Skip to content

Sunday, September 29, 2013

6 மெழுகுவர்த்திகள்' -, ஷாம் INTERVIEW @ THE HINDU TAMIL


விக்ரம் தான் எனக்கு ரோல் மாடல்! 

“சார். எங்களோட ரெண்டரை வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி. படம் முடிஞ்சதும் மக்கள் எழுந்து நின்னு கைதட்டுறது தான். என்னோட சினிமா நண்பர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் எல்லாரும் படத்துல என் நடிப்பை பார்த்து பாராட்டினாங்க” என ஷாமிடமிருந்து அருவி போல் கொட்டுகிறது வார்த்தைகள். பேச்சில் அவ்வளவு சந்தோஷம். '6 மெழுகுவர்த்திகள்' படத்திற்கு கிடைத்த வெற்றி, சக நடிகர்கள், ஏற்ற இறக்கத்திலிருக்கும் திரையுலக பயணம், ஆர்யாவுடனான நட்பு என நீண்ட உரையாடல்களிலிருந்து..


மொதல் படமே ரெண்டு உச்சகட்ட ஹீரோயின்ஸ்... ( சிம்ரன், ஜோதிகா). ரொம்ப வித்தியாசமான கதைன்னு பரபரன்னு உள்ள வந்தீங்க.. அப்பறம் கேரியர்ல பெரிய ட்ராப்.. தெலுங்கு பக்கம் ஹிட்.. மறுபடியும் தமிழ்..ரங்கராட்டினமா போகுதே உங்க மார்க்கெட்..?



12பி படத்துல சிம்ரன் ஜோதிகாவோடு நடிச்சது எல்லாம் மறக்க முடியாது. அப்புறமா சில படங்கள் நமக்கு செட்டாகுமானு யோசிக்காம ஒத்துக்கிட்டது உண்மைதான். ஆனாலும் 12பி, லேசா லேசா, இயற்கை அப்படினு சில படங்களல மட்டுமே எனக்கு கரெக்டா அமைஞ்சது. தெலுங்குல 'கிக்' மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. இப்போ '6 மெழுகுவர்த்திகள்' என வாழ்நாள்ல மிக முக்கியமான படமா அமைஞ்சிருக்கு.


முன்னணி ஹீரோக்கள் பலருக்கு பேமிலி பேக்ரவுண்ட் இருக்கு. அப்பா, அண்ணன் அப்படினு யாராவது குடும்பத்துல ஒருத்தர் பீல்ட்ல துணையா இருப்பாங்க. ஆனா, எனக்கு அப்படியில்லை. என்னை மட்டுமே நம்பி களத்துல இருக்கேன்.


பலரும் ஷாமை ராசியில்லாத நடிகர் அப்படினு சொன்னாங்க.. அவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்றீங்க?


“ஏ.சி ரூமுக்குள உட்காந்துகிட்டு ஆயிரம் பேசலாம். ஆனால் களத்துல இறங்கினா தான் உண்மையான வலி தெரியும்” இது தான் என்னோட பதில்னு எழுதிக்கோங்க.


எப்படி அமைஞ்சது '6 மெழுகுவர்த்திகள்'? இந்த படத்துக்கு ஷாம் வேணும்னு டைரக்டருக்கு தோண வெச்சதே உங்க வெற்றி தான்.. இல்லையா?



'கிக்' படத்தை பாத்துட்டு துரை பேசினார். உன்னை வித்தியாசமா யூஸ் பண்ணுருக்காங்கனு பாராட்டினார். அப்பறம் ஒருநாள் '6 மெழுகுவர்த்திகள்' கதையை சொன்னார். அப்பவே முடிவு பண்ணிட்டோம். இந்த படம் நல்ல தயாரிப்பாளர் கைல கிடைச்சா மட்டும் தான் நல்லபடியா வரும்னு. உடனே எங்க அண்ணன் கிட்ட பேசி நானே தயாரிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
ஏன்னா படத்துக்காக ரெண்டரை வருஷம் வெயிட் பண்ணனும். வேற ஒரு தயாரிப்பாளர் இதுக்கு தயாராக இருப்பாங்களானு தெரியல. அதான் நானே தயாரிப்பாளரா களத்துல இறங்கினேன். க்ளைமாக்ஸ் காட்சியை பாத்துட்டு, மக்கள் எழுந்து நின்னு கைதட்டும்போது சந்தோஷமாயிடுச்சு.. வலியெல்லாம் பறந்தே போச்சு.. எங்களோட ரெண்டரை வருஷ உழைப்புக்கு கிடைச்ச பரிசு அது.


மொதல்ல மாடலிங், அப்பறம் சின்ன ரோல்.. அப்பறம் ஹீரோ.. அப்பறம் கன்னடப் படம், தெலுங்குல 'கிக்'.. மறுபடியும் தமிழ்ல சூப்பர் ரோல் பண்ண வாய்ப்பு.. அடுத்த மூவ் ரொம்ப ஜாக்கிரதையா எடுத்து வெக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கீங்க.. இப்ப எப்படி இருக்கு?


ரொம்ப ரொம்ப பயமா இருக்கு. தமிழ்ல அடுத்ததா புதுமுக இயக்குநர்  ஒருத்தர் படத்துல நடிக்கிறேன். '6 மெழுகுவர்த்திகள்' படத்துக்கு அப்புறம் வர படம் அப்படிங்கிறதுனால ரொம்ப யோசிச்சு ஒத்துக்கிட்டேன். நல்ல ஒரு பேமிலி எண்டர்டெய்னர். அதுல ஒரு புதுமை பண்ணிருக்கோம்.


தெலுங்குல 'கிக்' இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் 'RACE GAURAM' படத்துல நடிக்கிறேன். தமிழ்ல ' பந்தய குதிரை'னு அர்த்தம். நானும் அல்லு அர்ஜுனும் அண்ணன் - தம்பியா நடிக்கிறோம். தமிழ்ல தான் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கறது கம்மியா இருக்கு.. ஆனா தெலுங்குல அப்படியில்லை. கதைக்கு தேவைன்னா சேர்ந்து நடிக்கிறாங்க.



'6 மெழுகுவர்த்திகள்' பார்த்துட்டு சுதீப் உங்களை ரொம்ப பாராட்டியிருந்தார்.. இன்னும் நிறைய பேரோட பாராட்டுல நனைஞ்சிருப்பீங்களே?



சார்.. அதை வார்த்தைகளா வர்ணிக்க முடியாது. வேற வேற தியேட்டர்ல 8 ஷோ பாத்தேன். படத்தோட க்ளைமாக்ஸ் காட்சி முடிந்தவுடன், கைத் தட்னாங்க.. வெளியே வர்றப்போ கட்டிப்பிடிச்சு பாராட்டினாங்க, நிறையப் பேர் அழுதுகிட்டே பாராட்டினாங்க. ஷாமுக்கு கிடைத்த வெற்றியா நான் பாக்கல. படத்துக்கு கிடைச்ச வெற்றியா தான் பாக்கறேன்.



