Friday, October 18, 2013

3001 வது பதிவு -தரைல படுத்த வாக்கில லேப்டாப்பில் நெட் யூஸ் பண்ணத்தெரியுமா உங்களுக்கு ?

1. எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் திட்டம்தீட்டி செயல்படுகிறேன் - ஜெ # தலைவா வைத்தடை பண்ணுனு சொன்னதும் புரட்சித்தலைவர் தானா?


===============


2 டைரக்டர் ஆகிறார் இசைஞானி இளையராஜா! #,டைட்டில் ராஜாவின் ராஜாங்கம்?



====================


3 புகையிலைக்கு வரிவிலக்கு அளித்து பீகார் அரசு உத்தரவு.# ஏகப்பட்ட முகேஷ் உருவாகப்போறாங்க.



=====================


4 குஜராத் ஆஸ்பத்திரியில் ஆசாராம் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை..# ஹாஸ்பிடலில் இருக்கும் லேடி டாக்டர்ஸ் ,நர்ஸ் ஜாக்கிரதை.



=====================


5 டைரக்டர் பாலா படத்தில் நடிக்க எம் சசிகுமார் ஒப்பந்தம் ஆனார் # படம் முடியும்போது சசி மட்டும் தான் மிஞ்சும்.குமார் இருக்காது



============


6 //1,000 வழக்கு போட்டாலும் பயப்படமாட்டேன்: விஜயகாந்த் ஆவேசம்// # ஸ்டெடியா தான் நிக்கறாரு.ஆனா கால் மட்டும் ஏன் கிடு கிடு னு நடுங்குது?



=====================


7 மக்கள் பிரச்சனையை பேசினால் குடித்துவிட்டு பேசுகிறேன் என்கிறார்கள்: விஜயகாந்த் # குடிமக்களுக்கு பிரச்சனையே இல்லாம பார்த்துக்கும் அரசாச்சே?



===================


8 முதல் குற்றவாளி பிரதமர்தான்! பி.சி.பரேக் # ஸ்கூல் ல படிக்கும் காலத்துல இருந்தே அவர் எல்லாத்துலயும் முதல் ல வருவாராம்



====================


9 ஜில்லா -் ஐப்பானில் காஜலுடன் விஜய் டூயட் # ஜப்பானில் கல்யாணராமன் படத்துக்குப்பின் விஜய் தான் ஜப்பான் போய் இருக்கார்.நல்ல ராசியான இடம்



=======================


10 அதிமுக இணைய அணி விரைவில் தொடக்கம்# தரைல படுத்த வாக்கில லேப்டாப்பில் நெட் யூஸ் பண்ணத்தெரிந்தோர் கவனிக்க"




======================= 



11 திமுகவுக்கு ஆதரவு குறித்து சோனியா முடிவெடுப்பார் - நாராயணசாமி # 15 நாளில் ங்கறதை விட்டுட்டீங்க போல



=======================



12 திமுகவில் புதிய பதவி எதுவும் கேட்கமாட்டேன்’-.அழகிரி # அம்மா தாயே! பழைய பதவி ஏதாவது இருந்தா குடுங்கம்மா.இவரு ரொம்ப ஏழரைங்க.சாரி ஏழைங்க



========================


13 ரஜினி தான் முன்னுதாரணம் : அனிருத்: # கமலைச்சொன்னாலாவது நம்பலாம்.ரஜினி அப்டி எல்லாம் இதுவரை படத்துல கூட லிப் கிஸ் பண்ணதே இல்லையே?




=======================



14 என்னை பக்குவப்படுத்தியது பார்த்திபன் : பூர்ணா # பரிபூரணா ஆகிட்டீங்களா?


