Monday, November 04, 2013

ஆரம்பம் - காமெடி கும்மி


1. யாரோ திருடி ,சுட்டு படம் பண்ணா அது ரீ மேக் படம்.ஆரோ 3 டி ல வந்தா அது அல்டிமேட் படம்



==================


2 100 மீ ஓட்டப்பந்தயத்துல முத அடியை எடுத்து வைப்பவனுக்கும்,சதுரங்கத்தில் வெள்ளை காய்களுடன் முதல் நகர்த்தல் செய்பவருக்கும் வெற்றி வாய்ப்பு



====================


3 சார்.31 ந்தேதி லீவ் வேணும்.  



டேமேஜர் - தல கீழா நின்னாலும் லீவ் கிடைக்காது.


======================


4 வெங்காயம் ,பெட்ரோல் விலை உயர்வைத்தாண்டிக்கொண்டிருக்கிறது ஆரம்பம் டிக்கெட் ரேட்.



=========================


5 புதுக்கோட்டை விஜய் சினிமாஸ் இல் 27 லட்சம் ரேட்டில் ஆரம்பம்.15 நாளில் முதலீடு எடுத்துருவாங்களாம்.காலை 9 மணி க்கு ஷோ.TKT-250



========================






6 ஆரம்பம் (5) ,அஜித்குமார் (6) ,விஷ்ணுவர்தன் (7) =கூட்டுத்தொகை = 5+6+7=18=9= ஜெ ராசி எண்



========================


7 ஹீரோ ,ஹீரோயின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கா ? கெமிஸ்ட்ரியை விடுங்க.மிஸ்டரியை பாருங்க.ஹிஸ்டரி ஆகுங்க



====================


8 பொதுவா தீபாவளி கொண்டாடுறவங்களை விட தலை தீபாவளி கொண்டாடுறவங்க கம்மியாதான் இருப்பாங்க.இந்த வருசம் எல்லாருக்கும் தல தீபாவளிதான்



=====================


9 பிரம்மாண்டமான ஓப்பனிங் படங்கள் 1 கேப்டன் பிரபாகரன் 2 படையப்பா 3 இணைந்த கைகள் 4 எந்திரன் 5 இந்தியன் 6 கஜினி 7 துப்பாக்கி 8 ஆரம்பம் ,9 உலகம் சுற்றும் வாலிபன் 10 தளபதி



=========================



10 படம் ரா வா இருக்கும் என்பதற்கான குறியீடு தான் ஹீரோ ரா பிரிவு அதிகாரியா வர்றது


======================






11 குருவே! அமாவாசை சனி மதியம் டூ சன்டே மதியம் வரை இருக்கு.அப்போ தீபாவளி எப்போ? 2?3? 



சிஷ்யா! குழப்பமே வேண்டாம்.தீபாவளி 31ல் தான் ஆரம்பம்



=========================


12 ஆட்டம் ஆரம்பம் னு ஆல்ரெடி நாங்க ஒரு டைட்டில் பதிவு பண்ணி இருக்கோம்.அதனால ஆரம்பம் செல்லாது. ரிசர்வேசனுக்கே ஏகப்பட்ட கூட்டம் செல்லுதே?



====================


13 இந்தியா முழுவதும் மோடி அலை வீசுது.கடல் கடந்து இன்னொரு அலை வீசிட்டிருக்கு



=====================


14 என்னது? ஆட்டம் டைட்டிலுக்கு தடையா? உங்க ஆட்டத்தை எல்லாம் வேற யார் கிட்டேயாவது வெச்சுக்குங்க.சிம்ம ராசி யை நம்ம ராசி ஆக்கினவர்ட்ட வேணாம்.



========================


15 அஜித் ரசிகர்களுக்கு பிடிச்ச சட்னி பு"தீனா" சட்னியா? ரெட் சில்லி சட்னியா?



=====================






16 சபரி மலைல மகர ஜோதி ,திருவண்ணாமலை ல தீப ஜோதி ி ,பரங்கி மலை ஜோதில ஆரம்பம் FDFS பார்த்தவனும் பெருமையா வெளில சொல்லிக்குவான்்



========================


17 ஆரம்பம் படத்தை தடை செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது - செய்தி # இதுதான்யா அஜித் ரசிகர்களுக்கு நிஜமான தீபாவளித்தள்ளுபடி



-------------------------------


18  மந்திரவாதியின் மாயக்கண்ணாடி இருந்தா இங்கிருந்தே படத்தையும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸையும் பார்க்கலாம்.அடடா!



===================


19 ஆரம்பம் படம் பார்த்த இலங்கை விஜய் ரசிகர் முன் பாதி ஆவரேஜா போச்சுங்கறார்.அப்போ படம் ஹிட் னு அர்த்தம் ;-))


-----=====================


20  ஆரம்பம் மங்காத்தாவை விட ஒரு படி கம்மி ,பில்லா பாகம் 1 லெவல் க்கு இருக்கு.தேறிடும் # ரிசல்ட் பை இலங்கை அப்டேட்



========================





21 எல்லோரும் யூகித்தபடி SWORD FISH கதையோ DIE HARD கதையோ இல்லை.புது கதை.அதுவே ஒரு வெற்றி .கேப்டன் ன் டெரரிஸ்ட் கதைகளின்் ஸ்டைலிஷ் வெர்சன்  ( படம் பார்க்கும் முன் போட்ட ட்வீட்)



====================


22 பிரமாதமாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட யுவன் ன் ஆரம்பம் BGM பில்லா ,மங்காத்தா லெவல்க்கு இல்லாமல் போனது ஏமாற்றம்



====================


23 அஜித் - நயன் ஜோடிக்கு டூயட்டோ ,ரொமான்டிக் சீனோ இல்லாதது மைனசாகத்தெரியாமல் திரைக்கதையை நகர்த்தியது இயக்குநரின் சாமார்த்தியம்


====================


24  எந்திரனுக்குப்பின் தமிழில் வந்திருக்கும் டெக்னிக்கலாக மிரட்டும் படம் ஆரம்பம் - ரித்தீஷ்



=====================


25  மதுரையில் அதிகாலை காட்சி ஓடலை.கலெக்டர் ஸ்பெஷல் ஷோ க்கு அனுமதி மறுப்பு # டிக்கெட் கொடுக்கும்போதே கலெக்டரிடம் அனுமதி வாங்கியிருக்கனும்  ( தேவர் பிறந்த நாள் காரணமாம் )


=====================


 


26  அஜித் FANSபடம் பார்த்துட்டு ் மாஸ் ,தல பின்னிட்டார்னு டெம்ப்ளேட் டா சொல்றாங்களே ஒழிய பொது ரசிகனுக்கு படம் பிடிக்குமா? ஓடுமா?னு சொல்லல


======================


27  ஒரு அஜித் ரசிகர் படம் 250 கிமீ வேகத்துல போகுதுங்கறார்.நாம சீட் ல உக்காந்து பார்த்தா புரியுமா? ஓடிட்டே பாக்கனுமா?



=======================


28  ஆரம்பம் எப்டி இருக்கு? அஜித் ரசிகர் - மரண மாஸ் டா ,தல டா . விஜய் ரசிகர் - ஊஊஊஊ ,பொதுஜனம் - !!????



=======================


படம் பார்த்த பின்



29 இனி எந்த மூஞ்சியை வெச்ச்சுட்டு ஆபீஸ் வருவீங்கனு ஒரு விஜய் ரசிகை போன் பண்ணி கேக்குது.வாடகைக்கு வேற மூஞ்சி கிடைக்குமா?


