Saturday, October 05, 2013

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் பேட்டி @ ‘தி இந்து’ தமிழ்

தமிழருவி மணியன் 
 
 
காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவுக்காக மதுரை வந்திருந்த தமிழருவி மணியன், தமிழகத்தில் பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க.வைக் கொண்டு மாற்று அணியை அமைப்பேன் என்று அறிவித்திருக்கிறார். அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள சூழலில், ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி: 


மூன்றாவது அணி இல்லை 

 
தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க., அ.தி.மு.க. என்ற தீமைகளிடம் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான மாற்று அணி. இதுவரையில் அமைந்த மூன்றாவது அணிகள் எல்லாம், தேர்தல் நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காமல், வெளியே தள்ளப்பட்டு, கடைசியில் வேறு வழியே இல்லாமல் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட அணிகள். அந்த அணியின் மொத்த வாக்கு வங்கி 10 சதவீதம்கூட கிடையாது என்பதால், தமிழக மக்கள் அதை உதாசீனப்படுத்தி விட்டனர். 


இன்றைய நிலவரப்படி, அ.தி.மு.க. அணிக்கு 30 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அணிகள் எல்லாம் சேர்த்தே 20 சதவீத வாக்கு வங்கிதான் இருக்கிறது. எனவே நான் அமைக்கிற மாற்று அணிக்கு குறைந்தது 30 சதவீத வாக்கு வங்கி இருக்க வேண்டும் என்று விரும்பினேன். மோடி பிரதமராக வேண்டும் என்று 15 சதவீதம் பேர் விரும்புகின்றனர். மதுவுக்கு எதிரான நடைப்பயணத்துக்குப் பிறகு பெண்கள் ஆதரவு அதிகரித்துள்ளதால், ம.தி.மு.க.வுக்கு 10 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தே.மு.தி.க.வுக்கு 10 சதவீத வாக்குகள் இருப்பது ஏற்கெனவே நிரூபணமாகி உள்ளது. எனவே, இந்த அணியை மக்கள் புறக்கணிக்க மாட்டார்கள். 


மோடியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை 

 
நான் மோடியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. ஊழலற்ற, நிர்வாகத் திறமையுள்ள ஆட்சியை அவரால் மட்டுமே தர முடியும் என்று ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையை, மோடி என்ற பிம்பத்தை தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறேன், அவ்வளவு தான். 



வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் அல்ல. மோடிக்கும் ராகுல் காந்திக்கும் அல்ல. மோடிக்கு போட்டி அவரேதான். மோடி வளர்ச்சியின் நாயகன் என்று பா.ஜ.க. சொல்கிறது. அவர் மதவெறி பிடித்தவர் என்று காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் சொல்கின்றனர். ஆக, நாயகனும் மோடிதான். வில்லனும் மோடிதான். இந்தியாவில் இப்படியொரு ஜனநாயகக்கூத்து நடப்பது வேடிக்கையாக இருக்கிறது. 53 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி, தங்கள் சாதனையைச் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாதது வேதனையாக இருக்கிறது. 



சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே அணி… 

 
இதே அணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது சாதாரண காரியம் அல்ல. தான்தான் முதல்வராக வேண்டும் என்று விஜயகாந்த் நினைப்பார். வைகோ முதல்வராக வேண்டும் என்று அவர் நினைக்காவிட்டாலும்கூட, நாங்கள் விரும்புவோம். இந்த மாற்று அணியின் செயல்பாடு, வைகோவை முதல்வராக்குவதை நோக்கியே இருக்கும் என்றார் தமிழருவி மணியன். 

 மக்கள் கருத்து

1. தமிழருவி மணியன் அவர்கள் நாட்டு நலனில் பற்றும் பாசமும் கொண்டவர் . அவரது கனவு நிறைவேற வேண்டுகிறேன்.

  • Vai.Rajendran
    தமிழருவி மணியன் அவர்கள் நாட்டு நலனில் பற்றும் பாசமும் கொண்டவர் . அவரது கனவு நிறைவேற வேண்டுகிறேன்.
    about 16 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • K.SILAMBARASAN
    வைகோவை முதல்வராக்கு
    about 18 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • kupendran
    முகவரி அற்றவர்களுக்கு இன்னொரு முகவரியற்ற RSS ன் முகமூடியான மோடி கிடைத்துள்ளார் . இந்த மோடியை பாமர மக்கள் அறிய மாட்டார்கள். இந்த மோடியை எந்த நியாயவானும் ஆதரிக்க மாட்டான். இவர் நடத்திய போலி என்கவுண்டர்களை எவரும் மறக்க வில்லை. பிரதமர் பதவி என்பது புனிதமானது. அது கொலை கரை படிந்ததாக இருக்க கூடாது. பாரத மாதா மன்னிக்க மாட்டாள் . மக்கள் அமைதியையும் வளர்ச்சியையும் விரும்புகிர்ரர்கள். மயான அமைதியை அல்ல.
    about 18 hours ago · Up Vote (2) ·  Down Vote (2)
  • SRIHARAN
    ரியல் எஸ்டேட் ப்ரோகர போனாலாவது கொஞ்சம் காசு கிடைக்கும்.இல்லை என்றால் பவர் ப்ரோக்கரா போகலாம்.கூட்டணி ப்ரோக்கரா போனா?
    about 18 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • INDIAN
    Mr. Sinivasan, don"t just look ahmedabad, as per CAG report gujarat is least developed state, our tamil nadu is far better than gujarat, your cheated by ornament buildings in ahmedabad, did u know the story of dubai, it is attractive architecture than modi" development ahmedabad. it is all media hype. do not under estimate congress performance, nation has developed in many aspects. don"t just look buildings of ahmedabad and victim of that.
    about 19 hours ago · Up Vote (2) ·  Down Vote (0)
  • srinivasan
    நீங்க மதவாதம் நு எதய சொல்றீங்க அய்யா.பொன்னைஅய தயவு செஞ்சு குஜராத் பக்கம் பொய் பாத்துட்டு வாங்க.3 டைம் முதல்வர்ன சும்மா இல்ல..மக்கள் ஒன்னும் முட்டாள் இல்ல..சரி காங்கிரஸ் என்ன பண்ணுச்சு 53 வருஷத்து
    about 20 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • Krishnakumar Govindarajan at United Parcel Service
    M . G . R தன் படத்தில் சொன்னது " நீ உன்னை அறிந்தல், நீ உன்னை அறிந்தல் , இந்த உலகத்தில் போராடலாம் " - There is no short cut in life , no matter it takes time , All Political Parties got to earn the support of people . Don " t undermine வைகோ, விஜயகாந்த், even பா.ம.க with this Kind of CHEAP alliance games.
    about 20 hours ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • Ravi
    வைக்கோவை பரிந்துரைப்பது மிக சரியான முடிவு, இப்போதுள்ள அரசியல்வாதிகழில் அவர் தேர்வுக்குரியவர். சிறந்த அறிவாளி, நேர்மை , அவரின் பலம் இளஞ்சர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது
    about 22 hours ago · Up Vote (3) ·  Down Vote (4)
  • Mohamed Haneefa
    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இளைஞர்களை, இந்தியாவை வல்லரசு ஆக்குவதற்காக கனவு காணச்சொன்னர்.. இப்படி குட்டிச்சுவரான தமிழருவி மணியனை அல்ல. ஏன் என்று சொன்னால், காந்தியம் பேசும் இவர் எந்த கட்ச்சியிலாவது நிலையாக இருந்தாரா. குற்றம் கான்கில் சுற்றம் இல்லை என்பதுபோல, பொறுமையில்லாமல் கட்சி தாவும் நிலைப்பாடு உள்ளவர். தற்பொழுது மோடியை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு சிலாஹிக்கிறார். பி.ஜே.பி., ம.தி.மு.க., தே.மு.தி.க. இவற்றிற்கு ஒரிங்கினைப்பாளர் பதவியை தானே ஏற்படுத்திக் கொண்டார். இவர்களெல்லாம் என்ன உத்தமர்களா அல்லது உத்தமர்களின் புத்திரர்களா. சுய லாபத்திற்காகவே அரசியல் நடத்தும் அறிவீனர்கள். காலத்தின் கட்டாயமாக தற்பொழுது NOTA (None of the above) அறிமுகப்படுத்தப் படவுள்ளது. இந்த நேரத்தில் "நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாசமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி" என்ற கதையாக இவருடைய ஞானோதையம் காலம் கடந்து விட்டது. இனி புரையோடிய அரசியல் கட்சிகளை தரையோடு புதைத்துவிட NOTA ஒன்று போதும்.
    about 22 hours ago · Up Vote (8) ·  Down Vote (5)
  • muttal
    மோடி பிரதமர் என்பது சரி ஆனால் வை கோ முதல்வர் என்பது நல்ல தமாஷ்! கனவு காணவும் ஒரு அளவு வேண்டாமா? தமிழகத்தில் ம.தி.மு.க எங்கே இருக்கிறது ?அது லெட்டெர் பேடு கட்சியாகி ரொம்ப நாளாகி விட்டது இதை விட தமிழருவி முதல்வர் என்பதே பரவாயில்லை..
    about 23 hours ago · Up Vote (0) ·  Down Vote (4)
  • Krishnakumar Govindarajan at United Parcel Service
    "ஜோகர்" அல்லது "கேம் சேங்ச்சேர்" - வைகோக்கும் and விஜயகாந்துக்கும் முந்தையா தி.மு.க.,, அ.தி.மு.க தமிழகத்தில் , தந்த முடுவு : "ஜோகர்". இந்தமுறை தேசிய அளவில் பா.ஜ.க . : முடுவு : ? அ.தி.மு.க / பா.ஜ.க தேசிய அளவில் சப்போர்ட் - மோடி தன் கூட்டத்தில் தேர்வித்துள்ளர். மாற்று அணி பின் காரணம் விஜயகாந்து - NO காங்கிரஸ், அ.தி.மு.க தி.மு.க - NO பா.ஜ.க வைகோ - NO காங்கிரஸ், NO தி.மு.க
    about 24 hours ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • Rahul
    கனவு காணுங்கள் - அப்துல் கலாம். கனவு காண ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உண்டு
    about 24 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • parthi
    இது நல்ல முயச்சி . வைகோ நல்ல முதல்வர்
    about 24 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • Ganesan
    விஜயகாந்தும் வைகோவும் திமுக அஇஅதிமுகவுக்கு மாற்றாம். தமிழருவி மணியன் சொல்கிறார் நம்புங்கள். இந்தியாவின் ராஜபக்ஷே மோடியை, பிஜேபி கும்பலை ஆதரிக்கும் காந்திய இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் - புரிந்து கொள்ளுங்கள்
    a day ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • Ponniah Rajamanickam
    காந்தி மக்கள் இயக்கம் எனப் பேர் வைத்துக் கொண்டு நரேந்திர (வேட்டை) மோடிக்கு ஆதரவு தெரிவிப்பது ஆச்சரியமாக உள்ளது. வளர்ச்சி என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு மதவாதம் வருகிறது என்பது கூடத் தெரியாத தமிழருவி மணியன் அறிவு ஜீவி என்ற அடையாளத்தை இழந்துவிட்டர். ஒரு இடைத்தரகர் அளவில் கீழ் இறங்கி விட்டார்.
    a day ago · Up Vote  (1) ·  Down Vote (2) ·  reply (0)
    Ponniah Rajamanickam  Down Voted Ponniah Rajamanickam\"s comment
  • Muttal
    என்னமோ சொல்வாங்களே ! நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று ??????
    a day ago · Up Vote (0) ·  Down Vote (4)
  • andal
    எதிர்பார்ப்பு தவறில்லை. மோடியை நகர மக்கள் அறிந்துருபதுபோல் கிராம மக்கள் அறிவார்களா என்பதனை உறுதிசெய்ய வேண்டும். நகர மக்கள் மனது அடிக்கடி மாறுபடும்.. ஆனால் கிராம மக்கள் அப்படிஇல்லை. பா.ஜ. கட்சி கிராம மக்கள் மனதில் இடம் பெறவேண்டும் இதற்கு ஏற்ற திட்டம் தேவை.
    a day ago · Up Vote (0) ·  Down Vote (0)
 நன்றி -  ‘தி இந்து’ தமிழ்