===================


15 திமுகவை அழிப்பேன் -ஜெயலலிதா# ஏழை மக்களுக்கு எத்தனையோ துயர்கள் இருக்கு.அதை அழிக்கப்பாருங்கம்மா



=====================


16 ரயிலில் உறங்கும் பெண் தன் ஆடை விலகல் பற்றி கவலை கொள்ளத்தேவை இல்லை அருகில் விழிப்புடன் அவள் அன்புக்கணவன் உடன் இருந்தால்



===================


17 இளம்நடிகர்களை விட வெங்கடேஷின் பவர் அதிகம். -அஞ்சலி # நீங்க சொன்னா அது சரியாதான் இருக்கும்,பலரோட நடிச்சு இருக்கீங்க


====================


18 திமுகவை அழிப்பதே லட்சியம்-ஜெயலலிதா # ஆஹா! இதுவல்லவொ லட்சியம். இந்த லட்சணத்துல பிரதமர் பதவிக்கு ஆசை வேற




=====================



19 மோடி பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் -அத்வானி #  நான் உள்ளுக்குள்ள கடுப்புவர்த்தி, ஆனா வெளியில மிடுக்குவர்த்தி - அத்வானி மைன்ட் ரிங்க்டோன்
 




========================


20 வீட்டோட மாப்பிள்ளை தேடும்  டாப்ஸி! #  மேடம், நீங்க தான்  ஷூட்டிங்க் வந்துடுவீங்களே, அவர் வீட்ல என்ன செய்வாரு?
 




=============================

Thursday, October 17, 2013

அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் -முடிவுக்கு வந்த அமெரிக்க நிர்வாக நெருக்கடி

முடிவுக்கு வந்தது நிர்வாக முடக்கம்: மசோதாவில் ஒபாமா கையெழுத்து

 

 

16 நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க நிர்வாக நெருக்கடி முடிவுக்கு வந்தது. நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிட்டால் அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதா நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். 


இந்நிலையில்,கெடு முடிவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்க மேலவை. 


ஆளும் ஜனநாயக கட்சியும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியும் நிதி நெருக்கடியைத் தீர்க்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2014- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதாவை நிறைவேற்ற குடியரசு கட்சி உடன்பட்டுள்ளது. கடனுக்கான உச்சவரம்பு 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்களாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. 


இதனால், கடந்த 16 நாட்களாக மூடப்பட்டிருந்த அரசு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நெருக்கடி ஏன்? 

 
அமெரிக்காவில்,அக்டோபர் 1-ல் நிதியாண்டு தொடங்கிய நிலையில் புதிய பட்ஜெட்டுக்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், அரசு செலுவுகளை சந்திக்க நிதிபற்றாக்குறை ஏற்பட்டதால், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஊதியம் இல்லாத விடுப்பில் செல்ல நேரிட்டது. 


மேலும், அக்டோபர் 17-ம் தேதிக்குள் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பும் உயர்த்தப்பட வேண்டும். இல்லையெனில் அமெரிக்கா கடும் நிதிநெருக்கடியை சந்திக்கும் சூழலும் ஏற்பட்டது. 


அமெரிக்க நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காண எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தினார். 



இரு கட்சிகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்த சிக்கலுக்கு தீர்வு எட்டப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்பு தெரிவித்துள்ளார். 

thanx - the hindu 


நாலாவதா ஒரு சக்களத்தி

1.நிலக்கரி சுரங்க முறைகேடு: குமார் மங்கலம் பிர்லா மீது சி.பி.ஐ. வழக்கு # மங்கலம் பிர்லாவுக்கு மங்களம் பாடிட்டாங்களா?பேர்லயே LAW இருக்கே



=================


2 நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற செய்தி வதந்தி- சிவகுமார் # நல்ல வேளை ,சூர்யா ,கார்த்தி எல்லாம் டெபுடி CMமாகிடுவாங்க்ளோனு பயந்துட்டேன்


=====================


3 22 Female Kottayam' இயக்குநர்ஆஷிக் அபு, நடிகை ரீமா கல்லிங்கல் அடுத்த மாதம் திருமணம் # மேரேஜ்க்குப்பின் அவர் இவரை டைரக்‌ஷன் பண்ணுவார்




===================




4 கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூன்றாவது அணி திட்டம்: ஜெயலலிதா தலைமை ஏற்பாரா? # நெம்பர் ஒன்னா வர நினைப்பவர் எப்படி 3 வது க்கு ஓக்கே சொல்வாரு?




