Tuesday, October 01, 2013

டைப் அடிக்கத்தெரிஞ்சவன் எல்லாம் எழுத்தாளனா? - ஜெயமோகன் விளாசல் @ த தமிழ் ஹிந்து

சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா?

 

இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். ஒரு பெரிய குடும்பத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாகப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைப் பாடும்படி சொன்னார்கள். அவள் ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு ஒரு சினிமா பாட்டைப் பாடினாள். 


அதன் பின்பு கூச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்க ளும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டி நடனத்தை ஆடிக்காட்ட, சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக் கச்சேரி மாதிரி ஏதோ செய்தார். 



அப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாகச் சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினிமாவில் வெற்றிகரமான பாடகர். மணப்பெண்ணின் அப்பா அவரைக் கூட்டிவந்து, நடுவே நாற்காலி போட்டு அமரச் செய்து, பாடும்படி கட்டாயப்படுத்தினார். கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பித்தார். அற்புதமான ஓங்கிய குரல். நுணுக்கமான உணர்ச்சிகள் வெளிப்படும் பாடும் முறை. அவரே பாடிய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள். 


ஆனால், மெல்ல மெல்ல கூட்டத்தில் உற்சாகம் வடிந்தது. பிள்ளைகள் படுத்துத்தூங்கிவிட்டன. கொஞ்ச நேரத்தில் பாதிப் பேர் எழுந்து சென்றார்கள். அவரும் அந்த மனநிலையை யூகித்துப் பாட்டை நிறுத்திவிட்டார். அன்று அந்த மகா கலைஞனுக்காக மிகவும் வருத்தப்பட்டேன். 


அங்கே இருந்தவர்களின் உணர்ச்சிகளை என்னால் மிகத் தெளிவாகவே யூகிக்க முடிகிறது. அங்கே அதுவரை பாடப்பட்டவற்றைப் பாட்டு என்று சொல்லுவதே மிகை. ஒரு பெரும் பாடகர் பாடியதும் அப்பாடல்கள் சாதாரணமாக ஆகிவிட்டன. அங்கே அத்தனை பேரும் உற்சாகமாகப் பாடியமைக்குக் காரணம், அங்கே தனித்திறமையோ பயிற்சியோ தேவையில்லை. எவரும் எதையும் பாடலாம் ஆடலாம் என்ற சூழல் இருந்ததுதான். 



10 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் உரை யாடலில் என் நண்பரான தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சொன்னார், “நிபுணர்களை ஒழிப்பதுதான் வருங்காலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தனித்தன்மையாக இருக்கும்.” 



“எப்படி?” என்றேன். 


“யார் பார்வையாளர்களோ அவர்களிடம் இருந்தே கலைஞர்கள் வரட்டும். பேச்சாளர்கள் வரட்டும். அவர்களே பாடி, அவர்களே பேசி, அவர்களே ரசிக்கட்டும்.” 


எனக்குச் சந்தேகம், “அதெப்படி? ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ரசிக்க வேண்டும் என்றால், அதில் ஒரு தேர்ச்சியும் நுட்பமும் தேவை அல்லவா? அதை ஒரு நிபுணர்தானே கொடுக்க முடியும்? பாடகரே அல்லாத ஒருவர் பாடினால் எத்தனை நேரம் அதைக் கேட்டுக்கொண்டிருப்போம்?” 


“கேட்பார்கள்” என்றார் தயாரிப்பாளர். 


“அந்த உளவியலே வேறு. இன்று சாமானியன் தொலைக்காட்சியில் ஏராளமான நிபுணர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவர்களுக்குக் கிடைக்கும் புகழை மட்டும்தான் அவன் அறிகிறான். அதற்குப் பின்னால் உள்ள கடும் உழைப்பையும் தனித்திறமையையும் அவன் உணர்வதில்லை. தான் சாமானியன் என்று அவனுக்குத் தெரியும்.



 பொறாமையால் அவன் புகழ்பெற்றவர்களை வசைபாடுவான். அலட்சியமாகத் தூக்கி எறிந்து கருத்து சொல்வான். கிண்டலடிப்பான். நாம் அவனிடம் சொல்கிறோம், சரி நீயே வா. வந்து பாடு, ஆடு, பேசு. தன்னைப் போன்ற ஒருவனைத் தொலைக்காட்சியில் பார்த்தால் அவனுக்கு நிபுணர்களிடம் ஏற்பட்ட மன விலக்கம் ஏற்படுவதில்லை.” 




அந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்து பெருவெற்றி பெற்றது. பின்னர், அதைப் போன்ற நிகழ்ச்சிகளின் அலை ஆரம்பித்தது. இன்று தொலைக்காட்சிகளில் என்ன நடக்கிறது? கத்துக்குட்டிகள் வந்து நின்று கூவுகிறார்கள். அவர்களைப் போல கோடிக் கணக்கானவர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். நிபுணர்கள் பேசினால் கேட்க ஆளில்லை. எதைப் பற்றியும் மேலோட்டமாகக்கூடத் தெரியாதவர்கள் கூடி அமர்ந்து மாறி மாறிக் கூச்சலிட்டுப் பேசும் விவாத நிகழ்ச்சிகள்தான் அனைவருக்கும் பிடிக்கின்றன.



அவற்றைப் பார்ப்பவர்களின் மனநிலையைக் கூர்ந்து ஆராய்ந்திருக்கிறேன். பாடத் தெரியாதவர் பாடும்போது இவர்களும் கூடவே பாடுகிறார்கள். ஒரு சாமானியன் அரசியலையும் சமூகவியலையும் பற்றி ஏதாவது சொல்லும்போது இவர்களும் அதில் பங்கெடுத்துக்கொண்டு தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். நிபுணர்களின் நிகழ்ச்சிகளில் இவர்கள் வெறும் பார்வையாளர்கள். ஆனால். இவற்றில் இவர்கள் பங்கேற்பாளர்கள். 



