Sunday, November 17, 2013
ஆப்பிள் பெண்ணே - சினிமா விமர்சனம்
ஊருக்கு புதுசா வேலைக்கு வரும் போலீஸ் ஏட்டுதான் படத்தில் மெயின் கேரக்டர் . இவர் ஒரு சைக்கோ மாதிரி .தன்னைத்திட்டினார் என்பதற்காகவே எஸ் ஐ உயிருக்கே ஆப்பு வைக்க நினைப்பவர். இவர் பண்ற வில்லத்தனங்கள் பல. அதில் ஒண்ணு தான் ஹீரோயின் ஒரு டைம் தன்னை அவமானப்படுத்திட்டார் என்பதற்காக அவர் டிரஸ் மாத்தும்போது செல்லில் ஃபோட்டோ எடுக்கும்போது மாட்டி ஊர் முன் அவமானப்பட்டு ஹீரோயினைப்பழி வாங்கத்துடிக்கறார்.
ஹீரோயினோட அம்மா ஊர்ல ஒரு மெஸ் வெச்சு நடத்திட்டு வர்றார். அப்பா இறந்து 16 வருசம் ஆச்சுன்னு சொன்னாலும் பூவும், பொட்டும் வெச்சு கிளாமரா வலம் வர்றார், கடைக்கு வரும் கஸ்டர்கள் எல்லாம் அவர் அழகை ரசிக்கத்தான் வர்றாங்க எனும் எண்ணம் ஹீரோயினுக்கு, அதனால அவருக்கும் , அம்மாவுக்கும் நடக்கும் வாக்குவாதங்களால் வீட்டை விட்டு கிளம்பிடறார்.
ஹீரோயின் இருக்கறதால கண்டிப்பா ஹீரோன்னு ஒரு ஆள் வேணும்கறதுக்காக டம்மியா ஒரு ஹீரோ , ஓ பி எஸ் மாதிரி அவர் ஹீரோயின் பின்னால சுத்துவது , கரெக்ட் பண்ண ட்ரை பண்றது இப்படி அது பாட்டுக்கு ஒரு பக்கம் ஓடுது
இந்த 3 வேவ்வேற டிராக்கையும் திரைக்கதைல எப்படி இணைக்கறாங்க என்பதுதான் கதை முடிச்சு . இது போக ஹீரோயின் அம்மாவுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் இருக்கு . மொத்தம் 4 டிராக்கில் கதை . அய்யோ அம்மா .1980 ல் ரிலீஸ் ஆகி இருந்தா 20 நாள் ஓடி இருக்கும்
தம்பி ராமையா தான் மெயின் கேரக்டர் . வில்லன் நடிப்பு இவருக்கு நல்லாவே வருது . அங்கங்க ஓவர் ஆக்டிங்கும் பண்றார். க்ளோசப்பில் இவர் முகத்தை அடிக்கடி காட்டும்போது மீசை இடப்பக்கம் நேராகவும் , வலப்பக்கம் வளைந்தும் இருக்கு . இதைக்கூடவா சரி பார்க்க மாட்டாங்க ? ஆனா படத்தை உக்காந்து கொஞ்சமாவது பார்க்க முடிவதே இவர் கேரக்டர் தான்

ரோஜா தான் ஹீரோயினுக்கு அம்மா கேரக்டர் .டைரக்டர் கேமரா மேன் கிட்டே கண்டிஷனா சொல்லிட்டார் போல . ரோஜா இடுப்பில தான் உன் கவனம் எல்லாம் இருக்கனும்.. அப்டினு . மெஸ் ல இட்லி சுட்டாலும் சரி , சேசிங்க் சீனிலும் சர் , சோக சீனிலும் சரி கேமரா ரோஜா இடுப்பிலேயே நிக்குது . அங்கே தான் நிக்கறான் சந்திரன் படிங்கற மாதிரி .ஆர் கே செல்வமணி சார் பாவம்
ஹீரோயின் மலையாள வரவு . பேரு ஐஸ்வர்யா மேனன் . குடும்பப்பாங்கான முகம் .பாவனைகளை டக் டக் என மாற்றும் லாவகம் , கிளாமர் காட்சிகளில் கண்ணியம் ( எதேச்சையாக கவர்ச்சி தெரிவது போல் நடிப்பது ) என முதல் படம் என்ற அளவில் ஓக்கே .
இயக்குநர் கலைமணி ஆர் கே ஆல்ரெடி எங்கள் ஆசான் , சூப்பர் குடும்பம் , தை பொறந்தாச்சு போன்ற மீடியம் பட்ஜெட் படங்களைக்கொடுத்தவர் தான்

பலே பாண்டியா
1. ரோஜா வுக்கான ஓப்பனிங்க் சாங்கில் (பாடு பாடு மச்சா நீ பாடு பாட்டுதான் நமக்கு சாப்பாடு ) எந்த எந்த உணவு நமக்கு என்னென்ன பலன் தரும் என்ற இயற்கை வைத்திய பலா பலன்களை அழகாக சொல்லும் பாடல் வரிகள் ச்பாஷ் போட வைக்குது . கிராமத்து ஆட்களுக்கு மட்டுமே தெரிந்த து நகரத்து ஆட்களுக்கும் இனி தெரியும்
2 தம்பி ராமைய்யாவின் ஹையர் ஆஃபீசராக வருபவரின் யதார்த்தமான நடிப்பு

சொதப்பிட்டியே சொப்னா
1. ஹீரோயின் கவர்மெண்ட் ஸ்கூல் ல படிக்குது . ஆனா அடிக்கடி அவர் தோழிகளுடன் சைக்கிள் ல போகும் காட்சிகளில் தோழி சைக்கிளை நிறுத்தி “ இருடி ரெக்கார்டு நோட் வாங்கிட்டு வர்றேன்குது “ எதுக்கு ? அதான் எல்லாம் அரசாங்கமே கொடுக்குமே? அப்டியே எக்ஸ்ட்ரா நோட் வாங்கனும்னா ஸ்கூல்லயே ஸ்டோர் ரூம் ல வாங்கினா ரேட் கமியா இருக்குமே? ஏன் வெளி ல அடிக்கடி ஏதாவது நோட் வாங்கிட்டே இருக்கு ?
2. வில்லனான தம்பி ராமைய்யா ஹீரோயினை ரேப் பண்ண ஒரு ரவுடி கிட்டே பணம் கொடுத்து அனுப்பறார். ஏன் இவர் அந்த வேலையை செய்ய மாட்டாரா? கரும்பு தின்ன எதுக்கு கூலி கொடுத்து ஆள் செட் பண்ணனும் ? இத்தனைக்கும் அவர் தனியாதான் வசிக்கறார். ஹீரோயின் அவர் வீட்டில் தான் தங்கி இருக்கு . ஏன் அவர் ரேப் பண்னலை ?
3 தன் ஹையர் ஆஃபீசரைப்பழி வாங்க வில்லன் தம்பி ராமைய்யா அவர் வீட்டின் வாசலில் நின்னு யோசிக்கும்போது அந்த வழியா ஒரு பாம்பு வருது . இவர் அதை கையால எடுத்து ஜன்னல் வழியா போட்டுடறார். அவர் கையால எடுக்கும்போது பாம்பு அவரைக்கொத்தலை, ஆனா ஜன்னல் வழியா போய் எஸ் ஐ ஐ மட்டும் கொத்துது , ஏன் ?
4 பாம்பை ப்பார்த்தது, எஸ் ஐ கூட இருக்கும் கில்மா லேடி பேயைப்பார்த்த மாதிரி ஏன் ஓடுது ? 2 பேரும் சேர்ந்து பாம்பை அடிக்க முடியாதா?
5 ஒரு போதும் உன் பேரில் காதல் பாட்டு அழகு வரிகள் , ஆனா இசை , மெட்டு எல்லாமே பிரபு நடிச்ச படப்பாடலின் அப்பட்டமான காப்பி ( ஏய் டாக்ஸி . என் கண்மணீயே பொன்மணியே _). வசன வரிகள் பின் பாடல் வரிகள் என்ற கதம்பம்
6 சுரேஷ் - ரோஜா ஃபிளாஸ்பேக் காட்சிகளில் சுரெஷ் கேரக்டரில் வேறு ஒரு டீன் ஏஜ் பையனைப்போட்டிருக்கலாம் . சுரேஷ் தாத்தா மாதிரி இருக்கார் . பீர் அடிச்சதால உப்பிய கன்னம், தொப்பையோட அவரைப்பார்க்க சகிக்கலை

நச் டயலாக்ஸ்
1. இந்த லெட்டரை வீட்டுக்கு கொண்டு போ; அதைப்பிரிக்காம , படிக்காம நாளைக்கு திருப்பி கொண்டு வந்தா உனக்கு என் மேல காதல் இல்லைன்னு அர்த்தம்
2 உனக்கும் , உன் பொண்ணுக்கும் வித்தியாசமே தெரியலை . பொண்ணைப்பார்க்க வரும் மாப்ளை உன்னை கட்டிக்கப்போறார்

சி பி கமெண்ட் - இந்தப்படத்தை டி வி ல போட்டா பார்க்கலாம்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் = 39
குமுதம் ரேங்க் = சுமார்
ரேட்டிங்க் = 2.5 / 5
புதுக்கோட்டை ஹேமா மேக்சி தியேட்டர்ல படம் பார்த்தேன் . மொத்தமே 250 சீட் தான் இருக்கும் . மேக்சிக்கே இத்தனைன்னா ஹேமா மினி ல இன்னும் கம்மியா தான் இருக்கும் . என் கூட 4 பேர்தான் ஆடியன்சே. அய்யோ பாவம் , எபப்டி கட்டுபடி ஆகுதோ ஆபரேட்டருக்கும் , ஓனருக்கும்

13 ஆயிரம் பவுன்; 30 கோடி மோசடி ( ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனம் பேரைச்சொல்லி )
கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோயில் அருகில் இந்திரா நகர் புதுத் தெருவில்
ஆடம்பரமாக வாழ்ந்து வந்தவர் பாத்திமா நாச்சியார். இவர் மயிலாடுதுறை
சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் தமிமுன் அன்சாரி.