====================




5 மோடி பிரதமராக ஆதரிக்க மாட்டேன்: -நவீன் பட்நாயக்   # நாயக் நஹி , கல் நாயக் ஹை தும்






=====================




6  குடியரசுக் கட்சியின் திட்டத்தை நிராகரித்தார் ஒபாமா - அதிர்ச்சியில் அரச ஊழியர்கள் # கவர்மென்ட் ஜாப் மாப்ளைக்கும் அடிசறுக்கும்


=====================


7 நடிகர் ஷ்யாம் மனைவிக்காக அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறினார் # மனைவி கணவனுக்காக அசைவத்துக்கு மாறி இருந்தா காமெடியா இருக்கும்


====================


8 கும்பகோணம் -

 பாம்பு புகுந்ததாக கூறி வீட்டினுள்
 நுழைந்து 3 பவுன் சங்கிலி பறிப்பு: # திருடன் கூட வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கிறானே




=======================


9 சங்கரன் கோவில் மாஜி எம்.எல்.ஏவின் துப்பாக்கி மாயம்... வலை வீசி தேடும் நூற்றுக்கணக்கான போலீஸ் # துப்பாக்கின்னாலே பிரச்சனை தான் போல


=====================


10 2016ல் வன்னிய ஆட்சி மலர்வதை யாராலும் தடுக்க முடியாது-ராமதாஸ் # அன்னைக்கு ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு இவர்ட்ட இல்லை.2006,2011,2016



=====================


11 திருவான்மியூரில் துணிகரம் பூட்டிய வீடுகளுக்குள் நுழைந்து குடும்பத்தோடு தங்கி கொள்ளை

# அவங்க பேமிலி திருடன் போல



=======================


12 க்ரிஷ் 3 ஹிந்திப்படம் தீபாவளி ரிலீஸ் # ஆல்ரெடி 3 பொண்டாட்டிங்க தங்கவே இடம் இல்லையாம்.நாலாவதா ஒரு சக்களத்தி வந்தாளாம்



=====================


13 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு முடிவுகட்டுவோம்!: ஜெ # பின்னே நீங்க அவருக்கு முடி சூட்டி விடுவீங்கன்னா எதிர் பார்க்க முடியும்?


=====================


14 வரும் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் - ஸ்டாலின் # டெபாஸிட் வாங்கறதுலதானே?


================


15 அமெரிக்க ஆயுத கப்பலை விடுவிக்க முடியாது - GKவாசன்# சைக்கிள்காரன்ட்டயே லைசன்ஸ் கேட்கற போலீஸ் கிட்டே கப்பல் சிக்கிட்டா கம்முனு இருப்பாரா?



=====================


16 டெல்லி: - பாஜகவுக்கு அதிக இடங்கள்- கருத்துக் கணிப்பு # மேரேஜ் டேட்டே இன்னும் பிக்ஸ் ஆகல.அதுக்குள்ளே முதல் இரவு ரிசல்ட் கேட்டானாம்



=====================


17 நான் MP பதவிகேட்டு வரவில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டேன்-S.V.சேகர் # கேட்டாலும் கிடைக்காதுன்னு அவங்களும் தெளிவா சொல்லி இருப்பாங்களே?



=====================


18 பஞ்ச் டயலாக்கா.ம்ஹூம்..நான் பேச மாட்டேன்!- கதாசிரியர்களுக்கு அஜீத் போட்ட கண்டிஷன் # ஜெ ஆட்சி ல எல்லாரும் ரொம்ப அடக்கி வாசிக்கனும் போல



====================


19 குஜராத்தில் அத்வானி; நரேந்திர மோடியுடன் சந்திப்பு!# மனசுக்குள்ளே அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக்.வெளில சிவகார்த்திகேயன் தனுஷ் மாதிரி



=====================


20 மோடி ஒரு நீர்க்குமிழி தேர்தலுக்கு முன் உடைந்து விடும்: கபில்சிபல் # சினிமாவுலயே நீர்க்குமிழி செம ஹிட் ஆகும்போது அரசியல்ல ஆகாதா?


