Monday, February 17, 2014

ஜிந்தா பாத் ஜிந்தாபாத் ப்ரீத்தி ஜிந்தா பாத் @ உயிரே

1.ப்ரீத்தி ஜிந்தா உயிரே படத்தில் குளிக்கும் சீன் வந்தப்பக்கூட ஜிந்தா பாத் ஜிந்தாபாத் னு கூவினவன் தான் தமிழன்



========================



2 ஒரு குடும்பத்துல 2 பெண்குழந்தை இருந்தா 2 லட்சம் ரூபா அரசு தருதாமே? அப்போ ஒரு பெண் குழந்தை இருந்தா 1 லட்சம் ஏன் தரக்கூடாது?


சரி.இன்னக்கு 1 லட்சத்துக்கு ரெடி பண்ணுவோம்



===================


3 அதிர்ஷ்டக்கல் விக்கறவங்க கிட்டே ஒரே ஒரு கேள்வி.அதை ஏன் வித்து காசாக்கறீங்க? நீங்களே வெச்சிருந்தா அதிர்ஷ்டம் தானே?



=====================


4 FAIR & லவ்லி டெய்லி போட்டு போட்டு பெண்கள் தங்கள் பிரத்யேக நறுமணத்தை இழக்கிறார்கள்


===================


5 பொண்ணோட நிக்கும் அம்மாக்கள் தனக்கு மட்டும் டால் அடிக்கும் கலர் சேலையை அணிந்து மகளுக்கு டல் அடிக்கும் கலர் சேலை அணிய விடுவது ஏனோ?



==================

6 டவுன் பஸ்ஸில் ஸ்டேண்டிங்கில் வரும் பிகர்களே! ஹேனட் பேக்கை எங்க மடில வெச்சுடறீங்க.உள்ளே டிபன் பாக்ஸ் கொதிக்குது.ஆறவெச்சுக்கொண்டாரக்கூடாதா?



===================


7 பொண்டாட்டி கிட்டே பொய்யே சொல்லாதீங்க.கண்டுபிடிச்சுடுவாங்க. ஆனா எல்லா உண்மைகளையும் சொல்லிடாதீங்க # தாம்பத்ய விதி



====================


8 பிரமாதமான காதல் வரிகளா இருக்கேன்னு டக் னு ஆர் டி பண்ணப்போய்ட்டேன்.அப்புறம் பாத்தா அது பாடல் வரி.நல்ல வேளை





=======================


9 பொண்ணுங்க ட்வீட்சா பார்த்து RT பண்றான் கற குற்றச்சாட்டு யாரும் வைக்காம இருக்கனும்னு நினைச்சா போனாப்போகுதுனு அப்பப்ப பசங்களுதையும் RTசெய்க



====================


10 பிரம்ம முகூர்த்த நேரம் அதிகாலை 3 டூ 5 ன்னா சாந்தி முகூர்த்தம் ஏன் ராத்திரி ல வைக்கறாங்க? # எகனை முகனை ஏ காம் பரம்



====================


11 பசங்களுக்குப்பயந்து பக்தி மார்க்கமா டி பி வெச்சாலும் அதை எல்லாம் கிஞ்சித்தும் பொருட்படுத்தாம வஞ்சியிடம் கொஞ்சி விளையாடு வான் தமிழன்



====================



12 எல்லா நாட்லயும் அன்னதானம் நடை முறை ல இருக்கு.ஆனா தமிழன் மட்டும் தான் அன்னதானத்து ல புல் கட்டு கட்டுட்டு பார்சல் கிடைக்குமா? னு பார்ப்பான்



====================


13 அன்னதானம் செய்ய நிதி உதவி செய்பவர்களுக்கு பாவம் குறையும் னா அன்னதானம் சாப்பிடுபவர்களுக்கு அந்த பாவம் சேருமா?,# டவுட் டே விட்



=================


14 கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்தவங்க தோராயமா 80,000 பேர்.அன்னதான மண்டபத்துக்கு வந்திருப்பவர்கள் துல்லியமா 3 லட்சம் பேர் # தமிழேண்டா


===================


15 பூஜை அறையில் உம்மா குடுத்தால் ச்சீ என் கிறாய்! உம்மாச்சி கண்ணை குத்துமாம்.உம்மாச்சி இல்லாத இடம் ஏது?




