கு இந்திய ராணுவத்தின் செயல்களை காரணம் காட்டுகிறார்கள் ? ராஜீவ் காந்தியோ அல்லது இந்திய ராணுவ தலைமையோ இலங்கை தமிழர்களை அழிக்க சொன்னார்களா ? அல்லது இலங்கை தமிழ் பெண்களை கற்பழிக்க சொன்னார்களா ? மனநிலை சரியாக இருக்கும் யாராவுது அப்படி சொல்வார்களா ? ராஜீவ் காந்தி இந்திய படைக்கு கொடுத்த முக்கிய உத்தரவே எந்த காரணம் கொண்டும் பொது மக்களுக்கு துன்பம் வர கூடாது எனபது தான். அதனால் தான் இந்திய படை விமானங்களை ஒரு முறை கூட விடுதலை புலிகளுக்கு எதிராக பயன்படுத்தவில்லை... ஒரே ஒரு முறை ஹெலிகோப்டேரை பயன்படுத்தினார்கள்... இவ்வுளவு நடந்தும் விடுதலை புலிகள் எப்படி இந்திய ராணுவத்தை எதிரியாக மாற்றினார்கள் என்று யாராவுது ஒருவர் சொல்ல முடியும்மா ?
    about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • R.Subramanian from Bangalore
    இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தற்காலிகமாக ஏற்றுகொள்கிறோம் என்று சொன்ன விடுதலை புலிகள், தமிழ் பகுதியின் அதிகாரம் முழுவதும் தங்களுக்கே வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் இந்திய அரசு ஜனநாயகத்தின் வழியில் பல குழுக்களுக்கும் அதிகாரத்தில் பங்கு உண்டு என்று சொன்னது அதன்படி பலருக்கும் அதிகாரம் கொடுத்தது அதில் விடுதலை புலிகளுக்கு தான் அதிக முக்கியத்துவும் கொடுக்கப்பட்டது, இருந்தும் முதல்வர் பதவி பிரபாகரனுக்கு கொடுக்காமல் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது, அது தான் பிரச்சனையின் மூலம்.... ஆரம்பம் முதலே இந்திய அரசு விடுதலை புலிகளை தான் இலங்கை தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்று அங்கிகரிக்க வேண்டும் சொல்லி வந்தனர் அது இல்லாமல் எல்லோருக்கும் அதிகாரம் என்பது பிரபாகரனால் ஏற்க முடியவில்லை. அதன் எதிரொலியாக விடுதலை புலிகள் செய்த காரியம் மனித தன்மை இருக்கும் யாராலும் ஏற்க முடியாத ஒன்று, சொந்த சகோதர போராளிகளை நூற்றுகணக்கில் இரக்கமே இல்லாமல் ஒரு சில நாட்களில் புலிகள் கொன்று ஒழித்தார்கள்.
    about 2 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
  • R.Subramanian from Bangalore
    இலங்கை அரசோடு விடுதலை புலிகள் சேர்ந்த பிறக்கு தான் இந்திய ராணுவத்தை பற்றிய அவதூறுகள் பரப்பப்பட்டன. அதற்க்கு முன் இந்த அவதூறுகள் இல்லை... அதற்கு காரணம் இலங்கை அரசை பொருத்தவரையில் இந்தியாவும் இலங்கை தமிழர்களும் நட்போடு இருந்தால் அவர்களுக்கு பிரச்சனை அதனால் இந்திய தேசத்தின் மீது வெறுப்பை இலங்கை மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டியது அவசியம், இலங்கை அரசின் அந்த துரோகத்திற்கு விடுதலை புலிகள் மனசாட்சி இல்லாமல் துணை போனார்கள். அதன் பிறகு ராஜீவ் காந்தி மரணத்தினால் தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக ஏற்ப்பட்ட கொந்தளிப்பை பார்த்து இந்திய ராணுவத்தின் செயலால் நாங்கள் ராஜீவ் காந்தியை கொல்ல வேண்டி வந்தது என்பது போன்ற ஒரு பெரும் பொய் பிரச்சாரம் விடுதலை புலிகளாலும் அவர்களின் தமிழக ஆதரவாளர்களாலும் அவிழ்த்து விடப்பட்டது. இதில் கேட்க்க மறந்த விஷயம் இந்திய ராணுவத்திற்கு எதிராக சொல்லப்பட்ட குற்றசாட்டுகளுக்கு என்ன ஆதராம் என்பது, தமிழக அரசியல்வாதிகள் யாரும் அதை கேட்கவில்லை.
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • raajaa from Sharjah
    ஊழல் பெருத்த, நேர்மை மற்றும் நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், சட்டத்தை சிறிதும் மதித்து நடக்காத மக்களும் நிரம்பியுள்ள இந்தியத் திருநாட்டில், குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதும், அப்பாவிகள் தண்டிக்கப் படுவதும் என்றும் தொடர் கதையாகவே இருக்கும்.
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • A.SAHABUDEEN Abdul Samad Distribution at Canadian University of Dubaifrom Dubai
    அற்புதம்மாளின் பேட்டி அனைவருக்கும் ஒரு பாடம், கூடா நட்பு கேடாய் முடியும், எவ்வளவு தமிழ் ஆர்வலாராக இருந்தாலும் ஒரு வேலை உணவு அளிக்கலாம் இதுதான் சாதாரண மனிதன் நிலை, அதை தாண்டி வேறு ஏதாவது தெரியாத ஒருவருக்காக செய்ய நினைத்தால் பேரறிவாளனின் நிலை அனைவருக்கும் ஒரு பாடம்.
    about 2 hours ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • R.Subramanian from Bangalore
    இதில் பலரும் விடுதலை புலிகள் தரப்பை மட்டுமே பேசுகிறார்கள் இந்திய ராணுவ தரப்பையும், அதற்க்கு ஏற்ப்பட்ட இழப்பை பற்றி ஒருவரும் பேசுவதில்லை... தமிழக பத்திரிகைகள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒருவர் கூட இந்திய ராணுவத்தின் தரப்பை பற்றி நேர்மையோடு அணுகவில்லை. இலங்கை தமிழர்களுக்கு உதவ சென்ற இந்திய ராணுவத்தை வில்லனாக்கியது விடுதலை புலி தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட துரோகம் என்றே சொல்வேன் அவரின் சுயநலத்திற்காக இலங்கை தமிழர்களில் ஆரம்பித்து இந்திய பிரதமர் வரையில் பலரும் மரணம் அடைய நேர்ந்தது.... ஆனால் இதை பற்றி எல்லாம் தமிழகத்தில் பேச ஒருவரும் இல்லை, காரணம் விடுதலை புலிகள் கொடுக்கும் பிரச்சார பணம், அதற்காக சொந்த தேசத்தை காட்டி கொடுக்கும் கூட்டம்.