படம் முடிஞ்சவுடன், சுதீப் கட்டிப்பிடிச்சு 'பின்னிட்டடா'ன்னார். சிம்ரன் மேடம் 'Awesome.. Awesome'னு பாராட்டினாங்க. விஜய் சேதுபதி ஒரு 45 நிமிஷம் படத்துல ஒவ்வொரு சீனையும், வசனங்களோட சொல்லி, இந்த சீனுக்குல்லாம் கண்டிப்பா ரசிகர்கள் பாராட்டுவாங்க பாருன்னார். சீமான் அண்ணன், சசி அண்ணன் எல்லாருமே 'தம்பி.. என்னடா இப்படி உழைப்பை கொட்டிருக்க..'னு தட்டிக் கொடுத்தாங்க.



ஆர்யா, பரத் எல்லாருமே இந்திய சினிமாவோட 100ம் ஆண்டு விழாவுக்காக டான்ஸ் ரிகர்சல் பண்ணிட்டு இருந்ததுனால. “ டேய்.. படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸாமே.. சூப்பர்டா.. படம் பாத்துட்டு கூப்பிடுறேன்”னாங்க.. எனக்கு மனசு பூரா பூ பூத்த மாதிரி இருக்கு.!



விக்ரமுக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. விக்ரமுக்கு 'சேது', ஷாம்முக்கு '6 மெழுகுவர்த்திகள்'னு சொல்லலாமா..?



இப்படித்தான் நிறைய பேர் கேட்கறாங்க. ஏன்னு தெரியல. விக்ரம் சார் எங்கேயோ இருக்கார். நான் எங்கேயோ இருக்கேன். அவர் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரெஷன். அவருடைய வசன உச்சரிப்பு, நடை, உடை எல்லாத்தையும் பாத்து ரசிச்சிருக்கேன். எல்லாருமே இப்படி கேட்கறப்ப சந்தோஷமா இருக்கு. அதே நேரத்துல கொஞ்சம் பயமா இருக்கு.



படத்தை தெலுங்குல ரிலீஸ் பண்றாங்களா?


ஆமா.. ஒரே தேதில ரிலீஸ் பண்ற ப்ளான் தான். ஆனா தெலங்கானா பிரச்சனையால படத்த வாங்கினவங்க இப்போதைக்கு ரிலீஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சீக்கிரமே தெலுங்குலயும் வெளியாகும். நான் அடுத்து தமிழ்ல பண்ணப்போற படம், தெலுங்குக்கும் சேர்த்து தான் ப்ளான் பண்றோம்.



படத்துக்காக நீங்க பட்ட கஷ்டத்தை வீட்டுல இருக்கறவங்க பாத்துட்டு என்ன சொன்னாங்க.. உங்க மனைவி காஸிஸ், பொண்ணு சமைரா ரியாக்‌ஷன் என்ன?



படம் பாத்துட்டு எங்கம்மா தான் கட்டிப்பிடிச்சு அழுதுட்டாங்க. ரொம்ப பாராட்டினாங்க. அந்த நாள மட்டும் மறக்கவே மாட்டேன். என் மனைவி எப்போதுமே “ காசு, பணம் ரெண்டாவது.. முதல்ல ஷாம் நல்ல நடிகர் அப்படினு பேர் தான் முக்கியம்”னு சொல்லிட்டே இருப்பாங்க. இந்த படத்தை பாத்துட்டு “ நீங்க நடிகர் ஷாம்னு பேர் வாங்கிட்டீங்க.”னு சொன்னாங்க. அவங்க வாய்ல இருந்து இந்த வார்த்தை கேட்கறப்ப எதையோ சாதிச்சுட்டோம்னு நினைச்சேன். பொண்ணு சமைரா படம் பாக்குறப்போ “ அப்பாவ அடிக்குறாங்க.. அப்பா அழுறார்.. வா வெளியே போலாம்”னு சொல்லிட்டே இருந்தா.



கமல்லேந்து, விக்ரம், ஷாம்னு ஆளாளுக்கு கதைக்காக உடம்பை ஏத்தி எறக்கி பயமுறுத்தறீங்க. சாப்பிடாம, தூங்காமன்னு இவ்ளோ கஷ்டப்படுத்திக்கறீங்க.. இந்த படத்துக்கு ஓகே.. ஆனா அப்பறம் உடம்பு போயிருமேன்னு பதட்டம் இல்லையா?



இப்பவுள்ள சூழ்நிலை அப்படி இருக்கு. என்ன பண்றது.? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுசா ரெண்டு பேர் ஹீரோவா வர்றாங்க. இப்படி இருக்குறப்போ நம்மள இன்னும் நல்லா புரொக்ஜட் பண்ணக்கூடிய நிலைமை. வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க. நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. எது பண்ணனும் நினைக்கிறமோ அத இப்பவே பண்ணிறனும்.


நான் எடுத்த ரிஸ்க் அதிகம் தான். கண்ணு எல்லாம் வீங்க வைச்சு நடிச்சேன். கதைக்கு தேவைப்படுறப்ப செஞ்சு தானே ஆகணும். என்னைவிட '555' படத்துல பரத் எடுத்த ரிஸ்க் அதிகம். அதை நினைக்கறப்ப ரொம்ப பயமா இருந்தது. அவரு எடுத்த ரிஸ்க்கால, உடம்பு உறுப்புகள் கூட பாதிக்கலாம். இருந்தாலும் ரிஸ்க் எடுத்தார். வெற்றியால தான் Fieldல நிலைச்சு நிக்க முடியும்ன்னா எந்த ஒரு ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கேன்.



உள்ளம் கேட்குமே ஆர்யா, ராஜா ராணி ஆர்யா.. வளர்ச்சியை எப்படி பாக்கறீங்க..? நாமும் காமெடி டிராக்லயே போயிருக்கலாமோன்னு தோணிச்சா..?



ஆர்யா எனக்கு நெருங்கிய நண்பன் தான். சினிமாவுக்கு வந்தப்பவே சும்மா இருக்குற நேரத்துல நிறைய பேரைப் போய் பார்ப்பான். அவனுக்கு என்ன வரும் அப்படினு முடிவு பண்ணிட்டு அதுல கரெக்டா போயிட்டு இருக்கான். “என்னடா.. நான் நடிச்ச படம் வெளியாகவே மாட்டேங்குது..” அப்படினு வருத்தப்பட்ட காலத்தையெல்லாம் பொறுமையா கடந்து வந்தான். பாலா சார் இயக்கத்துல 'நான் கடவுள்' படத்துல ஆர்யா நடிப்ப பாத்து மிரண்டுட்டேன். ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்ப ஆர்யாவோட 'ராஜா ராணி' படத்துக்காக வெயிட் பண்றேன்.




thanx - the hindu

இரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட்டி

வழக்கமான காதல், மோதல், காமெடி என்னும் வட்டத்தைத் தாண்டி, ‘நான் கடவுள்’, ‘இரண்டாம் உலகம்’ போன்ற படங்களிலும் நடித்துவருகிறார் ஆர்யா. கதாபாத்திரத்துக்காக எத்தகைய சவால்களையும் எப்போதும் ஏற்க விரும்புவதாகச் சொல்லும் ஆர்யா, கோடம்பாக்கத்தின் தற்போதைய காதல் இளவரசனாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறார். ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியிலிருந்து... 



ஆர்யா என்றால் ‘தமிழ் சினிமாவின் பிளேபாய்’ என்ற பிம்பம் முன்னால் வந்து நிற்கிறது. ஊடகங்கள் மீது உங்களுக்குக் கோபமே வராதா?