பார்வையாளர்களைப் பங்கேற்பாளர் களாக ஆக்கியதுதான் இணையத்தின் வெற்றி என்று சொல்லலாம். இதழியலில் எழுத்தாளர் - வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்குத் திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத எதுவுமே தேவை இல்லை. இன்று ‘ஃபேஸ்புக்’ போன்ற தளங்களில் எல்லாரும் எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். தங்களைப் போன்றவர்கள் எழுதுவதை மட்டும் படிக்கிறார்கள். 



இதை ஒருவகை ஜனநாயகமயமாதல் என்று ஆரம்பத்தில் சொல்லிவந்த சிந்தனையாளர்கள்கூட, இன்று மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் ஜனநாயகத்தின் அடிப்படையான ஓர் அம்சம் உண்டு என்பதில் ஐயமே இல்லை. சாமானியனின் குரல் இன்று ஊடகங்களை நிறைத்திருக்கிறது. அவனுடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் நேரடியாகவே பதிவாகின்றன. 



ஆனால், இதற்கு ஒரு மறுபக்கம் உண்டு. ஒரு துறையின் நிபுணன் என்பவன், ஒரு சமூகத்தில் நிகழ்ந்த ஓர் உச்சப்புள்ளி. அச்சமூகத்தில் பரவலாக உள்ள ஒரு திறமையை ஒரு மனிதன் தன் தனித்தன்மையாகக்கொண்டு அதில் தன்னை அர்ப்பணித்து, அதன் மிகச் சிறந்த சாத்தியத்தைத் தொட்டுவிடுகிறான். அவனைத்தான் அச்சமூகத்தில் உள்ளவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான திறமை தொடர்ந்து வளர்ச்சியடையும். 


ஆனால், இன்றைய சாமானியர்களின் ஊடக அலையில் நிபுணர்களும் கலைஞர்களும் வெளியே தள்ளப்படுகிறார்கள். ஒரு சமூகமே தனக்கு ஏற்கெனவே என்ன தெரியுமோ அதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறது. எது எல்லாராலும் முடியுமோ அதையே செய்து ரசித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வட்டத்துக்குள் கண்ணை மூடிக்கொண்டு முடிவில்லாமல் சுற்றிவருவது போன்றது இது. 


ஊடகத்தின் இந்தப் போலி ஜனநாயகம் நிபுணர்களை அடித்து வெளியே துரத்திவிட்டதைக் காணலாம். சமூக வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் அதற்குள் வந்த உலகின் முதல்நிலைச் சிந்தனையாளர்களான ஜாரேட் டயமண்ட், டெஸ்மண்ட் மோரிஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றவர்களெல்லாம் விரைவிலேயே அதிலிருந்து அகன்றுவிட்டார்கள். அதில் சாமானியர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள மட்டுமே இடம் என அவர்கள் அறிந்துகொண்டார்கள். இன்று இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு அப்பால் தங்கள் அறிவியக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிந்தனையாளர்களே அதிகம். 


தொலைக்காட்சியும் சமூக வலைத் தளங்களும் நம் வீட்டு வரவேற்பறைக் கொண்டாட்டங்கள் மட்டுமே எனப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான அறிவுக்காகவும் உண்மையான கலை அனுபவத்துக்காகவும் நாம் நிபுணர்களைத் தேடிச் செல்வோம். அந்தப் புரிதல் இன்றைய அவசியத் தேவை.
ஜெயமோகன், எழுத்தாளர், சமூக விமர்சகர் - தொடர்புக்கு: [email protected] 


 மக்கள் கருத்து 


1. அறிஞர்கள்தான் பேசவேண்டும் மற்றவர்கள் பேசக்கூடாது என்று சொல்லவில்லை. அனைவரும் பேசுவதுதான் ஜனநாயகம் என்றுதான் சொல்கிறார். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் எழுதுவதையும் சொல்வதையும் கொஞ்சம் கவனிக்கலாமே என்கிறார். அப்போதுதான் கவனிக்கவும் தெளிவாகப் பேசவும் கைவரும். நம்மைப்போன்றா இன்னொருவர் எழுதுவதை "மட்டுமே"வாசிக்கும்போது இந்தமாதிரித்தான் ஆகும். இங்கே கருத்துச்சொன்ன சிலர் தயவுசெய்து அவர்களின் தரத்தைவிட கொஞ்சம் மேலே உள்ள விஷயங்களை வாசிக்க முயற்சி செய்யவும் 



2  இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கும் விஷயங்கள் கொஞ்சம் மிகையோ என்று வாசிக்கும்போது தோன்றியது. ஆனால் கீழே வந்துள்ள குறிப்புகளை பார்க்கும்போது மிகச்சரியாக கணித்குத்தான் சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது. ஒரு வாதம் முன்வைக்கப்பட்டால் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றுகூட பார்க்காமல், அதன் தர்க்கம் என்ன என்று கொஞ்சம் கூட யோசிக்காமல், மனதுக்குத் தோன்றுவதை உடனடியாக எதிர்வினையாக எழுதிவிடுகிறார்கள். இந்த வழக்கம் ஏன் வருகிறதென்றால் முகநூலினால்தான். இதுதான் டீக்கடை சர்ச்சை. யாரும் யாரையும் கவனிக்காமல் பேசிக்கொண்டே இருப்பது. மற்றவர் சொன்னதை பொருட்படுத்தாமல் பேசுவது. இதன் அபாயத்தைத்தான் ஆசிரியர் சொல்கிறார்


எந்த ஒரு கலைஞரும் தன்னுடைய தனி திறமை சிறந்து இருந்தால் யாரலும் எந்த நிலையாலும் ஓரங்கட்டமுடியாது. இதை எல்லாம் கடந்து தான் அவரின் திறமை முன்னிற்கும். அதே போல தான் ஒரு துறையில் உள்ள நிபுணத்துவம் பெற்றவர்களும், அவர்களுடைய நிபுணத்துவம் சிறந்த நிலையில் உள்ளவரை மட்டுமே அவர்களுக்கு வரவேற்ப்பு இருக்கும். சரியான திறமை நிறைந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் எங்கும் புறக்கணிக்கபடமாட்டார்கள், இது உங்களுக்கு தெரியாதா என்ன ? சமூக வலைத்தளங்கள் ஜனநாயக களமா...? சமூக வலைதளங்களில் நிபுணத்துவம் புறக்கணிக்க படலாமா என்ற தலைப்பு இல்லையே.... உங்களுடைய தலைப்பு என்னவோ அதற்கேற்ற பதில் தான் நான் தந்துள்ளேன்... பொச்சரிப்பு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தியது உங்களின் தரம்தாழ்ந்த மனநிலையை பிரதிபளிக்கும் ஒன்று...