எப்படிக் கற்பது ஆங்கிலம்? ( HOW TO ;LEARN ENGLISH?)

ஆங்கிலத்தின் தேவையைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் புதிதாக எழுதத் தேவையில்லை. ஆங்கிலம் இன்று நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார, கலாச்சார அடையாளம். இந்த நிலை இக்கால உலகப் பொருளாதார அமைப்பின் விளைவு. ஆங்கிலம் நமக்கு இரண்டாம் மொழி. அதைக் கற்க வேண்டும் என்பதில் நம்மில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், அதை எப்படிக் கற்க / கற்பிக்க வேண்டும்? 



நடக்கப் படி… பின் ஓடப் படி!


 
மொழி இல்லாமல் கல்வி பெற முடியாது; அறிவு பெற முடியாது. அனுபவத்தின் மூலம் அறிவு பெறவும் மொழி தேவை. இந்த மொழி, தெரிந்த மொழியாக இருந்தால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த முடியும். தெரியாத மொழியில், தெரியாத அறிவைப் பெற விரும்புவது கண்ணைக் கட்டிக்கொண்டு நடக்கப் பழகுவது போன்றது. 



‘‘வீட்டில் பயின்ற தாய்மொழியின் மூலம் பள்ளியில் கல்வி கற்பதே முறையானது’’ என்று கல்வியாளர்கள் சொல்வதற்கு இந்த இயற்கை விதி ஒரு காரணம். ஆங்கிலத்தின் மூலம் கல்வி பெற வேண்டும் என்றால், முதலில் ஆங்கிலத்தை மொழியாகப் படியுங்கள் என்று அவர்கள் சொல்வதற்கும் இது ஒரு காரணம். முதல் மொழியை முறையாகச் சில ஆண்டுகள் படித்துப் பெறும் மொழியின் பயன்பாட்டுத் திறன்களை இரண்டாவது மொழிக்கு மாற்றம் செய்யலாம். நடக்கப் படித்த பின் ஓடப் படிப்பது எளிது. 



ஆனால், இன்று இந்தியாவில் கல்விக்கொள்கை இந்த இயற்கை விதியைத் தலைகீழாகப் பிடிக்கிறது. மொழிவழிக் கல்வி என்பதற்குப் பதில் கல்விவழி மொழி என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. அதாவது, பாடங்களைப் படிப்பதன் மூலம் மொழியைப் படிப்போம் என்று சொல்கிறது. இதன் விளைவு, கல்வி என்பதே ஆங்கிலத்தைப் படிப்பதற்காகத்தான் என்னும் நிலை. 



இதனால், இரண்டு, மூன்று தலைமுறைகளாக ஆங்கிலம் படித்த குடும்பங்களைத் தவிர, மற்ற குடும்பத்துப் பிள்ளைகள் கல்வியையும் சரியாகப் பெறுவதில்லை; ஆங்கிலத்தையும் நன்றாக அறிந்துகொள்வதில்லை. கல்விக்கும் மொழிக்கும் உள்ள 

உறவைத் தலைகீழாகப் பார்க்கும் எண்ணத்தோடு ஒரு வகையில் தொடர்புடையதுதான் ‘தமிழ்வழிக் கல்வி என்பது தமிழை வளர்ப்பதற்காக' என்ற கருத்தும். தமிழின் வளர்ச்சி இக்கல்வியின் விளைவாக நிகழலாம்; அதுவே, இதன் நோக்கமாக அமையக் கூடாது. தமிழ்வழிக் கல்வியின் நோக்கம் தரமுள்ள கல்வியைத் தருவது. மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். 


நடைமுறை எது?

 
அரைகுறை ஆங்கிலம் இல்லாவிட்டால் தரமான கல்வியறிவும்கூட சந்தையில் விலைபோகாது என்பது நடைமுறை உண்மை. இது, ஆங்கிலத்தை ஒரு மொழியாக, அதில் நல்ல திறன் பெறும் அளவுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்னும் கொள்கையை முன்னிறுத்துகிறது. இது முடியும். 