 
இது மீடியாவுக்கும் எனக்குமான கொடுக்கல் வாங்கல். இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அவர்கள் எழுதுவதிலும் கொஞ்சம் உண்மை இருக்கத்தானே செய்கிறது. அந்தக் கொஞ்ச உண்மையை, சமயங்களில் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தி எழுதும்போது ஷாக்காக இருக்கும். அதெல்லாம் செய்தியைப் படிக்கும் அந்த நிமிடத்தில்தான். அதன் பிறகு கூல் ஆகிவிடுவேன். அவர்கள் என்னைப் பற்றி நன்றாக எழுதும்போது, நான் என்ன பொக்கேவா அனுப்புகிறேன்? என்னதான் பிளேபாயாக என்னைக் காட்டினாலும், நான் நடிக்கும் படங்கள் நன்றாக இல்லையென்றால் மக்கள் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள். 



நயன்தாரா விஷயம்...

 
நயனுக்கும் எனக்கும் நடுவுல நட்பைத் தவிர எதுவுமில்லே. இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்லணும்னா, விஷால் எப்படி எனக்கு க்ளோஸ் ஃபிரெண்டோ அப்படித்தான் நயன்தாராவும். நீங்களாவது கொஞ்சம் தெளிவா போடுங்க. ஏன்னா நயன்தாரா அவ்வளவு நல்ல பொண்ணு. ராஜா ராணிக்கு படத்துக்கு லீட் ஹீரோயின் யார்னு முதல்ல எனக்கு சொல்லவே இல்ல. நான் நஸ்ரியாதான் லீட் ஹீரோயின்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஒருநாள் திடீர்ன்னு நயன்கிட்ட இருந்து போன்.. “ ஆர்யா.. நீதான் ஹீரோவா பண்றியா.. சொல்லவே இல்ல!? ரொம்ப கம்ஃபர்ட்டா ஃபீல் பன்றேண்டா”ன்னு சொன்னாங்க. பாஸ்கரன் படத்துல கிடைச்ச ‘நண்பேண்டா!’ நட்பு இது. அப்புறம் ராஜா - ராணி படத்துல எங்க ஜோடி நடிப்பு, ரொம்ப டாமினேட்டிங்க இருக்கும். அது கதைக்காக நாங்க காட்டின இன்வால்வ்மெண்ட். 

 

நயன்தாரா உங்களைத் தேடி உங்க வீட்டுக்கே வந்தாங்களாமே?

 
அதுல என்ன தப்புன்றீங்க? என்னோட வீட்டுக்கு பூஜா வந்திருக்காங்க, த்ரிஷா வந்திருக்காங்க. இந்த வரிசையிலத்தான் ஒரு தோழியா, என்னோட அப்பா அம்மாவைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்க என்னோட வீட்டுக்கு வந்தாங்க. அவ்வளவுதான். 



ஆக, ஆர்யாவுக்கு அப்பா அம்மா பார்க்கிற பெண்தான்னு முடிவாகிடுச்சா?


 
அதை உறுதியா என்னால சொல்ல முடியல. ஆனால் நாம கல்யாணம் செஞ்சுக்கப் போற பெண்ணையாவது அப்பா - அம்மா சூஸ் பண்ணட்டும்னு விட்டா, அதுல தப்பில்ல. ஏன்னா நமக்கு எது நல்லதுன்னு அவங்களுக்கு தெரியும். அவங்க பார்க்குறது மொக்க ஃபிகரா இருந்தாலும் ஓகேதான். அப்புறம் கல்யாணத்துக்கு டைம் லைன் பிக்ஸ் பண்ண முடியாது. எப்போ பொண்ணு கிடைக்குதோ, அப்பதான் கல்யாணம். இப்போ என்னோட கவலையெல்லாம்... நான் சிக்குறதுக்கு முன்னாடி என் நண்பன் விஷாலுக்கு ஒரு நல்ல பெண் கிடைச்சு அவன் சிக்குணும்கிறதுதான்! 

 

நான் கடவுள் மாதிரி ஒரு படத்துல நடிச்சீங்க. அதுக்குப் பிறகு அந்த மாதிரி ஆர்யாவைப் பார்க்க முடியலையே!


 
அவன் இவன்ல ‘கும்பிடுறேன் சாமி’ உங்க கண்ணுல படலையா? அப்புறம் சந்தோஷ் சிவனோட உருமியில ஒரு காட்சின்னாலும் நறுக்குனு தைக்கிற மாதிரி நடிச்சிருக்கேன்னு கேரளால ரிவ்யூ கொடுத்தாங்க. ஆனா லவ் , ஆக்‌ஷன் களத்துல டிராவல் பண்ணினாதான் ஆல் கிளாஸ் ஆடியன்ஸ் நம்மள மறக்காம இருப்பாங்க. அதே மாதிரி நான் லவ் பண்ணி , பைட் பண்ணினாத்தான் படம் பார்ப்பேன்னும் ஆடியன்ஸ் அடம்பிடிக்கவும் மாட்டாங்க. ஒரே மாதிரி நடிச்சும் அவங்கள போரடிக்கக் கூடாது! அப்புறம் நிறைய மல்டி ஸ்டாரர் படங்கள்ல நடிக்க விருப்பமா இருக்கேன். இதுமாதிரிப் படங்கள்ல நடிக்கும்போது, அது பெரிய பட்ஜெட் படமா இருக்கு! ஒவ்வொரு ஸ்டாருக்கும் தனித்தனியா இருக்க ரசிகர்கள், எல்லாம் திருவிழா மாதிரி தியேட்டர் கூடிருவாங்க. 


ஆரம்பம் படத்துல ஒரு வித்தியாசமான ஆர்யாவைப் பார்க்கலாமா?


 
கண்டிப்பா! விஷ்ணுவர்த்தனோட நான் பண்ற நாலாவது படம் இது. அவரை மச்சான்னுதான் கூப்பிடுவேன். அவர் என்னை வில்லனா நடின்னு சொன்னாலும் நடிப்பேன். வேற எந்த கேரக்டர் கொடுத்தாலும் பண்ணுவேன். ஆனா, ஆரம்பம் படத்துல என்ன கேரக்டர்னு மட்டும் கேட்காதீங்க. இந்தப் படத்துல தல அஜித்கூட நடிச்சதுனால, இது எனக்கு ஸ்பெஷல் படம். இந்தப் படத்துல என் கேரக்டர் கண்டிப்பா அதிர்ச்சியா இருக்கும். அதேமாதிரி ஒரு காட்சியில் 110 கிலோ வெயிட்டோட வர்ற மாதிரி, ஒரு கெட்அப்ல நடிச்சுருக்கேன். அதுவும் புதுசா இருக்கும். 

 

இரண்டாம் உலகம் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கே? அதுவும் 50 கோடி பட்ஜெட்டுன்னு சொல்றாங்களே?