அன்புள்ள Ayesha Farook, சொல்வதன் அடிநாதம் என்ன என்று தெரிந்துகொள்ளாமல் "உடனடியாக எதிர்வினை ஆற்றியே ஆகவேண்டும்" என்ற உந்துதலால் சொல்லப்பட்டது இது. கட்டுரையின் மையப்பொருள் ஜனநாயக எதிர்ப்போ, சாமான்யனும் எழுதுகிறானே என்ற பொச்சரிப்போ அவன் எழுதுவது வரவேற்பு பெறுகிறது என்ற பொறாமையோ (யார் அப்படி தொடர்ந்து எழுதி தொடர்ந்து வரவேற்பு பெறும் எழுத்தாளனல்லாத சாமான்யன் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ? தொடர்ந்து ஒருவன் எழுதி, தொடர்ந்து வாசக வரவேற்பும் பெரும்போதே, அவன் தனது துறையில் தேர்ச்சி பெற்று வருகிறான் என்பதும் அவன் அதற்கப்புறமும் சாமான்யன் அல்ல, ஒரு எழுத்தாளனே என்பதும் உங்களால் புரிந்துகொள்ள இயலாதா ?) இல்லை. துறை சார்ந்த நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டு நிபுணத்துவம் இல்லாத சாமான்யர்களை மட்டுமே முன்னிறுத்தும் மைய நீரோட்ட ஊடக நிகழ்ச்சிகள் அறிவியக்கம் அல்ல, அதற்கு துறை சார்ந்த வல்லுனர்களையே நாடவேண்டும் என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். மட்டுமல்ல, சமூகம் எனும்போது ஜனநாயகம் வந்துவிடுகிறதுதான். ஆனால் எந்த ஜனநாயகமும் நிபுணர்களை புறக்கணித்தால் அது வளர்ச்சி அடையாமல் தேங்கிப்போகவேண்டியதுதான்.


எனக்கு தெரிந்து டி.வி விவாதங்களில் நிபுணர்களை உள்ளடக்கிதான் பேசுகிறார்கள். ஜெ அவர்களை நிபுணர்கள் இல்லை என்கிறாரா? யார் நிபுணர். நிபுணரை எப்படி அடையாளம் காண்பது? நிபுணரை அடையாளம் காணுதலில் தமிழ் சூழலில் என்னென்ன முறைகளை கையாள வேண்டும் என்பது குறித்தும் சொல்லி இருந்தால் அவர் பார்வையின் முழு அளவு தெரிந்து இருக்கும். சும்மா போகிற போக்கில் ஏதாவது சொல்லி போவது சரி இல்லை.


Ramiah Ariya Tamil Writer at Writer
சமூக வலைத் தளங்களைப் பற்றிப் பேசும் பொழுது, இதற்கு “முன்னால்” என்ன இருந்தது என்று நாம் முதலில் யோசிக்க வேண்டும். உண்மையில் ஊர் திண்ணைகளில் சிலர் கூடிப் பேசுவது என்றும்; வாசகர் வட்டங்கள் என்றும் நிகழ்ந்த பல விவாதங்கள் இப்பொழுது சகலருக்கும் “பதிப்பிக்கும்” திறன் வந்திருக்கிறது. அவ்வளவு தான். ஜெயமோகனின் கட்டுரைக்குச் சரியான பதில் இது தான் – பழைய வாசகர் வட்டங்களைப் பற்றி அவர் கருத்து என்ன? சங்கீதக் கச்சேரியைச் சேர்ந்து அலசிய ரசிகர்கள் குழுக்களைப் பற்றி அவர் கருத்து என்ன?அவை நிபுணத்துவத்திற்கு எதிரானவை என்று அவர் நினைத்தாரா என்ன?


சாமானியன் ஒருவன் நிபுணனாக மாறும் ஆரம்ப புள்ளியாக தொலைகாட்சியும் வலை தளங்களும் மாறும் சாத்தியம் உண்டு . நிபுணனும் ஆரம்பத்தில் ஒரு சாமானியனாக இருந்திருக்கலாம் என்பதை உணரவேண்டும் . நிபுணன் தன் இடம் பறிபோகும் என்ற அச்சத்தை கை விட்டு சாமானியரின் குறைகளை களைந்து முன்னெழ உதவினால் உத்தமம் .



8 Balasubramanian Ponnuswami at Tamil Nadu Agricultural University ஜெயமோகனின் இந்த வார்த்தைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை: "தொலைக்காட்சியும் சமூக வலைத் தளங்களும் நம் வீட்டு வரவேற்பறைக் கொண்டாட்டங்கள் மட்டுமே எனப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான அறிவுக்காகவும் உண்மையான கலை அனுபவத்துக்காகவும் நாம் நிபுணர்களைத் தேடிச் செல்வோம். அந்தப் புரிதல் இன்றைய அவசியத் தேவை.



9  இதுல இவர் குறிப்பிடும் "Richard Dawkins", இன்றும் மிகத்தீவிரமாக ட்விட்டரில் இயங்கி வருகிறார்



10  
இன்று காலையில் புதியதலைமுறை தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் இக்கட்டுரை குறித்து பேசப்பட்டது.அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற "கருத்து நிபுனர்களில்" ஒருவரான தியாகு சரமாரியாக ஜெயமோகனை வசை பாடினார். இந்த ஆசாமி ஜெயமோகனின் எழுத்துக்களில் ஒரு வரியையாவது படித்து புரிந்துகொள்ள முயன்றதற்கான தடயமே அவர் பேச்சில் இல்லை.ஜெயமோகன் இக்கட்டுரையில் வைத்துள்ள விமர்சனத்தை மெய்ப்பிக்கும் விதத்தில் அமைந்தது அவரது பேச்சு.