சீன மொழியை நன்றாகக் கற்க விரும்பும் ஒருவர், எல்லாப் பாடங்களையும் சீன மொழியின் மூலம் படிப்பதால் அந்த மொழியைக் கற்பேன் என்று சொல்வதில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் திறன்படப் பேசவும் எழுதவும் வல்ல அண்ணா, ராஜாஜி போன்ற பழைய தலைமுறையினர் பலர் பள்ளிக்கல்வியைத் தமிழ் மூலமே பெற்றவர்கள்; ஆங்கிலத்தை மொழியாகக் கற்றவர்கள். பழைய தலைமுறை விஞ்ஞானிகளும் அப்படியே. 



கல்வியியலில் உலக அளவில் ஒப்புக்கொள்ளப்படும் ஒரு ஆராய்ச்சி முடிவு, தாய்மொழியின் வழி முதல்நிலைக் கல்வி பெறுவது தன்னிச்சையாகவும் புதுவழியில் சிந்திப்பதற்கும் ஏற்றது என்பது; தன்னைப் பற்றியும் தன் மொழியைப் பற்றியும் வரும் கழிவிரக்கத்தைத் தவிர்க்கும் ஒன்று என்பது. இக்கல்வி மனவளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் அடிப்படை. சமூகம், மனிதன் தொடர்பான ஆய்வில் பல ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் கொள்கைகள் அபூர்வம். ஆகவே, இந்த முடிவு முக்கியமான ஒன்று. 



காற்று வீசும் திசையில்…


 
இருப்பினும், இன்றைய தமிழ்நாட்டில் பொதுமக்களில் - கற்றவர்களும் கல்லாதவர்களும் - பெரும்பான்மையினர் இதை ஏற்றுக்கொள்வதில்லை. கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் தங்கள் பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் பின்பற்றுவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், பொருளாதார உலகம் வேறுவகையில் நடப்பதே. இதை மக்களால் மாற்ற முடியாததால், காற்று வீசும் திசையிலேயே தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டுகிறார்கள். 



நிரூபணமான ஆய்வு உண்மைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் போக்கில் போவது புதிது அல்ல. புகைபிடிப்பதால் புற்றுநோய் வரலாம் என்பது நிரூபணமான விஷயம் என்றாலும், வேறு காரணங்களுக்காகப் புகைப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களால் லாபம் பெறுவதற்காக சிகரெட் தயாரித்து விற்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. கல்வி வியாபாரிகளும் ஆங்கிலவழிக் கல்வி தரும் பள்ளிகளை இதே காரணத்துக்காக நடத்துகிறார்கள். 



மக்கள் விரும்புவதைத் தருவது


 
மக்கள் விரும்புவதைத் தருவதுதான் இன்றைய அரசியல். இது, சந்தை வியாபாரத்தைப் போல. இலவசப் பொருள்கள் தருவதிலிருந்து ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளைத் தருவதுவரை இதுதான். குறைந்த விலைக்கு உயர்ந்த கல்வி என்பது சமாதானப்படுத்திக்கொள்ளும் குரல். மக்கள் தங்கள் வாக்குகளைக் கொடுத்து இந்தக் கல்வியை வாங்குகிறார்கள். பின், தங்கள் சக்திக்கு மீறிச் செலவும் செய்கிறார்கள். 



கொடுக்கும் விலை


 
ஆங்கில அறிவு காலத்தின் கட்டாயம் என்பது கல்வியாளர்களும் பொதுமக்களும் உணரும் ஒன்று. இந்த அறிவை உயர்ந்த முறையில் எப்படிப் பெறுவது என்பதில்தான் கருத்து வேறுபாடு. ஆங்கிலத்தை முதல் வகுப்பிலிருந்து எல்லாப் பாடங்களிலும் படிப்பதே ஆங்கில அறிவு பெற வழி என்பது பரவலாக இருக்கும் கருத்து. அதாவது, அதிகக் காலமும் அதிகச் சூழ்நிலைகளிலும் இரண்டாவது மொழியைக் கற்க வேண்டும் என்ற கொள்கை. இது எல்லோருக்கும் பொருந்தும் உண்மை அல்ல. உண்மையாக இருந்தாலும், இதற்குக் கொடுக்கும் விலையை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மனப்பாடம் செய்வதே கற்பது என்று நம்புவது, மொழியிலும் பாடத்திலும் திறன் குறைவது, ஆங்கிலத்தில் இருந்தால் அபத்தமும் சரியாகத் தோன்றுவது முதலியனவும் நாம் கொடுக்கும் விலையில் அடங்கும். 



ஒரு மொழியாகக் கற்று ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற முடியும் என்றும், தமிழில் முதலில் பெறும் மொழியின் பொதுத்திறன்களை ஆங்கிலத்துக்கு மாற்ற முடியும் என்றும் செய்துகாட்டினால், மொழிக்கல்வி பற்றிய தங்கள் தவறான, ஆதாரம் இல்லாத எண்ணத்தை மக்கள் 


மாற்றிக்கொள்ளலாம். இதைச் செய்துகாட்டும் பள்ளிகளை அரசும் லாபநோக்கற்ற தனியார் நிறுவனங்களும் நடத்திக்காட்ட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தையும் தமிழையும் கற்றுக்கொடுக்கும் முறையில் அடிப்படையான மாற்றங்கள் செய்ய வேண்டும். மக்கள் எண்ணத்தில் இதன் பலன் பிரதிபலிக்க ஒரு தலைமுறை ஆகலாம் என்பதால், இந்த விஷயத்தில் நமக்குப் பொறுமையும் தேவை! 