மதுரையில் தான் மிகுந்த வரவேற்பு - மிஷ்கின் உற்சாக பேட்டி

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்திற்காக போஸ்டர் ஒட்டும் இயக்குநர் மிஷ்கின்விமர்சகர்கள் மத்தியில் சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்ற படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. இப்படத்தினை தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார் மிஷ்கின். திரையரங்குகளுக்கு கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் ஓட்டும் பணியையும் இவரே செய்து வருகிறார். 



சமீபத்தில் மதுரை மற்றும் திருச்சி ஆகிய ஊர்களுக்கு சென்றார். மதுரையில் இப்படம் திரையிடப்பட்டுள்ள மினிப்பிரியா திரையரங்கத்திற்கு சென்றார். அங்கு அவர் பேசியது “நான் இதுவரை 73 தொழில்கள் செய்துள்ளேன். சினிமா என்பது எனக்கு 74 ஆவது தொழில். கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே என்னுடைய அலுவலகத்தை அடகு வைத்து இந்த திரைப்படம் எடுத்தேன். 



மதுரையிலேயே சிறந்த கலா ரசிகர்கள் இருக்கிறார்கள். மற்ற இடங்களைவிட மதுரையில் சினிமாவுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. எனவே இங்கு சினிமா சிறப்பாக ஓடுகிறது.2 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் இந்த படத்தை எடுத்துள்ளேன். இதற்கு முந்தைய திரைப்படமான 'முகமூடி' மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு பெறவில்லை. எனவே, விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு பிராயச்சித்தமாக இந்த திரைப்படத்தை எடுத்துள்ளேன். 


இந்த திரைப்படம் சிறப்பாக இருந்தால் தியேட்டருக்கு உறவினர்களை வரவழையுங்கள். நன்றாக இல்லையென்றால் யாரும் இந்த சினிமாவை பார்க்காதீர்கள். 



ஏற்கெனவே இரவில் மாறுவேடத்தில் சினிமா போஸ்டர் ஒட்டியுள்ளேன். இந்த நிலையில், அதிக போஸ்டர்களை மதுரையில் ஒட்ட இருக்கிறேன்” என்று தெரிவித்தார். 


அதன்பின்பு திருச்சி வந்த மிஷ்கின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர்களிடையே அவர் “இப்படம் பலரின் பாராட்டை பெற்றிருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷத்தை தருகிறது. இந்த படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லை. என் கதையைக் கேட்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். 'முகமூடி' என்ற தோல்விப்படம் கொடுத்த பண நெருக்கடி, மன நெருக்கடிகளுக்கிடையில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் கூட வரவில்லை. அதனால்தான் நானே இந்த படத்தை தயாரித்தேன். 



என் அலுவலகத்தை அடமானம் வைத்துதான் இந்த படத்தின் கதையையே எழுதினேன். 


ஹாலிவுட் தரத்தில் படம் இயக்கவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த படத்தை நான் ஒரு பாட்டு கூட இல்லாமல் இயக்க முக்கிய தூண்டுகோலாய் இருந்தது. நான் இந்த படத்தை எனக்கான சுய பரிசோதனை முயற்சியாகத்தான் எடுத்து கொண்டேன். இந்த படத்தில் ஒரு காதல் சீன் வைக்க கூட இடம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் எனக்கு 42 வயதாகிறது; நான் மரத்தை சுற்றிவந்து டூயட் எல்லாம் பாட முடியாது. அதனால் படத்தில் டூயட் இல்லை. 


முதல் படத்தில் தெரியாத்தனமாக வைத்த குத்து பாட்டு தெரியாத்தனமாக ஓடிப்போச்சு. அடுத்த படத்திலும் தயாரிப்பாளரின் வற்புறுத்தலின் பேரில் வாய்த்த குத்து பாட்டு பயங்கர ஹிட் அடித்து, என்னை எல்லோரும் குத்துபாட்டு இயக்குனர் என அழைக்க ஆரம்பித்தார்கள். அது எனக்கு நாகரிகமாகப்படவில்லை. 


இந்த படத்திலும் குத்து பாட்டில்லை என்றால் பெட்டி வாங்க மாட்டோம் என சொல்லிவிட்டார்கள். இந்த படத்தை விநியோகஸ்தர்களுக்கு நான் 'நந்தலாலா' தந்த அனுபவத்தால் போட்டு காட்டவில்லை. ஆனால் அதையும் மீறி ரிலீஸ் ஆனது பத்திரிகையாளர்களின் நேர்மையான பாராட்டுகளால்தான். இந்த கதையில் யாருமே ஓநாய் பத்திரத்தில் நடிக்கமாட்டார்கள் என தெரியும். அதனால்தான் என் கதையை நம்பி நானே களத்தில் இறங்கினேன். 


இதுவரை 6 படம் செய்திருக்கிறேன். ஒரு கோடி ரூபாய்க்கு கூட இந்த படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. என்னுடைய 6 படங்களையும் பாருங்கள் ஒரு படத்திலாவது ஏதேனும் ஒரு பெண்ணை மோசமாக காட்டியிருக்கிறேனா? வயது குறைந்த இளைஞர்கள், வயதானவர்களை கிண்டல் பண்ணும் காட்சி இருந்திருக்கிறதா ? அவ்வளவு கண்ணியமாக படம் எடுத்ததுக்கு எனக்கு கிடைத்த பரிசுதான் இது. 



நல்ல படங்களை எடுக்கவேண்டும் என நினைத்தது தப்பா? இந்த படத்திற்காக 107 கிலோவில் இருந்து 87 கிலோவாக எடை குறைந்திருக்கிறேன். கடைசியில் இந்த படத்தை யாருமே வாங்கவில்லை. 30 லட்ச ரூபாய்க்காக நாய் மாதிரி அலைந்தும் கடன் கிடைக்கவில்லை. முதல் நாள் 30 லட்ச ருபாய் கொடுக்காததால் 10 தியேட்டர்களில் எனது படத்தை எடுத்துவிட்டார்கள். நம்பிக்கை இழந்து மீண்டும் தெருவுக்கே வந்துவிடலாம் என எண்ணினேன். ஆனால் அடுத்தநாள் உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தது. 



அந்த ஒரே காரணத்தால்தான் இதோ ஒரு வாரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஒட்டக் கூட காசு இல்லை. கடன் வாங்கித்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கண்ணீர் மல்க பேசினார். 