இன்று காலையில் புதியதலைமுறை தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் இக்கட்டுரை குறித்து பேசப்பட்டது.அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற "கருத்து நிபுனர்களில்" ஒருவரான தியாகு சரமாரியாக ஜெயமோகனை வசை பாடினார். இந்த ஆசாமி ஜெயமோகனின் எழுத்துக்களில் ஒரு வரியையாவது படித்து புரிந்துகொள்ள முயன்றதற்கான தடயமே அவர் பேச்சில் இல்லை.ஜெயமோகன் இக்கட்டுரையில் வைத்துள்ள விமர்சனத்தை மெய்ப்பிக்கும் விதத்தில் அமைந்தது அவரது பேச்சு.



நற்சிந்தனையாளர்களுக்கும் வெகுசனங்களுக்கும் இருக்கும் இடைவெளியை இதுபோன்ற கட்டுரைகள் மேலும் அதிகப்படுத்தும். பெரும்பாலும், ஊடகங்கள் வெகுசனங்களின் கருத்துக்களை யாராவது துரை நிபுணர்களை பங்கேற்க வைத்துத் தான் நடத்துகிறார்கள். இவரை யாரும் அழைப்பதில்லையா? எதற்காக., யாரை என்று குறிப்பிட்டுக் கூறினால் நல்லது.



13 vishwa
நற்சிந்தனையாளர்களுக்கும் வெகுசனங்களுக்கும் இருக்கும் இடைவெளியை இதுபோன்ற கட்டுரைகள் மேலும் அதிகப்படுத்தும். பெரும்பாலும், ஊடகங்கள் வெகுசனங்களின் கருத்துக்களை யாராவது துரை நிபுணர்களை பங்கேற்க வைத்துத் தான் நடத்துகிறார்கள். இவரை யாரும் அழைப்பதில்லையா? எதற்காக., யாரை என்று குறிப்பிட்டுக் கூறினால் நல்லது.




சமூகம் என்று வரும் போதே அதில் ஜனநாயகம் வந்துவிடுகிறது. ஒரு நிபுணத்துவம் பெற்றவர் மட்டுமே தன் சிந்தனைகளை எண்ணங்களை எழுத முடியும்,வடிவமைக்க முடியும் என்றில்லை. சொல்ல வந்த கருத்தை ஒரு சமானியனும் புரியும் வகையில் எழுதுவதிலே ஒருவரின் எழுத்து வெற்றி பெறுகிறது. அதை ஒரு சமானியனும் எழுதலாம் அல்லது நிபுணத்துவம் கொண்டவரும் எழுதலாம். நாம் எழுதுவதை விட ஒரு சாமானியர் எழுதுவது வரவேற்ப்பு பெறுகிறதே என்று பல எழுத்தாளர்களுக்கு மனதில் ஒரு காழ்புணர்ச்சி உள்ளது.அவர்கள் மனதில் என்றும் ஒரு சாமானியன் எழுதுவதை விட தங்கள் எழுத்துக்கே வரவேற்ப்பு இருக்க வேண்டும் என்கிற மனநிலை உள்ளது. அந்த மனக்குமறல் கூட சிலர் தங்களின் பெயரை கருதி வெளிபடுத்துவது இல்லை, சிலர் அதை வெளிப்படுத்தி அவமானமும் படுகின்றனர். புத்தக வடிவில் எழுத திறமை இல்லாவிட்டாலும் ஒரு சாமானியரும் கண்டிப்பாக ஒரு சிறந்த எழுத்து படைப்பை கொடுக்க முடியும் என்பதற்கு இந்த சமூகதளங்கள் ஆதாரம். நிபுணத்துவரின் எழுத்துக்கள் போல சாமானியர் எழுதினால் பளப்பளக்காது ஆனால் சாமானியன் சொல்ல வந்த கருத்து பாமரனுக்கு உடனே சென்றடையும்.



15  Sakthivel Sakthi good at own business
சமூக வலைதளங்கள் ஜனநாயகக் களமா? ஜெயமோகன் அவர்களின் கட்டுரை படித்தேன். திரைப்படங்கள் வெற்றி பெற மிக முக்கிய காரணம் மனிதனின் உளவியல்தான். தான் செய்ய இயலாததை ஆனால் செய்ய வேண்டியதை திரையில் கதாநாயகன் செய்வதை ரசிக்க ஆரம்பித்ததால் திரைப்படங்கள் வெற்றி பெற்றது. அதைப்போலத்தான் தொலைக்காட்சியில் பார்வையாளர்களை பங்கேற்க வைத்து உளவியல் அடிப்படையில் தொலைக்காட்சிகள் வெற்றி பெற முயற்சி செய்கின்றன. இதில் அடிமைத்தனமாவது என்னமோ பாமர ஜனங்கள்தான்.


நன்றி - த ஹிந்து


டிஸ்கி - டைட்டில்  சும்மா அட்ராக்சனுக்கு , ஜெமோ அப்படி சொல்லவில்லை, ஆனால் அவர் சொல்ல வந்த அர்த்தம் அதுதான்.

எல்லா கவர்மெண்ட் ஆஃபீசையும் இழுத்து மூடுங்க - ஒபாமா உத்தரவு

அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒபாமா கேர் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒபாமாவின் சுகாதார நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குடியரசுக்கட்சியினர் அதிகமுள்ள பிரதிநிதிகள் சபையில் ஒபாமாவின் இத்திட்டத்திற்கான நிதியை நிறுத்திவைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவும் முடிந்தது.
இதனையடுத்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 1995-96 க்கு பிறகு முதன் முறையாக அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 



மக்கள் கருத்து


1. மன்னுஜி அங்கே போயிட்டு வந்தார்......உடனேயே இந்த எபெக்ட்......என்னோட ராசி நல்ல ராசி, அது எப்போதும் பெரியவங்க ஆசி....