=====================


30  ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருக்குனு விஜய் ரசிகர்கள் கேட்கறாங்க .என்னமோ விஜய் படத்துல எல்லாம் பர்பக்ட்டா இருக்கற மாதிரி.விடுங்கய்யா.;-))


=====================




31 அடி வாங்குனது நாங்க தான்.கப் எங்களுக்குத்தான்


=================


32 இந்த வருசம் அஜித் ரசிகர்களும் ஹேப்பி .விஜய் ரசிகர்களும் ஹேப்பி.குமுதாவும் ஹேப்பி அண்ணாச்சி ;-))


====================


33 அஜித்- படம் ரொம்ப சாதாரணமாத்தான் இருக்கு?




 விஷ்னுவர்தன் - மேக் இட் சிம்ப்பிள் னு நீங்க தானே சொன்னீங்க?


===============


34  ஆபீசுக்குப்போய் வலிக்காத மாதிரியே நடிச்சுட வேண்டியது தான் ;-)



===================


35  விஜய் ரசிகர்கள் விஜய் டான்ஸ் ஸீன் ல தான் ஆடுவாங்க விசில் அடிப்பாங்க.அஜித் ரசிகர்கள் அவர் ஒவ்வொரு மூவ்க்கும் அப்ளாஸ் தான்


================


36  ஆக்சன் ஹீரோவான அஜித் இருக்கும்போது ஆர்யா - டாப்சி க்காக அதிக காட்சிகள் வைத்தது படத்துக்கு ஸ்பீடு பிரேக்கர்



===================


37  அஜித் - படம் நல்லாருக்குனு சொன்னீங்களாமே? தாங்க்ஸ் .



கமல் - நல்லார்ந்திருந்தா நல்லாருக்கும்னு சொல்ல வந்தேன் # சும்மா



===================


38 ரஜினி -( மைன்ட் வாய்ஸ்) = மீடியமா இருக்கும் படத்துக்கே இப்டி கும்மி அடிக்கறாங்களே.இந்த வருசம் பிறந்த நாள் எப்டி கொண்டாடுவேனோ?



=======================


39 வசூல் ரீதியா ஆரம்பம் தயாரிப்புச்செலவை விட அதிகமா கலெக்சனை அள்ளிடும் .கேரண்டி



=====================


40 பெரும்பாலான அஜித் பேனர் வாக்கியம் = எம் ஜி ஆர் ,ர ஜி னி ,அ ஜி த் # 3 ஜி


==============


41 புதிய தலைமுறை ஓனர் அஜித் ரசிகர்.ஆனா அங்கே முக்கியப்பொறுப்பில் இருக்கும் அதீஷா அண்ணன் விஜய் ரசிகர் # இந்த சம்பவம் எப்டி?



==================


42  ஆரம்பம் - ஆர்யா , ஜில்லா - மோகன்லால்



==================

43  அழகுராஜா ஆரம்பம் க்கு டப் பைட் குடுக்குமாம் .அ ராஜால பைட்டே இல்லையே?


=====================

44  நல்ல வேளை.ராணா க்கு ஜோடியா த்ரிஷாவை போடலை.போட்டிருந்தா இன்னும் ரொமான்ஸ் சீன் அதிகம் ஆகி ஆக்சன் குறைஞ்சிருக்கும்


====================


45 ஒரே கமென்ட்டை அஜித் ரசிகர் சொன்னா ஒரு அர்த்தம் ,விஜய் ரசிகர் சொன்னா இன்னொரு அர்த்தம் # படம் தாறுமாறு


==================



46 நான் எல்லா ஹீரோக்களின் FDFS ம் பார்த்துட்டேன்.ரஜினிக்குப்பின் அஜித்துக்குத்தான் தியேட்டரில் ஆரவாரமான கரகோசம்


=====================


47  நமக்குப்பிடிச்ச ஹீரோ படத்தை நாமே கலாய்ப்பது கட்டிக்கப்போகும் முறைப்பெண்ணை உரிமையா கட்டிப்பிடிப்பது மாதிரி


=============================


48 FDFS க்கு ஏன் ரசிகைகள் வருவதில்லை.மேக் இட் சிம்ப்பிள்.வீ ஆர் வெயிட்டிங் ;-))


====================


49 சால்ட் & பெப்பர் லுக்கில் ஹாலிவுட் ஹீரோ மாதிரி கெத்து காட்டும் ஹீரோ தமிழில் அஜித் தவிர யாராவது இருந்தா காட்டுங்கய்யா பார்ப்போம்


======================


50 ஆரம்பம் முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட் ஏன் இன்னும் வர்லை ? எண்ணிட்டிருக்காங்க.எண்ணிலடங்கா!


===========================

51  துப்பாக்கி டோட்டல் கலெக்சனை ஆரம்பம் எட்டுவது மிகக்கடினமே! முதல் 7 நாள் தான் பிளாக் டிக்கெட் போகும்


================

52  தீபாவளிக்கு வெளியாகும் மற்ற இரண்டு படங்களின் வெற்றியைப்பொறுத்து ஆரம்பம் கலெக்சன் கூடவோ குறையவோ செய்யும்


===================


53 ஒரு ரேஸ் பைக்கை காட்டும் போது அரங்கம் கை தட்டலால் அதிர்ந்ததை முதல் முறையாகக்கண்டேன்


==================


54  பில்லா 2 வசனகர்த்தாவை விட ஆரம்பம் வசனகர்த்தா சுபா அனுபவம் இருந்தும் அடக்கி வாசித்தது ஏனோ?



=====================

55 ஆரம்பம் - விகடன் மார்க் = 44+ என பல அஜித் ரசிகர்கள் சொல்கிரார்கள் . துப்பாக்கிக்கே 44 தான். எனவே நிச்சயம் 42 அல்லது 43



===================


56  தீவிர விஜய் ரசிகைகள் 3 பேரும் ஆரம்பம் பார்த்து விட்டு கமுக்கமாக பார்க்காத மாதிரியே ஆக்டு குடுக்கறாங்க என அவதானிக்கிறேன் ;


===================


57 2 நாள் முன்னதா ரிலீஸ் பண்ணுனதை கிண்டல் பண்ணும் விஜய் ரசிகர்கள் பொங்கலுக்கு ஜில்லா 2 நாள் முன் வந்தால் என்ன செய்வாங்க?



==================


58  சன் டி வி டாப் 10 ல ஆரம்பம் பற்றி எதுவுமே சொல்லலை.இதனால தமிழ் நாட்டு மக்களுக்கு அப்டி ஒரு படம் ரிலீஸ் ஆனதே தெரியாம போய்டும்.வாவ்.



=====================


59  போயஸ் தோட்ட வாசலில் ஒரு போஸ்டர் - ஜில்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் # கற்பனை



=====================


60 என் படம் ஹிட் ஆக நான் கேரண்டி .உன் படம் பிளாப் ஆக நீ கேரன்டி



=======================

61 நேத்து ஏன் ஸ்கூல் க்கு ஆப்சென்ட்் ஆனே? 



 ஸ்க்ரீன் பிரசன்ஸ் னா எப்டி இருக்கனும்னு ஒருத்தர் பாடம் எடுத்த படத்துக்கு போய்ட்டேன் மிஸ்



======================


62  யார் நடந்து வந்தாலே அரங்கம் அதிருதோ அவர் படம் : which 1 is ur pick in Diwali releases?"



============================

ஸ்வேதா மேனனிடம் சில்மிஷம் செய்த காங்கிரஸ் எம் பி - பர பரப்புப்புகார்

Shweta Menon Assaulted At A Public Function
கேரளாவில் நடந்த படகு போட்டி நிகழ்ச்சியில், பிரபல மலையாள நடிகை, ஸ்வேதா மேனனை, கேரளாவின் மூத்த, காங்கிரஸ், எம்.பி., பீதாம்பர குருப், மானபங்கம் செய்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மீதான, நடிகையின் குற்றச்சாட்டை, எம்.பி., மறுத்தாலும், அந்த நிகழ்ச்சியின், "வீடியோ காட்சிகளில், நடிகையை வேண்டுமென்றே பல முறை, எம்.பி., தொடுவது தெளிவாகத் தெரிகிறது.