 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் இயக்குநர் மிஷ்கின்

நினைத்தாலே இனிக்கும் - சினிமா விமர்சனம்



ஹீரோ ஒரு ஆர்க்கெஸ்ட்ராவில் அழகிய  சிங்கர் . அவரோட  மியூசிக்  ட்ரூப் சிங்கப்பூர் போகுது . அங்கே   அவர்  தன்  ரசிகையை சந்திக்கறார். வழக்கம்  போல காதல்  தான் . ஆனா   அந்தப்பொண்ணு  ஒரு   புரியாத  புதிரா  இருக்கு . பொதுவா பொண்ணுங்க  எல்லாம்  புரியாத  புதிர்  தான் என்றாலும் இது ஒரு  படி  மேல போய்  ஒரு டைம்   சேலைல  குடும்ப குத்து  விளக்கு மாதிரி இருக்கு , இன்னொரு டைம் பொட்டு வைக்காத  நீள் வட்ட நிலாவா மாடர்ன்  டிரஸ் ல  க்ளோஸ் கட்டிங்க் பண்ணி வருது . சில  டைம்  சோகமா  இருக்கு , சில  டைம்  சிரிச்ச முகமா  இருக்கு ..


இவங்க  2 பேர் காதலும் என்ன ஆச்சு என்பதுதான்  மிச்ச  மீதித்திரைக்கதை .

 கமல் ஹாசன்  வெறும் 27,000 ரூபா சம்பளத்துல நடிச்ச படம் . அப்போ எல்லாம் அவர் தான் காதல் இளவரசன் ( இப்போ காதல் மன்னன் ) காதல் காட்சிகளில் வழக்கமான கமல்  குறும்புகள்  இதில்  ரொம்பவே மிஸ்சிங்க் . அதே  போல் டூயட் காட்சிகளில் அவர் ஹீரோயினிடம்  ஏதாவது காதல் சேட்டைகள்  செய்வாரே அதெல்லாம்  மிஸ்சிங்க் . ஆனாலும்   அவர் ரசிக்க வைக்கும் நடிப்பைத்தான்  தந்திருக்கிறார் 


ஹீரோயின்  ஜெயப்ரதா , பின்னாளில்  சலங்கை  ஒலி வருதே  அதில் பார்த்துக்கலாம்  என அசால்ட்டாக விட்டுடார் போல .  இவர்   உருப்படியாய்  நடித்துப்பெயர் வாங்கிய  ஒரே இடம்   ஹீரோ எது கேட்டாலும்   ஆமாம் என்பது போல் தலையை ஆட்டி பின் இல்லை என்பது போல்  முடிப்பதே . அந்த  சீனை  கேப்டன்  கூட கூட்டணி வைப்பீங்களா? என ஜெ கிட்டே கேட்டா  அதே பாணியில் அவர் ரீ ஆக்சனை கற்பனை செய்து  மகிழ்ந்தேன் . 


ரஜினி  இதில்  ஹீரோவின் ந்ண்பர் கேரக்டர் . அந்தக்காலத்திலேயே   விவேக் ,சந்தானம்க்கு முன்னோடியாக  நடிச்சிருக்கார் . இவர்  சிகரெட்  தூக்கிப்போடும்  ஸ்டைல் போட்டி 10 டைம் , சுண்டு  விரல் செம அப்ளாஸ் . அதே  போல் சம்போ  சிவ சம்போ பாட்டு  சீனில் அரங்கம்  அதிர்ந்தது




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  ரஜினி  ஹீரோவாக  நடிச்ச  ப்ரியா  படத்தின்  கதையையே லைட்டா பட்டி டிங்கரிங் பண்ணி அது வெளியே  யாருக்கும்  தெரியாத படி மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இடம் சூப்பர் ஹிட்  மெட்டுக்கள் வாங்கி  ப்ளாக் பஸ்டர்  ஹிட் படம் ஆக்கிய  திறமை 


2.    பாடல் காட்சிகள்   படத்துக்கு பெரிய பிளஸ் . 

 1. எங்கேயும்  எப்போதும் சங்கீதம் சந்தோஷம்  , 

2 சிவனே  மந்திரம்  சிவனே  தந்திரம் ,மனிதன் எந்திரம்  சிவசம்போ ,

3.  நம்ம  ஊரு  சிங்காரி , சிங்கப்பூர் வந்தாளாம் பொட்டு வெச்சுப்பூ வெச்சு நின்னாளாம் 


4 ஆனந்தத்தாண்டவமோ 


5 பாரதி கண்ணம்மா  , நீயே செல்லம்மா ,அழகிய மலர் முகம் தினசரி புது விதம் 


6  தான்னனா தனனா தன்னே  தனனா  நினைத்தாலே  இனிக்கும் 


7 இளமை இருக்கு  இனிமை   இருக்கு இனிமேல் நமக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட் 


8 யாதும்  ஊரே  யாவரும்  கேளீர் அன்பே எங்கள் உலக  தத்துவம் 


9  காத்திருந்தேன் காத்திருந்தேன்  காதல் மனம் நோகும் வரை

இந்த  9 பாடல்களும்  அந்தக்காலத்தில்  செம  ஹிட் , எந்தக்காலத்திலும்  கேட்க கேட்க  இனிமை 


3  பொதுவா  வெளிநாடுகளில்  படம் எடுத்தா அது டப்பா ஆகிடும் , காவியத்தலைவன் , பூ மழை பொழியுது ல   விஜய்காந்த் மாதிரி பலர் அடி பட்டிருக்காங்க , ஆனா ஃபாரீனில் படம் ஆக்கப்பட்டு மெகா  ஹிட் ஆன படங்களில்  முக்கியமானவை  உலகம் சுற்றும் வாலிபன் , நினைத்தாலே  இனிக்கும் . 


4  ரஜினி  சிகரெட் ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடிக்கும்  பந்தயக்காட்சி மெகா ஹிட் , அந்தக்காலத்தில் தமிழ் நாடெங்கும் அந்த பந்தய மேனியா பற்றிக்கொண்டதாம் .




இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

1 .  பொதுவா   லிப்ஸ்டிக் கதவுலயோ ஜன்னல்லயோ எழுதுனா  5 நிமிஷத்துல  காய்ஞ்சிடும் . ஹீரோயின்   ஒரு சீன்ல  கதவுல  ஐ லவ் யூ அப்டினு எழுதி வெச்சுட்டுப்போயிடும்  . அதுக்குப்பின்  அங்கே வரும்  ஹீரோ  தன் நண்பர்களிடம் காட்டி மகிழும்போது அந்த ஐ லவ் யூ எழுதிய  லிப்ஸ்டிக் கை  கையில் எடுப்பார் ,  மாவு மாதிரி கையில்  வரும் ,. அப்படி எல்லாம் வராது 


2  ஹீரோயின்  கிட்டே  ஹீரோவோட நண்பர்  துண்டு சீட்டு தர்றதை  வில்லனின் அடியாள் பார்த்துட்டே  இருக்காரு . ஹீரோயின்  :இருங்க வந்துடறேன்”னு சொல்லிட்டு கிள்ம்ப்பும்போது அடியாள் க்ண்டுக்கவே  இல்லை , அந்த சீட்டைக்குடு ,என்னன்னு பார்க்கனும்னு அவன் ஏன் கேட்கவே  இல்லை ? 


3   மேடைக்கச்சேரியில்  4 நண்பர்களும்  எப்போதும்  ஒரே கலர்  யூனிஃபார்மில்  தான்  வர்றாங்க . ஆனா சம்போ சிவ சம்போ பாடல் காட்சி  யில் எல்லாரும்  ப்ளூ கலர் பேண்ட் , மஞ்சள் பனியன் போட்டு இருக்கும்போது கமல் மட்டும் சிவப்புக்கலர் பனியன் போட்டு வர்றாரே? ஹீரோ என்பதாலா? 


4 நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூர் வந்தாளாம் பொட்டு வெச்சு பூ வெச்சு நின்னாளாம் பாட்டு காட்சியில் ரஜினிக்கு  ஜோடியாக நடிப்பவர்  பொட்டும் வைக்கலை , பூவும் வைக்கலை . பாடல் வரிகளை கவனிக்க வேண்டாமா?  இதே போல் ம் எகா தவறை காக்கிச்சட்டை படத்தில் அமரர் ராஜசேகர் செஞ்சார் . பூப்போட்ட தாவணி போதையில் ஆடுது பாட்டில் மாதவி  மிடி போட்டிருப்பார் 


5  ஹீரோயின்  போதை மருந்து செலுத்தப்பட்டு போதையில்  சிங்கப்பூரில் நள்ளிரவில்  நடு ரோட்டில்  கிடக்கார் , அடுத்த நாள் காலை  8 மணிக்கு ஹீரோ வந்து வரைத்தூக்கும் வரை  ஹீரோயினை  யாரும் கண்டுக்கவே இல்லை , அம்புட்டு நல்ல ஊரா சிங்கப்பூர்? 


6  சிங்கப்பூர் ல எச்சில்  துப்பினா அபராதம் ,  குப்பை போட்டா ஃபைன் என்ற வசனம் அடிக்கடி வருது . எப்பவும்  கே பி படங்களீல்  இந்த ஆதங்கம் உண்டு , ஆனால் இதில்  எரிச்சல் தரும் அளவில் 3 முறை ரிப்பீட்டிங்க் 


7 ஹீரோயினுக்கு பிளட் கேன்சர் என்ற ரகசிய உண்மையை டாக்டர் குழு அப்படித்தான் கதவைக்கூட லாக் பண்ணாம பேசிட்டு  இருக்குமா?  ஹீரோயின் ஒட்டுக்கேட்க  வசதியா ?   