==================


16 16 வருடங்களுக்கு ஒரு முறை ஊரில் உள்ள பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தா விட்டால் ஊரில் பஞ்சம் நிலவும் # ஐதீகம்




====================


17 கோவில் கும்பாபிஷேகம் விழாவில் ஒரு முறை கலந்து கொள்வது 100 முறை வெள்ளிக்கிழமைகளில் ஆலயம் செல்வதற்கு சமம் # ஐதீகம்



==================


18 சாண் ஏறுனா முழம் சறுக்கும்.அஞ்சான் ஏறுனா ஒரு இஞ்ச் கூட சறுக்காது# சூர்யா பஞ்ச்



====================


19 அஞ்சு ஆண்களுக்கு இணையானவன் அஞ்சான் # சூர்யா பஞ்ச் ( கற்பனை)


===================


20 மீரா ஜாஸ்மின் க்கு மேரேஜ் ஆனதால் இனி மாண்டலின் மாண் டல் இன்



======================



21 முகத்தில் காயம் ஏற்பட்டால் காயத்தின் வலியை விட அதன் தழும்பு நீண்ட நாட்கள் முகத்தில் தங்கி விடுமே என்ற கவலை அதிகமாக இருக்கும்


=================

Sunday, February 16, 2014

விஜயை எனக்கு எதிரியாக்கி விடாதீர்கள் - எஸ்.டி.ஆர் சிம்பு. பேட்டி @ THE HINDU

கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், தங்கையின் திருமணத்தில் பிஸி. ஹன்சிகாவுடன் காதல் என்று பரபரப்பாக இருக்கிறார் எஸ்.டி.ஆர் சிம்பு. எத்தனை பரபரப்புக்கு இடையிலும் எத்தனை சர்ச்சைக்குரிய கேள்வியைக் கேட்டாலும் தயக்கமில்லாமல் பேச ஆரம்பிக்கிறார். 



‘சிலம்பாட்டம்’, ‘வாலு’, எல்லாமே மாஸ் ஹீரோ சிம்புவின் ஹீரோயிசத்துக்கான படங்கள். ஆனால் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘வானம்’ போன்றவை சிம்புவை கதாபாத்திரங்களாகக் காட்டின. இனி சிம்புவை இப்படியும் பார்க்கலாமா? 


 
எந்த திட்டமிடலும் என்னிடம் இல்லை. கௌதம் மேனன் முதலில் ‘சுராங்கனி’ என்ற கதையைத் தான் எனக்குச் சொன்னார். ஒரு இளைஞன் ரவுடியாகி பிறகு அவனே எப்படி டானாக மாறு கிறான் என்பதுதான் கதை. ஆனால் நான் பலமுறை விரும்பிப் பார்த்த காதல் படங்களில் ‘அலைபாயுதே’, ‘மின்னலே’ இரண்டுக்கும் தனியிடம் உண்டு. உங்களிடம் ‘மின்னலே’ மாதிரி ஒரு காதல் கதையைத்தான் எதிர்பார்த்தேன் என்று கௌதமிடம் சொன்னேன். எனது எண்ணத்தைப் புரிந்துகொண்டு உடனே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கதையை எழுதினார். என் வாழ்க்கையில் சில பக்கங்களை நினைவுபடுத்தியதும் அதில் ஒன்றிப்போனேன். அதேபோல ‘வானம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பைப் பார்த்தபோது அந்தப்படத்தில் ‘கேபிள் ராஜா’ என்ற கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. 

