Wednesday, November 27, 2013

ராசி யான கோலிவுட் ஹீரோ யார்?

1. ஜட்ஜ் - லிப்டில் போகும்போது சில்மிசம் செஞ்சீங்களா?



தெகல்கா தேஜ்பால் = 30 வது மாடி.பக்கத்துல 28 வயசு லேடி ஹி ஹி



==================



2 சார்.இதே ஆபீஸ் ல 10 வருசம் குப்பை கொட்டிட்டேன்.பிரமோசன் வேணும்.



ம்க்கும் அதையே ஒழுங்கா கொட்டறதில்லை வழி ல பாதி சிதறிடுது



=====================


3  ஸார்.உங்க படம் ஓடற ஒவ்வொரு தியேட்டர் ல யும் ஒரு காலேஜ் லெக்சரர் நிக்கறாரே எதுக்கு?



 படம் சுத்தமா புரியலைனு சொல்றதால கதையை விளக்க ஆள்



===================


4 ஏ க்ளாஸ் ஆடியன்சுக்கு என் படம் பெட்டர் எக்ஸ்பீரியன்சா இருக்கும்.



ஓஹோ.புரொடியூசருக்கு BITTER EXPERIENCE?



===================


5  சார்.டிக்கெட் எவ்ளவ்?



150 ரூபா




. இந்தாங்க 75 ரூபா.இடைவேளை வரை தான் படம் நல்லாருக்காம்.அதை மட்டும் பார்த்துட்டுப்போய்டறேன்


==================


6  சார் .உங்க படம் அவுட் ஸ்டேண்டிங்.


தாங்க்ஸ்.



இடை வேளை முடிஞ்சதும் ஆடியன்ஸ் எல்லாம் வெளில நின்னாங்க.கேட்டைத்திறக்கச்சொல்லி



===================


7  பிலிம் இன்ஸ்டிடியூட் டீச்சர் - ராசி யான கோலிவுட் ஹீரோ யார்?



மிஸ்! உங்க கேள்விலயே பதில் இருக்கே?



=======================


8 மிஸ்! எனக்கு மட்டும் ஸ்மைலி சின்னதா போட்டு இருக்கீங்க ஏன்?



 காலைல இருந்து 300 பாலோயர்ஸ்க்கு ;-)) போட்டு வாய் வலிக்குது


===================



9  கமல் - ஆரோ 3 டி எபக்ட்ல விஸ்வரூபம் 2 வருது. #



 யாரோ திருடி டி வி டி யா விக்காம இருக்க இது நல்ல ஐடியா



==================



10   என் படம் படிச்சவங்களுக்கு மட்டும் தான் புரியும்.



ஓஹோ.அப்போ படத்தை ஸ்கூல் ,காலேஜ் ல மட்டும் ரிலீஸ் பண்ணுங்க.ஏன் தியேட்டர்ல?



==================


11 நான் ஒரு ட்ரெண்டு செட்டர். அப்டின்னா என்னங்ணா? ரெண்டு பேரை செட் பண்ணிட்டீங்கன்னு அர்த்தம்ங்களா?




==================



12   டியர்.நீ தான் என் இரண்டாம் உலகம்.



 சாரி மிஸ்டர்.ஏகப்பட்ட பேரு இப்டி சொல்லிட்டாங்க.நீ ஆயிரத்தில் ஒருவன்


========================


13  சார்.உங்க படம் பார்க்க வந்தேன்.5 பேர் தான் இருக்காங்க. 



நல்லா பாருங்க.36 கேரக்டர்ஸ். 



நான் சொன்னது ஆடியன்ஸ் 5 பேர் தான்



==========================


14 ஆபீஸ் ல தேவை இல்லாம பொண்ணுங்க கூட பேசிட்டிருக்்கக்கூடாது. 



ஓக்கே சார்." தேவை" இருந்தா பேசிக்கலாமா ?


=========================


15 டியர்.இன்னைக்கு நீ டிரசே போடாத.வீட்டை விட்டுப்போகாதே? 


ஏன்?


ஏன் என்றால் உன் பிறந்த நாள்


==========================


16 ஜட்ஜ் - உங்க மேல தப்பில்லை.உங்களுக்கு பேர் வெச்சவங்க மேல தான் தப்பா? 



தேஜ்பால் -் யுவர் ஆனர்.பேர்லயே பால் இருந்ததால தான் பால் இயல் புகார்



==========================



17 ஜட்ஜ் - லிப்ட் ல போகும்போது லேடிகிட்டே சில்மிஷம் செஞ்சீங்களா?



தேஜ்பால் - இல்ல.கீழே வரும் போது தான் ;-))



=====================



18 பேங்க் கேஷியரைக்கட்டிக்கிட்டது தப்பா போச்சுடி


.ஏண்டி?



 முதல் இரவு ல உள்ளே போனதும் டோக்கன் குடுத்து " கூப்பிடும்போது வந்தா போதும்"னுட்டாரு


=====================


19 டியர். ம்.வெயிட்.ஆக்கப்பொறுத்தீங்க.ஆற பொறுக்க மாட்டீங்களா?



நான் ஏன் பொறுக்கனும்?நான் என்ன பொறுக்கியா?


==================


20 மிஸஸ்  மீன்ஸ்மினி - டியர்.எத்தனை மணிக்கு நீங்க FREE?



மினிமீன்ஸ் - ஏன்? 


மீன்ஸ்மினி - ஒரு ட்வீட் போடறேன்.வந்து RT பண்ணுங்க, ஃபேஸ் புக் ல ஒரு ஸ்டேட்டஸ் போடறேன் , வந்து லைக் போட்டு கமெண்ட்டும் போடுங்க

==================



Tuesday, November 26, 2013

X: Night of Vengeance (2011) - சினிமா விமர்சனம் 18 +

 

ஹீரோயினுக்கு 17 வயசு. சாப்பாட்டுக்குக்கூட வழி இல்லை . ரொம்ப கஷ்டத்துல இருக்கறதால பெண்களுக்கான பாரம்பரியத்தொழில் ல இறங்கலாம்னு முடிவு பண்றா. 


இன்னொரு ஹீரோயின் , பேசிக்கலாவே இவர் ஒரு தொழில் அதிபர் . எழில் அதிபரா இருக்கும் சில  பெண்கள் என்ன தொழில் செய்வாங்களோ அந்த தொழில் .  அந்த தொழில் அதிபர் . தன்னோட தொழிலை விட்டுட்டு வாழ்க்கைல செட்டில் ஆக முடிவு பண்றா. கடைசி கடைசியா ஒரே ஒரு டைம் தொழில் பண்ணிட்டு பொட்டியைக்கட்ட பிளான். அப்போ கஸ்டமர்  இன்னொரு பொண்ணு வேணும்னு கேட்க யாராவது சிக்கறாங்களா?ன்னு  பார்த்துட்டு வரும்போது ஹீரோயின் சிக்குது.