ஹீரோயினை அடிக்கடி ஒரு முகமூடி போட்ட ஆள் துரத்துற மாதிரி சீன் வெச்சிருக்கிங்க , அது  ஒரு குறியீடு , எமன்  தான் அது , சாவு நெருங்கிட்டு இருக்குன்னு எத்தனை பேருக்கு  புரியும் ? அந்த ஃபிளாஸ் பேக் காட்சி கட்டா?ன்னு சிலர் கேட்கறாங்க , இந்தக்காலத்துலயே இப்டின்னா அந்தக்காலத்துல எத்தனை பேருக்கு அந்த  சீன்  புரிஞ்சிருக்கும் ?  




 

 அமரர்  மேஜிக் ரைட்டர் சுஜாதாவின்  மனம் கவர்ந்த  வசனங்கள்


1.  இந்த  சிரிப்பு  வெட்கமா ?  விஷமமா? 


2 . இங்கே  ஆட்டோகிராஃப் வேணும் 

 ச்சீய் , அங்கே எல்லாம் பேனா  எழுதாது , வேணும்னா  கை நாட்டு போடவா? 


3   மிஸ்! உங்க கை ரேகை பார்த்து பலன் சொல்லவா? 


 ம். PTO னு போட்டிருக்கு.அந்தக்கையை குடுங்க  


4  நான்  உங்க கைல  கிடார் ஆகனும் 


5  என்னங்க  , தம்பட்டம் அடிப்பவர் வந்திருக்கார் 

 ஹய்யோ , அது  டிரம்ஸ்ங்க 


6  மிஸ்! சிங்கப்பூரா  போறீங்க ? 


நோ , பாதிலயே  இறங்கிக்குவேன் 

எங்கே? 

 பே ஆஃப் பெங்கால் 


7   கைரேகை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை , ஏன்னா என் எதிர்காலம் என்ன?ன்னு எனக்கு ஆல்ரெடி  தெரியும் 


8  எப்பவோ நாம  வரப்போகும் இடத்துக்கு  இப்பவே ஏன்  கூட்டி வந்தே ? 

 சுடுகாட்டுக்குத்தான்  யாரும் வர மாட்டாங்க , ஃப்ரீயா பேசிட்டு  இருக்கலாம் 


9  நான் பயங்கர முட்டாள்ங்க 

 அதான் நான் லவ் பண்ணேன் 

 அப்போ புத்திசாலியா  இருந்தா ? 

 மேரேஜ் பண்ணி  இருப்பேன் 


10  சிக்கன்  நீங்க சாப்பிடலை ? 

 ஆல்ரெடி சாப்ட்டாச்சு , இன்னும் சாப்ட்டா  ஆல்ரெடி உள்ளே  இருக்கும் சிக்கன் கூட இது போய் சண்டை போடும் 


11  இங்கே என்ன பண்றீங்க ? ( முதலைப்பண்ணை )

 முதலைக்கண்ணீர் வடிக்க கத்துக்கிட்டு  இருக்கேன் 


12   மறக்காம இந்த கடிதத்தை  குடுக்கச்சொன்னார் , அதான் மறந்துட்டேன்




படத்தின்  சுவராஸ்யங்களில்  சில


1.   கமல்  ரஜினி இணைந்து நடித்த எல்லாப்படங்களிலும் ஹீரோ கமல் தான் , வில்லன் அல்லது  குணச்சித்திர நடிகராகத்தான்  ரஜினி வருவார் . ஆனால் அப்ளாஸ் அள்ளுவது  ரஜினியாகத்தான்  இருக்கும் . இது   கமலுக்கு உள்ளூர  ஒரு மன்க்குறையாக அந்தக்காலத்தில்  இருந்ததாம்.  பின் நாளில்  நாம் இனித்தனித்தனி  ஹீரோவாக நடிக்கலாம் என கமல் முடிவு எடுக்க முக்கியகாரணியாக  இந்த ஈகோ இருந்தது


2  கமல் நடித்த எல்லாப்படங்களிலும்   மேல் சட்டை , பனியன் இல்லாமல் டாப்லெஸ்சாக  ஒரு சீனிலாவது  வந்து தன் ரசிகைகளுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் பழக்கம் உள்ள கமல் இதில் அப்படி ஒரு சீன்  கூட  டாப் லெஸ்ஸீல்   வரவில்லை , அதே போல்  லிப் கிஸ்சோ , கன்னத்தில் கிஸ்சோ தராமல் நடித்த  மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று 


3  ரஜினியின்  சிகரெட் தூக்கிப்போட்டு டக் என பிடிக்கும் ஸ்டைல்  பட்டி தொட்டி எங்கும் பரவியது , தம் அடிக்கும்  பழக்கமே  இல்லாதவர்கள்  கூட தம் அடிக்க கற்றார்கள் . தெரிந்தோ  தெரியாமலோ ரஜினி  தமிழ்நாட்டில்  சிகரெட்  குடிக்கும் இளைஞர்கள் பெருகுவதில்  முக்கியக்காரணி ஆனார் . ( எப்படி தழர்கள்  ஹிந்தி கற்காமல் போக கலைஞர் ஒரு காரணம் ஆனாரோ அப்படி ) 


4  16 வயதினிலே - ரஜினிக்கு சம்பளம் ரூ.2500, கமலுக்கு ரூ.27000 # இப்போ ரஜினி =30 கோடி , கமல் 20 கோடி

5  எம் எஸ் விஸ்வநாதன்  வெறும் எல்க்ட்ரிக் கிடார் மட்டும்  யூஸ் பண்ணி போட்ட பாட்டு காத்திருந்தேன் பாட்டு 


6 . தான்னனா தான்னா  தனா தனனா நினைத்தாலே இனிக்கும் - இந்த ஒரு லைனை மட்டும் போட்டு  ஒரு முழுப்பாட்டு வருவது தமிழில் இதுவே  முதல் முறை . இந்த டெக்னிக்கை  தனது குருவிடம் இருந்து வசந்த் காப்பி அடிச்சு தன் நீ பாதி நான் பாதி யில் சசரி சாரிசா நிவேதா என்ற  ஒரே வரி வரும் பாட்டை எடுத்தார், அதில்  கவுதமிக்கு 180  டிரஸ் சேஞ்ச்  ரெக்கார் ட் . அந்த ரெக்கார்டை இப்போ பூனம் நடிச்ச  ஒரு படத்தில்  480  டிரஸ் ஒரே பாட்டில் . வரப்போகுது 




 டி டி எஸ் மிக்ஸ் நியூ ப்ரி்ண்ட்டில்  மிஸ் ஆனவை 


1.  யாதும்  ஊரே யாவரும் கேளீர்  , காத்திருந்தேன்  என 2 பாடல்கள் கட் 


2. மாமூவாக வரும் ஆள் சரக்கு அடிச்சுட்டு தன் சம்சாரம் பற்றி உளற அதை டேப்பில் ரெக்கார்டு செஞ்சு சம்சாரத்திடம் மாட்டி  விடும் காமெடி காட்சி  மிஸ்

 3   யுவர்ஸ் லவ்விங்க்லி வாசக பனியன் போட்ட ஆளை அடியுங்க என வில்லன் சொன்னதும் அடியாள் கமலுக்குப்பதில் மாமாவை அடிப்பது காமெடி சீன் கட் 

4   ரஜினி தன் காதலி மாடியில்  இருந்து விழுவதாக கனவு கண்டு அலறி அலப்பறை செய்யும் காமெடிக்காட்சி கட்



டிஸ்கி - நினைத்தாலே இனிக்கும் @ கடலூர் கமலம் தியேட்டர்# 4 10 13இல் பார்த்தேன் , பாரம்பரியம்  மிக்க தியேட்டர் போல , ஆனா பராமரிப்பு இல்லாததால் பாடாவதி தியேட்டர் ஆகி விடும் அபாயத்தில் . கமல்  ரசிகர்கள் மட்டுமே பேனர் கட்டி  இருந்தார்கள் . ரஜினி ரசிகர்கள் அட்ரசைக்காணோம் . ரஜினி  ஹீரோ இல்லை என்பதால் அலட்சியமா விட்டுட்டாங்க போல



ராகுல் காந்தி மைக்கேல் மதன காம ராஜரா ?

1. டிசம்பரில் முக்கிய முடிவு எடுக்கப்படும்-கருணாநிதி # மோடியைத்தேடி குஜராத் போய்டுவாரோ?




==================


2 கமல் ஹாஸன் கொஞ்சம் கூட மாறவே இல்லை: நடிகை ஹேமா சவுத்ரி # ஆமா.இப்போ கூட விஸ்வரூபம் 2 வை டிடிஹெச் ல ரிலீஸ் பண்றேன்னு சொல்றார்



=====================


3  ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை - மன்மோகன் #டேமேஜர் என்ன திட்னாலும் இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல நாம விடறதில்லையா அது மாதிரி


======================


4  லல்லு - எனக்கு ஜெயில் ல இஜட் + பாதுகாப்பு வேணும். ஜெயிலர் - லோ லெவல் ஊழலுக்கு இதுவே அதிகம்.அடங்கு



======================


5  அவசர சட்ட விவகாரம்.. பிரதமர் மன்மோகன்சிங்குடன் ராகுல் காந்தி சந்திப்பு# ராகுல் - வாட் நான்சென்ஸ் திஸ்? மன்மோகன் - நான் சென்ஸ்.



=====================


6  எனக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை நோய் இருக்கு, என் மீது பாலியல் புகாரா? திமுக கருப்பசாமி# நோய் பரப்புசாமி ஆகிட்டா? அதான்


=====================


7  பேஸ்புக்,ட்விட்டரில் இருப்பவர்கள் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் - இளங்கோவன். # நடந்துட்டிருப்பது நம்மாட்சிதானுங்ணா.