பாத்திமாவிடம் 10 பவுன் தங்க நகையைக் கொடுத்தால் ரூ.15 ஆயிரம் தருவாராம்.
இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் ரூ.30 கோடி மதிப்புள்ள நகைகளைப் பாத்திமா
வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நகைகளைப் பெற்ற பாத்திமா நாச்சியார், அவற்றைத் திரும்பத்
தராமல் ஏமாற்றியதாக சென்னையில் தமிழக டிஜிபி ராமானுஜத்திடம் சிலர் புகார்
அளித்தனர். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சென்னை சென்ற பாத்திமா,
டிஜிபியைப் பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் திரும்பியதாகக்
கூறப்படுகிறது. இதையடுத்து பாத்திமா நாச்சியார் வீட்டுக்குச் சென்றபோது
அவர் அங்கு இல்லை. ஒரு மணி நேரம் கழித்து வந்தவர், “தி இந்து” நிருபரிடம்
கூறியதாவது:
“2010-லிருந்து 2012 ஜனவரி வரை நகை சுழற்சி (?) செய்து வந்தேன். எனக்கு 23
பேர் முகவர்களாகச் செயல்பட்டனர். நாகை மாவட்டத்தில் உள்ளவர்களிடம்தான்
நாங்கள் நகைகளை வாங்கியுள்ளோம். அவர்கள், தங்களுக்குத்
தெரிந்தவர்களிடமிருந்து 10 பவுன் நகை வாங்கித் தந்தால், 10 நாளில் ரூ.15
ஆயிரம் தருவேன். ஒரு மாதத்தில் நகையை திரும்பத் தந்து விடுவேன். எல்லோரும்
ஒரு குடும்பம்போல் இருந்தோம். நகை சுழற்சி நடக்கும் வரை எந்தப்
பிரச்சினையும் இல்லை.
நகைகளை மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனத்தில் அடகு
வைத்துதான் பணத்தை தந்து கொண்டிருந்தேன். முதலில் அவர்கள் எவ்வளவு வேண்டும்
என்றாலும் நகை வைக்கலாம் என்றார்கள். ஒருகட்டத்தில், அவர்கள், தொகை ரூ.8
கோடிக்கு மேல் தாண்டிவிட்டது, இனிமேல் நகை வைக்க முடியாது என்றதால் பண
சுழற்சி நின்றுவிட்டது. அப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. இந்நிலையில்
மயிலாடுதுறை ஐசிஐசிஐ வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்கர் என்பவர் உதவ
முன்வந்தார். ஒருவரின் பெயரில் ரூ.4.50 லட்சம் வரை நகைக் கடன் பெறலாம்
என்பதால், அவரே சுமார் 150 பேரின் பெயரில் நகைக் கடன் பெற்றுத் தந்தார்.
அவரே பெயர் வைத்து, ஆவணங்களையும் தயார் செய்து கொண்டார். இதற்காக என்னிடம்
ரூ.4.50 கோடி வரை கமிஷனாகப் பறித்துக்கொண்டார்.
இந்நிலையில், சில வாடிக்கையாளர்கள் 10 மாதம் வரை நகையை
வைத்துக்கொள்ளுங்கள், முதலிலேயே ரூ. 1 லட்சமாகத் தந்துவிடுங்கள் என்றனர்.
அப்படி என்றால் நகையை திரும்பத் தரும்போது பணத்தையும் திரும்பத்
தந்துவிடவேண்டும் என்ற நிபந்தனைப்படி எல்லோருக்கும் பணம் தந்தேன்.
முகவர்களால்தான் பிரச்சினை
இதற்காக நான் யாரிடமும் எழுதிக் கொடுக்கவில்லை. என்னிடம் வாங்கிய
பணத்துக்கு முகவர்கள் எழுதித் தந்துள்ளனர். அந்தப் பணத்தை அவர்களை வேறு
வழிகளில் முதலீடு செய்து, வீடும் சொத்தும் சேர்க்கத் தொடங்கியதால்தான்
பிரச்சினை ஏற்படத் தொடங்கியது.
இந்நிலையில்தான், மயிலாடுதுறையிலிருந்து நான் அடித்துத் துரத்தப்பட்டு,
கும்பகோணத்தில் உள்ள எனது கணவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த ஓராண்டாக
வசித்து வருகிறேன். மயிலாடுதுறையில் உள்ள வீட்டை எனது முகவராக செயல்பட்ட
தன்ஷிலா வடகரை என்பவருக்காக பாமகவைச் சேர்ந்த வி.ஜெ. மணி, ம.க. ஸ்டாலின்
ஆகியோர் எங்களை மிரட்டி வீட்டின் பத்திரத்தை வாங்கிச் சென்று விட்டனர்.
என் மீது நாகை காவல் நிலையத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நான் கைது
செய்யப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது எனக்கு உதவ உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
இம்தியாஸ் என்பவர் முன்வந்தார். என்னை குண்டர் சட்டத்தில் கைது
செய்யவுள்ளதாகவும், அதனால் முன்ஜாமீன் பெற வேண்டும் என்று
அவர் கூறியதோடு, இந்தப் பிரச்சினைகளை முழுமையாக முடித்துத் தருவதாகக் கூறி
ரூ.13 லட்சம் வரை பறித்துக் கொண்டார். முன் ஜாமீன் மட்டும்தான் பெற்றுத்
தந்தார். முன்ஜாமீன் பெற ரூ.22 ஆயிரம்தான் செலவாகும் என்பது பின்னர்தான்
தெரிந்தது. என்னை மிரட்டி பணம்பறித்துக்கொண்ட அவர், எனது காரையும் தர
மறுக்கிறார்.கணவரை கடத்தினர்
கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத சுமார் 20 பேர் வந்து எனது வீட்டின்
கதவை உடைத்து உள்ளே புகுந்து என் கணவரை கடத்திச் சென்று விட்டனர்.
இதுகுறித்து நான் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு திரும்பிய
நிலையில், டி.வி.யில் நான் நகை மோசடி செய்துவிட்டு தலைமறைவானதாக செய்தி
வந்தது. அதனால், நான் உடனே புறப்பட்டு சென்னை சென்று டிஜிபி ராமானுஜத்தைச்
சந்தித்து விளக்கம் அளித்தேன். நாகை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு உங்கள்
தொடர்பான புகார்களை அனுப்பிவிடுகிறோம். அவர்கள் அந்த வழக்கை
விசாரிப்பார்கள். உங்கள் கணவரையும் மீட்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று
கூறி அனுப்பிவைத்தார்.
8 ஆயிரம் பவுன் நகை அடகு
இப்போது எனது பொறுப்பில் 8,000 பவுன் நகைகள் வங்கியில் மீட்க முடியாத
நிலையில் உள்ளன. மற்றவை எனது முகவர்களிடம்தான் உள்ளது. எனக்கு முகவர்கள் தர
வேண்டிய தொகை ரூ.8 கோடி வரை உள்ளது. நகை மற்றும் ரூ.8 கோடி பாக்கியை
அவர்கள் தந்தால்தான் பணத்தை திரும்பத் தர முடியும். நான் யாரிடமும் நகையை
வாங்கும்போது கையெழுத்திடவில்லை. ஆனால் முகவர்கள் என்னிடம் வாங்கிய
தொகைக்கு ஆதாரம் இருக்கிறது. என்னுடைய பிரச்சினையைப் பயன்படுத்தி,
முகவர்கள், வழக்கறிஞர்கள், போலீஸார் எனப் பலரும் என்னிடமிருந்து
கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்” என்றார்.
இதன் பின்விளைவுகள் தெரிந்துதான் இதில் ஈடுபட்டீர்களா, வாடிக்கையாளர்களிடம்
வாங்கிய நகைகளுக்கு யார் பொறுப்பு என்றபோது, “இதை விளையாட்டாகத்தான்
செய்யத் தொடங்கினேன். இந்த அளவுக்கு விபரீதமாகும் என்று நினைக்கவில்லை.
எனது கணவர் வெளிநாட்டில் இருந்ததாலும், நான் ஒரே பிள்ளை என்பதாலும் எனக்கு
ஆலோசனை வழங்க யாரும் இல்லை. நான் என்ன செய்துள்ளேன் என்பதை நினைக்கும்போது
பயமாக உள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கிறேன்” என்கிறார்
பாத்திமா.
கதவுகளை இயக்கிக் கொண்டிருந்த நவீன ரிமோட் கருவிகள், வீட்டினுள் இருந்த ஒரு
லட்சம் ரூபாய் மதிப்புள்ள டி.வி., ஆடம்பரப் பொருள்கள், வெளிப்புற
கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள் வயதான தாய், தந்தை,
கடத்தல் பயத்தால் 10-ம் வகுப்போடு படிப்பு நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டாக
வீட்டினுள் அடைபட்டுள்ள மகன் மகளுடன், சில இளைஞர்களின் பாதுகாப்புடன்
மார்பிள் கற்களால் இழைக்கப்பட்ட தளத்தில் குஷன் சோபா செட், மென்மயிர்
கம்பளம் விரிக்கப்பட்ட முற்றத்தில் அமர்ந்தவாறு அச்சத்துடன் நாட்களைக்
கடத்திக் கொண்டிருக்கிறார் பாத்திமா நாச்சியார்.