 
இதுல கவனிக்க வேண்டிய விஷயம், இந்த 50 கோடி ஆர்யாவுக்காக இல்ல. கதைக்காக. கதைக் களத்துக்காக. இதுதான் ஹெல்தியான பட்ஜெட். மார்க்கெட் வேல்யூ ஒரு ஹீரோவுக்கு இருக்குன்றதுக்காக கன்னாபின்னான்னு செலவு செஞ்சு படம் எடுத்தா, அது ஆடியன்ஸுக்கு பிடிக்காம போயிடலாம். ஆனா கதை கேட்டுதுன்னா, நம்ம காட்டுற உலகத்தை ஆடியன்ஸ் நம்பனும்னா அதுக்காக எவ்வளவு வேணா செலவு செய்யலாம். செல்வா ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்த்துட்டு ஆர்டினரி டைரக்டர் இல்ல, கண்டிப்பா, அவர் இயக்கத்துல நடிச்சா எனக்கு நல்லது நினைச்சேன். மனுஷன் சொல்லி வெச்ச மாதிரி “ஆர்யா ஒரு கதை இருக்கு கேக்குறியா?” கூப்பிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்துல அவர் முன்னாடி இருந்தேன். கதை கேட்டு முடிச்சதும் , வேற ஒரு உலகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு ஃபீல். என்கிட்ட கதையா சொன்னதை விட 50% கூடுதலா விஷுவலைஸ் பண்ணியிருக்கார். 



செல்வராகவன் நட்சத்திரங்கள்கிட்ட ரொம்ப டெரர் காட்டுற மனிதர்னு சொல்றாங்களே?


 
இந்த மாதிரி கதையக் கையாளும்போது டெரராத்தான் இருக்கணும். செல்வா ரொம்ப கூலான ஆள்! ஆனா படத்துல நடிச்ச அனுபவம், ரொம்ப டெரிபிக்கா இருந்தது. தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டுப் போற, படம்னு சில பேர் அளந்து விடுவாங்க. ஆனா நிஜமாவே நம்ம சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போற படம். தமிழ் சினிமா, கோடாம்பாக்கத்து செட்டை விட்டு, கோபிச்செட்டி பாளையத்தை விட்டு, சுவிஸ் பனிமலைகளை விட்டு வேற ஒரு உலகத்துக்கு அழைச்சிட்டு போற படம். எனக்கு பிஸிகல் ஸ்டிரைன் அதிகமா கொடுத்த படம். 



கதையப் பத்தி யாரும் வாயே திறக்க மாட்டேன்றீன்களே?

 
கதைய சொல்லிட்டா இந்தப் படத்தை பார்க்குற ஆர்வமே போயிடும். இந்த மாதிரி ஃபேண்டஸி படங்களுக்கு இருக்குற ஆபத்து அதுதான். இருந்தாலும் உங்களுக்காக முதன்முதலா வாய திறக்குறேன். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில ரொம்ப அழகான காதலர்கள். அவங்க ரெண்டு பேரும் இன்னொரு உலகத்துல மருவன் - வர்ணாங்கிற வேற ரெண்டு கேரக்டர்ஸா மீட் பண்றாங்க. எதுனால இப்படி நடந்தது? அந்த இன்னொரு உலகத்துல அவங்க அனுபவம் எப்படி இருந்துச்சுங்கிறதுக்காக, அந்த கேரக்டர்ஸுக்கும் ஆடியன்ஸுக்கும் த்ரில்லான அனுபவமா அமையப் போகுது. என்ன பாஸ், பதில் சொல்றதுல ஒரு டைரக்டர் ரேஞ்சுக்கு தேறிட்டனா? 



அடுத்து நீங்க நடிக்கிற படம் தலைப்பு பிரச்சினையில சிக்கியிருக்கே?


 
அதை எஸ்.பி.ஜனநாதன் சார் பார்த்துக்குவார். ஆனா ஒரு விஷயம். படத்தோட தலைப்பு ‘புறம்போக்கு’ன்னு இருக்குறதால என்னோட கேரக்டரை அதோட ரிலேட் பண்ணிக்காதீங்க. இது கதையோட சம்பந்தப் பட்டது. இந்தப் படம் தவிர மகிழ்திருமேனி இயக்கத்துலயும் நடிக்கிறேன். அதுக்கு இன்னும் தலைப்பு ரெடியாகல. இந்த ரெண்டு படத்துக்கு அப்புறம், ஆர்யா படம் 100 கோடி வசூலுக்கு மாறும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு! 


thanx - the hindu 


a



டிஸ்கி - நான் ஒரு ஆணாதிக்கவாதின்னு ஒரு தப்பான அபிப்ராயம் ஆங்காங்கே பரவிக்கிடக்கு. ஆனா பாருங்க ஆர்யா பேட்டில கூட அனுஷ்கா ஸ்டில்லுக்குத்தான்  முன்னுரிமை , பின்னுரிமை , சைடு உரிமை எல்லாம் கொடுத்திருக்கேன் , இதில் இருந்து தெரிய வரும் நீதி - சி பி பெண்மையை போற்றுபவர் , பெண்களை மதிப்பவர் . இதை எல்லாம் நீங்க ஊர்ல போய் சொல்லனும் ;-))

நரேந்திரமோடி வைஜெயந்தி லேடி க்கும் என்ன கனெக்‌ஷன் ?

1. எனக்கு ஆனியன் தோசை போடாத சம்சாரத்திடம் எனக்கென்ன பேச்சு? திண்ணைல படுடா வெண்ணை ,நான் சொன்னது என்னை




---------------------------


2வீட்டில் விளக்கு ஏற்றிய பின் பெண்கள் ட்விட்டர்,FB பக்கம் நடமாடக்கூடாது.ஜெ அதிரடி அறிவிப்பு.வீரமங்கைகள் திகைப்பு # சும்மா




--------------------------

3. ரஜினி மோடியை ஆதரிச்சு வாய்ஸ் குடுத்தா பின்னாளில் மோடி PM ஆனதும் ரஜினி வாய்சாலதான் மோடி ஜெயிச்சார்னு இமேஜ் மெயின்ட்டெயின் பண்ணிக்கலாம்


--------------------------


4  தீபாவளி ் போனஸ் வாங்கிட்டு வேற கம்பெனி மாறிடலாம்னு திட்டம் போட்டு காத்திருப்பவர்கள் ஒவ்வொரு கம்ப்பெனியிலும் உண்டு்


---------------------------


5 ஹாய்.நல்லாருக்கியா? ன்னு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பிட்டு பெரும்பாலான பொண்ணுங்க தூங்கிடுவாங்க போல


----------------------------


6 தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக்குளிச்சாத்தூக்கம் வரும்.தலைவி நீ என்னை தேய்ச்சு விட்டா விழிப்பு வரும்



------------------------------


7  அன்பே! உன்னை எனக்குப்பிடித்தது இண்ட்டர் நெட்டளவு.பிடிக்காதது மலையாளப்பட பிட்டளவு



=---------------------------



8 மேரெஜ் ஆனவன் ,ஆகாதவன் இருவரும் சொல்லும்போது இரு வேறு பொருள் தருவது - சன்டேன்னா ரெண்டு



----------------------------



9  லேடி எனக்கு ஒரு டவுட்டுன்னு டி வி புரோகிராம் பண்ணா TRP எகிறிடும்



--------------------------


10  நரேந்திரமோடிக்கு மேரேஜ் ஆனா அது வைஜெயந்தி லேடியாத்தான் இருக்கும் # எழுத்தாளர் சுபா ரசிகர் பேரவை





-------------------------

11  ஒரு ஆளுக்கு 2 கண் தானே இருக்க முடியும் , ஆனா பாருங்க தமிழன் கண்ல படற பொண்ணுங்களை எல்லாம் கண்ணே!னு கூப்ட்டுட்டு இருப்பான்;-)



-------------------------

12 நேர்மையா் நாணயமா் உழைப்பவன் ஒரு கம்ப்பெனியில் முன்னேறுவதை விட ஜால்ரா,போட்டுக்குடுப்பவன் ,கூட்டிக்குடுப்பவன் சீக்கிரம் முன்னேறிடறான்


-------------------------


13  வீட்ல இருந்து கிளம்பும்போதே முழங்கால் வரை வ்ராத மிடியைப்போட்டுட்டு வந்துட்டு இழுத்து இழுத்து விட்டிட்டிருப்பாங்க , ஏம்ப்பா அவ்ளவ் சிரமம்? #  டி வி  நிகழ்ச்சி பொண்ணுங்க அலப்பறைகள்



---------------------------


14  வாரத்தின் எல்லா நாளும்  திங்க(ற)கிழமையே!