2  அமெரிக்கா திவால் ஆகவில்லை. நிதி பட்ஜெட் ஒப்புதலுக்கு இரு கட்சிகளிடையே கருத்து வேறு பாடினால் தடை. 



3 எங்க ஊருல இருந்து நாலு காங்கிரஸ் எம்பி மந்திரிகளை சேத்துக்கங்க. எல்லாம் சரி ஆகிடும். அதுவும் நம்ப நாராயணசாமி, சிதம்பரம் மட்டும் இருந்த குட போதும். வேன பேணி பிரசாத்தையும் செதுகாங்க... நல்ல பாதுகாப்ப அமெரிக்க இருக்கறத நெனைச்ச சுஷில் குமார் வருவாரு.



4 அரசு நிறுவனங்கள் என்றும், சுகாதார நலத்திட்டத்திற்கான எதிர்ப்பினால் அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூடுவதென முடிவு செய்ததாகவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அது அனைத்து அரசு அலுவலகங்களுமா அல்லது சுகாதாரத்துறை அலுவலகங்கள் மட்டுமா என்பதை தெளிவுபடுத்தவும்.



5  உலகின் மிக முன்னேறிய நாடான அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம் நாடு போன்ற முன்னேறாத நாடுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கதி என்னவாக இருக்கும்.


6  அமரிக்காவில் இன்சூரன்ஸ் கம்பனிகள் வைத்ததுதான் சட்டம். குடியரசுக் கட்சிக்காரர்கள் தான் இவைகளின் முதலாளிகள் இன்சூரன்ஸ் எடுக்க முடியாமல் ஏழைகள் , குறிப்பாக கருப்பு இனத்தவர்கள் படும் பாடு சொல்லிமுடியாது. அதைத் தவிர்க்க முயற்சித்த ஒபாமா , குடியரசுக் கட்சிப பணக்கார முதலைகளிடம் ,தோற்கிறார். அடுத்தவனுக்குத்தான் அமெரிக்க உபதேசம்.

 நன்றி - த ஹிந்து ,விகடன்

விஜய் ,அஜித் இருவரில் யார்க்கு ரசிகர்கள் அதிகம் ?

1. நமீதா,,மாளவிகா,மந்த்ரா,சமந்தா.  நஸ்ரியா..த்ரிஷா,ஆன்ட்ரியா,ஸ்ரீதிவ்யா என பல கால கட்ட கனவுக்கன்னிகள் பெயர் ஈறுகெட்ட எதிர்மறைபெயரெச்சம்்



----------------------


2 கடலில் சுடப்படும் மீனவர்களை கரையில் நின்று வேடிக்கை பார்க்கும் எல்லோரும் உதவாக்கரைப் பசங்களே!



----------------------


3  ஓம் நமோ நாராயணா ன்னு கமல் தீர்க்கதரிசனமா பாடுனது ந(ரேந்திர) மோ(டி) யை மனசில் வெச்சுத்தான்னு யாரும் கிளம்பலையா?



---------------------------


4  மோடிமஸ்தானைக்கூட நம்மாளுங்க நம்பிடறாங்க மோடின்னா பம்மறாங்க



---------------------------


5  திருமணம் ஆனதும் எல்லா புருசன் களுக்கும் அவரவர் சம்சாரத்தை தூக்கும் தண்டனை கிடைக்கிறது # என்னை தூக்குங்க பார்ப்போம்



----------------------


6 ஜெ சி எம் மாக இருக்கும் காலகட்டத்தில் மோடி பிரதமர் ஆவது தமிழ் நாட்டுக்கு நல்லது


---------------------


7 நான் அரிச்சந்திரன் மாதிரி ,ராமன் மாதிரின்னு சொல்லிட்டு இருக்கற ஆளுங்க குடும்பத்தை தவிக்க விட்டவங்களா இருப்பாங்களோ?



-------------------------


8  எதிரியை (சம்சாரத்தை) பக்கத்திலே வெச்சுக்கோ - சின்ன வீட்டை தூரத்தில குடி வெச்சுக்கோ் :) புது கில்மா மொழி




-----------------------------


9  வாய் உள்ள பிள்ளை கிஸ் கொடுக்கும்


-----------------------


10 விஜய் ,அஜித் இருவரில் யார் அதிகம் கலாய்க்கப்படுகிறார்களோ அவருக்கே ரசிகர்கள் அதிகம்




---------------------


11  சிவாஜி,கமல் இருவரும் சிறந்த நடிப்பாற்றல் மிக்கவர்கள் தான்.ஆனால் எம் ஜி ஆர் ,ரஜினி போல் அதிக மக்களை அவர்களால் சுண்டி இழுக்க முடியவில்லை



------------------------------


12  6 மெழுகுவர்த்திகள் = மு க ,ஸ்டாலின் ,அழகிரி ,கனிமொழி,ஆ ராசா ,குஷ்பூ #திமுக




---------------------------


13  முன்னோர் சொல்படி நடப்பவன் தமிழன்- பெரிதினும் பெரிது கேள் * நமீதா ,குஷ்பூ,மந்த்ரா ,ஹன்சிகா,ஆண்ட்ரியா




----------------------


14  தாமரை போல் இருந்தாலும் அரசியலுக்கு வந்தால் நமீதா கை சின்னத்தில் தான் போட்டியிடுவார் என பட்சி சொல்கிறது



-----------------------


15  காதலியின் உதட்டில் உள்ள எல்லா ரேகைகளுமே காதலனுக்கு அதிர்ஷ்ட ரேகைகளே !



-----------------------


16  அத்வானி -4 ,ஜெயலலிதா-5,ராகுல்காந்தி -6,நரேந்திரமோடி-7,அதனால மோடி தான் பிரதமர்னு அடிச்சுச்சொல்றோம்னு இன்னும் எந்த ஜோசியரும் கிளம்பலையா?