2 பேரும் இணைந்த கைகள் ராம்கி , அருண் பாண்டியன் மாதிரி தோஸ்ட் ஆகிடறாங்க . அந்த கஸ்டமர் இருக்கும் ஹோட்டல் ரூம்க்கு போறாங்க . 


 அவன் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலைச்சேர்ந்தவன் . அவன் ரூம் ல போதை மருந்து இருக்கு . அதை வெச்சு தன் பாஸ் கிட்டே டபுள் கேம் ஆடப்பார்க்கறான் //


 பாஸ் அங்கே வந்து அவனை கொலை பண்றார். அந்தக்கொலையை  2 தொழில் அதிபர்ங்களும்  பார்த்துடறாங்க . அவங்க பார்த்துட்டாங்க என்பதை கொலையாளியும் பார்த்துடறான்.ஹீரோயின் போதை மருந்தை லபக்கிட்டான்னு இவன் சந்தேகப்படறான்


 இப்போ  இந்த 2 பேரையும் வில்லன் துரத்தும் கதை தான் மிச்ச மீதி திரைக்கதை



ஹீரோயின் சீன பர்பி பொம்மை மாதிரி இருக்கு .  அப்பாவித்தனமான நடிப்பு , நல்லா பண்ணி இருக்கு . 


இன்னொரு ஹீரோயினுக்கு  ஆக்‌ஷன் ஹீரோயின் விஜய சாந்தி மாதிரி கேரக்டர் . அவரும் ஓக்கே 


 வில்லன்க  2 பேரும்  அவங்களுக்குக்கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமா செஞ்சுட்டாங்க 




பலே பரிமளா


1. படத்தில் மெயின் கேரக்டர்களே மொத்தம் 4 பேர் தான் . அதுலயும்  ஒருத்தன் பாதிலயே  பரலோகம் போய்டறதால மீதி இருக்கும் 3 பேரை வெச்சே படத்தை ஸ்பீடா கொண்டு போய் இருக்காங்க . குட் ட்ரை 



2  ஒரு கொலையை பார்த்த சாட்சிங்க 2 பேரை  வில்லன் சேஸ் பண்றது பல படங்களில் பார்த்த கதை தான் . ஆனா கிளாமருக்காக , ஆடியன்சை தியேட்டருக்கு வரவழைக்க சாட்சிங்க 2 பேரும் கில்மா லேடீஸ் என்பதாக காட்டி இருப்பது இயக்குநரின் கமர்ஷியல் உத்தி 


3.  படத்தில் கிளாமர் காட்சிகள் இருந்தாலும் அது எந்த வகையிலும்  பாலியல் உணர்வைத்தூண்டலை . திரைக்கதையில் அந்த 2 பேருக்கும் என்ன ஆகுமோ என்ற பதை பதைப்புத்தான் ,மேலோங்கி இருக்கு . அந்த உணர்வை படம் பார்க்கும் அனைவரிடமும் கொண்டு வரப்பாடுபட்ட திரைக்கதை ஆசிரியருக்கு ஒரு சொட்டு

4  போஸ்டர் டிசைன் குட் . எக்ஸ் என்பது படத்தின் டைட்டில் என்பதால் ஒரு பெண்ணின் பின்னிப்பிணைந்த கால்களையே எக்ஸ் குறியீடாகக்காட்டிய டெக்னிக் ஆஹா!

சொதப்பிட்டியே சொப்னா



1.  ஹீரோயின்  தனக்கு தொழிலில் அனுபவம் இல்லை , ஃபிரெஷ் கேண்டிடேட் என்றதும்  அந்த கஸ்டமர் “ நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே, நல்ல அனுபவம் உள்ள ஆள் தான் வேணும் “ என கேட்பது ஆண்கள் சைக்காலஜிக்கு முற்றிலும் மாறா இருக்கு , பொதுவா   ஃபிரெஸ் பீஸ் தான் வேணும் -னு ஆண்கள் விரும்புவாங்கன்னு மனவியல் சாஸ்திரம் சொல்லுது 


2 ரெண்டாவது  ஹீரோயின்  ஒரு சீன் ல முதல் ஹீரோயின் கிட்டே “ நீ யாரோ, நான் யாரோ, நீ கிளம்பு , உன் வழில நீ, என் வழில நான் “ அப்டினு அம்போன்னு அவரைக்கழட்டி விட்டுடறா. அடுத்த சீன்ல யே வில்லன்கிட்டே மாட்டினதும் “ நான் அவளை காட்டிக்குடுக்க மாட்டேன் , உயிரே போனாலும் சரி , எனக்கு நட்பு தான் முக்கியம்னு டயலாக் பேசறா. அந்த  அளவு நட்பு  இருவருக்கும் ஏற்படவில்லையே . 20 நிமிட பழக்கம் ஆன ஒரு பொண்ணுக்காக யாராவது ஒரு பெண் தன் உயிரே போனாலும்  பரவாயில்லைன்னு ரிஸ்க் எடுப்பாங்களா? அது சரின்னா அதை நம்பும்படி இருவருக்கும் நட்பு இறுகிய விதத்தை காட்சிப்படுத்தாதது ஏன் ? 


3 கொலையாளி அந்த ரூம் ;ல வேற யாரோ இருக்காங்கன்னு சந்தேகப்பட்டும் ஏன் பாத்ரூமைக்கூட தி்றந்து பார்த்து செக் பண்ணலை ? அந்த ரூம்ல இருந்து ஹீரோயின்ஸ் 2 பேரும் எப்படித்தப்பி ஓடறாங்க . அந்த சீன் டீட்டெயில் பத்தலை 


4  ஹீரோயின் தங்கி இருக்கும் அறைக்கு பக்கத்து அறையில் போதை மருந்துக்கு அடிமையான ஒரு ஜோடி இருப்பதும் அவர்களுக்கு ஹீரோயின் உதவி செய்வதும் திரைக்கதைக்கு தேவை இல்லாத காட்சிகள் . சூர சம்ஹாரம் படத்திலும் இதே போல் தவறுகள் இருக்கும் 


5 பொதுவா போதை மருந்து பழக்கம் உள்ளவர்கள்னு மேலோட்டமா சொன்னாப்ப்போதாதா? அவ்வளவு டீட்டெய்லாக போதை மருந்து உபயோகிப்பதை காட்டியே ஆகனுமா? சென்சார் இதை எல்லாம் கண்டுக்க மாட்டாங்களா? 