நன்றி - த ஹிந்து
நாட்டையே வித்துட்டு இருக்கற ஆளுங்க மட்டும் தான் PM ஆகனுமா
1. இந்தியப் பொருளாதார நிலை மேம்படும்: சிதம்பரம் நம்பிக்கை # இப்டியே 10
வருசமா சொல்லிட்டு இருக்கீங்க , கிளி ஜோசியக்காரன் தோத்தான் போங்க
=======================
2 நேரடி ஒளிபரப்பில் விஜதாரணி (காங் MLA).இடம் தரக்குறைவாக பேசிய தமிழ்வாணன்
மீது நடவடிக்கை # போலீஸ் மேலிட உத்தரவுப்படி “கை” வெச்சிருக்கும்
==========================
3 கோலியான் கி ரஸ்லீலா ராம்-லீலா' டைட்டிலில் ராம் லீலா வை நீக்கனும் -
கோர்ட் # இதுல காமெடி என்னான்னா இப்போ ராம் லீலா தான் மெயின் டைட்டிலே
==========================
4 தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு முதலிரவுக்கு பெட் சீட் கொடுக்காமல் இருக்கிறது-அன்புமணி # லந்து மணிய்யா இவரு
===================
5 மதுரையில் 5 பவுன் நகையைக்கொள்ளை அடிக்க சார்பதிவாளர் மனைவியை கொலை செய்த கும்பல் # கட்டுபடி ஆகாதே, விசாரிங்க,வேற மேட்டரா இருக்கும்
=====================
6 6 மணி நேர மின்வெட்டு மீண்டும் அமலுக்கு வந்துவிட்டது -கருணாநிதி # தலைவருக்கு மெல்ல அவல் கிடைச்சிடுச்சு , அசத்துங்க
====================
7 ராகுலின் தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் இந்தியாவை நாசமாக்கிவிட்டனர்: மோடி # பையனுக்கும் ஒரு வாய்ப்புக்குடுன்னு கேட்பாங்க போல
============================
8 கடல் நாயகன் கவுதம் கார்த்திக்கும் நானும் ஓடிப் பிடிச்சு விளையாடுவோம்:-
லட்சுமி மேனன் # எனக்கு நம்பிக்கை இல்லை, ஏதாவது வீடியோ ஆதாரம்?
================
9 நாட்டை விற்பவர்களை விட டீ விற்பவர் எவ்வளவோ மேல் : மோடி # இப்போ எதுக்கு சம்பந்தமே இல்லாம டீக்கடை ஓனர்சை வம்புக்கு இழுக்கறீங்க?
==================
10 ஆர்வத்தில் கவர்ச்சி நடிகை உதட்டைக் கடித்த கஞ்சா கருப்பு! # ஓஹோ, இதுதான் ஆர்வக்கோளாறா?
=====================
11 டீ வித்துட்டு இருந்தவங்க எல்லாம் பிரதமர் ஆக முடியாது - காங்கிரஸ் # நாட்டையே வித்துட்டு இருக்கற ஆளுங்க மட்டும் தான் PM ஆகனுமா?
=====================
12 காந்திக்குப் பிறகு சிறந்த தலைவர் ராமதாஸ் தான் - அன்புமணி # நல்ல வேளை,
காந்தி ஆல்ரெடி போய்ட்டாரு, இருந்தா ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார்
===================
13 சென்னையில் விரைவில் ஆகாய நடைபாதைகள் # டிராபிக் போலீஸ் பாரசூட் கட்டியாவது மாமூல் வாங்க அங்கே வந்துடுவாங்க
=====================
14 35 வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘சங்கராபரணம்’ படம் தமிழில் வருகிறது # மெருகேத்தறோம்னு சந்தானம் காமெடி டிராக் அட்டாச் பண்ணிடாதீங்க
===================
15 தேநீர் விற்றவன் தேச தலைவனா?
- அரவிந்தன் நீலகண்டன் # பஞ்சமாபாதகம் செஞ்சவரை பாசத்தலைவா னு கூப்ட்டதுக்கு இது தேவலை
=================
16 கொல்கத்தாவின் தெருவோர வண்டி கடையில் வடை சாப்பிட்டார் இங்கிலாந்து பிரதமர்
# அவராவது காசு குடுத்துட்டாரு. சிலர் ஓசி லயே கூழ் குடிக்கறாங்க
=====================
17 நல்ல பெயரை எடுங்கள்: ஜெயலலிதாவுக்கு வீரமணி அறிவுரை"# ஆட்சிக்கு வந்ததும்
எல்லா அரசு அலுவலகங்களிலும் இருந்த மு க பேரை எடுத்துட்டேனே? -ஜெ
================
18 தமிழக காங்கிரஸ் வரும் திங்கட்கிழமை முதல் உச்சம்! புத்திசாலி ராகுல் புதிய
திட்டம்! #,என்ன திட்டம் போட்டாலும் நோ யூஸ்.சனி உச்சத்துல
==================
19 ராஜராஜசோழன் வன்னியர் தான் -வன்னியர் சங்கம்
# நல்ல வேளை.நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ வை வன்னியர்னு சொல்லலை.
=================
20 கமல் ன் உத்தம வில்லன் ல் கிரேசிமோகன் # காமெடி அதகளம் தான் ;-)))))
==================
Saturday, November 16, 2013
சச்சின் டெண்டுல்கர் vs பாரத ரத்னா - ஒரு ஃபிளாஸ்பேக்
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, இந்திய கிரிக்கெட் வீரர்
சச்சின் டெண்டுல்கருக்கும், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் வழங்கப்படும்
என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்: சச்சின்
டெண்டுல்கர் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து
வைத்துள்ளார். தனது 16-வது வயது முதல் கடந்த 24 ஆண்டுகளாக சச்சின் உலகம்
முழுவதும் விளையாடி பல வெற்றிகளை தேசத்திற்குப் பெற்றுத் தந்திருக்கிறார்.
உலக விளையாட்டு அரங்கில் சச்சின் இந்தியாவின் தூதராக இருந்திருக்கிறார்.
கிரிக்கெட் துறையில் அவரது சாதனைகள் ஈடு இணையற்றது என
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விளையாட்டு வீரராக அவரது உத்வேகம்
சாலச்சிறந்தது. அவரது திறமைக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பாரத ரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
அதே போல், வேதியியல் துறையில் மிகச் சிறந்த சாதனைகள் புரிந்த பேராசிரியர்
சி.என்.ஆர். ராவ், 1400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
வெளியிட்டுள்ளார்.
சி.என்.ஆர். ராவ் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை 45
புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது ஆய்வுகளை உலகம் முழுதும் இருக்கும்
விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அங்கீகரித்துள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதோடு,
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன்
சச்சின் டெண்டுல்கர், மும்பை வான்கடே மைதானத்தில் உணர்ச்சி பொங்க பேசினார்.
'சச்சின் சச்சின்' என்று ரசிகர்கள் என்னை உற்சாகப் படுத்தியது என் இறுதி மூச்சு வரை என் காதுகளில் ரீங்காரமிடும் என தெரிவித்தார்.

சச்சின் பேச்சு - முழு விபரம்:
ரசிகர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன். உங்கள் ஆரவாரம் என்னை மேலும்
உணர்ச்சிவசப் படுத்தும். எனது கிரிக்கெட் பயணம் இன்றுடன் முடிவடைகிறது
என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இத் தருணத்தில் நான் பலருக்கு நன்றி கூற
விரும்புகிறேன்.
தந்தை சொன்ன தாரக மந்திரம் :
முதலாவதாக என் தந்தைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். அவருடைய
வழிநடத்தல் இல்லாவிட்டால், இன்று நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்க
மாட்டேன். என் தந்தை எனக்கு சொன்ன தாரக மந்திரம் : "கனவுகள் கைகூடும் வரை
அதை துரத்திக் கொண்டே இரு. இடையூறுகள் பல வரும், அப்போதும் தொடர்ந்து
கனவுகளை நோக்கிச் செல்" என்பது தான். அவரை இல்லாததை இந்த வேளையில்
உணர்கிறேன்.
என் தாய், என்னை எப்படித் தான் சமாளித்தாரோ தெரியவில்லை. நான் அவ்வளவு
சுட்டிப் பையனாக இருந்தேன். நான் ஒவ்வொரு போட்டிக்குச் செல்லும் முன்னரும்
அவர் எனக்காக பிரார்த்தனை செய்வார். பள்ளிப் பருவத்தில், 4 வருடங்கள் என்
மாமா வீட்டில் தங்கியிருந்தேன். அவர்கள் என்னை சொந்தப் பிள்ளையைப் போல்
பார்த்துக் கொண்டனர்.
என் மூத்த சகோதரர் நிதின் என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார்.
நான் என்ன செய்தாலும், அதை 100% முழுமையாக செய்வேன் என நம்புவதாக சொல்வார்.
என் சகோதரி சவிதா என் கடைசி போட்டி வரை, நான் விளையாடும் நாட்களில்
எனக்காக இறைவனை வேண்டி உண்ணா நோன்பு இருப்பார். எனக்கு முதல் பேட்
பரிசளித்தவர் அவர் தான். என் மற்றொரு சகோதரர் அஜித், எனக்காக அவரது கனவுப்
பணியை துறந்தார். என் குருநாதர் அச்ரேகரிடம் என்னை முதலில் அழைத்துச்
சென்றது அவர் தான். நேற்று இரவு கூட நான் 74- ரன்களில் அவுட் ஆனது குறித்து
என்னிடம் பேசினார். நான் விளையாடா விட்டாலும், போட்டியின் நுட்பங்கள்
குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்போம். இவை எல்லாம் நடக்காமல் இருந்தால்
நான் மிகப்பெரிய கிரிக்கெட் வீர்ராக சோபித்திருக்க மாட்டேன்.