------------------------


17  உலகிலேயே சிலைகள் அதிகமுள்ள நாடும் ,அணு உலைகள் அதிகம் உள்ள நாடும் இந்தியாதான்



------------------------


18 டெல்லி - பஸ் மாணவி  ரேப் கேஸ் தூக்கு தண்டனைக்கைதிகள் தண்டனைக்காலம் வரும் முன்னரே தற்கொலை செய்துகொள்ளலாம் என அவதானிக்கிறேன் # நாலில் இருவர்



---------------------------


19  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - மிஷ்கின் படம். சிம்பு - ஹன்சிகா வேட்டை மன்னன் # இரண்டும் தனித்தனி செய்திகள்




------------------------------


20  ஜெ வுக்கு ஆதரவாக அறிக்கை விட்டது ரஜினியின் அரசியல் சறுக்கல்.தன் மகளின் ஆசைக்கு கோச்சடையான் நடித்தது சினிமா சறுக்கல்



---------------------------------

Monday, September 30, 2013

சந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி

 

1. பேட்டரியே நிக்காத செல்லுக்கு டூயல் சிம்மு!


2 அவங்கப்பன் நெறைய டிவி சீரியல் பாப்பான் போல அதுல வர மாதிரியே பேசுறான்



3 மேரேஜ் ஆன பொண்ணுங்க விட்டுக்குடுத்து போகல பசங்க துட்டுகுடுத்து போயிடுவாங்க!


4 பேருதான் காராசேவ் ஆனா அத சேவ் பண்ண ஆள் இல்லையே


5 சில நேரத்தில ஆம்பளைங்க எடுக்கிற முடிவு கூட சரியா இருக்கும்


6 டேய் , ஜானைக்காணோம்

அவனைக்காணோம்னா அவனைப்போய்த்தேடுடா , என் கிட்டே ஏன் வந்தே?



7 ஒயின் ஷாப் போலாமா?

நான் ஒரு பீர் தான் அடிப்பேன்

செருப்பாலயே அடிப்பேன் , நாம போறது அவனைத்தேட



8 சின்ன வயசுலயே ஜெகன் மோகினி படத்தை நாங்க பேய்ப்படம்மாதிரி பார்ப்போம், நீ ஜெயமாலினியைப்பார்த்தவன் தானே ?


9 அம்பது லட்சம் ரூபா செலவு பண்ணி மேரேஜ் பண்ணி வெச்சா அங்கே போய் வேலை செய்யாம ஐயாயிரம் ரூபா இன்க்ரீமெண்ட்டுக்காக ஆஃபீஸ் வந்து இங்கே வேலை செஞ்சுட்டு இருகான் ராஸ்கல்



10 இங்கே வந்து நைட் ஷிஃப்ட் பார்க்கறியே , வீட்ல உனக்குப்பதிலா வேற யாராவது வந்து நைட் ஷிஃப்ட் பார்த்துடப்போறான்



11 ஹனிமூன் எனக்கு ஆகலை , நீங்க ஃபிரீயா மிஸ் ?



12 மேடம் , (என் தலை வழுக்கைன்னு சொல்லிக்காட்ட ) கிரவுண்ட் காலியாத்தானே இருக்கு , கிரிக்கெட் விளையாடலாமா?னு கூப்பிடறான்



13 மிஸ் , காரசேவ் சாப்பிடறீங்களா?


ச்சே ச்சே எனக்கு பிடிக்காது


இந்த மூஞ்சிக்கே உன்னைப்பிடிக்கலையே .. ....



14 டேய் , நீ ஆம்ப்ளையா இருந்தா நேர்ல வா

மிஸ் , நீங்க ஆம்பளையா இருந்தா வாங்க



15 மிஸ் டர் , கஸ்டமர் கேர்னா என்ன அர்த்தம் ?


வாடிக்கையாளர் சேவை மையம்

ஓக்கே , எனக்கு நச்னு 4 கஸ்டம்ர் அரேஞ்ச் பண்ணிக்குடு


அய்யோ , அக்கா நாங்க அந்த மாதிரி ஆள் இல்லீங்கக்கா



16 அவன் ரொம்ப பயந்தவனுங்க


ஓஹோ , அப்போ நீ தைரிய சாலியா?


நான் அவனை விட பயந்தவனுங்க ஹி ஹி



17 யோவ் , ஆம்ப்ளைங்க அழக்கூடாது 



நான் ஒண்ணும் அழலையே , கண் வேர்க்குது அவ்ளவ் தான்



18 டேய் ,. ஒவ்வொரு டைமும் மூடிட்டுப்போன்னு சொன்னாத்தான் மூடிட்டுப்போவியா?

யக்கா , கண்டிப்பா மூடிட்டுப்போறேனுங்க



19 மிஸ் , உங்க வாய்ஸ் சோ க்யூட்


யோவ் , நான் ஆம்பளை



20 நாம 2 பேரும் மேடு ஃபார் ஈச் அதரா?

உலகத்துல யாருமே பிறக்கும்போதே மேடு ஃபார் ஈச் அதரா பிறப்பதில்லை 





21 நம்ம கூட இருக்கறவங்க நம்மை விட்டுப்போயிட்டா நாமளும் போய்டனும்னு அவசியம் இல்லை


22 வாட்ங்கற ஒரு வார்த்தையை வெச்சு எங்களை வாட்டி எடுத்துட்டான்



23 சார் , எதிர் வீட்டு ஆண்ட்டி சேனைக்கிழங்கு வாங்கிட்டு வரச்சொன்னாங்க , பர்மிஷன் அல்லது லீவ் கொடுத்தா போய்ட்டு வந்துடுவேன்



24 யாரும் இந்த அசிங்கத்தை பார்த்துடலையே?


280 பேர் மட்டும் பார்த்தாங்க



25 டேய் , ஏன் இவ்ளவ் சந்தோஷமா இருக்கே? உன் பொண்ட்டாட்டியைக்கொன்னுட்டியா?