6  வில்லன் 2 வது  ஹீரோயினை கார்ல கூட்டிட்டு ரோடு ரோடா ரவுண்டிங்க் . முதல் ஹீரோயினை த்தேடி . அப்போ எதேச்சையா  முதல்  ஹீரோயின் எதிர்ல வர்றா. அப்போ 2 வது  ஹீரோயின் “ ஆபத்து , ஓடிடு” அப்டினு எச்சரிக்கறா. அது தேவையே இல்லை . வில்லன் முத ஹீரோயினை நேர்ல பார்த்ததே இல்லை . வலியனா இவளே ஏன் காட்டிக்குடுக்கனும் ? கேசுவலா பேசி அனுப்பி இருக்கலாம் . சும்மா கண் ஜாடைல யே சொல்லி இருக்கலாம்



சி பி கமெண்ட் =ஆக்சன்சேசிங்க் த்ரில்லர்கள் பார்க்கலாம் . கில்மா சீன்களுக்காக பார்ப்பவர்கள் நெட்டில் டவுன்லோடி பார்க்கவும்  4 சீன் இருக்கு . ஆனா தியேட்டர்ல அது கட் . திருப்பூர் நடராஜா தியேட்டர்ல பார்த்தேன் . இந்த மாதிரி கில்மா படங்களை திரையிடும் தியேட்டர்கள் பெரும்பாலும் நடராஜா வாக இருப்பதன் மர்மம் என்னவோ ? ஈரோட்டிலும் இதே போல் ஒரு நடராசா இருந்தது . இப்போ சீல் வெச்சு க்ளோஸ்டு 


ரேட்டிங்க் =   2.5 / 5

Director:

 

ஆருஷி கொலை வழக்கு - வேலைக்காரருடன் கில்மா - பெற்றோரே கொலையாளிகள் - தீர்ப்பு



புதுடில்லி : நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார்.



டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதி. பல் மருத்துவர்களான இவர்களின் ஒரே மகள் ஆருஷி. பள்ளி மாணவியான ஆருஷி 2008ம் ஆண்டு மே மாதம், தனது அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.


இந்த கொலைக்கு வீட்டின் வேலைக்காரர் ஹேம்ராஜே காரணம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தலைமறைவானதாக கூறப்பட்ட ஹேம்ராஜின் உடல் வீட்டில் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் தல்வாருக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படவில்லை. இதனால் இவ்வழக்கை முடிக்கலாம் என, சி.பி.ஐ., கோர்ட்டில் கூறியது.



சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு: அதை ஏற்க மறுத்த சி.பி.ஐ., கோர்ட், இந்த வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின், தல்வார் தம்பதியரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகள் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இருவரும் சேர்ந்து, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தி மற்றும் கோல்ஃப் மட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்தது தெரிய வந்தது.



ஐந்தரை ஆண்டுகள் விசாரணை: ராஜேஷ் தல்வார் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2 மாத விசாரணைக்கு பின், அவருக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராவதை தொடர்ந்து தவிர்த்து வந்ததால் நுபுர் தல்வார் 2012ம் ஆண்டு கோர்ட் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஐந்தரை ஆண்டுகள் நடத்தப்பட்ட இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள்

என தீர்ப்பளித்த நீதிபதி சியாம்லால், தண்டனை குறித்த அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும் என்று கூறினார்.
புதுடில்லி : நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார்.

டாக்டர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார்
நன்றி - தினமலர்

இதனிடையே, தீர்ப்பு வெளியானவுடன் ஆருஷியின் பெற்றோர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அதில், "நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நாங்கள் செய்யாதக் குற்றத்துக்கு குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது காயத்தையும் கவலையையும் அளிக்கிறது. நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை மறுக்கிறோம். நீதிக்கான எங்களது போராட்டம் தொடரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


தேன்  தமிழ் Unfortunate, The Parents were made scapegoat for the inefficiency of CBI. When they were not able to find Scientific evidence they used Circumstantial evidence against them Just to Protect the image of CBI. This is happening everywhere including in Hospitals when they admit patients for Transplant if they feel Patient will not Survive with Transplant they the patient. They Do not want the patient to go another hospital which will Affect their image and to keep 100% success rate for money minting.Its very rampant and common now days in India. this has touched even the investigation agency.If they do not find any proper evidence make someone scapegoat & Sacrifice for the sake of Image. I wish They Get Justice.

திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
26-நவ-201300:16:36 IST Report Abuse
திருமகள்கேள்வன் பெற்றோர்தான் இந்த குற்றத்தை செய்தனர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் சி பி ஐ ஆள் இதுவரை சேகரிக்க முடிய வில்லை... பெற்றோரே ஒப்புக்கொண்டுவிட்டனர் என்பது சி பி ஐ இன் வாதம் இதன் அடிப்படையில் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.... 13 வயது பெண் குழந்தையை பெற்றோரே கொலை செய்தனர், என்பதை நம்புவது மிக கஷ்டமாக உள்ளது...

Parthiban S - arumuganeri,இந்தியா
26-நவ-201300:15:11 IST Report Abuse
Parthiban S நம்பி வளர்த்த நாய், பிள்ளையை கடிக்கிறது என்றால் அந்த நாயை அடித்து விரட்டியிருக்க வேண்டும்... அதைவிடுத்து நாயையும் கொன்று, பிள்ளையையும் கொன்று என்னத்தை பெற்றார்களோ அந்த பெற்றோர்..?

Pugazh வழக்கம் போல , நம் வாசக நண்பர்கள் சிலர் நீதிபதியாக சிலர் துப்பறியும் சிங்கமாக தாமே வேசம் போட்டுக் கொண்டு கண்டுபிடிப்புகளையும் தீர்ப்புகளையும் வழங்கிவிட்டார்கள். இந்த நிமிடம், பா ஜ க ஆதரவு ஆங்கில சேனல் ஒன்று இதையும் அரசியலாக்கி விவாத மேடையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சி பி ஐ தண்டம் என்றும், தீர்ப்பு சரியில்லை என்றும் என்னென்னவோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னவோ, ராகுல் காந்தி தீர்ப்பு சொன்ன மாதிரி டி வி யில் போட்டு தாக்குகிறார்கள் சிலர். காமெடியாக இருக்கிறது. தீர்ப்புகள் வந்தாலும் திட்டுவார்கள், தீர விசாரிக்க வருடங்களை எடுத்துக் கொண்டாலும் திட்டுவார்கள்.

MoorthyBJP favoured national news channel??? are u sure sir??? i didnt come across anything like that for the last 10 years....