சூடான அரசியல் விவாதங்களுக்கும், பாலியல் பலாத்கார சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்ற கேரள அரசியலில், புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையிடம், 73 வயது காங்கிரஸ், எம்.பி., அத்துமீற முயன்றதை, அந்த நடிகையே கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் அருகே உள்ள ஒரு இடத்தில், நேற்று முன்தினம் மாலையில், "பிரசிடென்ட் கோப்பை படகுப் போட்டி நடந்தது. அதில், ஏராளமானோர், தங்கள் படகுகளுடன், தீரத்தைக் காண்பிக்க போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
 நிகழ்ச்சியை பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையில், வி.ஐ.பி.,களும், அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன், நடிகை, ஸ்வேதா மேனனும் அமர்ந்திருந்தார். நாற்பது வயதைத் தாண்டிவிட்ட ஸ்வேதா மேனன், மலையாள படங்களில், மிகவும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். அவர் அருகில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., என்.பீதாம்பர குரூப் அமர்ந்திருந்தார். படகுப் போட்டியை பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில், எம்.பி., நடிகை ஸ்வேதாவை, "சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, தர்மசங்கடத்தில் நெளிந்தார்.

நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் கலைந்து சென்றதும், நடிகை, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ""மேடையில் இருந்த என்னை, அந்த எம்.பி., தொட்டுத் தொட்டு பேசினார். என்னிடம் அத்துமீற முயன்றார். அதை நான் தவிர்க்க முயன்ற போதும், தொடர்ந்து என்னை துன்புறுத்தி, என் நிம்மதியைக் கெடுத்து விட்டார், என்றார்.

இந்த விவகாரம் நேற்று அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "மூத்த எம்.பி., மீது கூறிய புகார் உண்மை தானா என, பலரும், நடிகை ஸ்வேதாவுக்கு போன் செய்து கேட்டுள்ளனர். அவர்களிடம், "நான் கூறியது உண்மை தான்; நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியின் அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை என கூறியுள்ளார்.

இந்தத் தகவலை அறிந்த, முதல்வர், காங்கிரசை சேர்ந்த உம்மன் சாண்டி, கொல்லம் கலெக்டரிடம், நடந்த விஷயம் குறித்து கேட்டறிந்துள்ளார். பின், நிருபர்களை சந்தித்த முதல்வர், சாண்டி, ""முறையான புகார் இன்னும் பதிவு செய்யப்படவில்லை; அதற்குப் பிறகு தான், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும், என்றார். எம்.பி.,யால் தொந்தரவுக்கு ஆளான நடிகை ஸ்வேதா, மலையாள நடிகர் சங்கத் தலைவர், நடிகர் இன்னொசென்டிடம், கொல்லம் நிகழ்ச்சியில் நடந்தவற்றை விளக்கியுள்ளார்.

நடிகை ஸ்வேதா நேற்று கூறுகையில், ""விழா மேடையிலேயே நான், அந்த மனிதரின் சின்னத்தனத்தை அம்பலப்படுத்தியிருப்பேன்; நிகழ்ச்சியில் பிரச்னை வேறு விதமாகப் போய்விடும் என்பதால் தான், அமைதியாக இருந்தேன், என்றார்.

இதுகுறித்து, நடிகர், இன்னொசென்ட் கூறும் போது, ""நடிகை ஸ்வேதா மேனன் என்னிடம், கொல்லம் விழா மேடையில் நடந்த சம்பவத்தை விவரித்தார். இன்னும் அவர் முறைப்படி புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுத்த பிறகு, நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம், என்றார்.

இதை அறிந்த, எம்.பி., பீதாம்பர குரூப், நேற்று, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொல்லம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த அரசியல் தலைவர் நான் தான். பெயரைக் குறிப்பிடாமல், ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற ரீதியில், நடிகை ஸ்வேதா மேனன் புகார் கூறியுள்ளார். அதனால், அது குறித்து தகவல் தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். நான் அந்த நடிகையிடம் அத்துமீறி நடந்து கொள்ளவில்லை. அவரின் புகாரில், துளியளவும் உண்மையில்லை. இதன் பின்னணியில் ஏதோ, அரசியல் சதித்திட்டம் இருப்பதாக உணர்கிறேன். எவ்வித விசாரணைக்கும் நான் தயார். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கொல்லம் படகுப் போட்டியில், பார்வையாளர் மேடையில் நடந்த சம்பவங்களை, "வீடியோ எடுத்திருந்தனர். அதைப் பார்த்த போது, தேவையில்லாமல் நடிகை ஸ்வேதா மேனன் நெளிவதும், அவரை, பல முறை, எம்.பி., பீதாம்பர குருப் தொடுவதையும் காண முடிந்தது.

இந்த விவகாரம் குறித்து, மாநில பெண்கள் கமிஷன் உறுப்பினர், லிசி ஜோஸ் கூறும் போது, ""இந்தப் பிரச்னை குறித்து, யாரும் புகார் அளிக்கத் தேவையில்லை; எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நாங்களாகவே முன்வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம், என்றார்.

மார்க்சிஸ்ட் மகளிரணி தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, டி.என்.சீமா கூறுகையில், ""இந்தப் பிரச்னையை நாங்கள் விடப் போவதில்லை; நடந்த சம்பவம் குறித்து, நடிகை ஸ்வேதா, மாவட்ட கலெக்டர், மோகனனிடம் கூறியுள்ளார்; அதை அவர், வெகுசாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார், என்றார்.
நன்றி - தினமலர்

ஆல் இன் ஆல் அழகு ராஜா - காமெடி கும்மி

1. பிகைன்ட் வுட் அழகுராஜாவுக்கு 2.25 /5 # இந்த மூஞ்சிக்கே பொண்ணு பிடிகலையே மொமென்ட்


===============


2 சார், படம் ஃபேமிலி எண்ட்டர்டெயின்மெண்ட்னீங்க , ஊத்திக்குச்சே?



ஹி ஹி , டி வி ல சீக்கிரம் போட்ருவான், அப்போ ஃபேமிலியோட பார்க்கலாமே?


=================


3 க்ரீன் ! இனி ரெட் கூட மோதுவீங்க ?


=================


4 பில்டப் யார் வேணாலும் குடுக்கலாம்.ஆனா ஹிட் படம் எல்லாரும் குடுத்துட முடியாது # க்ரீன் ஊ ஊ



======================


5 ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவரையே கவுத்துட்டார்னா அவர் எப்பேர்ப்பட்ட ராசிக்காரரா இருக்கும்?


===================


6 பிரியாணி பொங்கலுக்கு வருதாம்.இந்தப்பக்கம் ஜில்லா .அந்தப்பக்கம் வீரம் .அய்யோ பாவம்



====================


7 தமிழ் நாடு பூரா மெயின் தியேட்டர் ஓனர்ஸ் எல்லாம் சைடு கேட் வழியா தான் வீட்டுக்குப்போறாங்களாம் # க்ரீன் டீ நல்லது.ஆனா.,


==================


8  வாங்க சார் வாங்க 100 ரூபா டிக்கெட் 50 ரூபா தான். மனைவிக்கு டிக்கெட் எடுத்தா மச்சினிக்கு ப்ரீ


===============

9  தமனா - என் படம் எதுவும் ரிலீஸ் ஆகலை.ஆனாலும் இந்த தீபாவளி எனக்கு சந்தோசமான தீபாவளி தான்.கடவுள் இருக்கான் கொமாரு



====================

10  கார்த்தி டூ சந்தானம் - உள்ளூர் ல நம்ம பப்பு வேகாதுன்னு சொல்றியா ? # எந்த ஊர்ல யும் இந்த பப்பு வேகாது.போட்ட டப்பு ஊ ஊ


========================


11  எம் ராஜேஷ் தொடர்ந்து 3 ஹிட் படம் கொடுத்திருக்காரு.கார்த்தி தொடர்ந்து 3 பிளாப் படம் கொடுத்துட்டாரு.எப்டி ஜோடிப்பொருத்தம் ?