----------------------


15 ஆம்பளைங்க   மனசுல யார் யாரை எல்லாம் ஃபேவரைட் பண்ணி  மனசுல வெச்சிருக்கான்னு ஸ்கேனிங்க்ல தெரிஞ்சா ஒரு பொண்டாட்டியும் சேர்ந்திருக்காது


-----------------------


16  சில ஃபிகர்களை பார்க்கும்போது இவர்களை எப்படி இத்தனை நாளா ஃபாலோ பண்ணாம  விட்டு வெச்சு இருந்தோம்ன்னு ஆச்சர்யமா இருக்கு!



-------------------------


17  சீனபேருஞ்சுவர் ரை பட்டுப்புடவைல டிசைன் பண்ணிட்டா  அது  சீனா பார்டர் புடவை ஆகிடும் நல்லா சேல்ஸ் ஆகும் 




----------------------------


18  கடுமையான உழைப்பாளிகளை  ஒரு வேலையும் செய்யாம  குறை சொல்லிட்டே இருந்தான்னா அவன் தான் மேனேஜரா இருக்கும் 



-------------------------



19  ரா வா சரக்கு அடிக்கற சங்கரலிங்கங்கள் எல்லாம்  ரா உளவுப்பிரிவுல வேலை பார்க்கறவங்கன்னு சொல்லிட முடியாது 


----------------------


20  இல்லாள் - புருஷன் கஷ்டப்பட்டு உழைச்சு கட்டின வீட்டுக்கு சொந்தக்காரி , இல்லான் = வீட்டை பொண்டாட்டி பேர்ல எழுதி வெச்சுட்டு ஒண்ணுமே இல்லாதவன்


----------------------------------




Saturday, September 28, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

a

 ஹீரோ  ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட் . ஒரு ராத்திரில வழில ஒரு விபத்தைப்பார்க்கறாரு. போலீஸ் உதவல. அதனால தானே  விபத்தில் பாதிக்கப்பட்ட ஆளை தன் வீட்டுக்கு கொண்டு போய் சிகிச்சை தர்றாரு , அவருக்கு துப்பாக்கிக்குண்டு பாய்ஞ்சிருக்கு . போலீசால் தேடப்படும் குற்றவாளி .ஆபரேஷன் பண்ணி முடிச்சதும் அந்தாள் தப்பிடறார். வந்தது  வினை . போலீஸ் ஹீரோவை கைது பண்ணிடுது . 


இப்போ  யாரைக்காப்பாத்தினாரோ அவரை ஹீரோ சுட்டுக்கொலை பண்ணனும் , இதுதான் போலீஸ் கொடுக்கும் அசைன் மெண்ட். இதை செய்யலைன்னா 10 வருசம் சிறை தண்டனை . 

இப்போ ஹீரோவுக்கும்  , அந்த குண்டு காயம் பட்ட ஆளுக்கும்  நடக்கும்  யுத்தமே  கதை . 


கடந்த 15 வருடங்களில் தமிழில் வந்த  மிகச்சிறந்த  த்ரில்லர் படங்களில்  இது ஒன்று , சபாஷ் மிஷ்கின் . 1972 ல் வந்த ராஜேஷ் கன்னா வின் துஷ்மன் ( எதிரி) ,அதன் உட்டாலக்கடி ரீ மேக்கான சிவாஜி கணேசன் ன் நீதி படத்தின் சாயல்கள் ஓஆகு ல இருக்கு. அது போக  இது ஒரு போர்த்துகீசிய மொழிபடத்தின்  தழுவல்   தாக்கம் என மிஷ்கினே சொல்லிட்டதால  படத்தைப்பத்தி மட்டும் மேற்கொண்டு பார்ப்போம் 


இளையராஜா தான் படத்தின்  முதுகெலும்பு .  ஒரு  த்ரில்ல ர் மூவிக்கு  இசை எந்த அளவு  முக்கியம் என்பதை  இளையராஜா அநாயசமாக  உணர்த்தி  இருக்கிறார். இதே படத்தை பின்னணி  இசை இல்லாமல்  மியூட் செய்து பார்த்தால்   அதன்  முக்கியத்துவம்  புரியும் . அபாரமான  பி ஜி எம் , அதுவும்  க்ளைமாக்சில் அட்டகாசமான   துள்ளல்  இசை 


வழக்கு எண் ஹீரோதான்  இதிலும்  ஹீரோ , அருமையான நடிப்பு , மிஷ்கின்  நடிப்பும்  கன கச்சிதம் . அந்த  பார்வை அற்ற சிறுமி    உருக்கமான நடிப்பு .  எட்வர்ட் என படம்  முழுக்க அழைக்கும் அந்தப்பொண்ணும் அழகு நடிப்பு 


மிஷ்கின்  சில கோணங்களீல் மன்சூர் அலிகான் மாதிரியும்   தளபதி தினெஷ் மாதிரியும்  இருக்கிறார்


 







இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1.  எரியும்  வீட்டில்  பிடுங்குவது எல்லாம் லாபம் என போலீஸ்  விபத்தில்  பாதிக்கப்பட்ட ஆளிடம் வாட்சை சுடும் காட்சி போலீஸ்காரங்களூக்கு  சவுக்கடி . தியேட்டரில் செம அப்ளாஷ் அந்த காட்சிக்கு 



2. ஒரு போலீஸ் காரர்   துரோகி ஆன இன்னொரு போலீஸ் ஆஃபீசருக்கு “ அய்யா “ என்பதை  மாறு பட்ட உச்சரிப்பில்  3 முறை சொல்வது கிளாஸ்  நடிப்பு  . 


3.  படம்  முழுக்க வைக்கப்பட்ட கேமிரா  கோணங்கள் அபாரம்  . வரும் கால கட்டத்தில்  ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்களூக்கு  மிஷ்கின் படங்கள்  ஒரு பாடமாக இருக்கும் 


4. எடிட்டிங்க்  , ஒளிப்பதிவு மிக அருமை . முழுப்படமும்  இரவில்  தான் நடக்கிறது , ஜெவுக்கு எப்படி உதய சூரியன் ஆகாதோ அந்த மாதிரி   மிஷ்கினுக்கு  சூரிய வெளிச்சமே ஆகாது போல , ஆனால் அந்தக்குறையே   தெரியாத வண்னம் அபாரமான  ஒளிபதிவு 


5.  பின் பாதியில்  வரும்  20 நிமிட   இழுவைக்காட்சிகள் தவிர  படம் பூரா செம  விறு விறுப்பு  . ஹாட்ஸ் ஆஃப்    டோட்டல்  டீம் , கலக்கல்



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. ஓப்பனிங்க்  சீன் ல  ஹீரோ  கிட்டே  நாளைக்கு எப்போ எக்சாம்?னு கேட்கப்படும் கேள்விக்கு காலை ல 10 30 மணிக்குனு பதில்  சொல்றார். எல்லா எக்சாமும் காலை 9 டூ 9 30க்கு ஆரம்பிச்சுடும் , அதிக பட்சம் 10 . 