மண்ணாந்தை - Raichur,இந்தியா
25-நவ-201318:21:16 IST Report Abuse
மண்ணாந்தை இருந்தது ஒரே மகள். அவளும் போயிட்டா. இனிமேல் கிளினிக் போனால் என்ன...ஜெயிலுக்கு போனால் என்ன...மகளை வளர்த்தது சரியில்லை அல்லது பணியாளை பார்த்து நியமிக்கத் தெரியவில்லை.

25-நவ-201317:54:50 IST Report Abuse
vignesh உண்மையில் அவர்கள் குற்றவாளிகள் தானா
Rate this:

நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
25-நவ-201317:46:50 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் மருத்துவர்களே மிருகங்களாய் நடந்து கொண்டால்..இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை தருவதாக அமையவேண்டும்..ஏதோ பத்தோடு பதினொன்றாய் ஆகிவிடக்கூடாது.
R

MRS - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201317:31:30 IST Report Abuse
MRS - Thirumangalam கோயம்புத்தூர் சீனிவாசனின் கேள்வி நியாமானதே. தமிழ் நாட்டில் எவ்வளவு கொடுமை நடக்கிறது அதுவும் குழந்தைகளுக்கு எதிராக. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பாருங்கள் தெரியும். யார் போராட முயற்ச்சிக்கிறார்கள்? வட இந்திய என்றாலே நம் தென்னிந்திய மனிதர்களுக்கு பயமும் தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடுகிறது. அண்ணா அசாரே புரட்சி ??? செய்த பொது நம் வட இந்திய மற்றும் தென்னிந்திய டிவிக்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்? நம்மிடையே போராடி மறைந்த எம் எஸ் உதயமூர்த்தி ஐயாவுக்கு எந்த டிவியாவது பத்திரிகையாவது முக்கியத்துவம் தந்து ஒத்துழைத்தார்களா?




அவரின் வரலாறே மறைத்துவிட்டனர். அதேபோல தான் இந்த கொலை கேசும். பெற்று வளர்த்து 14 வருடம் தியாகம் செய்த அப்பா அம்மாவுக்கு துரோகம் செய்த அந்த பெண்ணின் மனசு மற்றும் என்ன நல்லதா? அப்பன் ஸ்தானத்தில் உள்ள ஒருவனுடன் தன மகளை ஒரே கட்டிலில் பார்த்த போது என்ன செய்வது என்றே தெரியாமல் செய்த கொலை தான் இது. இது ஒன்றும் திட்டமிட்ட கொலை இல்லை. சந்தர்ப்பம் இப்படி இருவரையும் ஆக்கிவிட்டது. என்னை பொருத்தவரை இந்த பொண்ணுக்கு வருத்தப்படும் நிலையை விட ஒரு படி அதிகமாய் அந்த பெற்றோர்களுக்கு வருந்துகிறேன்.

Vasan R S - chennai,இந்தியா
25-நவ-201317:24:50 IST Report Abuse
Vasan R S இந்த காலத்து பிள்ளைகளால் பெற்றோருக்கு எத்தனை தலை குனிவு என்பதற்கு இவ்வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. பெற்றோர்களே , நம் பிள்ளைகளிடம் அளவுக்கு மேல் பாசம் வைக்க வேண்டாம். அது அவர்களுக்கும் நல்லதல்ல, நமக்கும் நல்லதல்ல.

Saravanan Arunachalam - Cuddalore,இந்தியா
25-நவ-201317:18:48 IST Report Abuse
Saravanan Arunachalam தீர்ப்பு வரவேற்க பட வேண்டிய ஒன்று.நீதியின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன .5 ஆண்டுகளுக்கு பின் நியாயம் கிடைத்துள்ளது உலகிற்கு காட்டபடுகிறது .

மிஷன் 272 PLUS - Delhi,இந்தியா
25-நவ-201317:10:03 IST Report Abuse
மிஷன் 272 PLUS எமன் பெற்றோர்கள் வடிவில்....

K Sanckar - Bengaluru ,இந்தியா
25-நவ-201317:09:45 IST Report Abuse
K Sanckar பெற்றோர்கள் நல்ல படித்தவர்கள். டாக்டர்கள் பெண்ணுக்கோ 13 வயதுதான் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனுடன் தொடர்பு என்றால் எப்படி இருக்கும்? சொல்லி பார்த்து இருப்பார்கள் ? கேட்டு இருக்க மாட்டாள். வயது அப்படி ? வேறு வழி இல்லாமல் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் போலும் ?

25-நவ-201322:57:12 IST Report Abuse
maravanஅய்யா , அன்பு கிடைக்காத அந்த பெண் அப்படி தவறு செய்திருந்தால் அதற்கு முழு பொறுப்பும் அந்த பெற்றோர்கள்தான் காரணம்.. பணம் என்று பேயாய் அலைந்து பணம் சேர்ப்பது மட்டும் வாழ்கை இல்லை..குழந்தைகளுக்கு அன்பை கொடுக்க மறந்துவிட்டார்கள் ..அதுதான் பிரச்னை......


kumaresan.m " இது சம்பவம்.... சமுதாயத்தில் தன்னை உயர்வாக பிறர் கருத வேண்டும் பணம் பணம் என்று அலையும் பெற்றோர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு பணம் தான் அனைத்தும் மற்றவையெல்லாம் பிறகுதான் என்று கருதும் பெற்றோர்கள் .....சிறுவயதில் இருந்து பிள்ளையை அன்பு காட்டாமல் வளர்த்து பிறகு கொன்று இருக்கிறார்கள் இந்த மனித மிருகங்கள் ....இவர்களை தூக்கில் இடுவதை விட சித்திரவதை செய்து கொள்ளுங்கள் ...அப்பொழுதுதான் அந்த பிஞ்சு உள்ளம் பட்ட வேதனை சாந்தி அடையும்

மிஷன் 272 PLUS - Delhi,இந்தியா
25-நவ-201316:58:32 IST Report Abuse
மிஷன் 272 PLUS பெண்கள் வன்முறை ஒழிப்பு தினத்தில் கிடைத்த ஒரு துயர செய்தி....93 schoolgirls sexually harassed near Patna. Save your women government doesn’t care.

Mohamed Majeed - nellai,இந்தியா
25-நவ-201316:52:58 IST Report Abuse
Mohamed Majeed எல்லா பெத்தவங்களுக்கும் ஒன்னு சொல்றேன் பிள்ளைங்க தப்பு செய்றது இயல்பு பிள்ளைகளின் சுற்றமும் நட்பும் தெரியாமலே இருப்பதுதான் பெத்தவங்களோட பெரிய தப்பு. நீங்க பிள்ளைங்க மேல அக்கறை வைத்திருந்தால் இந்த மாதிரி தவறுகள் நடந்திருக்கவே செய்யாது மறுபடியும் சொல்றேன் பிள்ளைங்கள சரியா வளர்ப்பது பெத்தவங்களோட முதல் கடமை.