============================

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பிரதமரும் குற்றச்சதி புரிந்தவரே: -சர்ச்சை

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பிரதமரும் குற்றச்சதி புரிந்தவரே: முன்னாள் செயலர் பரேக் கருத்தால் சர்ச்சை



நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் கருத்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முடிவுகளில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் நேர்மையாகவும் சரியாகவுமே முடிவுகளை எடுத்தோம். இதில் குற்றச்சதி இருப்பதாக சிபிஐ நினைப்பது ஏன் என்றே தெரியவில்லை.


ஆனால், ஒருவேளை குற்றச்சதி இருப்பதாக கருதினால், இதில் பலரும் பல்வேறு வகையில் குற்றச்சதி புரிந்தவர்களே. பிரதிநிதி என்ற வகையில், கே.எம்.பிர்லாவும் ஒரு குற்றச்சதி புரிந்தவர், இந்த விஷயத்தை ஆய்வு செய்து பரிந்துரைத்த வகையில் நானும் குற்றச்சதி புரிந்தவர், இறுதி முடிவு எடுத்தவர் என்றவர் என்ற வகையில் நிலக்கரி சுரங்கத் துறை அமைச்சராகவும் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் மூன்றாவதாக குற்றச்சதி புரிந்தவரே.


எனவே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் குற்றச்சதி இருப்பதாக சிபிஐ கருதினால், பிர்லாவையும் என்னையும் மட்டுமே ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? பிரதமரையும் சேர்க்க வேண்டுமே. ஒரு குற்றச்சதி நடந்திருந்தால், அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே பங்கு இருக்கிறது அல்லவா?" என்றார் பரேக்.


பாஜக வலியுறுத்தல்


நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் வெளியிட்டுள்ள கருத்து, மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வழக்கில், நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகம் மீதான நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். பரேக்கின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரீசிலிக்க வேண்டும்" என்றார்.


சி.கே.பிர்லா, பரேக் மீது சிபிஐ வழக்குப் பதிவு


முன்னதாக, நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமார் மங்கலம் பிர்லா (46), நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பரேக் ஆகியோர் மீது சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்தது.


மும்பை, டெல்லி, ஹைதராபாத், புவனேஸ்வரம் உள்ளிட்ட 6 இடங்களில் பிர்லா நிறுவன அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1993 முதல் 2010 வரை நாடு முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஒரு லட்சத்துக்கு 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) சுட்டிக் காட்டினார்.


நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஆதாயம் பெற்ற நிறுவனங்கள் மீதான விசாரணையை வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால், நிலக்கரித் துறை முன்னாள் அமைச்சர் தாசரி நாரயண் ராவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

THANX - THE TAMIL HINDU

READERS VIEWS

1. மெளனத்தை கலைத்துவிடுங்கள்(மனதுக்குள் குமறி அழுவது தெரிகிறது)பிரதமர் அவர்களே ஒருவர் என்னடா நான்சென்ஸ் என்று கூறுகிறார்(தலைசிறந்த பொருளாதார மேதை கையை கட்டி போட்டுவிட்டார்கள்) இப்படி தேவையா ஒரு பதவி நீங்கள் பின்ன நாளில் ஒரு சுயசரிதம் எழுதுவீர்கள் என்பது என் திண்ணம் அப்பம் தெரியும் இவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பது நிச்சயம்

2  படித்தவன் ஏமாற்றினால் ஐயோ என்று போவன் பாரதி . நிலக்கரி ஊழல் செய்தவர்கள் கதியும் அப்படித்தானே ஆகும்


3  மிக நல்ல பிரதமர். எல்லோரும் ஊழல் செய்த பிறகு, கடைசியாகச் செய்துள்ளார். லாலுவிற்கு தண்டனை கொடுத்தும் அவர் சிறை செல்லவில்லை. அதுபோல் இந்த குற்றச்சாட்டும் விசாரிக்க பல வருடங்களாகும்.