WRITTEN BY = இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள், நாகரிகங்கள் துறையில் வருகைதரு பேராசிரியர்.

 
THANX - THE HINDU

ஜிகினா ஜின்னு ,ஜீவிதம் ,மிருதுளா

1. என்னிடம் அனுமதி பெறாமல் விஜய் என் பேக்கில் டச் .அது என் டூப் - காஜல் புகார் # ஜில்லா பப்ளிஸிட்டி ஐடியா


===============


2 சாப்பிடவிடாமல், தூங்கவிடாமல் வேலை வாங்கினார்: தேவ்யானி மீது பணிப்பெண் குற்றச்சாட்டு: # இத ஒரு பயலும் தட்டிக்கேட்க மாட்டான் பாருங்க


================



3  ஜில்லா ல டைரக்சன் டச் எப்டியோ ஹீரோ டச் சூப்பரு # விஜய் BACK டூ FORM ;-)(



================


4  இன்று சொர்க்கவாசல் திறப்பு # எப்டி டைட்டில்?



==================



5  ஹாலிவுட்டில் எடுக்கப்படும் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கே வேட்டி கெட்டப் தானாம் # வீரம் எப்க்ட்



==================



6 பில்லா 2 ,ஆரம்பம் ,வீரம் படங்களில் அஜித் டயலாக் டெலிவரியில் ஒரு மாஸ் தெறிப்பதை கவனித்தீர்களா? # ஷார்ப் & ஷார்ட்



====================



7  14 1 14 வெளியாவதாக இருந்த ஜாக்கிசான் ன் படமான போலீஸ் ஸ்டோரி வீரம் ,ஜில்லா ஹிட்டால் தள்ளி வைக்கப்பட்டது # ஜாக்கிக்கு தமிழ் தெரியாது



====================



8  மாஸ் வெற்றி ,தமாஷ் வெற்றி 2 க்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் ;-))



===================


9  ஜில்லா வில் விஜய் ரொம்ப யூத்தா இருக்கார்.வீரம் ல அஜித் செம கெத்தா இருக்கார் ;-))) # சண்டை



==================



10 அஜித் படம் ஹிட் ஆனதை விஜய் ரசிகரும்,விஜய் படம் ஹிட் ஆனதை அஜித் ரசிகரும் ஒத்துக்கவே மாட்டாங்க போல ;-))



===================



11 போய் சமைக்கனும் என்பதைக்கூட போய் குக் பண்ணனும் என சுத்தி வளைச்சு சொல்வதே மாடர்ன் பிகர்களின் வழக்கம்


====================



12 கண் அடிக்கும் பிகர் = ;-)) நோஸ் கட் அழகி = :0 .வாய்க்குப்பூட்டுப்போட்ட பிகர் = :-& , அட்டு பிகர் = :-@ , ஹைக்ளாஸ் பிகர் = :- $



===================


13 நான் சின்னபையனா இருக்கும்போது எக்ஸாம் ல அடிஷனல் பேப்பர் நிறைய வாங்கி எதுனா எழுதுனா மார்க்கும் நிறைய வரும் னு நினைச்சேன்



====================


14  பொண்ணு சகோதரா னு அர்த்தத்துல பாய் னு கூப்ட்டாக்கூட பத்தமடைப்பாய் ல படுத்திக்கிட்டே ",நான் பாய் இல்லை.இந்து",னு மொக்கை போடுவான் தமிழன்



======================



15 எல்லாரும் புத்தகத்தைப்பத்திப்பேசும்போது கூட பணக்காரன் செக் புக் பத்தியும் ,சாட்டிங் பார்ட்டிகள் பேஸ் புக் பத்தியும் தான் பேசுவாங்க



======================



16 பசு மாதிரி சாந்தமா இருக்கற பொண்ணு கிட்டே " ஏன் மாடு மாதிரி இருக்கே?" ன்னா அதுக்கு கோபம் வந்துடும்.ஆனா பசு ,மாடு 2 ம் 1 தான்



=======================



17 உலகப்பட விழாவில் ஏகோபித்த வரவேற்புப்பெற்ற கில்மா சினிமா - BLUE IS THE WARMEST COLOUR ( தீபா மேத்தா வின் FIRE படம் சாயல்)



=====================



18 சொந்த ஊர் ல அரசு ஆஸ்பத்திரி ல புதுசா ஏதாவது நர்சோ ,லேடி டாக்டரோ டியூட்டி ல ஜாயின் பண்ணா ஏதோ ஒரு செக்கப்க்கு உள்ளார பூந்துடுவான் தமிழன்



========================



19 சினிமா டைட்டிலுக்கு வேற எங்கேயும் போக வேணாம்.ட்விட்டர் வந்தா போதும் # ஜிகினா ஜின்னு ,ஜீவிதம் ,மிருதுளா



-=======================



20 முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்" - செய்தி # வர வர எல்லாரும் டிராமா போட ஆரம்பிச்ட்டாங்க.ராமா!



===========================

Monday, February 24, 2014

மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நேர்காணல் @ நியூயார்க் டைம்ஸ்,

A

சாதித்ததைவிட முக்கியம் சாதிக்கப்போவது- சத்யா நாதெள்ள நேர்காணல்


‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்று ஒரு சில வாரங்களே ஆகியிருக்கின்றன. தேனிலவுக் காலத்தை எல்லாம் உதறிவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறார் சத்யா நாதெள்ள. 