 

நிஜவாழ்க்கையில் நான் என்ன செய்வேனோ அதையே அந்த கேரக்டரும் செய்தது. அதனால் அந்தப் படத்தில் விரும்பி நடித்தேன். எனது இமேஜை விட எனது ரசிகர்களை நான் நடிக்கும் படங்கள் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக நடிப்புக்குத் தீனிபோடும் கதைகளை தேடிப்பிடித்து நடிக்க வேண்டும் என்றோ தேசியவிருது கிடைக்க வேண்டும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. நான் எவ்வளவுதான் இயல்பாக நடித்தாலும், நன்றாக நடித்தேன் என்று யாரும் எழுதப்போவதில்லை. எனது ஒரே பலம் எனது ரசிகர்கள் மட்டும்தான். அவர்கள் சொல்வதுதான் எனக்கு வேதவாக்கு. 



‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கார்த்திக் கதாபாத்திரத்தின் குணங்கள் சிம்புவுடன் எவ்வளவு ஒத்துப்போகும்? 


 
கார்த்திக் கேரக்டரின் அத்தனை மென்மை, உண்மை, முரட்டுத்தனம், அப்பா, அம்மாவிடம் இருக்கும் பணிவு, காதலியிடம் காட்டும் துணிவு எல்லாமே எனது குணங்கள். அதனால்தான் அந்தக் கேரக்டரில் என்னால் அத்தனை ஒன்றிப் போக முடிந்தது. ஆனால் சிம்பு என்றால் வம்பு என்று இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். என் நண்பர்களிடம் கேளுங்கள், என் பெற்றோரிடம் கேளுங்கள், என் தங்கையிடம், தம்பியிடம் கேளுங்கள், என் வீட்டு ஊழியர் களிடம் கேளுங்கள்..அவர்கள் சிம்பு என்றால் அன்பு என்று சொல்லுவார்கள். 



உங்கள் ‘லவ் ஆன்தம்’ எந்த கட்டத்தில் இருக்கிறது? 

 
சர்வதேச பாப் இசைப் பாடகர் ஏகான் வந்து பாடிக்கொடுத்து விட்டார். இன்னும் அதில் சில இறுதி கட்ட வேலைகள் இருக்கின்றன. அவற்றை முடித்ததும், அதை எப்போது வெளியிட வேண்டும் என்று என் மனம் சொல்கிறதோ அப்போது வெளியிடலாம் என்ற முடிவில் இருக்கிறேன். 



உங்களையும் அஜித்தையும் இணைத்த புள்ளி எது? 


 
ஒரு மாஸ் ஹீரோவுக்கு இன்னொரு பிரபலமான ஹீரோ பரம ரசிகனாக இருக்கமுடியுமா என்ற சந்தேகத்தில் கேட்கிறீர்கள். நான் முதலில் சினிமா ரசிகன். அதன்பிறகே நடிகன், ஸ்டார் எல்லாம். ரஜினிக்குப் பிறகு என்னை கவர்ந்த ஆளுமை அஜித். எனது பள்ளி நாட்களில் அப்பா இயக்கி நடித்த ‘மோனிஷா என் மோனாலிசா’ படம் வெளியானது. ஆனால் அதேநாளில் வெளியான ரஜினி படத்தை நண்பர்களுடன் முதல்நாள் முதல் ஷோ விசிலடித்து பார்த்திருக்கிறேன்.



 நான் நடிகனாக இருந்தாலும் எனது படங்களை நானே எப்படி விசிலடித்து பார்ப்பது? ரசிகன் சிம்பு விசிலடித்து படம்பார்க்க ரஜினிக்குப் பிறகு அந்த இடத்தில் அஜித் வந்து சேர்ந்ததில் ஆச்சரியமில்லை. காரணம் நிஜவாழ்விலும் அஜித் ஹீரோவாக இருக்கிறார். அவரது நல்ல குணமே இன்னும் அவர் மீதான ஈர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. அஜித்தை எனது இன்னொரு வயதில் பார்ப்பதுபோலவே எனக்குத் தோன்றுகிறது. நான் இப்படிச் சொல்வதால் அண்ணன் விஜயை எனக்கு எதிரியாக்கி விடாதீர்கள். அவர் மீது எப்போதும் மரியாதை கொண்டவன் நான். 