4  என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று பாரதி பாடியது போல் என்று முடியும் இந்த நிலக்கரி ஊழல் விசாரணை? கலியுகம் முடிவதிர்க்கு முன்?



Wednesday, October 16, 2013

‘ஆரம்பம், -400+ , ஆல் இன் ஆல் அழகு ராஜா 300 + -தீபாவளி ரேஸ் - டிரைலர் @ THE TAMIL HINDU

அஜித்தின் ‘ஆரம்பம், கார்த்தி யின் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா', விஷாலின் 'பாண்டிய நாடு' ஆகிய மூன்று படங்கள் தீபாவளி ரேசுக்கு தயாராகி நிற்கிறது. இந்த மூன்று முன்னணி நாயகர்களின் முந்தைய படங்கள் வசூலில் கொஞ்சம் பின்தங்கியதால் தீபாவளிக்கு வெற்றிச் சரவெடி அடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் தீபாவளிக்காக இப்படம் எப்படி தயாராகி வருகிறது என்று ஒரு சிறிய முன்னோட்டம். சினிமா பாஷையில் சொன்னால், டிரைலர்.

'ஆரம்பம்' படத்தில் நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா
ஆரம்பம்


அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா என ஒரு நட்சத்திர பட்டா ளத்தைக் கொண்டு விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் படம். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அக்டோபர் 31ம் தேதியே வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அஜித் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். இதனால் ‘தல’யின் மாறுபட்ட கதாபாத்திரத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக இருக்கி றார்கள். இறுதிக்கட்ட இசைக் கோர்ப்பு பணிகள் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு படத்தை திரையிடும் வேலைகள் நடந்து வருகின்றன.


அதே நேரத்தில் இப்படத்துக்கு ஒரு சிக்க லும் காத்திருக்கிறது. ஏ.எம்.ரத்னம் 'கேடி' படத்தினை தயாரித்த போது வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதற்கு “படத் தின் தயாரிப்பாளர் நானில்லை. ரகுராம் தான்.” என்று கூறிவருகிறார் ஏ.எம்.ரத்னம்.


பொதுவாக அஜித் படம் என்றாலே வெளியான 4 நாட்களுக்குள் கல்லாப் பெட்டியை நிரப்பிவிடலாம். இதனால் இந்தப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவிவந்தது. இறுதியில் என்.எஸ்.சி ஏரியாவை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியது. 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிக்கல் இல்லாமல் வந்தால் இப்படம் ‘தல’ ரசிகர்களுக்கு தீபாவளி விருந்துதான்.

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை காஜல் அகர்வால்
ஆல் இன் ஆல் அழகுராஜா


பாக்ஸ் ஆபிசின் சமீபத்திய செல்லப் பிள்ளை கார்த்தி. இதனால் இப்போதே ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வுக்கு 300 திரையரங்குகள் கிடைத்திருக்கிறது.


கார்த்தி, காஜல், சந்தானம், பிரபு, சரண்யா பொன்வண்ணன் நடிக்க 'காமெடி சரவெடி' இயக்குநர் ராஜேஷ் இயக்கியிருக்கும் படம். ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். காமெடி வகை படங்களில் மகுடம் சூட்டிய ராஜேஷ் இப்படத்தில் இருப்பது கூடுதல் பலம். சந்தானம் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நகைச்சுவை ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் என்கிறது படக்குழு. படத்தொகுப்பு வேலைகள் முடிந்து, இதர பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறன.