உங்களுக்கு முன் இந்தப் பதவியை வகித்த ஸ்டீவ் பால்மரிடமிருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன?


 
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், வருடாந்திர ஆய்வுக்கூட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். “நான் எப்படிச் செயல்படுகிறேன்?” என்று கேட்டேன். “உங்களுக்குத் தெரியும், எனக்குத் தெரியும், மற்றவர்களுக்கும் தெரியும். உங்களைப் போன்ற உயர் நிலையில் உள்ளவர்கள் எப்படிச் செயல்படுகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே, அதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதே இல்லை” என்றார். 



“எனக்கு முன்னால் இந்தப் பதவியில் இருந்தவர்களுடன் ஒப்பிடும்போது நான் எப்படிச் செயல்படுகிறேன் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? ” என்று கேட்டேன். 



“யாருக்கு வேண்டும் இந்த ஒப்பிடல் எல்லாம்; அவர்கள், அவர்களுடைய காலத்தில் அவர்களுக்கு இருந்த வசதிகளுடன், அவர்களுக்கு ஏற்பட்ட சவால்களைச் சமாளித்திருப்பார்கள். அதை வைத்து உங்களை இப்போது எப்படி எடைபோட முடியும்? 



உங்களுக்குள்ள இலக்குகளை எப்படி நீங்கள் அடைகிறீர்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். இதில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், முன்னால் இருந்தவர் எப்படிச் செயல்பட்டார் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இப்போதுள்ள பிரச்சினை கள், சவால்களைத் தீர்ப்பதில் மட்டுமே நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். உங்களுடைய கடமையை, முழுத் திறமையுடன், அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுகிறீர்களா என்று நேர்மையாக நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்” என்றார். 



பில் கேட்ஸ் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

 
பில் கேட்ஸ் எதையும் தீவிரமாகப் பகுப்பாய்வு செய்வதில் வல்லவர். அவர் எல்லாத் தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டு, எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பார். நாம் எதையாவது கூறத் தொடங்கும்போது முதல் ஐந்து விநாடிகளுக்குள்ளாகவே நாம் சொல்லும் விஷயத்தில் உள்ள தர்க்கரீதியிலான குறையைச் சுட்டிக்காட்டுவார். தொடக்கக் காலத்தில் அவர் என்றாலே எனக்குள் அச்சம் ஏற்படும். 



உண்மையில் அவர் யதார்த்தவாதி. உங்களுடைய கருத்தை அவரிடம் விவாதித்துச் சம்மதிக்க வைக்க முடியும். தொடக்கத்தில் ஓரிரு நிமிஷங்கள் வெகு தீவிரமாக உங்களுடைய கருத்தை ஏற்காததுபோல விவாதித்தாலும் இறுதியில் - நீங்கள் சொல்வதுதான் சரி என்று சொல்வதில் முதலாவதாக இருப்பார். 



பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் ஆகியோரிடம் உள்ள பொதுவான குணம், முதலில் உங்களுடைய கருத்தில் நீங்கள் எந்த அளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்று சோதித்துப் பார்ப்பதுதான். 



பில் கேட்ஸ் உங்களுடன் சேர்ந்து என்ன செய்யப்போகிறார் என்று அறிந்துகொள்ள நிறைய பேருக்கு ஆர்வமாக இருக்கிறது?


 
வெளியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இவரும் பில் கேட்ஸும் எப்படி இணைந்து செயல்படுவார்கள் என்ற வியப்பு ஏற்பட்டிருக்கலாம். கடந்த ஒன்பது ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் சேர்ந்துதான் பணிபுரிந்துவருகி றோம். எனவே, எனக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னுடன் சேர்ந்து பணியாற்ற மேலும் நேரம் ஒதுக்கிக்கொள்ளுமாறு அவரிடம் கோரியிருக்கிறேன்.


 சில வேளைகளில் அவர் தனக்கு இருக்கும் பெரிய வேலைகளைத் தள்ளிவைத்துவிட்டு, சரி உங்களுடைய வேலை என்ன என்று கேட்டு, எங்களுடன் பேசி உற்சாகப்படுத்துவார். மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள எல்லோரையும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்றி, அவர்களுடைய மிகச் சிறந்த திறமைகளை வெளிக்கொண்டுவருவதுதான் அவருடைய தனிச் சிறப்பு. அது அவருக்கு இயற்கையில் ஏற்பட்ட வரம். 



புதிய பொறுப்பில் உங்களுடைய நிர்வாக அணுகுமுறை எப்படியிருக்கும்?


 
நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவுகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் குழுவினால் கிடைக்கக்கூடிய பலன்களை, எந்த அளவுக்கு அதிகபட்சம் உயர்த்த முடியும் என்பதில்தான் இப்போது கவனம் செலுத்துகிறேன். அவர் களின் தலைமைப் பொறுப்புகளை வலுப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதுதான் முக்கியம். இந்த நிறுவனத்தின் உயர் பதவி யில் உள்ள பலருடன் நான் ஒரு காலத்தில் இணைந்து வேலை செய்திருக்கிறேன். 