என் வாழ்வின் அழகிய நிகழ்வு:
1990- ஆம் ஆண்டு அஞ்சலியை நான் சந்தித்தது தான் என் வாழ்வின் அழகிய
நிகழ்வாகும். ஒரு மருத்துவராக இருந்த அவர் முன்னாள் மிகப்பெரிய கடமை
இருப்பது எனக்குத் தெரியும். இருப்பினும், நான் தொடர்ந்து விளையாட வேண்டும்
என்பதால் குடும்பத்தையும், குழந்தைகளையும் பார்க்கும் முழு பொறுப்பையும்
அவர் ஏற்றுக்கொண்டார். என்னை பொறுத்துக் கொண்ட அவருக்க நன்றி
தெரிவிக்கிறேன்.
என் வாழ்வின், இரு விலை மதிக்கமுடியாத வைரங்கள் என் குழந்தைகள், சாரா
மற்றும் அர்ஜூன். கடந்த 16 வருடங்களில் அவர்களுடைய பிறந்தநாட்கள், விடுமுறை
நாட்களில் நான் அவர்களுடன் இருந்ததில்லை. இனி வரும் 16 வருடங்களில்
அவர்களுடன் இருப்பேன் என உறுதியளிக்கிறேன்.
என் மாமியார்- மாமனார் எனக்கு செய்த பெரிய நன்மை, அஞ்சலியை நான் திருமணம்
செய்து கொள்ள அனுமதித்தது. அவர்களுடன் நான் நிறைய விசயங்களை
பேசியிருக்கிறேன்.
கடந்த 24 ஆண்டுகளாக என் நண்பர்கள் எனக்காக நிறைய செய்துள்ளார்கள். நான்
சோர்ந்திருந்த போதெல்லாம் அவர்கள் என்னுடன் இருந்துள்ளனர். எனக்காக
என்னுடன் இருந்தமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நான் என் 11-வது வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். எனக்காக என் குரு
அச்ரேகர் மைதானத்தில் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.
அவருடைய ஸ்கூட்டரை எடுத்துச் சென்று ஒரு நாளில் 2 போட்டிகளில் கலந்து
கொள்வேன். அவரும் என்னுடன் வருவார். என்னை ஒருபோதும் அவர் நன்றாக
விளையாடினாய் என பாராட்டியது இல்லை. நானே என் விளையாட்டுத் திறன் பற்றி
அதிகமாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படிச் சொன்னார்
என்பதும் எனக்குட் தெரியும்.
நான் மும்பையில் தான் என் விளையாட்டை ஆரம்பித்தேன். எனக்கு நன்றாக நினைவு
இருக்கிறது. நியூசிலாந்து சென்று விட்டு காலை 4 மணிக்கு திரும்பினேன்.
அன்றே ரஞ்டி டிராஃபியில் விளையாடினேன். எனக்கு மிகப்பெரிய அறிமுகம் தந்த
பிசிசிஐ-க்கும் என்னை தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும் நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் விளையாடிய மூத்த கிரிக்கெட் வீரர்கள் அனிவருக்கும் நன்றி. ராகுல்
டிராவிட், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே அனைவருக்கும் நன்றி.
200வது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை தோணி என்னிடம் அளித்த போது இந்திய
அணிக்குச் சொல்ல என்னிடம் ஒரு விஷேச செய்தி இருந்தது. இந்திய தேசத்திற்காக
விளையாடுவதில் நாம் அனைவரும் மெருமிதம் கொண்டுள்ளோம். இனிமேலும் என் தேசத்
தொண்டை தொடர்வேன். அதே போல், நீங்கள் அனைவரும் முழு விச்சில்
இந்தியாவுக்காக சேவை செய்வீர்கள் என நான் நம்புகிறேந் என்று அவர்களிடம்
தெரிவித்தேன்.
எனக்கு காயங்கள் ஏற்பட்ட போதெல்லாம் எனக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த
மருத்துவர்களை என்னல் நினைவு கூறாமல் இருக்க முடியாது. கால நேரம் கருதாமல்
அவர்கள் எனக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
என் ஆரம்ப நாள் முதல் மீடியாக்கள் எனக்கு மெரும் உதவி செய்திருக்கின்றன.
இன்றளவும் அது தொடர்கிறது. மீடியாக்களுக்கு நன்றி. என்னுடைய மிக முக்கியமான
தருணங்களை படம் பிடித்த புகைப்படக்காரர்களுக்கும் நன்றி. இவ்வாறு சச்சின்
டெண்டுல்கர் பேசினார்.
நன்றி தெரிவிப்பு உரையை முடித்த சச்சின் டெண்டுல்கரை தோணியும், விராட்
கோஹ்லியும் தங்களது தோளில் தூக்கிக் கொண்டு மைதானம் முழுவதும் சுற்றி
வந்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றல்ல, இரண்டல்ல… 24 ஆண்டுகள் கோலோச்சிய
சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் தருணம் இது. இந்திய
கிரிக்கெட் ரசிகர்களின் இதயநாயகனான சச்சின், இந்த 24 ஆண்டுகளில் தன் மீது
தொடுக்கப்பட்ட விமர்சன கணைகளுக்கு பேட்டால் மட்டுமே பதில் சொன்னவர்.
அமைதியின் வடிவமாய், சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு, வளர்ந்து வரும்
வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
வெள்ளைக்காரர்களின் விளையாட்டான கிரிக்கெட்டில் படைக்கப்பட்டுள்ள தனிநபர்
சாதனைகளில் பெரும்பாலானவை இன்று இந்தியரான சச்சினுக்கு சொந்தமானவை. இன்று
படைக்கப்படும் சாதனைகள் நாளை மற்றொருவரால் முறியடிக்கப்படக்கூடியதே என்றா
லும், சச்சினின் சாதனைகளில் பெரும்பாலானவை எந்தக் காலத்திலும் யாராலும்
உடைக்க முடியாததாகவே இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சேவாக், யுவராஜ் சிங், தோனி போன்ற வீரர்கள், இந்திய கிரிக்கெட்டில்
நுழைவதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின்
அவுட்டாகிவிட்டால், இனி இந்தியா ஜெயிக்காது என்றுகூறி பெரும்பாலான
ரசிகர்கள் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு தங்கள் வேலையைப் பார்க்கப்
போய்விடுவது வழக்கமாக இருந்தது. இதனால் 1990-களில் சச்சினை
வீழ்த்திவிட்டால் இந்தியாவை வென்றுவிடலாம் என எதிரணிகள் நினைத்தன. அது
ஓரளவு உண்மையாகவும் இருந்தது.
24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின்,
தனது சிறப்பான ஆட்டத்தால் தனக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்
ரசிகர்களுக்கும் என்றுமே மறக்கமுடியாத, எண்ணற்ற பசுமையான நினைவுகளை
தந்திருக்கிறார். இந்த உலகமும் கிரிக்கெட்டும் வாழும் வரை சச்சின் மற்றும்
அவருடைய ஆட்டத்தைப் பற்றிய நினைவுகள் அனைவருடைய மனதிலும் நீங்காமல்
இருக்கும். அவரைப் பற்றி மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரும்,
சச்சினுக்கு மிகப் பிடித்த வீரருமான ரிச்சர்ட்ஸ் கூறுகையில்,
“கிரிக்கெட்டின் எந்த காலகட்டத்திலும், எந்த அணியிலும் சச்சின்
இடம்பிடிக்கத் தகுதியானவர். இந்த உலகில் கடைசி முறையாக பந்து
வீசப்படும்போதும் சச்சினின் புகழ் நிலைத்திருக்கும்,” என்று கூறியதே
அதற்குச் சான்று. அவருடைய மறக்க முடியாத ஆட்டங்கள் சிலவற்றை காணலாம்:
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய சச்சின்
1993-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி ஈடன் கார்டனில் நடைபெற்ற ஹீரோ கோப்பை
போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதின.
கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன.
அப்போது பயிற்சியாளராக இருந்த அஜித் வடேகர், கபில்தேவ் கடைசி ஓவரை
வீசட்டும் எனக்கூறி, அந்த செய்தியை சொல்வதற்காக 12-வது வீரரிடம் தண்ணீரைக்
கொடுத்து அனுப்பினார்.
அப்போதைய கேப்டன் அசாருதீன், கடைசி ஓவரை யாரிடம் கொடுக்கலாம் என தெரியாமல்
திணறிக்கொண்டிருந்தார். அப்போது அசாருதீனிடம் இருந்து பந்தை வாங்கிய
சச்சின், அந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே கொடுத்து இந்தியாவுக்கு த்ரில்
வெற்றியைத் தேடித்தந்ததை யாராலும் மறக்க முடியாது.
வார்னுக்கு வார்னிங்
1998-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்
விளையாடுவதற்கு இந்தியா வந்தது. அந்தத் தொடர் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு
இடையிலான தொடர் என்பதைவிட சச்சின்-ஷேன் வார்னுக்கு இடையிலான தொடராகவே
பார்க்கப்பட்டது. லெக் ஸ்பின்னரான வார்ன், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு
சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நேரம் அது. அதனால் சச்சின், வார்னை
பதம்பார்ப்பாரா அல்லது சச்சினை வார்ன் வீழ்த்துவாரா என கிரிக்கெட்
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
கடுமையான உழைப்புக்கும், பயிற்சிக்கும் பெயர் பெற்றவரான மாஸ்டர் சச்சின்,
இந்திய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர்களான சிவராம கிருஷ்ணன், சாய்ராஜ்
பகதுலே ஆகியோரை லெக் ஸ்டெம்புக்கு வெளியில் பந்துவீசச் சொல்லி பயிற்சி
பெற்று வார்னின் சவாலை சந்திக்க தயாரானார். “லெக் ஸ்டம்ப் கார்டு” எடுத்து
வார்னை எதிர்கொள்ள வியூகம் வகுத்தார்.