 படத்தின் விநியோக உரி மையை பொறுத்தவரை எந்தொரு பிரச்னையுமில்லை. இதுவரை சுமார் 300 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு 50 திரையரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அனைத் துமே முடிவு செய்தப்படி நடைபெற்றால் நவம்பர் 1ம் தேதி காமெடி சரவெடியாக அனைத்து இடங்களிலும் வெடிக்க இருக்கிறான் இந்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா'
'பாண்டியநாடு' படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை லட்சுமி மேனன்

பாண்டியநாடு


விஷால், லட்சுமி மேனன், பாரதிராஜா நடிக்க சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம். விஷால் முதன் முறையாக இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். படத்தினை வேந்தர் மூவிஸ் வெளியிட முடிவு செய்திருக்கிறது. பொள்ளாச்சி யில் இப்போதுதான் படப்பிடிப்பு முடிந்து, இசை வெளியீடும் முடிந்திருக்கிறது. படத்தின் எடிட்டிங், இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி நெருங்கிவிட்டதால் படத்தின் பணிகள் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது.


thanx - the tamil hindu

Elysium (2013) - சினிமா விமர்சனம்


.

செவ்வாய் கிரகத்திலும் வாழலாம் என்று நிரூபிக்கப்பட்டு, இப்போது அங்கு வாழ அட்வான்ஸ் புக்கிங் செய்யும் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது


 ஒரு புதிய உலகம், சொர்க்கம் போன்ற அனுபவம் எவ்வித வியாதியையும் தீர்க்கக் கூடிய மருத்துவ வசதி கொண்ட தேவலோகம் (மானுடனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு) படம் தொடங்கும் முதல் பதினைந்து நிமிடங்களிலேயே கண்டிப்பாக இயக்குனர் ஏதோ வித்தயாசமாக சொல்லப் பார்க்கிறார் என்ற ஓர் எதிர்பார்ப்பு எழுகின்றது.

சிறு வயதிலிருந்தே எலைஸியம் எனப்படும் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்பதுதான் கதாநாயகன் மேட் டேமனின் லட்சியம். இதற்காக ஒரு பெட்டிதீஃபாக மாறி காசுகளைச் சூறையாடுகிறார். ஹீரோவின் சிறு வயது ஜிகுரி தோஸ்த் தான் நாயகி அலைஸ் பிராகா.




எலைஸியம் பணம் படைத்தவர்களின் உலகமாய் மாற, இச்செல்வந்தர்கள் வாழ்க்கை நடத்த, சாதாரண மனிதர்கள் அமெரிக்காவில் அடிமைகள் போல் ட்ரீட் செய்யப்படுகின்றனர். அதில் ஒருவராய் ஹீரோ, லாஸ் ஏஞ்ஜல்சில் நடக்கும் ஒரு பாதி கதைக்களம்.  ரோபோட் உற்பத்தி செய்யும் இடத்தில் நாயகன் வேலை பார்க்கிறார். ஒரு முறை ஹீரோ மைனிங் அறையில் மாட்டிக் கொண்டு, அதிகமான ரேடியேஷனால் தாக்கப்பட்டு, கடும் பாதிப்பை அடைகிறார்.  ரேடியேஷன் தாக்குதலால் வெகு சில நாட்களுக்குள் உயிர் இழக்கும் சூழல் நாயகனுக்கு. அதற்குள் எப்படியாவது எலைஸியம் போய் தன் நோயை தீர்த்து உயிரை காத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நாயகன் தவிக்கிறார்.

இதன் பின் மேட் டேமன் எலைஸியம் சென்றாரா உயிர் பிழைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.


முதலில் ஏதோ நடக்கும் ஏதோ நடக்கும் என்று தோன்ற வைக்கும் திரைக்கதை, கடைசி வரை ஏதோ வித்தியாசமாக நடக்கும் என நம்ப வைத்தே கடுக்காய் கொடுக்கிறது. க்ளைமாக்ஸ் வந்தவுடன் என்னது சிவாஜி செத்துட்டாரா? என்ற அனுபவத்தையே தருகின்றது க்ளைமாக்ஸ்.