அனைவரையும் இணைத்து, அவரவர் வேலைகளில் பற்றுதலோடு ஈடுபடுத்தி, அதில் வெளிப்படும் ஆற்றலை அனைவரையும் உணர வைப்பதே என் பணி. தனித்தனியாக ஒவ்வொருவரையும் வைத்து நான் அவர்களை எடைபோடுவதில்லை. அசாதாரணமான திறமைகள் இல்லாமல் அவர்களால் இங்கே வந்திருக்க முடியாது. நான் எங்களை ஒரு அணியாகத்தான் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நாம் முறையாக ஒருவருக்கொருவர் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறோமா, ஒருவர் மற்றொரு வருடைய திறமைகளை நிறுவனத்தின் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறோமா என்பதுதான் முக்கியம். 



மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ஒன்றே என்ற ஐக்கிய உணர்வை ஏற்படுத்துவதுதான் லட்சியம் என்று உங்களுடைய நிறுவனம் கூறியிருக்கிறது, அதை எப்படிச் சாதிக்கப்போகிறீர்கள்?


 
எங்களுடைய தலைமை அணியின் நோக்கம் என்ன என்பதுகுறித்து நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறோம். முதல் கூட்டத்திலேயே அதுகுறித்துப் பேசியிருக்கிறோம். எங்களுடைய நிறுவனத்தின் செயல்பாட்டில் தெளிவு, சீர்மை, தீவிரமான ஈடுபாடு ஆகியவற்றைக் கொண்டுவரும் கட்டமைப்பை ஏற்கெனவே உருவாக்கியிருக்கிறோம். ஏற்கெனவே நாங்கள் வகுத்த வெற்றிகரமான உத்தியின் அடிப்படையிலேயே அந்தந்தச் சூழல்களுக்கு ஏற்பச் செயல்பட்டுவந்திருக்கிறோம். 



இப்போது புதிய உத்தியை வகுக்க வேண்டும். 1,30,000 பேருடைய அறிவுத்திறனை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம்? அமைப்புரீதியான எந்தக் கட்டமைப்பும் இப்போது அர்த்தமற்றதாகிவிட்டது. ஏனென்றால், தொழில்ரீதியாக வரக்கூடிய போட்டிகளும் புதிய கண்டுபிடிப்புகளும் இந்த எல்லைகள், கட்டமைப்புகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. 



உங்களுடைய புதிய பொறுப்பை எப்படி அணுகுவது என்ற இறுதித் திட்டம் ஏதாவது தயாராக இருக்கிறதா?


 
இந்தத் துறையில் நீண்டகாலம் என்பது, உங்களை நீங்களே புதிதாக அறிந்துகொள்வது அல்லது எதிர்காலத்துக்கு என்ன என்று புதிதாகக் கண்டுபிடிப்பது. எங்களைப் பொறுத்த வரை 39 ஆண்டுகளாக வெற்றிபெற்றுவருவதால் புதிதாகக் கண்டுபிடிப்பதுதான் லட்சியமாக இருக்க முடியும். நாங்கள் மிகப் பெரிய வெற்றிகளைக் குவித்திருந்தாலும் எங்களுடைய எதிர்காலம் என்பது கடந்த கால வெற்றிகளை மட்டுமே பொறுத்ததல்ல.



 எதிர்காலத்துக்கு எங்களை இட்டுச்செல்லக்கூடிய வகையில் புதிதாக எதையாவது கண்டுபிடிப்போமா என்பதில்தான் வெற்றி இருக்கிறது. மனித நாகரிகமானாலும் குடும்பங்களானாலும் நிறுவனங்களானாலும் தோன்றுவதும் சரிவதும் இயற்கை. மனித ஆயுளைவிட நிறுவனங்களின் ஆயுள் குறைவு. வெகுசில நிறுவனங்கள்தான் 100 ஆண்டுகளைக் கடந்தும் செயல்படுகின்றன. எங்களுடைய நிறுவனத்தை நூற்றாண்டு நிறுவனமாக மாற்றுவதுதான் எங்களுடைய லட்சியம். 



© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி.​


 
THANX = THE HINDU

சுனந்தா வாயில் விஷம் ஊற்றி கொலை ; சசிதரூரை தப்ப விட மாட்டேன்: -சுப்பிரமணியசாமி திடுக் தகவல்

புதுடில்லி: சமீபத்தில் மர்ம முறையில் இறந்த மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா வாயில் விஷயம் ஊற்றி கொல்லப்பட்டுள்ளார் என்றும், இது தொடர்பான விசாரணையில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி திடுக் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் சசி தரூர் காதல் மனைவி சுனந்தா, பிரபல நட்சத்திர ஓட்டலில் மர்ம முறையில் இறந்து கிடந்தார். இவரது மரணம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் தரப்பிலோ, மருத்துவ ரிப்போர்ட்டிலோ எவ்வித சந்தேகமும் நீக்கப்படவில்லை. இவரது மர்மம் நீடித்து வந்தது. இது குறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சசிதரூர் அளித்த பேட்டியில், தனது மனைவி இறந்த விஷயத்தில் தான் எதையும் மறைக்கவில்லை என்றும், சுனந்தா அன்புக்கினியவர் , மனித நேயமிக்கவர் என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சுப்பிரமணியசாமி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சுனந்தா மரணம் என்பது பலவித சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இவர் இறந்ததும் அவசர, அவசரமாக தகனம் செய்யப்பட்டது ஏன் ? சசி தரூர் இவரது இறப்பு இயற்கையானது தான் என்றும் அவர் சொல்லவில்லையே ? சுனந்தாவின் மூக்கு அழுத்தப்பட்டுள்ளது. அவரது வாயில் ரஷ்ய விஷம் ஊற்றப்பட்டுள்ளது. அவரது அடி வயிற்று பகுதியில் சிறிய காயம் இருந்துள்ளது. இவ்வளவு இருக்கும் போது அவரது மரணம் இயற்கையானதாக இருக்க முடியுமா ? என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளது. கோர்ட்டில் முறையிட்டு விசாரணையை துரிதப்படுத்துவேன். இவ்வாறு திடுக்க தகவலை சாமி கூறியுள்ளார். 