அஜித் உங்களுக்குக் கொடுத்த அட்வைஸ்? 

 
அவர் வலிந்து யாருக்கும் அறிவுரை சொல்லமாட்டார். நாமே இதை யோசிக்காமல் விட்டு விட்டோமே என்று நறுக்கென்று ஆலோசனை சொல்லுவார். எனக்கு ஒன்றைச் சொன்னார். “உனக்கென்று இருக்கும் இடத்தை யாரும் அபகரிக்க முடியாது. கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்திருக்கிறாய். அதனால் உழைப்பதைத் தவிர வேறு எதைப்பற்றியும் யோசிக்காதே. கவனம் சிதறவிடாதே” என்றார். எனக்கு ஒரு அண்ணன் இருந்து தலையில் கொட்டி சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. 

 

ஹன்சிகாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன? 

 
ஹன்சிகாவிடம் எனக்குப் பிடித்த விஷயம் அவரிடம் இருக்கும் இயல்பு. பாசிட்டிவ் குணம், மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற இளகிய மனம். இவையெல்லாம்தான். 


நீங்களும் நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடிப்பது பரபரப்பாகியிருக்கிறதே? 


 
இணைந்து நடிக்கும் முன்பு, ரசிகர்களும் மீடியாவும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற குழப்பம், எனக்கு நயன்தாராவுக்கு, இயக்குநர் பாண்டிராஜூக்கு இருந்தது. ஆனால் நாங்கள் பயந்ததுபோல எதுவுமில்லை. 


ரசிகர்கள் உட்பட எல்லோருக்குமே வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன என்பது தெரிந்துவிட்டது. நான் அதிகம் பயந்தது ஹன்சிகாவின் தலையை உருட்டி விடுவார்களோ என்றுதான். எனக்கும் என் காதலுக்கும் கருணை காட்டிய அத்தனை ஊடக நண்பர்களுக்கும் என் நன்றி. 


thanx - the hindu 

 

அத்தான்.நகை முரண் னா என்ன?

1. ஜட்ஜ் - காருக்குள்ளே உல்லாசமா இருந்தீங்களா?



கைதி - ரொம்ப சிரமமா இருந்தது யுவர் ஆனர்.பெரிசா உல்லாசம்னு எல்லாம் சொல்ல முடியாது



======================

2  மேடம்.வழக்கமா நடிகைங்க ஒரு தொழில் அதிபரைத்தானே மேரேஜ் பண்ணிக்குவாங்க? நீங்க எஞ்சினியரை பண்ணிக்கிட்டீங்க?,



ஹி ஹி மாமனார் தொழில் அதிபர்


===================


3  ஒரு கிமீ ஜாகிங் போக 4 நிமிசம் ஆகுது.அப்போ 10 கிமீ போக எத்தனை நிமிசம் ஆகும் ?



 பையனா இருந்தா 40 நிமிசம் ,பொண்ணுனா 60 நிமிசம்



====================


4  டாக்டர்.மனசு ஒரு நிலைல இருக்க மாட்டேங்குது."



வெளில நீங்க வெயிட் பண்ணும்போதே நோட் பண்ணேன்.4 நர்சையும் மாத்தி மாத்தி பாத்துட்டிருந்தீங்க



==================


5  டேமேஜர் = நேரத்தை வீணாக்கக்கூடாது



.அதை ஏன் சார் என் கிட்டே சொல்றீங்க? வீணா கிட்டே சொல்லுங்க


==================


6   ஸார்.நீங்க எந்த சாதிக்கு ஆதரவா இருப்பீங்க?



 இதுல என்ன சந்தேகம்? என் பொஞ்சாதிக்குத்தான்


===================




2 கார் ல உல்லாசமா இருந்திருக்கீங்க.5000 ரூபா பைன் கட்டுங்க.