=================


12  ஆல் இன் ஆல் அழகுராஜா தயாரிப்பாளர் ஆல் இன் ஆல் அடகு வைக்கப்போகும் ராஜா


===================


13  அழகுராஜாவின் தோல்வி கார்த்தியை பாதிக்காது.ஏன் னா சந்தானம் தான் படத்தின் ஹீரோ - தோசையைத்திருப்பிப்போட்ட சிவகுமார் # சும்மா


===================


14  ஆரம்பம் எடுங்க னு ஈரோடு அபிராமி தியேட்டர் மேனேஜர் ட்ட சொன்னப்ப " தம்பி ! நான் 20 வருசமா பீல்டுல இருக்கேன்.எனக்குத்தெரியாதா?ன்னார்


=====================


15 சந்தானம் - ரஜினி ,கமல் எல்லாம் தர்பூசணிப்பழம் மாதிரி .சீசனுக்கு வந்துட்டுப்போய்டுவாங்க # கண்டிக்கத்தக்க வசனம்



=====================


16 மழை வந்தா மயில் தோகை விரிச்சு ஆடுமாம்.அதைப்பார்த்து வான் கோழிக்கும் ஆட ஆசை வருமாம்.ஆனா தோகை இல்லையே ! என்ன பண்ணும்?


====================


17 தீபாவளிக்குப்பின் காமெடிக்கு டிராஜடி .ஆக்சன் னா அதிரடி


==================


18 ஆர்ப்பாட்டம் பண்ணிட்டிருந்தவங்களுக்கு ஆண்டவன் நல்ல நல்ல தியேட்டரைக்குடுப்பான், ஆனா ஆடியன்சை கொடுக்க மாட்டான்


================


19  இனிமே டிராஃபிக் ல க்ரீன் சிக்னல் பார்த்தாக்கூட அவன் அவன் தெறிச்சு ஓடனும் ;-))


=====================


20  பேசன்ட்டை காப்பாத்த முடியாது.ரொம்ப க்ரிட்டிக்கல் கண்டிசன்.சாரி.



டாக்டர்.பேசன்ட் தாடியை ட்ரிம் பண்ணிட்டோம்.இப்போக்காப்பாத்த முடியுமா?



=====================


21  பொங்கலுக்கு வருவதாக இருந்த பிரியாணி டிசம்பர் ரிலீஸ் - செய்தி #,இது தானா சார் உங்க வீரம்.? ஜில்லா முழுக்க சிரிக்கப்போறாங்க



======================


22  தீபா முன் - ஆல் இன் ஆல் அழகுராஜா . தீபா பின் - ஆல் அவுட் ஆள் அடகு ராஜா




================


23  இவர் பேரு அழகு ராஜா.3 மாசமா ஓவரா பில்டப் குடுத்துட்டு இருந்தாரு.சோகம் என்னான்னா 3 ் சந்தானம் இருந்தும்் யாராலும் இவரைக்காப்பாத்த முடியல



======================


24  தீபாவளி ரிசல்ட்டில் நான் கற்றுக்கொண்டது - உலக மகா அழகு ராணியா இருந்தாலும் ,அழகு ராஜா வா இருந்தாலும் ஓவரா துள்ளக்கூடாது.



======================


25 டைரக்டர் - ரோஸ்ட் 1 கொண்டு வாப்பா .



சர்வர் - ஊத்தப்பம் கொண்டு வரவா சார்.படமும் ஊத்திக்குச்சு.மேட்சுக்கு மேட்ச்



========================


26 25 கோடி செலவு பண்ணி கல்யாண மண்டபம் பிரமாதமா புக் பண்ணாங்களாம்.சோகம் என்னான்னா பொண்ணு ஓடிப்போயிடுச்சு


====================


27 விடிய விடிய அழகுராஜா படம் பார்த்துட்டு விடிஞ்சதும் இந்தப்படத்துல கார்த்திக்கு என்ன வேலை? னு கேட்ட கதையா.,



=====================


28 ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.அவர் தொட்டது துலங்காதாம்.கை பட்டது விளங்காதாம் # பசுமை யான நினைவுகள்



=====================


29 அத்தை.எனக்கு உங்க பொண்ணை பிடிக்கலை.சாரி.




மாப்ளை.பொண்ணோட புருவத்தை ட்ரிம் பண்ணி இருக்கோம் .இப்போ பாருங்க  # அழகுராஜா 28 நிமிட காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டது -செய்தி


===========================

 30  ஸார்.ஒரு காமெடி சப்ஜெக்ட் வெச்சிருக்கேன்.,நீங்க ஓக்கெ ன்னா பண்ணிடலாம்.



 எது? திவசமா?


=======================


31  ரஜினி ,சத்யராஜ் ,விஜய் ( ப்ரியமுடன் ) ,அஜித் ( மங்காத்தா) எல்லாரும் படத்துல வில்லனா நடிச்சிருக்காங்க.கார்த்தி தான் படத்துக்கே வில்லனா !



=======================


32 பிரியாணி என்ன ரேட் ? ஏதோ குடுக்கறதைக்குடுங்க. ரேட் பேசற நிலைமை ல இல்லை



=======================


33 மழை வந்தா மயில் தோகை விரிச்சு ஆடுமாம்.அதைப்பார்த்து வான் கோழிக்கும் ஆட ஆசை வருமாம்.ஆனா தோகை இல்லையே ! என்ன பண்ணும்?


=======================


;-)) RT : சென்னியாரின் 3தீபாவளி சிரிப்பு வெடிகள் "
Embedded image permalink
ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கு வரிவிலக்கு வழங்கியது தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 


நடிகர்கள் கார்த்தி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கு வழங்கப்பட்ட வரி விலக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ஆர்.சிங்காரவடிவேலன் (வயது 48) என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், 'ஆல் இன் ஆல் அழகுராஜா படம் வர்த்தக நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 


தமிழக அரசு தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமான திரைப்படங்களுக்கும் வரி விலக்கு அளித்து வருகிறது. பத்திரிகை, டி.வி.களில் வெளியாகும் விளம்பரங்களிலும், சாலையோரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களிலும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படத்தின் பெயரை 'அழகுராஜா' என்று குறிப்பிட்டு, தமிழக அரசிடம் வரி விலக்கு பெறப்பட்டுள்ளார். 


வரி விலக்கு சலுகை வழங்கப்படவில்லை என்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் ரூ.18 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், படத்தின் தலைப்பை மாற்றி, அரசை ஏமாற்றி தயாரிப்பாளர் வரி விலக்கை பெற்றுள்ளார். இதனால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 


எனவே, இந்த படத்துக்கு வரிவிலக்கு அளித்து தமிழக அரசு 29–10–2013 அன்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தப் பொது நல மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நிதிமன்றம், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், வணிக வரித்துறை கமிஷனர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பின்னர், இம்மனு மீதான விசாரணையை இம்மாதம் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

 நன்றி - த தமிழ் ஹிந்து


Saturday, November 02, 2013

ஆல் இன் ஆல் அழகு ராஜா - சினிமா விமர்சனம்

ஹீரோ  ஒரு லோக்கல் டி வி சேனல் நடத்திட்டு இருக்காரு . அவர் எதேச்சையா  ஒரு விழாவில் பாடகியை சந்திக்கிறார். அவர் அழகில் மயங்கி லவ்வறார். அவர் தன் லவ்வை ஹீரோயின் கிட்டே வெளிப்படுத்தி  ஓக்கே வாங்குவது எப்படி என்பதை இடைவேளை  வரை  ஓட்டிடறாங்க. பொண்ணு ஓக்கே சொன்னதும் ஹீரோவோட அப்பா அந்தப்பொண்ணைப்பார்த்து இந்தப்பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்றார். அது ஏன் ? அப்டிங்கறதுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் . 