அந்தத் தொடருக்கு, முன்னதாக ஆஸ்திரேலிய அணி மும்பை அணியுடன் பயிற்சிப்
போட்டியில் விளையாடியது. அதில் 4-வது வீரராக களமிறங்கிய சச்சின், வார்ன்
பந்துவீச்சை வெளுத்துக் கட்டி, முதல் தர போட்டியில் தனது முதல் இரட்டை
சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 192 பந்துகளில் 2 சிக்ஸர், 25
பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 204 ரன்கள் குவித்தார். வார்ன் 16 ஓவர்களை
வீசி 111 ரன்களை வாரி வழங்கினார். அந்தப் போட்டியில் மும்பை அணி அபார
(விக்கெட் இழப்பின்றி) வெற்றி கண்டது.
அதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது
இன்னிங்ஸில் சச்சின் ஆட்டமிழக்காமல் 155 ரன்கள் குவி்க்க, இந்தியா 179
ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த
டெஸ்ட் போட்டி என்றுமே மறக்க முடியாத போட்டியாகும். எதிரணி
பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த வார்னுக்கு இந்தத் தொடரில்
வார்னிங் (எச்சரிக்கை) கொடுத்தார் சச்சின்.
ஷார்ஜாவில் சச்சின் புயல்
1998-ல் ஷார்ஜாவில் கோகோ கோலா கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா,
நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்றன. இந்திய அணி,
நியூஸிலாந்தைவிட சிறந்த ரன் ரேட்டை பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு
முன்னேற முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு 285 ரன்களை
இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. பின்னர், சார்ஜாவில் வீசிய மணல் புயல்
காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு 276 ரன்கள் வெற்றி இலக்காக
நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றாலும், 237 ரன்கள்
எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா
அவ்வளவு ரன்களை எட்டாது என ஆஸ்திரேலியர்கள் நினைத்த வேளையில், பாலை வணம்
புயலை விஞ்சும் வகையில் புயல் வேகத்தில் ஆடினார் சச்சின். டேமியன்
பிளெமிங், காஸ்பரோவிச், ஷேன் வார்ன், டாம் மூடி, ஸ்டீவ் வாஹ் ஆகியோரின்
பந்துவீச்சை வெளுத்து வங்கிய சச்சின், 131 பந்துகளில் 5 சிக்ஸர், 9
பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவிக்க, இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி
பெற்றது.
ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 273 ரன்களை
வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சச்சின் இந்தப் போட்டியிலும சதமடிக்க,
இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஷார்ஜாவில் வீசிய மணல்
புயல், சச்சினின் அதிரடி புயலில் காணாமல் போனது. இறுதிப் போட்டி அன்றுதான்
சச்சினுக்கு பிறந்தநாள். அதனால் சார்ஜா கோப்பை சச்சினின் பிறந்த நாள்
பரிசாகவும் அமைந்தது.
துக்கத்திலும் தூள் கிளப்பிய சச்சின்
1999-ல் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றிருந்தார்
சச்சின். அப்போது திடீரென சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மாரடைப்பால்
மரணத்தைத் தழுவ சச்சின் நாடு திரும்பினார். அப்போது, இந்திய அணி தனது முதல்
இரு ஆட்டங்களிலும் தோல்வி கண்டது. அதனால் அடுத்த சுற்றான சூப்பர்
சிக்ஸுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள கென்யாவுடனான அடுத்த
ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தனது தந்தையின் இறுதிச் சடங்கை முடித்த அடுத்த நாளே இங்கிலாந்து சென்று
அணியுடன் சேர்ந்தார் சச்சின். சோகத்தின் பிடியில் இருந்த சச்சின்,
கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்காமல் 4-வது வீரராக
களமிறங்கினார். சதமும் கண்டார். அப்போது அவர் தனது தந்தையை நினைத்து
வானத்தை நோக்கிப் பார்த்தபோது உலகமே மெய்சிலிர்த்துப் போனது. அவர்
ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் குவிக்க, இந்திய 94 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி கண்டது. தனது தந்தை இறந்த துக்கம் தாளாமல் இருந்தபோதும்கூட,
நாட்டுக்காக அதே அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி சச்சின் சதம் கண்டது நெஞ்சை
விட்டு அகலாது.
thanx - the hindu
RAMLEELA -சினிமா விமர்சனம் 32 +++
வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ ஜூலியட் கதை ல ஆங்காங்கே ராமாயண சம்பவங்களை மிக்ஸ் செஞ்சா ஈசியா ராம் லீலா கதை ரெடி .
குஜராத் ல ஏதோ ஒரு கிராமத்துல கதை நடக்குது . அங்கே 500 வருசமா விரோதம் உள்ள 2 தாதா க்ரூப்.அங்கே அடிக்கடி துப்பாக்கிச்சண்டை நடக்கும். தூள் சொர்ணாக்கா மாதிரி , அப்பு பிரகாஷ்ராஜ் மாதிரி கேரக்டர் உள்ள லேடி தாதா வோட பொண்ணு தான் ஹீரோயின் . அவருக்கு லண்டன் மாப்ளை .நிச்சயம் பண்ண மேரேஜ்க்கு முன்னமே வீட்டோட மாப்ளையா ஒரு அப்பாவி ஆள் வர்றாரு .
ஆனா பொண்ணுங்க எப்பவும் நல்லவனை , அப்பாவியை காதலிக்க மாட்டாங்க எனும் ஆகமத ( சினிமா) விதியின் படி ஹீரோயினுக்கு அவரைப்பிடிக்கலை .ஒரு ஹோலிப்பண்டிகை நாள் ல ஹீரோவை ஹீரோ மீட் பண்றாரு . கண்டதும் காதல் .
சந்திச்ச முத டைமே ஹீரோயின் ஹீரோவுக்கு பச்சக்னு லிப் கிஸ் அடிக்கறார். பெண்களுக்கும் சம உரிமை வேணும் இல்லையா? அதனால . ஹீரோயின் வீட்டுக்கே ஹீரோ போறார் . மெயின் மேட்டரைத்தவிர மத்ததெல்லாம் நடக்குது 2 வது சந்திப்பிலேயே .
இவங்க காதல் என்னாச்சு ? சேர்ந்தாங்களா? ஒண்ணா சேர்ந்தாங்களா? என்பதே க்ளைமாக்ஸ்
சும்மா சொல்லக்கூடாது . ஒளிப்பதிவு தான் படத்தின் முதல் ஹீரோ . சும்மா பிரிச்சு மேஞ்சிட்டார் . ஒவ்வொரு சீனும் கலர் ஃபுல் கலக்கல் தான் .
ஆடை அலங்கார நிபுணர்க்கு அவார்ட் நிச்சயம் . பின்னே ஹீரோயினுக்கு எப்படி ஜாக்கெட் தைக்கனும்கறதுல பி ஹெச் டி பண்ணின மாதிரி லோ கட் ஜாக்கெட்ட்டா படம் பூரா போட்டு விட்டிருக்காரே?
ஹீரோ ரன்வீர் ஓப்பனிங்க் சீன்ல இருந்தே தன்னோட இன்னிங்க்ஸை ஆரம்பிச்சுடறார். டான்ஸ் காட்சிகளில் விஜய் , ரஜினி என கலந்து கட்டி கலக்கறார். சிக்ஸ் பேக் உடம்பு இருக்கு பாரு பாருன்னு கமல் ஹாசன் கணக்கா அடிக்கடி சட்டையைக்கழட்டிடறாரு . பொண்ணுங்க எல்லாம் விசில் அடிக்குது . கலிகாலம்டா சாமி
ஹீரோயின் தீபிகா படு கோனே. படம் பார்ப்பவர்களை ஒரு சீன் கூட தூங்க விடாமல் , இமை கொட்டாமல் எழுச்சியோடு படம் பார்க்க வைக்கும் சாமார்த்தியம் , வசீகரம், அழகு , திறமை எல்லாம் இருக்கு. தன் முக்கால் வாசித்திறமையை இந்த ஒரே படத்துல காட்டிட்டார். முழுத்திறமையையும் காட்டி இருப்பார் , அவர் எல்லாத்துக்கும் ரெடி தான் ஆனா இந்த வீணாப்போன சென்சார் ஆபீசர் இருப்பதால் அடக்கி வாசிச்சிருப்பார் போல . அழகைக்காண கண் கோடி வேணும் . நஸ்ரியா , லட்சுமிமேனன்கள் எல்லாம் இவர் கிட்டே 2 ஜென்மம் ட்யூசன் படிச்சாலும் ஜஸ்ட் பாஸ் மார்க் கூட வாங்க மாட்டாங்க
ஹீரோயின் அம்மா ரோல் வில்லி ரோல் மாதிரி , மும்பைக்கு வேணா புதுசா இருக்கலாம், ஆனா நமக்கு பழசு தான் . இதை விடப்பெரிய வில்லிகளை எல்லாம் பார்த்தாச்சு . இருந்தாலும் அவர் நடிப்பு அதகளம் .