கதையில் ஹீரோ போய் எலைஸியம் ரீச் பண்ணுவாரா? இது ஒரு முதல் நாட், அப்படி சேருவார் என்றால், அது எப்படி சாத்தியம்? இது தான் கதையின் மையமா என்றால் அதுவும் பெரிசா சொல்லப்படலை. ஒரு பக்கம் ஜோடி பாஸ்டர் எலைஸியமின் பிரஸிடண்ட் ஆக பல சகுனி வேலைகள் செய்கிறார். சரி இது அரசியல் நையாண்டியாக இருக்குமோ!! என்று நினைத்தால் அதுவும் நடக்கலை. கடைசியில் ஏதோ பழைய படங்களில் டைரிக்கு சண்டை போடுவது போல் ஒரு சிப்பிற்கு சண்டை போட்டு, வாரி வாரி விழுகிறது திரைக்கதை.



படத்தை பொருத்தவரை நிறைய இடங்கள் துகள்களாக ரசிக்க வைக்கிறது. இயந்திர உலகத்திலே மெஷின்கள் நம்மை ஆளப்போகும் காலம் வெகு தூரம் இல்லை என்பதை சொல்லாமல் உணர்த்தும் காட்சிகள். வெளிநாடு செல்ல இசைவு விசா இன்றி வாழும் மனிதர்களைப் போல் வேற்றுலகம் செல்ல விசா இன்றி வாழும் மனிதர்களை காட்டியிருப்பது அழகிய கற்பனை.

என்னதான் இப்படி துகள்களாக சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், மைய அஸ்திவாரம் ஆட்டம் கண்டிட கடைசியில் அதிருப்தியே மிச்சமாகிறது.

ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படத்தில் காணப்பட்ட பிரம்மாண்டம் இல்லை, சரி! க்ருஸ்டோபர் நோலான் படத்திலிருப்பது போன்ற அட்டகாசமான கதைக்களம்.. அதுவும் இல்லை. சரி!!! ட்ரான்ஸ்பார்மர்ஸ் இயக்குனர் ‘மைக்கேல் பே’ படத்தில் காணப்படுகின்ற மசாலா பாக்டர் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.



வில் ஸ்மித் ‘ஐ ரோபோட்’ இருபது வருடங்களுக்கு முன் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் ‘டெர்மினேட்டர்’ கொடுத்த திருப்தியில் கால் சதவீதம் கூட எலீஸியத்தில் கிடைக்கவில்லை.

மொத்தத்தில் எலைஸியம் – இது சொர்க்கத்தின் வாசற்படியும் அல்ல, நரகத்தின் படுகுழியும் அல்ல, திரிசங்கு சொர்க்கம்.  

  • நடிகர் : மேட் டேமன்
  • நடிகை : அலைஸ் பிராகா
  • இயக்குனர் :நெய்ல் புளோம்காம்ப்
நன்றி : தினமலர்

அண்ணனுக்கும் எட்டாது ,தம்பிக்கும் எட்டாது அது என்ன?

எறும்பீசர் கோவில்(திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தான்)
எறும்பீசர் கோவில்
1. தனுஷ் - மாமா.என் படத்தை எல்லாரும் நக்கல் பண்றாங்க.



ரஜினி - அதே வேலையை டிசம்பர் 12 க்குப்பின் என்னைப்பார்த்து செய்வாங்க


======================


2 மேடம்.அனிரூத் இசை உங்களுக்குப்பிடிக்குமா? 



ஆண்ட்ரியா - மவுத் ஆர்கன் நல்லா வாசிச்சாரு.ஐ லைக் இட்


==========================


3 ஆரம்பம் ட்ரெய்லர் ல அஜித்துக்கு மஞ்சள் பூசியதும் திருப்பாச்சி விஜய் மாதிரி ஆக்கிடுவாங்க்ளோனு பயந்தேன்.நல்ல வேளை நாயகன் கமல் ஆக்கிட்டாங்க



========================


4 சார்.படம் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கா?



அஜித் - சொன்ன தேதில ரிலீஸ் ஆகி வசூலை அள்ளிப்போகத்தான் வாய்ப்பிருக்கு



======================


5 அனிரூத் - நம்ம மேட்டரை வெளில சொல்லிடலையே? 