THANX - DINAMALAR


READERS VIEWS 


1. இவர்தான் ராஜீவ் கொலையின் சூத்திரதாரி.. எப்படியோ அமெரிக்க சிஐஏ தயவில் சுற்றிக்கொண்டிருக்கிறார் 



2  அந்த கொலையாளி மூஞ்சை பார்த்தாலே தெரியுது, இந்த விஷயத்தில் சுப்பிமணியம் சுவாமி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 


3  சு.சா மற்றும் சசி இருவருமே சரியான குழப்பவாதிகள் இருவரையும் உள்ளே தள்ளுங்க நாட்டுள்ள ரெம்ப மக்கள் சந்தோசம் அடைவார்கள். தினம் ஏதாவது ஒரு புரளியை அள்ளிவிடுவதில் பலே கில்லாடி பாவம் இந்த கைப்புள்ள பேச்சை ஒரு பயலுங்க கேட்பதில்லை இந்த நபரால் பாஜகவின் வாக்கு வங்கி குறையும் என்பதில் சந்தேகமில்லை. 



karthick உங்களுக்குதான் ஏகப்பட்ட ரகசியங்கள் தெரியுமே...... அப்டியே ராஜபக்சேவுக்கு ரசாயன ஆயுதங்கள் குடுத்து பல லக்ஷம் ஈழ தமிழர்களின் உயிர்களை கொன்றது சோனியா அண்ட் கோ தான் எனும் ரகசியத்தையும் மக்களிடம் ஆதாரபூர்வமாக சொல்ல வேண்டியதுதானே சாமி. எனக்கு அந்த ரகசியம் தெரியும் இந்த ரகசியம் தெரியும்னு எங்க காதுல பூ சுற்ற வேண்டாம். 



5 இது அழகு....ஆதாரம் இருந்தா நீதிமன்றத்தில தாக்கல் செய்து வழக்கை துரிதபடுத்துவேன்னு சொல்றாரு... டெல்லியில காங்கிரஸ் கட்சியோட பினாமி ஒருத்தரு இருந்தாரே....அவரு வாயாலேயே மட்டும் தான் வட சுடுவாரு...


 

நீது சந்த்ரா பாப்பா பேசும்போது கூட "ஓப்பனா"த்தான் பேசுது

1. விஜய்யின் நேர்மை,ஊழலற்ற நடவடிக்கைகளை விசாரித்தபின் பொறுப்பு வழங்கப்படும்-ஆம்ஆத்மி# அவர் பாட்டுக்கு "சிவனே" இருக்கார்.கோர்த்து விடறாங்க



=====================



2 காதலனுடன் 5 வருடம் வாழ்ந்தேன்: நீது சந்த்ரா ஓப்பன் டாக் # பாப்பா பேசும்போது கூட ஓப்பனாத்தான் பேசுது



=====================


3 கருணாநிதி - அழகிரி மீண்டும் சந்திப்பு - # சிவனும் சக்தியும் ஒண்ணா சேர்ந்தா மாஸ்டா



===================



4  நியூஸியில் 745 பேர் நிர்வாணமாக கடலில் நீந்தி சாதனை # அது நியூசிலாந்தா? நியூடு லாந்தா ?



=====================


5 இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்!- ஆர்பி சவுத்ரி # ஜில்லா ஜில்லா ஜில்லா கட்டிடுச்சு கல்லா கல்லா கல்லா



==================


6   மேலும் ஒரு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது பாலியல் புகார் # யுவர் டிஸ் ஆனர்



====================



7 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை இல்லை: கோர்ட்டில்் டாஸ்மாக் # 21 வயசு ஆள் பார்சல் வாங்கிட்டுப்போய் 18 வயசு தம்பிக்கு குடுத்தா?



=================

 8 போதையில் பாய்ந்த ரசிகர்கள்!… அலறி ஓடிய பூனம் பாண்டே!! / # போதையில் இருந்ததால் அலறுச்சா? பாய்ந்தாங்காட்டி அலறுச்சா?"



================



9  பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராகுல் காந்தி # அவர் விருப்பப்பட்டாலும் இவர் விடமாட்டார் போல



=======================


10 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் "ஆம் ஆத்மி' காணாமல் போய்விடும்: சுப்பிரமணியன் சுவாமி:# இவர் வாய்ல நல்ல வார்த்தையே வராது போல



==========================


11  விஜய்'யை வைத்து ஆர்ட் படமோ, குடும்ப படமோ எடுக்க முடியாது:சௌத்ரி # மசாலாப்ப்டம் எடுத்தே மகசூல் பாக்க முடியல.ஆர்ட் படம் எடுத்துட்டாலும்



========================



12 கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறேன்': கருணாநிதி"# தலைவா! எப்போ பாரு உங்க குடும்பத்தையே பாத்துட்டிருந்தா எப்டி?



==========================


13 அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை : அரசு பேருந்து ஓட்டுனர் கைது # பஸ் ஓட்டுபவரை ரொம்ப ஓட்டிடுச்சு போல்் சம்சாரம்.மேல் லோகத்துக்கு ஓட்டிட்டாரு



==========================



14  காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது-மேனகா: # இந்த ஊரறிந்த ரகசியம் உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?