==================


8  ஜில்லா பொங்கலுக்கு ( 2014 ) ரிலீஸ் ஆகிடும் - விஜய் # அதை நீங்களா முடிவு பண்ணிட்டா எப்படி? - ஜெ @ கற்பனை



=====================


9  தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.-செய்தி # நாளைக்கே கலைஞர் டெல்லி போவார் பாருங்க



======================


10  பேரிடர்களை சமாளிக்கும் திறன் வேண்டும்-பிரதமர்: # சுத்த நான்சென்ஸ் னு யாராவது திட்டுனாக்கூட சத்தம் இல்லாம கமுக்கமா இருக்கனுமா பாஸ்?



=========================



11 50% பெண் காவலர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை: தில்லி அரசுக்கு நீதிமன்றம் கேள்வி: # நியமிச்ச 50% பேர் முதல்ல வேலை செய்யட்டும் யுவர் ஆனர்



=======================


12   ஓநாயும் ஆட்டுக்குட்டியும்': பாராட்டு குவிந்தாலும் போஸ்டர் ஒட்ட காசில்லை- மிஸ்கின் ஆதங்கம்!: # காமரா கோணத்தில் ஜம்பு கர்ணன் ஆகிடுங்க



===============================


13  நல்லா அடிச்சு விளையாடுங்கப்பா.. ஷேவாக், கம்பீருக்கு கங்குலி அட்வைஸ் # அடிச்சுக்காம விளையாடுங்கப்பானு சொல்லி இருக்கலாம்



===========================


14  தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: நாளை முதல் ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம்! # காலை 9 டூ 2 தென் 3 டூ 8 ?



====================


15  கழிவறையை சுத்தம் செய்த அனுபவம் மோடிக்கு உண்டா?-திக் விஜய் சிங்# நாட்டையே க்ளீன் பண்ணப்போறார். வெயிட் & ஸீ



==========================



16  வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.1,500 மாத உதவித்தொகை மேற்கு வங்காள முதல்–மந்திரி #15 நாட்களுக்கு சரக்கு அடிக்க ஆச்சு



=====================


17 நானும் சச்சின் மாதிரியே 40வயசு வரை விளையாடுவேன் - விராட் கோலி # அவர் மாதிரி ஏன் ஆடனும்? உங்களை மாதிரியே ஆடலாமே?



======================


18  லல்லுபிரசாத் யாதவ் க்கு 5 ஆண்டு ஜெயில் # புரட்சித்தலைவிக்கும் ,தமிழ் இனத்தலைவருக்கும் வயித்துல புளியைக்கரைச்சிருக்குமே?


====================


19  ராகுல் காந்தி எனக்கு காமராஜராக தெரிகின்றார்-இளங்கோவன். # விட்டா மைக்கேல் மதன காம ராஜரா தெரியறார்னு அள்ளி விட்ருவீங்ளே?



=====================


20  3ம் முறையாக உடைந்தது 9 தாரா இதயம் - மாலை மலர் # என் கணக்குப்படி எண் கணித முறைப்படி இன்னும் 6 வாய்ப்பு இருக்கு்


===========================

Friday, October 04, 2013

SUCKER - சினிமா விமர்சனம் 32+



ஹீரோ  கல்பாக்கம் , கூடங்குளம் மாதிரி ஒரு அணு மின் நிலையத்துல ஒர்க் பண்றாரு . ஆனா அவருக்கு கிடைக்க வேண்டிய  பிரமோஷன் எதுவும் கிடைக்கலை . திடீர்னு ஒரு நாள் அவரை வேலையை விட்டுத்தூக்கிடறாங்க.அவர்  லோன்ல எடுத்த கார் தவணை கட்டாததால சீஸ் பண்ணிடறாங்க  . அவருக்கு மிக  மோசமான நாள் , ஆள் கடுப்பாகி கம்பனியை விட்டு வெளில நொந்து போய் வரும்போது  ஒரு ஹோட்டல் ல  அவரோட மனைவி இன்னொரு ஆள்  கூட சந்தோஷமா  இருப்பதைப்பார்த்துடறாரு . வாழ்க்கையே வெறுத்துப்போய்  சோகமா  ரோட்ல நடந்து போய்ட்டிருக்கும்போது  ஒரு கார் வந்து அவரைத்தாக்க இருந்து சடன்  பிரேக் போட்டு நிறுத்துது 

 அதுல இருந்த  2 பேரும் அவரை சரக்கு அடிக்க  பார்-க்கு கூட்டிட்டுப்போறாங்க . அவங்க  கொசு பற்றி ஒரு விபரீத ஆராய்ச்சி பண்ணும் விஞ்ஞானிகள் . ஹீரோவை பரிசோதனை எலி ஆக்க ஐடியா பண்ணிடறாங்க .அந்த  பிராசஸ் ல ஹீரோ பயங்கரமான தோற்றம் உள்ள கொசு மனிதனா   உருமாறிடறாரு .

அவர்க்கு இப்போ பழி வாங்கும்  குணம்  வந்துடுது , கம்பெனில  தன்னை வஞ்சித்தவங்க , தன் மனைவியை கரெக்ட் பண்ணின ஆள் இப்படி வரிசையா போட்டுத்தள்ள  ஆரம்பிக்கறார் . 


இவருக்கு  ஒரு முன்னாள் காதலி . ஆட்டோகிராஃப்  மல்லிகா சேரன் மாதிரி . அவர்  கூட  இப்போ நெருக்கமா ஆகிடறாரு . பொண்ணு புருஷனுக்கு செஞ்சா  அது  துரோகம் , புருஷன் தன் பொண்டாட்டிக்கு  துரோகம் செஞ்சா   அது  கோ இன்சிடெண்ட் . சபாஷ் ஆணாதிக்க ஹாலிவுட் . 


 இந்த  கொசு  மனிதனை  போலீஸ்  எப்படி  பிடிக்குது ? அந்த  மோசடி விஞ்ஞானிகள்  என்ன ஆனாங்க என்பது  மிச்ச மீதிக்கதை 


ஹீரோ Michael Manasseri  தான்  படத்தோட  இயக்குநர் கம்  திரைக்கதை ஆசிரியர் . அதனால  கதை  முழுக்க தன்னைச்சுத்தியே நடக்கனும்னு பிளான் பண்ணி  திரைக்கதை அமைச்சிருக்கார் . இவர்  தன்  சொந்த  முகத்தோட   மொத்தமே 20 நிமிஷம் தான் இருக்கார் , மீதி  ஒரு மணி  நேரம்  கொடூர மாஸ்க் மேக்கப்  தான் .  அந்த மேக்கப் சகிக்கலை .  ஸ்பைடர் மேன் , பேட் மேன் மாதிரி  கொஞ்சம் கண்ணியமா  இருந்திருக்கலாம் . 


 ஹீரோயின்கள்  2 பேரு .   ,  .  2 பேருமே  சுமார் மூஞ்சி குமாரிகள்  தான் , ஒண்ணும்  பெருசா சொல்ற அளவுக்கு  இல்லை 


வில்லன் சயிண்ட்டிஸ்ட் கேரக்டர்ல வர்றவர்  ஹீரோவை விட பர்சனாலிட்டியா இருக்கார் . அவருக்கு  இன்னும் வாய்ப்பு  குடுத்திருக்கலாம் .



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1. போஸ்டர்  டிசைன்  ஏதோ சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்சன் த்ரில்லர் மாதிரியே நல்லா டிசைன் பண்ணியது 


2.  ரொம்ப சாதாரண  கதையா  இருந்தாலும்  சி  செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்கும்படி  போர் அடிக்காம திரைக்கதை அமைச்சது 


இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  வில்லன் எல்லாப்படத்திலும் வர்ற மாதிரி  “ அவனை  உயிரோட பிடிக்கனும்”னு எதுக்கு சொல்லிட்டு இருக்கார்? ஆராய்ச்சி  ஃபெய்லியர் , இனி அடுத்த ஆராய்ச்சியை அடுத்த ஆள் வெச்சு பண்ணப்போறார் . எதுக்கு இவர் உயிரோட  வேணும் ? 


2 போலீஸ்  விசாரனைல  அந்த விஞ்ஞானிகள் மேல  சந்தேகம்  வந்தும்  எந்த செக்கும்   அவங்களுக்கு வைக்கப்படலையே ஏன் ? 


3  தன்னோட  உதவியாளன் , ஹீரோவின்  காதலி   2 பேரையும்  ஒரே டைம்ல   வில்லன்  ஊசி போட்டு ஆராய்ச்சிக்கு  ரெடி பண்ண  முயற்சி பண்றாரு . பி ஏ வை ஊசி போட்டு மயக்கம் ஆக்கிடறாரு . ஹீரோயினை மட்டும்  எதுக்கு கட்டில் ல  கட்டி வெச்சு  அந்த பில்டப் கொடுத்து  ஹீரோ வரும் வரை டைம் வேஸ்ட் பண்றாரு ? 