ஹீரோவோட அப்பா   ஒரு சினிமா தியேட்டர் ஓனர் கிட்டே ஒர்க் பண்ணிட்டு இருந்திருக்கார் . அப்டியே  ஓனர் பெண்ணு அவரை லவ்வுது . ஆனா ஓனர் இறந்துட்டதா வந்த தவறான ஒரு ஃபோன் கால்  ஹீரோவோட அப்பாவின் வாழ்க்கையையே திருப்பி போட்டுடுது . ஓனர் அவரை   அவமானப்படுத்தி அனுப்பிடறாரு. ஓனர் பொண்ணுக்கும் , ஹீரோவோட அப்பாவுக்கும் வேற வேற இடத்துல மேரேஜ் ஆகிடுது 



ஹீரோவோட அப்பாவோட ஓனரோட பேத்தியைத்தான் இப்போ  ஹீரோ லவ்விட்ட  இருக்கார் . இதுக்கு மேல என்னச்சுன்னு தில் இருப்பவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க .


படத்தோட ஹீரோ, வில்லன் ,  கிளாமர் ஆர்ட்டிஸ்ட் என சந்தானத்துக்கு 3 வேடங்கள் . மனுசன் பட்டாசைக்கிளப்பிட்டார். பொதுவா எம் ராஜேஷ் படங்கள் ல சந்தானத்துக்கு  முக்கியத்துவம் இருக்கும், ஆனா இந்தப்படமே சந்தானத்தை நம்பி தான் இருக்கு 




பெண் வேடத்தில்  வரும்போது அரங்கம் அதிருது . க்ளைமாக்சில்  அவர் கோட்டா சீனிவாசிடம் மாட்டிக்கிட்டு  டான்ஸ் மூவ்மெண்ட் கொடுக்கும்போது  சிரிப்பலை  பரவுது .

 ஃபிளாஸ்பேக்கில் வில்லன் ரோலில்  சந்தானம் வருவது  ஓக்கே , ஆனால் நம்பியார் மாதிரி  மேனரிசமும் , அவர் முகத்தில் சிவப்பு லைட் அடிப்பதும் எடுபடவில்லை . 1980 களில் வந்த தமிழ்ப்படங்களை கிண்டல் பண்ணுகிறேன் பேர்வழி என  யூனிட் அடிக்கும் அபத்தங்கள்  போர் அடிக்கிறது.


நாயகியாக காஜல் அகர்வால் . பாலைவனத்தில்  கிடைத்த அருண் ஐஸ்க்ரீம் மாதிரி இருக்கிறார். இவர் சேலையில் வந்தாலும் அழகு , மாடர்ன்ஸ் டிரஸ்சில் வந்தாலும் அழகுதான் . இவர் போட்டும் ஜாக்கெட் செம ஃபிட் .   இவருக்கு இன்னும் நல்ல ஸ்லோமோஷன் காட்சிகள் வைத்திருக்கலாம் . 


சொல்ல மறந்துட்டேன் . நாயகி காஜல்க்கு ஜோடியாக கார்த்தி . பருத்தி வீரன் எனும் ஒரே ஒரு படம் மூலம் பிரம்மாண்டமான வெற்றியைச்சந்தித்த நல்ல நடிகர் . காலேஜ் பெண்களின் ஏகோபித்த ஆதரவை கொஞ்சம் படங்களின் மூலமே பெற்றவர் , மோசமான கதைத்தேர்வால் பலவீனப்பட்டு இருக்கிறார். படத்தில் இவரும் , சந்தானமும்  மாத்தி மாத்தி சிரிச்சுட்டே இருப்பது ஆடியன்சை கடுபப்டிக்கிறது. எஸ் வி சேகர் நாடகங்களில் எல்லாம் அவர் பாட்டுக்கு  டைமிங்க் விட் அடிச்சுட்டே இருப்பார் , ஆனால் முகத்தில்  சிரிப்பிருக்காது , பார்க்கும் ரசிகர்கள் சிரிப்பாங்க , ஆனால் இதில் நேர் எதிர் . இவங்க சிரிக்கறாங்க , ஆனா ரசிகர்கள் சிரிக்கலை 


பிரபு , சரண்யா  ஹீரோவுக்கு பெற்றோரா வர்றாங்க . பிரபுவின் ஃபிளாஸ்பேக்கில் கார்த்தி  பிரபு கேரக்டரில்  சுதாகர் கால கிராப் தலையோடு வருவது எடு பட வில்லை . 


கோட்டா சீனிவாசராவ் தெலுங்குப்படங்களில் வில்லனாகக்கலக்கியவர்  இதில் காமெடி பண்ணுகிறார் . ஆனால் ரசிக்க முடிகிறது   





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1  யாருக்கும் சொல்லாமலே உன் நெஞ்சுக்குள்ளே இடம் பிடிச்சேன் பாட்டு நல்லாருக்கு . உன்னைப்பார்த்த நேரம் பாட்டும் ஓக்கே  ரகம் . ஃபிளாஸ்பேக் காட்சியில் 1980க்கு தக்க இசையில் பாடல் கொடுத்தது சபாஷ் 



2. எம் எஸ் பாஸ்கர்  சாலை ஓரம் தனக்குத்தானே சவுக்கால் அடித்து  ஆடியன்சிடம் பணம் பெறும் கேரக்டர் . அதே ஸ்டெப்பை பரத நாட்டிய ஸ்டெப்பாக மாற்றி கஜோலை ஏமாற்றும் காட்சி அதகளம் . தியேட்டரில் செம சிரிப்புச்சத்தம் . இந்த சீனில் பாஸ்கரின் பாடி லேங்குவேஜ் கலக்கல் ரகம் 


3. சந்தானத்துக்காகவே எழுதப்பட்ட திரைக்கதை  என்பதால் ஒவ்வொரு சீனும் சந்தானத்தைச்சுற்றியே நிகழ்வது





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. படத்தின்  ஃபிளாஸ்பேக்கில் வரும் முக்கியக்காட்சி . ஹீரோவுக்கு  ஒரு ஃபோன் கால் வருது . ஓனர் விபத்தில் இறந்துட்டார் என . உடனே பொதுவா ஒருத்தன் என்ன செய்வான் ? ஜி ஹெச் போய் பாடியைப்பார்ப்பான் . டெட் பாடியை கண்ல பார்க்காம ஊருக்கே இழவுச்செய்தியை சொல்லி இழவுக்கு எல்லாரும் வந்த பின்  ஓனர் சாகாமல் இருக்கார்  என காட்டுவது அந்த காட்சியின்  சீரியசையே போக்கி விடுதே ? 



2 என்னதான்  தமிழ் சினிமா  ஹீரோயின்கள் லூஸ் கேரக்டராக  இருந்தாலும்  பரத நாட்டியம் எப்படி இருக்கும், அந்த ஸ்டெப் எப்படி இருக்கும் என்பது கூடவா  தெரியாது ? 


3 தியேட்டர்  ஓனராக , கல்யாண மண்டப ஓனராக , பாடகியாக   காஜல்  3 பொறுப்புகள் எடுத்துக்கொள்வது நம்பவே முடியலை , அப்படிப்பட்ட மல்டி டாஸ்க் பொண்ணு அப்படித்தான்  கேனமா இருக்குமா? ஏமாறுமா?





மனம் கவர்ந்த வசனங்கள்



1.மத்த சேனல்ல எல்லாம் விளம்பரம் வருது .. ஆனா நம்ம சேனலுக்கே ஒரு விளம்பரம் தேவப்படுது



2  அவமானம் தாங்காம தூக்கு மாட்டிக்கலாம் முன்னு போயுட்டேன்


அப்புறம் ??