2.  சாலையில்  விபத்தைப்பார்த்த  ஹீரோ உடனே ஏன் 108 க்குக்கூப்பிடலை? கூப்பிட்டு   வேன்  வராம  இருந்து பின் இவர்  காப்பாத்துனா  ஓக்கே 


3. ஓநாய் கேரக்டர்   40  கொலை செஞ்சவன்னு  ஒரு இடத்துல வசனம் வருது , இன்னொரு இடத்துல  அவன் மேல 14  கொலைக்கேஸ் இருக்குன்னு வருது . ஏன் இந்தக்குழப்பம் ? எல்லாமே வில்லனால்  ஜோடிக்கப்பட்டவை என்றாலும் செய்வன  திருந்தச்செய்ய வேண்டாமா? 


4. ஹீரோவுக்கு   ஷூட்டிங்க்க்கு போலீஸ் ட்ரெயினிங்க்  கொடுக்குது . ஆனா  காதுல பாதுகாப்புக்கவசம் தர்லையே?  தொழில்  முறை போலீசே  காதுல எதையாவ்து தடுப்புக்கு மாட்டிட்டு அதை செய்யும்போது  புது ஆள் ஏன் மாட்டிக்கலை? 



5. போலீஸ் ஆஃபீசரா வரும்  அந்த வெள்ளை சட்டைக்காரர் பாடி லேங்குவேஜ் சரி இல்லை . நாடகம் நடக்கும்போது   திடீர்னு  நீ போய் நடின்னு அறிமுகம் இல்லாத ஆளை தள்ளி விட்டா எப்படி பதட்டத்துடன் நடந்துக்குவாரோ அப்படி நடந்துக்கறார். சீன் முடிஞ்சதும் அப்பாடா எப்போடா நம்ம பார்ட் முடியும்கற மாதிரி  இருக்கு 


6.  சாதா போலீஸ் எல்லாம் க்ளோஸ் கட்டிங்க் பண்ணி  டிரஸ்ஸிங்க் ல நீட்டா இருக்கும் போது ஹை லெவல் சி பி சி ஐ டி ஆஃபீசர்   பொருத்தமே இல்லாத  சட்டை அணிந்திருப்பது உறுத்தல் 


7. ஹீரோவுக்கு  மிஷ்கின் மேல் எந்த குரோதமும் விரோதமும் இல்லை , பொலீஸ் அவரை  கொலை செய்யச்சொன்னபோதும் அவருக்கு  முழு மனதும் இல்லை , ஆனால்   மிஷ்கினை கொலை வெறியுடன் அவர் பார்க்கும்போது    என்னமோ அவர்  சொந்த  மாமன் மகளை  கொலை செய்தவரைப்பார்ப்பது போல் ஆக்ரோசமாகபார்ப்பது ஏன் ? ஓவர் ஆக்டிங்க் 


8 ரயில்  வேகமாக  ஒடும்போது   இந்த மாதிரி ஆக்‌ஷன்களூக்கு பழக்கம் ஆன மிஷ்கின்  குதிப்பது சரி , ஹீரோ ஏன் அதுக்கு ஒத்துகறார்? நான் குதிக்க மாட்டேன் , பயமா இருக்கு என ஏன் சொல்லலை ? அட்லீஸ்ட் ஆறு வந்தா  அதாவது ஆறு கிராஸ் ஆகும்போது வேணா  எட்டி குதிக்கறேன்   , தரைல குதிக்க மாட்டேன் என்று கூட ஒரு வாதம்  கூட பண்ணலையே ?



9  அந்த போலீஸ் ஆஃபீசர்  இடது  கைல எதுக்கு சில்வர் வளையம் போட்டிருக்காரு ப்? ரவுடிங்க  தான் அப்படி போடுவாங்க . வேற  ஒரு படத்துல ரவுடி  கேரக்டர் ல நடிச்சுட்டு நேராஅ இந்த பட  ஷூட்டிங்க் வந்துட்டாரா? 


10  போலீஸ் கஸ்டடில இருந்து தப்பிச்ச தாடி வில்லனை  எதிர்பாராத விதமா  வேன்ல பார்த்த  ஒரு போலீஸ் ஆஃபீசர் எந்த வித  முன் ஜாக்கிரதையும்  இல்லாம அப்படித்தான் பெப்பரப்பேன்னு  நிப்பாரா? அவன் சுடும் வரை  வேடிக்கை பார்த்துட்டு இருக்காரே >? அவர் என்ன போலீஸா? ஓ பி எஸ்சா? 


11 மிஷ்கின் கையை ஹீரோ  கட்டச்சொன்னதும்   மிஷ்கின் ஏன் கையை கிராசா வெச்சுக்கறார்? நேரா வெச்சாத்தானே பின் அவிழ்க்க ஈசி . இதே போல் படத்தில் 3 இடங்களீல் வெவ்வேறு ஆட்களை கையில்  கட்டும் சீன் வரும்போது எல்லோரும் சொல்லி வெச்சது போல் ஒரே மாதிரி கையை கிராஸ் பண்ணி காட்டுவது ஏன் ? 


12  சாகும் தருவாயில்  இருக்கும்   அந்த வில்லனின் அடியாள்  தம்பாவுக்கு ஃபோன் பண்ணிட்டு ஸ்விட்ச் ஆஃப் பண்ணாமல் எதுக்கு ஃபோனை தூக்கி எறிகிறார் ? 



13   விழி ஒளி இழந்தவர்   தீப்பெட்டியை  முதல்  டைம் சரியாகத்திறந்து   குச்சி எடுப்பவர்  அடுத்த  முறை  தவ்ற  விடுவது எப்படி ?  சாதா மனிதனை   விட அவர்களூக்கு  கவனிப்புத்திறன்  அதிகம் ஆச்செ? 


14  மிஷ் கின்   தன் ஃபிளாஸ் பேக்கை  குழ்ந்தையிடம்  சொல்லும் காட்சியில்   ரொம்ப நாடகத்தனம் .  தன்னை   தாய்மார்கள் ஆடியன்ஸ்  தரப்பு  பரிதாபமாகப்பார்க்க வேண்டும் என்பதற்காக வலிந்து  திணிக்கப்பட்ட  நடிப்பு . எப்பவும்   சாதா ஆடியண்சுக்கு  ஃபிளாஷ் பேக்கை விசுவலாக  சொல்லி விட வேண்டும்  , நிறைய பேருக்கு   இந்த வசனக்காட்சி புரியலை . முழுப்படத்தின்       கதையும்  அந்த ஒரு காட்சியில் தான் புரியவைக்கப்படும்  முக்கியகாட்சி என்பதால்   குறியீடுகள் , புத்திசாலித்தனங்கள் அந்த இடத்தில்  தேவை இல்லை


15.  திறந்த வெளி சுடுகாட்டில்  காற்று அடிக்கும்   சீதோஷ்ண  நிலையில்  ஏற்றப்பட்ட  மெழுகுவர்த்திகள்  ஒரு முறை கூட அணையாமல் இருப்பது  எப்படி ? 