ஆன்ட்ரியா - நீங்க எங்கே வாயைத்திறக்க விட்டீங்க # லிப் லாக்


======================


இனிய காலை வணக்கம் நண்பர்களே...


6 ஆரம்பம் ப்ரொமோல ஆர்யா பேசினாரு.டைரக்டர் பேசினாரு.நீங்க பேசவே இல்லையே?



அஜித் - துப்பாக்கி வெச்சிருக்கறவன் பேசிட்டு ருக்க மாட்டான்


======================


7 என்னை பழிவாங்கிய தனுஷுடன் இனி நடிக்க மாட்டேன் - நஸ்ரியா ஆவேசம் # மக்களை மடையர்கள் ஆக்குறவங்க யாரா இருந்தாலும் அவங்க கதி அதோகதி தான்


======================


8 தலைவா வைத்தொடர்ந்து சன் டி வி ஆல் இன் ஆல் அழகுராஜாவை பிரமோட் பண்ணுது.வாழ்த்துகள்


=========================


9 துளசி அதுக்குள்ளே பழசி ஆகிடுச்சே.அய்யகோ


========================


10 கோயில் னாலே அது இந்துக்கோயில்தான்னு சிலர் நினைச்சுட்டு இருக்காங்க.இதயக்கோயிலும் இருக்கு.


=====================




Photo: எல்லைமீறுவதற்கென்றே 
எழுதிவைக்கப்பட்ட 
விதிமுறை 
நீ...



11 டிவிட்டருக்கு மட்டும் சூப்பர்வைசர்னு ஒருத்தர் இருந்தா நேரம் காலமே இல்லாம இப்டி கடலை போட்டுட்டிருக்கீங்களேனு புலம்பி இருப்பாரு



====================


12 சின்ன வீட்டைக் கட்டிப் பார் ,மச்சினியை மடக்கிப்பார்


===================


13 தனக்கு வேண்டப்பட்டவர் மேல் குறிப்பிட்ட காலத்தில் அளவு கடந்த அன்பைக்காட்டும் அதே பெண்் வேண்டியதில்லை என்றதும் அதீத வெறுப்பையும் காட்டுவாள்


====================

14  ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட் அழகா இருந்தா அந்த ஆபிசில் ஒர்க் பண்றவங்க எல்லாம் பங்க்சுவாலிட்டி பரமசிவம் ஆகிடுவாங்க



=====================

15 ட்வின்ஸ் சிஸ்டர் ல ஒருத்தியை லவ் பண்றதுல என்ன அட்வான்ட்டேஜ்னா ஆளை மாத்தி கிஸ் அடிச்சுட்டு சாரி அடையாளம் தெரிலனு சமாளிக்கலாம்


=======================


வாய்மொழிகளைத்தாண்டி
நமக்காய் வாய்க்கும் மொழி
முத்தம்...



16 கார்த்தி படத்தைப்பார்த்து பயந்து அஜித் ரிலீஸ் டேட்டை தள்ளிப்போட நினைக்கிறார் என்பதும் டி ஆரைப்பார்த்து ஜெ பயப்படறாரா என்பதும் 1



=====================


17 எத்தனை ஹிட்ஸ் கொடுத்தாலும் அஜித் ,விஜய் ன் ஓப்பனிங் மாஸ் பீட் பண்ண கார்த்தி ,சூர்யா வால முடியாது


====================


18 அண்ணனுக்கும் எட்டாது ,தம்பிக்கும் எட்டாது # மாஸ் ஹீரோ .கனவு


=================


19 அன்பே உன் பார்வை ஒரு மின்சாரம் என்றால் உன் கண்கள் வெப்பன் சப்ளையர்தானே?



===================


20 இன்று உலக .பணக்கார மாப்ளை சிக்கியதும் சின்சியர் சிகாமணி காதலனை பொண்ணுங்க கை கழுவி.விட நல்ல நாள் ( 15 10 13 )


=========================



Photo: இந்த மழை மண் வாசனைக்கு பதில் உன் வாசனை தருவதேன்.