 - வீட்டுல table fan தான் இருக்கு . அதான் வந்துட்டேன் .... # சந்தானம்




3 அண்ணன் காதர்பாய் பிரியானி சாப்பிடு .. அன்னனோட கை பக்குவம் - சாப்பிட்டா கைய நைட்டுல கூட நக்குவோம் " - சந்தானம்



4  பசங்கள்லாம் பார் - ல ( BAR )  காச  விடுராங்கன்னா இந்த பொண்னுங்கள்லாம் பார்லர்ல  ( பியூட்டி பார்லர்)  காச விடுராங்கப்பா



5 செம கட்டை கேட்டுச்சாம் கெழக்கட்ட , உன் அவசரத்துக்கு வேகாது கொழுக்கட்ட




6  நான் 30 நாள்ல பரதம் கத்துக்கனும் "



 " 30 நாள்ல விரதம் வேணா இருக்கலாம் . பரதமெல்லாம் கத்துக்க முடியாது


7 நாளைக்கு சாயந்துரத்துக்குள்ல எனக்கு பரத மாஸ்ட்டர் வேணும் " "




நாளைக்கு சாயந்திரத்துக்குள்ல பரோட்டா மாஸ்ட்டரே கிடைக்க மாட்டான்



8 மோதிரம் போடாத விரலும் , இடிபடாத உரலும் இருத்தா என்ன இல்லாட்டி என்ன ???" - எம் எஸ் பாஸ்கர்


9. ஊர்ல பல  லோக்கல் சேனல் இருக்கு , ரொம்ப ரொம்ப லோக்கல் சேனல் தான் இவங்களுது 

10  பேர்ல மட்டும் தான் கல்யாணம் , இன்னும் அப்படி ஒரு சம்பவமே அவர் வாழ்க்கைல நடக்கலை 

 
11 நம்ம சேனலுக்கு ஏன் விளம்பரமே  வர்றதில்லை ?


 எங்கே ? நம்ம சேனலுக்கே ஒரு விளம்பரம்  தேவைபப்டுதே ?


12 தம்பி எதுக்குவந்திருக்கான் ? டீ வாங்கித்தரச்சொல்லி கேட்கவா? 

 நாம குடிச்ச டீக்கு இன்னும் காசு தரலை , அதைக்கேட்க வந்திருக்கான் 

13 நாங்க ஜெயிப்பு பத்தி பேசிட்டு இருக்கோம் , தோத்ரம்னு சொல்றே ?

 அது ஸ்தோத்ரம் 

 நல்லா பேசு , நாக்கை எடுத்துட்டுப்போய் அயர்ன் பண்ணி விட்டுடுவேன் 

14  ஆள் எப்படி ? 

 ஹாலுக்கென்ன ? நல்லா பெருசா அழகாத்தான் இருக்கு 


 யோவ்ம் நான் என் ஆளை கேட்டேன் 


15 இவளை மட்டும் மேரேஜ் பண்ணிட்டா விடிய விடிய இவளை வெச்சு 


 வெச்சு ?

பாடச்சொல்லி கேட்டுட்டு இருக்கலாம் 

 
16 ஒன் சைடு லவ்வுக்கு ஓவர்  ஃபீலிங்க் ஆகக்கூடாது  



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. தீபாவளி ரிலீஸ் ல அழகுராஜா வுக்குதான் பொண்ணுங்க கூட்டம்.படத்தை பார்க்க முடியலைன்னாலும் சைட்டாவது அடிக்கலாம்


ஈரோடு சண்டிகா தியேட்டர் ல 480 பேர் இருக்காங்க.அதுல 360 லேடீஸ். எல்லாரும் கார்த்தியோட  அப்பா  சிவகுமார் உடைய  சம்பந்தி கூட்டம்னு நினைக்கறேன்


3 அடேங்கப்பா.அழகுராஜா 2 மணி நேரம் 54 நிமிசம் ஓடுமாம்.முழு படத்தையும் பார்த்தவன் பொறுமைசாலி


4 படம் போட்ட 19 வது நிமிசம் கஜோல் என்ட்ரி.சேலை ல .ஆகா





5 எம் ராஜேஷ் ட்விட்டர் ல இருக்கார் போல.எல்லா கேரக்டருக்கும் பிரபல ட்விட்டர் பேரு.ஹீரோயின் பேரு தேவிப்ரியா


================


6 கார்த்தி சிரிக்கும்போது வேணும்னே வாயை ஒரு பக்கமா இழுத்துக்கறாரு.மேனரிசமாம். படமும் இழுத்துக்கிட்டுதான் இருக்கு


===================

7 கார்த்தி " ஐ ஆம் வெயிட்டிங்" கறாரு.விஜய் ரசிகர்கள் எல்லாம் ஏய் னு கத்தறாங்க ;-)


==============


8. வாய்புள்லா வெத்தலய கொதப்பிகிட்டு சந்தானம் முத்துவ " தம்பி முட்டு " என அழைக்கும் ஒவ்வொரு முறையும் தியேட்டரில் சிரிப்பலை # சந்தானம் ராக்ஸ்


சி பி கமெண்ட்-ஆஇஆஅழகுராஜா - பசுமரத்தாணி அறைந்தாற்போன்ற 2013 ம் ஆண்டின் பசுமை யான அட்டர்பிளாப் படம் - விகடன் மார்க் -38 ,ரேட்டிங் - 1.75 / 5


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 38


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =  1.75   / 5
    












டிஸ்கி - மனம் கவர்ந்த வசனங்கள் lல் முதல்  8  டயலாக்ஸும்  கருத்து கந்தன் © ‏@Jay_Jey_  ட்விட்டரில் பகிர்ந்தது , நன்றி 


சந்தானம் வசனங்கள் இன்னும் 45 இருக்கு , அது தனிப்பதிவா பின்னர் வரும்  

பாண்டிய நாடு - சினிமா விமர்சனம்

a

 வழக்கம் போல வில்லன் ஒரு தாதா .ஹீரோவோட அண்ணன் ஒரு கல்குவாரி பிரச்சனைல வில்லனுக்கு குறுக்கே வர்றார் . தற்செயலா நடந்த விபத்து மாதிரி செட் பண்ணி  வில்லன் ஹீரோவோட அண்ணனை போட்டுத்தள்ளிடறாங்க . 


ஹீரோ எந்த வம்பு தும்புக்கும் போகாத சிம்பு . ரொம்ப பயந்த சுபாவம் .ஆல்ரெடி தன் நண்பன் ஒருத்தன் கூட சேர்ந்து மறைமுகமா வில்லனை எதிர்த்தவர். நண்பனையும் வில்லன்  கொன்னுடறான் . இப்போ  ஹீரோ பழி வாங்கனும் . ஆனா  இவர் ஒரு சாதா ஆள் . அதனால பிளான் பண்ணி வில்லனைப்போட்டுத்தள்ள  முயற்சிக்கிறார். 

 ஹீரோவோட அப்பா  வீட்டுக்குத்தெரியாம ஒரு ரவுடியை செட் பண்ணி வில்லனை தீர்த்துக்கட்ட பிளான் போடறார். வில்லனுக்கு ஹீரோ அப்பாவை அடையாளம் தெரிஞ்சுடுது 





 இப்போ ஹீரோ தன் அப்பாவையும் காப்ப்பாத்தி , வில்லனயும் போட்டுத்தள்ளனும் . எப்படி செஞ்சார் என்பதே மிச்ச மீதிக்கதை



இந்த ஆக்சன் பிளாக் எல்லாம் லேடீஸ்க்கு ஒத்து வராது என்பதால் ஓப்பனிங்க் ல  ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சிகள் .  