 கைதி - ரன்னிங் ல யா இருந்தோம்.ஓரமா தானே?போக்குவரத்துக்கு என்ன இடைஞ்சல்?



=======================


3 மேடம். தொழில் அதிபருடன் காருக்குள் என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?



சாரி.அது தொழில் ரகசியம்



=========================


4 மேடம்.கதைப்படி கார் ல சென்னை டூ மகாபலிபுரம் போறீங்க.ஹோட்டல் ல




... நடிகை - எதுக்கு ரூம் ரென்ட் வேஸ்ட்டா?,கார் லயே முடிச்சுடலாம்.


========================



5  இன்ட்டர்வ்யூவில் - மிஸ்! டேக் யுவர் சீட்.



புய்ப்பம் - சாரி சார்.டைனிங் டேபிள் சேர் மட்டும் தான் உக்காருவேன்


================

6  ஆபீஸ் டைம் 9 டூ 6,




 ஸார்.அது கிடக்குது கழுதை.லஞ்ச் டைம் ,டீ டைம் ,நொறுக்ஸ் டைம் எது?


=================


7   மாப்ளை யுவன் சங்கர் ராஜா மாதிரி.


ஓஹோ.வெரைட்டியா ன இசை ஆர்வலரா?


 ச்சே ச்சே 6 மாசத்துக்கு ஒரு டைம் புது மாப்ளை ஆகிடுவார்


================


8  யுவன் சங்கர் ராஜா க்கு 3 வது மேரேஜ் ஆனது புரளியாம்.


 யார் சொன்னா?



யுவன் சங்கர் ராஜாவே சொன்னார்.



================


9   டியர்.நீ ஏன் தொட்டதுக்கெல்லாம் கோவிச்சுக்கறே?


ம்க்கும்.நீங்க தொட்டது என் தங்கச்சியை



===================


10  வெரிகுட்.லவ்வர்ஸ் டே க்கு நீங்க லீவ் போடலை. எப்டி சார் லீவ் போட?



ரிசப்சனிஸ்ட் கிட்டே இன்னைக்குத்தான் லவ்வை சொல்லலாம்னு இருக்கேன்



======================



11 மிஸ்! 10வது ,12 வதில் மேத்சில் பெயில் ஆன மாப்பிள்ளை தேவை னு ஏன் விளம்பரம் குடுத்திருக்கீங்க?



அப்போ தான் யாரையும் கணக்கு பண்ணாம இருப்பார்


====================



12 லவ்வர்ஸ் டே க்கு லீவ் எடுத்தா 4 நாள் சம்பளம் கட்.



ஓஹோ.அப்போ வந்தா 8 நாள் சம்பளம் சேத்து தருவீங்களா ஸார்?



======================


13 டியர்.காதலர் தினத்துக்கு எதுக்கு லைப்ரரிக்கு வா னு கூப்பிடறீங்க?



அங்கே தான் ஒரு பய இருக்க மாட்டான்.பிரைவசி கிடைக்கும்



=================


14 மிஸ்! வர்ற வெள்ளிக்கிழமை பீச் ல தனியா மீட் பண்ணி பேசலாமா?



வெறுமனே பேச்சு மட்டும் தானா?,சாரி.நான் வர்லை



=====================



15   ஆபீஸ் பூரா கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்கோம்.பீ கேர்புல்.ஒழுங்கா( ஓ பி அடிக்காம) வேலை செய்யனும். \
\


நல்ல வேளை ஸார்.சொன்னீங்க;-))


===================


16   டியர்.1000 ரூபா கடன் வேணும்.


எதுக்கு?


உனக்கு கிப்ட் வாங்கத்தான் # 14 2 2014



=====================


17 DR, 2 மணி நேரமா ஆபீஸ்ல சும்மாவே உட்காந்துருக்கிறதால தூக்கம் தூக்கமா வருது .



நான் கூட டெய்லி சும்மா தான் இருக்கேன்.தூங்கிட்டா இருக்கேன்?