A.S.A Thahir - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201316:24:00 IST Report Abuse
A.S.A Thahir அடப்பாவிகளா..? என்ன கொடுமையடா...? நீங்கள்லாம் எதற்கு பிள்ளை பெற்று .. பின்... இப்படி..? உங்கள் மனநிலை இப்படி போக என்ன காரணம்? அதுவும் படித்த மருத்துவர்கள்?...

25-நவ-201315:39:14 IST Report Abuse
Srinath மேற்கண்ட சிறுமி கொலைவழக்கு கவலை தந்தாலும் எனக்கொரு சந்தேகம். அதென்ன டில்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடந்துவிட்டால் நாடே ஸ்தம்பித்து, ஏக அமர்க்களமாகி விடுகிறது. முன்னர் ஒருமுறை காசியாபாத் நகரில் இரண்டு மனிதர்கள் குழந்தையைக் கொன்றது, பின்னர் பஸ்ஸில் பலாத்காரம் என்று தொடங்கி டில்லி-உபி யை மையம் கொண்ட களேபரங்கள் ஏராளம். நாட்டில் வேறெங்கும் கொலை, பலாத்காரம் நடப்பதே இல்லையா? இல்லை அந்தக் குற்றங்களில் சிக்கியவர்கள் மனிதர்கள்தான் இல்லையா? நானும் புரியாமல்தான் கேட்டுவிட்டேன்.

Share this comment

மாத்தியோசி - Chennai,இந்தியா
25-நவ-201317:05:40 IST Report Abuse
மாத்தியோசிநமக்கு தான் அம்மாவை புகழ்வதற்கும் , அய்யாவை நய்யாண்டி செய்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறதே .. வேறு எந்த பிரச்சனைகளை கவனிப்பது...Jokes apart...நீங்கள் சொல்வது உண்மையல்ல..தினமலர் பத்திரிக்கை சமீபகாலமாக லோக்சபா election ஐ கருத்தில் கொண்டு மோடிஐ புகழ்வதற்கும் மற்றும் காங்கிரெஸ் ஐ தாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கிறது.. மற்ற பத்திரிகைகளில் இது போன்ற செய்திகளில் வந்து கோடி தான் இருகின்றனர் .. ஒரே வித்யாசம்.. அங்கு பிரச்னை வந்தவுடன் மக்கள் களத்தில் இறங்கி போராடுகின்றனர் ( டெல்லி மாணவி bus )..பிரச்சனையை பெரிது படுத்துகின்றனர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்றனர் .. இங்கு நம் வீட்டிற்கு வராதவரை ஷேமம் என்று அடக்கி வாசிகின்றோம்......

25-நவ-201318:05:53 IST Report Abuse
ShekarVery simple Mr. Srinath அங்குள்ள மீடியா எல்லாம் (NDTV, Aajtak, IBN7......) அரசியல் கலவாதது reach அதிகம் நாட்டில் உள்ள அல்லது நடந்த பிரச்சனைகளை ஆழ ஊடுருவுகிறார்கள், இங்கே நமது Media .) அனைத்தும் அரசியல் வாதிகளால் நடத்துவது, அவர்களுக்கு எதிர் அணி மீது சேற்றை வாரிஇறைக்கவும் இலங்கை தமிழர்களுக்கு அழுகவும் நேரம் சரியாக உள்ளது நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை வெளிப்படுத்த நேரமில்லை. சொல்லப்போனால் சிலசமயம் அவர்கள் கட்சிக்கு சில விசயங்களில் மறைமுக தொடர்பு இருப்பதால் total blackout....

முதல் இரவு அறையில் சாம்பிராணிப்புகை எதுக்கு ?

1. குழந்தைக்கு ராகுல் னு பேர் வெச்சா மேரேஜ் ஆக லேட் ஆகும்.கூகுள் னு வெச்சா எல்லா பொண்ணுங்களும் தேடி வருவாங்க


===================


2 தியேட்டர் புக்கிங்க் பத்தி கவலைப்படத்தேவை இல்லை.நமக்கான தியேட்டர் நமக்காகக்காத்திருக்கும் # அரிசி ல பேரு மாதிரி



===================


3 வழக்கமா ஆனந்த் இப்டி தொடர் தோல்வியை சந்திக்க மாட்டாரே? மேட்ச்் பிக்ஸிங்கா இருக்குமோ? ச்சே ச்சே அப்டி இருக்காது



=====================


4 உடன் பிறப்பே! கழக ஆட்சியிலே ஆனந்த் ஆனந்த மயமாய் இருந்தார்.அம்மையார் ஆட்சியிலே தன் வெற்றி ராசியை இழந்தார்.சிந்திப்பீர்!



==================


5 படம் ஹிட் ஆகிட்டா செல்வ ரா க WON



=================



6 தனுஷ் - ஊத்திக்க ஊத்திக்க ஒரு ரவுண்டு, செல்வராகவன் - அபசகுனமா பாடாதே! #2ம் உலகம்




------=================



7 அனுஷ்கா எனும் சொர்க்கம் இருந்தும் 2 ம் உலகம் நரகம் என சொல்றாங்க்ளே? :-((



==================


8  தொடர் தோல்விகளை 2 ஸெட் அண்ணன் - தம்பி ங்க சந்திச்ட்டே இருக்காங்க.




==================


9  செல்வ ராகவன் - தண்டச்செலவு ராகவன்


=================


10 தனது ஆளுமையை பிரமாதமாக நிரூபித்த திறமைசாலிகள் தோற்கும்போது இதயம் வலிக்கிறது # விஸ் ஆனந்த் ,செல்வராகவன் :-(



===================


11 நல்ல படம் எடுத்தாலே படைப்பாளிக்கு கவுரவம் தான்.ஆனால் வெகுஜன ரசனைக்குத்தக்கபடி தன் திறமையைப்பரிமாறுபவரே எல்லோராலும் கொண்சாடப்படுவர்




=================



12 ரொம்ப பக்திப்பழமா இருக்கும் தம்பதிகள் முதல் இரவில் சாம்பிராணிப்புகை யால் அறையை நிரப்புவாங்களாம் # திருப்பள்ளி எழுச்சி



===================


13  இன்னைக்கு ஆபீஸ் ல ஒரு இண்ட்டர்வியூ இருக்கு.12 பொண்ணுங்க வராங்க.ஆனா நான் லீவ்.அனுஷ்கா வுக்காக இந்த தியாகத்தை பண்றேன்


======================



14 தீவிர அனுஷ்கா ரசிகர் 2ம் உலகம் பார்்த்துட்டு ஆந்திரா போய் வர்ணா வும் பார்ப்பாரோ?