26 அய்யோ , ஃபிளாட்டோட செகரெட்டரி பார்த்துட்டாரு

அவன் கிடக்கான் , அவன் வீட்டுக்குள்ளே இன்னொரு ஆஃபீஸ் செகரெட்டரியை வெச்சிருக்கான் தெரியுமா?



27 மல்லிகைப்பூ வாங்கிட்டு உன்னைப்பார்க்க வீட்டுக்கு வர வேண்டியவன் சரக்கு வாங்கிட்டு என்னைப்பார்க்க வரான் 


28 ஆல் பியூட்டி பார்லர்ஸ் ஒன் மன் த் லீவ் விட்டுட்டா எது எது ஒரிஜினல் அழகுன்னு தெரிஞ்சுடும் , எல்லாம் மேக்கப் 



29 ஃபிகருக்காக நாம அடிச்சுக்கக்கூடாது , ஆனா ஃபிரண்ட்சுக்காக அடிச்சுக்கலாம் 


30 டேய் , நீ எல்லாம் குடும்பம் நடத்திப்பாரு , எவ்ளவ் செலவு ஆகுதுன்னு அப்போத்தான் தெரியும்  



டாடி , நீயும் ஃபிரண்ட்ஸ் கூட சினிமாவுக்குப்போய்ப்பாரு , அப்போத்தான் எவ்ளவ் செலவு ஆகும்னு உனக்குத்தெரியும் 



31 இந்தப்பொண்ணுங்க வீட்டுக்குப்போய் பார்த்தாத்தான் தெரியும் அவங்க ஆடும் ஆட்டம், அட்டர் டைம்ல அஞ்சு சாவு விழுந்த மாதிரி என்னமா ஆடறாங்க ? 


32 உன் சித்தப்பா வீட்ல என்ன கூட்டம் ? அவமானம் தாங்க முடியாம தூக்கு போட்டு செத்திருப்பாரா?  

அந்த நாய் அப்படி எல்லாம் பண்ண மாட்டானே? 



33 ஆஃபீஸ் அட்ரஸ் , பேரு எல்லாம் தந்தா நான் ஃபிரீயா இருக்கும்போது உங்களை வந்து பார்ப்பேன்


மச்சி , நீ எப்பவும் ஃபிரியாத்தானே இருப்பே?



34 நைட் பேசி முடிச்சுடுறேன்

நீ ( அவளை ) முடிச்சுடுவேன்னு தெரியும் , பேசிட்டியா? 



35 இத்தனை பேரு இருக்கீங்க , இதுல யாரு ஜான் ?

எல்லாரையும் விட ஒரு ஜான் உயரமா இருக்கானே அவன் தான் ஜான்



36 என் கிட்டே இல்லாதது அந்த நாய் கிட்டே என்ன இருக்கு ? முதல்ல அந்த நாயை கரெக்ட் பண்ணனும்


37 பூஷனா? புருஷனா>?


2ம் 1 தான் , எத்தனை செல்வ ராகவன் படம் பார்த்திருக்கேன்


38 அடி வாங்கவே ஆன் த வே வந்துட்டு இருக்கான் பா



39 டேய் இரு இரு , அவன் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றான்


40 டேய் நான் என்ன குடிகாரனா> ?

பின்னே ? குல்பி ஐஸ்காரனா? 





41 ஒரு பொண்ணு அழுதா யாரோ ஏமாறப்போறாங்கன்னு அர்த்தம் , ஒரு பையன் அழுதா அவனை ஒரு பொண்ணு ஏமாத்திடுச்சுன்னு அர்த்தம்



42 சும்மாவே அவ பிரதர் பிரதர்னு கூப்பிட்டு வெறுப்பேத்துவா , அடுத்து ஃபாதர்னு கூப்பிடப்போறானு பயமா இருக்கு 


43. லவ் பெயிலிருக்கு அப்பறம் லைப்'பே இல்லைனா 25வயசுக்கு மேல எவனும் இங்க உயிரோடவே இருக்க மாட்டான்!



44 ஊருக்கே பருப்ப இருந்தாலும்,வீட்டுக்கு துடப்பக்கட்டதான்



45 நீ என்னிக்கு லவ்வ சொல்றியோ அன்னில இருந்து உன் லைஃப் ஸ்டார்ட் ஆயிரும்.



46 லவ்க்கு அப்புறம் ஒருத்தன் குடிச்சானா லவ் பெயிலியர் ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒருத்தன் குடிச்சானா லைப்பே பெயிலியர்



47 டேய் மாப்ளை , என்னடா புது நெம்பர்ல இருந்து கூப்பிடறே? 

என் நெம்பர்ல இருந்து கூப்பிட்டாத்தான் எடுக்க மாட்டேங்கறியேடா ? 



48 சார் , என்ன சார் இப்படிச்சொல்லீட்டீங்க, உங்க மூஞ்சியைப்பயன் படுத்தி முந்நூறு குழந்தைகளூக்கு சோறு ஊட்டலாமே? 



49. இது தான் நம்ம ஃபேவரை ட் ஐட்டம் 


எதை? இந்த வேலைக்காரியயா சொல்றீங்க?


50 மொட்டை வில்லன் - இந்த மண்டைக்கு படிப்பு ஏறலைங்க 

இந்த மண்டைல பேனே ஏறாது , படிப்பு மட்டும் எப்படி ஏறும் ? 

 

 டிஸ்கி 1 -

ராஜா ராணி - சினிமா விமர்சனம்





டிஸ்கி 2 -

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்



டிஸ்கி 3  - டைட்டிலில் சந்தானம் பஞ்ச் என இருந்தாலும்  இது படத்தில் வரும் மற்ற ரசிக்கும் வசனங்களையும்  உள்ளடக்கியது  

தனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா? ஒரு வெட்டி ஆராய்ச்சி

இனிய காலை வணக்கம் நண்பர்களே...


1.உங்க சிரிப்பு நல்லாருக்கு.ஆனா சில டைம் அது ஓவரோன்னு தோணும்.