16  மெடிக்கல் ஸ்டூடண்ட்டான  ஹீரோவிடம்  ஒரு அமைதியே இல்லையே , பிரமாதமான துடிப்பான  ரனிங்க் ரேஸ்  வீரன் போல் அவரிடம்  ஒரு துடிப்பு ஆல்வேஸ் தென் பட்டுக்கொண்டே இருக்கிறதே ? 


17   அந்த  பார்வை அற்ற  சிறுமிக்கும் ,  மிஷ்கின் தோளில் சுமந்து  கொண்டே வரும்  லேடிக்கும் அதீத ஒப்பனை  எதுக்கு ? 


18   அந்த  தாடி  வில்லன் நடிப்பும்  , கேரக்டரைசேஷனும் தான் படத்தின்  பெரிய  சொதப்பல் . நம்பவே  முடியலை . எதுக்காக  அவர் மிஷ்கினை நேர்ல பார்க்கனும் ? பிடிக்கலைன்னா போட்டுத்தள்ளிட வேண்டியதுதானே?



மனம் கவர்ந்த வசனங்கள்



1. அம்மாக்கு என்ன ஆச்சு ?

செத்துட்டாங்க 


நாமும்  செத்துடலாமா? 



மொத்த படத்தில்   வசனங்கள்  4 பக்க அளவுகள் தான்  , விஷுவல் ட்ரீட் தான் முழுக்க 


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  50


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -நன்று

ரேட்டிங் =  4 / 5


சி பி கமெண்ட் -த்ரில்லர்  மூவி ரசிகர்கள் எல்லோரும் பார்க்கலாம் , இளையராஜா  ரசிகர்கள்  , ஏ ஆர் ஆர் ரசிகர்கள் பார்க்கலாம் ( அப்போத்தான்  பி ஜி எம் பற்றி அவங்க  தெரிஞ்சுக்கலாம் ) பிரமாதமான மேக்கிங்க் ஸ்டைல் உள்ள  இந்த படம் தமிழ் நாடு பூரா டப்பா தியேட்டர்களீல் போட்டிருப்பது வருத்தம்


a


டிஸ்கி =

ராஜா ராணி - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/09/blog-post_7084.html

Friday, September 27, 2013

ராஜா ராணி - சினிமா விமர்சனம்

தன் கண் முன்னால்   காதலி விபத்தில் இறந்ததைப்பார்த்த காதலன் ,  தன் காதலன் இறந்த செய்தியைக்கேட்டு  இடிந்த காதலி  இருவரும் அவரவர் பெற்றோர் விருப்பத்துக்காக திருமணம் செய்தால் என்ன ஆகும்? இதுதான் படத்தின் ஒன் லைன். ஆனால் மேக்கிங்க் ஸ்டைலில் புது இயக்குநர் அட்லி  ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்  . அவருக்கு  ஒரு சபாஷ் 


மவுன ராகம் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் . அதில் சந்தேகம் இல்லை . ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லி மணிரத்னம் கதைக்கருவை எடுத்தது ஆச்சரியம் 


படத்தில்  அரை மணி நேரமே வந்தாலும் அட்டகாசமான அப்ளாஷ் அள்ளுபவர் ஜெய் தான் . இந்த மாதிரி  ஒரு பயந்தாங்கொள்ளி கேரக்டர்  கிடைத்தால் எல்லா பொண்ணுங்களுக்கும் கொண்டாட்டமே என்னும் சைக்காலஜியில் அந்த கேரக்டர் செம ஹிட் ஆகி விட்டு இருக்கிறது . பாடி லேங்குவேஜ் , டயலாக் டெலிவரி எல்லாவற்றிலும் ஜெய் அசத்தி உள்ளார் . ( ஜோடியாக அஞ்சலி வந்திருந்தால் இன்னும் கலக்கலா , நேச்சுரலா  இருந்திருக்கும் 




நயன்  தாரா  யாரடி  நீ மோகினி க்குப்பின்  முழுக்க முழுக்க ஸ்கோர் செய்யும் வாய்ப்புள்ள  கேரக்டர் . நல்லா பண்ணி  இருக்கார் . அவர் உதட்டில்  நடு மண்டலத்தில்  உள்ள அந்த மச்சம் செம கிக் .  மாடர்ன் டிரஸ் போட்டாலும் , சேலை கட்டினாலும்  ஒரே வித அழகுடன்  மிளிர்வது நயனின்  தனிச்சிறப்பு 


ஆர்யா . ஐ டி கம்ம்பெனியில் ஒர்க்  பண்ணும் ஆள் எப்படி  இருப்பாரோ அப்படியே கண்  முன் நிறுத்துகிறார் . அருமையான நடிப்பு , ஆனால்  அவர்  ஆடியன்ஸ் மனம் கவரும் அளவு பிரமாதப்படுத்தவில்லை 


நஸ்ரியாவின்  க்யூட்டான  முக பாவங்கள் அழகு , ஆனால் ஆங்காங்கே செயற்கை இழை தட்டுகிறது . ஆர்யா - நஸ்ரியா கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு 



சந்தானம் காமெடிக்கு , சொல்லவே வேணாம் . அவர் வரும் காட்சிகள் எல்லாம் படத்துக்கு பிளஸ்சே 


சத்யன் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் , சத்யராஜ் நயனின் அப்பாவாக வந்து  நிறைவான நடிப்பைத்தந்திருக்கிறார் 










இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  நயன் தாராவுக்கு அதிர்ச்சியான செய்தி கேட்கும்போது  வரும் காக்கா வலிப்பு மாதிரியான  நோய் கட்டத்தில் அவர் கண்கள் சொருகி மயங்கி துடிப்பது  இயல்பான நடிப்பு .


2. ஜெய் - நயன்  இடையே மலரும்   கஸ்டமர் கேர் லவ் ஸ்டோரி படத்துக்கு பெரிய  பூஸ்ட் அப் . ஆரவாரமான காட்சிகள் , பிரமாதமான  திரைக்கதை   ஏரியா 


3. நான் கடவுள்  வில்லனை காமெடியாகப்பயன் படுத்தி  இருப்பது  இயக்குநரின் சாமார்த்தியம் 


4. சந்தானத்தின்  காமெடி டிராக் படத்தின்  கதையோடு  ஒன்றி வருவது  


5.  நஸ்ரியாவுக்கு ஏற்படும் விபத்து படமாக்கப்பட்ட விதம் ஷங்க்ரை நினைவு படுத்துது , குட் ஒர்க் 


6 ஜார்ஜ் விலியம்சின் ஒளிப்பதிவு அழகு , ஜி வி பிரகாஷின் இசை  குட் , பின்னணி இசை ஆங்காங்கே அண்ணன் எங்கியோ சுட்டிருக்கிறார் என எண்ண வைக்கிறது 





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 



1. ஓப்பனிங்க் சீனில்  சர்ச்சில்  மணக்கோலத்தில்  வரும்  நயன்  மண்டைல அவ்ளவ் பெரிய கொண்டை எதுக்கு ? சகிக்கலை . மனதளவில் வெறுப்பு நிலையில்  இருப்பவர் லிப்ஸ்டிக் ,  கன்ன த்துக்கு என்ன என்னமோ தடவி வருவது  உறுத்தல் . அப்பா கட்டாயத்துக்காக திருமணத்துக்கு வேண்டா வெறுப்பா  வருபவர் மேக்கப் மட்டும்  அவ்வளவு சிரத்தையா செய்வாரா? 