====================



18 பக்தா! ஆண் குழந்தை வரம் கேட்ட உனக்கு பெண் குழந்தை கொடுத்தும் சந்தோஷமா இருக்கியே எப்டி?



உன் கோக்குமாக்கு தெரிஞ்சுதான் மாத்தி கேட்டேன் இறைவா !


====================



19 சார்.உங்க ட்விட்டர் அக்கவுண்ட்டை ஏன் டிஆக்டிவேட் பண்ணிட்டீங்க?




மதமே மாறிட்டேன்.ஹேன்டில் மாற மாட்டேனா? # யுவன் ( கற்பனை)



==================


20 அத்தான்.நகை முரண் னா என்ன?




புருசன் மோதிரமோ செயினோ போடாம இருந்தாலும் பொண்டாட்டிக்கு மட்டும் நெக்லஸ் செயின் னு வாங்கித்தர்றானே அதான்

உலகத்துலயே அதி புத்திசாலிங்க பொண்ணுங்க தான். எப்படின்னா......

1.  கண்டக்டர் - ஒரு ரூபா சேஞ்ச் இல்லை. 



மீ - நோ பிராப்ளம்.இந்த டைரி ல டேட் போட்டு சைன் பண்ணிக்குடுங்க.அடுத்த டைம் கழிச்சுக்கறேன்(யார் கிட்டே?)



============================



2 சார். ஃபேஸ்புக் ஆபீஸுக்கு விசிட் அடிச்சீங்களாமே? எதுக்கு? 




என்னை பப்ளிக் கலாய்க்குதா? இவங்களா அடிச்சு விடறாங்களானு கிராஸ் செக்கிங்




=======================



3 ஜோசியரே! இல்லற வாழ்க்கை அமோகமா இருக்கும்னீங்க? என் ஹப்பி என்னை கண்டுக்கறதே இல்லை? 



மேடம்
தமிழ் தெரியாதா ? மோகம் க்கு எதிர்ச்சொல் அமோகம்



========================


4 தலைவரே! சாணக்கியர் னு பேர் எடுத்த நீங்க இவ்ளோ தூரம் இறங்கிப்போகனுமா?



ஆதாயம் உண்டுன்னு தெரிஞ்சா பள்ளத்தாக்கில் கூட குதிப்பேன்



======================


5  மிஸ்! எனி பிச்சை ப்ளீஸ் !



 டியூப்லைட் லைலா- வீட்ல பெரியவங்க யாரும் இல்லைபா.போய்ட்டு நாளை வாங்க


===========================


6  டியர்.நான் வெளியூர் போறதா சொன்னதும் ஏன் கண் கலங்கறே?



இனி வீட்ல எல்லா வேலையும் நான் தானே செய்யனும்?


=======================




7 இந்த மாசம் உங்களால கம்பெனிக்கு 1 லட்சம் ரூபா நட்டம்.அதனால சம்பளத்துல 50% கட்.



 OK ஸார்.போன மாசம் என்னால 5 லட்சம் லாபம்.லாபத்துல 10% குடுங்க



========================



8  டியர்,பழகிய போது மட்டும் நல்லவள் விலகிய போது மட்டும் ஏன் திட்டுக்கள்?



விலகும்போது என் ஏ டி எம் கார்டை எடுத்துட்டுப்போய்ட்டே



==========================


ஜிம் ல இருக்கேன்


. எந்த ஜிம் ? 


எங்க ஆபீஸ் ஜிம்.  


எந்த ஆபீஸ் ? 



நான் ஒர்க் பண்ற ஆபீஸ்



========================



10 அத்தான்.குல தெய்வம் சாமிக்கு மொட்டை போடறதா வேண்டி இருக்கேன்




. சாமிக்கே மொட்டை போடற அளவு பெரிய.ஆள் ஆகிட்டியா ?