=====================



15 ஈரோடு டூ கோவை பேசஞ்சர் ட்ரெய்ன் ல காலங்காத்தால 4 க்ரூப் சீட்டாடிட்டிருக்கு.தமிழன் உருப்படவே மாட்டான்



=====================



16 விழி ஒளி இழந்து இரந்து நிற்கும் ஆட்களின் சில்லறைக்காசு குலுக்கும் டப்பா ஓசையே நம் மனதை நிரடும் இசை



=================



17 திருவோட்டில் ரூபாய் நோட்டு போடுபவர்கள் காற்றில் பறக்காமல் இருக்க வெயிட் டுக்கு அதில் உள்ள சில்லறையையே உபயோகிக்கலாம்



===================



18 பாரத இதிகாசத்தை பாரீனர் அவதார் எடுத்தா ஆஹா ஓஹோம்பான்.நம்ம தமிழன் ஹாலிவுட் ரேஞ்சுக்குப்படம் எடுத்தா மொக்கைம்பான் .இது தான் (2ம்) உலகம்



====================



19 ஹீரோயினுக்கு கண்ணாடி போட்டு விட்டா கே பாக்யராஜ் படம்.ஹீரோக்கு கண்ணாடி போட்டு விட்டா செல்வராகவன் படம்



===================


20  அனுஷ்கா கூட டூயட் பாடுனவங்க எல்லாம் இருக்கற இடம் தெரியாம கமுக்கமா இருக்காங்க.அனுஷ்கா படம் பார்த்ததுக்கே அலப்பறை # என்னைச்சொன்னேன்



===========================

Monday, November 25, 2013

gori tere pyar mein - சினிமா விமர்சனம் (மாற்றான் தோட்டத்து சேட்டு மல்லிகை )

கோரி தேரே பியார் மே - நீங்கள் அறிந்த சினிமா -சினிமா பித்தன்

01. கண்டெடுத்தான் காடு, மண்ணைத் தின்னும் குழந்தைகள், உழைப்பைத் தவிர வேறெதும் அறியாத ஏழை வெள்ளந்தி குடிமக்கள்... ஏமாறுகிறோம் என்று அறியாமல் நாளும் தேயும் இக்குடியினரின் வாழ்வாதாரத்தை மாற்றியமைக்கும் வாத்தி 'வேலுத் தம்பி'. பெல் பாட்டம் பேன்ட்டுடன் விமலும், 'டீ'யுடன் மனசையும் சேர்த்து ஆற்றும் இனியாவும் கண்முன் தோன்றுவார்களே!



02. நாசாவில் வேலை பார்த்து, தன்னை வளர்த்த காவேரி அம்மாவை பார்க்க கிராமத்திற்கு வரும் பேரன். கிராமத்தில் உள்ள வேறுபாடுகள் மனிதர்களின் அறியாமையை உணர்ந்து தன் தேவையை அறிந்து, அமெரிக்க வேலையை விடுகிறான்.



03. வெளிநாடு சென்று பெரிய 'குக்'காக வேண்டும் என நினைக்கும் இளைஞன் தன் தாத்தாவின் தாக்கத்தால், உணவின் தேவையை உணர்ந்து, அவர் ஹோட்டலையை எடுத்து நடத்துவது.


மேற்கண்டவை முறையே வாகை சூட வா (தமிழ்), ஸ்வதேஷ் (இந்தி), உஸ்தாத் ஹோட்டல் (மலையாளம்) என ஏறத்தாழ ஒரே கதைக்களத்தில் அமைந்த படங்கள்தான். இப்படங்களின் பெரிய பலம் என்னவென்றால் இவை பார்வையாளர்களை ஆட்கொள்ளும் தன்மை கொண்டவை. Captivating Cinema என்று இதைக் கூறலாம்.



படத்தின் மையக் கதாபாத்திரம் ரசிகனில் ஒருவனாகக் கூட இருக்கலாம். சுகவாசியாக, தனக்காக மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைக்கும் நாயகன் மெல்ல மெல்ல தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தால், சம்பவங்களால் ஆட்கொள்ளப்பட்டு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதுதான் இப்படங்களின் ஆணிவேர். படம் பார்க்கையில் ரசிகர்களாகிய நம்மை போல் கதாநாயகன் தோன்றுவான், அவனுள் நிகழும் மாற்றங்கள் நம்முள்ளும் வரக்கூடியவையாகத்தான் திகழும். இதுவே இக்கதை வடிவம் அமைக்கப்பட்ட சிறப்பு எனவும் கூறலாம்.



புனித் மல்ஹோத்ரா இயக்கத்தில் இவ்வாரம் வெளிவந்துள்ள இந்தி திரைப்படம் 'கோரி தேரே பியார் மே(ன்)' |Gori Tere Pyaar Mein| கூட இதே அடிநாதத்தில்தான் அமைந்துள்ளது. ஆனால், முன்பு கூறிய எவ்விதத் தாக்கத்தையும் இது ஏற்படுத்தவில்லை. அவரின் முந்தைய மூன்று படங்களின் சாயலில் அமைந்த கதைதான் என்றாலும், பேனாவின் தேவையை கேள்விக்குறியாக்கும் திரைக்கதை, கடந்து போகும் படங்களின் வலையில் இதை விழ வைத்துள்ளது.




இந்த இடத்துல ஹீரோயின் மேல லவ் வரும், இப்போ இரண்டு பேரும் ஓடி வந்து கட்டிப் புடிப்பாங்க பாரு, நீ வேணும்னா பாரு கடைசியில இதுதான் கிளைமாக்ஸா இருக்கும். இப்படி சில படங்களில் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, ட்ராலி பார்வர்ட், கட் உட்பட அனைத்தையும் பார்வையாளனால் வரையறைக்க முடிகிறது. கட்டுக்கோப்பற்ற திரைக்கதையும், புளித்துப் போன க்ளீஷே காட்சிகளும் இதற்கு காரணங்களாக அமைகின்றன.




இப்படத்தைப் பொருத்தவரை, படம் பார்த்து கதை சொல்ல வேண்டும் என்று இல்லை, ட்ரைலரைப் பார்த்தே மொத்த கதையையும் சொல்லிவிடலாம். பாலிவுட் சினிமாவின் பாரம்பரிய மசாலா காதல் கதை, பணக்கார ஆர்கிடெக்ட் நாயகன், சமூக சேவகி நாயகி. வழக்கம்போல் சமூகத்தில் இது தவறு, அது தவறு என்று கூறுவதும், மினிஸ்டர்களை மீட்டிங்கில் கலாய்ப்பதுமாக 'கரீனா கபூர்' பஞ்ச் வசனங்கள் பேசுகிறார். அதைப் பார்த்து ஜொள்ளு விடும் நாயகன் இம்ரான் கான் லவ்வாகி காதலில் விழுகிறார். புதுசா எதாவது நடக்கும் என்ற நமது நம்பிக்கை பாதாளத்தில் விழுகிறது.