4.  ஹீரோ  ஹோட்டல்  வாசல்ல நிக்கறாரு , அப்போ  உள்ளே ரூம் ல  இருந்து  முனகல் சத்தம் மட்டும் வருது . அந்த சத்தத்தை வெச்சே அது தன் மனைவிதான்  முடிவுக்கு வர்றாரு. ஏன் உள்ளே போய் நேருக்கு நேர் பார்க்கலை ? ( அநியாயமா  ஒரு சீன் போச்சே , அந்த ஆதங்கம்  தான் ) 



5  ஹீரோ வோட  காதலி   பாத்ரூம் ல  குளிக்கறா . ஒண்ணா  டக்னு போய் குளிக்கனும் , அல்லது  கிடார் வாசிச்சுட்டு போய் குளிக்கனும் , 2ம் இல்லாம  இப்படித்தான்  டிரஸ் எல்லாம்  கழட்டி  வெச்சுட்டு  கிடார் வாசிச்சுட்டு இருப்பதா?  தியேட்டர்ல அவனவன்  டென்ஷன் ஆகி கத்தறான் 


6 .  ஹீரோ    தன்  நாக்கால   எதிராளியின்  ரத்தம்  பூரா  உறிஞ்சி சாகடிகறார். ஆனா அந்த டெட் பாடி நார்மல் டெட் பாடி மாதிரியே இருக்கு ,  ரத்தம் சுண்ட உறிஞ்சப்பட்ட பாடி மாதிரி காட்ட வேணாமா? 



7  . ஹீரோவோட  உருவம்  படு பயங்கரமா  இருக்கு . என்னதான்  முன்னாள்  காதலன்  என்றாலும்  காதலி   கில்மாவுக்கு எப்படி  ஒத்துக்கறா ?  வியாதியோ அல்லது வேற பாதிப்பு வருமோன்னு பயப்பட் வேணாமா?  ( எல்லாம்   ஒரு வயித்தெரிச்சல் தான்  ) 


8  கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ்  படு மட்டம் . ரொம்ப  லோ [பட்ஜெட் படம் போல . ஹீரோ  தன் நாக்கால் ரத்தம்  உறிஞ்சும் காட்சி எல்லாம் ராமநாராயணன்  பட  ரேஞ்சுக்கு  ரொம்ப சாதாரணமா  இருக்கு 


9  ஹீரோ தன்  மனைவியை பழி வாங்க  கடைசி  டைமா  கில்ம பண்ணிட்டு  கொலை பண்றாரு , அப்போ மனைவி  உடல் அவர்து மாதிரியே பாளம் பாளமா  வெடிச்சு பயங்கரமா  இருக்கு , ஆனா  தன் காதலி  கூட கில்மா பண்ணியும் காதலி பாடி ( உடம்பு ) சாதா வாத்தான்  இருக்கு , எப்படி ?   


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  யோசிச்சுத்தான்  சொல்றீங்களா? 


 நான்  யோசிக்காம  எதையும்  செய்ய மாட்டேன் , செஞ்ச பின் யோசிச்சுட்டு இருக்க மாட்டேன் 


2  பொண்ணுங்க   பெரும்பாலும்   துரோகிகள் 


 எல்லாப்பொண்ணுங்களும் அப்படின் -னு  சொல்லிட  முடியாது , ஆனா  மேக்சிமம் லேடீஸ்   அப்படித்தான் 



3    அவன்  வாழ்க்கைல  ஏன் விளையாடறே?  


 என் வாழ்க்கைல நான்  வளரனுமே? 



4   விட்டில் பூச்சிகள்  எல்லாம் ஏன் விளக்கைத்தேடி  ஓடுது தெரியுமா? வெளிச்சத்துக்கு   வரனும் , ஸ்டார்   ஆகனும்னு வாழ்க்கைல  எல்லாருக்கும் ஆசை . அதான் 


5   அவன்    “ பசிக்குது , சாப்பிடப்போகனும்”னு சொன்னான் . ஒரு கொசு மனிதனா   அவன் சொன்னதுக்கு என்ன அர்த்தம் ?  


 கில்மா பண்ண  மூடு வந்துச்சு , கிள்ம்பறேன்னு அர்த்தம் 


ரேட்டிங் =  2 .25 / 5


சி பி கமெண்ட்-   தியேட்டர் ல பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . ஹெச் பி ஓ சேனல் ல  எப்படியும்  போடுவாங்க , அப்போ பார்த்துக்கலாம் . இது  ஒரு ஏ படம் , அதனால  தியேட்டர்ல   பெண்கள் போய்ப்பார்க்க  முடியாது . கள்ளக்குறிச்சி  ஸ்ரீ கீதா  தியேட்டர்ல படம் பார்த்தேன் .



டிஸ்கி -  இதை ஏன்  டி வி டி ல பார்க்கச்சொல்றேன்னா  படத்துல  3 சீன்  இருக்கு ,. எல்லாம் அறை  குறையா இருக்கு , சென்சார் உபயம் . அதனால டி விடில பார்த்தா “ நான் பார்த்த  சீனை   நீ பார்க்க வில்லை , நீ பார்த்த  சீனை நான் பார்க்க வில்லை”னு நீங்க என்னைப்பார்த்து பாட்டு பாடலாம் .
         

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (4 10 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. இப்படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் அடுத்ததாக ரௌத்திரம் இயக்குனர் கோகுல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கு "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்கிற வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்துள்ளனர். படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக சுப்ரமணியபுரம் ஸ்வாதியும், அட்டக்கத்தி நந்திதாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பரோட்டா சூரியும் நடிக்கிறார். மதன்கார்கி வசனம் எழுதுகிறார்.

2 10  2013 ல் ரிலீஸ் ஆகிடுச்சு 


 

 2. ரகளபுரம். - திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் 3வது படம் ரகளபுரம். இப்படத்தில் கருணாஸ் ஜோடியாக அங்கனா நடிக்கிறார். கோவை சரளா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர பரத் ரெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், பவன், மயில்சாமி, சிங்கம்புலி, ஓ.ஏ.கே.சுந்தர், சஞ்சனாசிங், ரகசியா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பயந்த சுபாவம் உள்ள ஒரு போலீஸ்காரரை பற்றிய படம் இது. அவர் தப்பாக எடுக்கும் முடிவுகள் எல்லாம் அவருக்கு சாதகமாக முடிகின்றன. அதனால் ஏற்படும் பிரச்னைகள்தான் இப்படத்தின் கதை. சுந்தர் சி, சுராஜ், ஷக்தி சிதம்பரம் ஆகிய டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக இருந்த மனோ இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோவாக நடிப்பதுடன் தன்னுடைய கென் ஸ்டூடியோ சார்பில் கருணாஸே இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
கருணாஸ் நடிக்கும் ரகளைபுரம் ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய மயில்சாமி திரைப்படம் தயாரிக்காமல் பணத்தை பதுக்கி வைத்துள்ள நடிகர்களுக்காக ஓர் உப கதை சொன்னார்.
பணத்தை தேடி புதைத்து வைத்த ஒருவனின் பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள்.
புதைத்தவன் வாயிலும் வயிற்றிலும் அடித்து புலம்பினான், அருகில் வந்த ஒருவர் எதற்காக புலம்புகிறாய் என்று கேட்டார்.
விஷயத்தை சொன்னான் :
நீயோ பணத்தை பாவிக்கமாட்டாய், மற்றவருக்கும் கொடுக்கமாட்டாய் அது களவு போனதில் தவறென்ன இருக்கிறது.
வழக்கம் போல் இன்றும் அது புதைந்து கிடக்கிறதென நினைத்துக் கொண்டே வாழ்ந்து முடி என்று கூறினார்.
இப்படிப்பட்ட மோசமான உலோபிகள் போலத்தான் இன்று பல நடிகர்கள் பணத்தை புதைத்து வைத்திருக்கிறார்கள்.
அவர்களில் கருணாஸ், கஞ்சாக்கருப்பு ஆகிய இருவரும்தான் உழைத்த பணத்தில் படம் எடுத்து மற்றவர்களுக்கு உழைப்பு கொடுக்கிறார்கள்.
மற்றவர்கள் புதைத்துக் கிடக்கிறார்கள் என்றார்.


 இந்தப்படம் இன்னைக்கு  ரிலீஸ் ஆவதாக நாளிதழ்களீல்  விளம்பரம் பண்ணி  இருந்தாங்க ஆனா  ரிலீஸ் ஆகலை 


Besharam movie review

3 Besharam -A slick, unabashedly lowbrow entertainer, Besharam is, true to the title, absolutely unapologetic about its intentions.

Like it or lump it, it is a film that is packaged smartly enough to be able to paper over for its obvious flaws, most of them at any rate.

It has no story worth the name, and its oddball characters are facile caricatures that turn more and more bizarre as they hurtle towards a protracted and action-packed climax that turns out to be far and away the most enjoyable part of the film.

Most of the comic gags that Besharam conjures up hinge on the film’s pivotal casting coup. The idea of playing the mercurial Ranbir Kapoor off against the spirited pair of Rishi and Neetu Kapoor (in the guise of ageing Delhi cops married to each other) offsets the deleterious effects of the duller moments.

There is much in the film that does not quite click into place. The implausible tale of bumbling cops, a cool car thief, his pretty lady love and a brutal hawala operator surrounded by a posse of grotesque henchmen takes ages to gather momentum. And even when it does get going, it is riddled with gaps of logic to huge to bridge.

But with Ranbir Kapoor going out of his way to live up to the moniker that the film bestows on his character, writer-director Abhinav Singh Kashyap’s second venture turns out to be yet another action comedy rooted firmly in the tradition of commercial Hindi potboilers of an era gone by.

Lest you miss the connection, Rishi Kapoor’s character in this film is called Chulbul Chautala. And sure enough, when the pot-bellied police inspector is down for the count, the gloating hero reminds him that every Chulbul cannot be a Dabangg.