===========================



15 கள்ளத் தொடர்பு விவகாரம்: சசி தரூரிடம் இருந்து விவாகரத்து பெற சுனந்தா முடிவு- செய்தி # மிசஸ் சசி தரூர் காணுண்ணது ! குற்றம் நடந்தது என்ன ?



============================



16   மோடி அல்லது ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: சோ: #,ஜெ வை பிரதமர் பதவி ஆசைக்கு அச்சாரம் போட்டு ஏத்தி விட்டதே இவர் தான் போல



========================



17  இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும்: சிதம்பரம்:# புருசனே கிடை ல ப்டுத்துக்கிடக்கான்.பொண்டாட்டி இனி வயசுக்கு வந்தா என்ன ? வராட்டி என்ன?



========================



18 லோக்சபா தேர்தலில் தேவயானி தந்தை போட்டி: # இதான்யா கேப்ல கெடா வெட்ரது.நெகடிவ் பப்ளிசிட்டியை டெக்னிகலா யூஸ் பண்றது



=======================



19  அதிமுகவில் இணைய அழைத்தால் பார்க்கலாம்.. அதிமுக வெற்றிக்கு பங்காற்றுவேன்: பண்ருட்டி ராமச்சந்திரன் # பல்டி ராமா அடிய்யா ராமா



==========================



20  காங். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நாளை தேர்வு # 16 1 2014 கூட்டுத்தொகை 6,ராகுல்காந்தி 6 .ஆறு மனமே ஆறு அந்த் ஆண்டவன் கட்டளை 6



========================



21  கட்சி எந்த பொறுப்பு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்-ராகுல்#கொடுக்கறது பெத்த அம்மா வாங்கறது செல்லப்பிள்ளை.இதுல யூகிக்க என்ன இருக்கு




மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் (நல்ல இடத்தில் வேலை,தொழில் விருத்தி )

a

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்: நல்ல வேலை கிடைக்கும்


படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம். அதே போல் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் எனக் காத்திருப்பவர்களும் உண்டு. வெளிநாட்டில் வேலை பெற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டவர்கள் ஏராளம். அவர்களுக்கான வரப்பிரசாதமாக அருளுபவர் மயிலாப்ப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ மயூரவல்லித் தாயார் என்பது ஐதீகம். 



இவரை மனதார வேண்டிக் கொண்டு, சந்நிதியில் இரண்டு மணிகளைக் கட்டி விட்டு, தாயாருக்குத் தொடர்ந்து 48 நாட்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி 12 முறை பிராகாரத்தை வலம் வர வேண்டும். இங்கு வெள்ளிக்கிழமைகளில் மாலையில் தாயாருக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. இந்த அர்ச்சனையைச் செய்து பிரசாதத்தைப் பெற்று , பிரார்த்தித்துக் கொண்டால் நல்ல இடத்தில் வேலை கிடைக்கும் என்றும் தொழில் விருத்தியாகும் என்றும் கூறுகிறார்கள். 



இத்திருக் கோயிலில் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தாயாரின் திருநாமம் ஸ்ரீ மயூரவல்லித் தாயார். மயூரபுரி என்ற மயிலாப்பூர், அருகில் உள்ள திருவல்லிக்கேணி துளசிவனமாக பிருந்தாரண்ய க்ஷேத்திரமாகவும் இருந்ததாம். இந்தத் தலத்தில் உள்ள கைரவணி தீர்த்தக் குளத்தில், ஆம்பல் மலராகத் தோன்றிய மகாலட்சுமித் தாயார், பிறகு முனிவரின் மகளாக அவதரித்து, பேயாழ்வாருக்கு அருள் புரிந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். மயூரபுரியில் அவதரித்ததால், ஸ்ரீமயூரவல்லித் தாயார் என்பது திருநாமம். 



இங்கு தாயார் விசேஷமாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்தத் தாயாருக்குத்தான் சிறப்பாக இங்கு வெள்ளிக்கிழமைதோறும் மாலையில் வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வெள்ளியன்றும் காலையில் ஸ்ரீசுக்த ஹோமம் நடைபெறுகிறது. 



திரேதா யுகத்தில் இத்தலத்தில் உள்ள கைரவணி புஷ்கரணிக் கரையில் ரிஷிகள் யாகம் நடத்தினர். மது என்ற அசுரன், யாகத்தினை நடத்தவிடாமல் குறுக்கீடுகளைச் செய்தான். இதனால் ரிஷிகள் யாகத்தைக் காத்து அதனை நிறைவேற்ற உதவும்படி பெருமாளை வேண்ட, அவர்களுக்குக் காட்சி தந்த பெருமாள் அசுரனை அழிப்பதாக உறுதியளித்து யாகத்தைத் தொடர்ந்து நடத்தும்படி கூறினார். 



அதன்படி ரிஷிகள் யாகத்தைத் தொடர எப்போதும் போல் அசுரனும் அங்கு வந்தான். அப்போது, மகாவிஷ்ணு யாகத்தில் இருந்து தோன்றி, அசுரனை அழித்தார். பின்பு ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்திலேயே தங்கிவிட்டார். ஆதியில் வந்து தங்கியதால் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாலட்சுமி தாயாருடன் இங்கு அருள் பாலிக்கிறார். 



thanx - the hindu