காதல் மோதலாகி பிரேக் அப் ஆகிறது, கிராம மக்களுக்கென சேவை செய்ய கரீனா கிராமத்திற்கு செல்கிறார். 'நீ தானே என் பொன் வசந்தம்' எனக்கூறி நம்ம ஹீரோவும் அங்கே செல்கிறார். கிராமத்தில் பாலம் தேவைப்படும் சூழல் எழ, இம்ரான் தன் காதலுக்கு பாலம் அமைத்துக் கொள்கிறார். இவர்களின் காதலுக்கு கிராம மக்களை பொம்மையாக்கி கடைசியில் ஹீரோ, ஹீரோயின் கெட்டி மேளம் கொட்டுவதுதான் நீங்கள் அறிந்த க்ளைமாக்ஸ்.





இந்தப் படத்தில் ஒரு நல்ல விஷயம், இது நம் முழு கவனத்தை பரிசாகக் கேட்கவில்லை, படத்தை எவ்விடத்திலிருந்து பார்த்தாலும் நம்மால் கதையை புரிந்துகொள்ள முடியும். துணிக்கு இஸ்திரி போடும்போது, சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சாப்பிடும்பொழுது, இப்படி போர் அடித்தால் நேரத்தை கடப்பதற்கென சில படங்கள் அமைந்திருக்கும் இப்படம் அப்பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பட்டியலில் முந்துகிறது என்றும் சொல்லலாம்.



சில நல்ல காட்சிகள், சில சுமார் காட்சிகள், சில மொக்கை காட்சிகள், சில ஃபில்லர் காட்சிகள், உளறிக் கொட்டி கிளறி மூடும் க்ளைமாக்ஸ் இப்படி வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே இப்படம் விளங்குகிறது. (விளங்கிடும்!). சினிமா என்பது வெறும் காட்சியின் தொகுப்பல்ல; கதைக்கு வடிவும் அளிக்கும் யுக்தி என்பதை உணர்ந்தோர், இப்படத்தில் சலிப்படைவர்.


அழகான ஹீரோ - ஹீரோயின், கலர்ஃபுல் லொகேஷன், நான்கு பஞ்சாபி தேசீ பீட்டுக்களுடன் பார்ட்டி பாடல்கள், சின்ன சின்ன காமெடி. வருத்திக்கொள்ளாத கதைக்களம். பக்கெட் பாப்கார்ன் காலியாகும் வரை படம் பார்க்க வேண்டும் என விழைவோர், இப்படத்தை தாராளமாக நாடலாம்.


இம்ரான் கானை தமிழனாகக் காட்டியும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' ஷாருக்கானை போல் தமிழ்க்கொலை செய்து பேசாமல் இருந்தது மனதிற்கு ஆறுதல்.



ஆறுதலுக்காகப் படம் போவேன் என்றால், உங்கள் இஷ்டம்... எனக்கென்ன கஷ்டம்!


thanx - the tamil hindu

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan


தண்டவாளம் ஏறும் மோடியின் வண்டவாளம் -பெண் வேவுபார்ப்பு விவகாரம்

பெண் வேவுபார்ப்பு விவகாரம்: 'மோடி மீது சிபிஐ விசாரணை தேவை'

இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அந்த மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். 


இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


இதை தொடர்ந்து அவர் இப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதனுடன் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவும் தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் சிங்காலும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 150 பக்க அறிக்கையையும் அவர் இணைத்துள்ளார். 


கடந்த 2009-ம் ஆண்டில் பெங்களூரைச் சேர்ந்த 27 வயது பெண் பொறியாளரை குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பின்தொடர்ந்து வேவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன. குஜராத் மேலிட உத்தரவின்பேரிலேயே இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக அந்த இணையதளங்கள் குற்றம் சாட்டின. 


இந்நிலையில், குஜராத் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, இளம்பெண் விவகாரம் காரணமாகவே தன் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 


கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 



நரேந்திர மோடி, பெங்களூர் பெண் குறித்த விவகாரம் எனக்குத் தெரியும். அதன் காரணமாகவே என் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 


இதை தவிர எனது தம்பி குல்தீப் சர்மா, குஜராத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பல்வேறு தவறான செயல்பாடுகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுவும் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். என் மீதான அனைத்து வழக்குகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனது மனுவில் பிரதீப் சர்மா கோரியுள்ளார். 


இதனிடையே, தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியி ருப்பது: 


2004-ம் ஆண்டில் பவ நகரில் நடைபெற்ற பூங்கா திறப்பு விழாவில் முதல்வர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில்தான் பெங்களூர் பெண் பொறியாளரை முதல்வருக்கு நான் அறிமுகம் செய்தேன். அதன்பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. 


தனது மகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக அவரது தந்தை அறிக்கை வெளியிட்டிருப்பதில் உண்மை இல்லை. மிரட்டலின்பேரிலேயே அவர் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்தார். 



  • ருள் George at Practicing as an Advocate at District Court, Nagercoil
    அருண் ஜெட்லியின் விவகாரத்தில் ஊளையிட்ட அவர்கள் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் எந்தவிதமான விசாரணைக்கும் அமித்ஷாவையும் நரேந்திரமோடியையும் உட்படுத்தாமல் நரேந்திரமோடியும் அவரது கட்சியும் அந்த பெண்ணின் தந்தையின் கடிதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.
    about 19 hours ago · Up Vote  (1) ·  Down Vote (0) ·  reply (0)
  • hidayathullah
    இதுவெல்லாம் மோடிக்கு கை வந்த கலை. ஸ்ரீகுமார் உளவுத் துறை கூடுதல் தலைவராக பணியாற்றியவர் அவரது பேட்டி மலையாள மனோரமாவில் வேல்வந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து சில. குஜராத் படுகொலைகள் நிகழ்ந்து ஏழாண்டுகள் கடந்துவிட்டன. அது ஒரு வகுப்பு கலவரம் அல்ல. அரசாங்கத்தின், காவல் துறையின், அரசு இயந்திரத்தின் மேற்பார்வையில் நிகழ்த்தப்பட்ட குரூரமான அழித்தொழிப்பு என்பதற்கு எண்ணற்ற நேரடி சாட்சியங்கள் முன்வைக்கபட்டுவிட்டன. 