ஹீரோவா புரட்சித்தளபதி  விஷால். இது அவருக்கு சொந்தப்படம் , எஸ் . தயாரிப்பாளரும் இவரே . எல்லா விஷால் படங்களையும் போலவே  இதிலும்  இவர் பயந்த சுபாவம் உள்ள , அப்பாவியான  பக்கத்து வீட்டுப்பையன் போன்ற தோற்றம் உள்ள ஆள் . பின் பாதியில் இவர் போடும் ஃபைட் காட்சிகள் பொறி பறக்குது .டாய் , டூய் என கத்தல்கள் ஏதும் இல்லாமல் , பஞ்ச் டயலாக்ஸ் ஏதும் பேசாமல் அடக்கி வாசித்திருக்கிறார். 


 ஹீரோயின் லட்சுமிமேனன் . ஹீரோவுடன் இவர் குறும்புப்பேச்சு பேசும் காட்சிகள் அழகு. பாடல் காட்சிகளில் இவர் காட்டும் செயற்கையான உற்சாகமும் , பொருந்தாத  குத்தாட்ட ஸ்டெப்பும் மைனஸ் . ஆனால் இவர்  தன் உடலைவெளிப்படுத்தாமல் அணியும்  உடைகள் , கேமரா கோணம் எப்படி வைத்தாலும் கண்ணீயம் மாறாத தோற்றம் தரும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அபாரம் 


பாரதிராஜா ஜீன்ஸில் கம்பீரமாக வருபவர் கதாபாத்திரத்தின் தன்மை கருதி  இதில் சாதா நடுத்தர அப்பாவாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . . மகனின் இறப்புக்கு கதறும் காட்சியில் அழுகை நடிப்பு அற்புதம் 


வில்லனாக வருபவர் கவ்தம் வாசுதேவ் மேனன் மாதிரி இருக்கிறார் . மிரட்டலான தோற்றம் . விக்ராந்த் சில சீன்கள் வந்தாலும்  நல்லா பண்ணி இருக்கார் 

 புரோட்டா சூரி  ஹீரோவுக்கு நண்பனாக வந்து 6 காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் 



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1. படத்தோட  ஓப்பனிங்க் சீன்லயே கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட்சை உடைப்பது மாதிரி ஒரு இழவு  வீட்டில் ஒப்பாரிப்பாட்டு . அதை அப்படியே குத்துப்பாட்டாக மாற்றி கலக்கல் டான்ஸ் .  ஏலே ஏலே மருது  பாட்டு , ஒத்தக்கடை என  3 பாட்டு  ஹிட் லிஸ்ட்டில் . வெறி கொண்ட நரி பாட்டு சுமார் 


2  கரண்ட் கட் ஆனதும் எல்லோரும் மொட்டை மாடியில்  இருக்கும்போது  சும்மா பில்டப்புக்காக ஹீரோ செல் ஃபோனில் யாரிடமோ பேசி கரண்ட் இப்போ வந்தாகனும் என உதார் விடுவதும் , அப்போ கரண்ட் வருவதும் , ஒரு  தகர டப்பாத்தலையன் ஃபேஸ் புக் ல நான் தான் இதை அப்டேட் பண்ணினேன் அதான் கரண்ட் வந்துச்சு என்பதும் செம கலாய் 



3 படத்தின்  பின் பாதி  ஆக்‌ஷன் காட்சிகள்  அருமை . பாரதிராஜா வில்லனிடம் மாடி விடுவாரோ என பதை பதைப்பை ஏற்படுத்துவதில் இயக்குநருக்கு வெற்றி 



4 இது வழக்கமான ஒரு பழி வாங்கல் கதை தான் என யாரும் சொல்லி விடாத படி திரைக்கதையில் மெனக்கெட்டுஇருக்கிறார் இயக்குநர் , அவருக்கு  ஒரு சபாஷ்


5 ஹீரோ தான் தயாரிப்பாளர் என்றால் ஏகபப்ட்ட பஞ்ச் டயலாக்ஸ் இருக்கும் , தனி  நபர் துதிப்பாடல் இருக்கும் . இதெல்லாம் எதுவுமே இல்லாமல் பார்த்துக்கொண்டது இயக்குநரின் சாமார்த்தியம்  கம் தயாரிப்பாளர் விஷாலின் பெருந்தன்மை .  சபாஷ் 

 
   இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

1. முன் பின் பார்த்திராத  ஃபோனில் மட்டும் அறிமுகம் ஆன காதலியை  சூரி சந்திக்கப்போகிறார். பச்சைக்கலர் சட்டை போட்டுவருவதாகப்பேச்சு . ஆனா மொக்கை ஃபிகரா இருந்தா மாட்டிக்குவே என்று நண்பர்கள் சொன்னதால்  வெள்ளை சட்டை போட்டுட்டுப்போய் ஒரு கிளான்ஸ் பார்த்துட்டு வருவோம் என கிளம்பறாங்க . அங்கே போய் ஆள் நல்ல ஃபிகர் என்றதும் அடடா என ஆதங்கப்படுகிறார்கள் . இது சப்ப மேட்டர் , போகும்போதே கைல பச்சை சட்டை பார்சல் கொண்டு போய் இருந்தா ஃபிகர் லட்டு  ஃபிகரா இருந்தா பச்சை சட்டை போட்டிருக்கலாமே? 



2   ரவுடித்தொழிலும் , அரசாங்கத்துக்கு எதிரான  நிழல் வேலைகள் செய்யும்  ஆளான வில்லன் கேங்க் முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு ஆள்  தரும் அந்த 5 செல் ஃபோனையும் வாங்கிக்குவதும் அவங்க பேசுவதை  ஹீரோ ஒட்டுக்கேட்பதும் காதில் பூ .  


3 ஆக்சன் பிளானில்  விஷால் ஒரு சுரங்கப்பாதையை காட்டி இந்த பாதை 5 கிமீஇருக்கும் இதை அரை மணி நேரத்தில் கடந்துடலாம் . இதே இடத்துக்கு மெயின் ரோட்டில் பைக்கில் போனால் ஒன்றரை மணி நேரம் ஆகும் என்கிறார் . பிளானில் இது முக்கியக்கட்டம். இதில் 2 லாஜிக் மிஸ்டேக் . 

a .  வேகமான நடையில் 25 வயசுப்பையன் நடந்தாலேஒரு கிமீ தூரத்தைக்கடக்க 10  நிமிடம்  ஆகும் , 5 கிமீ கடக்க 50 நிமிசத்துக்கும் மேல்  ஆகும் , ஏன்னா முதல் கிமீ கடந்த அதே வேகத்தில் 2,வது , 3 வது கிமீ கடக்க முடியாது , ஸ்பீடு குறையும் . எபப்டி அரை மணி நேரத்தில் கடக்க முடியு,ம் ? ஓடுனாக்கூட முடியாது 


b  மெயின்  ரோட்டில் பைக்கில் போனால் ஒன்றரை மணி நேரம் ஆகும் அளவு தூரம்னா 60 கிமீ வேகம்னே வெச்சுக்கிட்டாலும்  90 கிமீ தூரம் வருது . என்னதான் மெயின் ரோடு 90  கி மீ தூரத்திலிருந்தாலும் சுரங்கப்பாதை  கிட்டத்தட்ட 18 மடங்கு  கம்மி தூரம் எப்படி வரும் ?  பாதிக்குப்பாதி இருந்தாலே அபூர்வம்  


4  படம்  முழுக்க பல இடங்கள் ல  ஹீரோ அல்லது  ஹீரோவின் நண்பர்கள்  தங்கள் அடையாளத்தைக்காட்டிக்காமல்  வில்லனின் அடியாளை அடிக்க  முகத்தில் கர்ச்சீப் கட்டி வாய் , மூக்கை மறைச்சு ஃபைட் போடறாங்க  இது எப்படி ? ஃபைட் போடும்போது கர்ச்சீப் கழண்டுக்கும்னு தெரியாதா? ஹெல்மெட் போட்டு ஃபைட் போடலாம் , அல்லது வில்லனின் அடியாள் முகத்தை சாக்குப்பையால் மூடி அடிக்கலாம் ( தடையறத்தாக்க வில் வருவது போல் ) , அல்லது இவன் வேற மாதிரி  பட  ஹீரோ மாதிரி முழு முகத்தையும் பெரிய சாக்சால்  மூடி ஃபைட் போட்டிருக்கலாம் 


5  விகராந்த் தைக்கொலை பண்ணும் வில்லனின் ஆட்கள் எதுக்கு அந்த விதவையின் எதிரில் பண்ணனும் ? அப்டியே பண்ணினாலும் நேரடி சாட்சியான அந்தப்பொண்ணை ஏன்  விட்டு வைக்கனும் ? 