The male protagonist, on his part, is quite a dabangg though: a glib talker, an incorrigible stalker, and a suave, larger-than-life rocker who can sway and swerve his way out of trouble without getting his knickers into a twist.

He is a lollypop-sucking car thief who answers to the unlikely name of Bubbly and that is exactly what the man is. No, he isn’t vintage champagne, but he is full of beans.
He has no surname because he has no parents. Pyaar, he declares grandly, is the only hathyar that he needs to get what his heart desires.

He is unapologetic about what he does for a living and can out-punch and outrun any number of hoodlums, but he is mortally afraid of canines. And, if you find his ways funny, that is all you really need to know about this man without a surname.

Abhinav Kashyap delivers the plot and character details only in broad sweeps, never pausing to let little things like psychological nuances get in the way of his defiantly goofy storytelling style.

His script provides no insights into the motives of the hero except for the fact that he grew up in an orphanage and resorts to illegal acts simply in order to fund a bunch of castaways.

Bubbly’s life goes into a tailspin when he espies a pretty girl, Tara Sharma (Pallavi Sharda), the spoilt daughter of a middle class widow, and flips head over heels for her.
He makes a pass at her outside a wedding venue. The girl gives him a piece of her mind. Yet the thick-skinned Bubbly not only follows her into the banquet hall but also sings and dances with her.

Bubbly worms his way into the heart of Tara’s mom and continues to pursue the girl without let. He barges into her office by bribing the security guards and proposes to her. Tara humiliates her and throws her out of the building.

On the way out, Bubbly and his pal, Titu (Amitosh Nagpal), escape with a brand new car that turns out to be Tara’s.

All hell breaks loose when Bubbly learns what he has done. He decides to get the stolen vehicle back from under the nose of the man it has been sold to, the dreaded Bhim Singh Chandel (Jaaved Jaaferi), Punjab’s undisputed hawala king. But that is easier said than done

If Besharam does not lose its wheels completely, it is primarily because Ranbir Kapoor plays to the gallery without the slightest sign of inhibition.

The star even does a repeat of the Saawariya towel act – this time around without the towel and in a water tank that doubles up as a bathtub.

Newcomer Pallavi Sharda does a fairly good job of looking blissfully beatific and overtly offended by turns. The screenplay does not give her much else to do.

The Rishi-Neetu double act certainly has its moments, especially when the pair gets to share space with Ranbir.

Besharam, rambunctious and robust, does not offer much by way of narrative novelty. But like Dabangg, it sets a crackling pace and does not flinch from the prospect of going over the edge in its pursuit of cheap thrills.

 2  10  2013


 4

Sucker (2013)-

Down on his luck and unlikely hero, Jim Crawley is having the worst day of his miserable life. He decides to end it all and even fails at that. An improbable event changes everything and he becomes a half man/half creature.

Director:

Writers:

(screenplay), (screenplay)

Thursday, October 03, 2013

BESHARAM - சினிமா விமர்சனம்

 

ஹீரோ  ஒரு கார் திருடன் . ஒரு கார்  மட்டும் தான்  திருடுவானா?ன்னு கேட்கக்கூடாது ,கிடைச்ச கார்  எல்லாம் திருடுவாரு. ஹீரோயின்   ஒரு பெரிய கம்ப்பெனியோட   ”சின்ன  “  மேனேஜர் . அவர் ஆசை ஆசையா  ஒரு புதுக்கார் வாங்கறாரு . இதுக்கு  மேல திரைக்கதை எப்படிப்போகும்னு  சின்னக்குழந்தை கூட சொல்லிடும் , இதோ இப்போ நான்  கூட சொல்லப்போறேன் பாருங்க .


ஹீரோயின் கார்னு  தெரியாம  ஹீரோ  அவரோட  காரை  திருடி  வித்துடறாரு .ஹீரோயினை  எதேச்சையா  ரோட்ல ஹீரோ பார்க்கறாரு . பார்த்ததும் லவ். பின்னாலயே  தெரு நாய் மாதிரி சுத்தறாரு. ஹீரோயின் கம்பெனிக்கே போய் ஐ லவ் யூ  சொல்றாரு . ஹீரோயின்  ஆஃபீஸ்ல எல்லாருக்கும்  முன்னால அவரை அவமானப்படுத்திடறாரு .பொதுவா பொண்ணுங்க எவ்வ்ளவு அவமானப்படுத்தினாலும்  ஆம்பளைங்க  குறிப்பா காதல் ல விழுந்த ஆம்பளைங்க அதை கண்டுக்கவே மாட்டாங்க , பொருட்படுத்தவே மாட்டாங்க . என்ன தான்  ஜெ   கேவலப்படுத்தினாலும் அவர் கால் ல  விழுந்து  கிடக்கும் அமைச்சர்கள் மாதிரி 


ஹீரோயினோட அம்மாவுக்கு  உதவி செஞ்சு அவர் மனசுல  ஹீரோ இடம்  பிடிக்கறாரு ,. எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க , ஃபிகரை கரெக்ட் பண்ண முதல்ல மாமியார் கிட்டே நல்ல பேர் வாங்கனும் .



ஒரு டைம்  ஹீரோயின்  முகம் இலியானா மனசு மாதிரி வாடிப்போய் இருக்க, என்ன காரணம்னு ஹீரோ ( வருங்கால ) மாமியார் கிட்டே  விசாரிக்கும்போதுதான்  கார்  திருடு போன மேட்டரும் ,  அந்தக்காரை நாம தானே ஆட்டையை ப்போட்டோம்கறதும்  ஹீரோவுக்கு நினைவு வருது .


 வாங்க நாம அந்தக்காரை கண்டு பிடிக்கலாம்னு ஹீரோ தன் ஜீப்ல ஹீரோயினைக்கூட்டிட்டுப்போறார். பின் பாதி முழுக்க ஜீப்  ட்ராவல்  தான் . இந்தபயணத்துல பஞ்சும் , நெருப்பும்  எப்படிப்பத்திக்குது என்பதுதான் திரைக்கதை


ஹீரோ பர்பி ரன்பீர்  கபூர்  . இவர் துள்ளலான நடிப்பு  படத்துக்கு பெரிய பிளஸ் . இவர் மவுன ராகம் , கோபுரவாசலிலே கார்த்திக் மாதிரி பல சீன்களில் பட்டாசைக்கிள்ப்பினாலும் , சில காட்சிகளில்  எஸ்  ஜே சூர்யா மாதிரி வரம்பு மீறிட்டே இருக்கார் . ஹீரோயினை படு கேவலப்படுத்துறார் . பெண்ணியவாதிகள்  கவனிக்க . இதுல சோகம் என்னான்னா   அவர் அப்படி பெண்களை அவமானப்படுத்தும்  சீன்களில் பெண்களே கை தட்டுறாங்க . ரஜினி படங்களில்  ஹீரோயினை அவர் டீஸ் பண்ணும்போது  ரசிகைகள் கிளாப்ஸ்  அடிப்பது மாதிரி . 


 இதுல பெரிய கொடுமை என்னான்னா  ஹீரோவுக்கு  ஒரு கேவலமான  குளியல் காட்ச்யும்  உண்டு , இதுவரை வந்த இந்திய சினிமாவில் இப்படி  ஒரு ஆண்  குளியல் காட்சி வந்ததே இல்லை . அந்த சீன்களில் தியேட்டரில் காலேஜ் கேர்ள்ஸ்  எல்லாம்  கூச்சல் போட்டு ரசிப்பது  பெண்களுக்கு  எந்த அளவு   சுதந்தரம் கொடுத்து  கெடுத்து வெச்சிருக்கு  இந்த நாடுன்னு தோணுது . 


ஹீரோயின்  பல்லவி ஷர்தா . சர்தான் போம்மா அப்டின்னு சொல்லத்தோன்றும்  ரொம்ப சாதாரண முகம் . முகம் மட்டும் இல்லை . எல்லாமே ரொம்ப சாதாரணம்  தான் . தமிழர்களுக்கு அவ்வளவு எளிதில் வசீகரிக்காத    நீள் வட்ட  முகம் . அவருக்கு நடிப்பே வர்லை . அதை விட பெரிய  காமெடி   சோக மான காட்சிகளீல்   எல்லாம் அவர் லோ கட்  ஜாக்கெட் போட்டு குனிந்து  குனிந்து   பர்ஃபார்மென்ஸ் பண்ணும்போது  தலையில் அடிசுக்கலாம் போல  தோணுது 


அப்பா,அம்மா,பிள்ளை மூவரும் நடித்து வரும் முதல் படம் பேஷரம் தானோ? என்று பேர் வாங்க   வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்கள்  தான் ரிஷி கபூர்,நீது சிங், இருவரும் .ரன்பீர் கபூர் -ன் பெற்றோர் . இந்த லட்சணத்துல காலம் போன காலத்துல இவங்களுக்கு  ரொமான்ஸ் காட்சிகள் வேற  முடியல 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஹீரோயின்  கவனத்தைக்கவர  அவர்    இருக்கும் ஏரியாவில்  சலூன் கடை  வாசலில்   சேர் போட்டு  ஷேவிங்க் பண்ணும் காட்சி   செம காமெடி . நடை முறை சாத்தியம்  இல்லை என்றாலும்   ரசிக்க வைக்கிறது . 