     இந்தப் படுகொலையை நிகழ்த்தியவர்களின் நேரடி வாக்குமூலங்களை தெஹல்கா இதழ் உலகத்தின் பார்வைக்கு கொண்டுவந்தபோது அது நீதியின்பால், அரசியல் அமைப்பின்பால் கொண்ட கொண்ட நம்பிக்கைகளைச் சிதைத்தது. ஆயினும் நரேந்திரமோடி மீண்டும் வெற்றி பெற்றார். இன்று இந்தியாவை வளரச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு தலைவராக அவர் சித்தரிக்கப்படுகிறார்.


     ஒரு நாள் அவர் இந்தியாவின் பிரதமராகவும் வரக்கூடும். குஜராத் வன்முறையின்போது மோடியின் அரசின் இனவாத பாசின நடவடிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதில் முக்கிய பங்குவகித்தவர் அப்போது அங்கு உளவுத் துறை கூடுதல் தலைவராக பணியாற்றியவர் கேரளாவைச் சேர்ந்த ஸி.ஙி.ஸ்ரீகுமார். மோடியும் அவரது அரசு எந்திரமும் நரவேட்டைக்கு உறுதுணையாக இருந்ததுடன் எவ்வாறு அதை முன்னின்று நடத்தினார்கள் என்பதை அவர் மனத்துணிவுடன் அம்பலப்படுத்தினார். 



    அவை அரசாங்கத்தின் பாத்திரம் குறித்த அதிகார பூர்வமான, தீர்மானமான நிரூபணங்கள். ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் மோடியின் அரசுக்கு எதிராக அவர் நேருக்கு நேர் நின்று போராடினார். குஜராத் வன்முறையின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக்கொண்டுவருவதந்தில் பெரும் பங்கு வகித்தார். . குஜராத்தில் காந்திநகரில் ஸ்ரீகுமாருடன் நிகழ்த்திய நேர்காணலிருந்து திரு.கே.மோகன்லால் தொகுத்த சித்திரம் இது. இன்னும் கேட்க முடிகிறவர்களை, இன்னும் பார்க்க முடிகிறவர்களை கலங்கச் செய்யும் சித்திரம். மலையாள மனோரமா 2008 ஆம் ஆண்டு ஓணம் சிறப்பிதழில் வெளிவந்து பலத்த அதிவுகளை ஏற்படுத்திய பேட்டிக் கட்டுரையின் தமிழாக்கம் இது. அவர் விளக்கிக் கூறினார்


    . 27ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு சீப் செக்கரட்டரி ஜி.சுப்பாராவ், டி.ஜி.பி.சக்கரவர்த்தி, அகமதாபாத் சிட்டி கமிஷனர் (இவர் தற்போது குஜராத் காவல்துறை தலைவராக இருக்கிறார்) பி.சி. பாண்டே, அடிசனல் சீப் செக்ரட்டரி அசோக் நாராயணன், முதல் அமைச்சரின் சிறப்பு செயலாளர் பி.சி.மிஸ்ரா (இப்போது இவர் மத்திய அமைச்சர் சரத்பவாரின் செயலாளர். இவர் ஆட்சித்தலைமைக்கு உயர்த்தப்பட்டதை கவனிக்கவும்) இவர்கள் அனை வரும் சேர்ந்து முதல் அமைச்சரின் முன்னிலையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் முதல்வர் கூறினார். 



    “இந்து மக்களைப் பொறுத்தமட்டில் மிகவும் துரதிருஷ்டவசமான, வேதனை நிறைந்த விஷயங்கள்தான் நடந்து இருப்பவை. சாதாரண நிலையில் நீங்கள், ஒரு இனக் கலவரம் வெடிக்கும் போது இந்துக்களையும், முஸ்லீம்களையும் சரிசமமாகக் கைது செய்வீர்கள். அந்த நடைமுறை இங்கு எக்காரணம் கொண்டும் நிகழக்கூடாது. மூன்று நாட்களுக்கு இங்கு இந்துக்களின் பழிவாங்கும் நெருப்பு பொங்கி எழும். யாரும் அதைக் கண்டுகொள்ளவும் கூடாது, அதில் தலையிடவும்கூடாது. இது என் பிரத்தியேகமான உத்தரவு.” இது தான் ஒரு பிரதம வேட்பாளரின் தன்னடத்திற்க்கனா சான்று.


    a day ago · Up Vote  (1) ·  Down Vote (0) ·  reply (0)
  • K
    பிரதமர் உள்பட அனைவரின் உரையாடல்களையும் ஒட்டு கேட்ட அமெரிக்க அரசை கேள்வி கேட்காத காங்கிரஸ் அரசு இதில் மட்டும் அக்கறை காட்டுவதேன்?
    a day ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • Rajan
    இவர் நாளைக்கு பிரதமர் ஆனால், இந்தியன் மில்லிடரி, IB, சிபிஐ, RAW, etc.. இவர்களை நினைத்தால் பாவமாக தான் இருக்கு... வழக்கம் போல இது காங்கிரஸ்சின் சூழ்ச்சின்னு சொல்லுவாங்க. ராமர் தான் என் கடவுள்ளுன்னு மோடியும் சொல்லுவார் . இந்திய கலாச்சாரம் படி "ஒருவனுக்கு ஒருத்தி".... அப்படி இப்படி பேசுவார். அதற்கு பலர் கை தட்டுவாங்க... எல்லாம் தலைஎழுத்து......
    a day ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • V.Shanmuganathan
    IAS அதிகாரி திரு.பிரதீப் சர்மா அவர்கள் திரு.மோடியின் மேல் கூறிய இந்த மிகப்பெரிய குற்றச்சாட்டுகூட காங்கிரஸ் கட்சியின் சதி வேலை என்று திரு.மோதியின் ஆதரவாளர்கள் சொல்ல தயங்கமாட்டார்கள். ஒரு நாட்டின் பிரதமமந்திரி வேட்பாளராக போட்டியிடப்போகும் ஒரு நபர்,பல பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவராக இருப்பது துரதிஷ்ட்ற வசமானது. சீதையானாலும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்கமுடியாது! ஸ்ரீராம் சீதாதேவியையே அக்னிபரிட்ஷை செய்ய சொல்லவில்லையா. எனவே பிஜேபி திரு.மோதி மேல் சாட்டப்பட்ட குற்றசாட்டை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரவேண்டும். இல்லையேல் ஒரு குற்றவாளியை பிரதமர் பதவிக்கு போட்டியிட வைத்த கெட்டபெயர் பிஜேபி கட்சிக்கு வர அவர்களே காரணமாகிவிடுவர்.
 நன்றி - த ஹிந்து