2. ஆர்யா   திருமணக்காட்சிகளில்  சில இடங்களீல் லைட் தாடியுடனும்  , சில இடங்களீல்  நீட்  ஷேவிங்குடனும் வருவது கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க் 



3. என்ன தான் ஆர்யா வுக்கு நயனைப்பிடிக்கலைன்னாலும் மேரேஜ் ஆகி 10 நாள் ஆகி அவர் பேரு , ஃபோன் நெம்பர் கூடத்தெரியாம  இருக்குமா? ஹாஸ்பிடலில்  நயன் பேரென்ன என டாக்டர் கேட்க  ஆர்யா  தெரியாது என்பது  கேலிக்கூத்து 



4. ஜெய்  ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வர்ரேன்னு சொல்லிட்டு வர்லை . 6 மணீக்கு ஆஃபீஸ்  முடியுது . அப்போ அப்பா சத்யராஜ் கார்ல வந்து  நயனை  ஜெய் வீட்டுக்கு  கூட்டிட்டுப்போறார் , அப்போ அவர் வாட்ச்ல மிட் நைட் 12 17  காட்டுது , அதுக்குள்ளே 6 மணீ நேரம் ஆகி இருக்குமா? மீறி மீறிப்போனா  8 மணி தான் ஆகி இருக்கும் , பேக்  கிரவுண்ட் ஷாட்டும் மிட் நைட் மாதிரியே கலரிங்க் 


5.  ஜெய் யின் அப்பா சாதா ஆள் . நயனின் அப்பா  லட்சாதிபதி , பின்  ஏன்  காதலுக்கு எதிர்ப்பு? அதில்  தெளிவில்லையே ? 





6. ஜெய்   ரெஜிஸ்டர் மேரேஜ் வரை ஓக்கே சொன்னவர்  பின் மனம் மாறுவதற்கு காட்சி ரீதியாக விளக்கம் வைத்திருக்கனும் . ஜஸ்ட்  ஒரு டயலாக்கில் அப்பா எதிர்த்தார் என்பது எல்லாம் பத்தாது 


7.  உங்க மனைவிக்கு மைனர் சர்ஜரி பண்ணி  இருக்கோம் என டாக்டர் ஆர்யாவுக்கு இன்ஃபார்ம் பண்றாங்க , மைனர் ஆபரேஷனா  இருந்தாலும் கணவர்ட்ட   சைன் வாங்க வேணாமா? 


8.  நயப் தாரா  தன் அப்பா மடியில் சாய்ந்து  கண்ணீர்  விடும்போது  கண்ணீர்  பச்சைக்கலரில் , நேவி  ப்ளூ கலரில் வருது . காட்சியின்  சீரியசை காமெடி ஆக்குது . அந்த  சோக சீனில் மட்டும்   மேக்கப்பை குறைச்சு கண்ணீரை  வெள்ளை ஆக்கி இருக்கலாம் 


9 நயன் தாராவுக்கு  புருவம் ட்ரிம் பண்ணி விட்டது  யாரோ ? பல க்ளோசப் காட்சிகளீல்  இடது புருவம் அடர்த்தியாவும் , வலது  புருவம்  மெல்லிசாவும்  இருக்கு ,ம் அதே போல் இடது புருவம்  வளைந்த மாதிரியும்  , வலது  புருவம் நேராகவும்   வரைஞ்ச மாதிரி செயற்கையா இருக்கு 


10  படம்  முழுக்க  கண்ணியமான்  உடையில்  வரும் நயன்  முக்கியமான சோக காட்சியில்    சிவப்புக்கலர்  புடவையில் அவ்வளவு  லோ ஹிப்பில் வர வேண்டுமா? 






11 பாடல் காட்சிகளில்  இன்னும்  மணிரத்னத்தனம் வேண்டும்  , சுமார்தான் 



12 படத்தின்  கடைசி  30  நிமிடங்கள்  இழுவை , எடிட் பண்ணி  ட்ரிம் பண் நனும்


13 க்ளைமாக்ஸில் இறந்ததா சொல்லப்படும்  ஜெய்   உயிரோடு வருவது  திரைக்கதைக்குத்தேவை  இல்லாத ஒன்று 


14  ஜெய் விபத்தில் இறந்ததாக சத்யன் சொன்னதும் நயன் மயக்கம் போட்டு விழுந்தார்  ஓக்கே , அப்பா சத்யராஜ் ஏன் டெட் பாடியைப்பார்க்கப்போகவில்ல்லை, இது ஒரு டிராமா என்பதை அவரால் ஏன் யூகிக்க முடியவ்வில்லை ? 

15  ராஜா ராணி நஸ்ரியா ஓப்பனிங் சீன் முக பாவனைகள் ஆசை சுவலட்சுமி யின் முகபாவனை சாயல்





மனம் கவர்ந்த வசனங்கள்

சந்தானத்தின் காமெடி டயலாக்ஸ் படத்தில் மொத்தம் 53 இடங்களீல் வருது , அது தனிப்பதிவாக பின்னர்  வரும் 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  42


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =  3 / 5


சி பி கமெண்ட் - காத்லர்கள்  , நஸ்ரியா  நயன்  ரசிகர்கள்   என இளைஞர்களுக்குப்பிடிக்கும் , படம் போர் அடிக்காம போகுது . பெண்களையும்  இது கவரும்  , க்டைசி 30  நிமிடங்கள் மட்டும்  கொஞ்சம் போர் , ஏ , பி செண்ட்டர்களீல்  ஹிட் ஆகிடும் , சி செண்ட்டர்களீல்  சுமாராத்தான் போகும் 





ராஜா ராணி படம் பார்த்து பின் நான் ட்வீட்டியது

படத்தால் அட்லீ சாதித்தது- இனி ஊர்ல ஒரு பிகரும் யாரையும் அண்ணானு கூப்ட்டு வெறுப்பேத்த முடியாது # வெச்சாரில்ல ஆப்பு.டாப்பு

ஒவ்வொரு காதல் தோல்விக்குப்பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கு.ஒவ்வொரு வாழ்க்கையிலும் காதல் தோல்வி இருக்கு

அட்லியிடம் நான் கற்றுக்கொண்டது = பொண்ணு நம்மை அண்ணானு கூப்ட்டா நம்மை வெறுப்பேத்த ட்ரை பண்றானு அர்த்தம்.பிட்டைப்போட


ராஜா ராணி - ஜாலி லவ் ஸ்டோரி - ஏ பி செண்ட்டர்களில் ஓடிடும் - விகடன் மார்க் - 42 - ரேட்டிங்க் 3 /5 , ஜெய்யின் கலக்கல் நடிப்பு +


மவுன ராகம் மோகன் அளவு ஆர்யாவால் ஸ்கோர் பண்ண முடியாததற்கு ஆர்யா காரணம் அல்ல


அட்லீ ஷங்கரின் அசிஸ்டெண்ட்டாக இருந்தாலும் ரத்தத்தில் மணிரத்னக்குறும்பு ஓடுகிறது !இளமைத்துள்ளாட்டம்

ராஜாராணி யில் ஜெய் ன் நடிப்பு ம்வுன ராகம் கார்த்திக் க்கிற்கு இணையான கலக்கல் நடிப்பு.தியேட்டரில் ஆரவாரம் இன்னும் அடங்கலை







டிஸ்கி -

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/blog-post_28.html