ப்ரியங்கா சோ ப்ரா வின் குத்தாட்டம் ஒரு ஆட்டுக்கு எக்ஸ்ட்ரா போனஸ்

பலே பாண்டியா
1. வர மிளகாய் காயப்போடும் காட்சியை டாப் ஆங்கிளில் காட்டும் ஓப்பனிங்க் சீன் அசத்தல் . ஷங்கர் படத்தின் பிரம்மாண்டம்
2. ஹீரோ - ஹீரோயின் எக்மிஸ்ட்ரி , பிசிக்ஸ் , பயாலஜி எல்லாம் செம . 2 பேரும் நிஜமாவே லவ்வர்ஸாம் . சம்பளமும் வாங்கிக்கிட்டு கில்மாவும் பண்ணிக்கிட்டு . ஆஹா இதல்லவோ வாழ்க்கை
3 ஹீரோ ஹீரோயின் 2 பேரும் அறிமுகக்காதலில் ஏய்! என ஒருவரை ஒருவர் மிரட்டுவதும் பின் 10 வினாடியில் ஏய் எனக்கொஞ்சிக்கொள்வதும் ரொமான்ஸ் ரொமான்ஸ் . அடடா.. மழைக்காலத்தில் ரோட்டோரக்கதையில் மிள்காய் பஜ்ஜி சாப்பிட்ட மாதிரி என்ன ஒரு இதம் ? ( படம் பார்க்கற நமக்கே இத்தனை இதம்னா ஷூட்டிங்க் பார்த்தவங்க கதி ? )
4 நிச்சயதார்த்த மோதிரம் அணியச்சொல்லும்போது ஆல்ரெடி என் ஆள் போட்ட மோதிரம் டைட்டா இருக்கு , முடிஞ்சா அதைக்கழட்டு என தெனாவெட்டாக ஹீரோயின் சொன்னதும், கொஞ்சம் கூட யோசிக்காமல் , கழட்ட முயற்சியே செய்யாமல் பாக்கு வெட்டியால் மோதிர விரலையே கட் செய்த கொடூரம் . அதிர்ச்சியான காட்சி .
5 ஒரு காட்சியில் வில்லன்கள் துரத்தும்போது சில்வர் அண்டாவை ஒரு லேடி கீழே போட்டுடுது . தண்ணீர் தெறிக்க அது உருண்டோடும் அழகை கேமரா படம் பிடித்த விதம் அட்டகாசம் . படம் முழுக்க இதே போல் கேமரா ஒர்க் அருமை
6 எதிர்பாராத க்ளைமாக்ஸ் திருப்பம் பெரிய பிளஸ் .
7 பாடல்கள் எல்லாம் செம ஹிட் . அதை படமாக்கிய விதத்தில் மணிரத்னத்தின் கவிதை லயம் , ஷங்கரின் பிரம்மாண்டம் அசத்தல்

சொதப்பிட்டியே சொப்னா
1. மூணு நாளா எதும் சாப்பிடலை என்று ஹீரோயின் சொல்லும் காட்சியில் ஓரளவாவது வாடிப்போய் இருக்க வேண்டாமா? ஊட்டி கொடை ஆரஞ்சுபழத்தை ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து எடுத்த மாதிரி செம ஃபிரெஷ்ஷா இருப்பது எபப்டி ?
2 வில்லன் க்ரூப் , ஹீரோவின் நண்பன் க்ரூம் இரு குழுவும் துப்பாக்கி சண்டையில் மோதுவது ஓக்கே . ஆனா அபாயகரமா யாராவது தன் நெஞ்சுக்கு முன்னே பீர் பாட்டிலை வைத்து குறி தவறாமல் சூடு பார்ப்போம் என சவால் விட்டு விளையாடுவாங்களா? அதுவும் 4 டைம் , குறி தவறுனா உயிர் காலி .இந்த சீன் அந்தக்காலத்தில் வந்த புராணக்கதையில் வரும் ஆப்பிள் @ ஆள் தலை - குறி பார்த்து அம்பு எய்தல் -ன் தழுவல் என்றாலும் காட்சியில் நம்பகத்தன்மை கொஞ்சமும் இல்லை
3 ஹீரோயின் விரல் வெட்டப்பட்ட பின் கேமரா மேன் அவர் கையை காட்டாமல் கோணங்களை வெச்சிருக்கனும். க்ளோசப் காட்சிகளீல் மட்டும் கட்டு போட்ட மாதிரி காட்டிடு லாங்க் ஷாட்ல அசால்ட்டா உட்டுட்டாங்க
4 அனுமார் இலங்கையில் இருந்து ராமரைப்பார்க்க வந்ததும் கண்டேன் சீதையை என்கிறார். செய்தியின் வேகம் கருதி . அதே போல் ஒரு காட்சியில் சாத்திய ரூமில் தம்பதி தற்கொலைக்கு முயற்சிக்கறாங்க ( பரஸ்பர கொலை ) .அப்போ வில்லி மனம் மாறிட்டாங்க என்பதை டக்னு சொல்லாம யாராவது “ கதவைத்திறங்க என்று பொத்தாம்பொதுவாக சொல்லி இழுப்பாங்களா?
5 ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் முதல் இரவு கொண்டாடும்போது நண்பர் க்ரூப் வருது . ஹீரோ ஹீரோயினை அம்போன்னு விட்டுட்டு சரக்கு அடிக்க நண்பர்கள் கூடப்போயிடறாரு . எத்தனை நேரம் ஆகப்போகுது . மேட்டரை முடிச்சுட்டு ப்போவாங்களா? இப்படிப்பொறுப்பில்லாம யாராவது ஃபர்ஸ்ட் நைட் ல சரக்கு அடிக்கப்போவாங்களா? ( சீன் போச்சே என்ற ஆதங்கத்தில் இதை சொல்லலை )
நச்
1. நாங்க எப்பவும் எதிரியுடன் கை கோர்ப்போம்
2 உங்க ஃபேமிலி பிஸ்னெஸ் என்ன?
ஷூட்டிங்க் , ஸ்மக்ளிங்க் , ஆளை வெட்டறது
3 தப்பான காரியம் செஞ்சா என்ன பின் விளைவு ஏற்படும்னு தெரியாதா?
தெரியாது , அதைத்தெரிஞ்சுக்கத்தான் தப்பு பண்ண ட்ரை பண்றேன்
4 ஹீரோயின் - அட!! உன் செஸ்ட் எக்சசைஸ் செஞ்சு செஞ்சு குழி விழுந்திருக்கே?
ஹீரோ - இதென்ன பிரமாதம் ? உன் செஸ்ட் லயும் தான் குழி இருக்கு
ஹீரோயின் - ச்சீய்
5 என்னை மீறி எனக்கு இவன் கூட மேரேஜ் பண்ணி வெச்சாலும் முத ராத்திரி என் காதலன் கூடத்தான் , அடுத்த ராத்திரி தான் இவன் கூட ( நல்ல குடும்பத்துப்பொண்ணு போல )

ஆன் த ஸ்பாட் அலப்பறைஸ்
1. தியேட்டர் பூரா பேமிலி ஆடியன்ஸ்.ரொமான்ஸ் ,கிளாமர் ஓவர்.8 லிப் கிஸ் சீன்
===================
2 ஹீரோயின் தீபிகா படுகோனே ரொம்ப ஏழை போல.40 செமீ அளவு ல் தான் ஜாக்கெட்டே போடுது # 80 செமீ நார்மல்
==================
3 ஆகா.ஓப்பனிங் சீன்லயே ஒரு டாப்லெஸ் சீன்.சோகம் என்னான்னா ஹீரோவுக்கு # ராம் லீலா
====================
4 ரவிவர்மனின் ஒவ்வொரு ஷாட்டிலும் வெளிச்ச வானவில்.பி சி ஸ்ரீராம்க்கு எதிர்ப்பதம் # அள்ளுது
======================
5 ஹீரோ பாட்டுக்கு சிவனேன்னுதான்யா இருக்காரு.ஹீரோயின் தான் தேடித்தேடி ஓடி
ஓடி ப்பச்சக் பச்சக்னு லிப் கிஸ் குடுத்துட்டே இருக்கு # ராம் லீலா
====================
6 ஆடியன்ஸ் எல்லாம் நெக்குருகிப்போய்ட்டாங்க # யு நெக் ஜாக்கெட் .தீபிகா படு கோனே
======================
7 ஊர் ல இருக்கும் கள்ளக்காதல் ஜோடி எல்லாம் இங்கே தான் யா டேரா போட்டிருக்காங்க # திருச்சி விஜய் சினிமாஸ் மல்ட்டிபிளக்ஸ் 43 ஜோடி
=====================
8 ஒளிப்பதிவு கலக்கல்.நம்மூர்க்காரர்.கேமராவை தீபிகா முதுகுல ஸ்டேன்ட் போட்டு நிறுத்திட்டார் # ராம் லீலா
=====================
9 இனியா கூடவா போக முடியும் ? தனியா தான் :-((( RT @krishnanrk: @senthilcp நீங்க தனியாவா போனிங்க cp sir...:)"
====================
10 தீபிகா படுகோனேவோட எதிர்காலப்புருசன் ராம் லீலா படம் பார்த்தா மனசுக்குள்ள என்ன நினைப்பார்? இனிமே நாம செய்ய என்ன இருக்கு?
====================
11 ராம் லீலா வைத்தமிழ் ல ரீ மேக்கினா கமலை விட்ப்பொருத்தமானவர் யாரும் இல்லை # 18 லிப் கிஸ் சீன்
===================
சி பி கமெண்ட் - தில்வாலே தில் ஹனியா லே ஜாயேங்கே , ஹம் ஆப் கே ஹேங்க் கோன் அளவுக்கு எல்லாம் இல்லைன்னாலும் படம் போர் அடிக்காம கலர்ஃபுல்லா போகுது . டைம் பாஸ் ஆகும் லவ்வர்ஸ் பார்க்கலாம் . ஃபேமிலியோட பார்க்க முடியாது . காட்சி ரிகிதியாவும் , வசனத்திலும் பல இடங்களில் அக்மார்க் ஏ . இதுக்கு எப்படி சென்சார் ல ஏ தர்லை?னு தெரியலை
ராம் லீலா - ரோமியோ ஜூலியட் உல்டா லவ் ஸ்டோரி - கலர்புல் மேக்கிங்,பாடல்கள்
,ஒளிப்பதிவு ,,தீபிகா +++
ரேட்டிங் = 3.5 / 5
கமர்ஷியல் ஹிட் பிலிம்
டிஸ்கி - திருச்சி விஜய் சினிமாஸ் மல்ட்டி காம்ப்ளெக்ஸ் ல படம் பார்த்தேன் . 150 ரூபா . ஒர்த் தான் . படமும் கிளாம்ர் . ஆடியன்ஸ் எல்லாம் கிளாமரோ கிளாம்ர் ..