=======================


11  மிஸ்! உங்க ஆஃபீஸ் ல எல்லாரும்  ஆக்டிவா இருப்பாங்களா? , 



ம்ஹூம், சார், 12 பேரு ஸ்கூட்டி , 4 பேருதான் ஆக்டிவா 



========================


12 மிஸ்!,டெய்லி அரை மணி நேரம் நீச்சல் அடிச்சா ஒல்லி ஆகிடலாம்



. டாக்டர் ,சுறா ,திமிங்கலம் எல்லாம் 24 மணி நேரமும் நீந்தியும் குண்டாதானே இருக்கு



=================


13 டியர்,நான் டிவிட்டர் அக்கவுன்ட் வச்சிருக்கவர தான் கல்யாணம் பண்ணிப்பேன்.



 ரைட்டு அப்டியே டைவர்சும் சீக்கிரம் பண்ணிப்பே



==============



14 கேப்டன் - என்ன புள்ள? சிங்கப்பூர் ல எல்லாரும் தமிழ் பேசறாங்க?



பிரேமலதா - ம்க்கும்.இப்போ இருப்பது சென்னை.இன்னுமா உங்களுக்கு இறங்கலை?



=================



15 டாக்டர்.மூணு மாசம் ரைஸ் சாப்பிடாமல் இருந்தேன்...எனக்கு ஒரு சேஞ்சும் இல்ல...சைஸ்ல.



..புரோட்டா ,பூரியை வரிசையா அடுக்கக்கூடாது மேடம்



===================\


16 சம்பளம் ரொம்ப கம்மின்னா நீயும் வேலைக்குப்போம்மா



====================



17 புருசன் வேலையை முடிச்ட்டு வரும்போது அழுக்கா வர்றது இழுக்கா இருக்காம். அவன் என்ன பொண்ணா? எப்பவும் தளுக்கா மினுக்கா இருக்க?




=================



18 புருசன் ஓனரா இருக்கனுமாம்.ஏம்மா ஊர்ல எல்லாருமே ஓனராகிட்டா லேபர் யாரு?



==================


19 வசதியே இல்லைனு புலம்புன ரோஸ் கலர் ஜாக்கெட்டு.போட்டிருக்கும் 4 செயினும் தலா 4 பவுன் இருக்கும் போல்யே



================



20 உலகத்துலயே அதி புத்திசாலிங்க பொண்ணுங்க தான்.ஆண் என்ன சொல்ல வர்றான் னு புரியாமயே சண்டை போடுவாங்க




====================



21 படிங்கனு சொல்லி நைட் பூரா அவர் பக்கத்துல இருப்பேன்.ஆனா படிக்க மாட்டார். 




எப்டிம்மா படிப்பார் ? உங்கம்மா வீட்டுக்குப்போய்ட்டா படிப்பார்



===================




ஷங்கரின் 'ஐ' வெளியீடு - வீடியோ திட்டம்

ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.
விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார்.



படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை கூட ஷங்கர் வெளியிடவில்லை. இப்படத்தினைப் பற்றிய செய்திகள் எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.



இந்நிலையில், படத்தினை விளம்பரப்படுத்த படம் உருவான வீடியோ பதிவே போதும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர். பேட்டிகள் எல்லாம் கொடுத்துவிட்டு, படம் உருவான விதத்தினை டிவி சேனல்களில் கொடுத்தாலே போதும், மக்கள் ஆச்சர்யப்பட்டு விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.


ஏனென்றால், விக்ரமின் உழைப்பு, பாடல்களுக்காக செட்கள் போடப்பட்ட விதம், பாடல்களுக்கு விக்ரமிற்கு போடப்பட்ட மேக்கப், சண்டைக் காட்சிகள் உருவான விதம் என எல்லாவற்றையுமே வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.



இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள். ஆகையால் பேட்டி கொடுத்துவிட்டு, இந்த வீடியோவை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.

a





a


a










a