2.  ஹீரோ தன் நண்பனின்  சாக்சை  தன் பேண்ட்டுக்குள் வெச்சிருந்து  எடுத்துத்தருவதும்   , நண்பர்   அதை துவைச்சே  கொடு என்பதும்  நாஸ்தியான  ரசனை  உள்ள மட்டக்காமெடி  ரகம் என்றாலும் ஆடியன்ஸ் அதை ரசிக்கறாங்க 


3   க்ளைமாக்ஸ் பாட்டு  டாப் ஆங்கிளில்  எடுக்கப்பட்ட விதமும்  நடன இயக்குநரின் உழைப்பும்   ஒன்று சேர்ந்து கலக்கி எடுத்திருக்காங்க ,. அவங்களுக்கு ஒரு ஷொட்டு 


4  திரைக்கதை  செம ஜாலியாக  போர் அடிக்காமல்  இளசுகளைக்கவரும்  விதத்தில்   அமைக்கப்பட்டிருபதால்  இது  மினிமம் கேரண்டி படம்  




இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  கார் திருடனாக  வரும் ஹீரோ   ஓப்பனிங்க்  சீன்ல கார்  திருடி போலீசால் சேஸ் செய்யப்படும் காட்சி படு அபத்தம் . ஒரு தொழில்  முறை திருடன்  கார் திருடியதும்  முதல் வேலையாக கையோடு  கொண்டு வந்த  மாற்று  நெம்பர் பிளேட்டை போட்டுட்டு  அடுத்த கட்டமா கார் பெயிண்ட் கலரை மாற்றுவார் . அந்த பேசிக் நாலெட்ஜ் கூட அவருக்கு  இல்லையே ? 


2.  ஒரு போலீஸ் ஸ்டேஷன் ல புருஷன் , பொண்டாட்டி 2 பேரும்  இன்ஸ்பெக்டராக , ஏட்டாக  இருக்கவே  முடியாது . சட்டத்தில் அதுக்கு இடம் இல்லை . இதுல மட்டும் எப்படி அந்த  ஜோடி ஸ்டேஷன்ல ஒண்ணா ஒர்க் பண்றாங்க ?  அதே போல்    ஒரு இன்ஸ்பெக்டர்  அவர் பிறந்த ஊர் , அல்லது நீண்ட காலம் வ் ஆழ்ந்த  ஊரில்  டியூட்டி பார்க்க  முடியாது , சட்டம் அதை அனுமதிக்காது 



3   ஹீரோ பாத்ரூம் ல  குளிக்கும்போது  க்ளீன்  ஷேவ் முகத்தோட  இருக்கார் , குளிச்சுட்டு கார்ல ஏறும்போது அக்னி நட்சத்திரம் கார்த்திக் மாதிரி தாடியோட இருக்கார் . அவருக்கு அவ்வளவு  சீக்கிரமாவா  முடி வளரும்  , அய்யகோ 



4  ஹீரோயின்  ஒரு சீனில்  சம்மையல்  ரூமில்   கடாயில்   என்னமோ தாளிக்கிறார் ,. அப்போது   காய்கறி , தக்காளி இதை எல்லாம் இடது கையில் எடுத்து போடுறார் . சமையல் , சாப்பாடு இதுக்கெல்லாம் வலது  கை தானே யூஸ் பண்ணனும் ? 


5  ஹீரோயினுக்கு  ஹீரோவைக்கண்டாலே ஆகாது . தன் காரை தேட  வேற வழி இல்லாம அவர் கூட கிளம்ப  வேண்டிய நிர்ப்பந்தம் , பின் சிட்ல ஏறாம  எதுக்கு  முன்  சீட்ல  ஏறுறார் ? ஹீரோ  முன்னால ஏறுன்னு  சொல்லவே இல்லையே ? 


6   ஹீரோ  ஹீரோயினுக்கு முதல் முதலா பூ  குடுத்து லவ்வை பிரபோஸ் பண்ணும்போது  இடது  கையால பூ  தர்றார் . அது அமங்கலமாவும்  , மரியாதைக்குறைவாவும் இல்லை ? காதலுக்கு மரியாதை தர வேணாமா? 


7   மாஸ்க் போட்டு ஓடும் சேசிங்க்  சீன் எல்லாம் ஜிம் கேரி படங்களில்  இருந்து சுட்டது , எடுபடலை 


8  க்ளைமாக்ஸ் ல   வில்லன்   ஹீரோவின்  ஃபிரண்டை கட்டிப்போட்டு  மிரட்டிட்டு இருக்கும்பொது  லேண்ட் லைன்  ஃபோன்   அடிக்கடி ரிங்க் ஆகுது . ஒவ்வொரு டைமும்  வில்லன்  அந்த ரிசீவரை எடுத்து தனியா வைக்கறார் .  எதுக்கு  டைம் வேஸ்ட் ? ஒயரை கட் பண்ணிட்டா மேட்டர்  ஓவர் .  அந்த  காட்சி  ரொம்ப வே எரிச்சல் 


9  ஹீரோ லாக்கப் ல . ஹீரோயின்  போலீஸ்  கிட்டே வந்து   ரூ 25,000 கொடுத்தாலே  விட்டுடுவாங்க . சாதா  கேஸ் தானே ? போலீஸ்  மார்க்கட் ரேட்டே  தெரியாம ஏன் அள்ளிக்குடுக்கறார் ?  அதுவும்  கிட்டத்தட்ட  2 கோடி ரூபாய் ?  ஆ ராசா  கூட  ஜாமீன் ல வெளி ல வர அவ்வளவு பணம்  த்ர்லையே ? 


10  , கோடிக்கணக்கான பணம்  அந்த போலீஸ் வீட்டில்  இருக்கு . அவங்களை திசை திருப்பி ஆட்டையைப்போட  ஹீரோ பிளான் போடறாரு . கல் எடுத்து ஜன்னல்  உடைக்கறாரு .  சாதா  மூளைக்கே  டவுட் வரும் , போலீஸ்க்கு டவுட்  வராதா? அந்த பணத்தை பாதுகாப்பா ஒரு இடத்துல வெச்சு பூட்டிட்டுத்தானே  அந்த போலீஸ் கிளம்பனும் , அப்படியா பெப்பரப்பேன்னு விட்டுட்டுப்போவாங்க  ? 

 

மனம் கவர்ந்த வசனங்கள்

1.    மிஸ்! இந்த பணம்  ரோட்ல  கிடந்துச்சு , உங்களுதான்னு பாருங்க 


 ச்சேச்சே என்னுதில்லை 

 ஓஹோ, பணத்துல  உங்க பேர் இருந்தாத்தான்  நம்புவீங்களோ  ? சரி உங்க பேரைச்சொல்லுங்க   , அதுல எழுதித்தர்றேன் 

 கண்னா , இதெல்லாம் ஓல்டு டெக்னிக் 


 2  என்னை  விட்டுடுங்க . நான்  போறேன் 

 வில்லன் - போ ! மேலே ! 


3    இவளுக்குப்பெரிய ராகுல் காந்தின்னு நினைப்பு ,  நான்சென்ஸ்-னு திட்டறா 


4  என்னடா ,  ஃபிகர் படிஞ்சுதா? 

 ம்ஹூம் , மிஷின் இம்பாசிபிள் 


5  உன்னால இந்த வேலையை செய்ய முடியலைன்னு பணத்தை  ரிட்டர்ன் பண்ணிட மாட்டியே? 


 டீலிங்க் முடிக்கறனோ , இல்லையோ  பணத்தை  ரிட்டர்ன் தர்ற  பழக்கமே நமக்குக்கிடையாது 




6   என்னை ஃபாலோ பண்றதை  நிறுத்து 


 நான் எங்கே  உங்க பின்னால வந்தேன் ? எதிர்ல தானே  வந்தேன் ? 



7  நீ எதுக்காக எனக்கு உதவி செய்யனும் ?

 நான் உனக்காக செய்யலை , ஆண்ட்டிக்காக .


 8  மேடம், ஏன் கம்மியா எடுத்துக்கிட்டீங்க ? 

 நான் 10  நிமிஷமா  டயட்ல இருக்கேன் 


 9  தப்பு செய்யும்போது அதை கண்டிக்கவோ , சுட்டிக்காட்டவோ  பெரியவங்களோ , பெற்றோரோ இல்லைன்னா  யாரா இருந்தாலும்  தப்பு  செய்வாங்க 


 10 . வண்டியைத்திருப்பு 

 என் வண்டில  ரிவர்ஸ்  கீரே  கிடையாது , நோ யூ டர்ன்  , ஹா ஹா 




சி பி கமெண்ட்  - மும்பை ஏரியாக்களீல்  இது ஹிட் ஆகிடும் . படம் போர் அடிக்காம போகுது . Salaam-e-Ishq படம் பார்த்த  ஃபீல் . 

BESHARAM -ஜாலி லவ் ஸ்டோரி.பையா டைப் கார் ட்ராவலிங் லவ் - ரன்பீர் ரசிகர்களுக்கு பிடிக்கும்.-


ரேட்டிங் = 2.75 / 5


 சிதம்பரம்  வடுகநாதன் தியேட்டர்ல  படம் பார்த்தேன் .  100  ரூபா  டிக்கெட் வாங்கிட்டு ஏ சி யும் போடலை , டி டி எஸ் எஃப்ஃபக்ட்டும் வேலை செய்யலை . படு பாடாவதி  தியேட்டர் . 50 ரூபாதான் ஒர்த்  இதுக்கெல்லாம் . மோசமான பராமரிப்பு . மாலை 6 30 க்கு  ஷோன்னு  டிக்கெட் கவுண்ட்டர்ல போர்டு போட்டு  7 மணீக்குத்தான் படம் போட்டாங்க