Cast: Ranveer Singh, Deepika Padukone, Richa Chadda, Supriya Pathak, Gulshan Deviah
Director: Sanjay Leela Bhansali
சித்ரகுப்தா! 2 சி எம் களும் செய்த பாவ புண்ணியம் பற்றிக்கூறு !
1. நேற்று இரவு என் சம்சாரத்துக்கு அடங்கி நடந்தேன். இன்று பகல் டேமேஜர்க்கு
அடங்கி நடந்தேன் # காலம் பூரா நாம இப்டியே ஓட்ட வேண்டியதுதானா?
===========================
2முற்றம் பிரச்சனை - இடித்ததால் மட்டும் முற்றும் போட்டு விட முடியாது
==========================
3 ஜான்சி ராணி மாதிரி புரட்சிக்கருத்துகள் சொல்பவர்கள் தோற்றத்தில் மகாலட்சுமிகளாகவும் இருக்கலாம்
============================
4 மனதுக்குப்பிடித்தவர்கள் மனம் கலங்கி இருக்கையில் மனரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் நாம் பலவீனப்பட்டுவிடுகிறோம்
==========================
5 வியாபாரரீதியில் வெற்றி எப்படியோ ஆனால் இரண்டாம் உலகம் மாறுபட்ட படைப்பாக இருக்கும் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு
====================
6 வாங்குன கடனை கட்டப்போறீங்களா? பாக்கி டே கொண்டாடறீங்க?
அய்யோ.அது துப் பாக்கி டே
=======================
7 சிறுத்தை சிவாவுக்கு எதுக்கும் ஒரு வாட்டி தலைவா வை போட்டு காமிச்சிடுங்கப்பா.அதையே ரீமேக்கிடப்போறாரு #,அன்னா
=====================
8 கத்தியாலயே குத்துவேன்னு புருசன் கத்துவான்.ஆனா செய்ய மாட்டான்.பொண்டாட்டி எதுவும் சொல்ல மாட்டா.அரிவாள் மனைலயே அரிஞ்சிடுவா
=======================
9 முற்றத்தை இடிப்பாரைக்கண்டிக்காத ஏமரா அரசி பெங்களூர் வழக்கில் தடுப்பார் யாரும் இல்லாமல் கெடும்
=====================
10 சித்ரகுப்தா! 2 சி எம் களும் செய்த பாவ புண்ணியம் பற்றிக்கூறு !
பிரபோ! 2 பேரும் போட்டி போட்டுக்கிட்டு பாவம் தான் செஞ்சிருக்காங்க
========================
11 நீதி - பொறம்போக்குகள் பொறம்போக்கு நிலத்தை வளைச்சுப்போடலாம்.ஆனா தமிழன் நினைவுச்சின்னம் கட்டக்கூடாது
======================
12 அடுத்த வார துக்ளக் தலையங்கத்தில் புரட்சித்தலைவியின் செயலை நியாயப்படுத்தி கடவுளின் தூதரின் தூதர் சோ சப்பைக்கட்டு கட்டுவார்
===========================
13 என் கண்ணுக்கெட்டிய தூரம் என்பது நீ என்னை விட்டு விலகிப்போகும் நேரம்
==========================
14 எனக்கு இரண்டு கைகள் தானா? என நான் வருந்தும் நேரம் நீ என் அருகில் இருக்கும் நேரமே!
========================
15 ஜெ - முள்ளிிவா் முற்றத்தை இடிச்சுட்டோம்.இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா ?
ஜோசியர் - பாவம் செஞ்சா பரிகாரம் இருக்கு.நீங்க செஞ்சது மாபாதகம்
==========================
16 பஸ் ல ஒருத்தன் 2 காலேஜ் பிகருங்க கூட உக்காந்திருக்கான்.அதைக்கூட பொறுத்துக்கிட்டேன்.2 பேருக்கும் நடுவுல உக்காந்திருக்கான் # நல்லா இருடே
========================
17 எவ்வளவு பணம் இருக்கிறது என்று கூறும் அலாரம் கடிகாரம் # அதை தானைத்தலைவர் வீட்ல மாட்டிடனும்.தமிழ்நாட்ல பாதிப்பேருக்கு ஹார்ட் அட்டாக்தான்
======================
18 லொட லொட என அரவாடும் (தொண தொணக்கும் ) உன் வாயை நீயே அடக்கினால் உத்தமம்.நான் களத்தில் இறங்கினால் அது முத்தம் !
======================
19 ஷங்கர் ஐ க்குப்பின் அஜித் உடன் படம் பண்றார் - உறுதிசெய்யப்படாத தகவல் # டைட்டில் 1 நட ராஜன் 2 தலைமகன் 3 ஷாலினிப்ரியன் 4 அற்புதன்
=====================
20 டு டே சில்ட்ரன்ஸ் டே.இதை மணம் ஆனவர்கள் நைட்டில் நினை த்துக்கொள்ளவும்
======================
===========================
2முற்றம் பிரச்சனை - இடித்ததால் மட்டும் முற்றும் போட்டு விட முடியாது
==========================
3 ஜான்சி ராணி மாதிரி புரட்சிக்கருத்துகள் சொல்பவர்கள் தோற்றத்தில் மகாலட்சுமிகளாகவும் இருக்கலாம்
============================
4 மனதுக்குப்பிடித்தவர்கள் மனம் கலங்கி இருக்கையில் மனரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் நாம் பலவீனப்பட்டுவிடுகிறோம்
==========================
5 வியாபாரரீதியில் வெற்றி எப்படியோ ஆனால் இரண்டாம் உலகம் மாறுபட்ட படைப்பாக இருக்கும் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு
====================
6 வாங்குன கடனை கட்டப்போறீங்களா? பாக்கி டே கொண்டாடறீங்க?
அய்யோ.அது துப் பாக்கி டே
=======================
7 சிறுத்தை சிவாவுக்கு எதுக்கும் ஒரு வாட்டி தலைவா வை போட்டு காமிச்சிடுங்கப்பா.அதையே ரீமேக்கிடப்போறாரு #,அன்னா
=====================
8 கத்தியாலயே குத்துவேன்னு புருசன் கத்துவான்.ஆனா செய்ய மாட்டான்.பொண்டாட்டி எதுவும் சொல்ல மாட்டா.அரிவாள் மனைலயே அரிஞ்சிடுவா
=======================
9 முற்றத்தை இடிப்பாரைக்கண்டிக்காத ஏமரா அரசி பெங்களூர் வழக்கில் தடுப்பார் யாரும் இல்லாமல் கெடும்
=====================
10 சித்ரகுப்தா! 2 சி எம் களும் செய்த பாவ புண்ணியம் பற்றிக்கூறு !
பிரபோ! 2 பேரும் போட்டி போட்டுக்கிட்டு பாவம் தான் செஞ்சிருக்காங்க
========================
11 நீதி - பொறம்போக்குகள் பொறம்போக்கு நிலத்தை வளைச்சுப்போடலாம்.ஆனா தமிழன் நினைவுச்சின்னம் கட்டக்கூடாது
======================
12 அடுத்த வார துக்ளக் தலையங்கத்தில் புரட்சித்தலைவியின் செயலை நியாயப்படுத்தி கடவுளின் தூதரின் தூதர் சோ சப்பைக்கட்டு கட்டுவார்
===========================
13 என் கண்ணுக்கெட்டிய தூரம் என்பது நீ என்னை விட்டு விலகிப்போகும் நேரம்
==========================
14 எனக்கு இரண்டு கைகள் தானா? என நான் வருந்தும் நேரம் நீ என் அருகில் இருக்கும் நேரமே!
========================
15 ஜெ - முள்ளிிவா் முற்றத்தை இடிச்சுட்டோம்.இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா ?
ஜோசியர் - பாவம் செஞ்சா பரிகாரம் இருக்கு.நீங்க செஞ்சது மாபாதகம்
==========================
16 பஸ் ல ஒருத்தன் 2 காலேஜ் பிகருங்க கூட உக்காந்திருக்கான்.அதைக்கூட பொறுத்துக்கிட்டேன்.2 பேருக்கும் நடுவுல உக்காந்திருக்கான் # நல்லா இருடே
========================
17 எவ்வளவு பணம் இருக்கிறது என்று கூறும் அலாரம் கடிகாரம் # அதை தானைத்தலைவர் வீட்ல மாட்டிடனும்.தமிழ்நாட்ல பாதிப்பேருக்கு ஹார்ட் அட்டாக்தான்
======================
18 லொட லொட என அரவாடும் (தொண தொணக்கும் ) உன் வாயை நீயே அடக்கினால் உத்தமம்.நான் களத்தில் இறங்கினால் அது முத்தம் !
======================
19 ஷங்கர் ஐ க்குப்பின் அஜித் உடன் படம் பண்றார் - உறுதிசெய்யப்படாத தகவல் # டைட்டில் 1 நட ராஜன் 2 தலைமகன் 3 ஷாலினிப்ரியன் 4 அற்புதன்
=====================
20 டு டே சில்ட்ரன்ஸ் டே.இதை மணம் ஆனவர்கள் நைட்டில் நினை த்துக்கொள்ளவும்
======================
Friday, November 15, 2013
நெட்டில் வெளியான வீரம் பஞ்ச் டயலாக்ஸ் - சிறுத்தை சிவா அதிர்ச்சி
1. தர்மம் தலை காக்கும் பழசு. வீரம் தலை சிறக்கும் # புதுசு
=================
2 வேட்டி கட்டி இருந்தா பொண்ணுங்களுக்குப்பிடிக்காதுன்னு தப்பா எடை
போடக்கூடாது.வெட்டியா இருக்கறவனைத்தான் அவங்களுக்குப்பிடிக்காது # வீரம்
=====================
3 இன்று முதல் அஜீத்தின் வீரம் ட்ரைலர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு # அறிவிப்பிலேயே அதிகாரம் இருக்கே? ஜெயா மூவிஸா?