6  மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்டில் பாரதிராஜாவால் நியமிக்கப்பட்ட கூலிக்கு கொலை செய்யும் ஆள் அவரை காட்டிகொடுப்பதற்காக செல்லும்போது ஏன் 30 lakhs பணப்பையை எடுத்து செல்ல வேண்டும். அவர்தான் சாகபோகிறார் என்று உறுதியாக அந்த ஆளுக்கு தெரியுமே. வெறும் பணப்பையை மட்டும் எடுத்து சென்றாலே போதும் சுற்றிலும் நிற்கும் வில்லன் ஆட்கள் உடனடியாக மடக்கி விடலாமே. மேலும் 30 லட்சம் பணத்தை வில்லன் ஆட்கள் அவ்வளவு சுலபமாக இன்னொருவன் கையில் கொடுத்து நடக்கவே முடியாத முதியவரை பிடிக்க முயற்சி செய்ய தேவையில்லை. 

 

 

7 . விஷாலின் நெருங்கிய நண்பர் விக்ராந்த் பல நாட்களுக்கு முன்பே இறந்து விட்டாலும் அதை அவரின் காதலி விஷாலுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை. இத்தனைக்கும் விஷால் குடிஇருக்கும் தெருவுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது அவர் வீடு.



மனம் கவர்ந்த வசனங்கள்


1.  பயத்துக்கும் ,பாதுகாப்புக்கும் நூல் அளவு தான் வித்தியாசம்


2 சூரி - என்னது? 11 வருசமா ஒரே செல்போனை யூஸ் பண்றீங்களா? இந்தக்காலத்துல பொண்டாட்டி கூடவே யாரும் அத்தனை நாள் குடும்பம் நடத்தறதில்லை



3 மிஸ்! யார் இவன்? 



என் பிரதர் .


 அடியே.பிரதர் கூட புதர்க்குள்ளே என்ன வேலை? # சூரி ராக்ஸ் 



4  சீக்கிரமா பெரிய ஆள் ஆகனும்னு நினைச்சவன் எல்லாம் சீக்கிரமா காணாம போய் இருக்கான்


5 மிஸ் ! என் பேரு சிவக்குமார்.உங்க.., 


சாரி.ஆல்ரெடி ஐ ஆம் கமிட்டட் .ட்ரை அதர்ஸ் 



6  என்னை டிராப் பண்ணிடறீங்களா?


 ஒரு பிகரை பிக்கப் பன்றதுக்கு முன்னேயே டிராப் பண்ற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும் ? 


7 மிஸ்! பர்ஸ்ட் டைம் உங்களைப்பார்க்கும்போதே பர்ஸ்ட் நைட் நினைவு வருதே ஏன் ?


 யோவ் !!! 


8 என் நாக்குக்கு ஸ்பீடு பிரேக்கர் போடனும் னு நினைக்கறேன் .உங்களைப்பார்க்கும்போது மட்டும் அது முடியல.எதாவது உளறிடறேன்



9 உன் சட்டையை நீயே ஏண்டா கிழிச்சுக்கறே? 



விடுடா,சண்டை ல கிழியாத சட்டை எங்கே இருக்கு ? # விஷால் ராக்ஸ்


10 நாம செய்யற தொழில் ல நமக்கு முன்னால நடக்கறவனை எப்பவும் விட்டு வைக்கக்கூடாது


11   டேய் , நீ எப்போ இங்கே வந்தே? 

 நான் வந்து 6 மாசம் ஆச்சு , கோரிப்பாளையத்தில் இருந்து வந்தேன்

 டேய் நான் கேட்டது இவகூட மொட்டை மாடிக்கு எப்போ வந்தே? 


12  ஒரு லவ் மேட்டரிருக்கு , இன்னும் செட் ஆகலை , ஆனதும் சொல்றேன் 


 சொல் , செட் பண்ணிடலாம் 


 நீ எனக்கு அண்ணனா? மாமாவா? 



13  அட , அவளா / இதுக்கெல்லாம் எதுக்கு பில்டப் , இவளெல்லாம் கூப்ட்டாலே வந்துட மாட்டா? 

 அப்டியா ? கொஞ்சம் திரும்பிப்பாரு கண்ணா , உன் பின்னால தான் நிக்கறா . கூப்பிடு , வருவாளா பார்ப்போம் 


14  உன் கிட்டே பிரச்சனை பண்ண பையன் கிட்டே நான் தான் உன் வீட்டுக்காரன்னு சொன்னியா? 

 வாட் ?

 ஐ மீன்  ஹவுஸ் ஓனர்



 


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. மினிமம் 25 பேர் இருந்தாத்தான் ஷோ போடுவாங்களாம்.இன்னும் 18 பேர் வரனும் ;-))



2 ஓப்பனிங் நல்ல சகுனம்.இழவு வீட்டில் ஒப்பாரி சாங். # பா நாடு


3 ஹீரோயின் கோயில் ல பிச்சை போடுது.அந்த குணத்தைப்பார்த்து ஹீரோவுக்கு லவ் வந்துடுது.உடனே பாட்டு.அபாரம்யா


4 உலக சினிமாக்களில் இதுவரை வராத லொக்கேசன்.மதுரை.ஹீரோ பயந்த சுபாவம். தாதா தான் வில்லன் .ஆஹா அசத்தல் யா 


5 ஒரு பெரிய புதுமை.மதுரை ல கதை நடக்குது.ஆனா புதுக்கோட்டை அருகே உள்ள திருமயம் கோயில் ல ஷுட்டிங் .இந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லிடாதீங்க



6 விஷால் - லட்சுமி மேனன் ரொமான்ஸ் காட்சிகள் அழகு.சுசீந்தரன் டச்.கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் # லட்சுமிமேனன் வாழ்க
 



பின்னால் முடிச்சு போட்ட இஸ்பேட் மாடல் ஓப்பன் ஜாக்கெட் டிசைன் ஒளிப்பதிவாளருக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு போல.எப்பவும் கேமரா முதுகில்


8  பாண்டிய நாடு @ இடைவேளை.பார்த்த வரை ஓக்கே .பழைய கதை தான்.திரைக்கதை ஓக்கே .சுசீந்தரன் ராக்ஸ்

9 விஷால் ன் அண்டர் ப்ளே ஆக்டிங் குட்.சூரி மொக்கை போடாமல் இருப்பதும் ஒரு பிளஸ்.

10 ராஜபாட்டை யில் சறுக்கியவர் இதில் எழுந்துடுவார்னு தோணுது # சுசீந்தரன் ( ஆதலால் காதல் செய்வீர் ல சுதாரிச்சுட்டார்)

11  பாடல் காட்சிகளில் லட்சுமி மேனன் ன் கண்ணியமான ஆடைகள் ஆச்சரியம்.நஸ்ரியா வுக்கு அக்கா போல நற நற


12  ஒரு தயாரிப்பாளராக விஷாலுக்கு இது ஒரு வெற்றிப்படமே! ஆனால் ஒரு நடிகராக சராசரிப்படம் தான்.




சி பி கமெண்ட் -பாண்டியநாடு - அண்ணனைக்கொன்ற ரவுடியைப்பழி வாங்கும் மாமூல் கதை. முன் பாதி சுமார் , பின் பாதி ஸ்பீடு , பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் இருக்கு . ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-41


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 2.75   / 5