ம்.உன் உதடு கூட நல்லாருக்கு.ஆனா வாய் நீளமோன்னு தோணும்.நான் ஏதாவது சொன்னேனா?

--------------------

2.மரண தேதி குறிக்கப்பட்டதும் மரணத்துக்கான காத்திருத்தலுமே பெரும் தண்டனை

-------------------

3.தமிழ் தெரியாத இங்க்லீஷ்காரன் கிட்டே தமிழ் பேசுவியா? மாட்டே இல்ல.இங்க்லீஷ் தெரியாத தமிழன் கிட்டே மட்டும் ஏன் பீட்டர் இங்க்லீஷல பேசறே?

-----------------------

4.டாக்டர்.எனக்கு காமாலை வந்திருக்கு. ம்.எதுக்கு காலைலயே வந்துட்டீங்க? சாயங்காலம் வாங்க # கா மாலை

-----------------------

5.சூரத் ல சொந்தக்காரங்க இருந்துட்டா ரொம்ப சவுகர்யம்.வீட்ல சூரத் புடவை பீரோ ன்னு தனியா ஒதுக்கிடலாம்

---------------------


இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மருத்துவர்.விஜய் மற்றும் இடது ஓரத்தில் இருக்கும் அக்கா ரியாக்சன்:

"எனது ஆட்சியில்தான் திரைத்துறையினர் சுதந்திரமாக இருக்கிறார்கள்" மேடம். ஜெ.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மருத்துவர்.விஜய் மற்றும் இடது ஓரத்தில் இருக்கும் அக்கா ரியாக்சன்:
 
"எனது ஆட்சியில்தான் திரைத்துறையினர் சுதந்திரமாக இருக்கிறார்கள்" மேடம். ஜெ.


6.காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளா தெரியும் ,காய்ஞ்சு கிடக்கும் காளைகளுக்கு கண்டதெல்லாம் மஞ்சமா மஞ்சுளாவாத்தெரியும்

----------------------

7.தொப்பை வராம இருக்க தினமும் 4 கிமீ வாக்கிங் போகனும்.கடன் காரன் நம்மை பிடிக்க வந்தா ரன்னிங் போகனும்.பிகர் எதிரே வந்தா ஜாகிங் போகனும்

------------------------

8.உலக மகா அப்பாவி யார்னா ஒயின் ஷாப் ல போய் வெர் ஜின் கிடைக்குமா? னு தேடுபவன்

-------------------------

9.everything fine. = எல்லாமே அபராதத்துலதான் போய்க்கிட்டு இருக்கு.

-----------------------

10.பஸ் ல ஸ்டேண்டிங் ல வர்ற ஒரு லேடி மணிபர்சை கைல எடுத்துக்கிட்டு ஹேன்ட் பேக் கை என் கிட்டே கொடுக்குது.பெருத்த அவமானம்

-----------------------



இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே.....
என்னப்பா ஹேங் ஓவர் எல்லாம் மாறிடுச்சா ? இல்ல மறுபடியும் கிளம்பியாச்ச ? ஞாயிறு ஆச்சே அதான் கேட்டேன் ஹி ஹி...

இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே.....

11.5 முழம் ஜாதி மல்லிகை வெச்ச பொஞ்சாதி பஸ் ல தன் புருசன் கூட செம சண்டை போட்டுட்டுப்போவுது.பிரிட்ஜ்க்குத்தான் அந்தப்பூ போகப்போகுது

--------------------------

12.இயற்கை அழகு கொஞ்சும் காட்டுக்குள்ள போய் இருந்துட்டு வந்தா fresh ஆயிரும் மனசு.cot டு வாழ்க்கைல fresh ஆகும் உடம்பு

-------------------- 

13. டைரக்டர் சார்.உங்க படம் எவ்ளவ் நீளம்?



 ஹி ஹி படம் பூரா நீலம் தான்



-------------------


14   தனுஷ் - நய்யாண்டி ல டெடி பியர்னு ஒரு பாட்டு பாடி இருக்கேன்.



சிம்பு - என்னை நக்கல் பண்ணுனா பொறுத்துக்குவேன்.எங்கப்பாவை கிண்டல் பண்ணினா ..



----------------------------


15  சீன ராணுவம் இந்திய எல்லையில் எதுக்கு வந்தாங்க?



ராணுவ அமைச்சர் - சைனா மொபைல் ல டவர் எடுக்கலை.இந்தியாவுல தான் புல் டவர் கிடைக்குதாம்



------------------------



"எனது ஆட்சியில்தான் திரைத்துறையினர் சுதந்திரமாக இருக்கிறார்கள்" மேடம். ஜெ."

இதுக்கு நீங்க ஜெயா டிவில நாலும், ஜெயா மக்ஸ்ல அஞ்சு சானலும் திறந்து ஊருக்குள்ள ஓட விட்ருக்கலாம்..


16   டியர்.நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.மேரேஜ் வரை தொடாதீங்க.




சரி.தொடலை.அந்த மாதிரி பொண்ணுங்கன்னா யாரு? மீ அப்பாவி



------------------------

17 .விஜய் டான்ஸ் ல படத்துக்கு படம் வெரைட்டி காண்பிக்க மெனக்கெடனும்.அஜித் நடைல அப்டி எதுவும் தேவை இல்லை

----------------------

18 .சர்வாதிகார எண்ணம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது-விஜயகாந்த்# கோர்ட்டுக்கு வரச்சொல்லி வெத்தலை பாக்கா வெச்சு அழைப்பாங்க?பிடிவாரன்ட்தான்

------------------------------

19 .நாத்திகர்கள் கோவில் சொத்துகள உபயோகப்படுத்த முடியாது:- சட்ட திருத்தம் #தமழ் இனத்தலைவர் ஏதாவது ஆல்ட்டர்நேட்டிவ் ஐடியா வெச்சிருப்பாரு்

--------------------------

20 .ரூ.6 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருந்தால் கார் லோன் கிடையாது: SBI அதிரடி# பெட்ரோல் லோனாவது குடுப்பீங்களா?



--------------------------------



Harry Shanth's photo.