==================
4 வீரம் டீசர் 35 விநாடிதானா? அந்த டைம்ல 10 ஸ்டெப் கூட நடக்க முடியாதே?
==================
5 டீ (சர்) இன்னும் வர்லை
==================
6 கே பாக்யராஜ் டூ அஜித் = சார்.வேட்டி கெட்டப் நல்லாருக்கு.எக்காரணம் கொண்டும் வேட்டியை மடிச்சு கட்டிடாதீங்க
=====================
7 டீசர் லேட்டா வர்றது ஒரு மேட்டரே இல்லை.படம் சொன்ன தேதிக்கு சரியா வந்ததா? என்பதே மேட்டர்
==================
8 சுனாமி ,பூகம்பம் இதெல்லாம் எப்போ வரும்னு யாராலும் கணிக்கவே முடியாது
======================
9 சார்.உங்க கெட்டப் அட்டகாசம் .
தாங்க்ஸ் .
ஐ மீன் அட்டகாசம் ல ஆல்ரெடி வந்ததுன்னு சொல்ல வந்தேன்
====================
10 வீ ரம் என்பதால் டாக்டர் ராம்தாஸ் டைட்டில் பிரச்சனை பண்ணி போராட்டம் பண்ணலாம் # ஐடியா
=====================
11 என்னய்யா இது? முதல் இரவு அறைக்குள்ளே பொண்ணு எப்போ வரும்? கற மாதிரி ஒரு டீசருக்காக காத்திருக்காங்க? ;-))
===================
12 வீரம் காஸ்ட்யூம் வெள்ளை வேட்டி சட்டை என்பதால் சால்ட் அன்ட் பெப்பர்
லுக்கில் பெப்பர்க்கு பெப்பே காட்டிட்டு புல்லா ஒயிட் ஹேரில் வர்றாராம்
====================
13 வீரம் ல விஜய் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடறாராம். பதிலுக்கு அஜித் ஜில்லா ல 2 பர்லாங் நடந்துட்டுப்போறாராம் # நட்புக்காக
===================
14 வீரம் காமெடிப்படம் னு நினைச்ட்டு இருந்தேன்.செம ஆக்சன் படம் போல # துள்ளிக்கிட்டு அள்ளிக்கிட்டு வருது வேட்டி கட்டிய ஜல்லிக்கட்டு
====================
15 வீரம் டீசரில் தமனாவை காட்டவே இல்லையாமே? ரசிகர்கள் அதிர்ச்சி ;-))
=================
16 வீரம் டீசரை அஜித் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் தான் ரிப்பீட்டாய் பார்த்திருப்பாங்க # ஏதாவது குறை சொல்லனுமே
===================
17 கமல் - வீரம் னா பயப்படாத மாதிரி நடிப்பது .
அஜித் - எதிர் ல 8 கேமரா
ஓடிட்டு இருந்தாலும் ஒரு கேமராவைக்கூட பார்க்காம நடிப்பதும் வீரம் தான்
=\======================
18 சார்.உங்க டீசர் தீம் இசைக்கு என்ன அர்த்தம்?
இந்தக்காலத்துல பாட்டுக்கே அர்த்தம் தெரியறதில்லை.புரியறதில்லை.பெருசா வந்துட்டாரு
=====================
19 வீரம் டீசர் # பஞ்ச் - என் நெத்தில ஒரு சொட்டு ரத்தத்தை வர வெச்சதுக்கு ஒரேயடியாய் குதிக்காத.இப்போ உன் உயிர்வெளியே வர நீயே பார்க்கப்போறே !
====================
20 எதிரிங்க தாக்க ஓடி வரும்போது எத்தனை பேர் னு எண்ணிட்டிருக்க மாட்டேன்.அவங்க கதி என்ன ஆகப்போகுதோன்னு எண்ணிட்டு இருப்பேன் # வீரம் பஞ்ச்
======================
21 வீரம் -கேப்சன் - வேட்டி சொல்லைத்தட்டாதே ! # ஐடியா
====================
22 பத்து பேரு துரத்திட்டு வரும்போது கூட ஒத்தை ஆளா நின்னு சத்தம் இல்லாம சமாளிக்கிறது தான் வீரம் # பஞ்ச் டயலாக் டீசர்
====================
23 வெள்ளை உடையை அன்னை தெரேசா அணிஞ்சா அது அமைதியின் சின்னம். அதையே அஜித் அணிந்தா அது வீரம்
===================
24 புத்தி"மானா" இருக்கறவன் எதிரிங்க துரத்த்தும்போது ஓடித்தப்பிப்பான்.யானை பலம் கொண்ட சக்திமானா இருக்கறவன் நின்ன இடத்துல இருந்து அடிப்பான்
=====================
25 வெள்ளையும் சொள்ளையுமா இருக்கறதால வெள்ளந்தியா இருப்பேன்னு நினைக்காதீங்க.தடுக்க முடியாத வெள்ளம்.அணைக்க முடியா தீ நான் # வீரம் பஞ்ச்
=====================
26 எல்லா ஜில்லா லயும் வீரம் ரிலீஸ் ஆகும் னு அஜித் ரசிகரால சொல்ல முடியும்.
=====================
27 வீரம் டீசர் பஞ்ச் - மாரியம்மன் கோவில்ல கூழ் ஊத்தறப்ப ஓடி வர்ற மாதிரி இத்தனை பேரு வராங்க.பொங்கல் சாப்ட்டுதான் போவாங்கனு நினைக்கறேன்
=========================
28 அஜித்-ரதகஜதுரகபதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும்மதபுஜம் 2ம் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும்
=====================
27 வீரம் டீசர் பஞ்ச் - மாரியம்மன் கோவில்ல கூழ் ஊத்தறப்ப ஓடி வர்ற மாதிரி இத்தனை பேரு வராங்க.பொங்கல் சாப்ட்டுதான் போவாங்கனு நினைக்கறேன்
=========================
28 அஜித்-ரதகஜதுரகபதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும்மதபுஜம் 2ம் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும்
.விஜய் - வாங்கண்ணா வணக்கங்கண்ணா
========================
29 வீரம் பஞ்ச் - நான் ஒயிட் ல இருக்கும் வரை கொயட் டா இருப்பேன்.என்னை ரெட் டுக்கு மாற வெச்சுடாதீங்க
====================================
30 சார், கிராமத்துக்கதை உங்களுக்கு செட் ஆகுமா?
வில்லன் ரோலே செட் ஆகும்போது வில்லேஜ் ரோல் செட் ஆகாதா?
=============================
31மகாத்மா காந்தி - வீரம் என்னைக்கும் ஆபத்து.அஹிம்சை தான் பாதுகாப்பு .
அஜித் - எந்த சூழ்நிலைலயும் அஹிம்சை வழில போவதும் வீரம் தான்
======================
32 வெற்றியை முதல் முறை ருசிப்பவன் அதைக்கொண்டாடுவான்.வெற்றிக்குப்பழக்கப்பட்டவன் அடுத்த வெற்றிக்கு உழைக்க ஆரம்பிப்பான்
=======================
33 சார்.2 படங்களுக்கிடையே போதிய இடை வெளி வேணாமா ?
கேப் விட்டு ரிலீஸ் பண்றது வீரம் இல்லை.கேப் விடாம ஜெயிக்கனும்
========================
வில்லன் ரோலே செட் ஆகும்போது வில்லேஜ் ரோல் செட் ஆகாதா?
=============================
31மகாத்மா காந்தி - வீரம் என்னைக்கும் ஆபத்து.அஹிம்சை தான் பாதுகாப்பு .
அஜித் - எந்த சூழ்நிலைலயும் அஹிம்சை வழில போவதும் வீரம் தான்
======================
32 வெற்றியை முதல் முறை ருசிப்பவன் அதைக்கொண்டாடுவான்.வெற்றிக்குப்பழக்கப்பட்டவன் அடுத்த வெற்றிக்கு உழைக்க ஆரம்பிப்பான்
=======================
33 சார்.2 படங்களுக்கிடையே போதிய இடை வெளி வேணாமா ?
கேப் விட்டு ரிலீஸ் பண்றது வீரம் இல்லை.கேப் விடாம ஜெயிக்கனும்
========================
34 முதல் இரவில் அஜித் FAN=இந்த ஜில்லாவுலயே உன்னை மாதிரி
அழகியைப்பார்த்ததில்லை
.விஜய் FAN ம்க்கும்.உங்க் வீரம் என்ன?னு இன்னைக்கு தெரிஞ்சிடும்
=========================
35 தலை முறை இடைவெளி என்பது அஜித் ரசிகர்களைப்பொறுத்தவரை 2 அஜித் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு உண்டான இடைவெளியே!
========================
36 சார்.உங்க படம் ஹிட் ஆகியும் ஏன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடலை ?
உழைப்புக்கு மட்டும்தான் மூளையை செலவுபண்ணனும்.வெற்றியை தலை ல ஏத்திக்க மாட்டேன்
==========================
.விஜய் FAN ம்க்கும்.உங்க் வீரம் என்ன?னு இன்னைக்கு தெரிஞ்சிடும்
=========================
35 தலை முறை இடைவெளி என்பது அஜித் ரசிகர்களைப்பொறுத்தவரை 2 அஜித் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு உண்டான இடைவெளியே!
========================
36 சார்.உங்க படம் ஹிட் ஆகியும் ஏன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடலை ?
உழைப்புக்கு மட்டும்தான் மூளையை செலவுபண்ணனும்.வெற்றியை தலை ல ஏத்திக்க மாட்டேன்
==========================